قُل لِلمُؤمِنينَ يَغُضّوا مِن أَبصٰرِهِم وَيَحفَظوا فُروجَهُم ذٰلِكَ أَزكىٰ لَهُم إِنَّ اللَّهَ خَبيرٌ بِما يَصنَعونَ
நம்பிக்கை கொண்ட ஆண்களிடம் அவர்கள் தங்கள் பார்வைகளைத் தாழ்த்திக்கொள்ள வேண்டும் (மேலும் பெண்களை உற்றுப்பார்க்கக் கூடாது) என்றும், மேலும் தங்களுடைய கற்பைப் பாதுகாத்துக்கொள்ள வேண்டும் என்றும் கூறுவீராக. இதுவே அவர்களுக்கு மிகவும் தூய்மையுடையதாகும். அவர்கள் செய்கின்ற ஒவ்வொன்றையும், கடவுள் முற்றிலும் நன்கறிந்தவர்.
Tell the believing men that they shall subdue their eyes (and not stare at the women), and to maintain their chastity. This is purer for them. God is fully Cognizant of everything they do.
அடிக்குறிப்பு
*24:30-31 எனவே, ஒழுக்கமாக ஆடையணிதல் நம்பிக்கை கொண்ட ஆண்கள் மற்றும் பெண்களின் ஒரு பண்பாகும். ஒரு பெண்ணின் ஆடைக்கான குறைந்தபட்ச அவசியமாவது அவளுடைய ஆடையை நீளப்படுத்திக் கொள்வதும் (33:59) மேலும் அவளது மார்பை மறைத்துக்கொள்வதுமாகும். கொடுங்கோன்மையான அரேபியப் பாரம்பர்யங்கள் ஒரு பெண் உச்சி முதல் பாதம் வரை மூடப்படவேண்டும் என்பதைப் போன்ற ஒரு பொய்யான கருத்தைத் தந்துள்ளன; இத்தகையது குர்ஆனுடைய அல்லது இஸ்லாத்தினுடைய ஆடை அல்ல.