Kadavulmattum.orgகுர்ஆன் · அனைத்து 114 அத்தியாயங்கள்

9. பரா'அஹ் (இறுதி நிபந்தனை)

براءة · 127 வசனங்கள் · மதீனாவில் அருளப்பட்டது

செயலியில் வாசிக்க

‹ அத்தியாயம் 8அத்தியாயம் 10 ›
9:1

بَراءَةٌ مِنَ اللَّهِ وَرَسولِهِ إِلَى الَّذينَ عٰهَدتُم مِنَ المُشرِكينَ

உங்களுடன் ஓர் உடன்படிக்கையில் பங்கெடுத்துக்கொள்கின்ற போலித் தெய்வ வழிபாடு செய்வோருக்குக் கடவுள் மற்றும் அவருடைய தூதரிடமிருந்து ஓர் இறுதி நிபந்தனை இதில் வெளியிடப்படுகின்றது.

9:2

فَسيحوا فِى الأَرضِ أَربَعَةَ أَشهُرٍ وَاعلَموا أَنَّكُم غَيرُ مُعجِزِى اللَّهِ وَأَنَّ اللَّهَ مُخزِى الكٰفِرينَ

எனவே, சுதந்திரமாக நான்கு மாதங்கள் பூமியைச் சுற்றித்திரியுங்கள், அன்றி கடவுளிடமிருந்து நீங்கள் தப்பித்துவிட இயலாது என்பதையும், நம்பமறுப்பவர்களைக் கடவுள் இழிவுபடுத்துகின்றார் என்பதையும் அறிந்து கொள்ளுங்கள்.

9:3

وَأَذٰنٌ مِنَ اللَّهِ وَرَسولِهِ إِلَى النّاسِ يَومَ الحَجِّ الأَكبَرِ أَنَّ اللَّهَ بَرىءٌ مِنَ المُشرِكينَ وَرَسولُهُ فَإِن تُبتُم فَهُوَ خَيرٌ لَكُم وَإِن تَوَلَّيتُم فَاعلَموا أَنَّكُم غَيرُ مُعجِزِى اللَّهِ وَبَشِّرِ الَّذينَ كَفَروا بِعَذابٍ أَليمٍ

போலித் தெய்வ வழிபாடு செய்கின்றவர்களைக் கடவுள் கைவிட்டுவிட்டார், அத்துடன் அவருடைய தூதரும் அவ்வாறே செய்துவிட்டார் என்று புனித யாத்திரையின் மகத்தான நாள் அன்று மக்கள் அனைவருக்கும் கடவுள் மற்றும் அவருடைய தூதரிடமிருந்து ஒரு பிரகடனம் இதிலே வெளியிடப்படுகின்றது. எனவே, நீங்கள் பாவத்திற்கு வருந்தினால், அது உங்களுக்கு மேலானதாக இருக்கும். ஆனால் நீங்கள் திரும்பிச் சென்றுவிட்டால், பின்னர் கடவுளிடமிருந்து நீங்கள் ஒருபோதும் தப்பித்துவிட இயலாது என்பதை அறிந்து கொள்ளுங்கள். நம்பமறுப்பவர்களுக்கு வலிநிறைந்ததொரு தண்டனையை வாக்களிப்பீராக.

9:4

إِلَّا الَّذينَ عٰهَدتُم مِنَ المُشرِكينَ ثُمَّ لَم يَنقُصوكُم شَيـًٔا وَلَم يُظٰهِروا عَلَيكُم أَحَدًا فَأَتِمّوا إِلَيهِم عَهدَهُم إِلىٰ مُدَّتِهِم إِنَّ اللَّهَ يُحِبُّ المُتَّقينَ

போலித் தெய்வ வழிபாடு செய்பவர்கள் உங்களுடன் ஓர் உடன்படிக்கையில் கையொப்பமிட்டு அதனை மீறாமலும், அன்றி உங்களுக்கெதிராக மற்றவர்களுடன் ஒன்று சேர்ந்து கொள்ளாமலும் இருந்தால், அவர்களுடனான உங்கள் உடன்படிக்கையைக் காலாவதியாகும் தேதி வரை நீங்கள் பூர்த்தி செய்ய வேண்டும். கடவுள் நன்னெறியாளர்களை நேசிக்கின்றார்.

9:5

فَإِذَا انسَلَخَ الأَشهُرُ الحُرُمُ فَاقتُلُوا المُشرِكينَ حَيثُ وَجَدتُموهُم وَخُذوهُم وَاحصُروهُم وَاقعُدوا لَهُم كُلَّ مَرصَدٍ فَإِن تابوا وَأَقامُوا الصَّلوٰةَ وَءاتَوُا الزَّكوٰةَ فَخَلّوا سَبيلَهُم إِنَّ اللَّهَ غَفورٌ رَحيمٌ

புனித மாதங்கள் கடந்தவுடன் (மேலும் அவர்கள் சமாதானம் செய்து கொள்ள மறுத்தால்) போலித் தெய்வ வழிபாடு செய்பவர்களை நீங்கள் சண்டையில் எதிர்கொள்ளும் போது நீங்கள் அவர்களைக் கொல்லலாம், அவர்களைத் தண்டிக்கலாம், அவர்கள் மேற்கொள்ளும் ஒவ்வொரு நடவடிக்கையையும் எதிர்க்கலாம். அவர்கள் பாவத்திற்கு வருந்தி மேலும் (ஸலாத்) தொடர்புத் தொழுகைகளைக் கடைப்பிடித்து மேலும் (ஜகாத்) கடமையான தர்மத்தையும் கொடுத்தால், நீங்கள் அவர்களைப் போக விட்டுவிட வேண்டும். கடவுள் மன்னிப்பவர், மிக்க கருணையாளர்.

9:6

وَإِن أَحَدٌ مِنَ المُشرِكينَ استَجارَكَ فَأَجِرهُ حَتّىٰ يَسمَعَ كَلٰمَ اللَّهِ ثُمَّ أَبلِغهُ مَأمَنَهُ ذٰلِكَ بِأَنَّهُم قَومٌ لا يَعلَمونَ

போலித் தெய்வ வழிபாடு செய்பவர்களில் ஒருவர் பாதுகாப்புடன் கடந்து செல்லும் பாதையை உங்களிடம் வேண்டினால், அவருக்கு நீங்கள் பாதுகாப்புடன் கடந்து செல்லும் பாதையை வழங்க வேண்டும், இவ்விதமாக, அவர் கடவுளின் வார்த்தையைச் செவியேற்க முடியும், பின்னர் அவருடைய பாதுகாப்பான இடத்திற்குத் திருப்பி அவரை அனுப்பிவிடுங்கள். இது ஏனெனில் அவர்கள் அறியாத சமூகத்தினராய் இருக்கின்றனர்.

9:7

كَيفَ يَكونُ لِلمُشرِكينَ عَهدٌ عِندَ اللَّهِ وَعِندَ رَسولِهِ إِلَّا الَّذينَ عٰهَدتُم عِندَ المَسجِدِ الحَرامِ فَمَا استَقٰموا لَكُم فَاستَقيموا لَهُم إِنَّ اللَّهَ يُحِبُّ المُتَّقينَ

கடவுளிடமும் அவருடைய தூதரிடமும் எந்த வாக்குறுதியையும் போலித் தெய்வ வழிபாடு செய்பவர்கள் எப்படிக் கேட்க முடியும்? புனிதப் பள்ளியில் உங்களோடு ஒரு சமாதான உடன்படிக்கையில் கையொப்பமிட்டவர்கள் விதிவிலக்காவார்கள். இத்தகையதொரு உடன்படிக்கையை அவர்கள் மதித்து, மேலும் அதனைக் காப்பாற்றினால், நீங்களும் அதனை அவ்வாறே காப்பாற்ற வேண்டும். கடவுள் நல்லோரை நேசிக்கின்றார்.

9:8

كَيفَ وَإِن يَظهَروا عَلَيكُم لا يَرقُبوا فيكُم إِلًّا وَلا ذِمَّةً يُرضونَكُم بِأَفوٰهِهِم وَتَأبىٰ قُلوبُهُم وَأَكثَرُهُم فٰسِقونَ

வெற்றி கொள்ளும் ஒரு சந்தர்ப்பம் எப்பொழுதாவது அவர்களுக்குக் கிடைக்கும் பட்சத்தில், உங்களுக்கும் அவர்களுக்கும் இடையில் உள்ள சொந்தபந்தத்தின் எந்த உரிமைகளையோ, அல்லது எந்த உடன்படிக்கையையோ அவர்கள் ஒருபோதும் கடைப்பிடிக்காதபோது, எப்படி அவர்களால் (ஒரு வாக்குறுதியைக் கேட்க) முடியும். அவர்கள் உதட்டளவில் உங்களைச் சமாதானப்படுத்தினார்கள், அதே சமயம் அவர்களுடைய இதயங்களோ எதிர்ப்பில் இருந்தன. மேலும் அவர்களில் அதிகமானோர் தீயவர்கள் ஆவர்.

9:9

اشتَرَوا بِـٔايٰتِ اللَّهِ ثَمَنًا قَليلًا فَصَدّوا عَن سَبيلِهِ إِنَّهُم ساءَ ما كانوا يَعمَلونَ

அவர்கள் கடவுளின் வெளிப்பாடுகளை ஓர் அற்ப விலைக்கு வணிகம் செய்துவிட்டனர். அதன் பின்விளைவாக, மக்களை அவருடைய பாதையில் இருந்து துரத்தினர். அவர்கள் செய்தது உண்மையில் துக்ககரமானது!

9:10

لا يَرقُبونَ فى مُؤمِنٍ إِلًّا وَلا ذِمَّةً وَأُولٰئِكَ هُمُ المُعتَدونَ

அவர்கள் எந்த நம்பிக்கையாளரிடத்தும் சொந்தபந்தத்தின் எந்த உரிமைகளையும், ஒருபோதும் கடைப்பிடிப்பதில்லை, அன்றி அவர்களுடைய எந்த உடன்படிக்கைகளையும் அவர்கள் காப்பாற்றுவதுமில்லை; இவர்கள்தான் மெய்யாகவே வரம்புமீறியவர்கள் ஆவார்கள்.

9:11

فَإِن تابوا وَأَقامُوا الصَّلوٰةَ وَءاتَوُا الزَّكوٰةَ فَإِخوٰنُكُم فِى الدّينِ وَنُفَصِّلُ الـٔايٰتِ لِقَومٍ يَعلَمونَ

அவர்கள் பாவத்திற்கு வருந்தி மேலும் (ஸலாத்) தொடர்புத் தொழுகைகளைக் கடைப்பிடித்து, மேலும் (ஜகாத்) கடமையான தர்மத்தைக் கொடுத்து வந்தால், அப்போது அவர்கள் உங்களுடைய மார்க்க சகோதரர்கள் ஆவார்கள். அறிந்து கொண்ட மக்களுக்கு இவ்வாறு நாம் இந்த வெளிப்பாடுகளை விவரிக்கின்றோம்.

9:12

وَإِن نَكَثوا أَيمٰنَهُم مِن بَعدِ عَهدِهِم وَطَعَنوا فى دينِكُم فَقٰتِلوا أَئِمَّةَ الكُفرِ إِنَّهُم لا أَيمٰنَ لَهُم لَعَلَّهُم يَنتَهونَ

தங்களுடைய உடன்படிக்கைகளைக் காப்பதாக வாக்குறுதி செய்துவிட்டுப் பின்னர், தங்களுடைய சத்தியப்பிரமாணங்களை மீறியவர்களாக, உங்களுடைய மார்க்கத்தை அவர்கள் தாக்கினால், நம்பிக்கையற்றவர்களின் தலைவர்களுடன் நீங்கள் போரிடலாம் - அவர்களுடனான உங்களுடைய உடன்படிக்கைக்கு அதற்கு மேலும் நீங்கள் கட்டுப்பட்டவர்கள் இல்லை - அவர்கள் விலகிக் கொள்ளும் பொருட்டு.

9:13

أَلا تُقٰتِلونَ قَومًا نَكَثوا أَيمٰنَهُم وَهَمّوا بِإِخراجِ الرَّسولِ وَهُم بَدَءوكُم أَوَّلَ مَرَّةٍ أَتَخشَونَهُم فَاللَّهُ أَحَقُّ أَن تَخشَوهُ إِن كُنتُم مُؤمِنينَ

தங்கள் உடன்படிக்கைகளை மீறி, தூதரை ஊரை விட்டு வெளியேற்ற முயன்றதோடன்றி அவர்கள்தான் போரை முதலில் துவக்கியவர்கள், என்ற போதும் இம்மக்களுடன் நீங்கள் சண்டையிட மாட்டீர்களா? அவர்களுக்கு நீங்கள் பயப்படுகின்றீர்களா? நீங்கள் நம்பிக்கையாளர்களாக இருந்தால், நீங்கள் அஞ்ச வேண்டிய ஒருவர் கடவுள்தான்.

9:14

قٰتِلوهُم يُعَذِّبهُمُ اللَّهُ بِأَيديكُم وَيُخزِهِم وَيَنصُركُم عَلَيهِم وَيَشفِ صُدورَ قَومٍ مُؤمِنينَ

நீங்கள் அவர்களுடன் சண்டையிட வேண்டும், ஏனெனில் கடவுள் உங்கள் கரங்களால் அவர்களைத் தண்டிப்பார், அவர்களை இழிவுபடுத்துவார், அவர்கள் மேல் உங்களுக்கு வெற்றி வழங்குவார், மேலும் நம்பிக்கையாளர்களின் நெஞ்சங்களைக் குளிரச் செய்வார்.

9:15

وَيُذهِب غَيظَ قُلوبِهِم وَيَتوبُ اللَّهُ عَلىٰ مَن يَشاءُ وَاللَّهُ عَليمٌ حَكيمٌ

இன்னும் நம்பிக்கையாளர்களின் இதயங்களில் உள்ள கோபத்தையும் அவர் நீக்கிவிடுவார். தான் நாடியோரைக் கடவுள் மீட்டுக்கொள்கின்றார். கடவுள் எல்லாம் அறிந்தவர், ஞானம் மிகுந்தவர்.

9:16

أَم حَسِبتُم أَن تُترَكوا وَلَمّا يَعلَمِ اللَّهُ الَّذينَ جٰهَدوا مِنكُم وَلَم يَتَّخِذوا مِن دونِ اللَّهِ وَلا رَسولِهِ وَلَا المُؤمِنينَ وَليجَةً وَاللَّهُ خَبيرٌ بِما تَعمَلونَ

உங்களில் பாடுபடுகின்றவர்களையும், கடவுளின் விரோதிகளுடனோ, அல்லது அவருடைய தூதரின் விரோதிகளுடனோ, அல்லது நம்பிக்கையாளர்களின் விரோதிகளுடனோ தங்களை ஒருபோதும் கூட்டாக்கிக் கொள்ளாதவர்களையும், கடவுள் பிரித்தடையாளம் காட்டாமல் நீங்கள் தனித்துவிட்டுவிடப்படுவீர்கள் என்று நீங்கள் நினைத்துக் கொண்டீர்களா? நீங்கள் செய்கின்ற ஒவ்வொன்றைப் பற்றியும் கடவுள் முற்றிலும் நன்கறிந்திருக்கின்றார்.

9:17

ما كانَ لِلمُشرِكينَ أَن يَعمُروا مَسٰجِدَ اللَّهِ شٰهِدينَ عَلىٰ أَنفُسِهِم بِالكُفرِ أُولٰئِكَ حَبِطَت أَعمٰلُهُم وَفِى النّارِ هُم خٰلِدونَ

போலித் தெய்வ வழிபாடு செய்கின்றவர்கள் தங்களுடைய நம்பமறுத்தலை ஒப்புக்கொள்கின்ற நிலையில், கடவுளின் பள்ளிவாசல்களுக்கு அடிக்கடி வருவதற்கில்லை. இத்தகையவர்கள் தங்களுடைய காரியங்களைப் பயனற்றதாக்கிவிட்டார்கள், மேலும் அவர்கள் என்றென்றும் நரகத்தில் தங்கியிருப்பார்கள்.

9:18

إِنَّما يَعمُرُ مَسٰجِدَ اللَّهِ مَن ءامَنَ بِاللَّهِ وَاليَومِ الـٔاخِرِ وَأَقامَ الصَّلوٰةَ وَءاتَى الزَّكوٰةَ وَلَم يَخشَ إِلَّا اللَّهَ فَعَسىٰ أُولٰئِكَ أَن يَكونوا مِنَ المُهتَدينَ

கடவுளின் பள்ளிவாசல்களுக்கு அடிக்கடி வரக்கூடிய ஒரே மக்கள், கடவுள் மற்றும் இறுதி நாள் மீது நம்பிக்கை கொண்டு, மேலும் (ஸலாத்) தொடர்புத் தொழுகைகளைக் கடைப்பிடித்து, அத்துடன் (ஜகாத்) கடமையான தர்மத்தைக் கொடுத்து, அன்றி கடவுளைத் தவிர எதற்கும் அஞ்சாதவர்களேயாவர். இவர்கள் நிச்சயமாக வழிநடத்தப்பட்டவர்களில் இருப்பார்கள்.

9:19

أَجَعَلتُم سِقايَةَ الحاجِّ وَعِمارَةَ المَسجِدِ الحَرامِ كَمَن ءامَنَ بِاللَّهِ وَاليَومِ الـٔاخِرِ وَجٰهَدَ فى سَبيلِ اللَّهِ لا يَستَوۥنَ عِندَ اللَّهِ وَاللَّهُ لا يَهدِى القَومَ الظّٰلِمينَ

புனித யாத்திரீகர்களுக்குத் தண்ணீர் புகட்டுவதையும் புனிதப்பள்ளியின் மீது அக்கறை கொள்வதையும், கடவுள் மற்றும் இறுதி நாளின் மீது நம்பிக்கை கொண்டு கடவுளின் நிமித்தம் பாடுபடுவதற்குப் பகரமாகக் கருதிக்கொண்டுவிட்டீர்களா? கடவுளின் பார்வையில் அவை சமமானவையல்ல. தீயமக்களைக் கடவுள் வழிநடத்துவதில்லை.

9:20

الَّذينَ ءامَنوا وَهاجَروا وَجٰهَدوا فى سَبيلِ اللَّهِ بِأَموٰلِهِم وَأَنفُسِهِم أَعظَمُ دَرَجَةً عِندَ اللَّهِ وَأُولٰئِكَ هُمُ الفائِزونَ

நம்பிக்கை கொண்டு, மேலும் புலம் பெயர்ந்து, அத்துடன் கடவுளின் நிமித்தம் தங்களுடைய பணத்தையும் வாழ்வையும் கொண்டு பாடுபடுகின்றவர்கள் கடவுளின் பார்வையில் மிகவும் மகத்தான அந்தஸ்தில் உள்ளனர். இவர்கள்தான் வெற்றியாளர்கள்.

9:21

يُبَشِّرُهُم رَبُّهُم بِرَحمَةٍ مِنهُ وَرِضوٰنٍ وَجَنّٰتٍ لَهُم فيها نَعيمٌ مُقيمٌ

அவர்களுடைய இரட்சகர் அவர்களுக்கு நற்செய்தி தருகின்றார்: அவரிடமிருந்து கருணையும் அங்கீகாரமும், அத்துடன் என்றென்றும் நிலைத்திருக்கும் பேரானந்தத்தில் அவர்கள் களிப்புற்றிருக்கின்ற தோட்டங்களும்.

9:22

خٰلِدينَ فيها أَبَدًا إِنَّ اللَّهَ عِندَهُ أَجرٌ عَظيمٌ

நிரந்தரமாக அங்கே அவர்கள் தங்கியிருப்பார்கள். மகத்தான பிரதிபலனைக் கடவுள் தன் வசம் கொண்டுள்ளார்.

9:23

يٰأَيُّهَا الَّذينَ ءامَنوا لا تَتَّخِذوا ءاباءَكُم وَإِخوٰنَكُم أَولِياءَ إِنِ استَحَبُّوا الكُفرَ عَلَى الإيمٰنِ وَمَن يَتَوَلَّهُم مِنكُم فَأُولٰئِكَ هُمُ الظّٰلِمونَ

நம்பிக்கை கொண்டவர்களே உங்களைத்தான், உங்களுடைய பெற்றோர்கள் மற்றும் உடன்பிறந்தோருடனும் கூட, நம்பிக்கை கொள்ளுதலை விடவும் நம்பமறுத்தலை அவர்கள் விரும்புவார்களாயின், நீங்களாகவே கூட்டு வைத்துக்கொள்ளாதீர்கள். அவர்களுடன் தாங்களாகவே கூட்டு வைத்துக்கொள்கின்றவர்கள் வரம்புமீறிக்கொண்டு இருக்கின்றனர்.

9:24

قُل إِن كانَ ءاباؤُكُم وَأَبناؤُكُم وَإِخوٰنُكُم وَأَزوٰجُكُم وَعَشيرَتُكُم وَأَموٰلٌ اقتَرَفتُموها وَتِجٰرَةٌ تَخشَونَ كَسادَها وَمَسٰكِنُ تَرضَونَها أَحَبَّ إِلَيكُم مِنَ اللَّهِ وَرَسولِهِ وَجِهادٍ فى سَبيلِهِ فَتَرَبَّصوا حَتّىٰ يَأتِىَ اللَّهُ بِأَمرِهِ وَاللَّهُ لا يَهدِى القَومَ الفٰسِقينَ

பிரகடனிப்பீராக: உங்களுடைய பெற்றோர்கள், உங்கள் குழந்தைகள், உங்கள் உடன்பிறந்தோர், உங்களுடைய வாழ்க்கைத் துணைகள், உங்களுடைய குடும்பம், நீங்கள் சம்பாதித்துள்ள பணம், நீங்கள் கவலைப்படுகின்ற ஒரு வியாபாரம், மற்றும் நீங்கள் மிகவும் வாஞ்சையுடனிருக்கின்ற இல்லங்கள் ஆகியவை கடவுள் மற்றும் அவருடைய தூதர்,** மேலும் அவர் நிமித்தம் பாடுபடுதலை விடவும் உங்கள் நேசத்திற்குரியவையாக இருக்குமாயின், அப்போது கடவுள் தன் தீர்ப்பைக் கொண்டு வருகின்ற வரை சற்றே காத்திருங்கள். தீய சமூகத்தாரைக் கடவுள் வழிநடத்துவதில்லை.

9:25

لَقَد نَصَرَكُمُ اللَّهُ فى مَواطِنَ كَثيرَةٍ وَيَومَ حُنَينٍ إِذ أَعجَبَتكُم كَثرَتُكُم فَلَم تُغنِ عَنكُم شَيـًٔا وَضاقَت عَلَيكُمُ الأَرضُ بِما رَحُبَت ثُمَّ وَلَّيتُم مُدبِرينَ

பற்பல சூழ்நிலைகளில் கடவுள் உங்களுக்கு வெற்றியை அளித்துள்ளார். ஆனால் ஹீனைனுடைய தினத்தன்று, உங்களுடைய மாபெரும் எண்ணிக்கை குறித்து நீங்கள் மிகவும் பெருமை கொண்டவர்களானீர்கள். எனவே, அது உங்களுக்கு எவ்வகையிலும் உதவிடவில்லை, அத்துடன் விசாலமான இந்தப் பூமி, நீங்கள் புறங்காட்டித் திரும்பித் தப்பியோடும் அளவுக்கு, உங்களைச் சுற்றிலும் மிகவும் குறுகியதாக ஆகிவிட்டது.

9:26

ثُمَّ أَنزَلَ اللَّهُ سَكينَتَهُ عَلىٰ رَسولِهِ وَعَلَى المُؤمِنينَ وَأَنزَلَ جُنودًا لَم تَرَوها وَعَذَّبَ الَّذينَ كَفَروا وَذٰلِكَ جَزاءُ الكٰفِرينَ

பின்னர் கடவுள் தன் தூதர் மீதும் நம்பிக்கையாளர்கள் மீதும் திருப்தியை இறக்கி அனுப்பினார். அத்துடன் காணமுடியாப் படைவீரர்களையும் அவர் இறக்கி அனுப்பினார்; இவ்விதமாக நம்பமறுத்தவர்களை அவர் தண்டித்தார். நம்பமறுப்பவர்களுக்குரிய கூலி இதுவேயாகும்.

9:27

ثُمَّ يَتوبُ اللَّهُ مِن بَعدِ ذٰلِكَ عَلىٰ مَن يَشاءُ وَاللَّهُ غَفورٌ رَحيمٌ

இறுதியாக, தான் நாடுகின்ற எவரையும் கடவுள் மீட்டுக்கொள்கின்றார். கடவுள் மன்னிப்பவர், மிக்க கருணையாளர்.

9:28

يٰأَيُّهَا الَّذينَ ءامَنوا إِنَّمَا المُشرِكونَ نَجَسٌ فَلا يَقرَبُوا المَسجِدَ الحَرامَ بَعدَ عامِهِم هٰذا وَإِن خِفتُم عَيلَةً فَسَوفَ يُغنيكُمُ اللَّهُ مِن فَضلِهِ إِن شاءَ إِنَّ اللَّهَ عَليمٌ حَكيمٌ

நம்பிக்கை கொண்டோரே உங்களைத்தான், போலித் தெய்வ வழிபாடு செய்கின்றவர்கள் களங்கப்பட்டவர்களாக இருக்கின்றனர்; இந்த வருடத்திற்குப் பின் புனிதப்பள்ளியை நெருங்குவதற்கு அவர்கள் அனுமதிக்கப்படாதிருக்க வேண்டும். வருவாய் இழப்பை நீங்கள் அஞ்சுவீர்களாயின், கடவுள் தன்னுடைய நாட்டத்திற்கேற்ப, தன் வாழ்வாதாரங்களை உங்கள் மீது பொழிவார். கடவுள் சர்வமும் அறிந்தவர், ஞானம் மிகுந்தவர்.

9:29

قٰتِلُوا الَّذينَ لا يُؤمِنونَ بِاللَّهِ وَلا بِاليَومِ الـٔاخِرِ وَلا يُحَرِّمونَ ما حَرَّمَ اللَّهُ وَرَسولُهُ وَلا يَدينونَ دينَ الحَقِّ مِنَ الَّذينَ أوتُوا الكِتٰبَ حَتّىٰ يُعطُوا الجِزيَةَ عَن يَدٍ وَهُم صٰغِرونَ

கடவுள் மீதோ, அன்றி இறுதி நாளின் மீதோ நம்பிக்கை கொள்ளாதவர்கள், அன்றியும் கடவுளும் அவருடைய தூதரும் தடுத்துவிட்டவற்றைத் தடுத்துக்கொள்ளாதவர்கள், அன்றியும் சத்திய மார்க்கத்தின் படி வாழாதவர்கள் - வேதத்தைப் பெற்றுக் கொண்டவர்களில் - ஆகியோருக்கெதிராக நீங்கள் திருப்பிச் சண்டையிடுதல் வேண்டும், விருப்பத்துடனோ அல்லது விருப்பமின்றியோ, அவர்கள் உரிய வரியைச் செலுத்தும் வரை.

9:30

وَقالَتِ اليَهودُ عُزَيرٌ ابنُ اللَّهِ وَقالَتِ النَّصٰرَى المَسيحُ ابنُ اللَّهِ ذٰلِكَ قَولُهُم بِأَفوٰهِهِم يُضٰهِـٔونَ قَولَ الَّذينَ كَفَروا مِن قَبلُ قٰتَلَهُمُ اللَّهُ أَنّىٰ يُؤفَكونَ

யூதர்கள் கூறினர், எஸ்ரா கடவுளின் மகனாவார், அதே சமயம் கிறிஸ்துவர்கள் கூறினர் ஜீஸஸ் கடவுளின் மகனாவார்! இவை அவர்களுடைய வாய்களால் உதிர்க்கப்பட்ட இறைநிந்தனைகளேயாகும். இவ்விதமாக அவர்கள் கடந்த காலத்தில் நம்பமறுத்தவர்களுடைய இறை நிந்தனைகளுக்கு ஈடு செய்கின்றனர். கடவுள் அவர்களைக் கண்டனம் செய்கின்றார். அவர்கள் நிச்சயமாக விலகிச் சென்றுவிட்டனர்.

9:31

اتَّخَذوا أَحبارَهُم وَرُهبٰنَهُم أَربابًا مِن دونِ اللَّهِ وَالمَسيحَ ابنَ مَريَمَ وَما أُمِروا إِلّا لِيَعبُدوا إِلٰهًا وٰحِدًا لا إِلٰهَ إِلّا هُوَ سُبحٰنَهُ عَمّا يُشرِكونَ

கடவுளுக்குப் பதிலாக, தங்களுடைய மார்க்கத் தலைவர்களையும் அறிஞர்களையும் எஜமானர்களாக* அவர்கள் அமைத்துக் கொண்டனர். மற்றவர்கள் மேரியின் மகனான, ஜீஸஸுக்குத் தெய்வீகத் தன்மையைச் சுமத்தினர். அவர்கள் அனைவரும் ஓர் இறைவனை மட்டுமே வழிபடக் கட்டளையிடப்பட்டிருந்தனர். அவரைத் தவிர இறைவன் இல்லை. எந்தப் பங்குதாரர்களைக் கொண்டிருப்பதற்கும் மிகவும் மேலாக, அவர் துதிப்பிற்குரியவர்.

9:32

يُريدونَ أَن يُطفِـٔوا نورَ اللَّهِ بِأَفوٰهِهِم وَيَأبَى اللَّهُ إِلّا أَن يُتِمَّ نورَهُ وَلَو كَرِهَ الكٰفِرونَ

அவர்கள் கடவுளின் ஒளியினைத் தங்களுடைய வாய்களால் அணைத்துவிட விரும்புகின்றனர், ஆனால் நம்பமறுப்பவர்கள் வெறுத்த போதிலும், கடவுள் தன்னுடைய ஒளியினைப் பூரணப்படுத்துவதில் உறுதியுடனிருக்கின்றார்.

9:33

هُوَ الَّذى أَرسَلَ رَسولَهُ بِالهُدىٰ وَدينِ الحَقِّ لِيُظهِرَهُ عَلَى الدّينِ كُلِّهِ وَلَو كَرِهَ المُشرِكونَ

அவர்தான் வழிகாட்டல் மற்றும் சத்திய மார்க்கத்தைக் கொண்டு தன் தூதரை* அனுப்பியவர், மேலும் போலித் தெய்வ வழிபாடு செய்கின்றவர்கள் வெறுத்த போதிலும், அனைத்து மார்க்கங்களுக்கும் மேலான ஆதிக்கமுள்ளதாக அதனை அவர் ஆக்குவார்.

9:34

يٰأَيُّهَا الَّذينَ ءامَنوا إِنَّ كَثيرًا مِنَ الأَحبارِ وَالرُّهبانِ لَيَأكُلونَ أَموٰلَ النّاسِ بِالبٰطِلِ وَيَصُدّونَ عَن سَبيلِ اللَّهِ وَالَّذينَ يَكنِزونَ الذَّهَبَ وَالفِضَّةَ وَلا يُنفِقونَها فى سَبيلِ اللَّهِ فَبَشِّرهُم بِعَذابٍ أَليمٍ

நம்பிக்கை கொண்டோரே உங்களைத்தான், மார்க்கத் தலைவர்கள் மற்றும் போதகர்கள் பலர் மனிதர்களுடைய பணத்தைத் தவறான முறையில் உட்கொள்கின்றனர், மேலும் கடவுளின் பாதையிலிருந்து விரட்டுகின்றனர். எவர்கள் தங்கத்தையும் வெள்ளியையும் பதுக்கிவைத்துக் கொண்டு, கடவுளின் நிமித்தம் அதனைச் செலவிடாதிருக்கின்றனரோ, அவர்களுக்கு வலி நிறைந்ததொரு தண்டனையை வாக்களிப்பீராக.

9:35

يَومَ يُحمىٰ عَلَيها فى نارِ جَهَنَّمَ فَتُكوىٰ بِها جِباهُهُم وَجُنوبُهُم وَظُهورُهُم هٰذا ما كَنَزتُم لِأَنفُسِكُم فَذوقوا ما كُنتُم تَكنِزونَ

அவர்களுடைய தங்கமும் வெள்ளியும் நரக நெருப்பில் சூடாக்கப்பட்டு, பின்னர் அவர்களுடைய நெற்றிகளிலும், அவர்களுடைய விலாப்புறங்களிலும், அவர்களுடைய முதுகுகளிலும் சூடு போடப் பயன்படுத்தப்படுகின்ற அந்நாள் வரும்: இதுதான் உங்களுக்காக நீங்கள் பதுக்கி வைத்தது, எனவே நீங்கள் பதுக்கி வைத்தவற்றைச் சுவையுங்கள்.

9:36

إِنَّ عِدَّةَ الشُّهورِ عِندَ اللَّهِ اثنا عَشَرَ شَهرًا فى كِتٰبِ اللَّهِ يَومَ خَلَقَ السَّمٰوٰتِ وَالأَرضَ مِنها أَربَعَةٌ حُرُمٌ ذٰلِكَ الدّينُ القَيِّمُ فَلا تَظلِموا فيهِنَّ أَنفُسَكُم وَقٰتِلُوا المُشرِكينَ كافَّةً كَما يُقٰتِلونَكُم كافَّةً وَاعلَموا أَنَّ اللَّهَ مَعَ المُتَّقينَ

கடவுளைப் பொறுத்த அளவில், மாதங்களின் எண்ணிக்கையானது, பன்னிரண்டு* ஆகும். வானங்களையும் பூமியையும் அவர் படைத்த நாள் முதல், இதுவே கடவுளின் விதிமுறையாக இருந்து வந்துள்ளது. அவற்றில் நான்கு புனிதமானவையாகும். இதுவே பூரணமான மார்க்கமாகும்; புனித மாதங்களின் போது (சண்டையிடுவதன் மூலம்) உங்களுடைய ஆத்மாக்களுக்கு நீங்கள் அநீதமிழைத்துக்கொள்ள வேண்டாம். ஆயினும், உங்களுக்கெதிராக அவர்கள் முழுமையான போரைப் பிரகடனப்படுத்தினால், (புனித மாதங்களின் போது கூட), போலித் தெய்வ வழிபாடு செய்பவர்களுக்கு எதிராக முழுமையான போரை நீங்கள் பிரகடனப்படுத்தலாம், மேலும் கடவுள் நன்னெறியாளர்களின் பக்கம் இருக்கின்றார் என்பதை அறிந்து கொள்ளுங்கள்.

9:37

إِنَّمَا النَّسىءُ زِيادَةٌ فِى الكُفرِ يُضَلُّ بِهِ الَّذينَ كَفَروا يُحِلّونَهُ عامًا وَيُحَرِّمونَهُ عامًا لِيُواطِـٔوا عِدَّةَ ما حَرَّمَ اللَّهُ فَيُحِلّوا ما حَرَّمَ اللَّهُ زُيِّنَ لَهُم سوءُ أَعمٰلِهِم وَاللَّهُ لا يَهدِى القَومَ الكٰفِرينَ

புனித மாதங்களை மாற்றியமைத்துக்கொள்ளுதல் மிதமிஞ்சிய நம்பமறுப்பின் ஓர் அடையாளமேயாகும்; நம்பமறுத்தவர்களின் வழிதவறுதலை அது அதிகரிக்கின்றது. கடவுளால் புனிதப்படுத்தப்பட்டுள்ள மாதங்களின் எண்ணிக்கையைத் தக்கவைத்துக்கொள்கின்ற அதே சமயம், புனித மாதங்களையும் வாடிக்கையான மாதங்களையும் அவர்கள் மாற்றியமைத்துக்கொள்கின்றனர். இவ்விதமாக அவர்கள் கடவுள் புனிதப்படுத்தியவற்றை அவமரியாதை செய்கின்றனர். அவர்களுடைய தீய காரியங்கள் அவர்களுடைய கண்களுக்கு அலங்காரமாக்கப்பட்டுள்ளன. நம்பமறுக்கின்ற சமூகத்தாரைக் கடவுள் வழிநடத்துவதில்லை.

9:38

يٰأَيُّهَا الَّذينَ ءامَنوا ما لَكُم إِذا قيلَ لَكُمُ انفِروا فى سَبيلِ اللَّهِ اثّاقَلتُم إِلَى الأَرضِ أَرَضيتُم بِالحَيوٰةِ الدُّنيا مِنَ الـٔاخِرَةِ فَما مَتٰعُ الحَيوٰةِ الدُّنيا فِى الـٔاخِرَةِ إِلّا قَليلٌ

நம்பிக்கை கொண்டோரே உங்களைத்தான், கடவுளின் நிமித்தம் தயாராகுங்கள், என்று உங்களிடம் கூறப்படுகையில், ஏன் நீங்கள் பூமியுடன் அழுத்தமாக ஒட்டிக் கொள்கின்றீர்கள்? மறுவுலகத்தின் இடத்தில் இந்த உலகாதாய வாழ்வை நீங்கள் தேர்ந்தெடுத்துக் கொண்டுவிட்டீர்களா? இந்த உலகத்தின் பொருட்களானவை, மறுவுலகத்துடன் ஒப்பிடப்படுகின்ற போது ஒன்றுமற்றவையாகவே உள்ளன.

9:39

إِلّا تَنفِروا يُعَذِّبكُم عَذابًا أَليمًا وَيَستَبدِل قَومًا غَيرَكُم وَلا تَضُرّوهُ شَيـًٔا وَاللَّهُ عَلىٰ كُلِّ شَىءٍ قَديرٌ

நீங்கள் போருக்குத் தயாரானாலேயன்றி, வலி நிறைந்ததொரு தண்டனைக்கு உங்களை அவர் உட்படுத்துவார், அத்துடன் உங்களுடைய இடத்தில் வேறு மக்களை அவர் மாற்றியமைத்துவிடுவார்; நீங்கள் ஒருபோதும் அவருக்குச் சிறிதளவும் தீங்கிழைத்திட இயலாது. கடவுள் சர்வசக்தியுடையவர்.

9:40

إِلّا تَنصُروهُ فَقَد نَصَرَهُ اللَّهُ إِذ أَخرَجَهُ الَّذينَ كَفَروا ثانِىَ اثنَينِ إِذ هُما فِى الغارِ إِذ يَقولُ لِصٰحِبِهِ لا تَحزَن إِنَّ اللَّهَ مَعَنا فَأَنزَلَ اللَّهُ سَكينَتَهُ عَلَيهِ وَأَيَّدَهُ بِجُنودٍ لَم تَرَوها وَجَعَلَ كَلِمَةَ الَّذينَ كَفَرُوا السُّفلىٰ وَكَلِمَةُ اللَّهِ هِىَ العُليا وَاللَّهُ عَزيزٌ حَكيمٌ

(தூதராகிய) அவருக்கு நீங்கள் ஆதரவளிக்கத் தவறினால், கடவுள் ஏற்கெனவே அவருக்கு ஆதரவளித்துவிட்டார். எவ்வாறெனில், நம்பமறுப்பவர்கள் அவரைத் துரத்திய போது, குகையினுள் இருவரில் ஒருவராக அவர் இருந்தபொழுது, அவர் தன் தோழரிடம் கூறினார், கவலை கொள்ளாதீர்; கடவுள் நம்முடன் இருக்கின்றார். பின்னர் கடவுள் திருப்தியையும் பாதுகாப்பையும் அவர் மீது இறக்கி அனுப்பினார், அத்துடன் கண்களுக்குத் தென்படாத படைவீரர்களைக் கொண்டு அவருக்கு ஆதரவளித்தார். நம்பமறுப்பவர்களின் வார்த்தையை அவர் மிகவும் கீழானதாக்கினார். கடவுளின் வார்த்தைகள் மேலதிகாரத்துடன் அரசாள்கின்றது. கடவுள் எல்லாம் வல்லவர், ஞானம் மிகுந்தவர்.

9:41

انفِروا خِفافًا وَثِقالًا وَجٰهِدوا بِأَموٰلِكُم وَأَنفُسِكُم فى سَبيلِ اللَّهِ ذٰلِكُم خَيرٌ لَكُم إِن كُنتُم تَعلَمونَ

இலேசானதோ அல்லது கனமானதோ நீங்கள் உவப்புடன் போருக்குத் தயாராக வேண்டும், மேலும் உங்களுடைய பணம் மற்றும் உங்களுடைய வாழ்வைக் கொண்டு கடவுளின் நிமித்தம் பாடுபடுங்கள். நீங்கள் மட்டும் அறிந்திருந்தால், இதுவே உங்களுக்கு மேலானதாகும்.

9:42

لَو كانَ عَرَضًا قَريبًا وَسَفَرًا قاصِدًا لَاتَّبَعوكَ وَلٰكِن بَعُدَت عَلَيهِمُ الشُّقَّةُ وَسَيَحلِفونَ بِاللَّهِ لَوِ استَطَعنا لَخَرَجنا مَعَكُم يُهلِكونَ أَنفُسَهُم وَاللَّهُ يَعلَمُ إِنَّهُم لَكٰذِبونَ

விரைவானதொரு பொருள் சார்ந்த இலாபமும், குறுகியதொரு பயணமுமாக அது இருந்திருந்தால், அவர்கள் உம்மைப் பின்பற்றியிருப்பார்கள். ஆனால் பாடுபடுதலானது அவர்களுக்குச் சற்றே மிகவும் அதிகமானதாக இருக்கின்றது. அவர்கள் கடவுள் மீது சத்தியமிடுவார்கள்: எங்களால் இயன்றிருந்தால், நாங்கள் உங்களுடன் போருக்குப் புறப்பட்டிருப்போம். இவ்விதமாக அவர்கள் தங்களுக்கே தீங்கிழைத்துக்கொள்கின்றனர், மேலும் அவர்கள் பொய்யர்களாக உள்ளனர் என்பதைக் கடவுள் அறிகின்றார்.

9:43

عَفَا اللَّهُ عَنكَ لِمَ أَذِنتَ لَهُم حَتّىٰ يَتَبَيَّنَ لَكَ الَّذينَ صَدَقوا وَتَعلَمَ الكٰذِبينَ

கடவுள் உம்மைப் பிழைபொறுத்துவிட்டார்: பொய்யர்களில் இருந்து உண்மையாளர்களை நீர் பிரித்தடையாளம் காண இயலும் முன்னர் (பின்னால் தங்கிக் கொள்ள) அவர்களுக்கு ஏன் நீர் அனுமதி கொடுத்தீர்?

9:44

لا يَستَـٔذِنُكَ الَّذينَ يُؤمِنونَ بِاللَّهِ وَاليَومِ الـٔاخِرِ أَن يُجٰهِدوا بِأَموٰلِهِم وَأَنفُسِهِم وَاللَّهُ عَليمٌ بِالمُتَّقينَ

மெய்யாகவே கடவுள் மற்றும் இறுதி நாளின் மீது நம்பிக்கை கொண்டவர்கள் தங்களுடைய பணம் மற்றும் வாழ்வுகளைக் கொண்டு பாடுபடுவதற்குரிய வாய்ப்பைத் தவிர்த்துக்கொள்ள உம்மிடம் அனுமதி கேட்க மாட்டார்கள். நன்னெறியாளர்களைப் பற்றிக் கடவுள் முற்றிலும் அறிந்திருக்கின்றார்.

9:45

إِنَّما يَستَـٔذِنُكَ الَّذينَ لا يُؤمِنونَ بِاللَّهِ وَاليَومِ الـٔاخِرِ وَارتابَت قُلوبُهُم فَهُم فى رَيبِهِم يَتَرَدَّدونَ

விலக்களிக்கப்பட விரும்புகின்ற ஒரே மக்கள் எவரென்றால் கடவுள் மற்றும் இறுதி நாளின் மீது உண்மையாக நம்பிக்கை கொள்ளாதவர்களேயாவர். அவர்களுடைய இதயங்கள் சந்தேகம் நிரம்பியவையாக இருக்கின்றன, மேலும் அவர்களுடைய சந்தேகங்களே அவர்கள் தடுமாறக் காரணமாகின்றன.

9:46

وَلَو أَرادُوا الخُروجَ لَأَعَدّوا لَهُ عُدَّةً وَلٰكِن كَرِهَ اللَّهُ انبِعاثَهُم فَثَبَّطَهُم وَقيلَ اقعُدوا مَعَ القٰعِدينَ

மெய்யாகவே போருக்குப் புறப்பட அவர்கள் விரும்பியிருந்தால், அதற்காக அவர்கள் முழுமையாகத் தயார் செய்து கொண்டு இருந்திருப்பார்கள். ஆனால் கடவுள் அவர்களுடைய பங்களிப்பை விரும்பவில்லை, எனவே அவர்களை அவர் ஊக்கம் குன்றச் செய்தார்; அவர்கள் கூறப்பட்டார்கள், பின்னால் தங்கியிருப்பவர்களுடன் பின்னால் தங்கியிருங்கள்.

9:47

لَو خَرَجوا فيكُم ما زادوكُم إِلّا خَبالًا وَلَأَوضَعوا خِلٰلَكُم يَبغونَكُمُ الفِتنَةَ وَفيكُم سَمّٰعونَ لَهُم وَاللَّهُ عَليمٌ بِالظّٰلِمينَ

அவர்கள் உங்களுடன் போருக்குப் புறப்பட்டிருந்தால், அவர்கள் குழப்பத்தை உண்டாக்கிவிட்டிருப்பார்கள், மேலும் உங்களுக்கிடையில் சச்சரவுகளுக்கும் பிளவுகளுக்கும் காரணமாகி இருப்பார்கள். உங்களில் சிலர் அவர்களுக்குச் செவிசாய்க்கக் கூடியவர்களாகவே இருந்தனர். வரம்புமீறுகின்றவர்களைப் பற்றிக் கடவுள் முற்றிலும் அறிந்திருக்கின்றார்.

9:48

لَقَدِ ابتَغَوُا الفِتنَةَ مِن قَبلُ وَقَلَّبوا لَكَ الأُمورَ حَتّىٰ جاءَ الحَقُّ وَظَهَرَ أَمرُ اللَّهِ وَهُم كٰرِهونَ

கடந்த காலத்தில் உங்களுக்கிடையில் குழப்பத்தை அவர்கள் உண்டாக்க முயன்றார்கள், மேலும் உங்களுடைய விவகாரங்களைப் புரட்டியும் விட்டார்கள். எப்படியிருப்பினும், இறுதியில் சத்தியம் மிகைக்கின்றது, மேலும் அவர்கள் வெறுத்தாலும் கடவுளின் திட்டம் நிறைவேற்றப்படுகின்றது.

9:49

وَمِنهُم مَن يَقولُ ائذَن لى وَلا تَفتِنّى أَلا فِى الفِتنَةِ سَقَطوا وَإِنَّ جَهَنَّمَ لَمُحيطَةٌ بِالكٰفِرينَ

அவர்களில் சிலர் கூறக்கூடும், (பின்னால் தங்கிக் கொள்ள) எனக்கு அனுமதி தாருங்கள்; இத்தகையதொரு கஷ்டத்தை என் மீது சுமத்தாதீர்கள். உண்மையில், இவ்விதமாக அவர்கள் பயங்கரமானதொரு கஷ்டத்திற்கு உள்ளாகிக் கொண்டார்கள்; நம்பமறுப்பவர்களை நரகம் சூழ்ந்து கொண்டுள்ளது.

9:50

إِن تُصِبكَ حَسَنَةٌ تَسُؤهُم وَإِن تُصِبكَ مُصيبَةٌ يَقولوا قَد أَخَذنا أَمرَنا مِن قَبلُ وَيَتَوَلَّوا وَهُم فَرِحونَ

உமக்கு ஏதேனும் நல்லது நிகழ்ந்தால், அவர்கள் புண்படுகின்றார்கள், ஆனால் உமக்கு ஒரு துன்பம் நேரிட்டால், களிப்புற்றவாறு திரும்பிச் சென்றவர்களாக, அவர்கள் கூறுகின்றனர், நாங்கள்தான் அவ்வாறு சொன்னோமே.

9:51

قُل لَن يُصيبَنا إِلّا ما كَتَبَ اللَّهُ لَنا هُوَ مَولىٰنا وَعَلَى اللَّهِ فَليَتَوَكَّلِ المُؤمِنونَ

கூறுவீராக, கடவுள் எங்களுக்கென்று விதித்துள்ளவற்றைத் தவிர, எந்த ஒன்றும் எங்களுக்கு நேரிடாது. அவரே எங்களுடைய இரட்சகரும் அதிபதியுமாக இருக்கின்றார். நம்பிக்கையாளர்கள் கடவுள் மீது பொறுப்பேற்படுத்த வேண்டும்.

9:52

قُل هَل تَرَبَّصونَ بِنا إِلّا إِحدَى الحُسنَيَينِ وَنَحنُ نَتَرَبَّصُ بِكُم أَن يُصيبَكُمُ اللَّهُ بِعَذابٍ مِن عِندِهِ أَو بِأَيدينا فَتَرَبَّصوا إِنّا مَعَكُم مُتَرَبِّصونَ

கூறுவீராக, (வெற்றி அல்லது வீரமரணமாகிய) இரண்டு நல்ல விஷயங்களில் ஒன்றை மட்டுமே எங்களுக்கு எதிர்பார்க்க உங்களால் இயலும், அதே சமயம் நாங்கள் உங்களுக்குக் கடவுளிடமிருந்து கண்டனத்தையும் அத்துடன் அவரிடமிருந்தோ அல்லது எங்களுடைய கரங்களினாலோ தண்டனையையுமே எதிர்பார்க்கின்றோம். எனவே, காத்திருங்கள், நாங்களும் உங்களுடன் சேர்ந்து காத்துக் கொண்டிருப்போம்.

9:53

قُل أَنفِقوا طَوعًا أَو كَرهًا لَن يُتَقَبَّلَ مِنكُم إِنَّكُم كُنتُم قَومًا فٰسِقينَ

கூறுவீராக, விருப்பத்துடனோ அல்லது விருப்பமின்றியோ, செலவிடுங்கள். எதுவும் உங்களிடமிருந்து ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது, ஏனெனில் நீங்கள் பாவிகளான சமுதாயமாக இருக்கின்றீர்கள்.

9:54

وَما مَنَعَهُم أَن تُقبَلَ مِنهُم نَفَقٰتُهُم إِلّا أَنَّهُم كَفَروا بِاللَّهِ وَبِرَسولِهِ وَلا يَأتونَ الصَّلوٰةَ إِلّا وَهُم كُسالىٰ وَلا يُنفِقونَ إِلّا وَهُم كٰرِهونَ

அவர்களுடைய செலவிடுதல் ஏற்றுக்கொள்ளப்படுவதைத் தடுத்தது என்னவென்றால் அவர்கள் கடவுள் மற்றும் அவருடைய தூதர் மீது நம்பிக்கை கொள்ள மறுத்துவிட்டனர் என்பதேயாகும், மேலும் (ஸலாத்)* தொடர்புத் தொழுகைகளை அவர்கள் கடைப்பிடித்த போது, அவர்கள் சோம்பலுடனே அவற்றைக் கடைப்பிடித்தார்கள், மேலும் தர்மத்திற்கென அவர்கள் கொடுத்த போது, மனமின்றியே அவர்கள் அவ்வாறு செய்தார்கள்.

9:55

فَلا تُعجِبكَ أَموٰلُهُم وَلا أَولٰدُهُم إِنَّما يُريدُ اللَّهُ لِيُعَذِّبَهُم بِها فِى الحَيوٰةِ الدُّنيا وَتَزهَقَ أَنفُسُهُم وَهُم كٰفِرونَ

அவர்களுடைய பணத்தாலோ அல்லது அவர்களுடைய பிள்ளைகளாலோ மனங்கவரப்பட்டுவிடாதீர்கள். இந்த வாழ்வில் அவர்களுடைய தண்டனையின் மூலாதாரங்களாகவும், அத்துடன் (அவர்கள் மரணிக்கின்ற போது) நம்பமறுப்பவர்களாக அவர்கள் இருக்கின்ற சமயம் அவர்களுடைய ஆத்மாக்கள் பிரிந்து செல்வதற்காகவும் கடவுள் அவற்றைக் காரணமாக்குகின்றார்.

9:56

وَيَحلِفونَ بِاللَّهِ إِنَّهُم لَمِنكُم وَما هُم مِنكُم وَلٰكِنَّهُم قَومٌ يَفرَقونَ

உங்களுடன் சேராதவர்களாக அவர்கள் உள்ள அதே சமயம், அவர்கள் உங்களுடன் சேர்ந்தவர்கள் என்று அவர்கள் கடவுள் மீது ஆணையிடுகின்றனர்; அவர்கள் பிளவுண்டாக்கும் கூட்டத்தினராக உள்ளனர்.

9:57

لَو يَجِدونَ مَلجَـًٔا أَو مَغٰرٰتٍ أَو مُدَّخَلًا لَوَلَّوا إِلَيهِ وَهُم يَجمَحونَ

ஒரு புகலிடத்தையோ, அல்லது குகைகளையோ, அல்லது பதுங்கிக் கொள்கின்றதோர் இடத்தையோ அவர்கள் காண இயலுமாயின், விரைந்து அவர்கள் அதன் பால் சென்றுவிடுவார்கள்.

9:58

وَمِنهُم مَن يَلمِزُكَ فِى الصَّدَقٰتِ فَإِن أُعطوا مِنها رَضوا وَإِن لَم يُعطَوا مِنها إِذا هُم يَسخَطونَ

அவர்களில் சிலர் உம்முடைய தர்மப்பங்கீட்டினை விமர்சிக்கின்றனர்; அதிலிருந்து கொடுக்கப்பட்டால், அவர்கள் திருப்தியடைந்தவர்களாகிவிடுகின்றனர், ஆனால் அதிலிருந்து அவர்களுக்குக் கொடுக்கப்படவில்லையென்றால், அவர்கள் ஆட்சேபிப்பவர்களாகிவிடுகின்றனர்.

9:59

وَلَو أَنَّهُم رَضوا ما ءاتىٰهُمُ اللَّهُ وَرَسولُهُ وَقالوا حَسبُنَا اللَّهُ سَيُؤتينَا اللَّهُ مِن فَضلِهِ وَرَسولُهُ إِنّا إِلَى اللَّهِ رٰغِبونَ

கடவுளும் அவருடைய தூதரும் அவர்களுக்குக் கொடுத்தவற்றைக் கொண்டு அவர்கள் திருப்தியடைந்திருக்க வேண்டும். அவர்கள் கூறியிருக்க வேண்டும், கடவுள் எங்களுக்குப் போதுமானவர். கடவுள் அவருடைய கொடைகளில் இருந்து எங்களுக்கு வழங்கிடுவார், அத்துடன் அவருடைய தூதரும் அவ்வாறே செய்வார். நாங்கள் கடவுளை மட்டுமே தேடியவர்களாக உள்ளோம்.

9:60

إِنَّمَا الصَّدَقٰتُ لِلفُقَراءِ وَالمَسٰكينِ وَالعٰمِلينَ عَلَيها وَالمُؤَلَّفَةِ قُلوبُهُم وَفِى الرِّقابِ وَالغٰرِمينَ وَفى سَبيلِ اللَّهِ وَابنِ السَّبيلِ فَريضَةً مِنَ اللَّهِ وَاللَّهُ عَليمٌ حَكيمٌ

தர்மங்களானவை, ஏழைகள், தேவையுடையவர்கள், அவற்றைத் திரட்டுகின்ற பணியாளர்கள், புதிதாக மதம் மாறியவர்கள், அடிமைகளை விடுதலை செய்வதற்கு, திடீர் செலவினங்களால் சுமத்தப்பட்டவர்களுக்கு, கடவுளின் நிமித்தமாக, மற்றும் பயணத்திலுள்ள அந்நியர்களுக்குச் சென்றிட வேண்டும். கடவுளின் கட்டளை இதுவேயாகும். கடவுள் சர்வமும் அறிந்தவர், ஞானம் மிகுந்தவர்.

9:61

وَمِنهُمُ الَّذينَ يُؤذونَ النَّبِىَّ وَيَقولونَ هُوَ أُذُنٌ قُل أُذُنُ خَيرٍ لَكُم يُؤمِنُ بِاللَّهِ وَيُؤمِنُ لِلمُؤمِنينَ وَرَحمَةٌ لِلَّذينَ ءامَنوا مِنكُم وَالَّذينَ يُؤذونَ رَسولَ اللَّهِ لَهُم عَذابٌ أَليمٌ

அவர் எல்லாவற்றையும் செவியேற்றுக்கொள்கின்றார்! எனக் கூறுவதன் மூலம் அவர்களில் சிலர் நபியைப் புண்படுத்துகின்றனர். கூறுவீராக, அவர் உங்களிடம் கவனத்துடன் செவியேற்கின்றார் என்பது உங்களுக்கு மேலானதாகவே உள்ளது. அவர் கடவுள் மீது நம்பிக்கை கொள்கின்றார், மேலும் நம்பிக்கையாளர்களை நம்புகின்றார். உங்களில் நம்பிக்கை கொண்டவர்களுக்கு ஒரு கருணையாகவே அவர் உள்ளார். கடவுளின் தூதரைப் புண்படுத்துகின்றவர்கள் வலிநிறைந்ததொரு தண்டனைக்கு உள்ளாகிவிட்டனர்.

9:62

يَحلِفونَ بِاللَّهِ لَكُم لِيُرضوكُم وَاللَّهُ وَرَسولُهُ أَحَقُّ أَن يُرضوهُ إِن كانوا مُؤمِنينَ

அவர்கள் மெய்யாகவே நம்பிக்கையாளர்களாக இருப்பார்களானால், திருப்திப்படுத்துவதற்கு அதிகம் தகுதியுடையவர்களாக கடவுள் மற்றும் அவருடைய தூதர் இருக்கின்ற போது, உங்களைத் திருப்திப்படுத்துவதற்காக, அவர்கள் உங்களிடம் கடவுள் மீது சத்தியமிடுகின்றனர்.

9:63

أَلَم يَعلَموا أَنَّهُ مَن يُحادِدِ اللَّهَ وَرَسولَهُ فَأَنَّ لَهُ نارَ جَهَنَّمَ خٰلِدًا فيها ذٰلِكَ الخِزىُ العَظيمُ

கடவுள் மற்றும் அவருடைய தூதரை எதிர்க்கின்ற எவரும் என்றென்றும் நரகத்தின் நெருப்புக்கு உள்ளாகிவிட்டார் என்பதை அவர்கள் அறியமாட்டார்களா? இதுவே மிக மோசமான இழிவாகும்.

9:64

يَحذَرُ المُنٰفِقونَ أَن تُنَزَّلَ عَلَيهِم سورَةٌ تُنَبِّئُهُم بِما فى قُلوبِهِم قُلِ استَهزِءوا إِنَّ اللَّهَ مُخرِجٌ ما تَحذَرونَ

அவர்களுடைய இதயங்களின் உட்புறம் உள்ளவற்றை அம்பலப்படுத்துகின்ற ஒரு சூரா வெளிப்படுத்தப்பட்டுவிடக்கூடும் என்று நயவஞ்சகர்கள் கவலைப்படுகின்றனர். கூறுவீராக, சென்று கேலி செய்து கொண்டிருங்கள். நீங்கள் எதைப் பற்றி அஞ்சிக் கொண்டிருக்கின்றீர்களோ மிகச்சரியாக அதனையே கடவுள் அம்பலப்படுத்திவிடுவார்.

9:65

وَلَئِن سَأَلتَهُم لَيَقولُنَّ إِنَّما كُنّا نَخوضُ وَنَلعَبُ قُل أَبِاللَّهِ وَءايٰتِهِ وَرَسولِهِ كُنتُم تَستَهزِءونَ

நீர் அவர்களைக் கேட்டால், நாங்கள் சும்மாவேனும் கேலி செய்து கொண்டும் தமாஷ் செய்து கொண்டும்தான் இருந்தோம், என்று அவர்கள் கூறுவார்கள். கூறுவீராக, நீங்கள் கடவுளையும், அவருடைய வெளிப்பாடுகளையும், அவருடைய தூதரையும் கேலி செய்து கொண்டிருக்கின்றீர்கள் என்பதை நீங்கள் புரிந்து கொண்டீர்களா?

9:66

لا تَعتَذِروا قَد كَفَرتُم بَعدَ إيمٰنِكُم إِن نَعفُ عَن طائِفَةٍ مِنكُم نُعَذِّب طائِفَةً بِأَنَّهُم كانوا مُجرِمينَ

மன்னிப்புக் கோராதீர்கள். நம்பிக்கை கொண்டுவிட்ட பின்னர் நீங்கள் நம்பமறுத்துவிட்டீர்கள். உங்களில் சிலரை நாம் பிழை பொறுத்தாலும், உங்களிலுள்ள மற்றவர்களை அவர்களுடைய ஒழுக்கக் கேட்டின் ஒரு விளைவாக, நாம் தண்டிப்போம்.

9:67

المُنٰفِقونَ وَالمُنٰفِقٰتُ بَعضُهُم مِن بَعضٍ يَأمُرونَ بِالمُنكَرِ وَيَنهَونَ عَنِ المَعروفِ وَيَقبِضونَ أَيدِيَهُم نَسُوا اللَّهَ فَنَسِيَهُم إِنَّ المُنٰفِقينَ هُمُ الفٰسِقونَ

நயவஞ்சக ஆண்களும் நயவஞ்சகப் பெண்களும் ஒருவர் மற்றவருடன் சேர்ந்தவர்களே அவர்கள் தீமையை ஆதரிக்கின்றனர், அத்துடன் நன்மையைத் தடுக்கின்றனர், மேலும் அவர்கள் கஞ்சத்தனம் உடையவர்களாகவும் இருக்கின்றனர். அவர்கள் கடவுளை மறந்தனர், எனவே அவர்களை அவர் மறந்துவிட்டார். நயவஞ்சகர்கள் உண்மையில் தீயவர்களாகவே இருக்கின்றனர்.

9:68

وَعَدَ اللَّهُ المُنٰفِقينَ وَالمُنٰفِقٰتِ وَالكُفّارَ نارَ جَهَنَّمَ خٰلِدينَ فيها هِىَ حَسبُهُم وَلَعَنَهُمُ اللَّهُ وَلَهُم عَذابٌ مُقيمٌ

நயவஞ்சக ஆண்களுக்கும் நயவஞ்சகப் பெண்களுக்கும், அவ்வண்ணமே நம்பமறுப்பவர்களுக்கும், நரக நெருப்பினைக் கடவுள் வாக்களிக்கின்றார், அங்கே அவர்கள் என்றென்றும் தங்கியிருப்பார்கள். அவர்களுக்கு அது போதுமானதாக இருக்கும். கடவுள் அவர்களைக் கண்டனம் செய்துவிட்டார்; நிலைத்திருக்கின்ற ஒரு தண்டனைக்கு அவர்கள் உள்ளாகிவிட்டனர்.

9:69

كَالَّذينَ مِن قَبلِكُم كانوا أَشَدَّ مِنكُم قُوَّةً وَأَكثَرَ أَموٰلًا وَأَولٰدًا فَاستَمتَعوا بِخَلٰقِهِم فَاستَمتَعتُم بِخَلٰقِكُم كَمَا استَمتَعَ الَّذينَ مِن قَبلِكُم بِخَلٰقِهِم وَخُضتُم كَالَّذى خاضوا أُولٰئِكَ حَبِطَت أَعمٰلُهُم فِى الدُّنيا وَالـٔاخِرَةِ وَأُولٰئِكَ هُمُ الخٰسِرونَ

உங்களுக்கு முன்னர் இருந்தவர்களில் சிலர் உங்களை விட வலிமையானவர்களாகவும், அதிகமான பணத்தையும் பிள்ளைகளையும் கொண்டவர்களாகவும் இருந்தனர். தங்களுடைய பொருள் சார்ந்த உடமைகளில் மூழ்கியவர்களாக அவர்கள் ஆனார்கள். அதே போல், நீங்களும் உங்களுடைய பொருள் சார்ந்த உடமைகளில் மூழ்கியவர்களாகிவிட்டீர்கள், உங்களுக்கு முன்னர் இருந்தவர்கள் மூழ்கிய அதே விதமாக. நீங்கள் முற்றிலும் கவனமற்றவர்களாக ஆகிவிட்டீர்கள், அவர்கள் கவனமற்றவர்களாக இருந்த அதே விதமாக. இத்தகைய மக்கள்தான் தங்களுடைய காரியங்களைப் பயனற்றதாக்கியவர்களாக இருக்கின்றனர், இந்த உலகம் மற்றும் மறுவுலகம் ஆகிய இரண்டிலும்; அவர்கள்தான் நஷ்டவாளிகளாக இருக்கின்றனர்.

9:70

أَلَم يَأتِهِم نَبَأُ الَّذينَ مِن قَبلِهِم قَومِ نوحٍ وَعادٍ وَثَمودَ وَقَومِ إِبرٰهيمَ وَأَصحٰبِ مَديَنَ وَالمُؤتَفِكٰتِ أَتَتهُم رُسُلُهُم بِالبَيِّنٰتِ فَما كانَ اللَّهُ لِيَظلِمَهُم وَلٰكِن كانوا أَنفُسَهُم يَظلِمونَ

முந்திய தலைமுறைகளில் இருந்து அவர்கள் எந்த ஒன்றையும் கற்றுக்கொள்ளவில்லையா; நோவாவின் சமூகத்தார், ஆது, தமூது, ஆப்ரஹாமின் சமூகத்தார், மித்யன் வாசிகள், மேலும் (ஸாடம் மற்றும் கொமாராவைச் சேர்ந்த) பாவம் செய்பவர்களிடமிருந்து? அவர்களுடைய தூதர்கள் தெளிவான சான்றுகளுடன் அவர்களிடம் சென்றனர். கடவுள் ஒருபோதும் அவர்களுக்கு அநீதியிழைத்திடவில்லை; அவர்கள்தான் தங்களுடைய சொந்த ஆத்மாக்களுக்கே அநீதியிழைத்துக் கொண்டவர்களாக உள்ளனர்.

9:71

وَالمُؤمِنونَ وَالمُؤمِنٰتُ بَعضُهُم أَولِياءُ بَعضٍ يَأمُرونَ بِالمَعروفِ وَيَنهَونَ عَنِ المُنكَرِ وَيُقيمونَ الصَّلوٰةَ وَيُؤتونَ الزَّكوٰةَ وَيُطيعونَ اللَّهَ وَرَسولَهُ أُولٰئِكَ سَيَرحَمُهُمُ اللَّهُ إِنَّ اللَّهَ عَزيزٌ حَكيمٌ

நம்பிக்கை கொண்ட ஆண்களும் பெண்களும் ஒருவர் மற்றொருவருக்குக் கூட்டாளிகளாக இருக்கின்றனர். அவர்கள் நன்மையை ஆதரிக்கின்றனர், அத்துடன் தீமையைத் தடுக்கின்றனர், அவர்கள் (ஸலாத்) தொடர்புத் தொழுகைகளைக் கடைப்பிடிக்கின்றனர், மேலும் (ஜகாத்) கடமையான தர்மத்தைக் கொடுக்கின்றனர், அத்துடன் கடவுள் மற்றும் அவருடைய தூதருக்கு அவர்கள் கீழ்ப்படிகின்றனர். இவர்கள் கடவுளின் கருணை கொண்டு பொழியப்படுவார்கள். கடவுள் எல்லாம் வல்லவர், ஞானம் மிகுந்தவர்.

9:72

وَعَدَ اللَّهُ المُؤمِنينَ وَالمُؤمِنٰتِ جَنّٰتٍ تَجرى مِن تَحتِهَا الأَنهٰرُ خٰلِدينَ فيها وَمَسٰكِنَ طَيِّبَةً فى جَنّٰتِ عَدنٍ وَرِضوٰنٌ مِنَ اللَّهِ أَكبَرُ ذٰلِكَ هُوَ الفَوزُ العَظيمُ

நம்பிக்கை கொண்ட ஆண்களுக்கும் நம்பிக்கை கொண்ட பெண்களுக்கும் அங்கே அவர்கள் என்றென்றும் தங்கியிருக்கக் கூடிய ஆறுகள் பாய்கின்ற தோட்டங்களையும், ஏதேன் தோட்டங்களில் மகத்தான மாளிகைகளையும் கடவுள் வாக்களிக்கின்றார். அன்றி கடவுளின் ஆசீர்வாதங்களும் அங்கீகாரமும் இன்னமும் மிகப் பெரியதாகும். இதுவே மகத்தான பெருவெற்றியாகும்.

9:73

يٰأَيُّهَا النَّبِىُّ جٰهِدِ الكُفّارَ وَالمُنٰفِقينَ وَاغلُظ عَلَيهِم وَمَأوىٰهُم جَهَنَّمُ وَبِئسَ المَصيرُ

நபியே உம்மைத்தான், நம்பமறுப்பவர்களுக்கும் நயவஞ்சகர்களுக்கும் எதிராகப் போராடுவீராக, மேலும் அவர்களுடனான நடவடிக்கைகளில் கண்டிப்புடன் இருப்பீராக. அவர்களுடைய விதி நரகமாகும்; என்ன ஒரு துன்பகரமான தங்குமிடம்!

9:74

يَحلِفونَ بِاللَّهِ ما قالوا وَلَقَد قالوا كَلِمَةَ الكُفرِ وَكَفَروا بَعدَ إِسلٰمِهِم وَهَمّوا بِما لَم يَنالوا وَما نَقَموا إِلّا أَن أَغنىٰهُمُ اللَّهُ وَرَسولُهُ مِن فَضلِهِ فَإِن يَتوبوا يَكُ خَيرًا لَهُم وَإِن يَتَوَلَّوا يُعَذِّبهُمُ اللَّهُ عَذابًا أَليمًا فِى الدُّنيا وَالـٔاخِرَةِ وَما لَهُم فِى الأَرضِ مِن وَلِىٍّ وَلا نَصيرٍ

நம்பமறுத்தலைக் கொண்ட அவ்வார்த்தையை அவர்கள் உதிர்த்துவிட்ட போதிலும், அவர்கள் ஒருபோதும் அதனைக் கூறவில்லை என்று கடவுள் மீது அவர்கள் ஆணையிடுகின்றனர்; சரணடைந்தவர்களாகிவிட்ட பின்னர் அவர்கள் நம்பமறுத்துவிட்டனர். உண்மையில், அவர்களிடம் ஒருபோதும் இல்லாதிருந்ததை அவர்கள் விட்டுக் கொடுத்துவிட்டனர். கடவுளும் அவருடைய தூதரும் அவர்கள் மீது அவருடைய அருளையும் வாழ்வாதாரங்களையும் பொழிந்திருந்த போதிலும் அவர்கள் கலகம் செய்துவிட்டனர். அவர்கள் பாவத்திற்காக வருந்தினால், அது அவர்களுக்கு மிகச் சிறந்ததாக இருக்கும், ஆனால் அவர்கள் திரும்பிச் சென்றுவிட்டால், இந்த வாழ்விலும் மறுவுலகத்திலும் வலி நிறைந்ததொரு தண்டனைக்குக் கடவுள் அவர்களை உட்படுத்துவார். அவர்களுடைய எஜமானராகவும் அதிபதியாகவும் இருக்க பூமியின் மீது எவர் ஒருவரையும் அவர்கள் காணமாட்டார்கள்.

9:75

٧٥:٩وَمِنهُم مَن عٰهَدَ اللَّهَ لَئِن ءاتىٰنا مِن فَضلِهِ لَنَصَّدَّقَنَّ وَلَنَكونَنَّ مِنَ الصّٰلِحينَ

அவர்களில் சிலர் வாக்குறுதியும் அளித்தனர்: கடவுள் அவரது அருள் கொண்டு எங்கள் மீது பொழிந்தால், நாங்கள் தர்மவான்களாகத் திகழ்வோம், அத்துடன் நன்னெறியானதொரு வாழ்வும் நடத்துவோம்.

9:76

فَلَمّا ءاتىٰهُم مِن فَضلِهِ بَخِلوا بِهِ وَتَوَلَّوا وَهُم مُعرِضونَ

ஆனால் அவரது வாழ்வாதாரங்களை அவர்கள் மீது அவர் பொழிந்த போது, அவர்கள் கஞ்சத்தனம் கொண்டவர்கள் ஆயினர், அத்துடன் வெறுப்பில் திரும்பிச் சென்றுவிட்டனர்.

9:77

فَأَعقَبَهُم نِفاقًا فى قُلوبِهِم إِلىٰ يَومِ يَلقَونَهُ بِما أَخلَفُوا اللَّهَ ما وَعَدوهُ وَبِما كانوا يَكذِبونَ

அதன் விளைவாக, அவர்கள் அவரைச் சந்திக்கின்ற அந்நாள்வரை, அவர்களுடைய இதயங்களில் நயவஞ்சகத்தைக் கொண்டு அவர்களை அவர் பீடித்தார். இதன் காரணமாவது கடவுளிடம் அவர்களுடைய வாக்குறுதிகளை அவர்கள் முறித்ததனாலும், அவர்களுடைய பொய்யுரைத்தலின் காரணத்தினாலுமே ஆகும்.

9:78

أَلَم يَعلَموا أَنَّ اللَّهَ يَعلَمُ سِرَّهُم وَنَجوىٰهُم وَأَنَّ اللَّهَ عَلّٰمُ الغُيوبِ

அவர்களுடைய இரகசியங்களையும், அவர்களுடைய சதித்திட்டங்களையும், கடவுள் அறிகின்றார் என்பதையும் கடவுள் எல்லா இரகசியங்களையும் அறிந்தவராக இருக்கின்றார் என்பதையும் அவர்கள் புரிந்து கொள்ளவில்லையா?

9:79

الَّذينَ يَلمِزونَ المُطَّوِّعينَ مِنَ المُؤمِنينَ فِى الصَّدَقٰتِ وَالَّذينَ لا يَجِدونَ إِلّا جُهدَهُم فَيَسخَرونَ مِنهُم سَخِرَ اللَّهُ مِنهُم وَلَهُم عَذابٌ أَليمٌ

மிக அதிகமாகக் கொடுக்கின்றனர் என்பதற்காக தாராள மனமுடைய நம்பிக்கையாளர்களை விமர்சிப்பவர்கள், மிகக் குறைவாகக் கொடுக்கின்றனர் என்பதற்காக ஏழை நம்பிக்கையாளர்களைப் பரிகசிப்பவர்களான, அவர்களைக் கடவுள் இகழ்கின்றார். அவர்கள் வலி நிறைந்ததொரு தண்டனைக்கு உள்ளாகிவிட்டனர்.

9:80

استَغفِر لَهُم أَو لا تَستَغفِر لَهُم إِن تَستَغفِر لَهُم سَبعينَ مَرَّةً فَلَن يَغفِرَ اللَّهُ لَهُم ذٰلِكَ بِأَنَّهُم كَفَروا بِاللَّهِ وَرَسولِهِ وَاللَّهُ لا يَهدِى القَومَ الفٰسِقينَ

அவர்களுக்காக நீர் பாவமன்னிப்புக் கோரினாலும், அல்லது அவர்களுக்காக நீர் பாவமன்னிப்புக் கோராவிட்டாலும் - அவர்களுக்காக நீர் எழுபது முறைகள் பாவமன்னிப்புக் கோரினாலும் கூட- கடவுள் அவர்களை மன்னிக்கமாட்டார். இது ஏனெனில் அவர்கள் கடவுளையும் அவருடைய தூதரையும் நம்பமறுத்ததனாலேயாகும். பாவிகளான மக்களைக் கடவுள் வழிநடத்துவதில்லை.

9:81

فَرِحَ المُخَلَّفونَ بِمَقعَدِهِم خِلٰفَ رَسولِ اللَّهِ وَكَرِهوا أَن يُجٰهِدوا بِأَموٰلِهِم وَأَنفُسِهِم فى سَبيلِ اللَّهِ وَقالوا لا تَنفِروا فِى الحَرِّ قُل نارُ جَهَنَّمَ أَشَدُّ حَرًّا لَو كانوا يَفقَهونَ

உட்கார்ந்து கொண்டவர்கள், கடவுளின் தூதருக்குப் பின்னால் தாங்கள் தங்கிக் கொண்டதில் மகிழ்வடைந்தனர், அத்துடன் தங்கள் பணத்தையும் தங்கள் வாழ்வுகளையும் கொண்டு கடவுளின் நிமித்தம் பாடுபடுவதை வெறுத்தனர். அவர்கள் கூறினர், இந்த வெயிலில் நாம் கிளம்ப வேண்டாம்! கூறுவீராக, நரகத்தின் நெருப்பு இதனை விட அதிகம் சூடானதாகும், அவர்கள் மட்டும் கிரகித்துக்கொள்ள இயன்றால்.

9:82

فَليَضحَكوا قَليلًا وَليَبكوا كَثيرًا جَزاءً بِما كانوا يَكسِبونَ

அவர்கள் ஒரு சிறிதே சிரிக்கட்டும், மேலும் அதிகமானதோர் அளவு அழட்டும். இதுவே அவர்கள் சம்பாதித்த பாவங்களுக்குரிய கைம்மாறாகும்.

9:83

فَإِن رَجَعَكَ اللَّهُ إِلىٰ طائِفَةٍ مِنهُم فَاستَـٔذَنوكَ لِلخُروجِ فَقُل لَن تَخرُجوا مَعِىَ أَبَدًا وَلَن تُقٰتِلوا مَعِىَ عَدُوًّا إِنَّكُم رَضيتُم بِالقُعودِ أَوَّلَ مَرَّةٍ فَاقعُدوا مَعَ الخٰلِفينَ

உம்மோடு ஒன்று திரண்டு புறப்பட அவர்கள் உம்மிடம் அனுமதி கோரும் ஒரு சூழ்நிலைக்குக் கடவுள் உம்மைத் திரும்பக் கொண்டு வந்தால், நீர் கூற வேண்டும், என்னோடு நீங்கள் மீண்டும் ஒருபோதும் போருக்குப் புறப்பட மாட்டீர்கள், அன்றி எந்த எதிரிக்கும் விரோதமாக என்னோடு சேர்ந்து எப்பொழுதும் போரிட மாட்டீர்கள். ஏனெனில் உட்கார்ந்திருப்பவர்களுடன் இருந்து கொள்ள வேண்டும் என்பதை நீங்கள் முதலிலேயே தேர்ந்தெடுத்துவிட்டீர்கள். எனவே, நீங்கள் உட்கார்ந்திருப்போருடன் தங்கிவிடத்தான் வேண்டும்.

9:84

وَلا تُصَلِّ عَلىٰ أَحَدٍ مِنهُم ماتَ أَبَدًا وَلا تَقُم عَلىٰ قَبرِهِ إِنَّهُم كَفَروا بِاللَّهِ وَرَسولِهِ وَماتوا وَهُم فٰسِقونَ

அவர்களில் உள்ள எவருக்காகவும் அவர் மரணித்துவிடும் போது, நீர் ஈமப் பிரார்த்தனையைக் கடைப்பிடிக்கவும் வேண்டாம், அன்றி அவருடைய அடக்கத் தலத்தில் நீர் நிற்கவும் வேண்டாம். அவர்கள் கடவுளையும் அவருடைய தூதரையும் நம்பமறுத்துவிட்டனர், மேலும் பாவகரமானதொரு நிலையிலேயே மரணித்துவிட்டனர்.

9:85

وَلا تُعجِبكَ أَموٰلُهُم وَأَولٰدُهُم إِنَّما يُريدُ اللَّهُ أَن يُعَذِّبَهُم بِها فِى الدُّنيا وَتَزهَقَ أَنفُسُهُم وَهُم كٰفِرونَ

அவர்களுடைய செல்வத்தாலோ அல்லது அவர்களுடைய குழந்தைகளாலோ மனங்கவரப்பட்டுவிடாதீர்; இவ்வுலகில் அவர்களுடைய துன்பத்திற்கான மூலாதாரங்களாகவும் மேலும் நம்பமறுப்பவர்களாக அவர்களுடைய ஆத்மாக்கள் பிரிந்து செல்வதற்கும் கடவுள் இவற்றைக் காரணமாக ஆக்கியுள்ளார்.

9:86

وَإِذا أُنزِلَت سورَةٌ أَن ءامِنوا بِاللَّهِ وَجٰهِدوا مَعَ رَسولِهِ استَـٔذَنَكَ أُولُوا الطَّولِ مِنهُم وَقالوا ذَرنا نَكُن مَعَ القٰعِدينَ

கடவுள் மீது நம்பிக்கை கொண்டு அத்துடன் அவருடைய தூதரோடு சேர்ந்து போராடுங்கள் என்று அறிவிக்கும் ஒரு சூரா வெளிப்படுத்தப்படும் போது, அவர்களில் உள்ள பலசாலிகள் கூட, பின்தங்கிக் கொள்ள எங்களை விட்டுவிடுங்கள்! என்று கூறுகின்றனர்.

9:87

رَضوا بِأَن يَكونوا مَعَ الخَوالِفِ وَطُبِعَ عَلىٰ قُلوبِهِم فَهُم لا يَفقَهونَ

அவர்கள் உட்கார்ந்து கொண்டவர்களுடன் இருந்துவிடுவதைத் தேர்ந்தெடுத்துக் கொண்டனர். அதன் விளைவாக, அவர்களுடைய இதயங்கள் முத்திரையிடப்பட்டுவிட்டன, மேலும் அதனால், அவர்கள் கிரகித்துக்கொள்ள இயலாது.

9:88

لٰكِنِ الرَّسولُ وَالَّذينَ ءامَنوا مَعَهُ جٰهَدوا بِأَموٰلِهِم وَأَنفُسِهِم وَأُولٰئِكَ لَهُمُ الخَيرٰتُ وَأُولٰئِكَ هُمُ المُفلِحونَ

தூதரையும் அவருடன் நம்பிக்கை கொண்டுவிட்டவர்களையும் பொறுத்தவரை, அவர்கள் தங்களுடைய பணத்தையும் தங்களுடைய வாழ்வுகளையும் கொண்டு ஆர்வத்துடன் பாடுபடுகின்றனர். இவர்கள் நல்ல விஷயங்கள் அனைத்திற்கும் தகுதியானவர்களாகிவிட்டனர்; அவர்களே வெற்றியாளர்களாக இருக்கின்றனர்.

9:89

أَعَدَّ اللَّهُ لَهُم جَنّٰتٍ تَجرى مِن تَحتِهَا الأَنهٰرُ خٰلِدينَ فيها ذٰلِكَ الفَوزُ العَظيمُ

அங்கே அவர்கள் என்றென்றும் தங்கியிருக்கக் கூடிய, ஆறுகள் பாய்கின்ற தோட்டங்களை அவர்களுக்காகக் கடவுள் தயார் செய்து வைத்துள்ளார். இதுவே மகத்தான பெருவெற்றியாகும்.

9:90

وَجاءَ المُعَذِّرونَ مِنَ الأَعرابِ لِيُؤذَنَ لَهُم وَقَعَدَ الَّذينَ كَذَبُوا اللَّهَ وَرَسولَهُ سَيُصيبُ الَّذينَ كَفَروا مِنهُم عَذابٌ أَليمٌ

அரேபியர்கள் சாக்குப்போக்குகளை உருவாக்கிக் கொண்டவர்களாக, பின்தங்கிக் கொள்ள அனுமதி தேடியவாறு உம்மிடம் வந்தனர். இது, கடவுள் மற்றும் அவருடைய தூதர் மீது அவர்களுடைய நிராகரிப்பைச் சுட்டிக்காட்டுவதாக உள்ளது - அவர்கள் பின்தங்கிக் கொள்கின்றனர். உண்மையில், அவர்களில் உள்ள நம்பமறுக்கின்றவர்கள் வலி நிறைந்ததொரு தண்டனைக்கு உள்ளாகிவிட்டனர்.

9:91

لَيسَ عَلَى الضُّعَفاءِ وَلا عَلَى المَرضىٰ وَلا عَلَى الَّذينَ لا يَجِدونَ ما يُنفِقونَ حَرَجٌ إِذا نَصَحوا لِلَّهِ وَرَسولِهِ ما عَلَى المُحسِنينَ مِن سَبيلٍ وَاللَّهُ غَفورٌ رَحيمٌ

பலஹீனர்கள், அல்லது நோயாளிகள், அல்லது சமர்ப்பிப்பதற்கு எந்த ஒன்றையும் காணாதவர்களாக உள்ளவர்கள், கடவுள் மற்றும் அவருடைய தூதருக்கு அர்ப்பணித்தவர்களாக அவர்கள் நிலைத்திருக்கின்ற வரை, பழிப்புக்குரியவர்கள் ஆகக் கூடாது. அவர்களில் உள்ள நன்னெறியாளர்கள் பழிக்கப்படாதிருக்க வேண்டும். கடவுள் மன்னிப்பவர், மிக்க கருணையாளர்.

9:92

وَلا عَلَى الَّذينَ إِذا ما أَتَوكَ لِتَحمِلَهُم قُلتَ لا أَجِدُ ما أَحمِلُكُم عَلَيهِ تَوَلَّوا وَأَعيُنُهُم تَفيضُ مِنَ الدَّمعِ حَزَنًا أَلّا يَجِدوا ما يُنفِقونَ

உங்களோடு சேர்ந்து கொள்ள விரும்பியவர்களாக உம்மிடம் வந்து, ஆனால் நீர் அவர்களிடம் உங்களை ஏற்றிச் செல்ல என்னிடம் எதுவும் இல்லை என்று கூறினீரே, அவர்களும் மன்னிக்கப்பட்டுவிட்டனர். பங்களிப்புக் கொடுப்பதற்குத் தங்களால் இயலவில்லையே என்று மெய்யாகவே துக்கமடைந்தவர்களாக, தங்களுடைய கண்களில் கண்ணீரோடு பின்னர் அவர்கள் திரும்பிச் செல்கின்றனர்.

9:93

إِنَّمَا السَّبيلُ عَلَى الَّذينَ يَستَـٔذِنونَكَ وَهُم أَغنِياءُ رَضوا بِأَن يَكونوا مَعَ الخَوالِفِ وَطَبَعَ اللَّهُ عَلىٰ قُلوبِهِم فَهُم لا يَعلَمونَ

அவர்களுக்கு ஒரு காரணமும் இல்லாமல் இருந்த போதிலும், பின்தங்கிக் கொள்ள உம்மிடம் அனுமதி கோரியவர்கள் மீதுதான், குற்றச்சாட்டு உள்ளது. அவர்கள் உட்கார்ந்திருப்பவர்களோடு இருந்து கொள்வதைத் தேர்ந்தெடுத்துக் கொண்டனர். அதன் விளைவாக, கடவுள் அவர்களுடைய இதயங்களில் முத்திரையிட்டுவிட்டார், மேலும் இவ்வாறாக, அவர்கள் எந்த அறிவையும் அடையவில்லை.

9:94

يَعتَذِرونَ إِلَيكُم إِذا رَجَعتُم إِلَيهِم قُل لا تَعتَذِروا لَن نُؤمِنَ لَكُم قَد نَبَّأَنَا اللَّهُ مِن أَخبارِكُم وَسَيَرَى اللَّهُ عَمَلَكُم وَرَسولُهُ ثُمَّ تُرَدّونَ إِلىٰ عٰلِمِ الغَيبِ وَالشَّهٰدَةِ فَيُنَبِّئُكُم بِما كُنتُم تَعمَلونَ

(போரில் இருந்து) அவர்களிடம் நீர் திரும்பி வரும் போது, அவர்கள் உம்மிடம் வருத்தம் தெரிவிக்கின்றனர். கூறும், வருத்தம் தெரிவிக்க வேண்டாம்; இதற்கு மேலும் நாங்கள் உங்களை நம்பமாட்டோம். கடவுள் உங்களைப் பற்றி எங்களுக்குத் தெரிவித்துவிட்டார். கடவுள் உங்களுடைய செயல்களைப் பார்ப்பார், மேலும் தூதரும் அவ்வாறே செய்வார், பின்னர் எல்லா இரகசியங்களையும், அறிக்கைகளையும் அறிந்தவரிடம் நீங்கள் திரும்பக் கொண்டு வரப்படுவீர்கள், பின்னர் நீங்கள் செய்த ஒவ்வொன்றையும் குறித்து அவர் உங்களுக்குத் தெரிவிப்பார்.

9:95

سَيَحلِفونَ بِاللَّهِ لَكُم إِذَا انقَلَبتُم إِلَيهِم لِتُعرِضوا عَنهُم فَأَعرِضوا عَنهُم إِنَّهُم رِجسٌ وَمَأوىٰهُم جَهَنَّمُ جَزاءً بِما كانوا يَكسِبونَ

அவர்களிடம் நீர் திரும்பி வரும் போது, அவர்களை நீர் கண்டு கொள்ளாதிருக்கும் பொருட்டு, அவர்கள் உம்மிடம் கடவுள் மீது சத்தியமிடுவார்கள். அவர்களைக் கண்டு கொள்ளாமலே இருந்திடுவீராக. அவர்கள் களங்கப்பட்டவர்களாக உள்ளனர், அன்றி அவர்கள் சம்பாதித்த பாவங்களுக்குக் கைம்மாறாக, நரகம்தான் அவர்களுடைய இறுதி விதியாகும்.

9:96

يَحلِفونَ لَكُم لِتَرضَوا عَنهُم فَإِن تَرضَوا عَنهُم فَإِنَّ اللَّهَ لا يَرضىٰ عَنِ القَومِ الفٰسِقينَ

அவர்களை நீர் பிழை பொறுத்துவிடும் பொருட்டு, உம்மிடம் அவர்கள் சத்தியமிடுகின்றனர். நீர் அவர்களைப் பிழை பொறுத்தாலும் கூட, இத்தகைய தீய மக்களைக் கடவுள் பிழை பொறுப்பதில்லை.

9:97

الأَعرابُ أَشَدُّ كُفرًا وَنِفاقًا وَأَجدَرُ أَلّا يَعلَموا حُدودَ ما أَنزَلَ اللَّهُ عَلىٰ رَسولِهِ وَاللَّهُ عَليمٌ حَكيمٌ

நம்பமறுத்தல் மற்றும் நயவஞ்சகத்தனத்தில் மோசமானவர்களாகவும், கடவுள் தன் தூதருக்கு வெளிப்படுத்தியுள்ள சட்டங்களை மிகவும் அலட்சியப்படுத்தக் கூடியவர்களாகவும் உள்ளவர்கள் அரேபியர்களேயாவர். கடவுள் சர்வமும் அறிந்தவர், ஞானம் மிகுந்தவர்.

9:98

وَمِنَ الأَعرابِ مَن يَتَّخِذُ ما يُنفِقُ مَغرَمًا وَيَتَرَبَّصُ بِكُمُ الدَّوائِرَ عَلَيهِم دائِرَةُ السَّوءِ وَاللَّهُ سَميعٌ عَليمٌ

சில அரேபியர்கள் (கடவுளின் நிமித்தம்) தங்களுடைய செலவிடுதலை ஒரு நஷ்டமாகக் கருதுகின்றனர், அத்துடன் உங்களை ஒரு பேரழிவு தாக்கக் கூடும் என்று கூட அவர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர். அவர்கள்தான் மிக மோசமான பேரழிவிற்கு உள்ளாவார்கள். கடவுள் செவியேற்பவர், சர்வமும் அறிந்தவர்.

9:99

وَمِنَ الأَعرابِ مَن يُؤمِنُ بِاللَّهِ وَاليَومِ الـٔاخِرِ وَيَتَّخِذُ ما يُنفِقُ قُرُبٰتٍ عِندَ اللَّهِ وَصَلَوٰتِ الرَّسولِ أَلا إِنَّها قُربَةٌ لَهُم سَيُدخِلُهُمُ اللَّهُ فى رَحمَتِهِ إِنَّ اللَّهَ غَفورٌ رَحيمٌ

மற்ற அரேபியர்கள் கடவுள் மற்றும் இறுதி நாள் மீது நம்பிக்கை கொள்ளவே செய்கின்றனர், மேலும் தங்களுடைய செலவிடுதலைக் கடவுளை நோக்கி ஒரு சாதனமாகவும், தூதருக்கு ஆதரவளிக்கின்ற ஓர் உபாயமாகவும் கருதுகின்றனர். மெய்யாக, அது அவர்களை மிக அருகில் கொண்டு வரவே செய்யும்; தன்னுடைய கருணைக்குள் நுழையக் கடவுள் அவர்களை அனுமதிப்பார். கடவுள் மன்னிப்பவர், மிக்க கருணையாளர்.

9:100

وَالسّٰبِقونَ الأَوَّلونَ مِنَ المُهٰجِرينَ وَالأَنصارِ وَالَّذينَ اتَّبَعوهُم بِإِحسٰنٍ رَضِىَ اللَّهُ عَنهُم وَرَضوا عَنهُ وَأَعَدَّ لَهُم جَنّٰتٍ تَجرى تَحتَهَا الأَنهٰرُ خٰلِدينَ فيها أَبَدًا ذٰلِكَ الفَوزُ العَظيمُ

புலம் பெயர்ந்த ஆரம்பக்கால முன்னோடிகளையும் (முஹாஜிரீன்), அவர்களுக்குப் புகலிடம் தந்த ஆதரவாளர்களையும் (அன்ஸார்), மேலும் நன்னெறியில் அவர்களைப் பின்பற்றியவர்களையும் பொறுத்த வரை, கடவுள் அவர்களுடன் திருப்தியடைந்தார், அவ்வாறே அவர்களும் அவருடன் திருப்தியடைந்தனர். அங்கே அவர்கள் என்றென்றும் தங்கியிருக்கக் கூடிய, ஆறுகள் பாய்கின்ற தோட்டங்களை அவர்களுக்காக அவர் தயாரித்துள்ளார். இதுவே மகத்தான பெருவெற்றியாகும்.

9:101

وَمِمَّن حَولَكُم مِنَ الأَعرابِ مُنٰفِقونَ وَمِن أَهلِ المَدينَةِ مَرَدوا عَلَى النِّفاقِ لا تَعلَمُهُم نَحنُ نَعلَمُهُم سَنُعَذِّبُهُم مَرَّتَينِ ثُمَّ يُرَدّونَ إِلىٰ عَذابٍ عَظيمٍ

உங்களைச் சுற்றிலுமுள்ள அரேபியர்களில், நயவஞ்சகர்கள் உள்ளனர். அத்துடன், மாநகரவாசிகளிலும், நயவஞ்சகத்திற்குப் பழகிப்போனவர்கள் உள்ளனர். நீர் அவர்களை அறியமாட்டீர், ஆனால் நாம் அவர்களை அறிவோம். அவர்களுக்குரிய தண்டனையை நாம் இரட்டிப்பாக்குவோம், பின்னர் அவர்கள் பயங்கரமானதொரு தண்டனைக்கு உட்படுத்தப்பட்டவர்களாகச் சென்று முடிவார்கள்.

9:102

وَءاخَرونَ اعتَرَفوا بِذُنوبِهِم خَلَطوا عَمَلًا صٰلِحًا وَءاخَرَ سَيِّئًا عَسَى اللَّهُ أَن يَتوبَ عَلَيهِم إِنَّ اللَّهَ غَفورٌ رَحيمٌ

தங்களுடைய பாவங்களை ஒப்புக் கொள்கின்ற மற்றவர்கள் இருக்கின்றனர்; அவர்கள் நல்ல செயல்களுடன் கெட்ட செயல்களைக் கலந்துவிட்டனர். கடவுள் அவர்களை மீட்டுக்கொள்வார், ஏனெனில் கடவுள் மன்னிப்பவர், மிக்க கருணையாளர்.

9:103

خُذ مِن أَموٰلِهِم صَدَقَةً تُطَهِّرُهُم وَتُزَكّيهِم بِها وَصَلِّ عَلَيهِم إِنَّ صَلوٰتَكَ سَكَنٌ لَهُم وَاللَّهُ سَميعٌ عَليمٌ

அவர்களைத் தூய்மைப்படுத்துவதற்காகவும், அவர்களைப் பாவங்களில் இருந்து விடுவிப்பதற்காகவும் அவர்களுடைய பணத்தில் இருந்து ஒரு தர்மத்தை ஏற்றுக்கொள்வீராக. அத்துடன் அவர்களை ஊக்கப்படுத்துவீராக, ஏனெனில் உம்முடைய ஊக்கப்படுத்தல் அவர்களுக்கு மறுவுறுதியளிக்கின்றது. கடவுள் செவியேற்பவர், சர்வமும் அறிந்தவர்.

9:104

أَلَم يَعلَموا أَنَّ اللَّهَ هُوَ يَقبَلُ التَّوبَةَ عَن عِبادِهِ وَيَأخُذُ الصَّدَقٰتِ وَأَنَّ اللَّهَ هُوَ التَّوّابُ الرَّحيمُ

தன்னுடைய அடியார்களின் பாவத்திற்கான வருந்துதலைக் கடவுள் ஏற்றுக்கொள்கின்றார், தர்மங்களை அங்கீகரிக்கின்றார் என்பதையும் கடவுள் மீட்பவர், மிக்க கருணையாளர் என்பதையும் அவர்கள் புரிந்து கொள்ளவில்லையா?

9:105

وَقُلِ اعمَلوا فَسَيَرَى اللَّهُ عَمَلَكُم وَرَسولُهُ وَالمُؤمِنونَ وَسَتُرَدّونَ إِلىٰ عٰلِمِ الغَيبِ وَالشَّهٰدَةِ فَيُنَبِّئُكُم بِما كُنتُم تَعمَلونَ

கூறுவீராக, நன்னெறிகள் புரியுங்கள்; கடவுள் உங்களுடைய காரியங்களைப் பார்ப்பார், அன்றி அவருடைய தூதரும் நம்பிக்கையாளர்களும் அவ்வாறே செய்வார்கள். இறுதியாக, அனைத்து இரகசியங்களையும் அறிவிப்புகளையும் அறிந்தவரிடம் நீங்கள் திருப்பப்படுவீர்கள், அப்போது நீங்கள் செய்த ஒவ்வொன்றையும் குறித்து அவர் உங்களுக்குத் தெரிவிப்பார்.

9:106

وَءاخَرونَ مُرجَونَ لِأَمرِ اللَّهِ إِمّا يُعَذِّبُهُم وَإِمّا يَتوبُ عَلَيهِم وَاللَّهُ عَليمٌ حَكيمٌ

மற்றவர்கள் கடவுளின் தீர்மானத்திற்காகக் காத்திருக்கின்றனர்; அவர்களை அவர் தண்டிக்கக் கூடும், அல்லது அவர்களை அவர் மீட்டுக்கொள்ளக் கூடும். கடவுள் சர்வமும் அறிந்தவர், ஞானம் மிகுந்தவர்.

9:107

وَالَّذينَ اتَّخَذوا مَسجِدًا ضِرارًا وَكُفرًا وَتَفريقًا بَينَ المُؤمِنينَ وَإِرصادًا لِمَن حارَبَ اللَّهَ وَرَسولَهُ مِن قَبلُ وَلَيَحلِفُنَّ إِن أَرَدنا إِلَّا الحُسنىٰ وَاللَّهُ يَشهَدُ إِنَّهُم لَكٰذِبونَ

போலித்தெய்வ வழிபாட்டினைச் செயல்படுத்துதல், நம்பிக்கையாளர்களைப் பிளவுபடுத்துதல், மேலும் கடவுளையும் அவருடைய தூதரையும் எதிர்க்கின்றவர்களுக்கு வசதி செய்துதருதல் மூலம் பள்ளிவாசலை துஷ்பிரயோகம் செய்பவர்கள் இருக்கின்றனர். அவர்கள் பவித்திரமாகச் சத்தியமிடுகின்றனர்: எங்களுடைய நோக்கங்கள் கண்ணியமானவை! அவர்கள் பொய்யர்கள் என்று கடவுள் சாட்சியம் பகர்கின்றார்.

9:108

لا تَقُم فيهِ أَبَدًا لَمَسجِدٌ أُسِّسَ عَلَى التَّقوىٰ مِن أَوَّلِ يَومٍ أَحَقُّ أَن تَقومَ فيهِ فيهِ رِجالٌ يُحِبّونَ أَن يَتَطَهَّروا وَاللَّهُ يُحِبُّ المُطَّهِّرينَ

அத்தகையதொரு பள்ளிவாசலில் நீர் ஒருபோதும் தொழ வேண்டாம், ஆரம்ப நாள் முதலே நன்னெறியின் அடிப்படையில் நிர்மாணிக்கப்பட்ட ஒரு பள்ளி வாசல்தான், நீர் தொழுவதற்கு மிகவும் தகுதியானது. அதனுள், தூய்மைப்படுத்தப்படுவதை நேசிக்கின்ற மக்கள் இருக்கின்றனர். தங்களையே தூய்மைப்படுத்திக் கொள்கின்றவர்களைக் கடவுள் நேசிக்கின்றார்.

9:109

أَفَمَن أَسَّسَ بُنيٰنَهُ عَلىٰ تَقوىٰ مِنَ اللَّهِ وَرِضوٰنٍ خَيرٌ أَم مَن أَسَّسَ بُنيٰنَهُ عَلىٰ شَفا جُرُفٍ هارٍ فَانهارَ بِهِ فى نارِ جَهَنَّمَ وَاللَّهُ لا يَهدِى القَومَ الظّٰلِمينَ

கடவுள் மீது கொண்ட பக்தியின் அடிப்படையிலும் அவருடைய திருப்தியை அடைவதற்காகவும் தனது கட்டடத்தை நிர்மாணிக்கின்ற ஒருவன் மேலானவனா, அல்லது அவனுடன் சேர்ந்து நரக நெருப்பினில் விழுந்துவிடக்கூடிய, நொறுங்கிக் கொண்டிருக்கின்ற செங்குத்தானதொரு மலை முகட்டின் விளிம்பில் தனது கட்டடத்தை நிர்மாணிக்கின்ற ஒருவனா? வரம்புமீறுகின்ற மக்களைக் கடவுள் வழிநடத்துவதில்லை.

9:110

لا يَزالُ بُنيٰنُهُمُ الَّذى بَنَوا ريبَةً فى قُلوبِهِم إِلّا أَن تَقَطَّعَ قُلوبُهُم وَاللَّهُ عَليمٌ حَكيمٌ

அவர்களால் நிர்மாணிக்கப்பட்டுள்ள இத்தகையதொரு கட்டடம் அவர்களுடைய இதயங்கள் செயலற்றதாகிவிடுகின்ற வரை, அவர்களுடைய இதயங்களில் சந்தேகத்திற்கானதொரு மூலமாக அமைந்துவிடுகின்றது. கடவுள் சர்வமும் அறிந்தவர், ஞானம் மிகுந்தவர்.

9:111

إِنَّ اللَّهَ اشتَرىٰ مِنَ المُؤمِنينَ أَنفُسَهُم وَأَموٰلَهُم بِأَنَّ لَهُمُ الجَنَّةَ يُقٰتِلونَ فى سَبيلِ اللَّهِ فَيَقتُلونَ وَيُقتَلونَ وَعدًا عَلَيهِ حَقًّا فِى التَّورىٰةِ وَالإِنجيلِ وَالقُرءانِ وَمَن أَوفىٰ بِعَهدِهِ مِنَ اللَّهِ فَاستَبشِروا بِبَيعِكُمُ الَّذى بايَعتُم بِهِ وَذٰلِكَ هُوَ الفَوزُ العَظيمُ

நம்பிக்கையாளர்களிடமிருந்து கடவுள் அவர்களுடைய வாழ்வுகளையும் அவர்களுடைய பொருள்களையும் சுவர்க்கத்திற்கான பரிவர்த்தனையாக வாங்கிக் கொண்டார். எனவே, அவர்கள் கொல்வதற்கும் கொல்லப்படுவதற்கும் விரும்பியவாறு, கடவுளின் நிமித்தம் சண்டையிடுகின்றனர். தோரா, சுவிசேஷம் மற்றும் இந்தக் குர்ஆனில் அவருடைய சத்திய வாக்குறுதியானது இத்தகையதேயாகும் - அன்றியும் கடவுளை விடவும் தனது வாக்குறுதியைச் சிறப்பாக நிறைவேற்றுபவர் யார்? இத்தகையதொரு பரிவர்த்தனையைச் செய்து கொண்டதில் நீங்கள் களிப்படைந்திட வேண்டும். இதுவே மகத்தான பெருவெற்றியாகும்.

9:112

١١٢:٩التّٰئِبونَ العٰبِدونَ الحٰمِدونَ السّٰئِحونَ الرّٰكِعونَ السّٰجِدونَ الـٔامِرونَ بِالمَعروفِ وَالنّاهونَ عَنِ المُنكَرِ وَالحٰفِظونَ لِحُدودِ اللَّهِ وَبَشِّرِ المُؤمِنينَ

அவர்கள் பாவத்திற்கு வருந்துபவர்கள், வழிபடுபவர்கள், புகழ்பவர்கள், தியானிப்பவர்கள், குனிந்து வழிபடுபவர்கள் அத்துடன் சிரம் பணிபவர்கள், நன்னெறியினை ஆதரிப்பவர்கள் அத்துடன் தீமையைத் தடுப்பவர்கள், மேலும் கடவுளின் சட்டங்களைப் பேணுபவர்களாக இருக்கின்றனர். இத்தகைய நம்பிக்கையாளர்களுக்கு நற்செய்தி கொடுப்பீராக.

9:113

ما كانَ لِلنَّبِىِّ وَالَّذينَ ءامَنوا أَن يَستَغفِروا لِلمُشرِكينَ وَلَو كانوا أُولى قُربىٰ مِن بَعدِ ما تَبَيَّنَ لَهُم أَنَّهُم أَصحٰبُ الجَحيمِ

சொந்தபந்தத்தில் அவர்கள் தங்களுக்கு மிகவும் நெருக்கமானவர்களாக இருந்தபோதிலும் கூட, அவர்கள் நரகத்திற்கென விதிக்கப்பட்டவர்கள் என்பதை அவர்கள் புரிந்து கொண்டுவிட்டால், நபியோ அன்றி நம்பிக்கையாளர்களோ போலித் தெய்வ வழிபாடு செய்பவர்களுக்காகப் பாவமன்னிப்புக் கோர வேண்டாம்.

9:114

وَما كانَ استِغفارُ إِبرٰهيمَ لِأَبيهِ إِلّا عَن مَوعِدَةٍ وَعَدَها إِيّاهُ فَلَمّا تَبَيَّنَ لَهُ أَنَّهُ عَدُوٌّ لِلَّهِ تَبَرَّأَ مِنهُ إِنَّ إِبرٰهيمَ لَأَوّٰهٌ حَليمٌ

ஆப்ரஹாம் தன் தந்தைக்காகப் பாவமன்னிப்புக் கோரியதன் ஒரே காரணம் அவ்வாறு செய்வதாக அவரிடம் அவர் வாக்குறுதியளித்திருந்தார் என்பதுதான். ஆனால் அவர் கடவுளின் ஒரு விரோதியாக இருந்தார் என்பதை அவர் புரிந்து கொண்டவுடன், அவரை அவர் கைவிட்டுவிட்டார், ஆப்ரஹாம் மிகவும் இரக்கமுடையவராகவும் கனிவானவராகவும், இருந்தார்.

9:115

وَما كانَ اللَّهُ لِيُضِلَّ قَومًا بَعدَ إِذ هَدىٰهُم حَتّىٰ يُبَيِّنَ لَهُم ما يَتَّقونَ إِنَّ اللَّهَ بِكُلِّ شَىءٍ عَليمٌ

அவர்களை அவர் வழிநடத்திய பின்னர், எதிர்பார்க்க வேண்டியது என்ன என்பதை முதலில் அவர்களுக்குச் சுட்டிக்காட்டாமல், கடவுள் எந்தச் சமுதாயத்தையும் வழிதவறுதலில் அனுப்பிவிடுவதில்லை. எல்லா விஷயங்களையும் கடவுள் முற்றிலும் அறிந்தவராக இருக்கின்றார்.

9:116

إِنَّ اللَّهَ لَهُ مُلكُ السَّمٰوٰتِ وَالأَرضِ يُحى ۦ وَيُميتُ وَما لَكُم مِن دونِ اللَّهِ مِن وَلِىٍّ وَلا نَصيرٍ

கடவுளுக்கே வானங்கள் மற்றும் பூமியின் ஆட்சியதிகாரம் உரியது. அவர் வாழ்வையும் மரணத்தையும் கட்டுப்படுத்துகின்றார். ஓர் இரட்சகராகவும் அதிபதியாகவும் கடவுளுடன் எவரும் உங்களுக்கு இல்லை.

9:117

لَقَد تابَ اللَّهُ عَلَى النَّبِىِّ وَالمُهٰجِرينَ وَالأَنصارِ الَّذينَ اتَّبَعوهُ فى ساعَةِ العُسرَةِ مِن بَعدِ ما كادَ يَزيغُ قُلوبُ فَريقٍ مِنهُم ثُمَّ تابَ عَلَيهِم إِنَّهُ بِهِم رَءوفٌ رَحيمٌ

நபியையும், புலம் பெயர்ந்தோரையும் (முஹாஜிரீன்) கஷ்ட காலங்களில் அவரைப் பின்பற்றி, அவர்களை உபசரித்து அவர்களுக்குப் புகலிடம் தந்த ஆதரவாளர்களையும் (அன்ஸார்) கடவுள் மீட்டுக் கொண்டார். அப்போதுதான் அவர்களில் சிலருடைய இதயங்கள் கிட்டத்தட்டத் தடுமாறின. ஆனால் அவர்களை அவர் மீட்டுக் கொண்டார், ஏனெனில் அவர்கள் பால் இரக்கமுடையவராக அவர் இருக்கின்றார், மிக்க கருணையாளர்.

9:118

وَعَلَى الثَّلٰثَةِ الَّذينَ خُلِّفوا حَتّىٰ إِذا ضاقَت عَلَيهِمُ الأَرضُ بِما رَحُبَت وَضاقَت عَلَيهِم أَنفُسُهُم وَظَنّوا أَن لا مَلجَأَ مِنَ اللَّهِ إِلّا إِلَيهِ ثُمَّ تابَ عَلَيهِم لِيَتوبوا إِنَّ اللَّهَ هُوَ التَّوّابُ الرَّحيمُ

பின்னால் தங்கிவிட்டவர்களான அம்மூவரும் கூட (மீட்டுக்கொள்ளப்பட்டனர்). அவர்கள் தங்களுடைய எல்லா நம்பிக்கையையும் கிட்டத்தட்ட இழந்துவிடும் வண்ணம் விசாலமான இந்தப் பூமி அவர்களுக்கு மிகவும் குறுகியதாகிவிட்டது. இறுதியில், கடவுளிடமிருந்து தப்பித்தல் அவர்பால் அன்றி, எதுவுமில்லை என்பதை அவர்கள் புரிந்து கொண்டனர். அவர்கள் பாவத்திற்காக வருந்தும் பொருட்டு, பின்னர் அவர்களை அவர் மீட்டெடுத்தார். கடவுள்தான் மீட்பவர், மிக்க கருணையாளர்.

9:119

يٰأَيُّهَا الَّذينَ ءامَنُوا اتَّقُوا اللَّهَ وَكونوا مَعَ الصّٰدِقينَ

நம்பிக்கை கொண்டோரே உங்களைத்தான், நீங்கள் கடவுள் பக்தி கொள்ள வேண்டும், மேலும் உண்மையாளர்களுடன் இருக்க வேண்டும்.

9:120

ما كانَ لِأَهلِ المَدينَةِ وَمَن حَولَهُم مِنَ الأَعرابِ أَن يَتَخَلَّفوا عَن رَسولِ اللَّهِ وَلا يَرغَبوا بِأَنفُسِهِم عَن نَفسِهِ ذٰلِكَ بِأَنَّهُم لا يُصيبُهُم ظَمَأٌ وَلا نَصَبٌ وَلا مَخمَصَةٌ فى سَبيلِ اللَّهِ وَلا يَطَـٔونَ مَوطِئًا يَغيظُ الكُفّارَ وَلا يَنالونَ مِن عَدُوٍّ نَيلًا إِلّا كُتِبَ لَهُم بِهِ عَمَلٌ صٰلِحٌ إِنَّ اللَّهَ لا يُضيعُ أَجرَ المُحسِنينَ

மாநகரவாசிகளோ, அன்றி அவர்களைச் சூழ்ந்து இருக்கும் அரேபியர்களோ கடவுளின் தூதரிடமிருந்து, (அவர் போருக்காக ஒன்று திரண்டு புறப்படும் போது) பின்தங்கிக் கொள்ள முனைய வேண்டாம். அன்றியும் அவருக்கு ஆதரவளிப்பதை விடத் தங்களுடைய சொந்த விவகாரங்களுக்கு முன்னுரிமை தர வேண்டாம். இது ஏனெனில், கடவுளுக்காக அவர்கள் எந்தத் தாகத்தையோ அல்லது எந்தப் பிரயத்தனத்தையோ, அல்லது பசியையோ அனுபவிப்பதில்லை, அல்லது நம்பமறுப்பவர்களைக் கோபப்படுத்துகின்ற எந்த ஓர் அடியையும் எடுத்து வைப்பதில்லை, அல்லது எதிரியின் மீது எந்தக் கஷ்டத்தையும் ஏற்படுத்துவதில்லை, அவர்களுக்குரியதொரு நன்மையாக அது பதியப்பட்டிடாமல். நன்மைகள் செய்வோருக்குப் பிரதிபலன் அளிக்க, கடவுள் ஒருபோதும் தவறுவதில்லை.

9:121

وَلا يُنفِقونَ نَفَقَةً صَغيرَةً وَلا كَبيرَةً وَلا يَقطَعونَ وادِيًا إِلّا كُتِبَ لَهُم لِيَجزِيَهُمُ اللَّهُ أَحسَنَ ما كانوا يَعمَلونَ

அவர்களுக்கான நன்மைகள் பதியப்படாமல், சிறியதோ அல்லது பெரியதோ, எந்தச் செலவினங்களுக்கும் அவர்கள் உள்ளாவதில்லை, அல்லது எந்தப் பள்ளத்தாக்கையும் அவர்கள் கடப்பதில்லை. கடவுள் நிச்சயமாக, அவர்களுடைய காரியங்களுக்காகத் தாராளமாக அவர்களுக்கு வெகுமதியளிப்பார்.

9:122

وَما كانَ المُؤمِنونَ لِيَنفِروا كافَّةً فَلَولا نَفَرَ مِن كُلِّ فِرقَةٍ مِنهُم طائِفَةٌ لِيَتَفَقَّهوا فِى الدّينِ وَلِيُنذِروا قَومَهُم إِذا رَجَعوا إِلَيهِم لَعَلَّهُم يَحذَرونَ

நம்பிக்கையாளர்கள் ஒன்று திரண்டு புறப்பட்டால், அவர்களில் எல்லாரும் அவ்வாறு செய்துவிடவேண்டாம். ஒவ்வொரு குழுமத்திலிருந்தும் ஒரு சிலர், தங்கள் நேரத்தை அர்ப்பணித்துக் கொண்டு மார்க்கத்தைக் கற்றுக்கொள்வதற்காகப் புறப்பட வேண்டும். இவ்விதமாக, அவர்கள் திரும்பி வரும் போது, தங்கள் சமூகத்தாரிடம் அறிவைப் பரப்பிவிட முடியும், மார்க்கரீதியில் அறிந்து கொண்டவர்களாக அவர்கள் இருந்து கொள்ளும் பொருட்டு.

9:123

يٰأَيُّهَا الَّذينَ ءامَنوا قٰتِلُوا الَّذينَ يَلونَكُم مِنَ الكُفّارِ وَليَجِدوا فيكُم غِلظَةً وَاعلَموا أَنَّ اللَّهَ مَعَ المُتَّقينَ

நம்பிக்கை கொண்டோரே, உங்களைத் தாக்கும் நம்பமறுப்போருடன் நீங்கள் சண்டையிட வேண்டும்- அவர்கள் உங்களிடம் கடுமையைக் காணட்டும்- மேலும் கடவுள் நன்னெறியாளர்களுடன் இருக்கின்றார் என்பதை அறிந்து கொள்ளுங்கள்.

9:124

وَإِذا ما أُنزِلَت سورَةٌ فَمِنهُم مَن يَقولُ أَيُّكُم زادَتهُ هٰذِهِ إيمٰنًا فَأَمَّا الَّذينَ ءامَنوا فَزادَتهُم إيمٰنًا وَهُم يَستَبشِرونَ

ஒரு சூரா வெளிப்படுத்தப்பட்டபோது, அவர்களில் சிலர் சொல்லக்கூடும், இந்த சூரா உங்களில் எவருடைய விசுவாசத்தையேனும் பலப்படுத்தியதா? நிச்சயமாக, அது நம்பிக்கை கொண்டோரின் விசுவாசத்தைப் பலப்படுத்தவே செய்தது, மேலும் அவர்கள் எந்த ஒரு வெளிப்பாட்டிலும் களிப்பே அடைகின்றனர்.

9:125

وَأَمَّا الَّذينَ فى قُلوبِهِم مَرَضٌ فَزادَتهُم رِجسًا إِلىٰ رِجسِهِم وَماتوا وَهُم كٰفِرونَ

தங்கள் இதயங்களில் சந்தேகங்களைத் தாங்கி இருப்போருக்கோ, அது உண்மையில் அவர்களுடைய அசுத்தத்துடன் மேலும் அசுத்தத்தையே கூட்டியது, மேலும் அவர்கள் நம்பமறுப்பவர்களாகவே மரணித்தார்கள்.

9:126

أَوَلا يَرَونَ أَنَّهُم يُفتَنونَ فى كُلِّ عامٍ مَرَّةً أَو مَرَّتَينِ ثُمَّ لا يَتوبونَ وَلا هُم يَذَّكَّرونَ

ஒவ்வொரு வருடமும் ஒரு முறையோ அல்லது இரு முறைகளோ அவர்கள் கடினமான சோதனைகளில் கஷ்டப்படுகின்றனர் என்பதை அவர்கள் காணவில்லையா? ஆயினும், அவர்கள் பாவத்திற்கு வருந்துவதற்கு எப்பொழுதும் தவறிவிடுகின்றனர், மேலும் கவனத்தில் எடுத்துக்கொள்ளவும் தவறிவிடுகின்றனர்.?

9:127

وَإِذا ما أُنزِلَت سورَةٌ نَظَرَ بَعضُهُم إِلىٰ بَعضٍ هَل يَرىٰكُم مِن أَحَدٍ ثُمَّ انصَرَفوا صَرَفَ اللَّهُ قُلوبَهُم بِأَنَّهُم قَومٌ لا يَفقَهونَ

ஒரு சூரா வெளிப்படுத்தப்படும் போதெல்லாம், அவர்களில் சிலர் இவ்வாறு கூறுவதைப்போல் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர்: உங்களை எவரேனும் பார்த்தார்களா? பின்னர் அவர்கள் சென்றுவிட்டனர். இவ்வாறாக, கடவுள் அவர்களுடைய இதயங்களைத் திசை திருப்பிவிட்டார், ஏனெனில் அவர்கள் புரிந்து கொள்ளாத மக்களாக இருக்கின்றனர்.

‹ அத்தியாயம் 8அத்தியாயம் 10 ›