الصَّلوٰة

ஸலாத்​​ -​​ தொடர்பு தொழுகை

  • ஸலாத் என்றால் பொருள் என்ன?

  • முஹம்மது நபிக்கு முன்பு,​​ அதாவது குர்ஆனுக்கு முன்பு ஸலாத் தொடர்பு தொழுகை உள்ளதா?

  • ஸலாத் எப்பொழுது,​​ யார் மூலமாக வந்தது?

  • ஒலு​​ செய்வது எப்படி?

  • ஸலாத் எத்தனை முறை?

  • ஸலாத்தில் நாம்​​ கூறும்​​ தொனி(Tone)​​ என்ன?

  • ஸலாத் தவறவிட்டால் என்ன செய்ய வேண்டும்?

  • ஷஹாதத் என்றால் என்ன?

  • பெண்கள் மாதவிடாய் சமயத்தில் தொழாமல் இருக்க அனுமதி உண்டா?

  • ஸலாத்தை பற்றி​​ குர்ஆன்​​ Vs​​ ஹதீஸ்.

ஸலாத் என்றால் பொருள் என்ன?

ஸலாத் “சிலட்”​​ என்ற​​ வேர்ச்சொல்லிலிருந்து வந்தது. தொடர்பு/தொடர்பு கொள்ளுதல்​​ என்று​​ பொருள். அதாவது கடவுளை நாம் தொடர்பு கொள்ளுதல் என்று பொருள்.

 

நாம் கடவுளை நேரடியாக ஸலாத்தின் (தொடர்பு தொழுகை) மூலம் தொடர்பு கொள்கின்றோம்.

 

20:14 "நான்தான் கடவுள்;​​ என்னுடன் வேறு தெய்வம் இல்லை.​​ என்னை​​ மட்டுமே​​ நீர் வழிபட வேண்டும்,​​ மேலும்​​ என்னை நினைவு கூர்வதற்காகவே​​ (ஸலாத்) தொடர்புத் தொழுகைகளைக் கடைப்பிடிப்பீராக.

 

 

முஹம்மது நபிக்கு முன்பு,​​ அதாவது குர்ஆனுக்கு முன்பு ஸலாத் தொடர்பு தொழுகை உள்ளதா?

 

 

ஆம்,​​ குர்ஆன் இறங்குவதற்கு முன்பாக​​ ஸலாத்​​ தொடர்பு தொழுகை​​ வழக்கத்தில் உள்ளது.


இன்ஷா அல்லாஹ்,​​ அல்லாஹ் நமக்கு வழங்கிய வேதத்திலிருந்து ஆதாரத்தை காண்போம்.

இஸ்ரவேலின் சமூகத்தினர்​​ 

2:83​​ இஸ்ரவேலின் சந்ததியினருடன் நாம் ஓர் உடன்படிக்கை செய்தோம்: "நீங்கள் கடவுள்-ஐத் தவிர வழிபடக் கூடாது. நீங்கள் உங்களுடைய​​ பெற்றோரைக் கண்ணியப்படுத்தவும்,​​ உறவினர்கள்,​​ அனாதைகள்,​​ மற்றும் ஏழைகளுக்கு மதிப்பளிக்கவும் வேண்டும். நீங்கள் மனிதர்களை இணக்கத்துடன் நடத்திட வேண்டும். நீங்கள்​​ (ஸலாத்) தொடர்புத் தொழுகைகளைக் கடைப்பிடிக்கவும்,​​ மேலும் (ஜகாத்) கடமையான தர்மத்தை​​ கொடுக்கவும்​​ வேண்டும்." ஆனால்​​ உங்களில் சிலரைத் தவிர,​​ நீங்கள் திரும்பிச் சென்று விட்டீர்கள்,​​ மேலும் நீங்கள் வெறுப்புக் கொண்டவர்களாகி விட்டீர்கள்.

5:12​​ இஸ்ரவேலின் சந்ததியினரிடமிருந்து ஓர் உடன்படிக்கையைக் கடவுள் எடுத்திருந்தார்,​​ மேலும் அவர்களுக்கிடையில்​​ பன்னிரண்டு வம்சத் தலைவர்களை நாம் எழுப்பினோம். மேலும் கடவுள் கூறினார், "நீங்கள் (ஸலாத்) தொடர்புத் தொழுகைகளைக் கடைப்பிடித்து, (ஜகாத்) கடமையான தர்மத்தைக் கொடுத்து,​​ மேலும் என்னுடைய தூதர்கள் மீது நம்பிக்கை கொண்டு மேலும் அவர்களைக் கண்ணியப்படுத்தி,​​ மேலும் நன்னெறியெனும்​​ ஒரு கடனைக் கடவுள்-க்கு இரவலாகத் தொடர்ந்து கொடுத்து வருகின்ற பட்சத்தில்,​​ நான் உங்களுடன் இருக்கின்றேன். பின்னர் நான் உங்களுடைய பாவங்களை நீக்குவேன்,​​ மேலும் பாய்கின்ற ஆறுகள் கொண்ட தோட்டங்களுக்குள் உங்களை அனுமதிப்பேன். இதன்​​ பின்னரும் நம்பமறுக்கின்றவர் எவராயினும்,​​ உண்மையில் சரியான பாதையிலிருந்து விலகிச் சென்று விட்டார்."  ​​​​ 

மோஸஸுக்கும் அவருடைய சகோதர்​​ ஹாரூன்ருக்கும்​​ :

10:87​​ நாம் மோஸஸுக்கும் அவருடைய சகோதரருக்கும் உள்ளுணர்வளித்தோம். "தற்போதைக்கு எகிப்தில் உள்ள உங்களது வீடுகளைப் பராமரித்துக் கொண்டு,​​ உங்கள்​​ வீடுகளையே ஆலயங்களாக ஆக்கிக் கொள்ளுங்கள்,​​ மேலும்​​ தொடர்புத் தொழுகைகளை (ஸலாத்)​​ பேணி வாருங்கள். நம்பிக்கை கொண்டவர்களுக்கு நற்செய்தி வழங்குங்கள்."

 

லுக்மான்
31:17 "என் மகனே,​​ (ஸலாத்) தொடர்புத் தொழுகைகளை​​ நீ கடைப்பிடிக்க​​ வேண்டும். நன்மைகளை ஆதரிப்பதுடன்​​ தீமைகளை நீ தடுக்கவும் வேண்டும்,​​ மேலும்​​ இன்னல்களை எதிர்கொள்ளும் போது உறுதிப்பாட்டுடன் தொடர்ந்து​​ இருக்க வேண்டும். இவை மிகவும்​​ கண்ணியமான பண்புகளாகும்.


இஸ்மாயில்

19:55 ​​​​ தொடர்புத் தொழுகைகளையும் (ஸலாத்) கடமையான தர்மத்தையும்​​ (ஜகாத்)​​ நிறைவேற்றும்படித் தன்​​ குடும்பத்தாரை ஏவுபவராக அவர் இருந்தார்;​​ அவருடைய இரட்சகரிடம்,​​ ஏற்றுக் கொள்ளப்படக் கூடியவராக அவர் இருந்தார்.

 

இயேசு​​ –​​ ஈஷா

19:31 "நான் செல்லுமிடமெல்லாம் என்னை அவர் ஆசீர்வதித்துள்ளார்,​​ மேலும்​​ நான் வாழும் காலமெல்லாம்​​ (ஸலாத்) தொடர்புத் தொழுகைகளையும் (ஜகாத்)​​ கடமையான தர்மத்தையும்​​ நிறைவேற்ற எனக்குக்​​ கட்டளையிட்டுள்ளார்.

 

ஆப்ரஹாம்

14:37 "எங்கள் இரட்சகரே,​​ எனது குடும்பத்தின் ஒரு​​ பகுதியை உம்முடைய புனித​​ வீட்டின் அருகில்,​​ தாவரங்களற்ற இப்பள்ளத்தாக்கில் நான் குடியேற்றியிருக்கின்றேன். எங்கள் இரட்சகரே,​​ அவர்கள்​​ தொடர்புத்​​ தொழுகைகளை (ஸலாத்)​​ நிறைவேற்ற​​ வேண்டியவர்களாக உள்ளனர்,​​ எனவே மனிதர்களைக் கூட்டமாக அவர்களோடு குழுமச் செய்வீராக,​​ மேலும் அவர்கள் நன்றி செலுத்துபவர்களாக​​ இருக்கும் பொருட்டு,​​ அனைத்துக் கனிவர்க்கங்களையும் அவர்களுக்கு வழங்குவீராக.


இப்ராகிமுக்கு முன்பாக வாழ்ந்த​​ ஸாலிஹ்,​​ ஹூத்,​​ நோவா​​ இவர்களைப்பற்றி கூறும்போது ஸலாத் இடம்பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

 

ஸலாத் எப்பொழுது,​​ யார் மூலமாக வந்தது?

 

இன்ஷா அல்லாஹ் குர்ஆனின் வசனம் மூலமாக விடை காண்போம்

 

ஆப்ரஹாம்:​​ இஸ்லாத்தின் மார்க்கக் கடமைகள் அனைத்தையும்​​ சேர்ப்பித்தவர்.

 

இப்ராஹிமுக்கு ஸலாத் மற்றும் ஜக்காத் கடைப்பிடிப்பது எப்படி என்பதை கற்றுக் கொடுத்தோம் என்று அல்லாஹ் நமக்கு வசனங்களில் மூலம் விளக்குகிறார்.​​ 

21:73​​ நம்முடைய கட்டளைகளுக்கேற்ப வழிநடத்திய​​ இமாம்களாக நாம் அவர்களை ஆக்கினோம்,​​ மேலும் நன்மைகள்​​ செய்வது எப்படி என்பதையும், (ஸலாத்)​​ தொடர்புத் தொழுகைகளையும்​​ (ஜகாத்)*​​ கடமையான தர்மத்தையும்​​ கடைப்பிடிப்பது எப்படி​​ என்பதையும் நாம் அவர்களுக்குக்​​ கற்றுக் கொடுத்தோம். நமக்கு,​​ அர்ப்பணித்துக் கொண்ட​​ அடியார்களாக அவர்கள் இருந்தனர்.

 

22: 78.​​ நீங்கள் கடவுள்-ன் நிமித்தம் பாடுபட வேண்டியவாறு​​ அவர்​​ நிமித்தமாக நீங்கள் பாடுபட வேண்டும். அவர்​​ உங்களைத் தேர்ந்தெடுத்துக் கொண்டார்,​​ மேலும்​​ உங்கள் தந்தை​​ ஆப்ரஹாமின் மார்க்கமாகிய-உங்கள் மார்க்கத்தைப்​​ பயில்வதில் உங்கள் மீது எந்தச்​​ சிரமத்தையும் அவர்​​ வைக்கவில்லை. அவர்தான்​​ முதலில்​​ உங்களுக்கு "சரணடைந்தோர்" எனப் பெயரிட்டார். இப்படியாக,​​ தூதர் உங்களுக்கிடையில் ஒரு​​ சாட்சியாகத் திகழ வேண்டும்,​​ மேலும் நீங்கள்​​ மக்களுக்கிடையில் சாட்சிகளாகத்​​ திகழவேண்டும்,​​ எனவே நீங்கள் (ஸலாத்) தொடர்புத் தொழுகைகளைக்​​ கடைப்பிடிக்கவும்,​​ மேலும் (ஜகாத்) கடமையான​​ தர்மத்தைக் கொடுத்து வரவும்,​​ மேலும் கடவுள் -ஐ​​ பற்றிக் கொள்ளவும் வேண்டும்;​​ அவர்தான் உங்கள்​​ இரட்சகர்,​​ மிகச்சிறந்த இரட்சகர்,​​ மேலும் மிகச்​​ சிறந்த ஆதரவாளர்.

 

6:161​​ கூறுவீராக, "என்னுடைய இரட்சகர் நேரானதொரு​​ பாதையில் என்னை​​ வழிநடத்தியுள்ளார் -​​ ஆப்ரஹாமின் பரிபூரண​​ மார்க்கமான,​​ ஏகத்துவம். அவர்​​ ஒரு​​ போதும் போலித் தெய்வ வழிபாடு செய்கின்ற ஒருவராக இருந்ததில்லை."

16:123 ​​​​ பின்னர் நாம் உமக்கு (முஹம்மத்) ஏகத்துவவாதியான​​ ஆப்ரஹாமின்​​ மார்க்கத்தைப்​​ பின்பற்றும்மாறு​​ உள்ளுணர்வூட்டினோம்;​​ அவர் ஒருபோதும் போலித்​​ தெய்வங்களை வழிபட்டவராக இருந்ததில்லை.

 

குர்ஆன் முழுவதும் மில்லது இப்ராஹிம் என்று அழைக்கப்படுகின்றது

பார்க்க​​ : 2:130,​​ 135;​​ 3:95;​​ 4:125;​​ 6:161;​​ 12:37-38;​​ 16:123;​​ 21:73;​​ 22:78.

 

ஒலு செய்வது எப்படி?

 

5:6.​​ நம்பிக்கை கொண்டோரே உங்களைத்தான்,​​ நீங்கள்(ஸலாத்)​​ தொடர்புத் தொழுகைகளைக்​​ கடைப்பிடிக்கையில்,​​ நீங்கள்:​​ 
(1)​​ உங்களுடைய முகங்களைக் கழுவிக் கொள்ளுங்கள்,​​ 
(2)​​ முழங்கைகள் வரை உங்களுடைய கைகளைக் கழுவிக்கொள்ளுங்கள்,​​ 

(3)​​ உங்களுடைய தலைகளைத் தடவிக்கொள்ளுங்கள்,​​ மேலும்​​ 
(4)​​ கணுக்கால்கள் வரை உங்களுடைய​​ பாதங்களைக்​​ கழுவிக்கொள்ளுங்கள்.​​ 
பால்ரீதியிலான உச்சக்கட்ட இன்பத்தால் நீங்கள்​​ தூய்மையற்றவர்களாக இருந்தால்,​​ நீங்கள் குளித்துக் கொள்ள​​ வேண்டும். நீங்கள் நோயிலோ அல்லது பிரயாணத்திலோ​​ இருந்தால்,​​ அல்லது ஏதேனும்​​ செரிமானக்கழிவுகளை (சிறுநீர்,​​ மலம்,​​ அல்லது வாயு) வெளிப்படுத்தியிருந்தால்,​​ அல்லது​​ பெண்களுடன் (பாலுறவுத்) தொடர்பு கொண்டிருந்தால்,​​ மேலும் நீங்கள்​​ தண்ணீரைக் காண​​ இயலாவிட்டால்,​​ நீங்கள்​​ தூய்மையான உலர்ந்த மண்ணத் தொட்டு,​​ பின்னர்​​ உங்களுடைய​​ முகங்களையும் கைகளையும் தடவிக்கொள்வதன் மூலம் உலர்​​ அங்க சுத்தியை (தயம்மம்)​​ கடைப்பிடிக்க வேண்டும்.​​ மார்க்கத்தை உங்களுக்குக் கடினமானதாக ஆக்கி விடக் கடவுள் விரும்பவில்லை;​​ நீங்கள்​​ நன்றியுடையவர்களாக​​ இருக்கும்​​ பொருட்டு,​​ உங்களைத் தூய்மைப்படுத்தவும்,​​ உங்கள் மீதான தன்னுடைய ஆசிகளைப் பூரணப்படுத்தவுமே அவர்​​ விரும்புகின்றார்.


ஸலாத் எத்தனை முறை?

 

  • பஜர்​​ :​​ வைகறை தொழுகை​​ (11:114,​​ 24:58)

  • நுகர்​​ :​​ நண்பகல் தொழுகை​​ (17:78)

  • அஸர்​​ :​​ பிற்பகல் தொழுகை​​ (2:238)

  • மக்ரிப்​​ :​​ அந்தி தொழுகை​​ (11:114)

  • இஷா​​ :​​ இரவுத் தொழுகை​​ (11:114,​​ 24:58)

 

வெள்ளிக்கிழமை:​​ ஜும்மா​​ :​​ கூட்டு​​ தொழுகை​​ (62:9)

 

ஸலாத்தில் நாம் கூறும் தோனி(Tone)​​ என்ன?

17:110​​ கூறும், "கடவுள் என அவரை அழையுங்கள்,​​ அல்லது மிக்க அருளாளர் என அவரை அழையுங்கள்;​​ எந்த ஒரு பெயரை நீங்கள் பயன்படுத்தினாலும்,​​ அழகிய பெயர்கள்தான் அவருக்குரியவை." உமது (ஸலாத்) தொடர்புத் தொழுகைகளை நீர் மிகவும்​​ சப்தமாகவோ,​​ அன்றி இரகசியமாகவோ கூற​​ வேண்டாம்,​​ நடுத்தரமானதொரு தொனியைப் பயன்படுத்துவீராக.

 

ஸலாத் தவறவிட்டால் என்ன செய்ய வேண்டும்?

 

ஸலாத் தொடர்பு தொழுகை தவறவிடக் கூடாது எனவும் தவறவிட்டால் வருந்தி திருந்தி பாவ மன்னிப்பு கேட்பது மட்டுமே அதற்கு பரிகாரம் என்றும் குர்ஆன் நமக்கு கற்றுத்​​ தருகிறது.​​ 

 

அசாதாரண சூழ்நிலையில் கூட நாம் ஸலாத்தை கடைப்பிடிக்க வேண்டும்.​​ என்று கடவுள் நமக்கு கட்டளையிடுகிறார்.

 

4:103​​ உங்களுடைய (ஸலாத்) தொடர்புத் தொழுகையை​​ நீங்கள் நிறைவேற்றியவுடன்,​​ நின்று கொண்டோ,​​ அமர்ந்து கொண்டோ,​​ அல்லது கீழே படுத்தவாறோ,​​ நீங்கள் கடவுள்-ஐ நினைவில் கொள்ள வேண்டும்.​​ போர் முடிந்து விட்டவுடன்,​​ நீங்கள் (ஸலாத்) தொடர்புத் தொழுகைகளை முறையாகக் கடைப்பிடிக்க​​ வேண்டும்; (ஸலாத்) தொடர்புத் தொழுகைகள் நம்பிக்கையாளர்களுக்குக்​​ குறிப்பிடப்பட்ட​​ நேரங்களில்​​ கடமையாக்கப்பட்டுள்ளன.

 

4:101​​ ​​ போர்க் காலத்தில்,​​ நீங்கள் பிரயாணித்துக் கொண்டிருக்கும்​​ பொழுது,​​ நம்பமறுப்பவர்கள் உங்களைத்​​ தாக்கக் கூடும் என்று நீங்கள் அஞ்சினால்,​​ உங்களுடைய (ஸலாத்) தொடர்புத் தொழுகைகளைச்​​ சுருக்கிக் கொள்வதன்​​ மூலம் நீங்கள் எந்தத் தவறும்​​ செய்து விடுவதில்லை. நிச்சயமாக,​​ நம்பமறுப்பவர்கள்​​ உங்களுடைய​​ தீவிரமான விரோதிகளாகவே இருக்கின்றனர்.

 

2:239​​ அசாதாரண சூழ்நிலைகளில்,​​ நடந்து கொண்டோ அல்லது சவாரி செய்கின்ற நிலையிலோ நீங்கள் தொழுது கொள்ளலாம். நீங்கள் பாதுகாப்பாகி விட்டவுடன்,​​ நீங்கள் ஒருபோதும் அறிந்திராதவற்றை அவர் உங்களுக்குக் கற்றுக் கொடுத்தவாறு நீங்கள் கடவுள்-ஐ நினைவு கூர்ந்திட வேண்டும்.

 

70:32-34​​ மேலும்​​ நம்பிக்கையாளர்கள்​​ தங்களுடைய வாக்குறுதிகளைக்​​ காப்பார்கள்;​​ அவர்கள் நம்பகத்திற்குரியவர்களாக இருக்கின்றனர்.​​ அவர்களுடைய சாட்சியம் சத்தியம் நிறைந்ததாக​​ உள்ளது.​​ அவர்கள்​​ தங்களுடைய (ஸலாத்)​​ தொடர்புத் தொழுகைகளை,​​ சரியான​​ நேரத்தில் சீராகக் கடைப்பிடிக்கின்றனர்.

 

 

ஷஹாதத் என்றால் என்ன?

"அஷ்ஹது அல்லா இலாஹ இல்லா அல்லாஹ்"

3:18​​ அவரைத் தவிர தெய்வம் இல்லை​​ என்று கடவுள் சாட்சியம்​​ பகர்கின்றார்,​​ மேலும் வானவர்களும் அறிவுடையவர்களும் அவ்வாறே செய்கின்றனர். சத்தியமாகவும்​​ நீதமாகவும்,​​ அவர்தான் பரிபூரணமான தெய்

வமாக இருக்கின்றார்;​​ அவரை அன்றி தெய்வம்​​ இல்லை,​​ எல்லாம் வல்லவர்,​​ ஞானம் மிகுந்தவர்.

39:3​​ நிச்சயமாக,​​ மார்க்கம்​​ கடவுள்-க்கு மட்டுமே​​ அர்ப்பணிக்கப்பட​​ வேண்டும். அவருடன் போலித் தெய்வங்களை அமைத்துக் கொள்பவர்கள்​​ கூறுகின்றனர், "கடவுள்-க்கு நெருக்கமாக எங்களைக் கொண்டுசெல்வதற்காகவே நாங்கள் அவர்களை இணைவழிபாடு​​ செய்கின்றோம்;​​ ஏனெனில் அவர்கள் மேலானதொரு நிலையில் இருக்கின்றனர்!" அவர்களுடைய​​ தர்க்கங்கள் குறித்து கடவுள் அவர்களுக்குத் தீர்ப்பளிப்பார். இத்தகைய பொய்யர்களை,​​ நம்பமறுப்பவர்களைக் கடவுள் வழிநடத்துவதில்லை.

 

39:45​​ கடவுள் மட்டும் மொழியப்பட்டால்,​​ மறுவுலகின் மீது நம்பிக்கை கொள்ளாதவர்களின் இதயங்கள் வெறுப்பினால் சுருங்கி விடுகின்றன. ஆனால்​​ அவருடன் மற்றவர்களும் மொழியப்பட்டால்,​​ அவர்கள் திருப்தி அடைகின்றனர்.*

 

இன்றைய​​ முஸ்லிம்கள் தங்களுடைய தொழுகைகளின் போது முஹம்மது மற்றும் அவர் குடும்பத்தாரையும் அத்துடன் இப்ராஹீம் அவர் குடும்பத்தாரையும் நினைவு கூறந்திடுவதை வலியுறுத்துகின்றனர். இது அந்த தொழுகையை செல்லாததாக ஆகிவிடுகிறது.​​ 

 

கடவுளின் தூதர்களுக்கிடையில்​​ எந்தப் பாகுபாடும் செய்யாதீர்கள்

2:136.​​ கூறுங்கள், "நாங்கள் கடவுள் மீதும்,​​ மேலும் எங்களுக்கு இறக்கி​​ அனுப்பப்பட்டுள்ளவற்றிலும்,​​ மேலும்​​ ஆப்ரஹாம்,​​ இஸ்மாயில்,​​ ஐசக்,​​ ஜேகப்,​​ மற்றும் அந்த​​ வம்சத்தின் தலைவர்களுக்கு இறக்கி அனுப்பப்பட்டுள்ளவற்றிலும்;​​ மேலும் மோஸஸுக்கும்​​ ஜீஸஸுக்கும்​​ மற்றும் நபிமார்கள் அனைவருக்கும் அவர்களுடைய இரட்சகரிடமிருந்து கொ டுக்கப்பட்டவற்றிலும்​​ நம்பிக்கை கொள்கின்றோம். அவர்களில் எந்த ஒரு​​ வருக்கிடையிலும் நாங்கள்​​ பாகுபாடு செய்யமாட்டோம். அவருக்கு​​ மட்டுமே நாங்கள் சரணடைந்தோராக இருக்கின்றோம்."

 

2:285.​​ தன்னுடைய இரட்சகரிடமிருந்து அவருக்கு இறக்கிஅனுப்பப்பட்டவற்றின்​​ மீது இத்தூதர் நம்பிக்கைகொண்டு விட்டார்,​​ மேலும் நம்பிக்கையாளர்களும்​​ அவ்வாறே செய்தனர். கடவுள்,​​ அவருடைய வானவர்கள்,​​ அவருடைய வேதம்,​​ மற்றும் அவருடைய​​ தூதர்கள் மீது அவர்கள் நம்பிக்கை கொள்கின்றனர்:​​ "அவருடைய​​ தூதர்களில் எவருக்கிடையிலும்​​ நாங்கள் பாகுபாடு எதுவும்​​ செய்யமாட்டோம்." அவர்கள் கூறுகின்றனர், "நாங்கள் செவியேற்கின்றோம்,​​ மேலும் நாங்கள் கீழ்ப்படிகின்றோம்.* எங்களை மன்னிப்பீராக,​​ எங்கள்​​ இரட்சகரே. இறுதி விதியானது​​ உம்மிடமே உள்ளது."

3:84.​​ கூறுவீராக, "நாங்கள்​​ கடவுள் மீதும்,​​ மேலும் எங்களுக்கு இறக்கி​​ அனுப்பப்பட்டவற்றிலும்,​​ மேலும் ஆப்ரஹாம்,​​ இஸ்மாயீல்,​​ ஐசக்,​​ ஜேக்கப்​​ மற்றும் அவ்வம்சாவளித் தலைவர்களுக்கு இறக்கி அனுப்பப்பட்டுள்ளவற்றிலும்,​​ மேலும் மோஸஸ்,​​ ஜீஸஸ்,​​ மற்றும்​​ நபிமார்களுக்கு அவர்களுடைய இரட்சகரிடமிருந்து​​ கொடுக்கப்பட்டவற்றிலும் நம்பிக்கை கொள்கின்றோம். அவர்களில் எந்த​​ ஒருவருக்கிடையிலும்​​ பாகுபாடு செய்ய மாட்டோம். அவருக்கு மட்டுமே​​ நாங்கள் சரணடைந்தோராக இருக்கின்றோம்.

 

4: 152.​​ எவர்கள் கடவுள் மற்றும் அவருடைய தூதர்கள் மீது​​ நம்பிக்கை கொண்டு,​​ மேலும்​​ அவர்களுக்கிடையில்​​ எந்தப் பாகுபாடும் செய்யாதிருக்கின்றனரோ,​​ அவர்களைப் பொறுத்த வரை அவர்களுடைய பிரதிபலனை​​ அவர்களுக்கு அவர் வழங்குவார். கடவுள் மன்னிப்பவர்,​​ மிக்க கருணையாளர்.

 

4: 150.​​ கடவுள் மற்றும் அவருடைய தூதர்களை நம்பமறுத்து,​​ அத்துடன் கடவுள் மற்றும்​​ அவருடைய​​ தூதர்களுக்கிடையில் பாகுபாடு செய்ய​​ நாடி, "நாங்கள்​​ சிலர் மீது நம்பிக்கை​​ கொள்கின்றோம். மேலும் சிலரை ஏற்கமறுக்கின்றோம்,"​​ என்று கூறி,​​ அத்துடன்​​ இடையில் ஒரு பாதையைப் பின்பற்ற விரும்புகின்றவர்கள்;

4:151.​​ இவர்கள்தான்​​ மெய்யான நம்பமறுப்பவர்களாக​​ இருக்கின்றனர்.​​ இழிவு நிறைந்ததொரு தண்டனையை​​ நம்பமறுப்பவர்களுக்காக நாம் தயாரித்து வைத்துள்ளோம்.

 

பெண்கள் மாதவிடாய் சமயத்தில் தொழாமல் இருக்க அனுமதி உண்டா?

 

2: 222.​​ மாதவிடாயைப் பற்றி அவர்கள் உம்மிடம் கேட்கின்றனர்:​​ கூறுவீராக, "அது தீங்காகும்;​​ மாதவிடாய்க்காலத்தின்​​ போது​​ பெண்களுடன் நீங்கள்​​ தாம்பத்ய​​ உறவிலிருந்து விலகி கொள்ள​​ வேண்டும்;​​ அதனை​​ விட்டு அவர்கள் விடுபடும் வரை அவர்களை நெருங்காதீர்கள். அவர்கள்​​ அதிலிருந்து விடுபட்டவுடன்,​​ கடவுள்-ஆல்​​ வடிவமைக்கப்பட்ட முறையில் அவர்களுடன் நீங்கள் தாம்பத்ய உறவு​​ வைத்துக் கொள்ளலாம். பாவங்களுக்காக வருந்துபவர்களைக் கடவுள்

நேசிக்கின்றார்,​​ மேலும் அவர் தூய்மையாக இருப்பவர்களை​​ நேசிக்கின்றார்."

 

 

6:112​​ ஒவ்வொரு நபியுடைய விரோதிகளும் – மானிடர்கள்​​ மற்றும்​​ ஜின்களிலுள்ள சாத்தான்கள் - ஏமாற்றிக்கொள்ளும் பொருட்டு,​​ ஒருவரில்​​ இருந்து மற்றவர்​​ அலங்காரமான வார்த்தைகளைப் உருவாக்கிக்கொள்ள நாம் அனுமதித்துள்ளோம். உம்முடைய இரட்சகர் நாடியிருந்தால்,​​ அவர்கள் அதனைச் செய்திருக்க​​ மாட்டார்கள். நீர் அவர்களையும் அவர்களுடைய புனைந்துரைகளையும் அலட்சியம் செய்திட வேண்டும்.

 

 

 

ஸலாத்தை பற்றி​​ குர்ஆன்​​ Vs​​ ஹதீஸ்.

  ​​ ​​ ​​ ​​ ​​ ​​​​ 

 

குர்ஆன்

ஹதீஸ்​​ 

முஹம்மது நபி மூலமாக குர்ஆனில்​​ அல்லாஹ் கூறியது​​ 4:79

யார் யாரோ (6:112)

 

 

 

 

ஸலாத் தொடர்பு தொழுகை இப்ராஹிம் நபி மூலமாக வந்தது தொடர்பு தொழுகை. (21:73;​​ 22:78)

முஹம்மது​​ மூலமாக வந்தது நபி​​ 

ஒழு செய்ய 4 ஸ்டெப் தான்​​ உள்ளது உள்ளது. (5:6)

ஒழு செய்ய​​ 4க்கு மேலேயும் உள்ளது.

கடவுள் மட்டும் நினைவு கூறுவதற்காக தான் ஸலாத் தொடர்பு தொழுகை. (20:14)

முஹம்மத்​​ மற்றும் அவர்களின் குடும்பத்தினர் இப்ராஹிம் மற்றும் அவர்களின் குடும்பத்தினரை​​ நினைவு கூறுதல்.

கடவுள்,​​ பெண்களை​​ மாதவிடாய் சமயத்தில் தொழுகையை விட்டு தடுக்கவில்லை. (2:222)

ஹதீஸ் பெண்களை மாதவிடாய் சமயத்தில் தொழுகையை விட்டு தடுக்கின்றது

கடவுளின் தூதருக்கு இடையில் வேற்றுமை பாராட்ட கூடாது. (2:136,​​ 2:85; ​​​​ 3:84;​​ 3:84;​​ 4:150-152)

கடவுளின் தூதருக்கு இடையில் வேற்றுமை​​ பாராட்டுதல்

தொடர்புத் தொழுகைகளை நீர் மிகவும் சப்தமாகவோ,​​ அன்றி இரகசியமாகவோ கூற வேண்டாம், (நடுத்தரமானதொரு தொனியைப் பயன்படுத்துவீராக (17:110)

குர்ஆனுக்கு நேர் எதிராக ஹதீஸ் கூறுகிறது.

"ஷஹாதஹ்" சாட்சி கூறுதல் - "லா இலாஹ இல்லல்லாஹ்" (3:18;​​ 37:35;​​ 47:19)

ஷஹாதஹ்வில் குர்ஆனுக்கு மாற்றமாக நபியின் பெயரை அல்லாஹ்வுடன்​​ இணைத்து கூறுகிறது.​​ 

ஸலாத் தவறவிட்டால் மன்னிப்பு மற்றும் சீர்திருத்தல் அதற்கு பரிகாரம் . (38:32)

ஸலாத்​​ தவறவிட்டால்,​​ அதை மற்றொரு நேரத்தில் சரிசெய்து கொள்ளலாம்.

ஐந்து முறை தொழுகை​​ மட்டும்தான். (24:58;​​ 11:114;​​ 17:78;​​ 2:238)

நிறைய​​ முறை தொழுகை உள்ளது. ​​ ​​ ​​ ​​ ​​ ​​ ​​ ​​ ​​ ​​ ​​ ​​ ​​​​ tahajjud, ishraq, duha, awwabin, ghufayala, Tahiyyatul Masjid…….many more…



47:24​​ அவர்கள் ஏன் குர்ஆனைக் கவனத்துடன் ஆராய்ந்து பார்க்காதிருக்கின்றனர்?​​ அவர்களுடைய​​ மனங்களின் மீது அவர்களுக்குப் பூட்டுக்கள் இருக்கின்றனவா?

 

 

https://submission.org/idx_contact_prayer.html
http://Kadavulmattum.org