Kadavulmattum.orgகுர்ஆன் · அனைத்து 114 அத்தியாயங்கள்

76. அல்-இன்ஸான் (மானிடன்)

الانسان · 31 வசனங்கள் · மதீனாவில் அருளப்பட்டது

செயலியில் வாசிக்க

‹ அத்தியாயம் 75அத்தியாயம் 77 ›
76:1

هَل أَتىٰ عَلَى الإِنسٰنِ حينٌ مِنَ الدَّهرِ لَم يَكُن شَيـًٔا مَذكورًا

குறிப்பிடப்படுவதற்கு என எந்த ஒன்றுமாக மானிடன் இல்லாதிருந்த ஒரு காலம் இருந்தது என்பது ஒரு நிதர்சனம் அல்லவா?

76:2

إِنّا خَلَقنَا الإِنسٰنَ مِن نُطفَةٍ أَمشاجٍ نَبتَليهِ فَجَعَلنٰهُ سَميعًا بَصيرًا

அவனைச் சோதனை செய்யும் பொருட்டு, பெற்றோர்கள் இருவருடைய, ஒரு திரவக் கலவையிலிருந்து மானிடனை நாம் படைத்தோம். இவ்வாறாக, செவியுறக் கூடியவனாகவும் பார்க்கக்கூடியவனாகவும் அவனை நாம் ஆக்கினோம்.

76:3

إِنّا هَدَينٰهُ السَّبيلَ إِمّا شاكِرًا وَإِمّا كَفورًا

இரண்டு பாதைகளை அவனுக்கு நாம் காட்டினோம், பின்னர், அவன் நன்றியுடையவனாகவோ, அல்லது நன்றி கெட்டவனாகவோ இருக்கின்றான்.

76:4

إِنّا أَعتَدنا لِلكٰفِرينَ سَلٰسِلَا۟ وَأَغلٰلًا وَسَعيرًا

நம்பமறுப்பவர்களுக்காகச் சங்கிலிகளையும், தளைகளையும், மேலும் கொழுந்து விட்டெரிகின்ற ஒரு நரகத்தையும் நாம் தயாரித்தோம்.

76:5

إِنَّ الأَبرارَ يَشرَبونَ مِن كَأسٍ كانَ مِزاجُها كافورًا

நற்குணங்களையுடையவர்களைப் பொறுத்த வரை, அமுதத்தைக் கொண்டு வாசனையூட்டப்பட்ட கோப்பைகளிலிருந்து அவர்கள் அருந்துவார்கள்.

76:6

عَينًا يَشرَبُ بِها عِبادُ اللَّهِ يُفَجِّرونَها تَفجيرًا

கடவுளின் ஊழியர்களுக்கென ஒதுக்கி வைக்கப்பட்டிருக்கின்ற ஓர் ஊற்று; அவர்கள் நாடியவாறு அது பொங்கி எழும்.

76:7

يوفونَ بِالنَّذرِ وَيَخافونَ يَومًا كانَ شَرُّهُ مُستَطيرًا

அவர்கள் தங்கள் நேர்ச்சைகளை நிறைவேற்றுகின்றனர், மேலும் அதிகபட்ச சிரமமான அந்த ஒரு நாளை அஞ்சுகின்றனர்.

76:8

وَيُطعِمونَ الطَّعامَ عَلىٰ حُبِّهِ مِسكينًا وَيَتيمًا وَأَسيرًا

அவர்கள் தங்களுக்குப் பிரியமான உணவை ஏழைகளுக்கும், அனாதைகளுக்கும், மேலும் சிறைப்பிடிக்கப்பட்டோருக்கும் தானமளிக்கின்றனர்.

76:9

إِنَّما نُطعِمُكُم لِوَجهِ اللَّهِ لا نُريدُ مِنكُم جَزاءً وَلا شُكورًا

கடவுளுக்காகவே நாங்கள் உங்களுக்கு உணவளிக்கின்றோம்; உங்களிடமிருந்து எந்தக் கைம்மாறையோ அல்லது நன்றியையோ நாங்கள் எதிர்பார்க்கவில்லை.

76:10

إِنّا نَخافُ مِن رَبِّنا يَومًا عَبوسًا قَمطَريرًا

எங்கள் இரட்சகரிடமிருந்து துன்பமும் சங்கடமும் நிறைந்த அந்த நாளை நாங்கள் பயப்படுகின்றோம்.

76:11

فَوَقىٰهُمُ اللَّهُ شَرَّ ذٰلِكَ اليَومِ وَلَقّىٰهُم نَضرَةً وَسُرورًا

அதன் விளைவாக, அந்த நாளின் தீங்குகளிலிருந்து கடவுள் அவர்களைப் பாதுகாக்கின்றார், மேலும் இன்பத்தையும் திருப்தியையும் கொண்டு அவர்களுக்கு வெகுமதியளிக்கின்றார்.

76:12

وَجَزىٰهُم بِما صَبَروا جَنَّةً وَحَريرًا

அவர்களுடைய உறுதிப்பாட்டுக்காக சுவனத்தையும் பட்டையும் கொண்டு அவர்களுக்கு வெகுமதியளிக்கின்றார்.

76:13

مُتَّكِـٔينَ فيها عَلَى الأَرائِكِ لا يَرَونَ فيها شَمسًا وَلا زَمهَريرًا

அங்கே அவர்கள் ஆடம்பரமான ஆசனங்களின் மீது பொழுது போக்குவார்கள். அவர்கள் சூரியனின் வெப்பத்தையோ, அன்றி எந்தக் குளிரையோ அனுபவிக்க மாட்டார்கள்.

76:14

وَدانِيَةً عَلَيهِم ظِلٰلُها وَذُلِّلَت قُطوفُها تَذليلًا

நிழல் அங்கே அவர்களை மூடிக்கொள்ளும், மேலும் பழங்கள் கைக்கெட்டும் தூரத்திற்குக் கொண்டு வரப்படும்.

76:15

وَيُطافُ عَلَيهِم بِـٔانِيَةٍ مِن فِضَّةٍ وَأَكوابٍ كانَت قَواريرا۠

ஒளி ஊடுருவுகின்ற வெள்ளிப்பாத்திரங்கள் மற்றும் கோப்பைகளில் அவர்கள் பானங்கள் பரிமாறப்படுகின்றனர்.

76:16

قَواريرَا۟ مِن فِضَّةٍ قَدَّروها تَقديرًا

வெள்ளியில் செய்யப்பட்ட போதிலும், ஒளி ஊடுருவுகின்ற கோப்பைகள்; இது அனைத்திற்கும் மிகச் சரியாகத் தகுதி பெற்றுவிட்டனர்.

76:17

وَيُسقَونَ فيها كَأسًا كانَ مِزاجُها زَنجَبيلًا

மதுரமான சுவையூட்டப்பட்ட பானங்களை அவர்கள் மகிழ்ந்து அனுபவிக்கின்றனர்.

76:18

عَينًا فيها تُسَمّىٰ سَلسَبيلًا

அங்கே ஸல்ஸபீல் என்று அறியப்பட்ட ஓர் ஊற்றில் இருந்து.

76:19

وَيَطوفُ عَلَيهِم وِلدٰنٌ مُخَلَّدونَ إِذا رَأَيتَهُم حَسِبتَهُم لُؤلُؤًا مَنثورًا

அமரத்துவம் வாய்ந்த ஊழியர்கள் அவர்களுக்குப் பரிமாறுவார்கள். அவர்களை நீங்கள் காணும் போது, சிதறிய முத்துகளைப் போல் அவர்கள் தோன்றுவார்கள்.

76:20

وَإِذا رَأَيتَ ثَمَّ رَأَيتَ نَعيمًا وَمُلكًا كَبيرًا

நீங்கள் எங்கு நோக்கினாலும், பேரானந்தத்தையும், அற்புதமானதொரு சாம்ராஜ்யத்தையுமே நீங்கள் காண்பீர்கள்.

76:21

عٰلِيَهُم ثِيابُ سُندُسٍ خُضرٌ وَإِستَبرَقٌ وَحُلّوا أَساوِرَ مِن فِضَّةٍ وَسَقىٰهُم رَبُّهُم شَرابًا طَهورًا

அவர்கள் மீது பச்சை வெல்வெட்டு மற்றும் பளபளக்கும் பட்டில் ஆன ஆடைகளும் மேலும் வெள்ளி ஆபரணங்களும் இருக்கும். அவர்களுடைய இரட்சகர் தூய்மையான பானங்களை அவர்களுக்கு வழங்குவார்.

76:22

إِنَّ هٰذا كانَ لَكُم جَزاءً وَكانَ سَعيُكُم مَشكورًا

இதுவே உங்களுக்காகக் காத்துக் கொண்டிருக்கின்ற வெகுமதியாகும், ஏனெனில் உங்களுடைய பிரயத்தனங்கள் பாராட்டப்பட்டவையாக உள்ளன.

76:23

إِنّا نَحنُ نَزَّلنا عَلَيكَ القُرءانَ تَنزيلًا

இந்தக் குர்ஆனை நாம் உமக்கு வெளிப்படுத்தியுள்ளோம்; நம்மிடமிருந்து தனிச்சிறப்பானதொரு வெளிப்பாடு.

76:24

فَاصبِر لِحُكمِ رَبِّكَ وَلا تُطِع مِنهُم ءاثِمًا أَو كَفورًا

உம்முடைய இரட்சகரின் கட்டளைகளை உறுதிப்பாட்டுடன் நீர் செயல்படுத்த வேண்டும், மேலும் அவர்களில் உள்ள பாவம் நிறைந்த நம்பமறுப்பவன் எவனுக்கும் நீர் கீழ்ப்படியாதீர்.

76:25

وَاذكُرِ اسمَ رَبِّكَ بُكرَةً وَأَصيلًا

மேலும் பகலும் இரவும் உம்முடைய இரட்சகரின் பெயரை நினைவு கூர்வீராக.

76:26

وَمِنَ الَّيلِ فَاسجُد لَهُ وَسَبِّحهُ لَيلًا طَويلًا

இரவுப் பொழுதுகளில், அவர் முன் சிரம் பணிந்து வீழ்வீராக, மேலும் பல நீண்டதோர் இரவு அவரைத் துதிப்பீராக.

76:27

إِنَّ هٰؤُلاءِ يُحِبّونَ العاجِلَةَ وَيَذَرونَ وَراءَهُم يَومًا ثَقيلًا

இந்த மக்கள் விரைந்தோடும் இந்த வாழ்வில் மூழ்கிவிட்டனர், அதே சமயம் - அவர்களுக்குச் சற்றே முன்னிருக்கின்ற - கனமானதொரு நாளை அலட்சியம் செய்கின்றனர்.

76:28

نَحنُ خَلَقنٰهُم وَشَدَدنا أَسرَهُم وَإِذا شِئنا بَدَّلنا أَمثٰلَهُم تَبديلًا

நாம் அவர்களைப் படைத்தோம், மேலும் அவர்களை ஸ்தாபித்தோம், மேலும், எப்பொழுது நாம் நாடினாலும், அவர்களுடைய இடத்தில் மற்றவர்களை மாற்றி அமைத்துவிட நம்மால் இயலும்.

76:29

إِنَّ هٰذِهِ تَذكِرَةٌ فَمَن شاءَ اتَّخَذَ إِلىٰ رَبِّهِ سَبيلًا

இது ஒரு நினைவூட்டலாகும்: நாடுகின்ற எவரும் தன்னுடைய இரட்சகரை நோக்கிய பாதையைத் தேர்ந்தெடுத்துக்கொள்ள வேண்டும்.

76:30

وَما تَشاءونَ إِلّا أَن يَشاءَ اللَّهُ إِنَّ اللَّهَ كانَ عَليمًا حَكيمًا

நீங்கள் நாடுவது எதுவானாலும் கடவுளின் நாட்டத்திற்கு ஏற்பவேயாகும். கடவுள் சர்வமும் அறிந்தவர், ஞானமுள்ளவர்.

76:31

يُدخِلُ مَن يَشاءُ فى رَحمَتِهِ وَالظّٰلِمينَ أَعَدَّ لَهُم عَذابًا أَليمًا

தான் நாடுகின்ற எவரையும் தன்னுடைய கருணைக்குள் நுழைய அவர் அனுமதிக்கின்றார். வரம்புமீறுபவர்களைப் பொறுத்தவரை, வலி நிறைந்ததொரு தண்டனையை அவர்களுக்காக அவர் தயாரித்துள்ளார்.

‹ அத்தியாயம் 75அத்தியாயம் 77 ›