حم
ஹ்ஹ. ம.*
حم
ஹ்ஹ. ம.*
تَنزيلٌ مِنَ الرَّحمٰنِ الرَّحيمِ
மிக்க அருளாளர், மிக்க கருணையாளரிடமிருந்து ஒரு வெளிப்பாடு.
كِتٰبٌ فُصِّلَت ءايٰتُهُ قُرءانًا عَرَبِيًّا لِقَومٍ يَعلَمونَ
அறிந்திருக்கும் மக்களுக்கு, அரபி மொழியிலானதொரு குர்ஆனில், முழுமையான விபரங்களை வழங்குகின்ற வசனங்களைக் கொண்ட ஒரு வேதம்.
بَشيرًا وَنَذيرًا فَأَعرَضَ أَكثَرُهُم فَهُم لا يَسمَعونَ
நற்செய்திகளைத் தாங்கிய ஒன்று, அவ்வண்ணமே எச்சரிக்கும் ஒன்று. ஆயினும், அவர்களில் அதிகமானோர் திரும்பிச் சென்றுவிடுகின்றனர்; அவர்கள் செவியேற்பதில்லை.
وَقالوا قُلوبُنا فى أَكِنَّةٍ مِمّا تَدعونا إِلَيهِ وَفى ءاذانِنا وَقرٌ وَمِن بَينِنا وَبَينِكَ حِجابٌ فَاعمَل إِنَّنا عٰمِلونَ
அவர்கள் கூறினர், எங்களுடைய மனங்கள் முடிவெடுத்துவிட்டன, உம்முடைய தூதுச் செய்தியின்பால் எங்களுடைய காதுகள் செவிடாகிவிட்டன, மேலும் உம்மிடமிருந்து எங்களை ஒரு தடுப்பு பிரித்து வைக்கின்றது. நீர் விரும்பியதைச் செய்து கொள்ளும், அவ்வாறே நாங்களும் செய்வோம்.
قُل إِنَّما أَنا۠ بَشَرٌ مِثلُكُم يوحىٰ إِلَىَّ أَنَّما إِلٰهُكُم إِلٰهٌ وٰحِدٌ فَاستَقيموا إِلَيهِ وَاستَغفِروهُ وَوَيلٌ لِلمُشرِكينَ
கூறுவீராக, உங்கள் தெய்வம் ஒரே தெய்வம் என்று உள்ளுணர்வளிக்கப்பட்டுள்ள நான் உங்களைப் போன்ற ஒரு மானிடன் என்பதை விட அதிகம் எதுவுமில்லை. நீங்கள் அவருக்கு அர்ப்பணித்துக் கொண்டவர்களாக இருக்கவும், மேலும் அவருடைய மன்னிப்பைக் கேட்கவும் வேண்டும். போலித் தெய்வ வழிபாடு செய்பவர்களுக்குக் கேடுதான்.
الَّذينَ لا يُؤتونَ الزَّكوٰةَ وَهُم بِالـٔاخِرَةِ هُم كٰفِرونَ
(ஜகாத்) கடமையான தர்மத்தைக் கொடுக்காதவர்கள், மேலும் மறுவுலகத்தைக் குறித்து, அவர்கள் நம்பமறுப்பவர்களாக இருக்கின்றனர்.
إِنَّ الَّذينَ ءامَنوا وَعَمِلُوا الصّٰلِحٰتِ لَهُم أَجرٌ غَيرُ مَمنونٍ
நம்பிக்கை கொண்டு மேலும் நன்னெறியானதொரு வாழ்க்கை நடத்துபவர்களைப் பொறுத்த வரை, அவர்கள் நன்கு தகுதியானதொரு வெகுமதியைப் பெறுகின்றனர்.
قُل أَئِنَّكُم لَتَكفُرونَ بِالَّذى خَلَقَ الأَرضَ فى يَومَينِ وَتَجعَلونَ لَهُ أَندادًا ذٰلِكَ رَبُّ العٰلَمينَ
கூறுவீராக, பூமியை இரண்டு நாட்களில்* படைத்த அந்த ஒருவரை நீங்கள் நம்பமறுக்கின்றீர்கள், மேலும் அவரே பிரபஞ்சத்தின் இரட்சகராக இருக்கின்ற போதிலும், அவருடன் சமமாக்க, போலித் தெய்வங்களை நீங்கள் அமைத்துக்கொள்கின்றீர்கள்.
وَجَعَلَ فيها رَوٰسِىَ مِن فَوقِها وَبٰرَكَ فيها وَقَدَّرَ فيها أَقوٰتَها فى أَربَعَةِ أَيّامٍ سَواءً لِلسّائِلينَ
அவர் அதன் மீது நிலைப்படுத்திகளை (மலைகள்) அமைத்தார், அதனை வளமிக்கதாக ஆக்கினார், மேலும் அதில் வசிப்பவர்கள் அனைவருடைய தேவைகளையும் பூர்த்தி செய்யும் பொருட்டு, நான்கு நாட்களில் அதன் வாழ்வாதாரங்களை அவர் கணக்கிட்டார்.
ثُمَّ استَوىٰ إِلَى السَّماءِ وَهِىَ دُخانٌ فَقالَ لَها وَلِلأَرضِ ائتِيا طَوعًا أَو كَرهًا قالَتا أَتَينا طائِعينَ
பின்னர் அவர் வானத்தின் பால் திரும்பினார், அது வரை வாயுவாகவே அது இருந்த போது, அதனிடமும் பூமியிடமும் கூறினார், விருப்பத்துடனோ அல்லது விருப்பமில்லாமலோ, இருப்பு நிலைக்கு வாருங்கள். அவை கூறின, விருப்புடனே நாங்கள் வருகின்றோம்.
فَقَضىٰهُنَّ سَبعَ سَمٰواتٍ فى يَومَينِ وَأَوحىٰ فى كُلِّ سَماءٍ أَمرَها وَزَيَّنَّا السَّماءَ الدُّنيا بِمَصٰبيحَ وَحِفظًا ذٰلِكَ تَقديرُ العَزيزِ العَليمِ
இவ்விதமாக, அவர்* இரண்டு நாட்களில் ஏழு பிரபஞ்சங்களை முழுமைப்படுத்தினார், மேலும் ஒவ்வொரு பிரபஞ்சத்திற்குமுரிய விதிகளை அமைத்தார். மேலும் மிகக்கீழான பிரபஞ்சத்தை விளக்குகளைக் கொண்டு நாம் அலங்கரித்தோம், மேலும் அதனைச் சுற்றிப் பாதுகாவலர்களை அமைத்தோம். எல்லாம் வல்லவர், அனைத்தையும் அறிந்தவருடைய வடிவமைப்பு இவ்விதமானதாகும்.
فَإِن أَعرَضوا فَقُل أَنذَرتُكُم صٰعِقَةً مِثلَ صٰعِقَةِ عادٍ وَثَمودَ
அவர்கள் திரும்பிச் சென்றுவிட்டால், அப்போது கூறுவீராக, ஆது மற்றும் தமூது ஆகியோரைச் சின்னா பின்னமாக்கிய பேரழிவைப் போன்றதொரு பேரழிவைப் பற்றி உங்களை நான் எச்சரிக்கின்றேன்.
إِذ جاءَتهُمُ الرُّسُلُ مِن بَينِ أَيديهِم وَمِن خَلفِهِم أَلّا تَعبُدوا إِلَّا اللَّهَ قالوا لَو شاءَ رَبُّنا لَأَنزَلَ مَلٰئِكَةً فَإِنّا بِما أُرسِلتُم بِهِ كٰفِرونَ
நீங்கள் கடவுளைத் தவிர வழிபாடு செய்ய வேண்டாம் என்று கூறியவர்களாக, அவர்களிடமும், அவ்வாறே அவர்களுக்கு முன்னரும் அவர்களுக்குப் பின்னரும், அவர்களுடைய தூதர்கள் அவர்களிடம் சென்றனர். அவர்கள் கூறினர், எங்கள் இரட்சகர் நாடியிருந்தால், வானவர்களை அவர் அனுப்பியிருக்க முடியும். நீங்கள் கூறுபவற்றை நாங்கள் நம்பமறுப்பவர்களாக உள்ளோம்.
فَأَمّا عادٌ فَاستَكبَروا فِى الأَرضِ بِغَيرِ الحَقِّ وَقالوا مَن أَشَدُّ مِنّا قُوَّةً أَوَلَم يَرَوا أَنَّ اللَّهَ الَّذى خَلَقَهُم هُوَ أَشَدُّ مِنهُم قُوَّةً وَكانوا بِـٔايٰتِنا يَجحَدونَ
ஆதுகளைப் பொறுத்தவரை, அவர்கள் பூமியின் மீது ஆணவங்கொண்டார்கள், சத்தியத்தை எதிர்த்தார்கள், மேலும் கூறினார்கள், நம்மை விட அதிக வலிமை மிக்கவர்கள் யார்? அவர்களைப் படைத்தவரான கடவுள் அவர்களை விடவும் அதிக வலிமை மிக்கவர் என்பதை அவர்கள் புரிந்து கொள்ளவில்லையா? அவர்கள் நமது வெளிப்பாடுகளை நன்றியற்றவர்களாக இருந்தனர்.
فَأَرسَلنا عَلَيهِم ريحًا صَرصَرًا فى أَيّامٍ نَحِساتٍ لِنُذيقَهُم عَذابَ الخِزىِ فِى الحَيوٰةِ الدُّنيا وَلَعَذابُ الـٔاخِرَةِ أَخزىٰ وَهُم لا يُنصَرونَ
அதன் விளைவாக, அவர்கள் மீது உக்கிரமான காற்றை ஒரு சில துன்பகரமான நாட்கள் நாம் அனுப்பினோம். இவ்விதமாக நாம் இழிவு தரும் தண்டனையைக் கொண்டு இந்த வாழ்க்கையில் அவர்களை வருத்தினோம், மேலும் மறுவுலகின் தண்டனையோ இன்னும் அதிகமான இழிவு தருவதாகும்; அவர்கள் ஒருபோதும் ஜெயிக்க முடியாது.
وَأَمّا ثَمودُ فَهَدَينٰهُم فَاستَحَبُّوا العَمىٰ عَلَى الهُدىٰ فَأَخَذَتهُم صٰعِقَةُ العَذابِ الهونِ بِما كانوا يَكسِبونَ
தமூதுகளைப் பொறுத்த வரை, நாம் அவர்களுக்கு வழிகாட்டலை வழங்கினோம், ஆனால் அவர்கள் வழிகாட்டலை விடவும் குருட்டுத்தனத்தையே விரும்பி எடுத்துக் கொண்டார்கள். அதன் விளைவாக, பெருத்த நாசமுண்டாக்கிய மேலும் அவலம் நிறைந்த தண்டனை அவர்களை அழித்தொழித்தது, அவர்கள் சம்பாதித்தவற்றின் காரணத்தால்.
وَنَجَّينَا الَّذينَ ءامَنوا وَكانوا يَتَّقونَ
நம்பிக்கை கொண்டு நன்னெறியானதொரு வாழ்வு நடத்துபவர்களை நாம் எப்போதும் காப்பாற்றுகின்றோம்.
وَيَومَ يُحشَرُ أَعداءُ اللَّهِ إِلَى النّارِ فَهُم يوزَعونَ
வலுக்கட்டாயமாக, கடவுளின் எதிரிகள் நரக நெருப்பிற்கு வரவழைக்கப்படுகின்ற அந்நாள் வரும்.
حَتّىٰ إِذا ما جاءوها شَهِدَ عَلَيهِم سَمعُهُم وَأَبصٰرُهُم وَجُلودُهُم بِما كانوا يَعمَلونَ
அவர்கள் அங்கே சென்றடைந்தவுடன், அவர்களுடைய சொந்தச் செவிப்புலன், கண்கள் மற்றும் தோல்கள் அவர்கள் செய்த ஒவ்வொன்றுக்கும் சாட்சி பகர்ந்திடும்.
وَقالوا لِجُلودِهِم لِمَ شَهِدتُم عَلَينا قالوا أَنطَقَنَا اللَّهُ الَّذى أَنطَقَ كُلَّ شَىءٍ وَهُوَ خَلَقَكُم أَوَّلَ مَرَّةٍ وَإِلَيهِ تُرجَعونَ
அவர்கள் தங்கள் தோல்களிடம் கூறுவார்கள், ஏன் நீங்கள் எங்களுக்கெதிராகச் சாட்சியம் அளித்தீர்கள்? அவை பதிலளிக்கும், கடவுள் எங்களைப் பேசச் செய்தார்; அவர்தான் ஒவ்வொன்றையும் பேசச் செய்கின்றார். அவர்தான் உங்களை முதல் முறை படைத்தவர், மேலும் இப்போது நீங்கள் அவரிடமே திரும்பக் கொண்டு வரப்பட்டு இருக்கின்றீர்கள்.
وَما كُنتُم تَستَتِرونَ أَن يَشهَدَ عَلَيكُم سَمعُكُم وَلا أَبصٰرُكُم وَلا جُلودُكُم وَلٰكِن ظَنَنتُم أَنَّ اللَّهَ لا يَعلَمُ كَثيرًا مِمّا تَعمَلونَ
உங்களுடைய சொந்தச் செவிப்புலன், உங்களுடைய கண்கள், அல்லது உங்களுடைய தோல்கள் ஆகியவற்றிலிருந்து நீங்கள் மறைத்துக்கொள்ள எந்த வழியுமில்லை. உண்மையில், நீங்கள் செய்கின்றவற்றில் அதிகமானதைக் கடவுள் அறியாமல் இருக்கின்றார் என்று நீங்கள் நினைத்துக் கொண்டீர்கள்.
وَذٰلِكُم ظَنُّكُمُ الَّذى ظَنَنتُم بِرَبِّكُم أَردىٰكُم فَأَصبَحتُم مِنَ الخٰسِرينَ
உங்களுடைய இரட்சகரைப் பற்றிய இவ்வகையான நினைப்பு உங்களை வீழ்ந்துவிடச் செய்யும், மேலும் பின்னர் நீங்கள் நஷ்டவாளிகள் ஆகிவிடுவீர்கள்.
فَإِن يَصبِروا فَالنّارُ مَثوًى لَهُم وَإِن يَستَعتِبوا فَما هُم مِنَ المُعتَبينَ
அவர்கள் இருக்கின்ற வழியிலேயே அவர்கள் தொடர்ந்து சென்றால், நரகமே அவர்களுடைய விதியாக இருக்கும், மேலும் அவர்கள் பிழை பொறுக்கக் கோரினாலும், அவர்கள் பிழை பொறுக்கப்பட மாட்டார்கள்.
وَقَيَّضنا لَهُم قُرَناءَ فَزَيَّنوا لَهُم ما بَينَ أَيديهِم وَما خَلفَهُم وَحَقَّ عَلَيهِمُ القَولُ فى أُمَمٍ قَد خَلَت مِن قَبلِهِم مِنَ الجِنِّ وَالإِنسِ إِنَّهُم كانوا خٰسِرينَ
அவர்கள் செய்கின்ற ஒவ்வொன்றையும் அவர்களுடைய கண்களில் அலங்காரமாக்கும் கூட்டாளிகளை அவர்கள் பால் நாம் நியமிக்கின்றோம். இவ்விதமாக, முந்திய சமூகங்களின் ஜின்கள் மற்றும் மனிதர்களுக்கு நேர்ந்ததைப் போன்ற அதே விதிக்கு அவர்கள் உள்ளாவதில் சென்று முடிவார்கள். அவர்களும் நஷ்டவாளிகளாகவே இருந்தனர்.
وَقالَ الَّذينَ كَفَروا لا تَسمَعوا لِهٰذَا القُرءانِ وَالغَوا فيهِ لَعَلَّكُم تَغلِبونَ
நம்பமறுப்பவர்கள் கூறினர், இந்தக் குர்ஆனைக் கவனித்துக் கேட்காதீர்கள், மேலும் நீங்கள் வெற்றி பெறும் பொருட்டு, அதனைச் சிதைத்துவிடுங்கள்.
فَلَنُذيقَنَّ الَّذينَ كَفَروا عَذابًا شَديدًا وَلَنَجزِيَنَّهُم أَسوَأَ الَّذى كانوا يَعمَلونَ
நிச்சயமாக நாம் இந்த நம்பமறுப்பவர்களைக் கடுமையானதொரு தண்டனையைக் கொண்டு வருத்துவோம். நிச்சயமாக அவர்களுடைய தீயகாரியங்களுக்குரிய கூலியை அவர்களுக்குத் திருப்பிக் கொடுப்போம்.
ذٰلِكَ جَزاءُ أَعداءِ اللَّهِ النّارُ لَهُم فيها دارُ الخُلدِ جَزاءً بِما كانوا بِـٔايٰتِنا يَجحَدونَ
கடவுளின் விரோதிகளுக்காகக் காத்திருக்கும் கூலி இத்தகையதேயாகும். நரகம்தான் அவர்களுடைய நிரந்தரமான தங்குமிடமாக இருக்கும்; நம்முடைய வெளிப்பாடுகளைக் கைவிட்டதற்கான ஒரு நியாயமான கூலி.
وَقالَ الَّذينَ كَفَروا رَبَّنا أَرِنَا الَّذَينِ أَضَلّانا مِنَ الجِنِّ وَالإِنسِ نَجعَلهُما تَحتَ أَقدامِنا لِيَكونا مِنَ الأَسفَلينَ
நம்பமறுப்பவர்கள் கூறுவார்கள், எங்கள் இரட்சகரே, எங்களை வழிதவறச் செய்த இருவகையினரில் உள்ளவர்களை - ஜின்கள் மற்றும் மானிடர்கள் - எங்கள் பாதங்களுக்குக் கீழே போட்டு நசுக்கி, மேலும் அவர்களை மிகக் கீழானவர்களாக ஆக்கிவிடுவதற்காக, அவர்களை எங்களுக்குக் காட்டுவீராக.
إِنَّ الَّذينَ قالوا رَبُّنَا اللَّهُ ثُمَّ استَقٰموا تَتَنَزَّلُ عَلَيهِمُ المَلٰئِكَةُ أَلّا تَخافوا وَلا تَحزَنوا وَأَبشِروا بِالجَنَّةِ الَّتى كُنتُم توعَدونَ
கடவுள்தான் எங்கள் இரட்சகர், எனப் பிரகடனம் செய்து, பின்னர் நன்னெறியானதொரு வாழ்வு நடத்துகின்ற அவர்கள் மீது வானவர்கள் இறங்குகின்றனர்: நீங்கள் அச்சம் எதுவும் கொள்ள வேண்டாம், அன்றி நீங்கள் துக்கப்படவும் வேண்டாம். சுவனம் உங்களுக்காக ஒதுக்கி வைக்கப்பட்டுள்ளது என்ற நற்செய்தியில் மகிழ்ச்சியடையுங்கள்.
نَحنُ أَولِياؤُكُم فِى الحَيوٰةِ الدُّنيا وَفِى الـٔاخِرَةِ وَلَكُم فيها ما تَشتَهى أَنفُسُكُم وَلَكُم فيها ما تَدَّعونَ
இந்த வாழ்விலும் மறுவுலகிலும் நாங்கள் உங்களுடைய தோழர்களாக இருக்கின்றோம். அதிலே நீங்கள் ஆசைப்படும் எதுவும் உங்களுக்குக் கிடைக்கும்; நீங்கள் விரும்புகின்ற எதுவும் உங்களுக்குக் கிடைக்கும்.
نُزُلًا مِن غَفورٍ رَحيمٍ
(இவ்விதமானது உங்களுடைய) இறுதித் தங்குமிடம், மன்னிக்கின்ற ஒருவர், மிக்க கருணையாளரிடமிருந்து. சரணடைந்தோர்
وَمَن أَحسَنُ قَولًا مِمَّن دَعا إِلَى اللَّهِ وَعَمِلَ صٰلِحًا وَقالَ إِنَّنى مِنَ المُسلِمينَ
கடவுளின் பால் அழைத்து, மேலும் நன்னெறியான காரியங்கள் செய்து, மேலும், நான் சரணடைந்தவர்களில் ஒருவன், என்று கூறும் ஒருவரை விட, நல்ல வார்த்தைகளை உதிர்க்க எவரால் இயலும்?
وَلا تَستَوِى الحَسَنَةُ وَلَا السَّيِّئَةُ ادفَع بِالَّتى هِىَ أَحسَنُ فَإِذَا الَّذى بَينَكَ وَبَينَهُ عَدٰوَةٌ كَأَنَّهُ وَلِىٌّ حَميمٌ
நல்ல நடத்தையும் கெட்ட நடத்தையும் சமமானவையல்ல. இயன்றவரை மிகச் சிறந்த நடத்தையைக் கைக்கொள்ள நீங்கள் வேண்டும். இதன் மூலமாக, உங்களுடைய விரோதியாக இருந்து வந்த ஒருவனும், உங்களுடைய மிகச் சிறந்த நண்பனாகிவிடக்கூடும்.
وَما يُلَقّىٰها إِلَّا الَّذينَ صَبَروا وَما يُلَقّىٰها إِلّا ذو حَظٍّ عَظيمٍ
உறுதியோடு தொடர்ந்திருப்பவர்களைத் தவிர எவரும் இதனை அடைந்துவிட முடியாது. மகத்தான நற்பேறு பெற்றவர்களைத் தவிர எவரும் இதனை அடைந்துவிட முடியாது.
وَإِمّا يَنزَغَنَّكَ مِنَ الشَّيطٰنِ نَزغٌ فَاستَعِذ بِاللَّهِ إِنَّهُ هُوَ السَّميعُ العَليمُ
சாத்தான் உங்களிடம் ஒரு யோசனையைக் கிசுகிசுத்தால், நீங்கள் கடவுளிடம் புகலிடம் தேட வேண்டும். அவர்தான் செவியேற்பவர், அனைத்தையும் அறிந்தவர்.
وَمِن ءايٰتِهِ الَّيلُ وَالنَّهارُ وَالشَّمسُ وَالقَمَرُ لا تَسجُدوا لِلشَّمسِ وَلا لِلقَمَرِ وَاسجُدوا لِلَّهِ الَّذى خَلَقَهُنَّ إِن كُنتُم إِيّاهُ تَعبُدونَ
இரவும் பகலும், மேலும் சூரியனும் சந்திரனும் அவருடைய சான்றுகளில் உள்ளவையாகும். சூரியன் முன்னிலையிலோ அன்றிச் சந்திரனுக்கோ சிரம் பணியாதீர்கள்; நீங்கள் மெய்யாகவே அவரை மட்டும் வழிபட்டால், அவற்றைப் படைத்த கடவுளின் முன்னிலையில்தான் நீங்கள் சிரம்பணிந்து விழ வேண்டும்.
فَإِنِ استَكبَروا فَالَّذينَ عِندَ رَبِّكَ يُسَبِّحونَ لَهُ بِالَّيلِ وَالنَّهارِ وَهُم لا يَسـَٔمونَ
இதனைச் செய்வதற்கு அவர்கள் மிகவும் ஆணவம் கொண்டவர்களாக இருந்தால், பின்னர் உம் இரட்சகரிடத்தில் இருப்பவர்கள், எப்பொழுதும் சோர்வடையாது இரவும் பகலும் அவரைத் துதி செய்கின்றனர்.
وَمِن ءايٰتِهِ أَنَّكَ تَرَى الأَرضَ خٰشِعَةً فَإِذا أَنزَلنا عَلَيهَا الماءَ اهتَزَّت وَرَبَت إِنَّ الَّذى أَحياها لَمُحىِ المَوتىٰ إِنَّهُ عَلىٰ كُلِّ شَىءٍ قَديرٌ
நிலமானது அசைவற்று இருப்பதை நீர் காண்பதும், பின்னர், அதன் மீது நாம் தண்ணீரைப் பொழிந்தவுடன், அது உயிர் கொண்டு துளிர்ப்பதும் அவருடைய சான்றுகளில் உள்ளவையாகும். நிச்சயமாக, அதனை உயிர்ப்பித்தவரால் இறந்தவர்களை உயிர்ப்பிக்க இயலும். அவர் சர்வ சக்தியுடையவர்.
إِنَّ الَّذينَ يُلحِدونَ فى ءايٰتِنا لا يَخفَونَ عَلَينا أَفَمَن يُلقىٰ فِى النّارِ خَيرٌ أَم مَن يَأتى ءامِنًا يَومَ القِيٰمَةِ اعمَلوا ما شِئتُم إِنَّهُ بِما تَعمَلونَ بَصيرٌ
நிச்சயமாக, நம்முடைய வெளிப்பாடுகளைச் சிதைப்பவர்கள் நம்மை விட்டும் ஒளிந்தவர்களாக இல்லை. நரகத்தில் வீசப்படுகின்ற ஒருவன் மேலானவனா, அல்லது உயிர்த்தெழுப்பப்படும் நாளன்று பாதுகாப்புடன் வருகின்ற ஒருவரா? நீங்கள் விரும்பிய எதையும் செய்து கொள்ளுங்கள்; நீங்கள் செய்கின்ற ஒவ்வொன்றையும் பார்ப்பவராக அவர் இருக்கின்றார்.
إِنَّ الَّذينَ كَفَروا بِالذِّكرِ لَمّا جاءَهُم وَإِنَّهُ لَكِتٰبٌ عَزيزٌ
குர்ஆனின் சான்றானது* அவர்களிடம் வந்த பொழுது அதனை ஏற்றுக்கொள்ள மறுத்தவர்கள், கண்ணியமானதொரு புத்தகத்தையும் ஏற்றுக்கொள்ள மறுத்தவர்களாகிவிட்டனர்.
لا يَأتيهِ البٰطِلُ مِن بَينِ يَدَيهِ وَلا مِن خَلفِهِ تَنزيلٌ مِن حَكيمٍ حَميدٍ
கடந்த காலத்திலோ அல்லது எதிர்காலத்திலோ எந்தப் பொய்மையும் அதில் நுழைந்திட முடியாது; * ஞானம் மிகுந்தவர், புகழுக்குத் தகுதியானவரிடமிருந்து வந்த ஒரு வெளிப்பாடு.
ما يُقالُ لَكَ إِلّا ما قَد قيلَ لِلرُّسُلِ مِن قَبلِكَ إِنَّ رَبَّكَ لَذو مَغفِرَةٍ وَذو عِقابٍ أَليمٍ
முந்திய தூதர்களுக்கு என்ன கூறப்பட்டதோ அதுவே துல்லியமாக உமக்கும் கூறப்பட்டுள்ளது. உம்முடைய இரட்சகரிடம் மன்னிப்பு உள்ளது, அத்துடன் அவரிடம் வலி நிறைந்த தண்டனையும் கூட உள்ளது.
وَلَو جَعَلنٰهُ قُرءانًا أَعجَمِيًّا لَقالوا لَولا فُصِّلَت ءايٰتُهُ ءَأَعجَمِىٌّ وَعَرَبِىٌّ قُل هُوَ لِلَّذينَ ءامَنوا هُدًى وَشِفاءٌ وَالَّذينَ لا يُؤمِنونَ فى ءاذانِهِم وَقرٌ وَهُوَ عَلَيهِم عَمًى أُولٰئِكَ يُنادَونَ مِن مَكانٍ بَعيدٍ
அரபி மொழி அல்லாத குர்ஆனாக நாம் இதனை ஆக்கியிருப்போமாயின், அவர்கள் கூறியிருப்பார்கள், ஏன் இது அந்த மொழியில் இறங்கி வந்தது? அது அரபி மொழியோ அல்லது அரபி மொழி அல்லாததோ, கூறுவீராக, நம்பிக்கை கொண்டவர்களுக்கு, இது ஒரு வழிகாட்டலும் நிவாரணமும் ஆகும். நம்பமறுப்பவர்களைப் பொறுத்தவரை, அவர்கள் மிகத் தொலைவிலிருந்து உரையாற்றப்படுவதைப் போன்று, இதன்பால் அவர்கள் செவிடர்களாகவும் குருடர்களாகவும் இருப்பார்கள்.
وَلَقَد ءاتَينا موسَى الكِتٰبَ فَاختُلِفَ فيهِ وَلَولا كَلِمَةٌ سَبَقَت مِن رَبِّكَ لَقُضِىَ بَينَهُم وَإِنَّهُم لَفى شَكٍّ مِنهُ مُريبٍ
மோஸஸுக்கு நாம் வேதத்தைக் கொடுத்தோம், ஆனால் அதுவும் தர்க்கித்துக்கொள்ளப்பட்டது. உம்முடைய இரட்சகரின் முன்னரே நிர்ணயிக்கப்பட்ட தீர்மானம் இல்லாதிருந்தால், அவர்கள் உடனடியாகத் தீர்ப்பளிக்கப்பட்டிருப்பார்கள். உண்மையில், அவர்கள் மிகவும் ஏராளமான ஐயங்களைத் தாங்கியிருக்கின்றனர்.
مَن عَمِلَ صٰلِحًا فَلِنَفسِهِ وَمَن أَساءَ فَعَلَيها وَما رَبُّكَ بِظَلّٰمٍ لِلعَبيدِ
நன்னெறியான காரியங்கள் புரிகின்ற எவராயினும், தன் சொந்த நலனுக்காகவே அவ்வாறு செய்கின்றார், மேலும் தீமைகளைப் புரிகின்ற எவராயினும் தனக்கே கேடாகத்தான் அவ்வாறு செய்கின்றார். உம்முடைய இரட்சகர் ஒருபோதும் மக்களின்பால் அநீதி இழைப்பவர் அல்லர்.
إِلَيهِ يُرَدُّ عِلمُ السّاعَةِ وَما تَخرُجُ مِن ثَمَرٰتٍ مِن أَكمامِها وَما تَحمِلُ مِن أُنثىٰ وَلا تَضَعُ إِلّا بِعِلمِهِ وَيَومَ يُناديهِم أَينَ شُرَكاءى قالوا ءاذَنّٰكَ ما مِنّا مِن شَهيدٍ
வேளை (உலகத்தின் முடிவு)* பற்றிய அறிவு அவரிடமே உள்ளது. அவருடைய அறிவு இல்லாமல், பழங்கள் எதுவும் அவற்றின் பாளைகளிலிருந்து வெளிவருவதில்லை, அன்றி எந்தப் பெண்ணும் கருத்தரிப்பதோ அல்லது பிரசவிப்பதோ இல்லை. அவர்களை அவர் வினவுகின்ற அந்நாள் வரும்: என்னுடன் நீங்கள் அமைத்துக் கொண்ட அந்த போலித் தெய்வங்கள் எங்கே? அவர்கள் கூறுவார்கள், எங்களில் எவருமே அதற்குச் சாட்சி கூறுபவர்கள் இல்லை என்று நாங்கள் உம்மிடம் பிரகடனிக்கின்றோம்.
وَضَلَّ عَنهُم ما كانوا يَدعونَ مِن قَبلُ وَظَنّوا ما لَهُم مِن مَحيصٍ
அவர்கள் இணைவழிபாடு செய்த அந்தப் போலித் தெய்வங்கள் அவர்களைக் கைவிட்டுவிடும், மேலும் விடுதலை இல்லை என்பதை அவர்கள் புரிந்து கொள்வார்கள்.
لا يَسـَٔمُ الإِنسٰنُ مِن دُعاءِ الخَيرِ وَإِن مَسَّهُ الشَّرُّ فَيَـٔوسٌ قَنوطٌ
நல்ல விஷயங்களுக்காக இறைஞ்சுவதில் மானிடன் ஒருபோதும் சோர்வடைவதில்லை. ஆனால் அவனுக்குத் துன்பங்கள் நேரிட்டால், அவன் மனத்தளர்ச்சியடைந்தவனாகவும், நிராசையடைந்தவனாகவும் ஆகிவிடுகின்றான்.
وَلَئِن أَذَقنٰهُ رَحمَةً مِنّا مِن بَعدِ ضَرّاءَ مَسَّتهُ لَيَقولَنَّ هٰذا لى وَما أَظُنُّ السّاعَةَ قائِمَةً وَلَئِن رُجِعتُ إِلىٰ رَبّى إِنَّ لى عِندَهُ لَلحُسنىٰ فَلَنُنَبِّئَنَّ الَّذينَ كَفَروا بِما عَمِلوا وَلَنُذيقَنَّهُم مِن عَذابٍ غَليظٍ
மேலும், சில துன்பங்களை அனுபவித்த பின்னர் அவனை நாம் ஆசீர்வதித்தால், அவன் கூறுகின்றான், இது எனக்குரியதே ஆகும். வேளை எப்பொழுதேனும் நிகழ்ந்தேறும் என்று நான் நம்பவில்லை. என் இரட்சகரிடம் நான் திருப்பப்பட்டாலும் கூட, அவரிடமும் நான் மேலானவற்றையே அடைவேன். மிகவும் உறுதியாக, அவர்களுடைய அனைத்துக் காரியங்களைப் பற்றியும் நம்பமறுப்பவர்களுக்கு நாம் தெரிவிப்போம், மேலும் கடுமையான தண்டனைக்கு அவர்களை உட்படுத்துவோம்.
وَإِذا أَنعَمنا عَلَى الإِنسٰنِ أَعرَضَ وَنَـٔا بِجانِبِهِ وَإِذا مَسَّهُ الشَّرُّ فَذو دُعاءٍ عَريضٍ
மானிடனை நாம் ஆசீர்வதிக்கும் போது, அவன் திரும்பிச் செல்கின்றான், மேலும் தூரத்திலும் தூரமாகத் தள்ளிச் சென்றுவிடுகின்றான், மேலும் அவன் ஏதேனும் துன்பத்தால் கஷ்டமடைந்தால், அவன் உரத்த குரலில் இறைஞ்சுகின்றான்.
قُل أَرَءَيتُم إِن كانَ مِن عِندِ اللَّهِ ثُمَّ كَفَرتُم بِهِ مَن أَضَلُّ مِمَّن هُوَ فى شِقاقٍ بَعيدٍ
பிரகடனம் செய்யுங்கள்: இது மெய்யாகவே கடவுளிடமிருந்து வந்ததாக இருந்து, பின்னர் அதனை நீங்கள் ஏற்கமறுப்பதென முடிவு செய்துவிட்டால்? இதனை எதிர்ப்பதென முடிவெடுத்துவிட்டவர்களை விட மிக நெடிய வழிகேட்டில் இருப்பவர்கள் யார்?
سَنُريهِم ءايٰتِنا فِى الـٔافاقِ وَفى أَنفُسِهِم حَتّىٰ يَتَبَيَّنَ لَهُم أَنَّهُ الحَقُّ أَوَلَم يَكفِ بِرَبِّكَ أَنَّهُ عَلىٰ كُلِّ شَىءٍ شَهيدٌ
விளிம்புகளிலும், மேலும் அவர்களுக்குள்ளேயும், இது சத்தியம்தான் என்பதை அவர்கள் புரிந்து கொள்ளும் வரை நமது சான்றுகளை நாம் அவர்களுக்குக் காட்டுவோம்.* அனைத்து விஷயங்களுக்கும் ஒரு சாட்சியாக, உம்முடைய இரட்சகர் போதுமானவர் அல்லவா?
أَلا إِنَّهُم فى مِريَةٍ مِن لِقاءِ رَبِّهِم أَلا إِنَّهُ بِكُلِّ شَىءٍ مُحيطٌ
உண்மையில், தங்கள் இரட்சகரைச் சந்திப்பதைக் குறித்து அவர்கள் சந்தேகத்துடன் இருக்கின்றனர். அனைத்து விஷயங்களையும் அவர் முற்றிலும் அறிந்தவராக இருக்கின்றார்.