Kadavulmattum.orgகுர்ஆன் · அனைத்து 114 அத்தியாயங்கள்

குர்ஆன் 2:259

அத்தியாயம் 2 · அல்-பகராஹ் (பசுங்கன்று) · 286 வசனங்களில் 259

أَو كَالَّذى مَرَّ عَلىٰ قَريَةٍ وَهِىَ خاوِيَةٌ عَلىٰ عُروشِها قالَ أَنّىٰ يُحى ۦ هٰذِهِ اللَّهُ بَعدَ مَوتِها فَأَماتَهُ اللَّهُ مِا۟ئَةَ عامٍ ثُمَّ بَعَثَهُ قالَ كَم لَبِثتَ قالَ لَبِثتُ يَومًا أَو بَعضَ يَومٍ قالَ بَل لَبِثتَ مِا۟ئَةَ عامٍ فَانظُر إِلىٰ طَعامِكَ وَشَرابِكَ لَم يَتَسَنَّه وَانظُر إِلىٰ حِمارِكَ وَلِنَجعَلَكَ ءايَةً لِلنّاسِ وَانظُر إِلَى العِظامِ كَيفَ نُنشِزُها ثُمَّ نَكسوها لَحمًا فَلَمّا تَبَيَّنَ لَهُ قالَ أَعلَمُ أَنَّ اللَّهَ عَلىٰ كُلِّ شَىءٍ قَديرٌ

பாழடைந்த ஒரு நகரத்தைக் கடந்தவாறு வியந்த அந்த ஒருவரை எண்ணிப்பார்ப்பீராக, இது இறந்துவிட்ட பின்னர் எவ்வாறு கடவுள் இதனை உயிர்ப்பிக்க இயலும்? கடவுள் பின்னர் அவரை ஒரு நூறு வருடங்கள் மரணத்தில் ஆழ்த்தினார், பின்னர் அவரை உயிர்ப்பித்தெழுப்பினார். அவர் கூறினார், எத்தனை காலம் நீர் இங்கே தங்கியிருந்தீர்? அவர் கூறினார், நான் ஒரு நாளோ, அல்லது நாளின் ஒரு பகுதியோ இங்கே இருந்தேன். அவர் கூறினார், அல்ல! நீர் இங்கே ஒரு நூறு வருடங்கள் இருந்தீர். ஆயினும், உம்முடைய உணவையும் பானத்தையும் நோக்குவீராக; அவை கெட்டுப் போய்விடவில்லை. உம்முடைய கழுதையை நோக்குவீராக - இவ்விதமாக நாம் உம்மை மக்களுக்கு ஒரு படிப்பினையாக ஆக்குகின்றோம். இப்போது, அதன் எலும்புகளை எவ்வாறு நாம் கட்டமைக்கின்றோம், பின்னர் தசைகளால் அவற்றை மூடுகின்றோம் எனக் கவனிப்பீராக நிகழ்ந்தது என்ன என்பதை அவர் உணர்ந்து கொண்டபோது, அவர் கூறினார், கடவுள் சர்வ சக்தியுடையவர் என்பதை இப்போது நான் அறிந்து கொண்டேன்.

Consider the one who passed by a ghost town and wondered, "How can God revive this after it had died?" God then put him to death for a hundred years, then resurrected him. He said, "How long have you stayed here?" He said, "I have been here a day, or part of the day." He said, "No! You have been here a hundred years. Yet, look at your food and drink; they did not spoil. Look at your donkey - we thus render you a lesson for the people. Now, note how we construct the bones, then cover them with flesh." When he realized what had happened, he said, "Now I know that God is Omnipotent."

அடிக்குறிப்பு

*2:259 இங்கே நாம் கற்றுக்கொள்ளும் படிப்பினை என்னவென்றால் மரணத்தின் கால அளவானது ஒரு நாளைப் போல கடந்து சென்றுவிடும் என்பதேயாகும். நன்னெறியற்றவர்கள் மட்டுமே மரணிக்கின்றனர்; நன்னெறியாளர்கள் நேராகச் சுவனத்திற்குச் செல்கின்றனர் (பார்க்க 18:19-25) மற்றும் பின் இணைப்பு 17.

செயலியில் வாசிக்கமுழு அத்தியாயம்

‹ முந்தைய 2:258அடுத்த 2:260 ›