Kadavulmattum.orgகுர்ஆன் · அனைத்து 114 அத்தியாயங்கள்

குர்ஆன் 2:238

அத்தியாயம் 2 · அல்-பகராஹ் (பசுங்கன்று) · 286 வசனங்களில் 238

حٰفِظوا عَلَى الصَّلَوٰتِ وَالصَّلوٰةِ الوُسطىٰ وَقوموا لِلَّهِ قٰنِتينَ

நீங்கள் தொடர்புத் தொழுகைகளை நியமமாகக் கடைப்பிடிக்க வேண்டும், குறிப்பாக நடுத்தொழுகையை, மேலும் உங்களையே முற்றிலுமாகக் கடவுளுக்கு அர்ப்பணித்துக்கொள்ளுங்கள்.

You shall consistently observe the Contact Prayers, especially the middle prayer, and devote yourselves totally to God.

அடிக்குறிப்பு

*2:238 ஐந்து தொழுகைகள் அனைத்தும் (2:238), (11:114), (17:78), (24:58)ல் காணப்படுகின்றன. குர்ஆன் வெளிப்படுத்தப்பட்ட பொழுது, (ஸலாத்) தொடர்புத் தொழுகைகள் ஏற்கெனவே வழக்கத்தில் இருந்து வந்துள்ளன (பின் இணைப்பு 9). ஐந்து தொழுகைகள் அனைத்திற்குமான அம்சங்கள் - என்ன ஓதுவது மற்றும் ஒவ்வொரு தொழுகைக்குமான தொகுதிகளின் (ரக்அத்துகள்) எண்ணிக்கைகள், போன்றவை - கணித ரீதியில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளன. உதாரணத்திற்கு, ஐந்து தொழுகைகள் ஒவ்வொன்றிற்குமான தொகுதிகளின் எண்ணிக்கையை, ஒன்றை அடுத்து மற்றொன்றாக, எழுதிப் பார்க்கையில் நமக்குக் கிடைப்பது 24434, 19x1286. அத்துடன் (அல்-ஃபாத்திஹஹ்), சூரா 1ஐக் குறிக்க [*] எனும் இக்குறியீட்டை நாம் பயன்படுத்தினால், இங்கே [*] = சூராவின் எண் (1), தொடர்ந்து வசனங்களின் எண்ணிக்கை (7), அதனைத் தொடர்ந்து ஒவ்வொரு வசனத்தின் எண், ஒவ்வொரு வசனத்தில் உள்ள எழுத்துகளின் எண்ணிக்கை, மேலும் ஒவ்வொரு எழுத்தினுடைய எழுத்தெண் மதிப்பு ஆகியவையாகும். இப்போது நாம் 2 [*] [*] 4 [*] [*] [*] [*] 4 [*] [*] [*] [*] 3 [*] [*] [*] 4 [*] [*] [*] [*] என எழுதிப் பார்க்கையில் அது 19ன் பெருக்குத் தொகையைக் கொடுக்கின்றது. பார்க்க 1:1.

செயலியில் வாசிக்கமுழு அத்தியாயம்

‹ முந்தைய 2:237அடுத்த 2:239 ›