وَما مَنَعَهُم أَن تُقبَلَ مِنهُم نَفَقٰتُهُم إِلّا أَنَّهُم كَفَروا بِاللَّهِ وَبِرَسولِهِ وَلا يَأتونَ الصَّلوٰةَ إِلّا وَهُم كُسالىٰ وَلا يُنفِقونَ إِلّا وَهُم كٰرِهونَ
அவர்களுடைய செலவிடுதல் ஏற்றுக்கொள்ளப்படுவதைத் தடுத்தது என்னவென்றால் அவர்கள் கடவுள் மற்றும் அவருடைய தூதர் மீது நம்பிக்கை கொள்ள மறுத்துவிட்டனர் என்பதேயாகும், மேலும் (ஸலாத்)* தொடர்புத் தொழுகைகளை அவர்கள் கடைப்பிடித்த போது, அவர்கள் சோம்பலுடனே அவற்றைக் கடைப்பிடித்தார்கள், மேலும் தர்மத்திற்கென அவர்கள் கொடுத்த போது, மனமின்றியே அவர்கள் அவ்வாறு செய்தார்கள்.
What prevented the acceptance of their spending is that they disbelieved in God and His messenger, and when they observed the Contact Prayers (Salat),* they observed them lazily, and when they gave to charity, they did so grudgingly.
அடிக்குறிப்பு
*9:54 (ஸலாத்) தொடர்புத் தொழுகைகள் இக்குர்ஆனிற்கு முன்னரே இருந்தன, மேலும் ஆப்ரஹாமிடமிருந்து கைமாற்றப்பட்டன (பார்க்க 21:73) என்பதற்கு இது மற்றுமொரு சான்றாகும். அத்துடன், குர்ஆனில் தொடர்புத் தொழுகைகளின் விபரங்களை நாம் எங்கே காண இயலும்? என அவர்கள் கேட்கும் போது, குர்ஆன் முழுமையானதாகவும் முற்றிலும் விவரிக்கப்பட்டதாகவும் உள்ளது என்ற கடவுளின் உறுதியான கூற்றை மறுக்கத் துணிகின்றவர்களை அது திகைக்கச் செய்கின்றது (6:19,38,114).