Kadavulmattum.orgகுர்ஆன் · அனைத்து 114 அத்தியாயங்கள்

46. அல்-அஹ்காஃப் (மணற்குன்றுகள்)

الأحقاف · 35 வசனங்கள் · மக்காவில் அருளப்பட்டது

செயலியில் வாசிக்க

‹ அத்தியாயம் 45அத்தியாயம் 47 ›
46:1

حم

ஹ்ஹ. ம.

46:2

تَنزيلُ الكِتٰبِ مِنَ اللَّهِ العَزيزِ الحَكيمِ

இந்த வேதத்தின் வெளிப்பாடானது எல்லாம் வல்லவர், ஞானம் மிகுந்தவரான கடவுளிடமிருந்து வந்துள்ளது.

46:3

ما خَلَقنَا السَّمٰوٰتِ وَالأَرضَ وَما بَينَهُما إِلّا بِالحَقِّ وَأَجَلٍ مُسَمًّى وَالَّذينَ كَفَروا عَمّا أُنذِروا مُعرِضونَ

வானங்களையும் பூமியையும், மேலும் அவற்றுக்கிடையில் உள்ள ஒவ்வொன்றையும் ஒரு குறிப்பிட்ட நோக்கத்திற்காகவும், வரையறுக்கப்பட்டதொரு தவணைக்காகவுமே அன்றி நாம் படைக்கவில்லை. நம்பமறுப்பவர்கள் அவர்களுக்குக் கொடுக்கப்பட்ட எச்சரிக்கைகளின்பால் முற்றிலும் கவனமற்றவர்களாகவே இருக்கின்றனர்.

46:4

قُل أَرَءَيتُم ما تَدعونَ مِن دونِ اللَّهِ أَرونى ماذا خَلَقوا مِنَ الأَرضِ أَم لَهُم شِركٌ فِى السَّمٰوٰتِ ائتونى بِكِتٰبٍ مِن قَبلِ هٰذا أَو أَثٰرَةٍ مِن عِلمٍ إِن كُنتُم صٰدِقينَ

கூறுவீராக, கடவுளுடன் நீங்கள் அமைத்துக் கொண்ட போலித் தெய்வங்களைச் சிந்தித்துப்பாருங்கள். பூமியின் மீது அவை எதனைத்தான் படைத்திருக்கின்றன என்பதை எனக்குக் காட்டுங்கள். வானங்களின் பகுதியினை அவை சொந்தமாகக் கொண்டிருக்கின்றனவா? இதற்கு முந்திய வேதம் வேறு எதையேனுமோ அல்லது உங்களுடைய போலித்தெய்வ வழிபாட்டிற்கு ஆதரவளிக்கும் நிலைபெற்ற அறிவின் பகுதி எதையேனுமோ, நீங்கள் உண்மையாளர்களாக இருந்தால் எனக்குக் காட்டுங்கள்.

46:5

وَمَن أَضَلُّ مِمَّن يَدعوا مِن دونِ اللَّهِ مَن لا يَستَجيبُ لَهُ إِلىٰ يَومِ القِيٰمَةِ وَهُم عَن دُعائِهِم غٰفِلونَ

உயிர்த்தெழுப்பப்படும் நாள் வரை அவர்களுக்கு ஒருபோதும் மறுமொழியளிக்க முடியாத, மேலும் அவர்களுடைய வழிபாட்டினைக் குறித்து முற்றிலும் அறியாதிருக்கின்ற போலித்தெய்வங்களைக் கடவுளுடன் இணைவழிபாடு செய்பவர்களை விட, மிக நெடிய வழிகேட்டில் இருப்பவர்கள் யார்?

46:6

وَإِذا حُشِرَ النّاسُ كانوا لَهُم أَعداءً وَكانوا بِعِبادَتِهِم كٰفِرينَ

மேலும் (உயிர்த்தெழுப்பப்படும் நாளன்று) மக்கள் ஒன்று திரட்டப்படும் பொழுது, அவர்களுடைய போலித் தெய்வங்கள் அவர்களுடைய விரோதிகளாகிவிடுவார்கள், மேலும் அவர்களுடைய போலித் தெய்வ வழிபாட்டினைப்* பழித்துக் கூறுவார்கள்.

46:7

وَإِذا تُتلىٰ عَلَيهِم ءايٰتُنا بَيِّنٰتٍ قالَ الَّذينَ كَفَروا لِلحَقِّ لَمّا جاءَهُم هٰذا سِحرٌ مُبينٌ

முற்றிலும் தெளிவாக, நம்முடைய வெளிப்பாடுகள் அவர்களிடம் எடுத்துரைக்கப்படும் பொழுது, தங்களிடம் வந்த சத்தியத்தைக் குறித்து நம்பமறுப்பவர்கள் கூறுகின்றனர், இது கண்கூடான மாயாஜாலமேயாகும்!

46:8

أَم يَقولونَ افتَرىٰهُ قُل إِنِ افتَرَيتُهُ فَلا تَملِكونَ لى مِنَ اللَّهِ شَيـًٔا هُوَ أَعلَمُ بِما تُفيضونَ فيهِ كَفىٰ بِهِ شَهيدًا بَينى وَبَينَكُم وَهُوَ الغَفورُ الرَّحيمُ

இதனை அவர் புனைந்து கொண்டார், என்று அவர்கள் கூறினால், கூறுவீராக, இதனை நான் புனைந்து கொண்டிருப்பேனாயின், பின்னர் கடவுளிடமிருந்து என்னைக்காக்க உங்களால் இயலாது. நீங்கள் செய்கின்ற சூழ்ச்சி ஒவ்வொன்றையும் அவர் முற்றிலும் அறிந்திருக்கின்றார். எனக்கும் உங்களுக்கும் இடையில் ஒரு சாட்சியாக அவர் போதுமானவர். அவர்தான் மன்னிப்பவர், மிக்க கருணையாளர்.

46:9

قُل ما كُنتُ بِدعًا مِنَ الرُّسُلِ وَما أَدرى ما يُفعَلُ بى وَلا بِكُم إِن أَتَّبِعُ إِلّا ما يوحىٰ إِلَىَّ وَما أَنا۠ إِلّا نَذيرٌ مُبينٌ

கூறுவீராக, மற்றத் தூதர்களிலிருந்து நான் வேறுபட்டவன் அல்லன். எனக்கோ அல்லது உங்களுக்கோ என்ன நிகழும் என்பது குறித்து எனக்கு அறிவு எதுவும் கிடையாது. எனக்கு வெளிப்படுத்தப்பட்டவற்றை மட்டுமே நான் பின்பற்றுகின்றேன். ஆழ்ந்ததொரு எச்சரிப்பவன் என்பதை விட நான் அதிகம் எதுவுமில்லை.

46:10

قُل أَرَءَيتُم إِن كانَ مِن عِندِ اللَّهِ وَكَفَرتُم بِهِ وَشَهِدَ شاهِدٌ مِن بَنى إِسرٰءيلَ عَلىٰ مِثلِهِ فَـٔامَنَ وَاستَكبَرتُم إِنَّ اللَّهَ لا يَهدِى القَومَ الظّٰلِمينَ

கூறுவீராக, கடவுளிடமிருந்து இது வந்திருந்து இதனை நீங்கள் நிராகரித்துவிட்டால்? இஸ்ரேலின் சந்ததியினரிலிருந்து ஒரு சாட்சி இதைப் போன்றதொரு அற்புத நிகழ்வுக்குச் சாட்சியம் பகர்ந்துள்ளார்,* மேலும் அவர் நம்பிக்கை கொண்டார், ஆயினும் நீங்கள் ஆணவம் கொண்டீர்கள். நிச்சயமாக, பாவிகளான சமூகத்தைக் கடவுள் வழிநடத்துவதில்லை.

46:11

وَقالَ الَّذينَ كَفَروا لِلَّذينَ ءامَنوا لَو كانَ خَيرًا ما سَبَقونا إِلَيهِ وَإِذ لَم يَهتَدوا بِهِ فَسَيَقولونَ هٰذا إِفكٌ قَديمٌ

நம்பமறுத்தவர்கள் நம்பிக்கை கொண்டவர்களைப் பற்றிக் கூறினர், அது ஏதேனும் நல்லதாக இருந்திருந்தால், எங்களுக்கு முன்னர் அவர்கள் அதனை ஏற்றுக் கொண்டிருக்க மாட்டார்கள். அவர்கள் அதன் பால் வழிநடத்தப்படாததால், அவர்கள் கூறினர், இது பழமையானதொரு புனைந்துரையேயாகும்!

46:12

وَمِن قَبلِهِ كِتٰبُ موسىٰ إِمامًا وَرَحمَةً وَهٰذا كِتٰبٌ مُصَدِّقٌ لِسانًا عَرَبِيًّا لِيُنذِرَ الَّذينَ ظَلَموا وَبُشرىٰ لِلمُحسِنينَ

இதற்கு முன்னர், மோஸஸின் புத்தகம் வழிகாட்டலையும் கருணையையும் வழங்கியது. இதுவும் மெய்ப்பிக்கின்ற ஒரு வேதமாகும், அரபி மொழியில், வரம்புமீறியவர்களை எச்சரிப்பதற்காக, மேலும் நன்னெறியாளர்களுக்கு நற்செய்தி தருவதற்காக.

46:13

إِنَّ الَّذينَ قالوا رَبُّنَا اللَّهُ ثُمَّ استَقٰموا فَلا خَوفٌ عَلَيهِم وَلا هُم يَحزَنونَ

நிச்சயமாக, கடவுள்தான் எங்கள் இரட்சகர், என்று கூறி, நன்னெறியானதொரு வாழ்வு நடத்துபவர்களுக்கு அச்சம் எதுவும் இருக்காது, அன்றி அவர்கள் துக்கப்படவும் மாட்டார்கள்.

46:14

أُولٰئِكَ أَصحٰبُ الجَنَّةِ خٰلِدينَ فيها جَزاءً بِما كانوا يَعمَلونَ

அவர்கள் சுவனத்திற்குத் தகுதிபெற்றுவிட்டனர், அங்கே அவர்கள் என்றென்றும் தங்கியிருப்பார்கள்; அவர்களுடைய காரியங்களுக்கொரு வெகுமதி.

46:15

وَوَصَّينَا الإِنسٰنَ بِوٰلِدَيهِ إِحسٰنًا حَمَلَتهُ أُمُّهُ كُرهًا وَوَضَعَتهُ كُرهًا وَحَملُهُ وَفِصٰلُهُ ثَلٰثونَ شَهرًا حَتّىٰ إِذا بَلَغَ أَشُدَّهُ وَبَلَغَ أَربَعينَ سَنَةً قالَ رَبِّ أَوزِعنى أَن أَشكُرَ نِعمَتَكَ الَّتى أَنعَمتَ عَلَىَّ وَعَلىٰ وٰلِدَىَّ وَأَن أَعمَلَ صٰلِحًا تَرضىٰهُ وَأَصلِح لى فى ذُرِّيَّتى إِنّى تُبتُ إِلَيكَ وَإِنّى مِنَ المُسلِمينَ

அவனுடைய பெற்றோரைக் கண்ணியப்படுத்துமாறு நாம் மானிடனை ஏவினோம். அவனுடைய தாய் கஷ்டத்துடன் அவனைச் சுமந்தாள், கஷ்டத்துடன் அவனைப் பிரசவித்தாள், மேலும் முப்பது மாதங்கள் அவன் மீது தனிப்பட்ட கவனம் எடுத்துக் கொண்டாள். அவன் பக்குவமுதிர்ச்சி அடைந்து, நாற்பது வயதை அடைந்தவுடன்,* அவன் கூற வேண்டும், என் இரட்சகரே, என் மீதும் என் பெற்றோர் மீதும் நீர் அருளிய ஆசிகளுக்கு நன்றி பாராட்டுமாறும், மேலும் உமக்கு விருப்பமான நன்னெறிமிக்க காரியங்களைச் செய்யுமாறும் என்னை இயக்குவீராக. அது போலவே என்னுடைய குழந்தைகளையும் நன்னெறியுடன் இருக்கச் செய்வீராக. நான் உம்பால் மீண்டுவிட்டேன்; நான் சரணடைந்த ஒருவனாக இருக்கின்றேன்.

46:16

أُولٰئِكَ الَّذينَ نَتَقَبَّلُ عَنهُم أَحسَنَ ما عَمِلوا وَنَتَجاوَزُ عَن سَيِّـٔاتِهِم فى أَصحٰبِ الجَنَّةِ وَعدَ الصِّدقِ الَّذى كانوا يوعَدونَ

இவர்களிடமிருந்துதான் நன்னெறியான காரியங்களை நாம் ஏற்றுக்கொள்வோம், மேலும் அவர்களுடைய பாவங்களைப் பிழை பொறுத்துக்கொள்வோம். அவர்கள் சுவனத்திற்குத் தகுதிபெற்றுவிட்டனர். இதுவே அவர்களுக்கு வாக்களிக்கப்பட்டுள்ள சத்தியம் நிறைந்த வாக்குறுதியாகும்.

46:17

وَالَّذى قالَ لِوٰلِدَيهِ أُفٍّ لَكُما أَتَعِدانِنى أَن أُخرَجَ وَقَد خَلَتِ القُرونُ مِن قَبلى وَهُما يَستَغيثانِ اللَّهَ وَيلَكَ ءامِن إِنَّ وَعدَ اللَّهِ حَقٌّ فَيَقولُ ما هٰذا إِلّا أَسٰطيرُ الأَوَّلينَ

பின்னர் தன் பெற்றோரிடம் இவ்வாறு கூறுகின்ற ஒருவனும் இருக்கின்றான், உங்களுக்குக் கேடுதான்; (மரணத்திற்குப் பின்) நான் மீண்டும் உயிர் பெறுவேன் என்று நீங்கள் என்னிடம் கூறுகின்றீர்களா? நமக்கு முன்னர் மரணித்தவர்கள் ஒருபோதும் திரும்பி வராதிருப்பது ஏன்? அவனுடைய பெற்றோர்கள் கடவுளின் உதவிக்காகக் கதறுவார்கள், மேலும் கூறுவார்கள், உனக்குத்தான் கேடு; தயவு செய்து நம்பிக்கை கொள்! கடவுளின் வாக்குறுதி சத்தியமானதாகும். அவன் கூறுவான், கடந்த காலத்தின் கட்டுக்கதைகள்!

46:18

أُولٰئِكَ الَّذينَ حَقَّ عَلَيهِمُ القَولُ فى أُمَمٍ قَد خَلَت مِن قَبلِهِم مِنَ الجِنِّ وَالإِنسِ إِنَّهُم كانوا خٰسِرينَ

ஜின்கள் மற்றும் மனிதர்களின் ஒவ்வொரு தலை முறைகளிலும் நம்பமறுப்பவர்களென முத்திரையிடப்பட்டவர்கள் இத்தகையவர்கள்தான். அவர்கள் நஷ்டவாளிகளாக இருக்கின்றனர்.

46:19

وَلِكُلٍّ دَرَجٰتٌ مِمّا عَمِلوا وَلِيُوَفِّيَهُم أَعمٰلَهُم وَهُم لا يُظلَمونَ

அவர்கள் அனைவரும் அவர்களுடைய காரியங்களுக்குத் தக்கவாறு, அவர்களுக்குத் தகுந்த அந்தஸ்துகளைப் பெறுவார்கள். சிறிதளவும் அநீதமின்றி, அவர்களுடைய காரியங்களுக்குரிய கூலியை அவர்களுக்கு அவர் கொடுப்பார்.

46:20

وَيَومَ يُعرَضُ الَّذينَ كَفَروا عَلَى النّارِ أَذهَبتُم طَيِّبٰتِكُم فى حَياتِكُمُ الدُّنيا وَاستَمتَعتُم بِها فَاليَومَ تُجزَونَ عَذابَ الهونِ بِما كُنتُم تَستَكبِرونَ فِى الأَرضِ بِغَيرِ الحَقِّ وَبِما كُنتُم تَفسُقونَ

நம்பமறுப்பவர்களை நரக நெருப்புக்கு அறிமுகப்படுத்துகின்ற அந்நாள் வரும்: உங்களுடைய உலக வாழ்வின் போது, உங்களுக்குக் கொடுக்கப்பட்ட நல்ல வாய்ப்புக்களை நீங்கள் வீணடித்துவிட்டீர்கள், மேலும் அவற்றில் நீங்கள் களிப்படைந்தீர்கள். அதன் விளைவாக, பூமியில் எந்த அடிப்படையுமின்றி நீங்கள் ஆணவம் புரிந்தமைக்கும், உங்களுடைய கெட்ட காரியங்களுக்கும் ஒரு கூலியாக இன்றைய தினம் இழிவு நிறைந்ததொரு தண்டனைக்கு நீங்கள் உள்ளாகின்றீர்கள்.

46:21

وَاذكُر أَخا عادٍ إِذ أَنذَرَ قَومَهُ بِالأَحقافِ وَقَد خَلَتِ النُّذُرُ مِن بَينِ يَدَيهِ وَمِن خَلفِهِ أَلّا تَعبُدوا إِلَّا اللَّهَ إِنّى أَخافُ عَلَيكُم عَذابَ يَومٍ عَظيمٍ

ஆதுகளின் சகோதரர் மணற்குன்றுகளில் தன் சமூகத்தாரை எச்சரித்ததை நினைவு கூர்வீராக - அவருக்கு முன்னும் அவருக்குப் பின்னும் எண்ணற்ற எச்சரிக்கைகளும் அவர்களிடம் சேர்ப்பிக்கப்பட்டன: கடவுளைத் தவிர நீங்கள் வழிபட வேண்டாம். மகத்தானதொரு நாளின் தண்டனையை உங்களுக்கு நான் அஞ்சுகின்றேன்.

46:22

قالوا أَجِئتَنا لِتَأفِكَنا عَن ءالِهَتِنا فَأتِنا بِما تَعِدُنا إِن كُنتَ مِنَ الصّٰدِقينَ

அவர்கள் கூறினர், எங்களுடைய தெய்வங்களை விட்டும் எங்களைத் திசை திருப்புவதற்காக நீர் வந்திருக்கின்றீரா? நீர் உண்மையாளராக இருந்தால், நீர் அச்சுறுத்துகின்றதை (அத்தண்டனையை) கொண்டு வருமாறு நாங்கள் உம்மிடம் சவால் விடுகின்றோம்.

46:23

قالَ إِنَّمَا العِلمُ عِندَ اللَّهِ وَأُبَلِّغُكُم ما أُرسِلتُ بِهِ وَلٰكِنّى أَرىٰكُم قَومًا تَجهَلونَ

அவர் கூறினார், இதனைப் பற்றிய அறிவு கடவுள் வசம் உள்ளது; எதனைச் சேர்ப்பிக்க நான் அனுப்பப்பட்டேனோ அதனை மட்டுமே நான் உங்களிடம் சேர்ப்பிக்கின்றேன். இருந்தபோதிலும், அறியாத மக்களாகவே உங்களை நான் காண்கின்றேன்.

46:24

فَلَمّا رَأَوهُ عارِضًا مُستَقبِلَ أَودِيَتِهِم قالوا هٰذا عارِضٌ مُمطِرُنا بَل هُوَ مَا استَعجَلتُم بِهِ ريحٌ فيها عَذابٌ أَليمٌ

புயல் அவர்களை நோக்கி வருவதை அவர்கள் கண்ட போது, அவர்கள் கூறினர், நமக்கு மிகவும் தேவைப்படுகின்ற மழையை இந்தப் புயல் கொண்டு வரும். மாறாக, கொண்டு வருமாறு (ஹூதிடம்) நீங்கள் சவால் விடுத்தது இதுதான்; வலி நிறைந்த தண்டனையைத் தன்னில் கொண்டுள்ள உக்கிரமான காற்று.

46:25

تُدَمِّرُ كُلَّ شَىءٍ بِأَمرِ رَبِّها فَأَصبَحوا لا يُرىٰ إِلّا مَسٰكِنُهُم كَذٰلِكَ نَجزِى القَومَ المُجرِمينَ

தன்னுடைய இரட்சகரின் கட்டளைப்படி ஒவ்வொன்றையும் அது நாசம் செய்தது. அதிகாலையில், அவர்களுடைய வீடுகளைத் தவிர எதுவும் நின்று கொண்டிருக்கவில்லை. குற்றவாளிகளான மக்களுக்கு இவ்விதமாகவே நாம் கூலி கொடுக்கின்றோம்.

46:26

وَلَقَد مَكَّنّٰهُم فيما إِن مَكَّنّٰكُم فيهِ وَجَعَلنا لَهُم سَمعًا وَأَبصٰرًا وَأَفـِٔدَةً فَما أَغنىٰ عَنهُم سَمعُهُم وَلا أَبصٰرُهُم وَلا أَفـِٔدَتُهُم مِن شَىءٍ إِذ كانوا يَجحَدونَ بِـٔايٰتِ اللَّهِ وَحاقَ بِهِم ما كانوا بِهِ يَستَهزِءونَ

உங்களை நாம் நிறுவிய அதே விதமாகவே அவர்களையும் நாம் நிறுவியிருந்தோம், மேலும் அவர்களுக்குச் செவிப்புலனையும், கண்களையும், மனங்களையும் வழங்கினோம். ஆனால் அவர்களுடைய செவிப்புலனும், கண்களும் மனங்களும் அவர்களுக்கு எவ்வகையிலும் உதவவில்லை. இது ஏனெனில், கடவுளின், வெளிப்பாடுகளை அலட்சியம் செய்வதென அவர்கள் தீர்மானித்தனர். இவ்விதமாக, அவர்கள் பரிகசித்த முன்னறிவிப்புகளும் எச்சரிக்கைகளும் அவர்களுடைய அழிவுக்குக் காரணமாயின.

46:27

وَلَقَد أَهلَكنا ما حَولَكُم مِنَ القُرىٰ وَصَرَّفنَا الـٔايٰتِ لَعَلَّهُم يَرجِعونَ

அவர்கள் வருந்தக்கூடும் என்பதற்காக, சான்றுகளை நாம் விவரித்த பின்னரே, உங்களைச் சூழ்ந்துள்ள பல சமூகங்களை நாம் அழித்தொழித்தோம்.

46:28

فَلَولا نَصَرَهُمُ الَّذينَ اتَّخَذوا مِن دونِ اللَّهِ قُربانًا ءالِهَةً بَل ضَلّوا عَنهُم وَذٰلِكَ إِفكُهُم وَما كانوا يَفتَرونَ

கடவுளுக்கு நெருக்கமாக அவர்களைக் கொண்டு செல்ல அவர்கள் அமைத்துக் கொண்ட போலித் தெய்வங்கள் பின்னர் ஏன் அவர்களுக்கு உதவி செய்யத் தவறிவிட்டன? மாறாக, அவர்களை அவை கைவிட்டுவிட்டன. அவர்கள் இணை வழிபாடு செய்த போலித் தெய்வங்கள் இத்தகையதாகவே இருந்தன; அவர்கள் புனைந்து கொண்ட புதுமைகள் இத்தகையதாகவே இருந்தன.

46:29

وَإِذ صَرَفنا إِلَيكَ نَفَرًا مِنَ الجِنِّ يَستَمِعونَ القُرءانَ فَلَمّا حَضَروهُ قالوا أَنصِتوا فَلَمّا قُضِىَ وَلَّوا إِلىٰ قَومِهِم مُنذِرينَ

குர்ஆனை அவர்கள் செவியேற்கும் பொருட்டு, சில ஜின்களை நாம் உம்மிடம் வழிநடத்தினோம் என்பதை நினைவு கூர்வீராக. அவை அங்கு வந்து சேர்ந்தவுடன், அவை கூறின, கவனித்துக் கேளுங்கள். அது முடிவடைந்துவிட்டவுடன், எச்சரித்தவாறு, அவை தம் சமூகத்தாரிடம் விரைந்தன.*

46:30

قالوا يٰقَومَنا إِنّا سَمِعنا كِتٰبًا أُنزِلَ مِن بَعدِ موسىٰ مُصَدِّقًا لِما بَينَ يَدَيهِ يَهدى إِلَى الحَقِّ وَإِلىٰ طَريقٍ مُستَقيمٍ

அவை கூறின, நம் சமூகத்தாரே, மோஸஸுக்குப் பின்னர் வெளிப்படுத்தப்பட்ட, முந்திய வேதங்களை மெய்ப்பிக்கின்ற ஒரு புத்தகத்தை நாங்கள் செவியேற்றோம். அது சத்தியத்தின்பால் வழிநடத்துகின்றது; சரியான பாதையின்பால்.

46:31

يٰقَومَنا أَجيبوا داعِىَ اللَّهِ وَءامِنوا بِهِ يَغفِر لَكُم مِن ذُنوبِكُم وَيُجِركُم مِن عَذابٍ أَليمٍ

நம் சமூகத்தாரே, கடவுளின் அழைப்புக்கு மறு மொழியளியுங்கள், மேலும் அவர் மீது நம்பிக்கை கொள்ளுங்கள். அப்போது உங்களுடைய பாவங்களை அவர் மன்னிப்பார், மேலும் வலிநிறைந்ததொரு தண்டனையிலிருந்து உங்களைத் தவிர்த்துவிடுவார்.

46:32

وَمَن لا يُجِب داعِىَ اللَّهِ فَلَيسَ بِمُعجِزٍ فِى الأَرضِ وَلَيسَ لَهُ مِن دونِهِ أَولِياءُ أُولٰئِكَ فى ضَلٰلٍ مُبينٍ

கடவுளின் அழைப்புக்கு மறுமொழியளிக்கத் தவறிவிட்டவர்கள் தப்பித்துவிட முடியாது, மேலும் அவரை விடுத்து வேறு இரட்சகர் எவரும் இருக்க மாட்டார்; அவர்கள் மிக நெடிய வழிகேட்டில் சென்றுவிட்டனர்.

46:33

أَوَلَم يَرَوا أَنَّ اللَّهَ الَّذى خَلَقَ السَّمٰوٰتِ وَالأَرضَ وَلَم يَعىَ بِخَلقِهِنَّ بِقٰدِرٍ عَلىٰ أَن يُحـِۧىَ المَوتىٰ بَلىٰ إِنَّهُ عَلىٰ كُلِّ شَىءٍ قَديرٌ

சிறிதளவும் பிரயத்தனமின்றி வானங்களையும் பூமியையும் படைத்த கடவுள், இறந்தவர்களை உயிர்ப்பிக்க ஆற்றலுள்ளவராக இருக்கின்றார் என்பதை அவர்கள் புரிந்து கொள்ளவில்லையா? ஆம், மெய்யாகவே; அவர் சர்வசக்தி மிக்கவர்.

46:34

وَيَومَ يُعرَضُ الَّذينَ كَفَروا عَلَى النّارِ أَلَيسَ هٰذا بِالحَقِّ قالوا بَلىٰ وَرَبِّنا قالَ فَذوقُوا العَذابَ بِما كُنتُم تَكفُرونَ

நம்பமறுப்பவர்கள் நரக நெருப்புக்கு அறிமுகப்படுத்தப்படுகின்ற அந்நாளில், அவர்கள் வினவப்படுவார்கள், இது சத்தியம்தான் அல்லவா? அவர்கள் பதிலளிப்பார்கள், ஆம், மெய்தான், எங்கள் இரட்சகர் மீது ஆணையாக. அவர் கூறுவார், அப்படியென்றால் உங்களுடைய நம்பமறுத்தலுக்குரிய தண்டனையை அனுபவியுங்கள்.

46:35

فَاصبِر كَما صَبَرَ أُولُوا العَزمِ مِنَ الرُّسُلِ وَلا تَستَعجِل لَهُم كَأَنَّهُم يَومَ يَرَونَ ما يوعَدونَ لَم يَلبَثوا إِلّا ساعَةً مِن نَهارٍ بَلٰغٌ فَهَل يُهلَكُ إِلَّا القَومُ الفٰسِقونَ

எனவே, வலிமையைக் கொண்டிருந்தும் பொறுமையைத் தஞ்சமடைந்த உமக்கு முந்திய தூதர்களைப் போல் பொறுமையுடன் இருப்பீராக. தவிர்த்துவிட முடியாதவாறு அவர்களிடம் வர இருக்கின்ற தண்டனையைக் காண அவசரப்படாதீர். அவர்கள் அதனைக்காணும் அந்நாளில், நாளின் ஒரு மணி நேரமே அவர்கள் வாழ்ந்திருந்ததைப் போல் தோன்றும். இது ஒரு பிரகடனமாகும்: தொடர்ந்து அழித்தொழிக்கப்படுபவர்கள் தீயவர்கள்தான் அல்லவா?

‹ அத்தியாயம் 45அத்தியாயம் 47 ›