Kadavulmattum.orgகுர்ஆன் · அனைத்து 114 அத்தியாயங்கள்

83. அல்-முதஃபிஃபீன் (மோசடியாளர்கள்)

المطففين · 36 வசனங்கள் · மக்காவில் அருளப்பட்டது

செயலியில் வாசிக்க

‹ அத்தியாயம் 82அத்தியாயம் 84 ›
83:1

وَيلٌ لِلمُطَفِّفينَ

மோசடியாளர்களுக்குக் கேடுதான்.

83:2

الَّذينَ إِذَا اكتالوا عَلَى النّاسِ يَستَوفونَ

அவர்கள் மக்களிடமிருந்து பெறும் போது முழு அளவையையும் உரிமையுடன் கேட்கின்றனர்.

83:3

وَإِذا كالوهُم أَو وَزَنوهُم يُخسِرونَ

ஆனால் அவர்களுக்கு அளவைகளையோ அல்லது எடைகளையோ தரும் போது, அவர்கள் மோசடி செய்கின்றனர்.

83:4

أَلا يَظُنُّ أُولٰئِكَ أَنَّهُم مَبعوثونَ

தாங்கள் உயிர்த்தெழுப்பப்படுவோம் என்பதை அவர்கள் அறியமாட்டார்களா?

83:5

لِيَومٍ عَظيمٍ

மகத்தானதொரு நாளன்று?

83:6

يَومَ يَقومُ النّاسُ لِرَبِّ العٰلَمينَ

அதுதான் மனிதர்கள் அனைவரும் பிரபஞ்சத்தின் இரட்சகரின் முன்னால் நிற்கின்ற நாளாகும்.

83:7

كَلّا إِنَّ كِتٰبَ الفُجّارِ لَفى سِجّينٍ

உண்மையில், தீயவர்களின் புத்தகமானது, ஸிஜ்ஜீனில் உள்ளது.

83:8

وَما أَدرىٰكَ ما سِجّينٌ

ஸிஜ்ஜீன் என்பது என்னவென்று உமக்குத் தெரியுமா?

83:9

كِتٰبٌ مَرقومٌ

எண்ணியலின் அடிப்படையில் கட்டமைக்கப்பட்டதொரு புத்தகம்.

83:10

وَيلٌ يَومَئِذٍ لِلمُكَذِّبينَ

ஏற்கமறுப்பவர்களுக்கு அந்நாளில் கேடுதான்.

83:11

الَّذينَ يُكَذِّبونَ بِيَومِ الدّينِ

அவர்கள் தீர்ப்பு நாளின் மீது நம்பிக்கை கொள்வதில்லை.

83:12

وَما يُكَذِّبُ بِهِ إِلّا كُلُّ مُعتَدٍ أَثيمٍ

வரம்புமீறுகின்றவன், பாவகரமானவன் தவிர எவரொருவரும் அதனை நம்பமறுக்க மாட்டார்கள்.

83:13

إِذا تُتلىٰ عَلَيهِ ءايٰتُنا قالَ أَسٰطيرُ الأَوَّلينَ

நம்முடைய வெளிப்பாடுகள் அவனிடம் ஓதிக்காட்டப்படுகின்றபொழுது, அவன் கூறுகின்றான், கடந்த காலக் கட்டுக்கதைகள்!

83:14

كَلّا بَل رانَ عَلىٰ قُلوبِهِم ما كانوا يَكسِبونَ

உண்மையில், அவர்களுடைய இதயங்கள் அவர்களுடைய பாவங்களால் மூடப்பட்டதாகிவிட்டன.

83:15

كَلّا إِنَّهُم عَن رَبِّهِم يَومَئِذٍ لَمَحجوبونَ

உண்மையில், அந்நாளில், அவர்களுடைய இரட்சகரிடமிருந்து அவர்கள் தனிமைப்படுத்தப்படுவார்கள்.

83:16

ثُمَّ إِنَّهُم لَصالُوا الجَحيمِ

பின்னர் நரகத்திற்குள் அவர்கள் தள்ளப்படுவார்கள்.

83:17

ثُمَّ يُقالُ هٰذَا الَّذى كُنتُم بِهِ تُكَذِّبونَ

அவர்களிடம் கூறப்படும், இதுதான் நீங்கள் மறுத்துக் கொண்டிருந்தது.

83:18

كَلّا إِنَّ كِتٰبَ الأَبرارِ لَفى عِلِّيّينَ

உண்மையில், நன்னெறியாளர்களின் புத்தகமானது ‘இல்லிய்யீனில் உள்ளது.

83:19

وَما أَدرىٰكَ ما عِلِّيّونَ

‘இல்லிய்யீன் என்பது என்னவென்று உமக்குத் தெரியுமா?

83:20

كِتٰبٌ مَرقومٌ

எண்ணியலின் அடிப்படையில் கட்டமைக்கப்பட்டதொரு புத்தகம்.

83:21

يَشهَدُهُ المُقَرَّبونَ

எனக்கு நெருக்கமானவர்களால் பார்க்கப்பட இருப்பது.

83:22

إِنَّ الأَبرارَ لَفى نَعيمٍ

நன்னெறியாளர்கள் பேரானந்தத்திற்குத் தகுதியடைந்துவிட்டனர்.

83:23

عَلَى الأَرائِكِ يَنظُرونَ

ஆடம்பரமான ஆசனங்களின் மீது அவர்கள் ரசித்துக் கொண்டிருப்பார்கள்.

83:24

تَعرِفُ فى وُجوهِهِم نَضرَةَ النَّعيمِ

பேரானந்தத்தின் உல்லாசத்தை அவர்களுடைய முகங்களில் நீர் அடையாளம் காண்பீர்.

83:25

يُسقَونَ مِن رَحيقٍ مَختومٍ

அவர்களுடைய பானங்கள் அமிழ்தத்தால் மண மூட்டப்பட்டிருக்கும்.

83:26

خِتٰمُهُ مِسكٌ وَفى ذٰلِكَ فَليَتَنافَسِ المُتَنٰفِسونَ

அதன் மணம் கஸ்தூரியைப் போன்றது. போட்டியாளர்கள் போட்டியிட வேண்டியது இதற்குத்தான்.

83:27

وَمِزاجُهُ مِن تَسنيمٍ

அதனுள் கலக்கப்பட்டிருப்பவை சிறப்பான தனிச் சுவைகளாகும்.

83:28

عَينًا يَشرَبُ بِهَا المُقَرَّبونَ

எனக்கு நெருக்கமானவர்களுக்கெனத் தனியாக ஒதுக்கி வைக்கப்பட்டுள்ள ஓர் ஊற்றிலிருந்து.

83:29

إِنَّ الَّذينَ أَجرَموا كانوا مِنَ الَّذينَ ءامَنوا يَضحَكونَ

தீயவர்கள் நம்பிக்கை கொண்டவர்களைப் பார்த்து நகைப்பதை வழமையாகக் கொண்டிருந்தனர்.

83:30

وَإِذا مَرّوا بِهِم يَتَغامَزونَ

அவர்கள் அவர்களைக் கடந்து சென்ற போதெல்லாம், அவர்கள் ஏளனம் செய்தனர்.

83:31

وَإِذَا انقَلَبوا إِلىٰ أَهلِهِمُ انقَلَبوا فَكِهينَ

அவர்கள் தங்கள் சமூகத்தாருடன் ஒன்று சேர்ந்து கொண்ட போதெல்லாம், அவர்கள் நகைச்சுவை செய்தவாறிருந்தனர்.

83:32

وَإِذا رَأَوهُم قالوا إِنَّ هٰؤُلاءِ لَضالّونَ

அவர்கள் அவர்களைக் கண்ட பொழுதெல்லாம், அவர்கள் கூறினார்கள், இந்தக் கூட்டத்தினர் மிக நெடிய வழிகேட்டில் இருக்கின்றனர்!

83:33

وَما أُرسِلوا عَلَيهِم حٰفِظينَ

(கண்ணுக்குத் தெரியாத) காவலர்கள் என்று எத்தகைய விஷயமும் அவர்களுக்கு இல்லை.

83:34

فَاليَومَ الَّذينَ ءامَنوا مِنَ الكُفّارِ يَضحَكونَ

இன்றைய தினம், நம்பிக்கை கொண்டவர்கள் நம்பமறுத்தவர்களைப் பார்த்து நகைத்துக் கொண்டிருக்கின்றனர்.

83:35

عَلَى الأَرائِكِ يَنظُرونَ

ஆடம்பரமான ஆசனங்களின் மீது அவர்கள் ரசித்துக் கொண்டிருப்பார்கள்.

83:36

هَل ثُوِّبَ الكُفّارُ ما كانوا يَفعَلونَ

மிகவும் நிச்சயமாக, நம்பமறுப்பவர்கள் அவர்கள் செய்தவற்றிற்காகவே திருப்பிக் கொடுக்கப்படுகின்றனர்.

‹ அத்தியாயம் 82அத்தியாயம் 84 ›