Kadavulmattum.orgகுர்ஆன் · அனைத்து 114 அத்தியாயங்கள்

71. நோவா (நோவா)

نوح · 28 வசனங்கள் · மக்காவில் அருளப்பட்டது

செயலியில் வாசிக்க

‹ அத்தியாயம் 70அத்தியாயம் 72 ›
71:1

إِنّا أَرسَلنا نوحًا إِلىٰ قَومِهِ أَن أَنذِر قَومَكَ مِن قَبلِ أَن يَأتِيَهُم عَذابٌ أَليمٌ

நோவாவை அவருடைய சமூகத்தாரிடம் நாம் அனுப்பினோம்: வலி நிறைந்ததொரு தண்டனை அவர்களை வருத்துவதற்கு முன்னர் உம்முடைய மக்களை நீர் எச்சரிக்க வேண்டும்.

71:2

قالَ يٰقَومِ إِنّى لَكُم نَذيرٌ مُبينٌ

அவர் கூறினார், என் சமூகத்தாரே, நான் உங்களுக்குத் தெளிவானதொரு எச்சரிப்பவனாக இருக்கின்றேன்.

71:3

أَنِ اعبُدُوا اللَّهَ وَاتَّقوهُ وَأَطيعونِ

நீங்கள் கடவுளை வழிபடவும், அவரிடம் பக்தியோடிருக்கவும், மேலும் எனக்குக் கீழ்ப்படியவும் வேண்டும் என்று உங்களை எச்சரிப்பதற்காக.

71:4

يَغفِر لَكُم مِن ذُنوبِكُم وَيُؤَخِّركُم إِلىٰ أَجَلٍ مُسَمًّى إِنَّ أَجَلَ اللَّهِ إِذا جاءَ لا يُؤَخَّرُ لَو كُنتُم تَعلَمونَ

அப்போது அவர் உங்களுடைய பாவங்களை உங்களுக்கு மன்னித்துவிடுவார், மேலும் முன்னரே தீர்மானிக்கப்பட்டதொரு காலத்திற்கு உங்களுக்கு அவகாசம் அளிப்பார். மிக நிச்சயமாக, கடவுளின் நிர்ணயமானது, அதற்குரிய நேரம் வந்துவிட்டவுடன், ஒருபோதும் தாமதிக்கப்பட இயலாது, நீங்கள் மட்டும் அறிந்திருந்தால்.

71:5

قالَ رَبِّ إِنّى دَعَوتُ قَومى لَيلًا وَنَهارًا

அவர் கூறினார், என் இரட்சகரே, இரவும் பகலும் என் சமூகத்தாரை நான் அழைத்துவிட்டேன்.

71:6

فَلَم يَزِدهُم دُعاءى إِلّا فِرارًا

ஆனால் என்னுடைய அழைப்பு அவர்களுடைய வெறுப்பை அதிகரிக்க மட்டுமே செய்தது.

71:7

وَإِنّى كُلَّما دَعَوتُهُم لِتَغفِرَ لَهُم جَعَلوا أَصٰبِعَهُم فى ءاذانِهِم وَاستَغشَوا ثِيابَهُم وَأَصَرّوا وَاستَكبَرُوا استِكبارًا

உம்மால் மன்னிக்கப்படுவதற்காக அவர்களை நான் அழைத்த பொழுதெல்லாம், அவர்கள் தங்களுடைய காதுகளில் தங்களுடைய விரல்களை வைத்துக் கொண்டனர், தங்களுடைய ஆடைகளினால் தங்களை மூடிக் கொண்டனர், பிடிவாதம் செய்தனர், மேலும் ஆணவம் கொண்டவர்களானார்கள்.

71:8

ثُمَّ إِنّى دَعَوتُهُم جِهارًا

பின்னர் அவர்களை நான் பகிரங்கமாக அழைத்தேன்.

71:9

ثُمَّ إِنّى أَعلَنتُ لَهُم وَأَسرَرتُ لَهُم إِسرارًا

பின்னர் அவர்களுக்கு நான் உரக்கப் பிரகடனித்தேன். மேலும் அந்தரங்கமாகவும் நான் அவர்களிடம் பேசினேன்.

71:10

فَقُلتُ استَغفِروا رَبَّكُم إِنَّهُ كانَ غَفّارًا

நான் கூறினேன், ‘உங்கள் இரட்சகரிடம் பாவமன்னிப்பிற்காக இறைஞ்சுங்கள்; அவர் மன்னிக்கின்றவர்.

71:11

يُرسِلِ السَّماءَ عَلَيكُم مِدرارًا

‘பின்னர் அவர் உங்கள் மீது தாராளமாக மழையைப் பொழிவார்.

71:12

وَيُمدِدكُم بِأَموٰلٍ وَبَنينَ وَيَجعَل لَكُم جَنّٰتٍ وَيَجعَل لَكُم أَنهٰرًا

‘மேலும் பணத்தையும் பிள்ளைகளையும், மேலும் பழத் தோட்டங்களையும், ஊற்றுகளையும் உங்களுக்கு வழங்குவார்.

71:13

ما لَكُم لا تَرجونَ لِلَّهِ وَقارًا

நீங்கள் ஏன் கடவுளிடம் பக்தியோடிருக்க முனையக்கூடாது?

71:14

وَقَد خَلَقَكُم أَطوارًا

அவர்தான் உங்களைப் பல கட்டங்களில் படைத்தவர்.

71:15

أَلَم تَرَوا كَيفَ خَلَقَ اللَّهُ سَبعَ سَمٰوٰتٍ طِباقًا

ஏழு பிரபஞ்சங்களைக் கடவுள் அடுக்கடுக்காகப் படைத்தார் என்பதை நீங்கள் புரிந்து கொள்ளவில்லையா?

71:16

وَجَعَلَ القَمَرَ فيهِنَّ نورًا وَجَعَلَ الشَّمسَ سِراجًا

அதிலே ஒரு வெளிச்சமாக இருப்பதற்காகச் சந்திரனை அவர் வடிவமைத்தார், மேலும் ஒரு விளக்காக இருப்பதற்காகச் சூரியனை அமைத்தார்.

71:17

وَاللَّهُ أَنبَتَكُم مِنَ الأَرضِ نَباتًا

மேலும் பூமியிலிருந்து செடிகளைப் போல் கடவுள் உங்களை முளைவிடச் செய்தார்.

71:18

ثُمَّ يُعيدُكُم فيها وَيُخرِجُكُم إِخراجًا

பின்னர் அதற்குள்ளேயே உங்களை அவர் திருப்புகின்றார், மேலும் நிச்சயமாக அவர் உங்களை வெளியில் கொண்டு வருவார்.

71:19

وَاللَّهُ جَعَلَ لَكُمُ الأَرضَ بِساطًا

பூமியைக் கடவுள் உங்களுக்கு வசிக்கத்தக்கதாக ஆக்கினார்.

71:20

لِتَسلُكوا مِنها سُبُلًا فِجاجًا

அதிலே நீங்கள் சாலைகளை அமைத்துக்கொள்ளும் வண்ணம்.

71:21

قالَ نوحٌ رَبِّ إِنَّهُم عَصَونى وَاتَّبَعوا مَن لَم يَزِدهُ مالُهُ وَوَلَدُهُ إِلّا خَسارًا

நோவா கூறினார், என் இரட்சகரே, அவர்கள் எனக்குக் கீழ்ப்படிய மறுத்தனர், மேலும் பணமும் பிள்ளைகளும் கொண்டு ஆசீர்வதிக்கப்பட்ட போது, இன்னும் அதிகமாகச் சீர்கெட்டுப் போனவர்களைப் பின்பற்றினர்.

71:22

وَمَكَروا مَكرًا كُبّارًا

பயங்கரமான சூழ்ச்சிகளை அவர்கள் தீட்டினர்

71:23

وَقالوا لا تَذَرُنَّ ءالِهَتَكُم وَلا تَذَرُنَّ وَدًّا وَلا سُواعًا وَلا يَغوثَ وَيَعوقَ وَنَسرًا

அவர்கள் கூறினர், ‘உங்களுடைய தெய்வங்களைக் கைவிட்டுவிடாதீர்கள். வத், சுவாஆ, யாகூத், யாஊக், மற்றும் நஸ்ரைக் கைவிட்டுவிடாதீர்கள்.’

71:24

وَقَد أَضَلّوا كَثيرًا وَلا تَزِدِ الظّٰلِمينَ إِلّا ضَلٰلًا

அவர்கள் ஏராளமானோரை வழிதவறச் செய்தனர். எனவே, தீயவர்களை ஆழமாக நஷ்டத்தில் மூழ்கடித்துவிடுவீராக.

71:25

مِمّا خَطيـٰٔتِهِم أُغرِقوا فَأُدخِلوا نارًا فَلَم يَجِدوا لَهُم مِن دونِ اللَّهِ أَنصارًا

அவர்களுடைய பாவங்களின் காரணத்தால் அவர்கள் மூழ்கடிக்கப்பட்டனர், மேலும் நரகநெருப்பிற்கென நியமிக்கப்பட்டனர். கடவுளிடமிருந்து அவர்களைக் காப்பாற்ற உதவியாளர்கள் எவரையும் அவர்கள் காணவில்லை.

71:26

وَقالَ نوحٌ رَبِّ لا تَذَر عَلَى الأَرضِ مِنَ الكٰفِرينَ دَيّارًا

நோவா மேலும் கூறினார், என் இரட்சகரே, பூமியில் ஒரே ஒரு நம்பமறுப்பவனைக் கூட விட்டுவிடாதீர்.

71:27

إِنَّكَ إِن تَذَرهُم يُضِلّوا عِبادَكَ وَلا يَلِدوا إِلّا فاجِرًا كَفّارًا

ஏனெனில், நீர் அவர்களை விட்டு வைத்தால், அவர்கள் உம்முடைய ஊழியர்களை வழிகெடுக்க மட்டுமே செய்வார்கள், மேலும் தீயோரான நம்பமறுப்பவர்களைத் தவிர வேறு எந்த ஒன்றையும் பெற்றெடுக்க மாட்டார்கள்.

71:28

رَبِّ اغفِر لى وَلِوٰلِدَىَّ وَلِمَن دَخَلَ بَيتِىَ مُؤمِنًا وَلِلمُؤمِنينَ وَالمُؤمِنٰتِ وَلا تَزِدِ الظّٰلِمينَ إِلّا تَبارًا

என் இரட்சகரே, என்னையும் என் பெற்றோரையும், மேலும் ஒரு நம்பிக்கையாளராக என் இல்லத்தில் நுழைகின்ற எவரொருவரையும், மேலும் நம்பிக்கை கொண்ட ஆண்கள் மற்றும் பெண்கள் அனைவரையும் மன்னிப்பீராக. ஆனால் நம்பமறுப்பவர்களுக்கு அழிவைத் தவிர எந்த ஒன்றையும் தந்துவிடாதீர்.

‹ அத்தியாயம் 70அத்தியாயம் 72 ›