حم
ஹ்ஹ. ம.*
حم
ஹ்ஹ. ம.*
وَالكِتٰبِ المُبينِ
மற்றும் அறிவொளியூட்டும் இவ்வேதம்.
إِنّا جَعَلنٰهُ قُرءٰنًا عَرَبِيًّا لَعَلَّكُم تَعقِلونَ
நீங்கள் புரிந்து கொள்வதற்காக, அரபியிலான ஒரு குர்ஆனாக இதனை நாம் ஆக்கியுள்ளோம்.*
وَإِنَّهُ فى أُمِّ الكِتٰبِ لَدَينا لَعَلِىٌّ حَكيمٌ
கண்ணியத்திற்குரிய, மற்றும் ஞானம் நிரம்பிய இது, மூலப்பிரதியில் நம்மிடம் பாதுகாக்கப்பட்டு உள்ளது.
أَفَنَضرِبُ عَنكُمُ الذِّكرَ صَفحًا أَن كُنتُم قَومًا مُسرِفينَ
நீங்கள் வரம்புகளை மீறிவிட்டீர்கள் எனும் நிதர்சனத்தை நாம் அப்படியே அலட்சியப்படுத்திவிட வேண்டுமா?*
وَكَم أَرسَلنا مِن نَبِىٍّ فِى الأَوَّلينَ
எத்தனையோவொரு நபியை முந்திய தலைமுறையினருக்கு நாம் அனுப்பியுள்ளோம்.
وَما يَأتيهِم مِن نَبِىٍّ إِلّا كانوا بِهِ يَستَهزِءونَ
ஒவ்வொரு முறையும் ஒரு நபி அவர்களிடம் சென்றபோது, அவர்கள் அவரைப் பரிகசித்தனர்.
فَأَهلَكنا أَشَدَّ مِنهُم بَطشًا وَمَضىٰ مَثَلُ الأَوَّلينَ
அதன் விளைவாக, இவர்களை விட மிகவும் அதிக சக்தி படைத்திருந்த மக்களை நாம் அழித்தொழித்தோம். இவ்விதமாக முந்திய சமூகத்தினரிலிருந்து உதாரணங்களை நாம் அமைத்தோம்.
وَلَئِن سَأَلتَهُم مَن خَلَقَ السَّمٰوٰتِ وَالأَرضَ لَيَقولُنَّ خَلَقَهُنَّ العَزيزُ العَليمُ
வானங்களையும் பூமியையும் படைத்தது யார், என்று நீர் அவர்களிடம் கேட்பீராயின், அவர்கள் கூறுவார்கள், எல்லாம் வல்லவர், சர்வமும் அறிந்தவர்தான் அவற்றைப் படைத்தார்.
الَّذى جَعَلَ لَكُمُ الأَرضَ مَهدًا وَجَعَلَ لَكُم فيها سُبُلًا لَعَلَّكُم تَهتَدونَ
அவர்தான் உங்களுக்காக பூமியை வசிக்கத்தக்கதாக ஆக்கியவர், மேலும் உங்களுக்காக அதில் சாலைகளை ஆக்கினார், நீங்கள் சரியான வழியைப் பின்பற்றும் பொருட்டு.
وَالَّذى نَزَّلَ مِنَ السَّماءِ ماءً بِقَدَرٍ فَأَنشَرنا بِهِ بَلدَةً مَيتًا كَذٰلِكَ تُخرَجونَ
அவர்தான் விண்ணிலிருந்து தண்ணீரை மிகச் சரியான அளவில் இறக்கி அனுப்புகின்றவர், அதன் மூலம் இறந்த நிலங்களை உயிர்ப்பிப்பதற்காக. இவ்விதமாகவே, நீங்கள் உயிர்த்தெழுப்பப்படுவீர்கள்.
وَالَّذى خَلَقَ الأَزوٰجَ كُلَّها وَجَعَلَ لَكُم مِنَ الفُلكِ وَالأَنعٰمِ ما تَركَبونَ
அவர்தான் அனைத்து வகைகளையும் (ஆண் மற்றும் பெண்ணினம் என) ஜோடிகளில் படைத்தவர், மேலும் நீங்கள் சவாரி செய்வதற்காகக் கப்பல்களையும் கால்நடைகளையும் அவர் படைத்தார்.
لِتَستَوۥا عَلىٰ ظُهورِهِ ثُمَّ تَذكُروا نِعمَةَ رَبِّكُم إِذَا استَوَيتُم عَلَيهِ وَتَقولوا سُبحٰنَ الَّذى سَخَّرَ لَنا هٰذا وَما كُنّا لَهُ مُقرِنينَ
அவற்றின் மீது நீங்கள் அமர்ந்தவுடன், உங்கள் இரட்சகரிடமிருந்து இத்தகையதொரு ஆசீர்வாதத்திற்கு நீங்கள் நன்றி செலுத்த வேண்டும், மேலும் கூறுங்கள், இதனை எங்களுக்குக் கட்டுப்படுத்தித்தந்தவர் துதிப்பிற்குரியவர். நாங்களாகவே இவற்றைக் கட்டுப்படுத்தியிருக்க எங்களால் இயன்றிருக்காது.
وَإِنّا إِلىٰ رَبِّنا لَمُنقَلِبونَ
இறுதியில் நாங்கள் எங்கள் இரட்சகரிடமே திரும்புகின்றோம்.
وَجَعَلوا لَهُ مِن عِبادِهِ جُزءًا إِنَّ الإِنسٰنَ لَكَفورٌ مُبينٌ
அவருடைய சொந்தப் படைப்பினில் இருந்தே ஒரு பங்கினரை அவருக்குரியவர்களென அவர்கள் நியமிக்கவும் செய்தனர்! நிச்சயமாக, மானிடன் மிகவும் நன்றி கெட்டவனாக இருக்கின்றான்.
أَمِ اتَّخَذَ مِمّا يَخلُقُ بَناتٍ وَأَصفىٰكُم بِالبَنينَ
தன்னுடைய படைப்புகளுக்கிடையில் இருந்து தனக்காகப் புதல்விகளை அவர் தேர்ந்தெடுத்துக் கொண்டு, அதே சமயம் புதல்வர்களைக் கொண்டு உங்களை ஆசீர்வதித்துவிட்டாரா?
وَإِذا بُشِّرَ أَحَدُهُم بِما ضَرَبَ لِلرَّحمٰنِ مَثَلًا ظَلَّ وَجهُهُ مُسوَدًّا وَهُوَ كَظيمٌ
மிக்க அருளாளர் பற்றி அவர்கள் கூறியதுபோல, அவர்களில் ஒருவனுக்கு (ஒரு புதல்வியைப் பற்றிய) செய்தி கொடுக்கப்பட்ட போது, துக்கத்தாலும் கோபத்தாலும் அவன் முகம் இருண்டுவிடுகின்றது!
أَوَمَن يُنَشَّؤُا۟ فِى الحِليَةِ وَهُوَ فِى الخِصامِ غَيرُ مُبينٍ
(அவர்கள் கூறுகின்றனர்), அழகாக இருப்பதற்காக வளர்க்கப்படுவதும், மேலும் போரில் உதவி செய்ய முடியாததுமான ஒரு சந்ததியில் என்ன நன்மை இருக்கின்றது?
وَجَعَلُوا المَلٰئِكَةَ الَّذينَ هُم عِبٰدُ الرَّحمٰنِ إِنٰثًا أَشَهِدوا خَلقَهُم سَتُكتَبُ شَهٰدَتُهُم وَيُسـَٔلونَ
மிக்க அருளாளரின் ஊழியர்களான வானவர்கள் பெண்களாக இருக்கின்றனர் என்று அவர்கள் கூறினர்! அவர்களது படைப்பிற்கு இவர்கள் சாட்சிகளாக இருந்தனரா? அவர்களுடைய கூற்றுகள் பதிவு செய்யப்படுகின்றன, மேலும் அவர்கள் வினவப்படுவார்கள்.
وَقالوا لَو شاءَ الرَّحمٰنُ ما عَبَدنٰهُم ما لَهُم بِذٰلِكَ مِن عِلمٍ إِن هُم إِلّا يَخرُصونَ
இப்படியும் அவர்கள் கூறினர், மிக்க அருளாளர் நாடியிருந்தால், நாங்கள் அவர்களை வழிபட்டிருக்க மாட்டோம். இத்தகையதொரு கூற்றுக்கு எந்த அடிப்படையும் அவர்களுக்கு இல்லை; அவர்கள் அனுமானிக்க மட்டுமே செய்கின்றனர்.*
أَم ءاتَينٰهُم كِتٰبًا مِن قَبلِهِ فَهُم بِهِ مُستَمسِكونَ
இதற்கு முன் ஒரு புத்தகத்தை நாம் அவர்களுக்குத் தந்து, அதனை அவர்கள் ஆதரிக்கின்றனரா?
بَل قالوا إِنّا وَجَدنا ءاباءَنا عَلىٰ أُمَّةٍ وَإِنّا عَلىٰ ءاثٰرِهِم مُهتَدونَ
உண்மையாவது: அவர்கள் கூறினர், குறிப்பிட்ட அனுஷ்டானங்களை எங்களுடைய பெற்றோர்கள் தொடர்ந்து செய்து வர நாங்கள் கண்டோம், மேலும் அவர்களுடைய காலடிச் சுவடுகளையே நாங்கள் பின்பற்றுகின்றோம்.
وَكَذٰلِكَ ما أَرسَلنا مِن قَبلِكَ فى قَريَةٍ مِن نَذيرٍ إِلّا قالَ مُترَفوها إِنّا وَجَدنا ءاباءَنا عَلىٰ أُمَّةٍ وَإِنّا عَلىٰ ءاثٰرِهِم مُقتَدونَ
எந்தச் சமூகத்திற்கும் ஓர் எச்சரிப்பவரை நாம் அனுப்பிய போதெல்லாம் சிறிதும் மாற்றமின்றி, அந்தச் சமூகத்தின் தலைவர்கள் கூறுவார்கள், குறிப்பிட்ட அனுஷ்டானங்களை எங்கள் பெற்றோர்கள் பின்பற்றி வர நாங்கள் கண்டோம், மேலும் அவர்களுடைய காலடிச்சுவடுகளிலேயே நாங்கள் தொடர்ந்து செல்வோம்.
قٰلَ أَوَلَو جِئتُكُم بِأَهدىٰ مِمّا وَجَدتُم عَلَيهِ ءاباءَكُم قالوا إِنّا بِما أُرسِلتُم بِهِ كٰفِرونَ
(அத்தூதர்) கூறுவார், உங்களுடைய பெற்றோர்களிடமிருந்து நீங்கள் பாரம்பர்யமாகப் பெற்றதை விடவும் மேலான வழிகாட்டலை நான் உங்களிடம் கொண்டு வந்தாலுமா? அவர்கள் கூறுவார்கள், நீர் கொண்டு வந்த தூதுச்செய்தியின் மீது நம்பிக்கை கொள்ள மறுப்பவர்களாக நாங்கள் இருக்கின்றோம்.
فَانتَقَمنا مِنهُم فَانظُر كَيفَ كانَ عٰقِبَةُ المُكَذِّبينَ
அதன் விளைவாக, நாம் அவர்களைப் பழிதீர்த்தோம். ஏற்றுக்கொள்ள மறுத்தவர்களுக்கான பின்விளைவுகளைக் கவனிப்பீராக.
وَإِذ قالَ إِبرٰهيمُ لِأَبيهِ وَقَومِهِ إِنَّنى بَراءٌ مِمّا تَعبُدونَ
ஆப்ரஹாம் தன் தந்தையிடமும் தன் சமூகத்தாரிடமும் கூறினார், நீங்கள் வழிபடுபவற்றை நான் கைவிட்டு விலகிக் கொண்டேன்.
إِلَّا الَّذى فَطَرَنى فَإِنَّهُ سَيَهدينِ
என்னைத் துவக்கியவர் மட்டுமே என்னை வழிநடத்த முடியும்.
وَجَعَلَها كَلِمَةً باقِيَةً فى عَقِبِهِ لَعَلَّهُم يَرجِعونَ
(ஆப்ரஹாமின்) இந்த உதாரணம் பின்தொடர்கின்ற தலைமுறையினருக்கு நிலைத்திருக்கும் ஒரு படிப்பினையாக ஆக்கப்பட்டது; ஒருவேளை அவர்கள் தங்களுடைய ஆத்மாக்களை மீட்டுக்கொள்ளக்கூடும்.
بَل مَتَّعتُ هٰؤُلاءِ وَءاباءَهُم حَتّىٰ جاءَهُمُ الحَقُّ وَرَسولٌ مُبينٌ
உண்மையில், இந்த மக்களுக்கும் அவர்களுடைய பெற்றோர்களுக்கும் போதிய வாய்ப்புக்களை நான் கொடுத்துவிட்டேன், பின்னர் சத்தியம் அவர்களிடம் வந்தது, மேலும் தெளிவுபடுத்துகின்ற ஒரு தூதரும்.
وَلَمّا جاءَهُمُ الحَقُّ قالوا هٰذا سِحرٌ وَإِنّا بِهِ كٰفِرونَ
சத்தியம் அவர்களிடம் வந்த பொழுது, அவர்கள் கூறினர், இது மாயாஜாலமாகும், மேலும் இதில் நாங்கள் நம்பிக்கை கொள்ள மறுப்பவர்களாக இருக்கின்றோம்.
وَقالوا لَولا نُزِّلَ هٰذَا القُرءانُ عَلىٰ رَجُلٍ مِنَ القَريَتَينِ عَظيمٍ
அவர்கள் கூறினர், (மக்கா அல்லது யத்ரிபின்) இரு சமூகங்களில் பிரபலமான வேறொரு மனிதர் மூலமாக மட்டும் இந்தக் குர்ஆன் இறக்கி அனுப்பப்பட்டிருந்தால்!
أَهُم يَقسِمونَ رَحمَتَ رَبِّكَ نَحنُ قَسَمنا بَينَهُم مَعيشَتَهُم فِى الحَيوٰةِ الدُّنيا وَرَفَعنا بَعضَهُم فَوقَ بَعضٍ دَرَجٰتٍ لِيَتَّخِذَ بَعضُهُم بَعضًا سُخرِيًّا وَرَحمَتُ رَبِّكَ خَيرٌ مِمّا يَجمَعونَ
இவர்களா உம்முடைய இரட்சகரின் கருணையை நிர்ணயிப்பவர்கள்? அவர்கள் ஒருவர் மற்றவருக்கு ஊழியம் செய்யும் பொருட்டு, அவர்களில் சிலரை மற்றவர்களை விட அந்தஸ்தில் உயர்த்தியவாறு, இவ்வுலகில் அவர்களுடைய பங்கை நாமே நிர்ணயிக்கின்றோம். உம்முடைய இரட்சகரின் கருணையானது அவர்கள் சேர்க்கக்கூடிய எந்தப் பொருளையும் விட மிகவும் மேலானதாகும்.
وَلَولا أَن يَكونَ النّاسُ أُمَّةً وٰحِدَةً لَجَعَلنا لِمَن يَكفُرُ بِالرَّحمٰنِ لِبُيوتِهِم سُقُفًا مِن فِضَّةٍ وَمَعارِجَ عَلَيها يَظهَرونَ
எல்லா மக்களும் (நம்பமறுக்கின்ற) ஒரே கூட்டமாக ஆகிவிடக் கூடும் என்பது இல்லாதிருந்தால், மிக்க அருளாளரை நம்பமறுக்கின்ற ஒவ்வொருவருக்கும் வெள்ளியிலான கூரைகள் மற்றும் அவர்கள் ஏறிச் செல்லக்கூடிய படிகள் கொண்ட மாளிகைகளை நாம் வழங்கியிருப்போம்.
وَلِبُيوتِهِم أَبوٰبًا وَسُرُرًا عَلَيها يَتَّكِـٔونَ
அவர்களுடைய மாளிகைகள் மனங்கவரும் வாயில்களையும், ஆடம்பரமான ஆசனங்களையும் கொண்டதாக இருந்திருக்கும்.
وَزُخرُفًا وَإِن كُلُّ ذٰلِكَ لَمّا مَتٰعُ الحَيوٰةِ الدُّنيا وَالـٔاخِرَةُ عِندَ رَبِّكَ لِلمُتَّقينَ
அத்துடன் ஏராளமான ஆபரணங்களும். இவை அனைத்தும் கீழான இந்த வாழ்வின் தற்காலிகப் பொருட்களேயாகும். மறுவுலகம் - உம் இரட்சகரிடம் இருப்பது - நன்னெறியாளர்களுக்கு மிகவும் மேலானதாகும்.
وَمَن يَعشُ عَن ذِكرِ الرَّحمٰنِ نُقَيِّض لَهُ شَيطٰنًا فَهُوَ لَهُ قَرينٌ
எவனொருவன் மிக்க அருளாளரின் தூதுச் செய்தியை அலட்சியம் செய்கின்றானோ, அவனுடைய நிலையான கூட்டாளியாக இருப்பதற்கென ஒரு சாத்தானை நாம் நியமிக்கின்றோம்.*
وَإِنَّهُم لَيَصُدّونَهُم عَنِ السَّبيلِ وَيَحسَبونَ أَنَّهُم مُهتَدونَ
அத்தகைய கூட்டாளிகள் பாதையிலிருந்து அவர்களைத் திசை திருப்பிவிடுவார்கள், இருப்பினும் அவர்கள் வழிகாட்டப்பட்டவர்களாகவே இருக்கின்றனர் என அவர்கள் நம்பும்படிச் செய்துவிடுகின்றனர்.
حَتّىٰ إِذا جاءَنا قالَ يٰلَيتَ بَينى وَبَينَكَ بُعدَ المَشرِقَينِ فَبِئسَ القَرينُ
நம் முன்னால் அவன் வரும் பொழுது அவன் கூறுவான், ஐயோ, இரு கிழக்குகளைப்* போல் என்னிடமிருந்து நீ தூரமாக இருந்திருக்க வேண்டுமென நான் விரும்புகின்றேன். என்ன ஒரு துன்பகரமான கூட்டாளி!
وَلَن يَنفَعَكُمُ اليَومَ إِذ ظَلَمتُم أَنَّكُم فِى العَذابِ مُشتَرِكونَ
வரம்புமீறியவர்களாக, நீங்கள் இருவரும் தண்டனையில் பங்கு பெற்றுக்கொள்ளப் போவதால், அந்நாளில் இது உங்களுக்கு ஆறுதல் அளிக்காது.
أَفَأَنتَ تُسمِعُ الصُّمَّ أَو تَهدِى العُمىَ وَمَن كانَ فى ضَلٰلٍ مُبينٍ
செவிடர்களைக் கேட்கச் செய்ய உம்மால் இயலுமா; குருடர்களை அல்லது நெடிய வழிகேட்டில் இருப்பவர்களைப் பார்க்கச் செய்ய உம்மால் இயலுமா?
فَإِمّا نَذهَبَنَّ بِكَ فَإِنّا مِنهُم مُنتَقِمونَ
அதற்கு முன்னர் நாம் உம்மை மரணிக்கச் செய்கின்றோமோ அல்லவோ, நிச்சயமாக நாம் அவர்களைப் பழிதீர்ப்போம்.
أَو نُرِيَنَّكَ الَّذى وَعَدنٰهُم فَإِنّا عَلَيهِم مُقتَدِرونَ
அல்லது, அவர்களுக்கு நாம் வாக்களித்துள்ளதை (தண்டனையை) உமக்குக் காட்டவும் கூடும். அவர்கள் மீது நாம் முழுமையான கட்டுப்பாடுகொண்டிருக்கின்றோம்.
فَاستَمسِك بِالَّذى أوحِىَ إِلَيكَ إِنَّكَ عَلىٰ صِرٰطٍ مُستَقيمٍ
உமக்கு வெளிப்படுத்தப்பட்டவற்றை நீர் உறுதிப்பாட்டுடன் பிரசாரம் செய்ய வேண்டும்; நீர் சரியான பாதையில்தான் இருக்கின்றீர்.*
وَإِنَّهُ لَذِكرٌ لَكَ وَلِقَومِكَ وَسَوفَ تُسـَٔلونَ
இது உமக்கும் உம்முடைய சமூகத்தவருக்குமானதொரு தூதுச் செய்தியாகும்; நீங்கள் அனைவரும் விசாரிக்கப்படுவீர்கள்.
وَسـَٔل مَن أَرسَلنا مِن قَبلِكَ مِن رُسُلِنا أَجَعَلنا مِن دونِ الرَّحمٰنِ ءالِهَةً يُعبَدونَ
உமக்கு முன்னர் நாம் அனுப்பிய தூதர்களிடம் சரிபார்த்துக்கொள்வீராக: வழிபடப்படுவதற்காக- மிக்க அருளாளரை அன்றி - வேறு ஏதேனும் தெய்வங்களை எப்பொழுதேனும் நாம் நியமித்திருக்கின்றோமோ?
وَلَقَد أَرسَلنا موسىٰ بِـٔايٰتِنا إِلىٰ فِرعَونَ وَمَلَإِي۟هِ فَقالَ إِنّى رَسولُ رَبِّ العٰلَمينَ
உதாரணத்திற்கு, ஃபேரோ மற்றும் அவனுடைய பிரதானிகளிடம் நம் சான்றுகளுடன் மோஸஸை நாம் அனுப்பினோம், இவ்வாறு பிரகடனித்தவர்களாக: நான் பிரபஞ்சத்தின் இரட்சகரிடமிருந்துள்ள ஒரு தூதன் ஆவேன்
فَلَمّا جاءَهُم بِـٔايٰتِنا إِذا هُم مِنها يَضحَكونَ
அவர் நம்முடைய சான்றுகளை அவர்களிடம் காட்டிய பொழுது, அவற்றை அவர்கள் எள்ளி நகையாடினர்.
وَما نُريهِم مِن ءايَةٍ إِلّا هِىَ أَكبَرُ مِن أُختِها وَأَخَذنٰهُم بِالعَذابِ لَعَلَّهُم يَرجِعونَ
அவர்களுக்கு நாம் காட்டிய ஒவ்வொரு அத்தாட்சியும் அதற்கு முந்தியதை விட பெரியதாகவே இருந்தது. ஒருவேளை அவர்கள் வருந்தக் கூடும் என்பதற்காக, பீடைகளைக் கொண்டு அவர்களை நாம் கஷ்டத்திற்குள்ளாக்கினோம்.
وَقالوا يٰأَيُّهَ السّاحِرُ ادعُ لَنا رَبَّكَ بِما عَهِدَ عِندَكَ إِنَّنا لَمُهتَدونَ
அவர்கள் கூறினர், மந்திரவாதியே, (இந்தப் பீடையை நிவர்த்திக்க) அவருடன் நீர் ஓர் உடன்படிக்கையைக் கொண்டிருப்பதால், எங்கள் சார்பாக உம்முடைய இரட்சகரை இறைஞ்சுவீராக; பின்னர் நாங்கள் வழிநடத்தப்பட்டவர்களாக இருப்போம்.
فَلَمّا كَشَفنا عَنهُمُ العَذابَ إِذا هُم يَنكُثونَ
ஆனால் அவர்களுடைய கஷ்டத்தை நாம் நிவர்த்தித்தவுடன், அவர்கள் திரும்பிச் சென்றுவிட்டனர்.
وَنادىٰ فِرعَونُ فى قَومِهِ قالَ يٰقَومِ أَلَيسَ لى مُلكُ مِصرَ وَهٰذِهِ الأَنهٰرُ تَجرى مِن تَحتى أَفَلا تُبصِرونَ
ஃபேரோ தன் சமூகத்தாருக்கு அறிவித்தான், என் பிரஜைகளே, எகிப்தின் அரசுரிமை எனக்குச் சொந்தமானதல்லவா, மேலும் பாயும் இந்த ஆறுகள் எனக்குரியவை அல்லவா? நீங்கள் பார்க்கவில்லையா?
أَم أَنا۠ خَيرٌ مِن هٰذَا الَّذى هُوَ مَهينٌ وَلا يَكادُ يُبينُ
யார் மேலானவர்; நானா அல்லது தாழ்ந்தவரும் பேசுவதற்கே சிரமப்படுகின்றவருமான அவரா?
فَلَولا أُلقِىَ عَلَيهِ أَسوِرَةٌ مِن ذَهَبٍ أَو جاءَ مَعَهُ المَلٰئِكَةُ مُقتَرِنينَ
ஒரு தங்கக் கருவூலத்தை அவர் பெற்றிருக்காதது ஏன்; அவருடன் கூட வானவர்கள் வராததேன்?
فَاستَخَفَّ قَومَهُ فَأَطاعوهُ إِنَّهُم كانوا قَومًا فٰسِقينَ
இவ்விதமாக அவன் தன் சமூகத்தாரை ஏமாற்றினான், மேலும் அவர்கள் அவனுக்குக் கீழ்ப்படிந்தனர்; அவர்கள் தீய மக்களாக இருந்தனர்.
فَلَمّا ءاسَفونَا انتَقَمنا مِنهُم فَأَغرَقنٰهُم أَجمَعينَ
நம்மை எதிர்ப்பதில் அவர்கள் பிடிவாதமாக இருந்த போது, நாம் அவர்களைத் தண்டித்தோம் மேலும் அவர்கள் அனைவரையும் மூழ்கடித்தோம்.
فَجَعَلنٰهُم سَلَفًا وَمَثَلًا لِلـٔاخِرينَ
மற்றவர்களுக்கு ஒரு முன்மாதிரியாகவும் ஓர் உதாரணமாகவும் அவர்களை நாம் அமைத்தோம்.
وَلَمّا ضُرِبَ ابنُ مَريَمَ مَثَلًا إِذا قَومُكَ مِنهُ يَصِدّونَ
மேரியின் மகன் ஓர் உதாரணமாக எடுத்துரைக்கப்பட்டபோது, உம் சமூகத்தார் அதனை அலட்சியம் செய்தனர்.
وَقالوا ءَأٰلِهَتُنا خَيرٌ أَم هُوَ ما ضَرَبوهُ لَكَ إِلّا جَدَلًا بَل هُم قَومٌ خَصِمونَ
அவர்கள் கூறினர், எங்களுடைய தெய்வங்களை வழிபடுவது மேலானதா, அல்லது அவரை வழிபடுவதா? உம்முடன் வாதிப்பதற்காக மட்டுமே அவர்கள் இதனைக் கூறினர். உண்மையில், அவர்கள் எதிரணியினருடன் சேர்ந்துவிட்ட மக்களாவர்.
إِن هُوَ إِلّا عَبدٌ أَنعَمنا عَلَيهِ وَجَعَلنٰهُ مَثَلًا لِبَنى إِسرٰءيلَ
அவர் நம்மால் ஆசீர்வதிக்கப் பெற்ற ஓர் ஊழியர் என்பதை விட அதிகமாக ஒன்றுமில்லை, மேலும் இஸ்ரேலின் சந்ததியினருக்கு ஓர் உதாரணமாக அவரை நாம் அனுப்பினோம்.
وَلَو نَشاءُ لَجَعَلنا مِنكُم مَلٰئِكَةً فِى الأَرضِ يَخلُفونَ
நாம் நாடியிருந்தால், பூமியில் குடியேறி இனப்பெருக்கம் செய்கின்ற வானவர்களாக உங்களை நாம் ஆக்கியிருக்க இயலும்.
وَإِنَّهُ لَعِلمٌ لِلسّاعَةِ فَلا تَمتَرُنَّ بِها وَاتَّبِعونِ هٰذا صِرٰطٌ مُستَقيمٌ
உலகத்தின் முடிவை* அறிந்து கொள்வதற்கான ஓர் அறிகுறியாக அவர் திகழ இருக்கின்றார். எனவே இதற்கு மேலும் அதனைக் குறித்து நீங்கள் எந்தச் சந்தேகத்தையும் தாங்கிக் கொண்டிருக்க முடியாது. என்னை நீங்கள் பின்பற்ற வேண்டும்; இதுவே சரியான பாதையாகும்.
وَلا يَصُدَّنَّكُمُ الشَّيطٰنُ إِنَّهُ لَكُم عَدُوٌّ مُبينٌ
சாத்தான் உங்களை விரட்டிவிடாதிருக்கட்டும்; அவன் உங்களுடைய மிகத் தீவிரமான விரோதியாவான்.
وَلَمّا جاءَ عيسىٰ بِالبَيِّنٰتِ قالَ قَد جِئتُكُم بِالحِكمَةِ وَلِأُبَيِّنَ لَكُم بَعضَ الَّذى تَختَلِفونَ فيهِ فَاتَّقُوا اللَّهَ وَأَطيعونِ
சான்றுகளுடன் ஜீஸஸ் சென்ற பொழுது, அவர் கூறினார், ஞானத்தைக் கொண்டு வருவதற்காகவும், மேலும் நீங்கள் தர்க்கித்துக் கொண்டிருக்கின்ற விஷயங்களில் சிலவற்றைத் தெளிவுபடுத்துவதற்காகவும் நான் உங்களிடம் வந்துள்ளேன். நீங்கள் கடவுளிடம் பக்தியோடிருக்கவும், மேலும் எனக்குக் கீழ்ப்படியவும் வேண்டும்.
إِنَّ اللَّهَ هُوَ رَبّى وَرَبُّكُم فَاعبُدوهُ هٰذا صِرٰطٌ مُستَقيمٌ
கடவுள்தான் என்னுடைய இரட்சகரும் உங்களுடைய இரட்சகரும் ஆவார். நீங்கள் அவரை மட்டுமே வழிபடவேண்டும். இதுவே சரியான பாதையாகும்.
فَاختَلَفَ الأَحزابُ مِن بَينِهِم فَوَيلٌ لِلَّذينَ ظَلَموا مِن عَذابِ يَومٍ أَليمٍ
எதிரணியினர் தங்களுக்கிடையிலேயே தர்க்கித்துக் கொண்டனர். வலிநிறைந்ததொரு நாளின் தண்டனையின் மூலம் வரம்புமீறுபவர்களுக்குக் கேடுதான்.
هَل يَنظُرونَ إِلَّا السّاعَةَ أَن تَأتِيَهُم بَغتَةً وَهُم لا يَشعُرونَ
வேளையானது (தீர்ப்பு நாள்), அவர்கள் அதனைச் சற்றும் எதிர்பாராதிருக்கையில் திடீரென அவர்களிடம் வர வேண்டுமென அவர்கள் காத்திருக்கின்றனரா?
الأَخِلّاءُ يَومَئِذٍ بَعضُهُم لِبَعضٍ عَدُوٌّ إِلَّا المُتَّقينَ
நெருங்கிய நண்பர்கள் அந்நாளில் ஒருவர் மற்றவருக்கு விரோதிகளாகிவிடுவார்கள், நன்னெறியாளர்களைத் தவிர.
يٰعِبادِ لا خَوفٌ عَلَيكُمُ اليَومَ وَلا أَنتُم تَحزَنونَ
என் ஊழியர்களே, அந்நாளில் உங்களுக்கு அச்சம் எதுவும் இருக்காது, அன்றி நீங்கள் துக்கப்படவும் மாட்டீர்கள்.
الَّذينَ ءامَنوا بِـٔايٰتِنا وَكانوا مُسلِمينَ
அவர்கள்தான் நம்முடைய வெளிப்பாடுகளின் மீது நம்பிக்கை கொண்டவர்கள், மேலும் சரணடைந்தவர்களாக இருந்தவர்கள்.
ادخُلُوا الجَنَّةَ أَنتُم وَأَزوٰجُكُم تُحبَرونَ
உங்களுடைய துணைகளுடன் சேர்ந்து, சுவனத்தில் நுழையுங்கள், மேலும் களித்திருங்கள்.
يُطافُ عَلَيهِم بِصِحافٍ مِن ذَهَبٍ وَأَكوابٍ وَفيها ما تَشتَهيهِ الأَنفُسُ وَتَلَذُّ الأَعيُنُ وَأَنتُم فيها خٰلِدونَ
தங்கத் தாம்பாளங்களும் குவளைகளும் அவர்களிடம் முன் வைக்கப்படும், அத்துடன் இதயங்கள் ஆசைப்படுகின்ற, மேலும் கண்கள் விரும்புகின்ற ஒவ்வொன்றையும் அவர்கள் காண்பார்கள். அதிலே நீங்கள் என்றென்றும் வசித்திடுவீர்கள்.
وَتِلكَ الجَنَّةُ الَّتى أورِثتُموها بِما كُنتُم تَعمَلونَ
உங்களுடைய காரியங்களுக்குப் பலனாக, நீங்கள் வாரிசாகப் பெறுகின்ற சுவனம் இத்தகையதேயாகும்.
لَكُم فيها فٰكِهَةٌ كَثيرَةٌ مِنها تَأكُلونَ
அதிலிருந்து நீங்கள் உண்ணுகின்ற, அனைத்துக் கனிவர்க்கங்களும் அங்கே உங்களுக்குக் கிடைக்கும்.
إِنَّ المُجرِمينَ فى عَذابِ جَهَنَّمَ خٰلِدونَ
நிச்சயமாக, குற்றவாளிகள் எரிகிடங்கின் தண்டனையில் என்றென்றும் வாழ்ந்திடுவார்கள்.
لا يُفَتَّرُ عَنهُم وَهُم فيهِ مُبلِسونَ
தண்டனை ஒருபோதும் அவர்களுக்குக் குறைக்கப்பட மாட்டாது; அவர்கள் அதிலே அடைக்கப்படுவார்கள்.
وَما ظَلَمنٰهُم وَلٰكِن كانوا هُمُ الظّٰلِمينَ
அவர்களுக்கு அநீதமிழைத்தது நாமல்லர்; அவர்கள்தான் தங்களுடைய சொந்த ஆத்மாக்களுக்கே அநீதமிழைத்துக் கொண்டனர்.
وَنادَوا يٰمٰلِكُ لِيَقضِ عَلَينا رَبُّكَ قالَ إِنَّكُم مٰكِثونَ
அவர்கள் இறைஞ்சுவார்கள்: மாலிகே, உம்முடைய இரட்சகர் எங்களை முடித்துவிடட்டும். அவர் கூறுவார், நீங்கள் என்றென்றும் தங்குகின்றீர்கள்.
لَقَد جِئنٰكُم بِالحَقِّ وَلٰكِنَّ أَكثَرَكُم لِلحَقِّ كٰرِهونَ
நாம் உங்களுக்குச் சத்தியத்தைத் தந்துள்ளோம், ஆனால் உங்களில் அதிகமானோர் சத்தியத்தை வெறுக்கின்றீர்கள்.
أَم أَبرَموا أَمرًا فَإِنّا مُبرِمونَ
அவர்கள் சில திட்டங்களைத் தீட்டுகின்றனரா? நாமும்தான் திட்டமிட்டுக் கொண்டிருக்கின்றோம்.
أَم يَحسَبونَ أَنّا لا نَسمَعُ سِرَّهُم وَنَجوىٰهُم بَلىٰ وَرُسُلُنا لَدَيهِم يَكتُبونَ
அவர்களுடைய இரகசியங்களையும் சதித்திட்டங்களையும் நாம் செவியேற்கவில்லை என்று அவர்கள் எண்ணிக் கொண்டிருக்கின்றனரா? ஆம், மெய்யாகவே; நம் தூதர்கள் அவர்களுடன் இருக்கின்றனர், பதிவு செய்து கொண்டு.
قُل إِن كانَ لِلرَّحمٰنِ وَلَدٌ فَأَنا۠ أَوَّلُ العٰبِدينَ
பிரகடனிப்பீராக: மிக்க அருளாளர் ஒரு மகனைக் கொண்டிருந்தாலும், அப்போதும் நான்தான் வழிபடுபவனாக முன்னணியில் இருப்பேன்.
سُبحٰنَ رَبِّ السَّمٰوٰتِ وَالأَرضِ رَبِّ العَرشِ عَمّا يَصِفونَ
அவர் துதிப்பிற்குரியவர்; அவர்தான் வானங்கள் மற்றும் பூமியின் இரட்சகராவார், அவர்களுடைய கூற்றுகளுக்கு மிகவும் அப்பாற்பட்டு, மாபெரும் சாம்ராஜ்யத்தையுடைய இரட்சகர்.
فَذَرهُم يَخوضوا وَيَلعَبوا حَتّىٰ يُلٰقوا يَومَهُمُ الَّذى يوعَدونَ
அவர்களுக்காகக் காத்துக் கொண்டிருக்கின்ற அவர்களுடைய நாளினை அவர்கள் சந்திக்கும் வரை அவர்கள் மூடத்தனமான தவறுகள் புரிந்து கொண்டும் விளையாடிக் கொண்டும் இருக்கட்டும்.
وَهُوَ الَّذى فِى السَّماءِ إِلٰهٌ وَفِى الأَرضِ إِلٰهٌ وَهُوَ الحَكيمُ العَليمُ
அவர்தான் விண்ணில் ஒரு தெய்வமாகவும் மேலும் பூமியில் ஒரு தெய்வமாகவும் இருக்கின்ற ஒரே ஒருவர். அவர்தான் ஞானம் மிகுந்தவர், சர்வமும் அறிந்தவர்.
وَتَبارَكَ الَّذى لَهُ مُلكُ السَّمٰوٰتِ وَالأَرضِ وَما بَينَهُما وَعِندَهُ عِلمُ السّاعَةِ وَإِلَيهِ تُرجَعونَ
வானங்கள் மற்றும் பூமி, மேலும் அவற்றுக்கிடையில் உள்ள ஒவ்வொன்றின் ஆட்சியதிகாரம் அனைத்தையும் சொந்தமாகக் கொண்டிருக்கின்ற அந்த ஒருவர் மிகவும் உயர்வானவர். வேளை (உலகத்தின் முடிவு) பற்றிய அறிவு அவரிடமே உள்ளது, மேலும் அவரிடமே நீங்கள் திருப்பப்படுவீர்கள்.
وَلا يَملِكُ الَّذينَ يَدعونَ مِن دونِهِ الشَّفٰعَةَ إِلّا مَن شَهِدَ بِالحَقِّ وَهُم يَعلَمونَ
அவருடன் அவர்கள் இணைவழிபாடு செய்கின்ற எவரும் பரிந்துரைப்பதற்கு எந்த அதிகாரத்தையும் பெற்றிருக்கவில்லை, அவர்களுடைய பரிந்துரை சத்தியத்துடன் ஒத்துப்போவதாகவும், அவர்கள் முற்றிலும் அறிந்தவர்களாகவும் இருந்தாலே அன்றி.
وَلَئِن سَأَلتَهُم مَن خَلَقَهُم لَيَقولُنَّ اللَّهُ فَأَنّىٰ يُؤفَكونَ
அவர்களைப் படைத்தது யாரென அவர்களிடம் நீர் கேட்பீராயின், அவர்கள் கூறுவார்கள், கடவுள். பின்னர் ஏன் அவர்கள் விலகிச் செல்கின்றனர்?
وَقيلِهِ يٰرَبِّ إِنَّ هٰؤُلاءِ قَومٌ لا يُؤمِنونَ
இது பிரகடனம் செய்யப்படும்; என் இரட்சகரே, இந்த மக்கள் நம்பிக்கை கொள்ளவில்லை.
فَاصفَح عَنهُم وَقُل سَلٰمٌ فَسَوفَ يَعلَمونَ
அவர்களை நீர் அலட்சியம் செய்திட வேண்டும், மேலும் கூறுவீராக, சாந்தி; அவர்கள் நிச்சயம் கண்டு கொள்வார்கள்.