وَالشَّمسِ وَضُحىٰها
சூரியன் மற்றும் அதன் பிரகாசத்தின் மீது.
وَالشَّمسِ وَضُحىٰها
சூரியன் மற்றும் அதன் பிரகாசத்தின் மீது.
وَالقَمَرِ إِذا تَلىٰها
அதனைத் தொடர்கின்ற சந்திரன்.
وَالنَّهارِ إِذا جَلّىٰها
வெளிப்படுத்துகின்ற பகல்.
وَالَّيلِ إِذا يَغشىٰها
மூடிக் கொள்கின்ற இரவு.
وَالسَّماءِ وَما بَنىٰها
ஆகாயமும் அதனைக் கட்டமைத்த அவரும்.
وَالأَرضِ وَما طَحىٰها
பூமியும் அதனைப் போஷிக்கின்ற அவரும்.
وَنَفسٍ وَما سَوّىٰها
ஆன்மாவும் அதனைப் படைத்த அவரும்.
فَأَلهَمَها فُجورَها وَتَقوىٰها
பின்னர் அதற்குக் கெட்டது எது, மேலும் நல்லது எது என்றும் காட்டியவர்.
قَد أَفلَحَ مَن زَكّىٰها
அதனை மீட்டுக் கொண்டவன் வெற்றியடைந்தவனாக இருக்கின்றான்.
وَقَد خابَ مَن دَسّىٰها
அதனை அலட்சியப்படுத்தியவன் தோல்வியடைந்தவனாக இருக்கின்றான்.
كَذَّبَت ثَمودُ بِطَغوىٰها
தமூதுகளின் நம்பமறுத்தல் அவர்கள் வரம்புமீறக் காரணமானது.
إِذِ انبَعَثَ أَشقىٰها
தங்களில் மிகவும் மோசமானவனை அவர்கள் பின்பற்றினர்.
فَقالَ لَهُم رَسولُ اللَّهِ ناقَةَ اللَّهِ وَسُقيٰها
கடவுளின் தூதர் அவர்களிடம் கூறினார், இது கடவுளின் ஒட்டகம் ஆகும்; அதனை நீரருந்த விட்டுவிடுங்கள்.
فَكَذَّبوهُ فَعَقَروها فَدَمدَمَ عَلَيهِم رَبُّهُم بِذَنبِهِم فَسَوّىٰها
அவர்கள் அவரை நம்பமறுத்தனர் மேலும் அதனை வெட்டிவிட்டனர். அவர்களுடைய இரட்சகர் பின்னர் அவர்களுடைய பாவத்திற்காக அவர்களைப் பழி வாங்கி அவர்களை அழித்தொழித்தார்.
وَلا يَخافُ عُقبٰها
இருப்பினும், அவர்களுக்குப் பின்னர் வந்தவர்களும் கவனம் செலுத்தாமலேயே இருக்கின்றனர்.