حم
ஹ்ஹ. ம.
حم
ஹ்ஹ. ம.
وَالكِتٰبِ المُبينِ
மற்றும் அறிவொளியூட்டும் இவ்வேதம்.
إِنّا أَنزَلنٰهُ فى لَيلَةٍ مُبٰرَكَةٍ إِنّا كُنّا مُنذِرينَ
பாக்கியமிக்கதொரு இரவில் இதனை நாம் இறக்கி அனுப்பினோம், ஏனெனில் நாம் எச்சரிப்பவர்களாக இருக்கின்றோம்.
فيها يُفرَقُ كُلُّ أَمرٍ حَكيمٍ
(வேதமான) இதிலே, ஞானத்தின் ஒவ்வொரு விஷயமும் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.
أَمرًا مِن عِندِنا إِنّا كُنّا مُرسِلينَ
நாம் தூதர்களை அனுப்புவதென்பது நம்மிடமிருந்து முன்னரே தீர்மானிக்கப்பட்டதொரு கட்டளையாக உள்ளது.
رَحمَةً مِن رَبِّكَ إِنَّهُ هُوَ السَّميعُ العَليمُ
இது உம் இரட்சகரிடமிருந்து ஒரு கருணையாகும். அவர்தான் செவியேற்பவர், சர்வமும் அறிந்தவர்.
رَبِّ السَّمٰوٰتِ وَالأَرضِ وَما بَينَهُما إِن كُنتُم موقِنينَ
வானங்கள் மற்றும் பூமி மேலும் அவற்றுக்கிடையில் உள்ள ஒவ்வொன்றினுடைய இரட்சகர். நீங்கள் மட்டும் உறுதியுடையவர்களாக இருக்க முடிந்தால்!
لا إِلٰهَ إِلّا هُوَ يُحى ۦ وَيُميتُ رَبُّكُم وَرَبُّ ءابائِكُمُ الأَوَّلينَ
அவருடன் வேறு தெய்வம் எதுவுமில்லை. வாழ்வையும் மரணத்தையும் அவர் கட்டுப்படுத்துகின்றார்; உங்களுடைய இரட்சகர் மற்றும் உங்கள் முன்னோர்களுடைய இரட்சகர்.
بَل هُم فى شَكٍّ يَلعَبونَ
உண்மையில், அவர்கள் சந்தேகம் நிறைந்தவர்களாக, அலட்சியம் செய்பவர்களாக இருக்கின்றனர்.
فَارتَقِب يَومَ تَأتِى السَّماءُ بِدُخانٍ مُبينٍ
எனவே, ஆழ்ந்ததொரு புகையை வானம் கொண்டு வரும் அந்நாளுக்காகக் காத்திருப்பீராக.*
يَغشَى النّاسَ هٰذا عَذابٌ أَليمٌ
மனிதர்களை அது சூழ்ந்து கொள்ளும்; அது வலி நிறைந்ததொரு தண்டனையாகும்.
رَبَّنَا اكشِف عَنَّا العَذابَ إِنّا مُؤمِنونَ
எங்கள் இரட்சகரே, எங்களுக்கு இந்தத் தண்டனையை நிவர்த்திப்பீராக; நாங்கள் நம்பிக்கை கொண்டவர்களாக இருக்கின்றோம்.
أَنّىٰ لَهُمُ الذِّكرىٰ وَقَد جاءَهُم رَسولٌ مُبينٌ
இப்போது அது மிகத் தாமதமாகிவிட்டபோது, அவர்கள் நினைவில் கொள்கின்றனர்! அறிவொளியூட்டுகின்ற ஒரு தூதர் அவர்களிடம் வந்திருந்தார்.*
ثُمَّ تَوَلَّوا عَنهُ وَقالوا مُعَلَّمٌ مَجنونٌ
ஆனால் அவர்கள், நன்கு கல்வி கற்றவர், ஆனால் பித்துப்பிடித்தவர்! என்று கூறியவர்களாக அவரிடமிருந்து திரும்பிக் கொண்டனர்.
إِنّا كاشِفُوا العَذابِ قَليلًا إِنَّكُم عائِدونَ
சிறிது காலத்திற்குத் தண்டனையை நாம் நிவர்த்திப்போம்; நீங்கள் விரைவில் திரும்பிச் சென்றுவிடுவீர்கள்.
يَومَ نَبطِشُ البَطشَةَ الكُبرىٰ إِنّا مُنتَقِمونَ
பெரிய அடியை நாம் அடிக்கும் அந்நாளில், நாம் பழி தீர்ப்போம்.
وَلَقَد فَتَنّا قَبلَهُم قَومَ فِرعَونَ وَجاءَهُم رَسولٌ كَريمٌ
அவர்களுக்கு முன் ஃபேரோவின் சமூகத்தாரை நாம் சோதித்தோம்; கண்ணியமானதொரு தூதர் அவர்களிடம் சென்றார்.
أَن أَدّوا إِلَىَّ عِبادَ اللَّهِ إِنّى لَكُم رَسولٌ أَمينٌ
பிரகடனித்தவாறு: நான் சொல்வதைக் கவனித்துக் கேளுங்கள், கடவுளின் ஊழியர்களே. நான் உங்களுக்கு நேர்மையானதொரு தூதன் ஆவேன்.
وَأَن لا تَعلوا عَلَى اللَّهِ إِنّى ءاتيكُم بِسُلطٰنٍ مُبينٍ
மேலும், கடவுளுக்கெதிராக வரம்புமீறாதீர்கள். வலிமை நிறைந்த சான்றுகளை உங்களிடம் நான் கொண்டு வந்துள்ளேன்.
وَإِنّى عُذتُ بِرَبّى وَرَبِّكُم أَن تَرجُمونِ
என்னை நீங்கள் எதிர்த்தால், என் இரட்சகர் மற்றும் உங்களுடைய இரட்சகரிடம் நான் புகலிடம் தேடுகின்றேன்.
وَإِن لَم تُؤمِنوا لى فَاعتَزِلونِ
நீங்கள் நம்பிக்கை கொள்ள விரும்பவில்லையென்றால், பின்னர் என்னை அப்படியே விட்டுச் சென்றுவிடுங்கள்.
فَدَعا رَبَّهُ أَنَّ هٰؤُلاءِ قَومٌ مُجرِمونَ
அதன் பிறகு, அவர் தன் இரட்சகரை இறைஞ்சினார்: இவர்கள் தீய மக்களாக இருக்கின்றனர்.
فَأَسرِ بِعِبادى لَيلًا إِنَّكُم مُتَّبَعونَ
(கடவுள் கூறினார்) இரவுப் பொழுதில் என் ஊழியர்களுடன் பயணிப்பீராக; நீங்கள் பின் தொடரப்படுவீர்கள்.
وَاترُكِ البَحرَ رَهوًا إِنَّهُم جُندٌ مُغرَقونَ
கடலினை விரைவாகக் கடந்துவிடுங்கள்; அவர்களுடைய படைகள் மூழ்கடிக்கப்படும்.
كَم تَرَكوا مِن جَنّٰتٍ وَعُيونٍ
இவ்விதமாக, பல தோட்டங்களையும் ஊற்றுகளையும் அவர்கள் பின்னால் விட்டுச் சென்றுவிட்டனர்.
وَزُروعٍ وَمَقامٍ كَريمٍ
பயிர்களையும் ஆடம்பரமானதொரு வாழ்வையும்.
وَنَعمَةٍ كانوا فيها فٰكِهينَ
அவர்கள் அனுபவித்துக் கொண்டிருந்த ஆசீர்வாதங்களையும்.
كَذٰلِكَ وَأَورَثنٰها قَومًا ءاخَرينَ
இவை அனைத்தையும் வேறு மக்கள் வாரிசாகப் பெறும்படி நாம் செய்தோம்.
فَما بَكَت عَلَيهِمُ السَّماءُ وَالأَرضُ وَما كانوا مُنظَرينَ
வானமோ அன்றிப் பூமியோ அவர்களுக்காக அழவில்லை, மேலும் அவர்கள் அவகாசம் அளிக்கப்பட்டவர்களாகவும் இல்லை.
وَلَقَد نَجَّينا بَنى إِسرٰءيلَ مِنَ العَذابِ المُهينِ
இதற்கிடையில், இஸ்ரேலின் சந்ததியினரை இழிவு தரும் வன்கொடுமையிலிருந்து நாம் காப்பாற்றினோம்.
مِن فِرعَونَ إِنَّهُ كانَ عالِيًا مِنَ المُسرِفينَ
ஃபேரோவிடமிருந்து; அவனொரு கொடுங்கோலனாக இருந்தான்.
وَلَقَدِ اختَرنٰهُم عَلىٰ عِلمٍ عَلَى العٰلَمينَ
நன்கறிந்து கொண்டே, அனைத்து மக்களுக்கிடையிலும் அவர்களை நாம் தேர்ந்தெடுத்துக் கொண்டோம்.
وَءاتَينٰهُم مِنَ الـٔايٰتِ ما فيهِ بَلٰؤٌا۟ مُبينٌ
பெரியதொரு சோதனையாக அமைந்த, ஏராளமான பல சான்றுகளை அவர்களுக்கு நாம் காட்டினோம்.
إِنَّ هٰؤُلاءِ لَيَقولونَ
தற்காலத் தலைமுறையினர் கூறுகின்றனர்,
إِن هِىَ إِلّا مَوتَتُنَا الأولىٰ وَما نَحنُ بِمُنشَرينَ
முதல் மரணம் மட்டுமே நாம் மரணிக்கின்றோம்; நாம் ஒருபோதும் உயிர்த்தெழுப்பப்பட மாட்டோம்!
فَأتوا بِـٔابائِنا إِن كُنتُم صٰدِقينَ
நீங்கள் உண்மையாளர்களாக இருந்தால், எங்களுடைய முன்னோர்களைக் கொண்டு வாருங்கள்.
أَهُم خَيرٌ أَم قَومُ تُبَّعٍ وَالَّذينَ مِن قَبلِهِم أَهلَكنٰهُم إِنَّهُم كانوا مُجرِمينَ
துப்பஉ சமூகத்தாரையும் அவர்களுக்கு முன்னிருந்த மற்றவர்களையும் விட இவர்கள் மேலானவர்களா? அவர்களுடைய குற்றங்களுக்காக அவர்களை நாம் அழித்தொழித்தோம்.
وَما خَلَقنَا السَّمٰوٰتِ وَالأَرضَ وَما بَينَهُما لٰعِبينَ
வானங்களையும் பூமியையும், மேலும் அவற்றுக்கிடையிலுள்ள ஒவ்வொன்றையும், வெறுமனே விளையாடுவதற்காகவென நாம் படைக்கவில்லை.
ما خَلَقنٰهُما إِلّا بِالحَقِّ وَلٰكِنَّ أَكثَرَهُم لا يَعلَمونَ
குறிப்பிட்டதொரு காரணத்துக்காகவே அவற்றை நாம் படைத்தோம், ஆனால் அவர்களில் அதிகமானோர் அறியமாட்டார்கள்.
إِنَّ يَومَ الفَصلِ ميقٰتُهُم أَجمَعينَ
தீர்மானத்தின் நாள் அவர்கள் அனைவருக்காகவும் காத்துக் கொண்டிருக்கின்றது.
يَومَ لا يُغنى مَولًى عَن مَولًى شَيـًٔا وَلا هُم يُنصَرونَ
எந்த நண்பனும் தன்னுடைய நண்பனுக்கு எந்த வகையிலும் உதவ இயலாத நாள் அதுவாகும்; எவர் ஒருவரும் உதவி செய்யப்பட இயலாது.
إِلّا مَن رَحِمَ اللَّهُ إِنَّهُ هُوَ العَزيزُ الرَّحيمُ
கடவுளிடமிருந்து கருணையை அடைந்துவிட்டவர்களைத் தவிர. அவர்தான் எல்லாம் வல்லவர், மிக்க கருணையாளர்.
إِنَّ شَجَرَتَ الزَّقّومِ
நிச்சயமாக, கசப்பினுடைய மரமானது-
طَعامُ الأَثيمِ
பாவகரமானவர்களுக்கு உணவை வழங்கும்.
كَالمُهلِ يَغلى فِى البُطونِ
கடுங்கார திரவத்தைப் போல, வயிறுகளில் அது கொதிக்கும்.
كَغَلىِ الحَميمِ
நரகத்தின் பானங்கள் கொதிப்பதைப் போல.
خُذوهُ فَاعتِلوهُ إِلىٰ سَواءِ الجَحيمِ
அவனை எடுத்துச் சென்று நரகத்தின் மையத்தினுள் அவனை வீசிவிடுங்கள்.
ثُمَّ صُبّوا فَوقَ رَأسِهِ مِن عَذابِ الحَميمِ
பின்னர் தீக்கொழுந்தின் தண்டனையை அவனுடைய தலையின் மீது ஊற்றுங்கள்.
ذُق إِنَّكَ أَنتَ العَزيزُ الكَريمُ
இதனைச் சுவைப்பாயாக; நீ எவ்வளவு சக்தியுடையவனாக, எவ்வளவு கண்ணியத்திற்குரியவனாக இருந்தாய்.
إِنَّ هٰذا ما كُنتُم بِهِ تَمتَرونَ
இதுதான் நீ சந்தேகித்துக் கொண்டிருந்தது.
إِنَّ المُتَّقينَ فى مَقامٍ أَمينٍ
நன்னெறியாளர்கள் பாதுகாப்பானதொரு நிலையில் இருப்பார்கள்.
فى جَنّٰتٍ وَعُيونٍ
தோட்டங்களிலும் ஊற்றுக்களிலும் மகிழ்ந்தவர்களாக.
يَلبَسونَ مِن سُندُسٍ وَإِستَبرَقٍ مُتَقٰبِلينَ
வெல்வெட்டையும் பளபளக்கும் பட்டையும் அணிந்தவர்களாக; ஒருவருக்கொருவர் நெருக்கமாக.
كَذٰلِكَ وَزَوَّجنٰهُم بِحورٍ عينٍ
அற்புதமான துணைகளை அவர்களுக்கு நாம் வழங்குகின்றோம்.
يَدعونَ فيها بِكُلِّ فٰكِهَةٍ ءامِنينَ
பூரணமான அமைதியில், அனைத்துக் கனிவர்க்கங்களையும் அதில் அவர்கள் அனுபவிக்கின்றார்கள்.
لا يَذوقونَ فيهَا المَوتَ إِلَّا المَوتَةَ الأولىٰ وَوَقىٰهُم عَذابَ الجَحيمِ
அதிலே அவர்கள் மரணத்தைச் சுவைப்பதில்லை -முதல் மரணத்திற்கு* அப்பால் - மேலும் அவர் நரகத்தின் தண்டனையிலிருந்து அவர்களைத் தவிர்த்துவிட்டார்.
فَضلًا مِن رَبِّكَ ذٰلِكَ هُوَ الفَوزُ العَظيمُ
இத்தகையதே உம் இரட்சகரிடமிருந்துள்ள ஆசீர்வாதம். இத்தகையதே மாபெரும் வெற்றி.
فَإِنَّما يَسَّرنٰهُ بِلِسانِكَ لَعَلَّهُم يَتَذَكَّرونَ
இவ்விதமாக இதனை உம்முடைய மொழியில் நாம் தெளிவுபடுத்தியுள்ளோம், அவர்கள் கவனத்தில் எடுத்துக்கொள்ளும் பொருட்டு.
فَارتَقِب إِنَّهُم مُرتَقِبونَ
எனவே, காத்திருப்பீராக; அவர்களும் காத்திருக்க வேண்டியுள்ளது.