Kadavulmattum.orgகுர்ஆன் · அனைத்து 114 அத்தியாயங்கள்

33. அல்-அஹ்ஜாப் (படையினர்)

الأحزاب · 73 வசனங்கள் · மதீனாவில் அருளப்பட்டது

செயலியில் வாசிக்க

‹ அத்தியாயம் 32அத்தியாயம் 34 ›
33:1

يٰأَيُّهَا النَّبِىُّ اتَّقِ اللَّهَ وَلا تُطِعِ الكٰفِرينَ وَالمُنٰفِقينَ إِنَّ اللَّهَ كانَ عَليمًا حَكيمًا

உம்மைத்தான் நபியே, நீர் கடவுளிடம் பக்தி செலுத்த வேண்டும், மேலும் நம்பமறுப்பவர்களுக்கும் நயவஞ்சகர்களுக்கும் கீழ்ப்படியாதீர். கடவுள் எல்லாம் அறிந்தவர், ஞானம் மிகுந்தவர்.

33:2

وَاتَّبِع ما يوحىٰ إِلَيكَ مِن رَبِّكَ إِنَّ اللَّهَ كانَ بِما تَعمَلونَ خَبيرًا

உம்முடைய இரட்சகரிடமிருந்து உமக்கு வெளிப்படுத்தப்பட்டவற்றைப் பின்பற்றுவீராக. நீங்கள் அனைவரும் செய்கின்ற ஒவ்வொன்றைப் பற்றியும் கடவுள் முற்றிலும் நன்கறிகின்றார்.

33:3

وَتَوَكَّل عَلَى اللَّهِ وَكَفىٰ بِاللَّهِ وَكيلًا

மேலும் உமது பொறுப்பைக் கடவுள் மீது வைப்பீராக. ஒரு பொறுப்பாளராகக் கடவுள் போதுமானவர்.

33:4

ما جَعَلَ اللَّهُ لِرَجُلٍ مِن قَلبَينِ فى جَوفِهِ وَما جَعَلَ أَزوٰجَكُمُ الّٰـٔى تُظٰهِرونَ مِنهُنَّ أُمَّهٰتِكُم وَما جَعَلَ أَدعِياءَكُم أَبناءَكُم ذٰلِكُم قَولُكُم بِأَفوٰهِكُم وَاللَّهُ يَقولُ الحَقَّ وَهُوَ يَهدِى السَّبيلَ

கடவுள் எந்த மனிதனுக்கும் அவனுடைய நெஞ்சத்தில் இரண்டு இதயங்களைத் தரவில்லை. அன்றியும் (உங்களுடைய சமூக வழக்கத்திற்கேற்ப) நீங்கள் பிணையறுத்துக்கொள்கின்ற உங்கள் மனைவியரை உங்களுடைய தாய்மார்களாக* அவர் மாற்றிவிடுவதுமில்லை. அன்றி உங்களுடைய தத்துப் பிள்ளைகளை மரபணுவழிச் சந்ததியினராக மாற்றிவிடுவதுமில்லை. இவையெல்லாம் நீங்களே கண்டுபிடித்துக் கொண்ட வெறும் கூற்றுக்களேயாகும். கடவுள் சத்தியத்தையே உரைக்கின்றார், மேலும் அவர் (நேரான) பாதையில் வழிநடத்துகின்றார்.

33:5

ادعوهُم لِـٔابائِهِم هُوَ أَقسَطُ عِندَ اللَّهِ فَإِن لَم تَعلَموا ءاباءَهُم فَإِخوٰنُكُم فِى الدّينِ وَمَوٰليكُم وَلَيسَ عَلَيكُم جُناحٌ فيما أَخطَأتُم بِهِ وَلٰكِن ما تَعَمَّدَت قُلوبُكُم وَكانَ اللَّهُ غَفورًا رَحيمًا

உங்களுடைய தத்துப் பிள்ளைகளுக்கு, அவர்களுடைய மரபணுவழிப் பெற்றோர்களுடனான அவர்களுடைய உறவைப்பேணிக் கொள்ளும் வண்ணம் நீங்கள் பெயர்கள் இட வேண்டும். கடவுளின் பார்வையில் இதுவே மிகவும் நீதமானது. அவர்களுடைய பெற்றோர்களை நீங்கள் அறியாவிட்டால், பின்னர், உங்களுடைய மார்க்கச் சகோதரர்கள் என்ற முறையில், அவர்களை நீங்கள் உங்களுடைய குடும்பத்தின் அங்கத்தினர்களைப் போல் நடத்திட வேண்டும். இவ்விஷயத்தில் நீங்கள் ஒரு தவறு செய்துவிட்டால், நீங்கள் பாவம் ஒன்றைச் செய்துவிடவில்லை; குறிக்கோளுடன் கூடிய உங்களுடைய நோக்கங்களுக்கே நீங்கள் பொறுப்பாகின்றீர்கள். கடவுள் மன்னிப்பவர், மிக்க கருணையாளர்.

33:6

النَّبِىُّ أَولىٰ بِالمُؤمِنينَ مِن أَنفُسِهِم وَأَزوٰجُهُ أُمَّهٰتُهُم وَأُولُوا الأَرحامِ بَعضُهُم أَولىٰ بِبَعضٍ فى كِتٰبِ اللَّهِ مِنَ المُؤمِنينَ وَالمُهٰجِرينَ إِلّا أَن تَفعَلوا إِلىٰ أَولِيائِكُم مَعروفًا كانَ ذٰلِكَ فِى الكِتٰبِ مَسطورًا

அவர்கள் ஒருவர் மற்றவருடன் இருப்பதை விடவும் நம்பிக்கையாளர்களுக்கு நபியானவர் மிகவும் நெருக்கமானவர் ஆவார், மேலும் அவருடைய மனைவியர் அவர்களுக்குத் தாய்மார்களைப் போன்றவர்கள் ஆவர். கடவுளின் வேதத்திற்கேற்ப உறவினர்கள் ஒருவர் மற்றவரிடம் அக்கறை எடுத்துக் கொண்டாக வேண்டும். எனவே, நம்பிக்கையாளர்கள் முதலில் தங்களுடைய சொந்தக் குடும்பத்தின் மீது கவனம் எடுத்துக் கொண்டுவிட்ட பட்சத்தில், தங்களிடம் புலம் பெயர்ந்து வரும் தங்களுடைய உறவினர்கள் மீது அக்கறை எடுத்துக்கொள்ள வேண்டும். இவை இந்த வேதத்தின் கட்டளைகளாகும்.

33:7

وَإِذ أَخَذنا مِنَ النَّبِيّـۧنَ ميثٰقَهُم وَمِنكَ وَمِن نوحٍ وَإِبرٰهيمَ وَموسىٰ وَعيسَى ابنِ مَريَمَ وَأَخَذنا مِنهُم ميثٰقًا غَليظًا

நபிமார்களிடம் அவர்களுடைய உடன்படிக்கையை நாம் எடுத்தோம் என்பதை நினைவு கூர்வீராக, (முஹம்மதே) நீர் உட்பட, நோவா, ஆப்ரஹாம், மோஸஸ் மற்றும் மேரியின் மகனான ஜீஸஸ். அவர்களிடமிருந்து பவித்திரமானதொரு வாக்குறுதியை நாம் எடுத்தோம்.*

33:8

لِيَسـَٔلَ الصّٰدِقينَ عَن صِدقِهِم وَأَعَدَّ لِلكٰفِرينَ عَذابًا أَليمًا

அதன் பின்னர், சத்தியவான்களை அவர்களுடைய சத்தியத்தன்மை குறித்து அவர் நிச்சயம் விசாரிப்பார், மேலும் (இந்தக் குர்ஆனிய உண்மையை) நம்பமறுப்பவர்களுக்கு வலிநிறைந்ததொரு தண்டனையைத் தயார் செய்துள்ளார்.

33:9

يٰأَيُّهَا الَّذينَ ءامَنُوا اذكُروا نِعمَةَ اللَّهِ عَلَيكُم إِذ جاءَتكُم جُنودٌ فَأَرسَلنا عَلَيهِم ريحًا وَجُنودًا لَم تَرَوها وَكانَ اللَّهُ بِما تَعمَلونَ بَصيرًا

நம்பிக்கை கொண்டோரே உங்களைத்தான், உங்கள் மீதான கடவுளின் ஆசிகளை நினைவில் கொள்ளுங்கள்; படைவீரர்கள் உங்களைத் தாக்கிய பொழுது, அவர்கள் மீது உக்கிரமான காற்றையும் கண்ணுக்குத் தெரியாத படை வீரர்களையும் நாம் அனுப்பினோம். நீங்கள் செய்கின்ற ஒவ்வொன்றையும் கடவுள் பார்க்கின்றார்.

33:10

إِذ جاءوكُم مِن فَوقِكُم وَمِن أَسفَلَ مِنكُم وَإِذ زاغَتِ الأَبصٰرُ وَبَلَغَتِ القُلوبُ الحَناجِرَ وَتَظُنّونَ بِاللَّهِ الظُّنونا۠

உங்களுக்கு மேலிருந்தும், உங்களுக்குக் கீழிருந்தும் அவர்கள் வந்த போது, உங்களுடைய கண்கள் திகிலடைந்தன, உங்களுடைய இதயங்கள் பொறுமையை இழந்து பதறின, மேலும் நீங்கள் கடவுளைப் பற்றித் தகாத எண்ணங்களுக்கு இடமளித்தீர்கள்.

33:11

هُنالِكَ ابتُلِىَ المُؤمِنونَ وَزُلزِلوا زِلزالًا شَديدًا

அப்போதுதான் நம்பிக்கையாளர்கள் மெய்யாகவே சோதிக்கப்பட்டார்கள்; அவர்கள் கடுமையாக ஆட்டப்பட்டார்கள்.

33:12

وَإِذ يَقولُ المُنٰفِقونَ وَالَّذينَ فى قُلوبِهِم مَرَضٌ ما وَعَدَنَا اللَّهُ وَرَسولُهُ إِلّا غُرورًا

நயவஞ்சகர்களும் தங்கள் இதயங்களில் சந்தேகங்களுடனிருப்பவர்களும் கூறினர், கடவுளும் அவருடைய தூதரும் நமக்கு வாக்களித்தது ஒரு மாயை என்பதை விட அதிகமில்லை!

33:13

وَإِذ قالَت طائِفَةٌ مِنهُم يٰأَهلَ يَثرِبَ لا مُقامَ لَكُم فَارجِعوا وَيَستَـٔذِنُ فَريقٌ مِنهُمُ النَّبِىَّ يَقولونَ إِنَّ بُيوتَنا عَورَةٌ وَما هِىَ بِعَورَةٍ إِن يُريدونَ إِلّا فِرارًا

அவர்களில் ஒரு கூட்டத்தார் கூறினர், யத்ரிப்வாசிகளே, நீங்கள் வெற்றியை அடைய முடியாது; திரும்பிச் செல்லுங்கள். மற்றவர்கள் நபியிடத்தில் சாக்குப்போக்குகள் கூறினர்: எங்களுடைய வீடுகள் பாதுகாப்பற்றவையாக உள்ளன, அவை பாதுகாப்பற்றவையாக இல்லாதபோதே. அவர்கள் திரும்பி ஓடிவிடவே விரும்பினார்கள்.

33:14

وَلَو دُخِلَت عَلَيهِم مِن أَقطارِها ثُمَّ سُئِلُوا الفِتنَةَ لَـٔاتَوها وَما تَلَبَّثوا بِها إِلّا يَسيرًا

எதிரி படையெடுத்து வந்து, மேலும் சேர்ந்து கொள்ளுமாறு அவர்களைக் கேட்டுக் கொண்டால், அவர்கள் தயக்கமின்றி எதிரியுடன் சேர்ந்து கொண்டிருப்பார்கள்.

33:15

وَلَقَد كانوا عٰهَدُوا اللَّهَ مِن قَبلُ لا يُوَلّونَ الأَدبٰرَ وَكانَ عَهدُ اللَّهِ مَسـٔولًا

அவர்கள் புறங்காட்டித் திரும்பி ஓடிவிடமாட்டார்கள் என்று கடந்த காலத்தில் அவர்கள் கடவுளிடம் வாக்குறுதி அளித்திருந்தனர்; கடவுளிடம் ஒரு வாக்குறுதி செய்வது ஒரு மிகப்பெரும் பொறுப்பை உள்ளடக்கியதாகும்.

33:16

قُل لَن يَنفَعَكُمُ الفِرارُ إِن فَرَرتُم مِنَ المَوتِ أَوِ القَتلِ وَإِذًا لا تُمَتَّعونَ إِلّا قَليلًا

கூறுவீராக, நீங்கள் திரும்பி ஓடினால், மரணத்தை விட்டோ அல்லது கொல்லப்படுவதை விட்டோ நீங்கள் ஒருபோதும் திரும்பி ஓடிவிட முடியாது. என்ன நிகழ்ந்தாலும் ஒரு பொருட்டல்ல, குறுகியதொரு காலம் மட்டுமே நீங்கள் நீண்டு வாழ்கின்றீர்கள்.

33:17

قُل مَن ذَا الَّذى يَعصِمُكُم مِنَ اللَّهِ إِن أَرادَ بِكُم سوءًا أَو أَرادَ بِكُم رَحمَةً وَلا يَجِدونَ لَهُم مِن دونِ اللَّهِ وَلِيًّا وَلا نَصيرًا

கூறுவீராக, கடவுள் ஏதேனும் துன்பத்தை உங்களுக்கு நாடியிருந்தால், அல்லது ஏதேனும் ஆசீர்வாதத்தை நாடியிருந்தால் அவரிடமிருந்து உங்களைக் காப்பாற்றுபவர் யார்? கடவுளுடன் வேறு எந்த இரட்சகரையும் எஜமானரையும், அவர்கள் ஒருபோதும் காணமுடியாது.

33:18

قَد يَعلَمُ اللَّهُ المُعَوِّقينَ مِنكُم وَالقائِلينَ لِإِخوٰنِهِم هَلُمَّ إِلَينا وَلا يَأتونَ البَأسَ إِلّا قَليلًا

உங்களில் இடையூறு செய்பவர்களையும், மேலும் தங்களுடைய சகாக்களிடம், நாம் அனைவரும் பின் தங்கியிருந்துவிடுவோம், என்று கூறுபவர்களையும் கடவுள் முற்றிலும் அறிந்திருக்கின்றார். அரிதாகவே அவர்கள் தற்காப்புக்காகப் புறப்படுகின்றனர்.

33:19

أَشِحَّةً عَلَيكُم فَإِذا جاءَ الخَوفُ رَأَيتَهُم يَنظُرونَ إِلَيكَ تَدورُ أَعيُنُهُم كَالَّذى يُغشىٰ عَلَيهِ مِنَ المَوتِ فَإِذا ذَهَبَ الخَوفُ سَلَقوكُم بِأَلسِنَةٍ حِدادٍ أَشِحَّةً عَلَى الخَيرِ أُولٰئِكَ لَم يُؤمِنوا فَأَحبَطَ اللَّهُ أَعمٰلَهُم وَكانَ ذٰلِكَ عَلَى اللَّهِ يَسيرًا

அத்துடன், அவர்கள் உம்முடன் புழங்கும்போது கஞ்சத்தனமாகவும் நடந்து கொள்கின்றனர். சமூகத்தை ஏதேனும் அச்சுறுத்தினால், மரணம் அவர்களிடம் ஏற்கெனவே வந்துவிட்டதைப் போல், அவர்களுடைய கண்கள் அச்சத்தால் உருளுவதை நீர் காண்கின்றீர். நெருக்கடி நீங்கிவிட்டால், உடனே அவர்கள் கூரிய நாவுகளால் உங்களைச் சாடுகின்றனர். தங்களுடைய செல்வத்தில் அவர்கள் மிகவும் கஞ்சத்தனத்துடன் இருக்கின்றனர். இவர்கள் நம்பிக்கையாளர்கள் அல்லர், மேலும், அதன் விளைவாக, கடவுள் அவர்களுடைய காரியங்களைச் செல்லாதவையாக்கிவிட்டார். இதனைச் செய்வது கடவுளுக்கு எளிதானதேயாகும்.

33:20

يَحسَبونَ الأَحزابَ لَم يَذهَبوا وَإِن يَأتِ الأَحزابُ يَوَدّوا لَو أَنَّهُم بادونَ فِى الأَعرابِ يَسـَٔلونَ عَن أَنبائِكُم وَلَو كانوا فيكُم ما قٰتَلوا إِلّا قَليلًا

படையினர் திரும்பிவரக் கூடும் என்று அவர்கள் நினைத்தார்கள். அப்படி நடந்திருந்தால், அவர்கள் பாலைவனத்தில் தொலைந்து போனவர்களாகி, உங்களைப்பற்றிய செய்திகளை வெகுதொலைவிலிருந்து கேட்டுக் கொண்டிருக்க வேண்டுமென அவர்கள் விரும்புவார்கள். அவர்கள் உங்களுடன் இருக்கும்பொழுது படையினர் உங்களைத் தாக்கியிருந்தால், அவர்கள் அரிதாகவே உங்களுக்கு ஆதரவளிப்பார்கள்.

33:21

لَقَد كانَ لَكُم فى رَسولِ اللَّهِ أُسوَةٌ حَسَنَةٌ لِمَن كانَ يَرجُوا اللَّهَ وَاليَومَ الـٔاخِرَ وَذَكَرَ اللَّهَ كَثيرًا

உங்களில், கடவுளையும் இறுதி நாளையும் தேடுபவர்களுக்கும், மேலும் இடையறாது கடவுளைப் பற்றி நினைப்பவர்களுக்கும் கடவுளின் தூதர் நல்லதொரு முன்மாதிரியை அமைத்துள்ளார்.

33:22

وَلَمّا رَءَا المُؤمِنونَ الأَحزابَ قالوا هٰذا ما وَعَدَنَا اللَّهُ وَرَسولُهُ وَصَدَقَ اللَّهُ وَرَسولُهُ وَما زادَهُم إِلّا إيمٰنًا وَتَسليمًا

(தாக்குவதற்குத் தயாராக) படையினரை உண்மையான நம்பிக்கையாளர்கள் கண்ட பொழுது, அவர்கள் கூறினார்கள், இதுதான் கடவுளும் அவருடைய தூதரும் நமக்கு வாக்களித்தது. மேலும் கடவுளும் அவருடைய தூதரும் உண்மையாளர்களாகவே இருக்கின்றனர். இது (ஆபத்தான அச்சூழ்நிலை) அவர்களுடைய விசுவாசத்தைப் பலப்படுத்தவும் அவர்களுடைய சரணடைதலை அதிகரிக்கவும் மட்டுமே செய்தது.

33:23

مِنَ المُؤمِنينَ رِجالٌ صَدَقوا ما عٰهَدُوا اللَّهَ عَلَيهِ فَمِنهُم مَن قَضىٰ نَحبَهُ وَمِنهُم مَن يَنتَظِرُ وَما بَدَّلوا تَبديلًا

கடவுளுடனான தங்களுடைய வாக்குறுதிகளைப் பூர்த்தி செய்துவிட்டவர்கள் நம்பிக்கையாளர்களில் இருக்கின்றனர். அவர்களில் சிலர் மரணமெய்திவிட்டனர், அதே சமயம் மற்றவர்களோ ஒருபோதும் தடுமாறாது, தயாராக நிற்கின்றனர்.

33:24

لِيَجزِىَ اللَّهُ الصّٰدِقينَ بِصِدقِهِم وَيُعَذِّبَ المُنٰفِقينَ إِن شاءَ أَو يَتوبَ عَلَيهِم إِنَّ اللَّهَ كانَ غَفورًا رَحيمًا

அவர்களுடைய சத்தியத்தன்மைக்காக சத்தியவான்களுக்குக் கடவுள் நிச்சயமாகப் பிரதிபலனளிப்பார், மேலும் நயவஞ்சகர்களைத் தண்டிப்பார், அவ்வாறு அவர் நாடினால், அவர்களை மீட்டுக்கொள்வார். கடவுள் மன்னிப்பவர், மிக்க கருணையாளர்.

33:25

وَرَدَّ اللَّهُ الَّذينَ كَفَروا بِغَيظِهِم لَم يَنالوا خَيرًا وَكَفَى اللَّهُ المُؤمِنينَ القِتالَ وَكانَ اللَّهُ قَوِيًّا عَزيزًا

நம்பமறுப்பவர்களை அவர்களுடைய கோபத்துடன் கடவுள் திருப்பி விரட்டினார், மேலும் அவர்கள் வெறுங்கையுடன் சென்றனர். கடவுள் இவ்விதமாக எந்தச் சண்டையிலிருந்தும் நம்பிக்கையாளர்களைத் தவிர்த்துவிட்டார். கடவுள் சக்தி மிக்கவர், எல்லாம் வல்லவர்.

33:26

وَأَنزَلَ الَّذينَ ظٰهَروهُم مِن أَهلِ الكِتٰبِ مِن صَياصيهِم وَقَذَفَ فى قُلوبِهِمُ الرُّعبَ فَريقًا تَقتُلونَ وَتَأسِرونَ فَريقًا

அத்துடன் வேதத்தையுடைய மக்களில் உள்ள அவர்களுடைய கூட்டாளிகளை, அவர்களுடைய பாதுகாப்பான நிலைகளிலிருந்து அவர் கீழே கொண்டு வந்தார், மேலும் அவர்களுடைய இதயங்களுக்குள் திகிலை எறிந்தார். அவர்களில் சிலரை நீங்கள் கொன்றீர்கள், மேலும் சிலரை நீங்கள் சிறைப் பிடித்தீர்கள்.

33:27

وَأَورَثَكُم أَرضَهُم وَدِيٰرَهُم وَأَموٰلَهُم وَأَرضًا لَم تَطَـٔوها وَكانَ اللَّهُ عَلىٰ كُلِّ شَىءٍ قَديرًا

அவர்களுடைய நிலங்களுக்கும், அவர்களுடைய வீடுகளுக்கும், அவர்களுடைய பணத்திற்கும், மேலும் நீங்கள் ஒருபோதும் மிதித்திராத நிலங்களுக்கும் நீங்கள் வாரிசாகும்படி அவர் செய்தார். கடவுள் எல்லா விஷயங்களையும் முழுமையான கட்டுப்பாட்டில் கொண்டுள்ளார்.

33:28

يٰأَيُّهَا النَّبِىُّ قُل لِأَزوٰجِكَ إِن كُنتُنَّ تُرِدنَ الحَيوٰةَ الدُّنيا وَزينَتَها فَتَعالَينَ أُمَتِّعكُنَّ وَأُسَرِّحكُنَّ سَراحًا جَميلًا

நபியே, உம்மனைவியரிடம் கூறுவீராக, இந்த வாழ்வையும் அதன் ஆடம்பரங்களையும் தேடுபவர்களாக நீங்கள் இருந்தால், பின்னர் நான் உங்களுக்கு நஷ்டஈடு வழங்கி, இணக்கமான முறையில் சென்றுவிட உங்களை அனுமதிக்கின்றேன்.

33:29

وَإِن كُنتُنَّ تُرِدنَ اللَّهَ وَرَسولَهُ وَالدّارَ الـٔاخِرَةَ فَإِنَّ اللَّهَ أَعَدَّ لِلمُحسِنٰتِ مِنكُنَّ أَجرًا عَظيمًا

ஆனால் நீங்கள் கடவுளையும் அவருடைய தூதரையும், மேலும் மறுவுலகின் வீட்டையும் தேடுபவர்களாக இருந்தால், பின்னர் உங்களில் உள்ள நன்னெறியாளர்களுக்கு மகத்தானதொரு பிரதிபலனைக் கடவுள் தயார் செய்துள்ளார்.

33:30

يٰنِساءَ النَّبِىِّ مَن يَأتِ مِنكُنَّ بِفٰحِشَةٍ مُبَيِّنَةٍ يُضٰعَف لَهَا العَذابُ ضِعفَينِ وَكانَ ذٰلِكَ عَلَى اللَّهِ يَسيرًا

நபியின் மனைவியரே, உங்களில் எவரேனும் ஒரு பெரும்பாவத்தைச் செய்வீர்களாயின், அவருக்குரிய தண்டனை இரட்டிப்பாக்கப்படும். இதனைச் செய்வது கடவுளுக்கு எளிதானதேயாகும்.

33:31

وَمَن يَقنُت مِنكُنَّ لِلَّهِ وَرَسولِهِ وَتَعمَل صٰلِحًا نُؤتِها أَجرَها مَرَّتَينِ وَأَعتَدنا لَها رِزقًا كَريمًا

உங்களில் எவரொருவர் கடவுளுக்கும் அவருடைய தூதருக்கும் கீழ்ப்படிந்து, நன்னெறியானதொரு வாழ்வு நடத்துகின்றாரோ, அவருக்குப் பிரதிபலனை நாம் இருமடங்காக வழங்குவோம், மேலும் தாராளமானதொரு வாழ்வாதாரத்தையும் அவருக்காக நாம் தயார் செய்துள்ளோம்.

33:32

يٰنِساءَ النَّبِىِّ لَستُنَّ كَأَحَدٍ مِنَ النِّساءِ إِنِ اتَّقَيتُنَّ فَلا تَخضَعنَ بِالقَولِ فَيَطمَعَ الَّذى فى قَلبِهِ مَرَضٌ وَقُلنَ قَولًا مَعروفًا

நபியின் மனைவியரே, நீங்கள் மற்ற எந்தப் பெண்களையும் போன்றவர்கள் அல்லர், நீங்கள் நன்னெறியைக் கடைப்பிடிப்பீர்களாயின். (உங்களுக்கு அதிகமானதொரு பொறுப்புள்ளது). எனவே, தங்களுடைய இதயங்களில் நோய் உடையவர்கள் தவறான எண்ணங்கள் கொள்ளாதிருக்கும் பொருட்டு, நீங்கள் மிகவும் குழைந்து பேச வேண்டாம்; நன்னெறிகளை மட்டுமே நீங்கள் பேச வேண்டும்.

33:33

وَقَرنَ فى بُيوتِكُنَّ وَلا تَبَرَّجنَ تَبَرُّجَ الجٰهِلِيَّةِ الأولىٰ وَأَقِمنَ الصَّلوٰةَ وَءاتينَ الزَّكوٰةَ وَأَطِعنَ اللَّهَ وَرَسولَهُ إِنَّما يُريدُ اللَّهُ لِيُذهِبَ عَنكُمُ الرِّجسَ أَهلَ البَيتِ وَيُطَهِّرَكُم تَطهيرًا

நீங்கள் உங்களுடைய வீடுகளில் தங்கியிருக்க வேண்டும், மேலும் பழைய அறியாமை நாட்களில் நீங்கள் செய்து கொண்டிருந்ததைப் போல், மக்களுடன் அளவுக்கதிகமாகக் கலக்காதீர்கள். நீங்கள் (ஸலாத்) தொடர்புத் தொழுகைகளைக் கடைப்பிடிக்கவும், மேலும் கடமையான (ஜகாத்) தர்மத்தைக் கொடுக்கவும், மேலும் கடவுள் மற்றும் அவருடைய தூதருக்குக் கீழ்ப்படியவும் வேண்டும். புனித ஆலயத்தைச் சுற்றி வசிப்பவர்களே, உங்களைத்தான், கடவுள் உங்களிடமிருந்து அனைத்துத் தீமைகளை அகற்றவும், மேலும் உங்களை முழுமையாகத் தூய்மைப்படுத்தவுமே நாடுகின்றார்.

33:34

وَاذكُرنَ ما يُتلىٰ فى بُيوتِكُنَّ مِن ءايٰتِ اللَّهِ وَالحِكمَةِ إِنَّ اللَّهَ كانَ لَطيفًا خَبيرًا

உங்களுடைய வீடுகளில் ஓதப்படுகின்ற கடவுளின் வெளிப்பாடுகளையும் அவற்றுள் பொதிந்துள்ள ஞானத்தையும் நினைவில் கொள்ளுங்கள். கடவுள் கம்பீரமானவர், நன்கறிந்தவர்.

33:35

إِنَّ المُسلِمينَ وَالمُسلِمٰتِ وَالمُؤمِنينَ وَالمُؤمِنٰتِ وَالقٰنِتينَ وَالقٰنِتٰتِ وَالصّٰدِقينَ وَالصّٰدِقٰتِ وَالصّٰبِرينَ وَالصّٰبِرٰتِ وَالخٰشِعينَ وَالخٰشِعٰتِ وَالمُتَصَدِّقينَ وَالمُتَصَدِّقٰتِ وَالصّٰئِمينَ وَالصّٰئِمٰتِ وَالحٰفِظينَ فُروجَهُم وَالحٰفِظٰتِ وَالذّٰكِرينَ اللَّهَ كَثيرًا وَالذّٰكِرٰتِ أَعَدَّ اللَّهُ لَهُم مَغفِرَةً وَأَجرًا عَظيمًا

சரணடைந்த ஆண்கள், சரணடைந்த பெண்கள், நம்பிக்கை கொண்ட ஆண்கள், நம்பிக்கை கொண்ட பெண்கள், கீழ்ப்படிகின்ற ஆண்கள், கீழ்ப்படிகின்ற பெண்கள், உண்மை நிறைந்த ஆண்கள், உண்மை நிறைந்த பெண்கள், உறுதிப்பாடுடைய ஆண்கள், உறுதிப்பாடுடைய பெண்கள், பக்தியுள்ள ஆண்கள், பக்தியுள்ள பெண்கள், தர்மசிந்தனையுள்ள ஆண்கள், தர்மசிந்தனையுள்ள பெண்கள், நோன்பு நோற்கும் ஆண்கள், நோன்பு நோற்கும் பெண்கள், கற்புடைய ஆண்கள், கற்புடைய பெண்கள், மேலும் கடவுளை அடிக்கடி நினைவு கூர்கின்ற ஆண்கள், மற்றும் நினைவு கூர்கின்ற பெண்கள்; கடவுள் அவர்களுக்காக மன்னிப்பையும் மகத்தானதொரு பிரதிபலனையும் தயார் செய்துள்ளார்.

33:36

وَما كانَ لِمُؤمِنٍ وَلا مُؤمِنَةٍ إِذا قَضَى اللَّهُ وَرَسولُهُ أَمرًا أَن يَكونَ لَهُمُ الخِيَرَةُ مِن أَمرِهِم وَمَن يَعصِ اللَّهَ وَرَسولَهُ فَقَد ضَلَّ ضَلٰلًا مُبينًا

கடவுளும் அவருடைய தூதரும் ஏதேனும் கட்டளையைப் பிறப்பித்துவிட்டால், நம்பிக்கை கொண்ட எந்த ஆணுக்கோ அல்லது நம்பிக்கை கொண்ட பெண்ணுக்கோ, அந்தக் கட்டளை குறித்து தேர்ந்தெடுக்கும் வாய்ப்பு எதுவும் கிடையாது. கடவுளுக்கும் அவருடைய தூதருக்கும் கீழ்ப்படியாத எவரொருவரும் மிக நெடிய வழிகேட்டில் சென்றுவிட்டார்.

33:37

وَإِذ تَقولُ لِلَّذى أَنعَمَ اللَّهُ عَلَيهِ وَأَنعَمتَ عَلَيهِ أَمسِك عَلَيكَ زَوجَكَ وَاتَّقِ اللَّهَ وَتُخفى فى نَفسِكَ مَا اللَّهُ مُبديهِ وَتَخشَى النّاسَ وَاللَّهُ أَحَقُّ أَن تَخشىٰهُ فَلَمّا قَضىٰ زَيدٌ مِنها وَطَرًا زَوَّجنٰكَها لِكَى لا يَكونَ عَلَى المُؤمِنينَ حَرَجٌ فى أَزوٰجِ أَدعِيائِهِم إِذا قَضَوا مِنهُنَّ وَطَرًا وَكانَ أَمرُ اللَّهِ مَفعولًا

கடவுளால் ஆசீர்வதிக்கப்பட்டு, மேலும் உம்மாலும் ஆசீர்வதிக்கப்பட்ட ஒருவரிடம் நீர் கூறியதை நினைவு கூர்வீராக, உம்முடைய மனைவியைத் தக்க வைத்துக்கொள்வீராக, மேலும் கடவுளை அஞ்சிக் கொள்வீராக, மேலும் கடவுள் பிரகடனிக்க நாடியதை உமக்குள்ளேயே நீர் மறைத்துக் கொண்டீர். இவ்விதமாக, கடவுளை மட்டுமே அஞ்ச வேண்டியவராக நீர் இருக்கும் பொழுது, நீர் மக்களுக்கு அஞ்சினீர். ஒரு மனிதன் தன்னுடைய தத்துப்பிள்ளையின் விவாகரத்துச் செய்யப்பட்ட மனைவியை மணந்து கொள்ளலாம் என்ற முன்மாதிரியை நிலைநாட்டுவதற்காக, ஜைது தன்னுடைய மனைவியை விட்டு முழுமையாக நீங்கிக் கொண்டுவிட்ட பின்னர், அவரை நாம் உமக்கு மணம் செய்வித்தோம். கடவுளின் கட்டளைகள் செய்து முடிக்கப்படவேண்டும்.

33:38

ما كانَ عَلَى النَّبِىِّ مِن حَرَجٍ فيما فَرَضَ اللَّهُ لَهُ سُنَّةَ اللَّهِ فِى الَّذينَ خَلَوا مِن قَبلُ وَكانَ أَمرُ اللَّهِ قَدَرًا مَقدورًا

கடவுளால் சட்டபூர்வமானதாக்கப்பட்ட எந்த விஷயத்தையும் செய்வதன் மூலம் நபியானவர் ஒரு தவறைச் செய்துவிடவில்லை. ஆரம்ப காலத் தலை முறைகள் முதல் கடவுளின் வழிமுறை இவ்வாறாகவே இருக்கின்றது. கடவுளின் கட்டளை புனிதமானதொரு கடமையாக இருக்கின்றது.

33:39

الَّذينَ يُبَلِّغونَ رِسٰلٰتِ اللَّهِ وَيَخشَونَهُ وَلا يَخشَونَ أَحَدًا إِلَّا اللَّهَ وَكَفىٰ بِاللَّهِ حَسيبًا

கடவுளின் தூதுச்செய்திகளைச் சேர்ப்பிப்பவர்களும், அவருக்கு மட்டுமே பக்திசெலுத்துபவர்களும், கடவுளைத் தவிர எவரொருவருக்கும் ஒருபோதும் அஞ்ச வேண்டாம். கடவுள்தான் மிகத் திறன் வாய்ந்த கணக்காளர்.

33:40

ما كانَ مُحَمَّدٌ أَبا أَحَدٍ مِن رِجالِكُم وَلٰكِن رَسولَ اللَّهِ وَخاتَمَ النَّبِيّـۧنَ وَكانَ اللَّهُ بِكُلِّ شَىءٍ عَليمًا

உங்களில் எந்த ஆணுக்கும் முஹம்மத் தந்தையாக இருக்கவில்லை. அவர் கடவுளுடைய ஒரு தூதராகவும் நபிமார்களில் இறுதியானவராகவும் இருந்தார். கடவுள் அனைத்து விஷயங்களையும் முற்றிலும் அறிந்தவராக இருக்கின்றார்.

33:41

يٰأَيُّهَا الَّذينَ ءامَنُوا اذكُرُوا اللَّهَ ذِكرًا كَثيرًا

நம்பிக்கை கொண்டோரே உங்களைத்தான், நீங்கள் கடவுளை அடிக்கடி நினைவு கூர்ந்திட வேண்டும்.*

33:42

وَسَبِّحوهُ بُكرَةً وَأَصيلًا

இரவும் பகலும் அவரை நீங்கள் துதித்திட வேண்டும்.

33:43

هُوَ الَّذى يُصَلّى عَلَيكُم وَمَلٰئِكَتُهُ لِيُخرِجَكُم مِنَ الظُّلُمٰتِ إِلَى النّورِ وَكانَ بِالمُؤمِنينَ رَحيمًا

அவர்தான் தன்னுடைய வானவர்களுடன் சேர்ந்து, உங்களை இருளிலிருந்து வெளியேற்றி ஒளியினுள் வழிநடத்துவதற்காக உங்களுக்கு உதவுகின்றார். நம்பிக்கையாளர்களின்பால் அவர் மிக்க கருணையாளராக இருக்கின்றார்.

33:44

تَحِيَّتُهُم يَومَ يَلقَونَهُ سَلٰمٌ وَأَعَدَّ لَهُم أَجرًا كَريمًا

அவர்கள் அவரைச் சந்திக்கும் அந்நாளில் அவர்களுடைய வாழ்த்துக்களாவது, சாந்தி என்பதாகும், மேலும் அவர்களுக்காகத் தாராளமானதொரு பிரதிபலனை அவர் தயாரித்துள்ளார்.

33:45

يٰأَيُّهَا النَّبِىُّ إِنّا أَرسَلنٰكَ شٰهِدًا وَمُبَشِّرًا وَنَذيرًا

நபியே, ஒரு சாட்சியாக, நற்செய்தியைத் தாங்கியவராக, அவ்வண்ணமே ஓர் எச்சரிப்பவராக உம்மை நாம் அனுப்பியுள்ளோம்.

33:46

وَداعِيًا إِلَى اللَّهِ بِإِذنِهِ وَسِراجًا مُنيرًا

அவருடைய நாட்டத்திற்கொப்ப, கடவுளின் பால் அழைப்பவராக, வழிகாட்டுகின்ற ஒரு கலங்கரை விளக்காக.

33:47

وَبَشِّرِ المُؤمِنينَ بِأَنَّ لَهُم مِنَ اللَّهِ فَضلًا كَبيرًا

கடவுளிடமிருந்து மகத்தானதொரு ஆசீர்வாதத்திற்கு அவர்கள் தகுதியாகிவிட்டனர் என்ற நற்செய்தியை நம்பிக்கையாளர்களிடம் சேர்ப்பிப்பீராக.

33:48

وَلا تُطِعِ الكٰفِرينَ وَالمُنٰفِقينَ وَدَع أَذىٰهُم وَتَوَكَّل عَلَى اللَّهِ وَكَفىٰ بِاللَّهِ وَكيلًا

நம்பமறுப்பவர்களுக்கும் நயவஞ்சகர்களுக்கும் கீழ்ப்படியாதீர், அவர்களுடைய அவமரியாதைகளை அலட்சியம் செய்வீராக, மேலும் உம்முடைய பொறுப்பைக் கடவுள் மீது வைப்பீராக; ஒரு பொறுப்பாளராகக் கடவுள் போதுமானவர்.

33:49

يٰأَيُّهَا الَّذينَ ءامَنوا إِذا نَكَحتُمُ المُؤمِنٰتِ ثُمَّ طَلَّقتُموهُنَّ مِن قَبلِ أَن تَمَسّوهُنَّ فَما لَكُم عَلَيهِنَّ مِن عِدَّةٍ تَعتَدّونَها فَمَتِّعوهُنَّ وَسَرِّحوهُنَّ سَراحًا جَميلًا

நம்பிக்கை கொண்டோரே உங்களைத்தான், நம்பிக்கை கொண்ட பெண்களை நீங்கள் திருமணம் செய்துவிட்டு, பின்னர் தாம்பத்ய உறவு கொள்வதற்கு முன்னர் அவர்களை விவாகவிலக்குச் செய்துவிட்டால், அவர்கள் (மற்றொரு மனிதனைத் திருமணம் செய்வதற்கு முன்னர்) உங்களுக்குக் காத்திருப்புத் தவணை எதையும் கடமைப்பட்டிருக்கவில்லை. நீங்கள் அவர்களுக்கு நியாயமான நஷ்டஈடு அளிக்கவும், இணக்கத்துடன் அவர்கள் சென்றிட அனுமதிக்கவும் வேண்டும்.

33:50

يٰأَيُّهَا النَّبِىُّ إِنّا أَحلَلنا لَكَ أَزوٰجَكَ الّٰتى ءاتَيتَ أُجورَهُنَّ وَما مَلَكَت يَمينُكَ مِمّا أَفاءَ اللَّهُ عَلَيكَ وَبَناتِ عَمِّكَ وَبَناتِ عَمّٰتِكَ وَبَناتِ خالِكَ وَبَناتِ خٰلٰتِكَ الّٰتى هاجَرنَ مَعَكَ وَامرَأَةً مُؤمِنَةً إِن وَهَبَت نَفسَها لِلنَّبِىِّ إِن أَرادَ النَّبِىُّ أَن يَستَنكِحَها خالِصَةً لَكَ مِن دونِ المُؤمِنينَ قَد عَلِمنا ما فَرَضنا عَلَيهِم فى أَزوٰجِهِم وَما مَلَكَت أَيمٰنُهُم لِكَيلا يَكونَ عَلَيكَ حَرَجٌ وَكانَ اللَّهُ غَفورًا رَحيمًا

நபியே, உம்முடைய மனைவியரில் எவர்களுக்கு நீர் அவர்களுக்குரிய சீதனத்தைச் செலுத்திவிட்டீரோ அவர்களையும் அல்லது கடவுளால் வழங்கப்பட்டுள்ளபடி ஏற்கெனவே நீர் கொண்டிருப்பவர்களையும் உமக்கு நாம் சட்டபூர்வமாக்கியுள்ளோம். அத்துடன் உம்முடன் புலம் பெயர்ந்த, உம் தந்தையின் சகோதரர்களுடைய மகள்களும், உம் தந்தையின் சகோதரிகளுடைய மகள்களும், உம் தாயின் சகோதரர்களுடைய மகள்களும் உம் தாயின் சகோதரிகளுடைய மகள்களும் உமக்குச் சட்டபூர்வமானவர்களே ஆவார்கள். அத்துடன், நம்பிக்கை கொண்ட ஒரு பெண் நபிக்கு - வரதட்சணையைத் தள்ளுபடி செய்வதன் மூலம் - தன்னையே கொடுத்தால் ஒரு சீதனமுமின்றி நபி அவளைத் திருமணம் செய்து கொள்ளலாம், அவரும் அதை விரும்பினால். ஆயினும், சீதனத்தை அவள் தள்ளுபடி செய்தல் நபிக்கு மட்டுமே பொருந்தக் கூடியதாகுமே அன்றி மற்ற நம்பிக்கையாளர்களுக்கல்ல. அவர்களுடைய வாழ்க்கைத் துணைகள் அல்லது அவர்கள் ஏற்கெனவே கொண்டிருப்பவர்களைக் குறித்து அவர்களுடைய உரிமைகளை நாம் ஏற்கெனவே விதித்துள்ளோம். இது உமக்கு எந்தச் சங்கடத்தையும் தவிர்ப்பதற்காகவேயாகும். கடவுள் மன்னிப்பவர், மிக்க கருணையாளர்.

33:51

تُرجى مَن تَشاءُ مِنهُنَّ وَتُـٔوى إِلَيكَ مَن تَشاءُ وَمَنِ ابتَغَيتَ مِمَّن عَزَلتَ فَلا جُناحَ عَلَيكَ ذٰلِكَ أَدنىٰ أَن تَقَرَّ أَعيُنُهُنَّ وَلا يَحزَنَّ وَيَرضَينَ بِما ءاتَيتَهُنَّ كُلُّهُنَّ وَاللَّهُ يَعلَمُ ما فى قُلوبِكُم وَكانَ اللَّهُ عَليمًا حَليمًا

அவர்களில் எவர் ஒருவரையும் நீர் கனிவுடன் தள்ளி வைக்கலாம், மேலும் நீர் அவர்களில் எவர் ஒருவரையும் உம்பால் நெருக்கமாகக் கொண்டு வரலாம். நீர் பிணையறுத்துக் கொண்ட எவர் ஒருவருடனும் நீர் சமரசம் செய்து கொண்டால், நீர் குற்றமெதுவும் செய்யவில்லை. இந்த முறையில், அவர்கள் மகிழ்ச்சியடைவார்கள், கவலையெதுவும் கொள்ளாதிருப்பார்கள், மேலும் அவர்கள் அனைவருக்கும் நீதமாக நீர் வழங்குபவற்றைக் கொண்டு திருப்தியடைவார்கள். உங்கள் இதயங்களில் உள்ளவற்றைக் கடவுள் அறிகின்றார். கடவுள் எல்லாம் அறிந்தவர், கனிவானவர்.

33:52

لا يَحِلُّ لَكَ النِّساءُ مِن بَعدُ وَلا أَن تَبَدَّلَ بِهِنَّ مِن أَزوٰجٍ وَلَو أَعجَبَكَ حُسنُهُنَّ إِلّا ما مَلَكَت يَمينُكَ وَكانَ اللَّهُ عَلىٰ كُلِّ شَىءٍ رَقيبًا

உமக்கு விவரிக்கப்பட்ட வகையினருக்கப்பால், வேறு எந்தப் பெண்களையும் திருமணம் செய்து கொள்வதிலிருந்து நீர் தடுக்கப்பட்டுள்ளீர், அன்றியும் (தடை செய்யப்பட்ட வகையினரிலிருந்து) புதியதொரு மனைவியை நீர் மாற்றி அமைத்துக்கொள்ளவும் கூடாது, அவர்களுடைய அழகை நீர் எவ்வளவு வியந்தபோதிலும் பொருட்டல்ல, ஏற்கெனவே உமக்குச் சட்டபூர்வமாக்கப்பட்டவர்களைக் கொண்டு திருப்தியடைந்தவராக நீர் இருக்க வேண்டும். அனைத்து விஷயங்கள் மீதும் கடவுள் கண்காணிப்புடன் உள்ளார்.

33:53

يٰأَيُّهَا الَّذينَ ءامَنوا لا تَدخُلوا بُيوتَ النَّبِىِّ إِلّا أَن يُؤذَنَ لَكُم إِلىٰ طَعامٍ غَيرَ نٰظِرينَ إِنىٰهُ وَلٰكِن إِذا دُعيتُم فَادخُلوا فَإِذا طَعِمتُم فَانتَشِروا وَلا مُستَـٔنِسينَ لِحَديثٍ إِنَّ ذٰلِكُم كانَ يُؤذِى النَّبِىَّ فَيَستَحى ۦ مِنكُم وَاللَّهُ لا يَستَحى ۦ مِنَ الحَقِّ وَإِذا سَأَلتُموهُنَّ مَتٰعًا فَسـَٔلوهُنَّ مِن وَراءِ حِجابٍ ذٰلِكُم أَطهَرُ لِقُلوبِكُم وَقُلوبِهِنَّ وَما كانَ لَكُم أَن تُؤذوا رَسولَ اللَّهِ وَلا أَن تَنكِحوا أَزوٰجَهُ مِن بَعدِهِ أَبَدًا إِنَّ ذٰلِكُم كانَ عِندَ اللَّهِ عَظيمًا

நம்பிக்கை கொண்டோரே உங்களைத்தான், உண்ணுவதற்கு நீங்கள் அனுமதி கொடுக்கப்பட்டாலே அன்றி நபியின் வீடுகளுக்குள் நுழையாதீர்கள், அன்றி அத்தகையதொரு அழைப்பை எவ்விதத்திலும் நீங்கள் வலியுறுத்தவும் வேண்டாம். நீங்கள் அழைக்கப்பட்டால், நீங்கள் நுழையலாம். நீங்கள் உண்டு முடித்துவிட்டால், நீங்கள் சென்றுவிட வேண்டும்; நீண்ட உரையாடல்களில் அவரை ஈடுபடுத்தாதீர்கள். இது நபியைப் புண்படுத்துவதாக இருந்தது, மேலும் உங்களிடம் சொல்வதற்கு அவர் மிகவும் கூச்சப்படுபவராக இருந்தார். ஆனால் கடவுள் உண்மையிலிருந்து கூச்சப்பட்டு விலகிவிடுவதில்லை. அவருடைய மனைவியரிடம் நீங்கள் எதையேனும் கேட்க வேண்டியது இருந்தால், ஒரு திரைக்கப்பாலிருந்து அவர்களிடம் கேளுங்கள். உங்களுடைய இதயங்களுக்கும் அவர்களுடைய இதயங்களுக்கும் இதுவே தூய்மைமிக்கதாகும். நீங்கள் கடவுளுடைய தூதரைப் புண்படுத்தக் கூடாதவர்கள். அவருக்குப் பின்னர் அவருடைய மனைவியரை நீங்கள் மணந்து கொள்ள வேண்டாம், ஏனெனில் கடவுளின் பார்வையில் இது மிகப் பெரியதொரு குற்றச்செயலாகும்.*

33:54

إِن تُبدوا شَيـًٔا أَو تُخفوهُ فَإِنَّ اللَّهَ كانَ بِكُلِّ شَىءٍ عَليمًا

எதையேனும் நீங்கள் அறிவித்தாலும், அல்லது அதனை மறைத்துக் கொண்டாலும், அனைத்து விஷயங்களையும் கடவுள் முற்றிலும் அறிந்திருக்கின்றார்.

33:55

لا جُناحَ عَلَيهِنَّ فى ءابائِهِنَّ وَلا أَبنائِهِنَّ وَلا إِخوٰنِهِنَّ وَلا أَبناءِ إِخوٰنِهِنَّ وَلا أَبناءِ أَخَوٰتِهِنَّ وَلا نِسائِهِنَّ وَلا ما مَلَكَت أَيمٰنُهُنَّ وَاتَّقينَ اللَّهَ إِنَّ اللَّهَ كانَ عَلىٰ كُلِّ شَىءٍ شَهيدًا

பெண்கள் தங்களுடைய தந்தையர், தங்களுடைய மகன்கள், தங்களுடைய சகோதரர்கள், தங்களுடைய சகோதரர்களின் மகன்கள், தங்களுடைய சகோதரிகளுடைய மகன்கள், மற்ற பெண்கள், மற்றும் அவர்களுடைய (பெண்) ஊழியர்கள் முன்னிலையில் (தங்களுடைய ஆடைக் கட்டுப்பாட்டை) தளர்த்திக் கொள்ளலாம். அவர்கள் கடவுளுக்குப் பக்திசெலுத்த வேண்டும். அனைத்து விஷயங்களுக்கும் கடவுள் சாட்சியாகின்றார்.

33:56

إِنَّ اللَّهَ وَمَلٰئِكَتَهُ يُصَلّونَ عَلَى النَّبِىِّ يٰأَيُّهَا الَّذينَ ءامَنوا صَلّوا عَلَيهِ وَسَلِّموا تَسليمًا

கடவுளும் அவருடைய வானவர்களும் நபிக்கு உதவியும் ஆதரவும் அளிக்கின்றனர். நம்பிக்கை கொண்டோரே, உங்களைத்தான், நீங்கள் அவருக்கு உதவியும் ஆதரவும் அளிக்க வேண்டும், மேலும் எவ்வாறு அவர் மதிக்கப்பட வேண்டுமோ அவ்வாறு அவரை மதியுங்கள்.*

33:57

إِنَّ الَّذينَ يُؤذونَ اللَّهَ وَرَسولَهُ لَعَنَهُمُ اللَّهُ فِى الدُّنيا وَالـٔاخِرَةِ وَأَعَدَّ لَهُم عَذابًا مُهينًا

நிச்சயமாக, எவர்கள் கடவுளையும் அவருடைய தூதரையும் எதிர்க்கின்றனரோ, அவர்களை இவ்வுலகிலும் மறுவுலகிலும் ஒரு சாபத்தைக் கொண்டு கடவுள் வருத்துகின்றார்; இழிவு நிறைந்ததொரு தண்டனையை அவர்களுக்காக அவர் தயார் செய்துள்ளார்.

33:58

وَالَّذينَ يُؤذونَ المُؤمِنينَ وَالمُؤمِنٰتِ بِغَيرِ مَا اكتَسَبوا فَقَدِ احتَمَلوا بُهتٰنًا وَإِثمًا مُبينًا

எந்தத் தவறும் செய்யாத, நம்பிக்கை கொண்ட ஆண்களையும் நம்பிக்கை கொண்ட பெண்களையும் வன்கொடுமை செய்கின்றவர்கள், ஒரு பொய்மையை மட்டுமின்றி, அத்துடன் மிகப் பெரியதொரு பாவத்தையும் புரிந்துவிட்டனர்.

33:59

يٰأَيُّهَا النَّبِىُّ قُل لِأَزوٰجِكَ وَبَناتِكَ وَنِساءِ المُؤمِنينَ يُدنينَ عَلَيهِنَّ مِن جَلٰبيبِهِنَّ ذٰلِكَ أَدنىٰ أَن يُعرَفنَ فَلا يُؤذَينَ وَكانَ اللَّهُ غَفورًا رَحيمًا

நபியே, உம்முடைய மனைவியர், உம்முடைய மகள்கள், மற்றும் நம்பிக்கையாளர்களின் மனைவியரிடம் அவர்கள் தங்களுடைய ஆடைகளை நீளப்படுத்திக் கொள்ளும்படி கூறுவீராக. இவ்விதமாக, அவர்கள் (நன்னெறியுடைய பெண்களென) அடையாளம் காணப்படுவர், மேலும் அவமதிக்கப்படுவதிலிருந்தும் தவிர்ந்து கொள்வர். கடவுள் மன்னிப்பவர், மிக்க கருணையாளர்.

33:60

لَئِن لَم يَنتَهِ المُنٰفِقونَ وَالَّذينَ فى قُلوبِهِم مَرَضٌ وَالمُرجِفونَ فِى المَدينَةِ لَنُغرِيَنَّكَ بِهِم ثُمَّ لا يُجاوِرونَكَ فيها إِلّا قَليلًا

நயவஞ்சகர்களும், தங்கள் இதயங்களில் நோயுடையவர்களும், நகரத்தின் ஒழுக்கம் கெட்ட பொய்யர்களும் (உங்களைத் துன்புறுத்துவதிலிருந்து) விலகிக் கொண்டாலே தவிர, நிச்சயமாக நாம் உம் கரத்தை மேலோங்கச் செய்வோம், பின்னர் சிறிதொரு காலத்திற்குள் அவர்கள் வெளியேறுமாறு நிர்ப்பந்திக்கப்படுவர்.

33:61

مَلعونينَ أَينَما ثُقِفوا أُخِذوا وَقُتِّلوا تَقتيلًا

அவர்கள் எங்கு சென்றபோதிலும், அவர்கள் கண்டனத்திற்குள்ளாகிவிட்டனர்; (உங்களைத் தாக்குவதை அவர்கள் நிறுத்தினாலன்றி) அவர்கள் பிடிக்கப்பட்டுக் கொல்லப்படலாம்.

33:62

سُنَّةَ اللَّهِ فِى الَّذينَ خَلَوا مِن قَبلُ وَلَن تَجِدَ لِسُنَّةِ اللَّهِ تَبديلًا

இதுவே கடவுளின் நிரந்தரமான வழிமுறையாகும், மேலும் கடவுளின் வழிமுறை மாற்றப்பட முடியாதது என்பதை நீங்கள் கண்டு கொள்வீர்கள்.

33:63

يَسـَٔلُكَ النّاسُ عَنِ السّاعَةِ قُل إِنَّما عِلمُها عِندَ اللَّهِ وَما يُدريكَ لَعَلَّ السّاعَةَ تَكونُ قَريبًا

வேளையை (உலக முடிவு) பற்றி மக்கள் உம்மிடம் கேட்கின்றனர். கூறுவீராக, அதனைப் பற்றிய அறிவு கடவுளிடம் மட்டுமே உள்ளது. நீங்கள் அறிந்துள்ள அனைத்தின்படியும், வேளை மிகவும் நெருக்கத்திலேயே இருக்கக்கூடும்.

33:64

إِنَّ اللَّهَ لَعَنَ الكٰفِرينَ وَأَعَدَّ لَهُم سَعيرًا

நம்பமறுப்பவர்களைக் கடவுள் கண்டனம் செய்துவிட்டார், மேலும் அவர்களுக்காக நரகத்தைத் தயார் செய்துள்ளார்.

33:65

خٰلِدينَ فيها أَبَدًا لا يَجِدونَ وَلِيًّا وَلا نَصيرًا

நிரந்தரமாக அவர்கள் அங்கே தங்கியிருப்பார்கள். அவர்கள் எந்த இரட்சகரையோ, அன்றி ஒரு ஆதரவாளரையோ காணமாட்டார்கள்.

33:66

يَومَ تُقَلَّبُ وُجوهُهُم فِى النّارِ يَقولونَ يٰلَيتَنا أَطَعنَا اللَّهَ وَأَطَعنَا الرَّسولا۠

நரகத்திற்குள் அவர்கள் தள்ளப்படுகின்ற அந்நாளில், அவர்கள் கூறுவார்கள், ஐயோ, நாங்கள் கடவுளுக்குக் கீழ்ப்படிந்தவர்களாகவும் தூதருக்குக் கீழ்ப்படிந்தவர்களாகவும் இருந்திருக்க வேண்டுமே, என நாங்கள் விரும்புகின்றோம்.

33:67

وَقالوا رَبَّنا إِنّا أَطَعنا سادَتَنا وَكُبَراءَنا فَأَضَلّونَا السَّبيلا۠

அத்துடன் அவர்கள் கூறுவார்கள், எங்கள் இரட்சகரே, நாங்கள் எங்களுடைய எஜமானர்களுக்கும் தலைவர்களுக்கும் கீழ்ப்படிந்தோம், ஆனால் அவர்கள் எங்களை வழிகேட்டில் செலுத்திவிட்டார்கள்.

33:68

رَبَّنا ءاتِهِم ضِعفَينِ مِنَ العَذابِ وَالعَنهُم لَعنًا كَبيرًا

எங்கள் இரட்சகரே, இருமடங்கு தண்டனையை அவர்களுக்குக் கொடுப்பீராக, மேலும் மிகப்பெரியதொரு சாபத்தைக் கொண்டு அவர்களைச் சபிப்பீராக.

33:69

يٰأَيُّهَا الَّذينَ ءامَنوا لا تَكونوا كَالَّذينَ ءاذَوا موسىٰ فَبَرَّأَهُ اللَّهُ مِمّا قالوا وَكانَ عِندَ اللَّهِ وَجيهًا

நம்பிக்கை கொண்டோரே உங்களைத்தான், மோஸஸைப் புண்படுத்தியவர்களைப் போன்று நீங்கள் இருக்காதீர்கள், பின்னர் அவர்கள் கூறியவற்றிலிருந்து கடவுள் அவரை விடுவித்தார். கடவுளின் பார்வையில், கண்ணியமானவராக, அவர் இருந்தார்.

33:70

يٰأَيُّهَا الَّذينَ ءامَنُوا اتَّقُوا اللَّهَ وَقولوا قَولًا سَديدًا

நம்பிக்கை கொண்டோரே உங்களைத்தான், கடவுள் பக்தி கொள்ளுங்கள், மேலும் சரியான கூற்றுகளை மட்டுமே கூறுங்கள்.

33:71

يُصلِح لَكُم أَعمٰلَكُم وَيَغفِر لَكُم ذُنوبَكُم وَمَن يُطِعِ اللَّهَ وَرَسولَهُ فَقَد فازَ فَوزًا عَظيمًا

அவர் அப்போது உங்களுடைய காரியங்களைச் சீர் செய்வார், மேலும் உங்களுடைய பாவங்களை மன்னிப்பார். கடவுளுக்கும் அவருடைய தூதருக்கும் கீழ்ப்படிந்தவர்கள் மகத்தானதொரு வெற்றியால் பெருவெற்றிக்களிப்படைந்தனர்.

33:72

إِنّا عَرَضنَا الأَمانَةَ عَلَى السَّمٰوٰتِ وَالأَرضِ وَالجِبالِ فَأَبَينَ أَن يَحمِلنَها وَأَشفَقنَ مِنها وَحَمَلَهَا الإِنسٰنُ إِنَّهُ كانَ ظَلومًا جَهولًا

வானங்களுக்கும், பூமிக்கும், மற்றும் மலைகளுக்கும் (தேர்ந்தெடுக்கும் சுதந்திரமெனும்) பொறுப்பை, நாம் முன்வைத்தோம், ஆனால் அவை அதனைச் சுமந்து கொள்ள மறுத்தன, மேலும் அதனைக் குறித்து அஞ்சியவையாகவும் இருந்தன. ஆனால் மானிடன் அதனை ஏற்றுக் கொண்டான்; அவன் வரம்புமீறுகின்றவனாகவும், அறியாதவனாகவும் இருந்தான்.*

33:73

لِيُعَذِّبَ اللَّهُ المُنٰفِقينَ وَالمُنٰفِقٰتِ وَالمُشرِكينَ وَالمُشرِكٰتِ وَيَتوبَ اللَّهُ عَلَى المُؤمِنينَ وَالمُؤمِنٰتِ وَكانَ اللَّهُ غَفورًا رَحيمًا

ஏனெனில் நயவஞ்சக ஆண்களையும், நயவஞ்சகப் பெண்களையும், மேலும் போலித்தெய்வ வழிபாடு செய்கின்ற ஆண்களையும் போலித் தெய்வ வழிபாடு செய்கின்ற பெண்களையும், தவிர்த்துவிட முடியாதவாறு கடவுள் தண்டிப்பார். நம்பிக்கை கொண்ட ஆண்களையும் நம்பிக்கை கொண்ட பெண்களையும் கடவுள் மீட்டுக்கொள்கின்றார். கடவுள் மன்னிப்பவர், மிக்க கருணையாளர்.

‹ அத்தியாயம் 32அத்தியாயம் 34 ›