முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்க
EN தமிழ் हिंदी
Kadavulmattum.org

இணைப்பு 18: இக்குர்ஆன்: மீட்சிக்கென உங்களுக்குத் தேவையான அனைத்தும்

19:64ல் குர்ஆனின் வார்த்தைகள் பேசுகின்றன. அது கூறுவதாவது, “உம்முடைய இரட்சகரின் கட்டளைகளுக்கேற்பவே நாங்கள் இறங்கி வருகின்றோம். கடந்த காலம், நிகழ்காலம், மற்றும் எதிர்காலம் அவருக்கே உரியதாகும். உம்முடைய இரட்சகர் ஒருபோதும் மறப்பதில்லை.” உதாரணத்திற்கு, எப்படித் தூங்குவது என நமக்குச் சொல்ல, கடவுள் மறந்து விடவில்லை (18:109, 31:27), ஆயினும், ஹதீஸ் & சுன்னா போன்ற போலிக் கொள்கைகளின் புனைந்துரையாளர்கள் தங்களுடைய சீடர்களுக்கு எப்படித் தூங்குவது. மற்றும் உங்களுடைய நகங்களை எப்படி வெட்டிக் கொள்வது என்றும் கூட கட்டளையிடுகின்ற மார்க்கப் போதனைகளுடன் வந்துவிட்டனர். மக்காவில் உள்ள புனிதப்பள்ளியும் மதினாவின் சட்டவிரோதமான “புனிதப்பள்ளி”யும், களைத்துப்போன தரிசிக்க வந்தவர்களைத் தேடிக் கண்டுபிடித்து அவர்கள் குப்புறப் படுத்துத் தூங்கி விட்டால் அவர்களை ஒரு குச்சியால் அடிப்பதற்காகச் சில தனிநபர்களைப் பணிக்கமர்த்துகின்றன!

இந்தக் குர்ஆன் முழுமையானது, குறையற்றது, மேலும் முற்றிலும் விவரிக்கப்பட்டதாக உள்ளது (6:19. 38, 114, 115; 50:45] என்றும், மேலும் இந்தக் குர்ஆனில் குறிப்பிடப்பட்டு ஸ்தாபிக்கப்படாத மார்க்க வரையறைகள் இஸ்லாம், அதாவது, சரணடைதல் அல்லாத வேறு ஒரு மார்க்கத்தை உண்டாக்குகின்றது (42:21, 17:46) என்றும் இக்குர்ஆன் பிரகடனிக்கின்றது. உண்மையான நம்பிக்கையாளர்கள் இக்குர்ஆனை ஆதரிக்கின்றனர், முழுமையான இக்குர்ஆனை, மேலும் குர்ஆனையன்றி எந்த ஒன்றையும் அல்ல, இந்தக் கோட்பாடு குர்ஆனுடைய கணிதக்குறியீட்டின் மூலம் உறுதிப்படுத்தப்படுகின்றது. சூரா 17-ன் வசனம் 46 நாம் குர்ஆனை மட்டுமே ஆதரிக்க வேண்டும் எனப் பிரகடனிக்கின்றது. “மட்டும்” எனும் வார்த்தை இக்குர்ஆனில் 6 முறைகள் இடம்பெறுகின்றது: 7:70, 17:46, 39:45, 40:12 & 84 மற்றும் 60:4. இந்த இடம்பெறுதல்கள் அனைத்தும் கடவுளைக் குறிக்கின்றன. 17:46-ஐத் தவிர. “கடவுள் மட்டும்” எனக் குறிக்கின்ற சூராக்கள் மற்றும் வசனங்களின் எண்களை நாம் கூட்டினால். நாம் பெறுவது 361, 19 × 19. “இந்தக் குர்ஆன் மட்டும் என்பதையே 17:46 குறிக்கின்றது என இது நிரூபிக்கின்றது.

📖குர்ஆன் படிக்ககுர்ஆன்