Kadavulmattum.orgகுர்ஆன் · அனைத்து 114 அத்தியாயங்கள்

குர்ஆன் 4:12

அத்தியாயம் 4 · அல்-நிஸா (பெண்கள்) · 176 வசனங்களில் 12

وَلَكُم نِصفُ ما تَرَكَ أَزوٰجُكُم إِن لَم يَكُن لَهُنَّ وَلَدٌ فَإِن كانَ لَهُنَّ وَلَدٌ فَلَكُمُ الرُّبُعُ مِمّا تَرَكنَ مِن بَعدِ وَصِيَّةٍ يوصينَ بِها أَو دَينٍ وَلَهُنَّ الرُّبُعُ مِمّا تَرَكتُم إِن لَم يَكُن لَكُم وَلَدٌ فَإِن كانَ لَكُم وَلَدٌ فَلَهُنَّ الثُّمُنُ مِمّا تَرَكتُم مِن بَعدِ وَصِيَّةٍ توصونَ بِها أَو دَينٍ وَإِن كانَ رَجُلٌ يورَثُ كَلٰلَةً أَوِ امرَأَةٌ وَلَهُ أَخٌ أَو أُختٌ فَلِكُلِّ وٰحِدٍ مِنهُمَا السُّدُسُ فَإِن كانوا أَكثَرَ مِن ذٰلِكَ فَهُم شُرَكاءُ فِى الثُّلُثِ مِن بَعدِ وَصِيَّةٍ يوصىٰ بِها أَو دَينٍ غَيرَ مُضارٍّ وَصِيَّةً مِنَ اللَّهِ وَاللَّهُ عَليمٌ حَليمٌ

அவர்களுக்குப் பிள்ளைகள் எவரும் இல்லாதிருந்தால், உங்கள் மனைவியர் பின் விட்டுச் செல்பவற்றில் பாதியை நீங்கள் பெறுகின்றீர்கள். அவர்களுக்குப் பிள்ளைகள் இருந்தால், அவர்கள் விட்டுச் சென்றவற்றில் நான்கில் ஒன்றை நீங்கள் பெறுகின்றீர்கள். இவை அனைத்தும், அவர்கள் விட்டுச் சென்ற எந்த உயிலும் நிறைவேற்றப்பட்ட பின்னர், மேலும் கடன்கள் அனைத்தும் செலுத்தப்பட்டுவிட்ட பின்னருமேயாகும். உங்களுக்குப் பிள்ளைகள் எவரும் இல்லாதிருந்தால், நீங்கள் பின் விட்டுச் செல்பவற்றில் நான்கில் ஒன்றை அவர்கள் பெறுகின்றனர். உங்களுக்குப்பிள்ளைகள் இருந்தால், நீங்கள் விட்டுச் செல்பவற்றில் எட்டில் ஒன்றை அவர்கள் பெறுகின்றனர். இவை அனைத்தும், நீங்கள் விட்டுச் செல்கின்ற எந்த உயிலும் நிறைவேற்றப்பட்ட பின்னர், மேலும் கடன்கள் அனைத்தும் செலுத்தப்பட்டுவிட்ட பின்னருமேயாகும். மரணித்த ஆணோ அல்லது பெண்ணோ ஒதுங்கி வாழ்கின்ற ஒருவராக இருந்து, ஆணோ அல்லது பெண்ணோ, இரண்டு உடன் பிறந்தவர்களை விட்டுச்சென்றிருந்தால் அவர்களில் ஒவ்வொருவரும் வாரிசுரிமையில் ஆறில் ஒன்றைப் பெறுகின்றனர். அதிகமான உடன்பிறந்தவர்கள் இருப்பார்களாயின், அப்போது அவர்கள் வாரிசுரிமையில் மூன்றில் ஒன்றைச் சமமாகப் பங்கிட்டுக்கொள்கின்றனர். இவை அனைத்தும் உயில் எதுவும் நிறைவேற்றப்பட்ட பின்னர், மேலும் கடன்கள் அனைத்தும் செலுத்தப்பட்டுவிட்ட பின்னருமேயாகும், இதன் விளைவாக எவரொருவரும் பாதிக்கப்படாதிருப்பார்கள். இது கடவுளால் கட்டளையிடப்பட்ட ஓர் உயிலாகும். கடவுள் சர்வமும் அறிந்தவர், கனிவானவர்.

You get half of what your wives leave behind, if they had no children. If they had children, you get one-fourth of what they leave. All this, after fulfilling any will they had left, and after paying off all debts. They get one-fourth of what you leave behind, if you had no children. If you had children, they get one-eighth of what you bequeath. All this, after fulfilling any will you had left, and after paying off all debts. If the deceased man or woman was a loner, and leaves two siblings, male or female, each of them gets one-sixth of the inheritance. If there are more siblings, then they equally share one-third of the inheritance. All this, after fulfilling any will, and after paying off all debts, so that no one is hurt. This is a will decreed by God. God is Omniscient, Clement.

செயலியில் வாசிக்கமுழு அத்தியாயம்

‹ முந்தைய 4:11அடுத்த 4:13 ›