Kadavulmattum.orgகுர்ஆன் · அனைத்து 114 அத்தியாயங்கள்

10. யூனுஸ் (ஜோனா)

يونس · 109 வசனங்கள் · மக்காவில் அருளப்பட்டது

செயலியில் வாசிக்க

‹ அத்தியாயம் 9அத்தியாயம் 11 ›
10:1

الر تِلكَ ءايٰتُ الكِتٰبِ الحَكيمِ

அ. ல. ர.* (எழுத்துகளாகிய) இவை ஞானம் கொண்ட இந்தப் புத்தகத்தின் சான்றுகளாகும்.

10:2

أَكانَ لِلنّاسِ عَجَبًا أَن أَوحَينا إِلىٰ رَجُلٍ مِنهُم أَن أَنذِرِ النّاسَ وَبَشِّرِ الَّذينَ ءامَنوا أَنَّ لَهُم قَدَمَ صِدقٍ عِندَ رَبِّهِم قالَ الكٰفِرونَ إِنَّ هٰذا لَسٰحِرٌ مُبينٌ

அவர்களைப் போன்ற ஒரு மனிதருக்கு நாம் உள்ளுணர்வளித்தது, மனிதர்களுக்கு மிகவும் ஆச்சரியமான ஒன்றா? அவர் (இவ்வாறு கூறும்படி உள்ளுணர்வளிக்கப்பட்டார்), நீர் மக்களை எச்சரிக்க வேண்டும், மேலும் நம்பிக்கை கொண்டோருக்கு, அவர்கள் தங்கள் இரட்சகரிடம் உயர்மதிப்பு மிக்கதோர் அந்தஸ்தை அடைந்துவிட்டனர் என்ற நற்செய்தியை வழங்குவீராக. நம்பமறுப்போர் கூறினர், இவர் ஒரு சாமர்த்தியமான மந்திரவாதி!

10:3

إِنَّ رَبَّكُمُ اللَّهُ الَّذى خَلَقَ السَّمٰوٰتِ وَالأَرضَ فى سِتَّةِ أَيّامٍ ثُمَّ استَوىٰ عَلَى العَرشِ يُدَبِّرُ الأَمرَ ما مِن شَفيعٍ إِلّا مِن بَعدِ إِذنِهِ ذٰلِكُمُ اللَّهُ رَبُّكُم فَاعبُدوهُ أَفَلا تَذَكَّرونَ

உங்களுடைய ஒரே இரட்சகர் கடவுள்தான்; வானங்களையும் பூமியையும் ஆறு நாட்களில் படைத்தவர், பின்னர் அனைத்து அதிகாரங்களையும் ஏற்றுக் கொண்டவர். அவர் எல்லா விஷயங்களையும் கட்டுப்படுத்துகின்றார். அவருடைய நாட்டத்திற்கு ஒப்பவே அன்றி, பரிந்துரைப்பவர் எவரும் இல்லை. உங்கள் இரட்சகரான கடவுள் இவ்விதமானவர். அவரையே நீங்கள் வழிபட வேண்டும். நீங்கள் கவனத்தில் எடுத்துக்கொள்ள மாட்டீர்களா?

10:4

إِلَيهِ مَرجِعُكُم جَميعًا وَعدَ اللَّهِ حَقًّا إِنَّهُ يَبدَؤُا۟ الخَلقَ ثُمَّ يُعيدُهُ لِيَجزِىَ الَّذينَ ءامَنوا وَعَمِلُوا الصّٰلِحٰتِ بِالقِسطِ وَالَّذينَ كَفَروا لَهُم شَرابٌ مِن حَميمٍ وَعَذابٌ أَليمٌ بِما كانوا يَكفُرونَ

அவரிடமே உங்களுடைய, உங்கள் அனைவருடைய இறுதித் திரும்புதல் இருக்கின்றது. இது கடவுளின் சத்தியமான வாக்குறுதியாகும். நம்பிக்கை கொண்டு நேர்மையான வாழ்வு நடத்துவோருக்கு, நீதமாக வெகுமதியளிப்பதற்காக, அவர் படைப்பைத் துவங்குகின்றார், பின்னர் அதனை மீண்டும் செய்கின்றார். நம்பமறுப்போரைப் பொறுத்தவரை, அவர்கள் நரகின் பானங்களுக்கும், அவர்களுடைய நம்பமறுப்பின் காரணமாக வலிமிகுந்ததொரு தண்டனைக்கும் உள்ளாகின்றனர்.

10:5

هُوَ الَّذى جَعَلَ الشَّمسَ ضِياءً وَالقَمَرَ نورًا وَقَدَّرَهُ مَنازِلَ لِتَعلَموا عَدَدَ السِّنينَ وَالحِسابَ ما خَلَقَ اللَّهُ ذٰلِكَ إِلّا بِالحَقِّ يُفَصِّلُ الـٔايٰتِ لِقَومٍ يَعلَمونَ

அவர்தான் சூரியனை ஒளிரக்கூடியதாகவும், சந்திரனை ஒரு விளக்காகவும் ஆக்கியவர், மேலும் வருடங்களை எண்ணும் முறையை நீங்கள் அறிந்து கொள்ளவும், கணக்கிடவும் ஏதுவாக அதன் நிலைகளை அவர் வடிவமைத்தார். கடவுள் இவை அனைத்தையும் ஒரு குறிப்பிட்ட நோக்கத்திற்காகவே அன்றிப் படைக்கவில்லை. அறிந்திருக்கின்ற மக்களுக்கு இந்த வெளிப்பாடுகளை அவர் விவரிக்கின்றார்.

10:6

إِنَّ فِى اختِلٰفِ الَّيلِ وَالنَّهارِ وَما خَلَقَ اللَّهُ فِى السَّمٰوٰتِ وَالأَرضِ لَـٔايٰتٍ لِقَومٍ يَتَّقونَ

நிச்சயமாக, இரவு மற்றும் பகலின் மாற்றங்களிலும், மேலும் வானங்கள் மற்றும் பூமியில் கடவுள் படைத்தவற்றிலும் நல்லோர்களான மக்களுக்கு, சான்றுகள் இருக்கின்றன.

10:7

إِنَّ الَّذينَ لا يَرجونَ لِقاءَنا وَرَضوا بِالحَيوٰةِ الدُّنيا وَاطمَأَنّوا بِها وَالَّذينَ هُم عَن ءايٰتِنا غٰفِلونَ

நம்மைச் சந்திப்பதை எதிர்பார்க்காதிருப்பவர்கள், மேலும் இவ்வுலக வாழ்வில் மூழ்கி அத்துடன் திருப்தியடைந்தவர்கள், மேலும் நமது சான்றுகளைக் கவனிக்க மறுத்தவர்கள்;

10:8

أُولٰئِكَ مَأوىٰهُمُ النّارُ بِما كانوا يَكسِبونَ

இவர்கள், தங்களுடைய சொந்தச் செயல்களின் விளைவாக, தங்களுடைய இறுதியான தங்குமிடமாக நரகத்தை அடைந்து கொண்டார்கள்.

10:9

٠إِنَّ الَّذينَ ءامَنوا وَعَمِلُوا الصّٰلِحٰتِ يَهديهِم رَبُّهُم بِإيمٰنِهِم تَجرى مِن تَحتِهِمُ الأَنهٰرُ فى جَنّٰتِ النَّعيمِ

நம்பிக்கை கொண்டு நேர்மையான வாழ்வு நடத்துவோரைப் பொறுத்தவரை, அவர்களுடைய இரட்சகர், அவர்களுடைய நம்பிக்கையின் புண்ணியத்தினால், அவர்களை வழிநடத்துகின்றார். பேரானந்தமான தோட்டங்களில் அவர்களுக்குக் கீழே ஆறுகள் ஓடிக் கொண்டிருக்கும்.

10:10

دَعوىٰهُم فيها سُبحٰنَكَ اللَّهُمَّ وَتَحِيَّتُهُم فيها سَلٰمٌ وَءاخِرُ دَعوىٰهُم أَنِ الحَمدُ لِلَّهِ رَبِّ العٰلَمينَ

அங்கே அவர்களுடைய பிரார்த்தனையாவது: எங்கள் இறைவனே, நீரே துதிப்பிற்குரியவர், அங்கே அவர்களுடைய வாழ்த்தாவது, சாந்தி என்பதாகும், மேலும் அவர்களுடைய முடிவான பிரார்த்தனையாவது: புகழ்ச்சி கடவுளுக்கே உரியது, பிரபஞ்சத்தின் இரட்சகர்.

10:11

وَلَو يُعَجِّلُ اللَّهُ لِلنّاسِ الشَّرَّ استِعجالَهُم بِالخَيرِ لَقُضِىَ إِلَيهِم أَجَلُهُم فَنَذَرُ الَّذينَ لا يَرجونَ لِقاءَنا فى طُغيٰنِهِم يَعمَهونَ

மனிதர்கள் அடைந்திருக்கும் தண்டனையை, வாழ்வாதாரங்களை அவர்கள் கேட்கும் விதத்தைப் போல, கடவுள் துரிதப்படுத்தியிருப்பாராயின் நெடுங்காலத்திற்கு முன்னரே அவர்கள் அழிக்கப்பட்டிருப்பார்கள். ஆயினும், நம்முடைய சந்திப்பை நம்பாதவர்களை, அவர்களுடைய வரம்புமீறல்களில், குருட்டுத்தனமாகத் தவறுகள் செய்யும்படி நாம் விட்டுவிடுகின்றோம்.

10:12

وَإِذا مَسَّ الإِنسٰنَ الضُّرُّ دَعانا لِجَنبِهِ أَو قاعِدًا أَو قائِمًا فَلَمّا كَشَفنا عَنهُ ضُرَّهُ مَرَّ كَأَن لَم يَدعُنا إِلىٰ ضُرٍّ مَسَّهُ كَذٰلِكَ زُيِّنَ لِلمُسرِفينَ ما كانوا يَعمَلونَ

துன்பம் மனிதனைத் தீண்டும் போது, அவன் படுத்த வண்ணமோ, அமர்ந்த வண்ணமோ, நின்ற வண்ணமோ நம்மை இறைஞ்சுகின்றான். ஆனால் நாம் அவனுடைய துன்பத்தை நிவர்த்தி செய்தவுடன், எந்தக் கஷ்டத்தையும் நிவர்த்தி செய்யும்படி நம்மை ஒருபோதும் இறைஞ்சாதவன் போல அவன் சென்றுவிடுகின்றான்! வரம்புமீறியவர்களின் காரியங்கள், இவ்விதமாக அவர்களுடைய கண்களுக்கு அழகாக்கப்பட்டுவிட்டன.

10:13

وَلَقَد أَهلَكنَا القُرونَ مِن قَبلِكُم لَمّا ظَلَموا وَجاءَتهُم رُسُلُهُم بِالبَيِّنٰتِ وَما كانوا لِيُؤمِنوا كَذٰلِكَ نَجزِى القَومَ المُجرِمينَ

உங்களுக்கு முன்னிருந்த எத்தனையோ ஒரு தலைமுறையினை அவர்கள் வரம்புமீறிய போது நாம் அழித்திருக்கின்றோம். அவர்களுடைய தூதர்கள் அவர்களிடம் தெளிவான சான்றுகளுடன் சென்றனர், ஆனால் அவர்கள் நம்பிக்கை கொள்ள மறுத்துவிட்டனர். குற்றவாளிகளான மக்களுக்கு இவ்விதமாகவே நாம் கூலி கொடுக்கின்றோம்.

10:14

ثُمَّ جَعَلنٰكُم خَلٰئِفَ فِى الأَرضِ مِن بَعدِهِم لِنَنظُرَ كَيفَ تَعمَلونَ

பின்னர், நீங்கள் எப்படிச் செய்யப் போகின்றீர்கள் என்பதைக் காண்பதற்காக, அவர்களுக்குப் பின்னால், உங்களை நாம் இந்தப் பூமிக்கு வாரிசுகளாக்கினோம்.

10:15

وَإِذا تُتلىٰ عَلَيهِم ءايٰتُنا بَيِّنٰتٍ قالَ الَّذينَ لا يَرجونَ لِقاءَنَا ائتِ بِقُرءانٍ غَيرِ هٰذا أَو بَدِّلهُ قُل ما يَكونُ لى أَن أُبَدِّلَهُ مِن تِلقائِ نَفسى إِن أَتَّبِعُ إِلّا ما يوحىٰ إِلَىَّ إِنّى أَخافُ إِن عَصَيتُ رَبّى عَذابَ يَومٍ عَظيمٍ

நம்முடைய வெளிப்பாடுகள், அவர்களிடம் ஓதிக்காட்டப்பட்டால், நம்முடைய சந்திப்பை எதிர்பார்க்காதிருப்பவர்கள் கூறுகின்றனர், இது அல்லாத ஒரு குர்ஆனை* கொண்டு வாரும், அல்லது இதனை மாற்றிவிடும்! கூறும், நானே சுயமாக இதனை மாற்றிவிட எனக்குச் சாத்தியமில்லை. எனக்கு வெளிப்படுத்தப்பட்டவற்றை நான் பின்பற்றுகின்றேன் அவ்வளவுதான். என் இரட்சகருக்கு நான் கீழ்ப்படியாவிட்டால், அச்சமூட்டும் ஒரு நாளின் தண்டனைக்கு நான் அஞ்சுகின்றேன்.

10:16

قُل لَو شاءَ اللَّهُ ما تَلَوتُهُ عَلَيكُم وَلا أَدرىٰكُم بِهِ فَقَد لَبِثتُ فيكُم عُمُرًا مِن قَبلِهِ أَفَلا تَعقِلونَ

கூறும், கடவுள் நாடியிருந்தால், இதனை நான் உங்களிடம் ஓதிக்காட்டியிருக்க மாட்டேன், அன்றியும், இது குறித்து எதனையும் நீங்கள் அறிந்திருக்கவும் மாட்டீர்கள். இதற்கு முன்னர், ஒரு முழுமையான வாழ்வை உங்கள் மத்தியில் நான் வாழ்ந்திருக்கின்றேன். (மேலும் நீங்கள் என்னைப் புத்தியுள்ள, உண்மையான ஒரு மனிதனாக அறிந்திருக்கின்றீர்கள்) நீங்கள் புரிந்து கொள்ளவில்லையா?

10:17

فَمَن أَظلَمُ مِمَّنِ افتَرىٰ عَلَى اللَّهِ كَذِبًا أَو كَذَّبَ بِـٔايٰتِهِ إِنَّهُ لا يُفلِحُ المُجرِمونَ

கடவுளைப் பற்றிப் பொய்களை இட்டுக்கட்டும் ஒருவனை விட, அல்லது அவருடைய வெளிப்பாடுகளை ஏற்றுக்கொள்ள மறுப்பவனை விடப் பெரிய பாவி யார்? மிக உறுதியாக, வரம்புமீறுபவர்கள் ஒருபோதும் வெற்றியடைய மாட்டார்கள்.

10:18

وَيَعبُدونَ مِن دونِ اللَّهِ ما لا يَضُرُّهُم وَلا يَنفَعُهُم وَيَقولونَ هٰؤُلاءِ شُفَعٰؤُنا عِندَ اللَّهِ قُل أَتُنَبِّـٔونَ اللَّهَ بِما لا يَعلَمُ فِى السَّمٰوٰتِ وَلا فِى الأَرضِ سُبحٰنَهُ وَتَعٰلىٰ عَمّا يُشرِكونَ

கடவுளுடன் தங்களுக்குத் தீங்கிழைக்கவோ அல்லது பயனளிக்கவோ சக்தியற்ற போலித் தெய்வங்களையும் அவர்கள் வழிபடுகின்றனர், மேலும் அவர்கள் கூறுகின்றனர், இவர்கள் கடவுளிடம் எங்களுக்குப் பரிந்துரை செய்பவர்கள்! கூறும், வானங்களிலோ அல்லது பூமியிலோ, அவர் அறியாத சிலவற்றைக் கடவுளுக்கு நீங்கள் அறிவிக்கின்றீர்களா? அவர் துதிப்பிற்குரியவர். அவர் மிகவும் உயர்வானவர்; பங்குதாரர்கள் தேவைப்படுவதற்கும் அப்பால்.

10:19

وَما كانَ النّاسُ إِلّا أُمَّةً وٰحِدَةً فَاختَلَفوا وَلَولا كَلِمَةٌ سَبَقَت مِن رَبِّكَ لَقُضِىَ بَينَهُم فيما فيهِ يَختَلِفونَ

மனிதர்கள் ஒரே சமூகத்தவராகவே இருந்து வந்தனர், பின்னர் அவர்கள் தர்க்கித்துக் கொண்டனர். உம்முடைய இரட்சகரிடமிருந்து முன்னரே தீர்மானிக்கப்பட்ட வார்த்தை இல்லாதிருந்தால், அவர்களுடைய தர்க்கங்கள் குறித்து உடனடியாக அவர்கள் தீர்ப்பளிக்கப்பட்டிருப்பார்கள்.

10:20

وَيَقولونَ لَولا أُنزِلَ عَلَيهِ ءايَةٌ مِن رَبِّهِ فَقُل إِنَّمَا الغَيبُ لِلَّهِ فَانتَظِروا إِنّى مَعَكُم مِنَ المُنتَظِرينَ

அவர்கள் கூறுகின்றனர், அவருடைய இரட்சகரிடமிருந்து அவருக்கு அற்புதம் எதுவும் இறங்கிவராதிருப்பது ஏன்? கூறும், எதிர்காலம் கடவுளுக்குரியது; எனவே காத்திருங்கள், நானும் உங்களுடன் காத்திருக்கின்றேன்.

10:21

وَإِذا أَذَقنَا النّاسَ رَحمَةً مِن بَعدِ ضَرّاءَ مَسَّتهُم إِذا لَهُم مَكرٌ فى ءايٰتِنا قُلِ اللَّهُ أَسرَعُ مَكرًا إِنَّ رُسُلَنا يَكتُبونَ ما تَمكُرونَ

துன்பம் அவர்களைத் தாக்கியதற்குப் பின்னர், மனிதர்களுக்கு நாம் கருணையை அருள் செய்தால், அவர்கள் உடனடியாக நமது வெளிப்பாடுகளுக்கு எதிராகச் சூழ்ச்சி செய்கின்றனர்! கூறும், கடவுளின் திட்டம் மிக அதிகத்திறன் வாய்ந்தது. ஏனெனில் நம்முடைய தூதர்கள் நீங்கள் செய்கின்ற சூழ்ச்சிகள் ஒவ்வொன்றையும் பதிவு செய்து கொண்டிருக்கின்றனர்.

10:22

هُوَ الَّذى يُسَيِّرُكُم فِى البَرِّ وَالبَحرِ حَتّىٰ إِذا كُنتُم فِى الفُلكِ وَجَرَينَ بِهِم بِريحٍ طَيِّبَةٍ وَفَرِحوا بِها جاءَتها ريحٌ عاصِفٌ وَجاءَهُمُ المَوجُ مِن كُلِّ مَكانٍ وَظَنّوا أَنَّهُم أُحيطَ بِهِم دَعَوُا اللَّهَ مُخلِصينَ لَهُ الدّينَ لَئِن أَنجَيتَنا مِن هٰذِهِ لَنَكونَنَّ مِنَ الشّٰكِرينَ

அவர்தான் கடல் மற்றும் கரையின் குறுக்கே உங்களை நகர்த்தும் ஒருவர். நீங்கள் கப்பலில் ஏறிக்கொள்கின்றீர்கள், மேலும் அவை மிதமான நல்ல காற்றில் இதமாக மிதந்து செல்கின்றன. பின்னர் அதிலே மகிழ்ந்திருக்கும் சமயம், உக்கிரமான காற்று வீசுகின்றது, மேலும் அலைகள் அவர்களை ஒவ்வொரு புறத்திலிருந்தும் சூழ்ந்து கொள்கின்றன. இந்த வேளையில்தான் அவர்கள், உண்மையோடு தங்கள் பிரார்த்தனைகளை அவருக்கு மட்டுமே அர்ப்பணித்தவர்களாக, கடவுளை இறைஞ்சுகின்றனர்: இந்த முறை மட்டும் எங்களை நீர் காப்பாற்றுவீரானால், என்றென்றும் நாங்கள் நன்றியுடன் இருப்போம்.

10:23

٢٣:١٠فَلَمّا أَنجىٰهُم إِذا هُم يَبغونَ فِى الأَرضِ بِغَيرِ الحَقِّ يٰأَيُّهَا النّاسُ إِنَّما بَغيُكُم عَلىٰ أَنفُسِكُم مَتٰعَ الحَيوٰةِ الدُّنيا ثُمَّ إِلَينا مَرجِعُكُم فَنُنَبِّئُكُم بِما كُنتُم تَعمَلونَ

ஆனால் அவர்களை அவர் காப்பாற்றியவுடன், அவர்கள் பூமியில் வரம்புமீறுகின்றனர், மேலும் சத்தியத்தை எதிர்க்கின்றனர். மனிதர்களே, உங்களுடைய வரம்புமீறல்கள் உங்களுடைய சொந்த ஆத்மாக்களுக்கு மட்டுமே கேடாகும். நீங்கள் இவ்வுலக வாழ்வில் முற்றிலும் மூழ்கியவர்களாகவே இருக்கின்றீர்கள், பின்னர் நம்மிடமே உங்கள் இறுதித் திரும்புதல் உள்ளது, அப்போது நீங்கள் செய்து கொண்டிருந்த ஒவ்வொன்றையும் பற்றி நாம் உங்களுக்குத் தெரிவிப்போம்.

10:24

إِنَّما مَثَلُ الحَيوٰةِ الدُّنيا كَماءٍ أَنزَلنٰهُ مِنَ السَّماءِ فَاختَلَطَ بِهِ نَباتُ الأَرضِ مِمّا يَأكُلُ النّاسُ وَالأَنعٰمُ حَتّىٰ إِذا أَخَذَتِ الأَرضُ زُخرُفَها وَازَّيَّنَت وَظَنَّ أَهلُها أَنَّهُم قٰدِرونَ عَلَيها أَتىٰها أَمرُنا لَيلًا أَو نَهارًا فَجَعَلنٰها حَصيدًا كَأَن لَم تَغنَ بِالأَمسِ كَذٰلِكَ نُفَصِّلُ الـٔايٰتِ لِقَومٍ يَتَفَكَّرونَ

இவ்வுலக வாழ்விற்குரிய உதாரணம் இது போன்றதேயாகும்: பூமியில் இருந்து எல்லாவகைத் தாவரங்களை முளைப்பிக்கவும், மனிதர்களுக்கும் விலங்குகளுக்கும் உணவு வழங்கவும் விண்ணிலிருந்து நாம் நீரை இறக்கி அனுப்புகின்றோம். பின்னர், பூமி பூரணமாக அலங்கரிக்கப்பட்டு, மேலும் அதன் மக்கள் அதன் மீது முழுக் கட்டுப்பாட்டில் இருப்பதாக அவர்கள் எண்ணிக் கொள்ளும் போது, நம்முடைய தீர்ப்பு இரவிலோ அல்லது பகலிலோ* வருகின்றது, முந்திய நாளில் எதுவுமே இல்லாமலிருந்ததைப் போல, அதனை முற்றிலும் தரிசாக்கிவிட்டுவிடுகின்றது. சிந்திக்கும் கூட்டத்தாருக்கு இந்த வெளிப்பாடுகளை நாம் இவ்விதமாக விவரிக்கின்றோம்.

10:25

وَاللَّهُ يَدعوا إِلىٰ دارِ السَّلٰمِ وَيَهدى مَن يَشاءُ إِلىٰ صِرٰطٍ مُستَقيمٍ

கடவுள் உங்களைச் சாந்தியான இல்லத்தின் பால் அழைக்கின்றார், மேலும் தான் நாடியோரை நேரானதொரு பாதையில் வழிநடத்துகின்றார்.

10:26

لِلَّذينَ أَحسَنُوا الحُسنىٰ وَزِيادَةٌ وَلا يَرهَقُ وُجوهَهُم قَتَرٌ وَلا ذِلَّةٌ أُولٰئِكَ أَصحٰبُ الجَنَّةِ هُم فيها خٰلِدونَ

நல்லோர்களுக்குரிய வெகுமதி, பன்மடங்காகப் பெருக்கப்படும். அவர்களுடைய முகங்கள் எவ்வித இழப்பினையோ அல்லது கேவலத்தையோ ஒருபோதும் அனுபவிக்காது. இவர்கள்தான் சுவனவாசிகள் ஆவார்கள்; அங்கே அவர்கள் என்றென்றும் வசிப்பார்கள்.

10:27

وَالَّذينَ كَسَبُوا السَّيِّـٔاتِ جَزاءُ سَيِّئَةٍ بِمِثلِها وَتَرهَقُهُم ذِلَّةٌ ما لَهُم مِنَ اللَّهِ مِن عاصِمٍ كَأَنَّما أُغشِيَت وُجوهُهُم قِطَعًا مِنَ الَّيلِ مُظلِمًا أُولٰئِكَ أَصحٰبُ النّارِ هُم فيها خٰلِدونَ

பாவங்களைச் சம்பாதித்தவர்களைப் பொறுத்தவரை, அவர்களுடைய பிரதிபலன் அவர்களுடைய பாவங்களுக்குச் சரி சமமானதேயாகும். இழிவுதான் அவர்களுடைய பங்கு, மேலும் கடவுளை அன்றி எவர் ஒருவராலும் அவர்களைக் காப்பாற்ற முடியாது. இருண்ட இரவின் பாளங்களினால் அழுத்தப்பட்டவையாக அவர்களுடைய முகங்கள் காணப்படும். அவர்கள் நரகவாசிகளாக இருப்பார்கள்; அங்கே அவர்கள் என்றென்றும் வசிப்பார்கள்.

10:28

وَيَومَ نَحشُرُهُم جَميعًا ثُمَّ نَقولُ لِلَّذينَ أَشرَكوا مَكانَكُم أَنتُم وَشُرَكاؤُكُم فَزَيَّلنا بَينَهُم وَقالَ شُرَكاؤُهُم ما كُنتُم إِيّانا تَعبُدونَ

அவர்கள் அனைவரையும் நாம் வரவழைக்கும் அந்நாளில், போலித் தெய்வங்களை வழிபட்டவர்களிடம் நாம் கூறுவோம், உங்கள் போலித் தெய்வங்களுடன் சேர்த்து, உங்களை நாம் வரவழைத்துள்ளோம். அவர்கள் ஒருவருக்கொருவரை எதிரெதிராக நாம் நிறுத்துவோம், மேலும் அவர்களுடைய போலித் தெய்வங்கள் அவர்களிடம் கூறுவர், நீங்கள் எங்களை இணை வழிபாடு செய்து கொண்டிருந்தது பற்றி எங்களுக்கு எதுவும் தெரியாது.

10:29

فَكَفىٰ بِاللَّهِ شَهيدًا بَينَنا وَبَينَكُم إِن كُنّا عَن عِبادَتِكُم لَغٰفِلينَ

எங்களை நீங்கள் வழிபட்டுக் கொண்டிருந்ததைப் பற்றி நாங்கள் முற்றிலும் அறியாதவர்களாக இருந்தோம் என்பதற்கு, உங்களுக்கும் எங்களுக்கும் இடையில் சாட்சியாக இருக்கக் கடவுள் போதுமானவர்.

10:30

هُنالِكَ تَبلوا كُلُّ نَفسٍ ما أَسلَفَت وَرُدّوا إِلَى اللَّهِ مَولىٰهُمُ الحَقِّ وَضَلَّ عَنهُم ما كانوا يَفتَرونَ

அப்போதுதான் ஒவ்வொரு ஆத்மாவும் அது செய்த ஒவ்வொன்றையும் குறித்துப் பரிசீலித்துப் பார்க்கும். அவர்களுடைய உரிமையுள்ள அதிபதியும் எஜமானருமான கடவுளிடம் அவர்கள் திரும்பக் கொண்டு வரப்படுவார்கள், மேலும் அவர்கள் பொய்யாக உருவாக்கிய போலித் தெய்வங்கள் அவர்களைக் கைவிட்டுவிடும்.

10:31

قُل مَن يَرزُقُكُم مِنَ السَّماءِ وَالأَرضِ أَمَّن يَملِكُ السَّمعَ وَالأَبصٰرَ وَمَن يُخرِجُ الحَىَّ مِنَ المَيِّتِ وَيُخرِجُ المَيِّتَ مِنَ الحَىِّ وَمَن يُدَبِّرُ الأَمرَ فَسَيَقولونَ اللَّهُ فَقُل أَفَلا تَتَّقونَ

கூறும், வானம் மற்றும் பூமியிலிருந்து உங்களுக்கு வழங்குபவர் யார்? செவிப்புலன் மற்றும் பார்வை அனைத்தையும் கட்டுப்படுத்துபவர் யார்? இறந்தவற்றிலிருந்து உயிருள்ளவற்றையும், உயிருள்ளவற்றிலிருந்து இறந்தவற்றையும் வெளிக்கொண்டு வருபவர் யார்? அனைத்து விஷயங்களையும் கட்டுப்பாட்டில் வைத்திருப்பவர் யார்? அவர்கள் கூறுவார்கள், கடவுள். கூறும், பின்னர் நீங்கள் ஏன் கட்டளைகளைக் கடைப்பிடிப்பதில்லை?

10:32

فَذٰلِكُمُ اللَّهُ رَبُّكُمُ الحَقُّ فَماذا بَعدَ الحَقِّ إِلَّا الضَّلٰلُ فَأَنّىٰ تُصرَفونَ

இவ்விதமானவர் கடவுள், உங்களுடைய உரிமையுள்ள இரட்சகர். சத்தியத்திற்கு அப்பால், பொய்மையைத் தவிர வேறென்ன இருக்கின்றது? இவை அனைத்தையும் நீங்கள் எப்படி அலட்சியப்படுத்த முடியும்?

10:33

كَذٰلِكَ حَقَّت كَلِمَتُ رَبِّكَ عَلَى الَّذينَ فَسَقوا أَنَّهُم لا يُؤمِنونَ

தீயவர்களாக இருப்பதைத் தேர்ந்தெடுத்துவிட்டவர்களுக்கு உம்முடைய இரட்சகரின் முடிவால் ஏற்படுவது இதுதான்: அவர்களால் நம்பிக்கை கொள்ள முடியாது.

10:34

قُل هَل مِن شُرَكائِكُم مَن يَبدَؤُا۟ الخَلقَ ثُمَّ يُعيدُهُ قُلِ اللَّهُ يَبدَؤُا۟ الخَلقَ ثُمَّ يُعيدُهُ فَأَنّىٰ تُؤفَكونَ

கூறும், உங்களுடைய போலித் தெய்வங்களில் எவையேனும் படைப்பைத் துவக்கி, பின்னர் அதனை மீண்டும் செய்ய முடியுமா? கூறும், கடவுள் படைப்பைத் துவங்குகின்றார், பின்னர் அதனை மீண்டும் செய்கின்றார். எவ்வாறு நீங்கள் விலகிச் செல்ல இயலும்!

10:35

قُل هَل مِن شُرَكائِكُم مَن يَهدى إِلَى الحَقِّ قُلِ اللَّهُ يَهدى لِلحَقِّ أَفَمَن يَهدى إِلَى الحَقِّ أَحَقُّ أَن يُتَّبَعَ أَمَّن لا يَهِدّى إِلّا أَن يُهدىٰ فَما لَكُم كَيفَ تَحكُمونَ

கூறும், உங்களுடைய போலித் தெய்வங்கள் எவையேனும் சத்தியத்தின் பால் வழிநடத்துகின்றனவா? கூறும், கடவுள்தான் சத்தியத்தின்பால் வழிநடத்துகின்றார். சத்தியத்தின்பால் வழிநடத்தும் ஒருவர் பின்பற்றத்தக்கவரா, அல்லது வழிகாட்டாத, மேலும் தனக்கே வழிகாட்டல் தேவைப்படக் கூடிய ஒருவனா? உங்களுடைய தீர்ப்பில் என்ன கோளாறு?

10:36

وَما يَتَّبِعُ أَكثَرُهُم إِلّا ظَنًّا إِنَّ الظَّنَّ لا يُغنى مِنَ الحَقِّ شَيـًٔا إِنَّ اللَّهَ عَليمٌ بِما يَفعَلونَ

அவர்களில் பெரும்பாலோர் யூகத்தைத் தவிர வேறெதையும் பின்பற்றவில்லை, மேலும் யூகமானது சத்தியத்திற்கு எவ்வகையிலும் மாற்று அல்ல. அவர்கள் செய்யும் ஒவ்வொன்றையும் கடவுள் முற்றிலும் அறிந்திருக்கின்றார்.

10:37

وَما كانَ هٰذَا القُرءانُ أَن يُفتَرىٰ مِن دونِ اللَّهِ وَلٰكِن تَصديقَ الَّذى بَينَ يَدَيهِ وَتَفصيلَ الكِتٰبِ لا رَيبَ فيهِ مِن رَبِّ العٰلَمينَ

கடவுள் தவிர மற்றவரால் இந்தக் குர்ஆன் இயற்றப்பட்டிருக்கச் சாத்தியமில்லை. இது முந்திய எல்லாத் தூதுச் செய்திகளையும் உறுதிப்படுத்துகின்றது, மேலும் முழுமையாக விவரிக்கப்பட்ட ஒரு வேதமாகத் திகழ்கின்றது. இது சந்தேகத்திற்கு அப்பாற்பட்டது; ஏனெனில் இது பிரபஞ்சத்தின் இரட்சகரிடமிருந்து வந்துள்ளது.

10:38

أَم يَقولونَ افتَرىٰهُ قُل فَأتوا بِسورَةٍ مِثلِهِ وَادعوا مَنِ استَطَعتُم مِن دونِ اللَّهِ إِن كُنتُم صٰدِقينَ

அவர் இதனைப் புனைந்து கொண்டார், என்று அவர்கள் கூறினால், கூறும், நீங்கள் உண்மையாளர்களாக இருந்தால், பின் இவற்றைப் போன்ற ஒரு சூராவைக் கொண்டு வாருங்கள், மேலும் கடவுளைத் தவிர, நீங்கள் நாடியவர்களை அழைத்துக்கொள்ளுங்கள்.

10:39

بَل كَذَّبوا بِما لَم يُحيطوا بِعِلمِهِ وَلَمّا يَأتِهِم تَأويلُهُ كَذٰلِكَ كَذَّبَ الَّذينَ مِن قَبلِهِم فَانظُر كَيفَ كانَ عٰقِبَةُ الظّٰلِمينَ

உண்மையில், அவர்கள் இதனை ஆய்வு செய்தும், பரிசீலித்தும் பார்க்காமல், மேலும் இதனைப் புரிந்து கொள்வதற்கும் முன்னர், இதனை ஏற்கமறுத்துவிட்டனர். அவர்களுக்கு முன்னர் இருந்தவர்களும் இவ்விதமாக நம்பமறுத்தனர். எனவே, வரம்புமீறியவர்களுக்கான விளைவுகளைக் கவனித்துப் பார்ப்பீராக.

10:40

وَمِنهُم مَن يُؤمِنُ بِهِ وَمِنهُم مَن لا يُؤمِنُ بِهِ وَرَبُّكَ أَعلَمُ بِالمُفسِدينَ

அவர்களில் சிலர், (இந்த வேதத்தில்) நம்பிக்கை கொள்கின்றனர், அதே சமயம் மற்றவர்கள் இதில் நம்பிக்கை கொள்ள மறுக்கின்றனர். உம்முடைய இரட்சகர் பாவம் செய்பவர்களை முற்றிலும் அறிந்திருக்கின்றார்.

10:41

وَإِن كَذَّبوكَ فَقُل لى عَمَلى وَلَكُم عَمَلُكُم أَنتُم بَريـٔونَ مِمّا أَعمَلُ وَأَنا۠ بَرىءٌ مِمّا تَعمَلونَ

அவர்கள் உம்மை ஏற்கமறுத்தால், பின்னர் கூறும், என் செயல்கள் எனக்குரியவை, உங்கள் செயல்கள் உங்களுக்குரியவை, நான் செய்யும் எந்த ஒன்றுக்கும் நீங்கள் பழிப்பற்றவர்களாவீர்கள், மேலும் நீங்கள் செய்யும் எந்த ஒன்றுக்கும் நான் பழிப்பற்றவன் ஆவேன்.

10:42

وَمِنهُم مَن يَستَمِعونَ إِلَيكَ أَفَأَنتَ تُسمِعُ الصُّمَّ وَلَو كانوا لا يَعقِلونَ

அவர்களில் சிலர் உம்மைக் கவனித்துக் கேட்கின்றனர், ஆனால் அவர்களால் புரிந்து கொள்ளவே முடியாத போதிலும், செவிடர்களைக் கேட்கும்படிச் செய்ய உம்மால் இயலுமா?

10:43

وَمِنهُم مَن يَنظُرُ إِلَيكَ أَفَأَنتَ تَهدِى العُمىَ وَلَو كانوا لا يُبصِرونَ

அவர்களில் சிலர் உம்மைக் கவனித்துப் பார்க்கின்றனர், ஆனால் அவர்களால் பார்க்கவே முடியாத போதிலும், குருடர்களை வழிநடத்த உம்மால் இயலுமா?

10:44

إِنَّ اللَّهَ لا يَظلِمُ النّاسَ شَيـًٔا وَلٰكِنَّ النّاسَ أَنفُسَهُم يَظلِمونَ

கடவுள் ஒருபோதும் மனிதர்களுக்கு அநீதம் இழைப்பதில்லை; மனிதர்கள்தான் தங்களுடைய சொந்த ஆன்மாக்களுக்கே தீங்கிழைத்துக்கொள்கின்றனர்.

10:45

وَيَومَ يَحشُرُهُم كَأَن لَم يَلبَثوا إِلّا ساعَةً مِنَ النَّهارِ يَتَعارَفونَ بَينَهُم قَد خَسِرَ الَّذينَ كَذَّبوا بِلِقاءِ اللَّهِ وَما كانوا مُهتَدينَ

அவர்கள் அனைவரையும் அவர் வரவழைக்கும் அந்நாளில், இவ்வுலகில் அவர்கள் அறிமுகமாகியிருந்த பொழுது, நாளின் ஒரு மணி நேரமே அவர்கள் நிலைத்திருந்ததாக எண்ணிக் கொள்வார்கள். கடவுளின் சந்திப்பில் நம்பிக்கை கொள்ள மறுத்தவர்களும், வழிதவறுவதைத் தேர்ந்தெடுத்துக் கொண்டவர்களும், உண்மையில் நஷ்டப்பட்டவர்களே.

10:46

وَإِمّا نُرِيَنَّكَ بَعضَ الَّذى نَعِدُهُم أَو نَتَوَفَّيَنَّكَ فَإِلَينا مَرجِعُهُم ثُمَّ اللَّهُ شَهيدٌ عَلىٰ ما يَفعَلونَ

அவர்களுக்கு நாம் வாக்களிக்கும் (தண்டனையில்) சிலவற்றை நாம் உமக்குக் காட்டினாலும், அல்லது அதற்கு முன்பே உமது வாழ்வை முடித்துவிட்டாலும், அவர்களுடைய இறுதித் திரும்புதல் நம் வசமே உள்ளது. அவர்கள் செய்யும் ஒவ்வொன்றுக்கும் கடவுள் சாட்சியாக உள்ளார்.

10:47

وَلِكُلِّ أُمَّةٍ رَسولٌ فَإِذا جاءَ رَسولُهُم قُضِىَ بَينَهُم بِالقِسطِ وَهُم لا يُظلَمونَ

ஒவ்வொரு சமூகத்திற்கும், ஒரு தூதர். அவர்களுடைய தூதர் வந்துவிட்ட பின்னர், சிறிதளவும் அநீதமின்றி, அவர்கள் நியாயமாகத் தீர்ப்பளிக்கப்படுகின்றனர்.

10:48

وَيَقولونَ مَتىٰ هٰذَا الوَعدُ إِن كُنتُم صٰدِقينَ

அவர்கள் அறைகூவல் விடுகின்றனர்: நீர் உண்மை கூறுவதாக இருந்தால், இந்த முன்னறிவிப்பு எப்போது நிறைவேறும்?

10:49

قُل لا أَملِكُ لِنَفسى ضَرًّا وَلا نَفعًا إِلّا ما شاءَ اللَّهُ لِكُلِّ أُمَّةٍ أَجَلٌ إِذا جاءَ أَجَلُهُم فَلا يَستَـٔخِرونَ ساعَةً وَلا يَستَقدِمونَ

கூறும், எனக்கே தீங்கிழைத்துக்கொள்ளவோ, அல்லது எனக்கே நன்மை செய்து கொள்ளவோ நான் எந்தச் சக்தியும் கொண்டவனல்லன்; கடவுள் நாடியது மட்டுமே நிகழ்கின்றது. ஒவ்வொரு சமூகத்திற்கும் முன்னரே தீர்மானிக்கப்பட்ட ஒரு வாழ்க்கைக் கால அளவு உள்ளது. அவர்களுடைய தவணை ஒரு முடிவுக்கு வந்துவிட்டால், அவர்களால் அதனை ஒரு மணி நேரம் கூடத் தாமதப்படுத்தவோ, அல்லது முற்படுத்தவோ முடியாது.

10:50

قُل أَرَءَيتُم إِن أَتىٰكُم عَذابُهُ بَيٰتًا أَو نَهارًا ماذا يَستَعجِلُ مِنهُ المُجرِمونَ

கூறும், அவருடைய தண்டனை இரவிலோ அல்லது பகலிலோ, எதில் உங்களிடம் வந்த போதிலும், வரம்புமீறுபவர்கள் ஏன் இப்படி அவசரப்படுகின்றனர்?

10:51

أَثُمَّ إِذا ما وَقَعَ ءامَنتُم بِهِ ءالـٰٔنَ وَقَد كُنتُم بِهِ تَستَعجِلونَ

அது நிகழ்ந்துவிட்டால், அப்போது நீங்கள் நம்பிக்கை கொள்வீர்களா? அப்போது ஏன் நீங்கள் நம்பிக்கை கொள்ள வேண்டும்? அது வரட்டும் என்று நீங்கள் சவால் விட்டுக் கொண்டிருந்தீர்களே?

10:52

ثُمَّ قيلَ لِلَّذينَ ظَلَموا ذوقوا عَذابَ الخُلدِ هَل تُجزَونَ إِلّا بِما كُنتُم تَكسِبونَ

வரம்புமீறியவர்களிடம் கூறப்படும், முடிவேயில்லாத தண்டனையைச் சுவையுங்கள். நீங்கள் எதனைச் சம்பாதித்தீர்களோ அதற்கான பிரதிபலனை மிகச்சரியாக கொடுக்கப்படுகின்றீர்கள் அல்லவா?

10:53

وَيَستَنبِـٔونَكَ أَحَقٌّ هُوَ قُل إى وَرَبّى إِنَّهُ لَحَقٌّ وَما أَنتُم بِمُعجِزينَ

முன்னறிவிக்கும்படி உம்மிடம் அவர்கள் அறைகூவல் விடுகின்றனர்: உண்மையில் இதுதான் நிகழப்போகின்றதா? கூறும், ஆம், நிச்சயமாக என் இரட்சகர் மீது ஆணையாக, இதுவே சத்தியமாகும், மேலும் நீங்கள் ஒருக்காலும் தப்பித்துவிட முடியாது.

10:54

وَلَو أَنَّ لِكُلِّ نَفسٍ ظَلَمَت ما فِى الأَرضِ لَافتَدَت بِهِ وَأَسَرُّوا النَّدامَةَ لَمّا رَأَوُا العَذابَ وَقُضِىَ بَينَهُم بِالقِسطِ وَهُم لا يُظلَمونَ

ஏதேனும் தீய ஆத்மா பூமியில் உள்ள அனைத்தையும் சொந்தமாக வைத்திருந்தாலும், உடனடியாக அதனை மீட்புத்தொகையாகக் கொடுத்துவிடும். தண்டனையை அவர்கள் காணும் பொழுது குற்ற உணர்வுக்கு ஆட்பட்டவர்களாக அவர்கள் ஆகிவிடுவார்கள். சிறிதளவும் அநீதமின்றி, அவர்கள் நியாயமாகத் தீர்ப்பளிக்கப்படுவார்கள்.

10:55

أَلا إِنَّ لِلَّهِ ما فِى السَّمٰوٰتِ وَالأَرضِ أَلا إِنَّ وَعدَ اللَّهِ حَقٌّ وَلٰكِنَّ أَكثَرَهُم لا يَعلَمونَ

பரிபூரணமாக, வானங்கள் மற்றும் பூமியில் உள்ள அனைத்தும் கடவுளுக்குரியவை. பரிபூரணமாக, கடவுளின் வாக்குறுதி சத்தியமானதாகும், ஆனால் அவர்களில் பெரும்பாலோர் அறியமாட்டார்கள்.

10:56

هُوَ يُحى ۦ وَيُميتُ وَإِلَيهِ تُرجَعونَ

அவர் வாழ்வையும் மரணத்தையும் கட்டுப்படுத்துகின்றார், மேலும் அவரிடமே நீங்கள் திரும்பக் கொண்டு வரப்படுவீர்கள்.

10:57

يٰأَيُّهَا النّاسُ قَد جاءَتكُم مَوعِظَةٌ مِن رَبِّكُم وَشِفاءٌ لِما فِى الصُّدورِ وَهُدًى وَرَحمَةٌ لِلمُؤمِنينَ

மனிதர்களே, உங்கள் இரட்கரிடமிருந்து உங்களுக்கு இதிலே உபதேசமும், உங்கள் இதயங்களைத் தொந்தரவு செய்யக்கூடிய எந்த ஒன்றுக்கும் நிவாரணமும், வழிகாட்டலும், மேலும் நம்பிக்கையாளர்களுக்குக் கருணையும் வந்துள்ளது.

10:58

قُل بِفَضلِ اللَّهِ وَبِرَحمَتِهِ فَبِذٰلِكَ فَليَفرَحوا هُوَ خَيرٌ مِمّا يَجمَعونَ

கூறும், கடவுளின் அருளைக் கொண்டும் அவருடைய கருணையைக் கொண்டும் அவர்கள் பெருமகிழ்வு அடைய வேண்டும். அவர்களால் சேகரிக்க முடிந்த எந்தச் செல்வத்தையும் விட இது மிகவும் மேலானது.

10:59

قُل أَرَءَيتُم ما أَنزَلَ اللَّهُ لَكُم مِن رِزقٍ فَجَعَلتُم مِنهُ حَرامًا وَحَلٰلًا قُل ءاللَّهُ أَذِنَ لَكُم أَم عَلَى اللَّهِ تَفتَرونَ

கூறும், கடவுள் எவ்வாறு எல்லாவிதமான வாழ்வாதாரங்களையும் உங்களுக்கு இறக்கி அனுப்புகின்றார் என்பதையும், பின்னர் அவற்றில் சிலவற்றை நீங்கள் அனுமதிக்கப்பட்டதாகவும், மேலும் சிலவற்றை தடை செய்யப்பட்டதாகவும் ஆக்கிக் கொள்கின்றீர்கள் என்பதையும் நீங்கள் கவனித்துப் பார்த்தீர்களா? கூறும், இதனைச் செய்வதற்குக் கடவுள் உங்களுக்கு அனுமதி தந்துவிட்டாரா? அல்லது நீங்கள் பொய்களை இட்டுக்கட்டி அவற்றைக் கடவுள் மேல் சாட்டுகின்றீர்களா?

10:60

وَما ظَنُّ الَّذينَ يَفتَرونَ عَلَى اللَّهِ الكَذِبَ يَومَ القِيٰمَةِ إِنَّ اللَّهَ لَذو فَضلٍ عَلَى النّاسِ وَلٰكِنَّ أَكثَرَهُم لا يَشكُرونَ

கடவுளைப் பற்றிப் பொய்களை இட்டுக்கட்டுபவர்களுக்கு உயிர்த்தெழுப்பப்படும் நாளில் அவரைச் சந்திக்க வேண்டுமே என்று எப்பொழுதாவது தோன்றுகின்றதா? மிக நிச்சயமாக, கடவுள் தன் அருளை மனிதர்கள் மீது பொழிகின்றார், ஆனால் அவர்களில் அதிகமானோர் நன்றிகெட்டவர்களாக இருக்கின்றனர்.

10:61

وَما تَكونُ فى شَأنٍ وَما تَتلوا مِنهُ مِن قُرءانٍ وَلا تَعمَلونَ مِن عَمَلٍ إِلّا كُنّا عَلَيكُم شُهودًا إِذ تُفيضونَ فيهِ وَما يَعزُبُ عَن رَبِّكَ مِن مِثقالِ ذَرَّةٍ فِى الأَرضِ وَلا فِى السَّماءِ وَلا أَصغَرَ مِن ذٰلِكَ وَلا أَكبَرَ إِلّا فى كِتٰبٍ مُبينٍ

நீங்கள் எந்தச் சூழலுக்குள்ளும் நுழைவதில்லை, குர்ஆனில் எதையும் நீங்கள் ஓதுவதில்லை, அன்றியும் எந்த விஷயத்தையும் நீங்கள் செய்வதில்லை, நீங்கள் அவற்றைச் செய்யும் பொழுதே நாம் அதற்குச் சாட்சிகளாக இல்லாமல். ஓர் அணுவின் எடைகூட உம்முடைய இரட்சகரின் கட்டுப்பாடுக்கு அப்பாற்பட்டதில்லை, அது வானங்களிலோ அல்லது பூமியிலோ இருந்தபோதிலும் சரியே. மேலும் அணுவை விடச் சிறிய எந்த ஒன்றுமோ அல்லது பெரியதோ, ஆழ்ந்ததோர் ஏட்டில் பதியப்படாமல் இல்லை.

10:62

أَلا إِنَّ أَولِياءَ اللَّهِ لا خَوفٌ عَلَيهِم وَلا هُم يَحزَنونَ

பரிபூரணமாக, கடவுளின் கூட்டணியினர் அஞ்சுவதற்கு ஒன்றுமில்லை, அன்றியும் அவர்கள் துக்கப்படவும் மாட்டார்கள்.

10:63

الَّذينَ ءامَنوا وَكانوا يَتَّقونَ

அவர்கள் நம்பிக்கை கொண்டு நேரிய வாழ்வு நடத்துபவர்களாக இருக்கின்றனர்.

10:64

لَهُمُ البُشرىٰ فِى الحَيوٰةِ الدُّنيا وَفِى الـٔاخِرَةِ لا تَبديلَ لِكَلِمٰتِ اللَّهِ ذٰلِكَ هُوَ الفَوزُ العَظيمُ

அவர்களுக்கு, இவ்வுலகிலும், அவ்வண்ணமே மறு உலகிலும் ஆனந்தமும் மகிழ்ச்சியும் உள்ளது. இது கடவுளின் மாற்ற முடியாத சட்டமாகும். இதுவே மகத்தான பெருவெற்றியாகும்.

10:65

وَلا يَحزُنكَ قَولُهُم إِنَّ العِزَّةَ لِلَّهِ جَميعًا هُوَ السَّميعُ العَليمُ

அவர்களுடைய பேச்சுகளால் கவலையடையாதீர். சக்தி அனைத்தும் கடவுளுக்குரியது. அவர் செவியேற்பவர், எல்லாம் அறிந்தவர்.

10:66

أَلا إِنَّ لِلَّهِ مَن فِى السَّمٰوٰتِ وَمَن فِى الأَرضِ وَما يَتَّبِعُ الَّذينَ يَدعونَ مِن دونِ اللَّهِ شُرَكاءَ إِن يَتَّبِعونَ إِلَّا الظَّنَّ وَإِن هُم إِلّا يَخرُصونَ

பரிபூரணமாக, வானங்களில் உள்ள ஒவ்வொருவரும், மேலும் பூமியில் உள்ள ஒவ்வொருவரும் கடவுளுக்குரியவர்கள். கடவுளுடன் போலித் தெய்வங்களை அமைத்துக்கொள்பவர்கள் உண்மையில் பின்பற்றுவது ஒன்றையுமில்லை. ஏதோ ஒன்றைப் பின்பற்றிக் கொண்டிருக்கின்றோம் என்று அவர்கள் எண்ணிக்கொள்ள மட்டுமே செய்கின்றனர். அவர்கள் யூகிக்க மட்டுமே செய்கின்றனர்.

10:67

هُوَ الَّذى جَعَلَ لَكُمُ الَّيلَ لِتَسكُنوا فيهِ وَالنَّهارَ مُبصِرًا إِنَّ فى ذٰلِكَ لَـٔايٰتٍ لِقَومٍ يَسمَعونَ

அவர்தான் இரவை உங்கள் ஓய்வுக்கென ஆக்கியவர், மேலும் பகலை ஒளியூட்டப்பட்டதாக ஆக்கினார். கேட்கக்கூடிய மக்களுக்கு இவற்றில் சான்றுகள் உள்ளன.

10:68

قالُوا اتَّخَذَ اللَّهُ وَلَدًا سُبحٰنَهُ هُوَ الغَنِىُّ لَهُ ما فِى السَّمٰوٰتِ وَما فِى الأَرضِ إِن عِندَكُم مِن سُلطٰنٍ بِهٰذا أَتَقولونَ عَلَى اللَّهِ ما لا تَعلَمونَ

அவர்கள் கூறினர், கடவுள் ஒரு மகனைப் பெற்றெடுத்திருக்கின்றார்! அவர் துதிப்பிற்குரியவர். அவரே மிக்க செல்வந்தர். வானங்களில் உள்ள ஒவ்வொன்றும், இன்னும் பூமியில் உள்ள ஒவ்வொன்றும் அவருக்கே உரியது. இத்தகையதொரு இறைநிந்தனைக்கு ஆதரவளிக்கும் சான்று எதுவும் உங்களிடம் இல்லை. கடவுளைப் பற்றி நீங்கள் அறியாதவற்றை நீங்கள் கூறுகின்றீர்களா?

10:69

قُل إِنَّ الَّذينَ يَفتَرونَ عَلَى اللَّهِ الكَذِبَ لا يُفلِحونَ

பிரகடனப்படுத்துவீராக: கடவுளைப் பற்றிப் பொய்களைப் புனைபவர்கள் ஒருபோதும் வெற்றியடைய மாட்டார்கள்.

10:70

مَتٰعٌ فِى الدُّنيا ثُمَّ إِلَينا مَرجِعُهُم ثُمَّ نُذيقُهُمُ العَذابَ الشَّديدَ بِما كانوا يَكفُرونَ

இவ்வுலகில் அவர்களுடைய தற்காலிகப் பங்கை அவர்கள் பெறுவார்கள், அதன் பின்னர் நம்மிடமே அவர்களுடைய இறுதித் திரும்புதல் இருக்கின்றது, பின்னர் அவர்கள் நம்பிக்கை கொள்ள மறுத்ததற்காக அவர்களை நாம் கடும் தண்டனையில் கொண்டு சேர்த்துவிடுவோம்.

10:71

وَاتلُ عَلَيهِم نَبَأَ نوحٍ إِذ قالَ لِقَومِهِ يٰقَومِ إِن كانَ كَبُرَ عَلَيكُم مَقامى وَتَذكيرى بِـٔايٰتِ اللَّهِ فَعَلَى اللَّهِ تَوَكَّلتُ فَأَجمِعوا أَمرَكُم وَشُرَكاءَكُم ثُمَّ لا يَكُن أَمرُكُم عَلَيكُم غُمَّةً ثُمَّ اقضوا إِلَىَّ وَلا تُنظِرونِ

நோவாவின் வரலாற்றை அவர்களுக்கு எடுத்துரைப்பீராக. அவர் தன் சமூகத்தாரிடம் கூறினார், என் சமூகத்தாரே, எனது நிலையும் கடவுளின் வெளிப்பாடுகளைப் பற்றிய எனது நினைவூட்டுதல்களும் உங்களுக்கு மிகவும் அதிகமானதாகத் தென்படுமானால், அப்போது நான் எனது பொறுப்பைக் கடவுளிடம் ஒப்படைத்துவிடுகின்றேன். நீங்கள் உங்கள் தலைவர்களுடன் ஒன்று கூடிக்கலந்து, உங்களுக்கிடையில் ஓர் இறுதித் தீர்மானத்திற்கு ஒத்துவாருங்கள், பின்னர் தாமதமின்றி அதனை எனக்குத் தெரியப்படுத்துங்கள்.

10:72

فَإِن تَوَلَّيتُم فَما سَأَلتُكُم مِن أَجرٍ إِن أَجرِىَ إِلّا عَلَى اللَّهِ وَأُمِرتُ أَن أَكونَ مِنَ المُسلِمينَ

நீங்கள் திரும்பிச் சென்றுவிட்டால், பின்னர் நான் உங்களிடம் எந்தக் கூலியும் கேட்கவில்லை. எனது கூலி கடவுளிடமிருந்து வருகின்றது. சரணடைந்த ஒருவனாக இருக்க வேண்டுமென்று நான் கட்டளையிடப்பட்டுள்ளேன்.

10:73

فَكَذَّبوهُ فَنَجَّينٰهُ وَمَن مَعَهُ فِى الفُلكِ وَجَعَلنٰهُم خَلٰئِفَ وَأَغرَقنَا الَّذينَ كَذَّبوا بِـٔايٰتِنا فَانظُر كَيفَ كانَ عٰقِبَةُ المُنذَرينَ

அவர்கள் அவரை ஏற்கமறுத்தனர், அதன் விளைவாக, நாம் அவரையும் மரக்கலத்தில் அவரோடு சேர்ந்து கொண்டவர்களையும் காப்பாற்றினோம்; நாம் அவர்களை வாரிசுகளாக்கினோம். மேலும் நமது வெளிப்பாடுகளை ஏற்கமறுத்தவர்களை நாம் மூழ்கடித்தோம். விளைவுகளைக் கவனித்துப்பார்ப்பீராக; அவர்கள் எச்சரிக்கப்பட்டு இருந்தனர்.

10:74

ثُمَّ بَعَثنا مِن بَعدِهِ رُسُلًا إِلىٰ قَومِهِم فَجاءوهُم بِالبَيِّنٰتِ فَما كانوا لِيُؤمِنوا بِما كَذَّبوا بِهِ مِن قَبلُ كَذٰلِكَ نَطبَعُ عَلىٰ قُلوبِ المُعتَدينَ

அவருக்குப் பின்னர் தூதர்களை அவர்களுடைய சமூகத்தாரிடம் நாம் அனுப்பினோம், மேலும் அவர்கள் தெளிவான சான்றுகளை அவர்களிடம் காட்டினார்கள். ஆனால் முன்னரே அவர்கள் ஏற்கமறுத்துவிட்ட ஒன்றில் அவர்கள் நம்பிக்கை கொள்வதாக இல்லை. இவ்விதமாக நாம் வரம்புமீறுபவர்களின் இதயங்களில் முத்திரையிட்டுவிடுகின்றோம்.

10:75

ثُمَّ بَعَثنا مِن بَعدِهِم موسىٰ وَهٰرونَ إِلىٰ فِرعَونَ وَمَلَإِي۟هِ بِـٔايٰتِنا فَاستَكبَروا وَكانوا قَومًا مُجرِمينَ

அவர்களுக்குப் பின்னர் மோஸஸையும் ஆரோனையும் நமது சான்றுகளுடன், ஃபேரோவிடமும் அவனுடைய கூட்டத்தாரிடமும் அனுப்பினோம். ஆனால் அவர்கள் ஆணவம் கொண்டார்கள்; மேலும் வரம்புமீறும் மக்களாக இருந்தார்கள்.

10:76

فَلَمّا جاءَهُمُ الحَقُّ مِن عِندِنا قالوا إِنَّ هٰذا لَسِحرٌ مُبينٌ

நம்மிடமிருந்து சத்தியம் அவர்களுக்கு வந்த போது அவர்கள் கூறினர், இது தெளிவான மாயாஜாலமாகும்!

10:77

قالَ موسىٰ أَتَقولونَ لِلحَقِّ لَمّا جاءَكُم أَسِحرٌ هٰذا وَلا يُفلِحُ السّٰحِرونَ

மோஸஸ் கூறினார், சத்தியம் உங்களிடம் வரும் போது அதனைப் பற்றி இப்படித்தான் நீங்கள் வர்ணிப்பீர்களா? இதுவா மாயாஜாலம்? மந்திரவாதிகள் எவரும் எப்படி வெற்றி பெற முடியும்?

10:78

قالوا أَجِئتَنا لِتَلفِتَنا عَمّا وَجَدنا عَلَيهِ ءاباءَنا وَتَكونَ لَكُمَا الكِبرِياءُ فِى الأَرضِ وَما نَحنُ لَكُما بِمُؤمِنينَ

அவர்கள் கூறினர், எங்கள் பெற்றோர்கள் செய்ய நாங்கள் கண்டவற்றை விட்டு எங்களை வழி திருப்பவும், உங்களுக்கென முக்கியத்துவம் வாய்ந்த நிலைகளை அடைந்து கொள்ளவும் நீங்கள் வந்திருக்கின்றீர்களா? நாங்கள் ஒருபோதும் உங்களுடன் நம்பிக்கையாளர்களாகச் சேர்ந்து கொள்ள மாட்டோம்.

10:79

وَقالَ فِرعَونُ ائتونى بِكُلِّ سٰحِرٍ عَليمٍ

ஃபேரோ கூறினான் அனுபவமிக்க மந்திரவாதிகள் ஒவ்வொருவரையும் என்னிடம் கொண்டு வாருங்கள்.

10:80

فَلَمّا جاءَ السَّحَرَةُ قالَ لَهُم موسىٰ أَلقوا ما أَنتُم مُلقونَ

மந்திரவாதிகள் வந்தபோது, மோஸஸ் அவர்களிடம் கூறினார், நீங்கள் எறியப்போவது எதுவானாலும் எறியுங்கள்.

10:81

فَلَمّا أَلقَوا قالَ موسىٰ ما جِئتُم بِهِ السِّحرُ إِنَّ اللَّهَ سَيُبطِلُهُ إِنَّ اللَّهَ لا يُصلِحُ عَمَلَ المُفسِدينَ

அவர்கள் எறிந்தபோது, மோஸஸ் கூறினார், நீங்கள் வெளிப்படுத்தியிருப்பது மாயாஜாலமே, மேலும் கடவுள் அதனைத் தோல்வியடையச் செய்வார். வரம்புமீறுபவர்களின் காரியங்களுக்குக் கடவுள் ஆதரவளிப்பதில்லை.

10:82

وَيُحِقُّ اللَّهُ الحَقَّ بِكَلِمٰتِهِ وَلَو كَرِهَ المُجرِمونَ

குற்றவாளிகள் வெறுத்த போதிலும், கடவுள் தன் வார்த்தைகளைக் கொண்டு சத்தியத்தை ஸ்தாபிப்பார்.

10:83

فَما ءامَنَ لِموسىٰ إِلّا ذُرِّيَّةٌ مِن قَومِهِ عَلىٰ خَوفٍ مِن فِرعَونَ وَمَلَإِي۟هِم أَن يَفتِنَهُم وَإِنَّ فِرعَونَ لَعالٍ فِى الأَرضِ وَإِنَّهُ لَمِنَ المُسرِفينَ

ஃபேரோ மற்றும் அவனுடைய பிரதானிகளின் கொடுங்கோன்மைக்கு அஞ்சிக்கொண்டிருந்த சமயத்தில், மோஸஸுடன் நம்பிக்கை கொண்டவர்களாக, அவருடைய சமூகத்தாரில் சிலரைத் தவிர, எவரும் இல்லை. நிச்சயமாக, ஃபேரோ பூமியின் மீது மிகப்பெரும் ஆணவம் கொண்டவனாக, மேலும் மெய்யாகவே ஒரு கொடுங்கோலனாக இருந்தான்.

10:84

وَقالَ موسىٰ يٰقَومِ إِن كُنتُم ءامَنتُم بِاللَّهِ فَعَلَيهِ تَوَكَّلوا إِن كُنتُم مُسلِمينَ

மோஸஸ் கூறினார், என் சமூகத்தாரே, நீங்கள் மெய்யாகவே கடவுள் மீது நம்பிக்கை கொண்டிருந்தால், பின்னர் உங்களுடைய பொறுப்பை அவரிடம் ஒப்படையுங்கள், மெய்யாகவே நீங்கள் சரணடைந்தவர்களாக இருந்தால்.

10:85

فَقالوا عَلَى اللَّهِ تَوَكَّلنا رَبَّنا لا تَجعَلنا فِتنَةً لِلقَومِ الظّٰلِمينَ

அவர்கள் கூறினர், நாங்கள் கடவுள் மீது பொறுப்பேற்படுத்துகின்றோம். எங்கள் இரட்சகரே, அடக்குமுறை செய்யும் இம்மக்களின் வன்கொடுமைகளிலிருந்து எங்களைக் காப்பீராக.

10:86

وَنَجِّنا بِرَحمَتِكَ مِنَ القَومِ الكٰفِرينَ

நம்பமறுக்கும் மக்களிடமிருந்து, உம்முடைய கருணையால், எங்களை விடுதலை செய்வீராக.

10:87

وَأَوحَينا إِلىٰ موسىٰ وَأَخيهِ أَن تَبَوَّءا لِقَومِكُما بِمِصرَ بُيوتًا وَاجعَلوا بُيوتَكُم قِبلَةً وَأَقيمُوا الصَّلوٰةَ وَبَشِّرِ المُؤمِنينَ

நாம் மோஸஸுக்கும் அவருடைய சகோதரருக்கும் உள்ளுணர்வளித்தோம். தற்போதைக்கு எகிப்தில் உள்ள உங்களது வீடுகளைப் பராமரித்துக் கொண்டு, உங்கள் வீடுகளையே ஆலயங்களாக ஆக்கிக் கொள்ளுங்கள், மேலும் தொடர்புத் தொழுகைகளை (ஸலாத்) பேணிவாருங்கள். நம்பிக்கை கொண்டவர்களுக்கு நற்செய்தி வழங்குங்கள்.

10:88

وَقالَ موسىٰ رَبَّنا إِنَّكَ ءاتَيتَ فِرعَونَ وَمَلَأَهُ زينَةً وَأَموٰلًا فِى الحَيوٰةِ الدُّنيا رَبَّنا لِيُضِلّوا عَن سَبيلِكَ رَبَّنَا اطمِس عَلىٰ أَموٰلِهِم وَاشدُد عَلىٰ قُلوبِهِم فَلا يُؤمِنوا حَتّىٰ يَرَوُا العَذابَ الأَليمَ

மோஸஸ் கூறினார், எங்கள் இரட்சகரே, ஃபேரோவுக்கும் அவனுடைய பிரதானிகளுக்கும் இவ்வுலகில் சௌகரியத்தையும், வளங்களையும் நீர் வழங்கியிருக்கின்றீர். எங்கள் இரட்சகரே, அவர்கள் உமது பாதையிலிருந்து மற்றவர்களைத் துரத்துவதற்கு மட்டுமே அவற்றைப் பயன்படுத்துகின்றனர். எங்கள் இரட்சகரே, அவர்களுடைய வளங்களைத் துடைத்தெடுத்துவிடுவீராக, மேலும் வலிமிகுந்த அந்தத் தண்டனையை அவர்கள் காணும் வரை, நம்பிக்கை கொள்வதிலிருந்து அவர்களைத் தடுக்கும் வண்ணம் அவர்களுடைய இதயங்களைக் கடினமாக்கிவிடுவீராக.

10:89

قالَ قَد أُجيبَت دَعوَتُكُما فَاستَقيما وَلا تَتَّبِعانِّ سَبيلَ الَّذينَ لا يَعلَمونَ

அவர் கூறினார், (மோஸஸ் மற்றும் ஆரோனே), உங்களுடைய பிரார்த்தனை பதிலளிக்கப்பட்டுவிட்டது, எனவே உறுதியோடிருப்பீர்களாக, மேலும் அறியாதவர்களின் வழிகளைப் பின்பற்றாதீர்கள்.

10:90

وَجٰوَزنا بِبَنى إِسرٰءيلَ البَحرَ فَأَتبَعَهُم فِرعَونُ وَجُنودُهُ بَغيًا وَعَدوًا حَتّىٰ إِذا أَدرَكَهُ الغَرَقُ قالَ ءامَنتُ أَنَّهُ لا إِلٰهَ إِلَّا الَّذى ءامَنَت بِهِ بَنوا إِسرٰءيلَ وَأَنا۠ مِنَ المُسلِمينَ

நாம் இஸ்ரவேலர்களின் சந்ததியினரைக் கடலைக் கடக்கச் செய்து காப்பாற்றினோம். வீம்பாகவும், பாவகரமாகவும், ஃபேரோவும் அவனுடைய படையினரும் அவர்களைப் பின் தொடர்ந்தனர். மூழ்கிவிடுதல் அவனுக்கு ஒரு நிதர்சனமாக ஆனபோது, அவன் கூறினான், இஸ்ரவேலர்களின் சந்ததியினர் நம்பிக்கை கொண்டிருக்கும் அந்த ஒருவரைத் தவிர, தெய்வம் இல்லை என நான் நம்பிக்கை கொள்கின்றேன்; நான் சரணடைந்த ஒருவனாக இருக்கின்றேன்.

10:91

ءالـٰٔنَ وَقَد عَصَيتَ قَبلُ وَكُنتَ مِنَ المُفسِدينَ

மிகவும் தாமதம்!* ஏனெனில், ஏற்கெனவே நீ கலகம் செய்தாய், வரம்புமீறிய ஒருவனாக இருப்பதைத் தேர்ந்தெடுத்துக் கொண்டாய்.

10:92

فَاليَومَ نُنَجّيكَ بِبَدَنِكَ لِتَكونَ لِمَن خَلفَكَ ءايَةً وَإِنَّ كَثيرًا مِنَ النّاسِ عَن ءايٰتِنا لَغٰفِلونَ

இன்று, எதிர்காலத் தலைமுறையினருக்கு உன்னை ஒரு படிப்பினை ஆக்குவதற்காக, உனது சடலத்தை நாம் பத்திரப்படுத்துவோம்.* துரதிர்ஷ்டவசமாக, மனிதர்களில் அதிகமானோர் நமது அத்தாட்சிகளைப் பற்றி முற்றிலும் கவனமின்றி இருக்கின்றனர்.

10:93

وَلَقَد بَوَّأنا بَنى إِسرٰءيلَ مُبَوَّأَ صِدقٍ وَرَزَقنٰهُم مِنَ الطَّيِّبٰتِ فَمَا اختَلَفوا حَتّىٰ جاءَهُمُ العِلمُ إِنَّ رَبَّكَ يَقضى بَينَهُم يَومَ القِيٰمَةِ فيما كانوا فيهِ يَختَلِفونَ

இஸ்ரவேலர்களின் சந்ததியினருக்குக் கண்ணியமானதொரு அந்தஸ்தை நாம் கொடையளித்தோம், மேலும் நல்ல வாழ்வாதாரங்களைக் கொண்டு அவர்களை ஆசீர்வதித்தோம். இருப்பினும், இந்த அறிவு அவர்களிடம் வந்த போது அவர்கள் தர்க்கம் செய்தனர். அவர்கள் தர்க்கித்துக் கொண்ட ஒவ்வொன்றைக் குறித்தும் உயிர்த்தெழுப்பப்படும் நாள் அன்று உம்முடைய இரட்சகர் அவர்களுக்குத் தீர்ப்பு அளிப்பார்.

10:94

فَإِن كُنتَ فى شَكٍّ مِمّا أَنزَلنا إِلَيكَ فَسـَٔلِ الَّذينَ يَقرَءونَ الكِتٰبَ مِن قَبلِكَ لَقَد جاءَكَ الحَقُّ مِن رَبِّكَ فَلا تَكونَنَّ مِنَ المُمتَرينَ

உம்முடைய இரட்சகரிடமிருந்து உமக்கு வெளிப்படுத்தப்பட்டவற்றைக் குறித்து உமக்கு ஏதேனும் ஐயமிருக்குமாயின், முந்திய வேதத்தைப் படிப்பவர்களிடம் அப்போது கேட்பீராக. உண்மையில், உம்முடைய இரட்சகரிடமிருந்து சத்தியம் உமக்கு வந்துள்ளது. ஐயம் கொள்வோருடன் இருந்திடாதீர்

10:95

وَلا تَكونَنَّ مِنَ الَّذينَ كَذَّبوا بِـٔايٰتِ اللَّهِ فَتَكونَ مِنَ الخٰسِرينَ

அன்றியும், நஷ்டவாளிகளுடன் நீர் இல்லாதிருக்கும் பொருட்டு, கடவுளின் வெளிப்பாடுகளை ஏற்கமறுப்போருடன் நீர் சேர்ந்துவிட வேண்டாம்.

10:96

إِنَّ الَّذينَ حَقَّت عَلَيهِم كَلِمَتُ رَبِّكَ لا يُؤمِنونَ

நிச்சயமாக, உம்முடைய இரட்சகரிடமிருந்து ஓர் ஆணையின் மூலம் கண்டனம் செய்யப்பட்டவர்களால் நம்பிக்கை கொள்ள இயலாது.

10:97

وَلَو جاءَتهُم كُلُّ ءايَةٍ حَتّىٰ يَرَوُا العَذابَ الأَليمَ

வலிமிகுந்த அந்தத் தண்டனையை அவர்கள் காணும் வரை, எவ்விதமான சான்றை நீர் அவர்களிடம் காட்டினாலும் ஒரு பொருட்டல்ல, (அவர்களால் நம்பிக்கை கொள்ள இயலாது).

10:98

فَلَولا كانَت قَريَةٌ ءامَنَت فَنَفَعَها إيمٰنُها إِلّا قَومَ يونُسَ لَمّا ءامَنوا كَشَفنا عَنهُم عَذابَ الخِزىِ فِى الحَيوٰةِ الدُّنيا وَمَتَّعنٰهُم إِلىٰ حينٍ

நம்பிக்கை கொள்ளும் எந்தச் சமுதாயத்திற்கும் நம்பிக்கை கொண்டதற்கான வெகுமதி நிச்சயமாகக் கொடுக்கப்படும். உதாரணமாக, ஜோனாவின் சமூகத்தார்: அவர்கள் நம்பிக்கை கொண்டபோது, இவ்வுலகில் அவர்கள் அனுபவித்துக் கொண்டிருந்த இழிவான தண்டனையை நாம் அகற்றினோம், மேலும் அவர்களை நாம் வளமானவர்களாக ஆக்கினோம்.

10:99

وَلَو شاءَ رَبُّكَ لَـٔامَنَ مَن فِى الأَرضِ كُلُّهُم جَميعًا أَفَأَنتَ تُكرِهُ النّاسَ حَتّىٰ يَكونوا مُؤمِنينَ

உம்முடைய இரட்சகர் நாடியிருந்தால், பூமியில் உள்ள எல்லா மக்களும் நம்பிக்கை கொண்டுவிட்டிருப்பார்கள்.* நம்பிக்கையாளர்களாகுமாறு மக்களை நிர்ப்பந்திக்க நீர் விரும்புகின்றீரா?

10:100

وَما كانَ لِنَفسٍ أَن تُؤمِنَ إِلّا بِإِذنِ اللَّهِ وَيَجعَلُ الرِّجسَ عَلَى الَّذينَ لا يَعقِلونَ

கடவுள் நாட்டத்திற்கு ஒப்பவே தவிர எந்த ஆத்மாவும் நம்பிக்கை கொள்ள இயலாது. ஏனெனில், புரிந்து கொள்ள மறுப்பவர்கள் மீது அவர் ஒரு சாபத்தை வைத்துவிடுகின்றார்.

10:101

قُلِ انظُروا ماذا فِى السَّمٰوٰتِ وَالأَرضِ وَما تُغنِى الـٔايٰتُ وَالنُّذُرُ عَن قَومٍ لا يُؤمِنونَ

கூறும், வானங்களிலும் பூமியிலும் உள்ள அனைத்து அத்தாட்சிகளையும் கவனித்துப் பாருங்கள். எல்லாச் சான்றுகளும், மேலும் எல்லா எச்சரிக்கைகளும் நம்பமறுப்பதென்று முடிவெடுத்துவிட்ட மக்களுக்கு ஒருபோதும் உதவி செய்ய முடியாது.

10:102

فَهَل يَنتَظِرونَ إِلّا مِثلَ أَيّامِ الَّذينَ خَلَوا مِن قَبلِهِم قُل فَانتَظِروا إِنّى مَعَكُم مِنَ المُنتَظِرينَ

கடந்த காலங்களில் அவர்களைப் போன்றவர்களுக்கு நேர்ந்த விதியையன்றி மற்றொன்றை இவர்கள் எதிர்பார்க்க முடியுமா? கூறும், சற்று காத்திருங்கள், அன்றியும், உங்களோடு நானும் காத்திருக்கின்றேன்.

10:103

ثُمَّ نُنَجّى رُسُلَنا وَالَّذينَ ءامَنوا كَذٰلِكَ حَقًّا عَلَينا نُنجِ المُؤمِنينَ

நாம் இறுதியாக, நமது தூதர்களையும் நம்பிக்கை கொண்டவர்களையும் காப்பாற்றிவிடுகின்றோம். நம்பிக்கையாளர்களை நாம் காப்போம் என்பது நம்முடைய மாற்ற முடியாத சட்டமாகும்.

10:104

قُل يٰأَيُّهَا النّاسُ إِن كُنتُم فى شَكٍّ مِن دينى فَلا أَعبُدُ الَّذينَ تَعبُدونَ مِن دونِ اللَّهِ وَلٰكِن أَعبُدُ اللَّهَ الَّذى يَتَوَفّىٰكُم وَأُمِرتُ أَن أَكونَ مِنَ المُؤمِنينَ

கூறும், மனிதர்களே, எனது மார்க்கத்தில் நீங்கள் ஏதேனும் ஐயம் கொண்டிருப்பீர்களாயின், கடவுளுடன் நீங்கள் வழிபடுபவற்றை நான் வழிபடுவதில்லை. நான் கடவுளை மட்டுமே வழிபடுகின்றேன், உங்கள் வாழ்வுகளை முடிவுக்குக் கொண்டுவரும் அந்த ஒருவர். நம்பிக்கை கொண்ட ஒருவனாக இருக்க வேண்டுமென நான் கட்டளையிடப்பட்டுள்ளேன்.

10:105

وَأَن أَقِم وَجهَكَ لِلدّينِ حَنيفًا وَلا تَكونَنَّ مِنَ المُشرِكينَ

நான் கட்டளையிடப்பட்டுள்ளேன்: ஏகத்துவ மார்க்கத்திற்கு உம்மை அர்ப்பணித்துக்கொள்வீராக; போலித் தெய்வ வழிபாட்டை நீர் அனுஷ்டிக்க வேண்டாம்.

10:106

وَلا تَدعُ مِن دونِ اللَّهِ ما لا يَنفَعُكَ وَلا يَضُرُّكَ فَإِن فَعَلتَ فَإِنَّكَ إِذًا مِنَ الظّٰلِمينَ

உமக்குப் பயனளிக்கவோ அல்லது உமக்குத் தீங்கிழைக்கவோ சக்தியற்றவற்றைக் கடவுளுடன் நீர் வழிபட வேண்டாம். நீர் செய்தால், நீர் ஒரு வரம்புமீறியவராவீர்.

10:107

وَإِن يَمسَسكَ اللَّهُ بِضُرٍّ فَلا كاشِفَ لَهُ إِلّا هُوَ وَإِن يُرِدكَ بِخَيرٍ فَلا رادَّ لِفَضلِهِ يُصيبُ بِهِ مَن يَشاءُ مِن عِبادِهِ وَهُوَ الغَفورُ الرَّحيمُ

கடவுள் ஒரு கஷ்டத்தைக் கொண்டு உம்மைத் தீண்டுவாராயின், அவரைத் தவிர வேறெவரும் அதனை நிவர்த்திக்க இயலாது. மேலும் அவர் உம்மை ஆசீர்வதிக்கும் பட்சத்தில், எந்தச் சக்தியும் அவருடைய அருளைத் தடுத்துவிட முடியாது. தன் சேவகர்களில் இருந்து அவர் தேர்ந்தெடுத்தோர் மீது அதனை அவர் பொழிகின்றார். அவர்தான் மன்னிப்பவர், மிக்க கருணையாளர்.

10:108

قُل يٰأَيُّهَا النّاسُ قَد جاءَكُمُ الحَقُّ مِن رَبِّكُم فَمَنِ اهتَدىٰ فَإِنَّما يَهتَدى لِنَفسِهِ وَمَن ضَلَّ فَإِنَّما يَضِلُّ عَلَيها وَما أَنا۠ عَلَيكُم بِوَكيلٍ

பிரகடனப்படுத்துவீராக: மனிதர்களே, உங்கள் இரட்சகரிடமிருந்து சத்தியம் இதிலே உங்களுக்கு வந்துள்ளது. வழிகாட்டப்பட்டவர் எவராயினும் தன் சொந்த நலனுக்காகவே வழிகாட்டப்படுகின்றார். மேலும் வழிதவறிச் செல்பவர் எவராயினும் தனக்குக் கேடாகவே வழிதவறிச் செல்கின்றார். நான் உங்களுடைய பொறுப்பாளன் அல்லன்.

10:109

وَاتَّبِع ما يوحىٰ إِلَيكَ وَاصبِر حَتّىٰ يَحكُمَ اللَّهُ وَهُوَ خَيرُ الحٰكِمينَ

உமக்கு வெளிப்படுத்தப்பட்டவற்றைப் பின்பற்றுவீராக, கடவுள் தனது தீர்ப்பை வெளியிடும்வரை பொறுத்திருப்பீராக; அவரே மிகச் சிறந்த நீதிபதி.

‹ அத்தியாயம் 9அத்தியாயம் 11 ›