إِذَا السَّماءُ انفَطَرَت
வானமானது நொறுக்கப்படும் பொழுது.
إِذَا السَّماءُ انفَطَرَت
வானமானது நொறுக்கப்படும் பொழுது.
وَإِذَا الكَواكِبُ انتَثَرَت
கோள்கள் சிதறடிக்கப்படுகின்றன.
وَإِذَا البِحارُ فُجِّرَت
பெருங்கடல்கள் வெடிக்க வைக்கப்படுகின்றன.
وَإِذَا القُبورُ بُعثِرَت
சமாதிகள் திறக்கப்படுகின்றன.
عَلِمَت نَفسٌ ما قَدَّمَت وَأَخَّرَت
ஒவ்வொரு ஆன்மாவும் தன்னுடைய முன்னேற்றத்திற்குக் காரணமானது எது, மேலும் அது பின்தங்கக் காரணமானது எது என்று கண்டு கொள்ளும்.
يٰأَيُّهَا الإِنسٰنُ ما غَرَّكَ بِرَبِّكَ الكَريمِ
மானிடனே உன்னைத்தான், மிகுந்த கண்ணியத்திற்குரியவரான, உன்னுடைய இரட்சகரிடமிருந்து உன்னைத் திசை திருப்பியது எது?
الَّذى خَلَقَكَ فَسَوّىٰكَ فَعَدَلَكَ
உன்னைப் படைத்து, உன்னை வடிவமைத்து, உன்னைப் பூரணப்படுத்திய அந்த ஒருவர்.
فى أَىِّ صورَةٍ ما شاءَ رَكَّبَكَ
அவர் தேர்ந்தெடுத்த எந்த வடிவத்திலும், அவர் அதனைக் கட்டமைத்தார்.
كَلّا بَل تُكَذِّبونَ بِالدّينِ
உண்மையில், மார்க்கத்தின் மீது நீங்கள் நம்பிக்கை கொள்ள மறுக்கின்றீர்கள்.
وَإِنَّ عَلَيكُم لَحٰفِظينَ
உங்களைச் சுற்றிலும் (கண்ணுக்குத் தெரியாத) காவலர்கள் இருக்கின்றனர் என்ற நிதர்சனத்தின் மீது கவனமற்றவர்களாக.
كِرامًا كٰتِبينَ
அவர்கள் கண்ணியமான பதிவாளர்களாக இருக்கின்றனர்.
يَعلَمونَ ما تَفعَلونَ
நீங்கள் செய்கின்ற ஒவ்வொன்றையும் அவர்கள் பதிவு செய்கின்றனர்.
إِنَّ الأَبرارَ لَفى نَعيمٍ
நிச்சயமாக, பக்திமான்கள் பேரானந்தத்திற்குத் தகுதியடைந்துவிட்டனர்.
وَإِنَّ الفُجّارَ لَفى جَحيمٍ
அதே சமயம் தீயவர்கள் நரகத்திற்குத் தகுதியாகிவிட்டனர்.
يَصلَونَها يَومَ الدّينِ
தீர்ப்பு நாளில் அதற்கு உள்ளாவார்கள்.
وَما هُم عَنها بِغائِبينَ
அவர்கள் ஒருபோதும் அதனை விட்டு அகலமாட்டார்கள்.
وَما أَدرىٰكَ ما يَومُ الدّينِ
தீர்ப்பு நாளானது அச்சமூட்டுவதாகும்.
ثُمَّ ما أَدرىٰكَ ما يَومُ الدّينِ
எப்படிப்பட்ட ஒரு நாள்; அத்தீர்ப்பு நாள்!
يَومَ لا تَملِكُ نَفسٌ لِنَفسٍ شَيـًٔا وَالأَمرُ يَومَئِذٍ لِلَّهِ
அதுதான் எந்த ஓர் ஆத்மாவும் மற்றோர் ஆத்மாவுக்கு உதவ இயலாத நாளாகும், மேலும் அனைத்துத் தீர்மானங்களும், அந்நாளில், கடவுளுக்கு உரியதாக இருக்கும்.