إِنَّمَا النَّسىءُ زِيادَةٌ فِى الكُفرِ يُضَلُّ بِهِ الَّذينَ كَفَروا يُحِلّونَهُ عامًا وَيُحَرِّمونَهُ عامًا لِيُواطِـٔوا عِدَّةَ ما حَرَّمَ اللَّهُ فَيُحِلّوا ما حَرَّمَ اللَّهُ زُيِّنَ لَهُم سوءُ أَعمٰلِهِم وَاللَّهُ لا يَهدِى القَومَ الكٰفِرينَ
புனித மாதங்களை மாற்றியமைத்துக்கொள்ளுதல் மிதமிஞ்சிய நம்பமறுப்பின் ஓர் அடையாளமேயாகும்; நம்பமறுத்தவர்களின் வழிதவறுதலை அது அதிகரிக்கின்றது. கடவுளால் புனிதப்படுத்தப்பட்டுள்ள மாதங்களின் எண்ணிக்கையைத் தக்கவைத்துக்கொள்கின்ற அதே சமயம், புனித மாதங்களையும் வாடிக்கையான மாதங்களையும் அவர்கள் மாற்றியமைத்துக்கொள்கின்றனர். இவ்விதமாக அவர்கள் கடவுள் புனிதப்படுத்தியவற்றை அவமரியாதை செய்கின்றனர். அவர்களுடைய தீய காரியங்கள் அவர்களுடைய கண்களுக்கு அலங்காரமாக்கப்பட்டுள்ளன. நம்பமறுக்கின்ற சமூகத்தாரைக் கடவுள் வழிநடத்துவதில்லை.
Altering the Sacred Months is a sign of excessive disbelief; it augments the straying of those who have disbelieved. They alternate the Sacred Months and the regular months, while preserving the number of months consecrated by God. They thus violate what God has consecrated. Their evil works are adorned in their eyes. God does not guide the disbelieving people.
அடிக்குறிப்பு
*9:37 சீர்கெட்டுப் போய்விட்ட முஸ்லிம் உலகத்தின் கூற்றுப்படி, புனித மாதங்களானவை ரஜப், ஜுல்-காஇதா, ஜுல் ஹிஜ்ஜஹ் மற்றும் முஹர்ரம் ஆகியவையாகும். (இஸ்லாமிய வருடத்தின் 7வது 11வது 12வது 1வது மாதங்கள்). ஆயினும், கவனம் நிறைந்ததொரு குர்ஆன் ஆய்வு, அவை ஜுல்-ஹிஜ்ஜஹ், முஹர்ரம், ஸஃபர், மற்றும் ரபிஐ (12வது, 1வது, 2வது மற்றும் 3வது மாதங்கள்) ஆகத்தான் இருக்க வேண்டும் என்பதை வெளிப்படுத்துகின்றது. பார்க்க பின் இணைப்பு 15.