Kadavulmattum.orgகுர்ஆன் · அனைத்து 114 அத்தியாயங்கள்

85. அல்-புரூஜ் (நட்சத்திர மண்டலங்கள்)

البروج · 22 வசனங்கள் · மக்காவில் அருளப்பட்டது

செயலியில் வாசிக்க

‹ அத்தியாயம் 84அத்தியாயம் 86 ›
85:1

وَالسَّماءِ ذاتِ البُروجِ

ஆகாயமும் அதன் நட்சத்திர மண்டலங்களும்.

85:2

وَاليَومِ المَوعودِ

வாக்களிக்கப்பட்டுள்ள அந்நாள்.

85:3

وَشاهِدٍ وَمَشهودٍ

சாட்சியும் சாட்சி சொல்லப்படுவதும்.

85:4

قُتِلَ أَصحٰبُ الأُخدودِ

செங்குத்துப் பள்ளத்தாக்கின் மக்களுக்குக் கேடுதான்.

85:5

النّارِ ذاتِ الوَقودِ

கொழுந்து விட்டெரியும் ஒரு நெருப்பை அவர்கள் மூட்டினர்.

85:6

إِذ هُم عَلَيها قُعودٌ

பின்னர் அதனைச் சுற்றிலும் அவர்கள் அமர்ந்து கொண்டனர்.

85:7

وَهُم عَلىٰ ما يَفعَلونَ بِالمُؤمِنينَ شُهودٌ

நம்பிக்கையாளர்கள் கருகுவதை ரசிப்பதற்காக.

85:8

وَما نَقَموا مِنهُم إِلّا أَن يُؤمِنوا بِاللَّهِ العَزيزِ الحَميدِ

எல்லாம் வல்லவரும், புகழுக்குத் தகுதியானவருமான கடவுள் மீது நம்பிக்கை கொண்டனர் என்பதைத் தவிர, வேறு காரணம் எதற்காகவும் அவர்களை அவர்கள் வெறுக்கவில்லை.

85:9

الَّذى لَهُ مُلكُ السَّمٰوٰتِ وَالأَرضِ وَاللَّهُ عَلىٰ كُلِّ شَىءٍ شَهيدٌ

வானங்கள் மற்றும் பூமியின் அரசுரிமை அவருக்கே உரியது. மேலும் கடவுள் எல்லா விஷயங்களுக்கும் சாட்சியாகின்றார்.

85:10

إِنَّ الَّذينَ فَتَنُوا المُؤمِنينَ وَالمُؤمِنٰتِ ثُمَّ لَم يَتوبوا فَلَهُم عَذابُ جَهَنَّمَ وَلَهُم عَذابُ الحَريقِ

நிச்சயமாக, நம்பிக்கை கொண்ட ஆண்களையும் பெண்களையும் வன்கொடுமை செய்து, பின்னர் வருந்தத் தவறிவிட்டவர்கள், எரிகிடங்கின் தண்டனைக்கு உள்ளாகிவிட்டனர்; கருகுதலின் தண்டனைக்கு அவர்கள் உள்ளாகிவிட்டனர்.

85:11

إِنَّ الَّذينَ ءامَنوا وَعَمِلُوا الصّٰلِحٰتِ لَهُم جَنّٰتٌ تَجرى مِن تَحتِهَا الأَنهٰرُ ذٰلِكَ الفَوزُ الكَبيرُ

நிச்சயமாக, நம்பிக்கை கொண்டு நன்னெறியானதொரு வாழ்வு நடத்தியவர்கள், ஆறுகள் பாயும் தோட்டங்களுக்குத் தகுதியடைந்துவிட்டனர். இதுவே மகத்தான பெருவெற்றியாகும்.

85:12

إِنَّ بَطشَ رَبِّكَ لَشَديدٌ

உண்மையில், உம்முடைய இரட்சகரின் அடி கடுமையானதாகும்.

85:13

إِنَّهُ هُوَ يُبدِئُ وَيُعيدُ

அவர்தான் துவக்குகின்றவர், மேலும் அதனை மீண்டும் செய்கின்றவர்.

85:14

وَهُوَ الغَفورُ الوَدودُ

மேலும் அவர்தான் மன்னிக்கின்றவர், மிகுந்த கனிவுடையவர்.

85:15

ذُو العَرشِ المَجيدُ

மகிமைமிக்க அந்த அரியாசனத்தின் உரிமையாளர்.

85:16

فَعّالٌ لِما يُريدُ

அவர் நாடுகின்ற எதனையும் செய்கின்றவர்.

85:17

هَل أَتىٰكَ حَديثُ الجُنودِ

சேனைகளின் வரலாற்றை நீர் கவனித்தீரா?

85:18

فِرعَونَ وَثَمودَ

ஃபேரோ மற்றும் தமூதுடையவை?

85:19

بَلِ الَّذينَ كَفَروا فى تَكذيبٍ

நம்பமறுப்பவர்கள் ஏற்கமறுத்தலால் பீடிக்கப்பட்டுள்ளனர்.

85:20

وَاللَّهُ مِن وَرائِهِم مُحيطٌ

கடவுள் அவர்களைப் பற்றி முற்றிலும் அறிந்திருக்கின்றார்.

85:21

بَل هُوَ قُرءانٌ مَجيدٌ

உண்மையில், இது மகத்தானதொரு குர்ஆனாகும்.

85:22

فى لَوحٍ مَحفوظٍ

பாதுகாக்கப்பட்டதொரு மூலப் பலகையில்.

‹ அத்தியாயம் 84அத்தியாயம் 86 ›