Kadavulmattum.orgகுர்ஆன் · அனைத்து 114 அத்தியாயங்கள்

குர்ஆன் 57:4

அத்தியாயம் 57 · அல்-ஹதீத் (இரும்பு) · 29 வசனங்களில் 4

هُوَ الَّذى خَلَقَ السَّمٰوٰتِ وَالأَرضَ فى سِتَّةِ أَيّامٍ ثُمَّ استَوىٰ عَلَى العَرشِ يَعلَمُ ما يَلِجُ فِى الأَرضِ وَما يَخرُجُ مِنها وَما يَنزِلُ مِنَ السَّماءِ وَما يَعرُجُ فيها وَهُوَ مَعَكُم أَينَ ما كُنتُم وَاللَّهُ بِما تَعمَلونَ بَصيرٌ

அவர்தான் வானங்களையும் பூமியையும் ஆறு நாட்களில்* படைத்தவர், பின்னர் அனைத்து அதிகாரத்தையும் ஏற்றுக் கொண்டவர். பூமிக்குள் நுழைகின்ற ஒவ்வொன்றையும், அதிலிருந்து வெளியில் வரும் ஒவ்வொன்றையும், விண்ணிலிருந்து இறங்கி வரும் ஒவ்வொன்றையும், அதில் ஏறுகின்ற ஒவ்வொன்றையும் அவர் அறிவார். நீங்கள் எங்கிருந்த போதிலும் அவர் உங்களுடன் இருக்கின்றார். நீங்கள் செய்கின்ற ஒவ்வொன்றையும் பார்ப்பவராகக் கடவுள் இருக்கின்றார்.

He is the One who created the heavens and the earth in six days,* then assumed all authority. He knows everything that enters into the earth, and everything that comes out of it, and everything that comes down from the sky, and everything that climbs into it. He is with you wherever you may be. God is Seer of everything you do.

அடிக்குறிப்பு

*57:4 படைப்பின் ஆறு நாட்கள் என்பது பூமிக் கிரகத்தின் தனிச்சிறப்பை அழுத்தமாகக் கூறுவதற்காக, அதன் பல்வேறு அங்கங்களின் ஒன்றுக்கொன்று தொடர்புடைய முக்கியத்துவத்தை நமக்கு அறிவிக்கவும், மேலும் பூமி மட்டுமே வசிக்கத் தக்க கிரகமாக இருக்கின்றது என்பதை நமக்குத் தெரியப்படுத்துவதற்காகவுமான ஓர் அளவுகோலாக மட்டுமே இருக்கின்றது. பார்க்க 41:9-10ன் அடிக்குறிப்பு.

செயலியில் வாசிக்கமுழு அத்தியாயம்

‹ முந்தைய 57:3அடுத்த 57:5 ›