Kadavulmattum.orgகுர்ஆன் · அனைத்து 114 அத்தியாயங்கள்

64. அல்-தகாபுன் (பரஸ்பரம் பழித்துக் கொள்ளுதல்)

التغابن · 18 வசனங்கள் · மதீனாவில் அருளப்பட்டது

செயலியில் வாசிக்க

‹ அத்தியாயம் 63அத்தியாயம் 65 ›
64:1

يُسَبِّحُ لِلَّهِ ما فِى السَّمٰوٰتِ وَما فِى الأَرضِ لَهُ المُلكُ وَلَهُ الحَمدُ وَهُوَ عَلىٰ كُلِّ شَىءٍ قَديرٌ

வானங்களில் உள்ள ஒவ்வொன்றும் மேலும் பூமியில் உள்ள ஒவ்வொன்றும் கடவுளைத் துதித்துக் கொண்டிருக்கின்றன. அனைத்து அரசுரிமையும் அவருக்கேயுரியது, மேலும் அனைத்துப் புகழும் அவருக்கேயுரியது, மேலும் அவர் சர்வசக்தியுடையவர்.

64:2

هُوَ الَّذى خَلَقَكُم فَمِنكُم كافِرٌ وَمِنكُم مُؤمِنٌ وَاللَّهُ بِما تَعمَلونَ بَصيرٌ

அவர்தான் உங்களைப் படைத்தவர், பின்னர் உங்களுக்கிடையில் நம்பமறுப்பவரும் நம்பிக்கையாளரும் இருக்கின்றார். நீங்கள் செய்கின்ற ஒவ்வொன்றையும் கடவுள் முற்றிலும் பார்ப்பவராக இருக்கின்றார்.

64:3

خَلَقَ السَّمٰوٰتِ وَالأَرضَ بِالحَقِّ وَصَوَّرَكُم فَأَحسَنَ صُوَرَكُم وَإِلَيهِ المَصيرُ

வானங்களையும் பூமியையும் குறிப்பிட்டதொரு காரணத்திற்காகவே* அவர் படைத்தார், உங்களை வடிவமைத்தார், மேலும் உங்களுடைய வடிவத்தை மிகச் சரியாக அமைத்தார், பின்னர் உங்களுடைய இறுதி விதி அவரிடமே உள்ளது.

64:4

يَعلَمُ ما فِى السَّمٰوٰتِ وَالأَرضِ وَيَعلَمُ ما تُسِرّونَ وَما تُعلِنونَ وَاللَّهُ عَليمٌ بِذاتِ الصُّدورِ

வானங்கள் மற்றும் பூமியில் உள்ள ஒவ்வொன்றையும் அவர் அறிகின்றார், மேலும் நீங்கள் மறைக்கின்ற ஒவ்வொன்றையும் அறிவிக்கின்ற ஒவ்வொன்றையும் அவர் அறிகின்றார். உள்ளார்ந்த எண்ணங்களைக் கடவுள் முற்றிலும் அறிந்தவராக இருக்கின்றார்.

64:5

أَلَم يَأتِكُم نَبَؤُا۟ الَّذينَ كَفَروا مِن قَبلُ فَذاقوا وَبالَ أَمرِهِم وَلَهُم عَذابٌ أَليمٌ

கடந்த காலத்தில் நம்பமறுத்து, பின்னர் தங்களுடைய தீர்மானங்களின் பின் விளைவுகளை அனுபவித்தவர்களை நீங்கள் கவனித்தீர்களா? வலி நிறைந்ததொரு தண்டனைக்கு அவர்கள் உள்ளானார்கள்.

64:6

ذٰلِكَ بِأَنَّهُ كانَت تَأتيهِم رُسُلُهُم بِالبَيِّنٰتِ فَقالوا أَبَشَرٌ يَهدونَنا فَكَفَروا وَتَوَلَّوا وَاستَغنَى اللَّهُ وَاللَّهُ غَنِىٌّ حَميدٌ

இது ஏனெனில், அவர்களுடைய தூதர்கள் அவர்களிடம் தெளிவான சான்றுகளுடன் சென்றனர், ஆனால் அவர்கள் கூறினர், நம்மைப் போன்ற மானிடர்களையா நாம் பின்பற்ற வேண்டும்? அவர்கள் நம்பமறுத்தனர், மேலும் திரும்பிச் சென்றுவிட்டனர். அவர்களின் தேவை கடவுளுக்கு இல்லை; கடவுள் எந்தத் தேவையுமற்றவர், புகழ்ச்சிக்குத் தகுதியானவர்.

64:7

زَعَمَ الَّذينَ كَفَروا أَن لَن يُبعَثوا قُل بَلىٰ وَرَبّى لَتُبعَثُنَّ ثُمَّ لَتُنَبَّؤُنَّ بِما عَمِلتُم وَذٰلِكَ عَلَى اللَّهِ يَسيرٌ

நம்பமறுப்பவர்கள் தாங்கள் உயிர்த்தெழுப்பப்பட மாட்டோம் என்று உறுதியுடன் கூறுகின்றனர்! ஆம், மெய்யாகவே, என் இரட்சகர் மீது ஆணையாக, நீங்கள் உயிர்த்தெழுப்பப்படுவீர்கள், மேலும் நீங்கள் செய்த ஒவ்வொன்றுக்கும் நீங்கள் பொறுப்பாக்கப்படுவீர்கள். இதனைச் செய்வது கடவுளுக்கு எளிதானதேயாகும்.

64:8

فَـٔامِنوا بِاللَّهِ وَرَسولِهِ وَالنّورِ الَّذى أَنزَلنا وَاللَّهُ بِما تَعمَلونَ خَبيرٌ

ஆகவே, நீங்கள் கடவுள் மற்றும் அவருடைய தூதர் மீதும், மேலும் இதிலே நாம் வெளிப்படுத்தியுள்ள இந்த ஒளியின் மீதும் நம்பிக்கை கொள்ள வேண்டும். நீங்கள் செய்கின்ற ஒவ்வொன்றையும் கடவுள் முற்றிலும் நன்கறிந்திருக்கின்றார்.

64:9

يَومَ يَجمَعُكُم لِيَومِ الجَمعِ ذٰلِكَ يَومُ التَّغابُنِ وَمَن يُؤمِن بِاللَّهِ وَيَعمَل صٰلِحًا يُكَفِّر عَنهُ سَيِّـٔاتِهِ وَيُدخِلهُ جَنّٰتٍ تَجرى مِن تَحتِهَا الأَنهٰرُ خٰلِدينَ فيها أَبَدًا ذٰلِكَ الفَوزُ العَظيمُ

ஒன்று திரட்டுகின்ற அந்நாளுக்காக அவர் உங்களை ஒன்று திரட்டுகின்ற அந்நாள் வரும். அதுதான் பரஸ்பரம் பழித்துக்கொள்கின்ற நாளாகும். எவரொருவர் கடவுள் மீது நம்பிக்கை கொண்டு நன்னெறியானதொரு வாழ்வு நடத்துகின்றாரோ, அவருடைய பாவங்களை அவர் நீக்கிவிடுவார், மேலும் ஆறுகள் பாயும் தோட்டங்களுக்குள் அவரை அனுமதிப்பார். அங்கே அவர்கள் என்றென்றும் தங்கியிருப்பார்கள். இதுவே மகத்தான பெருவெற்றியாகும்.

64:10

وَالَّذينَ كَفَروا وَكَذَّبوا بِـٔايٰتِنا أُولٰئِكَ أَصحٰبُ النّارِ خٰلِدينَ فيها وَبِئسَ المَصيرُ

நம்பமறுத்து நம்முடைய வெளிப்பாடுகளை ஏற்கமறுப்பவர்களைப் பொறுத்தவரை, அவர்கள்தான் நரக நெருப்பில் வசிப்பவர்கள் ஆவார்கள்; அங்கே அவர்கள் என்றென்றும் தங்கியிருப்பார்கள். என்ன ஒரு துன்பகரமான விதி!

64:11

ما أَصابَ مِن مُصيبَةٍ إِلّا بِإِذنِ اللَّهِ وَمَن يُؤمِن بِاللَّهِ يَهدِ قَلبَهُ وَاللَّهُ بِكُلِّ شَىءٍ عَليمٌ

கடவுளின் நாட்டத்திற்கு ஏற்பவே தவிர எந்த ஒன்றும் உங்களுக்கு நிகழ்வதில்லை. எவரொருவர் கடவுள் மீது நம்பிக்கை கொள்கின்றாரோ, அவருடைய இதயத்தை அவர் வழிநடத்துவார். அனைத்து விஷயங்களையும் கடவுள் முற்றிலும் அறிந்திருக்கின்றார்.

64:12

وَأَطيعُوا اللَّهَ وَأَطيعُوا الرَّسولَ فَإِن تَوَلَّيتُم فَإِنَّما عَلىٰ رَسولِنَا البَلٰغُ المُبينُ

நீங்கள் கடவுளுக்குக் கீழ்ப்படிய வேண்டும், அத்துடன் நீங்கள் தூதருக்குக் கீழ்ப்படிய வேண்டும். நீங்கள் திரும்பிச் சென்றுவிட்டால், பின்னர் நம்முடைய தூதரின் ஒரே இறைப்பணி தூதுச் செய்தியைச் சேர்ப்பிப்பதேயாகும்.

64:13

اللَّهُ لا إِلٰهَ إِلّا هُوَ وَعَلَى اللَّهِ فَليَتَوَكَّلِ المُؤمِنونَ

கடவுள்: அவருடன் வேறு தெய்வம் இல்லை. நம்பிக்கையாளர்கள் கடவுள் மீதே பொறுப்பேற்படுத்த வேண்டும்.

64:14

يٰأَيُّهَا الَّذينَ ءامَنوا إِنَّ مِن أَزوٰجِكُم وَأَولٰدِكُم عَدُوًّا لَكُم فَاحذَروهُم وَإِن تَعفوا وَتَصفَحوا وَتَغفِروا فَإِنَّ اللَّهَ غَفورٌ رَحيمٌ

நம்பிக்கை கொண்டோரே உங்களைத்தான், உங்களுடைய வாழ்க்கைத் துணைகளும் உங்களுடைய பிள்ளைகளும் உங்களுடைய விரோதிகளாக இருக்கக்கூடும்; எச்சரிக்கை. நீங்கள் பிழை பொறுத்து, மறந்து, மன்னித்துவிட்டால், பின்னர் கடவுள் மன்னிப்பவர், மிக்க கருணையாளர்.

64:15

إِنَّما أَموٰلُكُم وَأَولٰدُكُم فِتنَةٌ وَاللَّهُ عِندَهُ أَجرٌ عَظيمٌ

உங்களுடைய பணமும் பிள்ளைகளும் ஒரு சோதனையாகும், மேலும் மகத்தானதொரு பிரதிபலன் கடவுள் வசமுள்ளது.

64:16

فَاتَّقُوا اللَّهَ مَا استَطَعتُم وَاسمَعوا وَأَطيعوا وَأَنفِقوا خَيرًا لِأَنفُسِكُم وَمَن يوقَ شُحَّ نَفسِهِ فَأُولٰئِكَ هُمُ المُفلِحونَ

ஆகையால், நீங்கள் உங்களால் இயன்றவரை கடவுளிடம் பக்தியோடிருக்கவும், கவனத்துடன் செவியேற்கவும், கீழ்ப்படியவும், மேலும் உங்களுடைய சொந்த நலனுக்காக (தர்மம்) கொடுக்கவும் வேண்டும். எவரொருவர் தன் சொந்தக் கஞ்சத்தனத்திலிருந்து பாதுகாக்கப்படுகின்றாரோ, இவர்கள்தான் வெற்றி பெற்றவர்கள் ஆவார்கள்.

64:17

إِن تُقرِضُوا اللَّهَ قَرضًا حَسَنًا يُضٰعِفهُ لَكُم وَيَغفِر لَكُم وَاللَّهُ شَكورٌ حَليمٌ

நீங்கள் நன்னெறியின் கடனைக் கடவுளுக்குக் கடனளித்தால், அவர் உங்களுக்குரிய வெகுமதியைப் பன்மடங்காகப் பெருக்குவார், மேலும் உங்களை மன்னிப்பார். கடவுள் நன்றி பாராட்டுபவர், கனிவானவர்.

64:18

عٰلِمُ الغَيبِ وَالشَّهٰدَةِ العَزيزُ الحَكيمُ

அனைத்து இரகசியங்களையும் அறிவிப்புக்களையும் அறிந்தவர்; எல்லாம் வல்லவர். ஞானம் மிகுந்தவர்.

‹ அத்தியாயம் 63அத்தியாயம் 65 ›