Kadavulmattum.orgகுர்ஆன் · அனைத்து 114 அத்தியாயங்கள்

89. அல்-ஃபஜ்ர் (விடியல்)

الفجر · 30 வசனங்கள் · மக்காவில் அருளப்பட்டது

செயலியில் வாசிக்க

‹ அத்தியாயம் 88அத்தியாயம் 90 ›
89:1

وَالفَجرِ

விடியலின் மீது.

89:2

وَلَيالٍ عَشرٍ

மேலும் பத்து இரவுகள்* மீது.

89:3

وَالشَّفعِ وَالوَترِ

இரட்டைப்படை மற்றும் ஒற்றைப்படையின் மீது.*

89:4

وَالَّيلِ إِذا يَسرِ

இரவின் மீது அது கடந்து செல்கின்ற போது.

89:5

هَل فى ذٰلِكَ قَسَمٌ لِذى حِجرٍ

அறிவுத்திறன் உடைய ஒருவனுக்கு, ஆழ்ந்ததொரு பிரமாணம்.

89:6

أَلَم تَرَ كَيفَ فَعَلَ رَبُّكَ بِعادٍ

ஆதுகளை உம்முடைய இரட்சகர் என்ன செய்தார் என்பதை நீர் கவனித்தீரா?

89:7

إِرَمَ ذاتِ العِمادِ

இரம்; உயர்ந்த கட்டடங்களையுடைய நகரம்.

89:8

الَّتى لَم يُخلَق مِثلُها فِى البِلٰدِ

அதனைப் போன்ற எந்த ஒன்றும் எங்கேயும் இருந்ததில்லை.

89:9

وَثَمودَ الَّذينَ جابُوا الصَّخرَ بِالوادِ

அத்துடன் தங்களுடைய பள்ளத்தாக்குகளில் பாறைகளைக் குடைந்துகொண்ட, தமூதுகள்.

89:10

وَفِرعَونَ ذِى الأَوتادِ

மேலும் பலம் பொருந்திய ஃபேரோ.

89:11

الَّذينَ طَغَوا فِى البِلٰدِ

அவர்கள் அனைவரும் பூமியின் மீது வரம்புமீறினார்கள்.

89:12

فَأَكثَروا فيهَا الفَسادَ

தீமைகளை அவர்கள் எங்கெங்கிலும் பரப்பினார்கள்.

89:13

فَصَبَّ عَلَيهِم رَبُّكَ سَوطَ عَذابٍ

அதன் விளைவாக, சவுக்கடியின் ஒரு தண்டனையை உம்முடைய இரட்சகர் அவர்கள் மீது ஊற்றினார்.

89:14

إِنَّ رَبَّكَ لَبِالمِرصادِ

உம்முடைய இரட்சகர் எப்பொழுதும் விழிப்புடன் இருக்கின்றார்.

89:15

فَأَمَّا الإِنسٰنُ إِذا مَا ابتَلىٰهُ رَبُّهُ فَأَكرَمَهُ وَنَعَّمَهُ فَيَقولُ رَبّى أَكرَمَنِ

தன்னுடைய இரட்சகரால் ஆசிகள் மற்றும் உல்லாசத்தைக் கொண்டு மானிடன் சோதிக்கப்படுகின்ற பொழுது, அவன் கூறுகின்றான், என் இரட்சகர் என் பால் தாராளமானவராக இருக்கின்றார்.

89:16

وَأَمّا إِذا مَا ابتَلىٰهُ فَقَدَرَ عَلَيهِ رِزقَهُ فَيَقولُ رَبّى أَهٰنَنِ

ஆனால் வாழ்வாதாரங்களைக் குறைத்தலின் மூலம் அவனை அவர் சோதித்தால், அவன் கூறுகின்றான், என் இரட்சகர் என்னை இழிவுபடுத்துகின்றார்!

89:17

كَلّا بَل لا تُكرِمونَ اليَتيمَ

தவறு! அனாதையை மதிக்காததன் மூலம் நீதான் அதனை உன் மீதே வரவழைத்துக் கொண்டாய்.

89:18

وَلا تَحٰضّونَ عَلىٰ طَعامِ المِسكينِ

மேலும் ஏழைகளின் பால் தர்மத்தை ஆதரிக்காததாலும்.

89:19

وَتَأكُلونَ التُّراثَ أَكلًا لَمًّا

மேலும் நாதியற்ற அனாதைகளின் சொத்துகளை விழுங்கியதாலும்.

89:20

وَتُحِبّونَ المالَ حُبًّا جَمًّا

மேலும் பணத்தை மிகவும் அதிகமாக நேசித்ததாலும்.

89:21

كَلّا إِذا دُكَّتِ الأَرضُ دَكًّا دَكًّا

உண்மையில், பூமியானது பொடிப்பொடியாக நொறுக்கப்படுகின்ற, முற்றிலும் பொடிப்பொடியாக நொறுக்கப்படுகின்றபொழுது.

89:22

وَجاءَ رَبُّكَ وَالمَلَكُ صَفًّا صَفًّا

மேலும் அணி அணியாக வானவர்களுடன், உம்முடைய இரட்சகர் வருகின்றார்.

89:23

وَجِا۟ىءَ يَومَئِذٍ بِجَهَنَّمَ يَومَئِذٍ يَتَذَكَّرُ الإِنسٰنُ وَأَنّىٰ لَهُ الذِّكرىٰ

அந்நாளில், எரிகிடங்கு முன்னால் கொண்டு வரப்படும். அந்நாளில், மானிடன் நினைவு கூர்வான் ஆனால், என்ன ஒரு நினைவு கூர்தல் - அது மிகவும் தாமதமானதாக இருக்கும்.

89:24

يَقولُ يٰلَيتَنى قَدَّمتُ لِحَياتى

அவன் கூறுவான், ஐயோ, (நிரந்தரமான) என்னுடைய வாழ்வுக்காக நான் தயாராக இருந்திருக்க வேண்டுமே என்று நான் விரும்புகின்றேன்.

89:25

فَيَومَئِذٍ لا يُعَذِّبُ عَذابَهُ أَحَدٌ

அந்நாளில், அவர் தருகின்ற தண்டனையை விட மிகவும் மோசமான எந்தத் தண்டனையும் இருக்க இயலாது.

89:26

وَلا يوثِقُ وَثاقَهُ أَحَدٌ

அவர் அடைப்பதைப் போல சக்தி மிக்கதாக எந்த அடைப்பும் இருக்காது.

89:27

يٰأَيَّتُهَا النَّفسُ المُطمَئِنَّةُ

திருப்தியடைந்த ஆத்மாவே, உன்னைப் பொறுத்த வரை.

89:28

ارجِعى إِلىٰ رَبِّكِ راضِيَةً مَرضِيَّةً

திருப்தியுற்றதாகவும் திருப்தியளிப்பதாகவும், உன்னுடைய இரட்சகரிடம் திரும்பிவிடு.

89:29

فَادخُلى فى عِبٰدى

என்னுடைய ஊழியர்களுக்குள் நல்வரவாகுக.

89:30

وَادخُلى جَنَّتى

என்னுடைய சுவனத்திற்குள் நல்வரவாகுக.

‹ அத்தியாயம் 88அத்தியாயம் 90 ›