Kadavulmattum.orgகுர்ஆன் · அனைத்து 114 அத்தியாயங்கள்

88. அல்-காஷியா (மூழ்கடித்தல்)

الغاشية · 26 வசனங்கள் · மக்காவில் அருளப்பட்டது

செயலியில் வாசிக்க

‹ அத்தியாயம் 87அத்தியாயம் 89 ›
88:1

هَل أَتىٰكَ حَديثُ الغٰشِيَةِ

மூழ்கடித்தலைப் பற்றி நீர் அறிந்திருக்கின்றீரா?

88:2

وُجوهٌ يَومَئِذٍ خٰشِعَةٌ

முகங்கள் அந்நாளில் இழிவுற்றிருக்கும்.

88:3

عامِلَةٌ ناصِبَةٌ

கடுமையான வேலை செய்து கொண்டும் களைப்புற்றவாறும்.

88:4

تَصلىٰ نارًا حامِيَةً

கொழுந்து விட்டெரிகின்ற ஒரு நரக நெருப்பில் துன்புற்றுக் கொண்டிருந்தவாறும்.

88:5

تُسقىٰ مِن عَينٍ ءانِيَةٍ

தகிக்கின்றதோர் ஊற்றிலிருந்து அருந்திக் கொண்டிருந்தவாறும்.

88:6

لَيسَ لَهُم طَعامٌ إِلّا مِن ضَريعٍ

பயனற்ற வகைகளைத் தவிர, அவர்களுக்கு உணவு எதுவும் இருக்காது.

88:7

لا يُسمِنُ وَلا يُغنى مِن جوعٍ

அது ஒருபோதும் ஊட்டமளிக்காது, அன்றி பசியையும் தணிக்காது.

88:8

وُجوهٌ يَومَئِذٍ ناعِمَةٌ

மற்ற முகங்கள் அந்நாளில் உல்லாசம் நிறைந்திருக்கும்.

88:9

لِسَعيِها راضِيَةٌ

தங்களுடைய காரியங்களால் திருப்தியடைந்தவையாக.

88:10

فى جَنَّةٍ عالِيَةٍ

மேன்மையானதொரு சுவனத்தில்.

88:11

لا تَسمَعُ فيها لٰغِيَةً

அபத்தமான எதுவும் அதனில் செவியுறப்படாது.

88:12

فيها عَينٌ جارِيَةٌ

அதனுள் ஓர் ஊற்று பொங்குகின்றது.

88:13

فيها سُرُرٌ مَرفوعَةٌ

அதனுள் ஆடம்பரமான ஆசனங்கள் இருக்கின்றன.

88:14

وَأَكوابٌ مَوضوعَةٌ

மேலும் பானங்கள் கிடைக்கும்படிச் செய்யப்படும்.

88:15

وَنَمارِقُ مَصفوفَةٌ

மேலும் கூஜாக்கள் வரிசைகளில்.

88:16

وَزَرابِىُّ مَبثوثَةٌ

மேலும் எங்கெங்கிலும் கம்பளங்கள்.

88:17

أَفَلا يَنظُرونَ إِلَى الإِبِلِ كَيفَ خُلِقَت

ஒட்டகத்தையும் அவை எவ்வாறு படைக்கப்பட்டுள்ளன என்பதைப் பற்றியும் அவர்கள் ஏன் சிந்தித்துப் பார்க்கக் கூடாது?

88:18

وَإِلَى السَّماءِ كَيفَ رُفِعَت

மேலும் ஆகாயத்தையும் எவ்வாறு அது உயர்த்தப்பட்டுள்ளது எனவும்.

88:19

وَإِلَى الجِبالِ كَيفَ نُصِبَت

மேலும் மலைகளையும் அவை எவ்வாறு நிர்மாணிக்கப்பட்டுள்ளன எனவும்.

88:20

وَإِلَى الأَرضِ كَيفَ سُطِحَت

மேலும் பூமியையும் அது எவ்வாறு கட்டுமானம் செய்யப்பட்டுள்ளது எனவும்.

88:21

فَذَكِّر إِنَّما أَنتَ مُذَكِّرٌ

நீர் நினைவூட்ட வேண்டும், ஏனெனில் உமது இறைப் பணி இந்த நினைவூட்டலைச் சேர்ப்பிப்பதே.

88:22

لَستَ عَلَيهِم بِمُصَيطِرٍ

அவர்கள் மீது உமக்குச் சக்தி எதுவும் கிடையாது.

88:23

إِلّا مَن تَوَلّىٰ وَكَفَرَ

திரும்பிச் சென்று நம்பமறுத்துவிடுபவர்களைப் பொறுத்த வரை.

88:24

فَيُعَذِّبُهُ اللَّهُ العَذابَ الأَكبَرَ

கடவுள் அவர்களை மாபெரும் தண்டனைக்கு உட்படுத்துவார்.

88:25

إِنَّ إِلَينا إِيابَهُم

அவர்களுடைய இறுதி விதி நம் வசமே உள்ளது.

88:26

ثُمَّ إِنَّ عَلَينا حِسابَهُم

பின்னர் நாம் அவர்களைக் கணக்குக் கொடுப்பதற்காக அழைப்போம்.

‹ அத்தியாயம் 87அத்தியாயம் 89 ›