يٰأَيُّهَا المُزَّمِّلُ
அங்கி அணிந்தவரே, உம்மைத்தான்.
يٰأَيُّهَا المُزَّمِّلُ
அங்கி அணிந்தவரே, உம்மைத்தான்.
قُمِ الَّيلَ إِلّا قَليلًا
அரிதாகத் தவிர்த்து, இரவுப் பொழுதுகளில் தியானிப்பீராக.
نِصفَهُ أَوِ انقُص مِنهُ قَليلًا
அதன் பாதி, அல்லது ஒரு சற்றுக் குறைவாக.
أَو زِد عَلَيهِ وَرَتِّلِ القُرءانَ تَرتيلًا
அல்லது ஒரு சற்று அதிகமாக. மேலும் முதல் பக்கத்திலிருந்து கடைசிப்பக்கம் வரை இக்குர்ஆனைப் படிப்பீராக.
إِنّا سَنُلقى عَلَيكَ قَولًا ثَقيلًا
நாம் உமக்கு ஒரு கனமான தூதுச் செய்தியைத் தருவோம்.
إِنَّ ناشِئَةَ الَّيلِ هِىَ أَشَدُّ وَطـًٔا وَأَقوَمُ قيلًا
இரவினில் தியானிப்பதானது அதிக நற்பலனளிப்பது, மேலும் மிகவும் நன்னெறியானது.
إِنَّ لَكَ فِى النَّهارِ سَبحًا طَويلًا
மற்ற விஷயங்களுக்குப் பகற்பொழுதில் உமக்கு ஏராளமானதொரு நேரம் உள்ளது.
وَاذكُرِ اسمَ رَبِّكَ وَتَبَتَّل إِلَيهِ تَبتيلًا
எப்பொழுதும் அவருக்கு அருகிலும் மிக அருகிலும் வருவதற்காக, உம்முடைய இரட்சகரின் பெயரை நீர் நினைவு கூர்ந்திட வேண்டும்.
رَبُّ المَشرِقِ وَالمَغرِبِ لا إِلٰهَ إِلّا هُوَ فَاتَّخِذهُ وَكيلًا
கிழக்கு மற்றும் மேற்கின் இரட்சகர்; அவருடன் வேறு தெய்வம் இல்லை. உமக்கு ஆதரவாளராக அவரை நீர் தேர்ந்தெடுத்துக்கொள்ள வேண்டும்.
وَاصبِر عَلىٰ ما يَقولونَ وَاهجُرهُم هَجرًا جَميلًا
மேலும் அவர்களுடைய கூற்றுகளை எதிர்கொள்ளும் போது உறுதிப்பாட்டுடன் தொடர்ந்து இருப்பீராக, மேலும் அழகியதொரு முறையில் அவர்களை அலட்சியம் செய்துவிடுவீராக.
وَذَرنى وَالمُكَذِّبينَ أُولِى النَّعمَةِ وَمَهِّلهُم قَليلًا
தாராளமாக ஆசீர்வதிக்கப்பட்டிருக்கின்ற, ஏற்றுக்கொள்ள மறுப்போர் மீது நான் நடவடிக்கை எடுத்துக்கொள்கின்றேன்; அவர்களுக்குச் சற்று அவகாசம் அளிப்பீராக.
إِنَّ لَدَينا أَنكالًا وَجَحيمًا
கடுமையான தண்டனைகளும், நரகமும் நம்மிடம் உள்ளன.
وَطَعامًا ذا غُصَّةٍ وَعَذابًا أَليمًا
கடினமாகவே விழுங்கக் கூடிய உணவும், வலிநிறைந்ததொரு தண்டனையும்.
يَومَ تَرجُفُ الأَرضُ وَالجِبالُ وَكانَتِ الجِبالُ كَثيبًا مَهيلًا
பூமியும் மலைகளும் அதிரும் பொழுது அந்நாள் வரும், மேலும் மலைகளானவை எடையற்றதோர் குவியலாகிவிடும்.
إِنّا أَرسَلنا إِلَيكُم رَسولًا شٰهِدًا عَلَيكُم كَما أَرسَلنا إِلىٰ فِرعَونَ رَسولًا
ஃபேரோவுக்கு ஒரு தூதரை நாம் அனுப்பிய அதே விதமாகவே, உங்களுக்கும் ஒரு தூதரை உங்கள் மீது ஒரு சாட்சியாக நாம் அனுப்பியுள்ளோம்.
فَعَصىٰ فِرعَونُ الرَّسولَ فَأَخَذنٰهُ أَخذًا وَبيلًا
ஃபேரோ அத்தூதருக்குக் கீழ்ப்படிய மறுத்தான் மேலும், அதன் விளைவாக, நாம் அவனைக் கடுமையாகத் தண்டித்தோம்.
فَكَيفَ تَتَّقونَ إِن كَفَرتُم يَومًا يَجعَلُ الوِلدٰنَ شيبًا
நீங்கள் நம்பமறுத்தால், சிசுக்களையும் நரைத்த முடியுடையவர்களாக ஆக்கிவிடுகின்ற அளவுக்கு மிகப் பயங்கரமானதொரு நாளினை எவ்வாறு நீங்கள் தவிர்த்துக்கொள்ள இயலும்?
السَّماءُ مُنفَطِرٌ بِهِ كانَ وَعدُهُ مَفعولًا
வானம் அங்கிருந்து தகர்ந்துவிடும். அவருடைய வாக்குறுதி உண்மையானதாகும்.
إِنَّ هٰذِهِ تَذكِرَةٌ فَمَن شاءَ اتَّخَذَ إِلىٰ رَبِّهِ سَبيلًا
இது ஒரு நினைவூட்டலாகும்; எவரெல்லாம் நாடுகின்றாரோ, அவர் தன் இரட்சகரின் பால் தன்னுடைய பாதையைத் தேர்ந்தெடுத்துக்கொள்ளட்டும்.
إِنَّ رَبَّكَ يَعلَمُ أَنَّكَ تَقومُ أَدنىٰ مِن ثُلُثَىِ الَّيلِ وَنِصفَهُ وَثُلُثَهُ وَطائِفَةٌ مِنَ الَّذينَ مَعَكَ وَاللَّهُ يُقَدِّرُ الَّيلَ وَالنَّهارَ عَلِمَ أَن لَن تُحصوهُ فَتابَ عَلَيكُم فَاقرَءوا ما تَيَسَّرَ مِنَ القُرءانِ عَلِمَ أَن سَيَكونُ مِنكُم مَرضىٰ وَءاخَرونَ يَضرِبونَ فِى الأَرضِ يَبتَغونَ مِن فَضلِ اللَّهِ وَءاخَرونَ يُقٰتِلونَ فى سَبيلِ اللَّهِ فَاقرَءوا ما تَيَسَّرَ مِنهُ وَأَقيمُوا الصَّلوٰةَ وَءاتُوا الزَّكوٰةَ وَأَقرِضُوا اللَّهَ قَرضًا حَسَنًا وَما تُقَدِّموا لِأَنفُسِكُم مِن خَيرٍ تَجِدوهُ عِندَ اللَّهِ هُوَ خَيرًا وَأَعظَمَ أَجرًا وَاستَغفِرُوا اللَّهَ إِنَّ اللَّهَ غَفورٌ رَحيمٌ
இரவுப் பொழுதினில் மூன்றில் இரண்டு பாகம், அல்லது அதில் பாதி, அல்லது அதில் மூன்றில் ஒரு பாகம் நீர் தியானிக்கின்றீர், மேலும் உம்முடன் நம்பிக்கை கொண்ட சிலரும் அவ்வாறே செய்கின்றனர் என்பதை உம்முடைய இரட்சகர் அறிகின்றார். இரவையும் பகலையும் கடவுள் வடிவமைத்துள்ளார், மேலும் எல்லாக் காலங்களிலும் உங்களால் இதனைச் செய்ய முடியாது என்பதையும் அவர் அறிகின்றார். அவர் உங்களைப் பிழை பொறுத்துவிட்டார். அதற்குப் பதிலாக, குர்ஆனிலிருந்து உங்களால் இயன்ற வரை நீங்கள் படிக்க வேண்டும். உங்களில் சிலர் நோயுற்றிருக்கக் கூடும், மற்றவர்கள் கடவுளின் வாழ்வாதாரங்களைத் தேடியவாறு பிரயாணத்தில் இருக்கக் கூடும், மேலும் மற்றவர்கள் கடவுளின் நிமித்தம் பாடுபட்டுக் கொண்டிருக்கக் கூடும் என்பதை அவர் அறிகின்றார். அதிலிருந்து உங்களால் இயன்றவரை நீங்கள் படிக்க வேண்டும், மேலும் (ஸலாத்) தொடர்புத் தொழுகைகளைக் கடைப்பிடிக்கவும் (ஜகாத்) கடமையான தர்மத்தைக் கொடுக்கவும், மேலும் நன்னெறியெனும் ஒரு கடனைக் கடவுளுக்குக் கடனளிக்கவும் வேண்டும். உங்களுடைய ஆத்மாக்களுக்காக நீங்கள் முற்படுத்தி அனுப்பி வைக்கின்ற நல்லது எதுவாயினும், அதனை மிகச் சிறந்ததாகவும் தாராளமாக வெகுமதியளிக்கப்பட்டதாகவும் கடவுளிடம் நீங்கள் காண்பீர்கள். மேலும் பாவமன்னிப்பிற்காகக் கடவுளிடம் இறைஞ்சுங்கள். கடவுள் மன்னிப்பவர், மிக்க கருணையாளர்.