முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்க
EN தமிழ் हिंदी
Kadavulmattum.org

இணைப்பு 7: நாம் ஏன் படைக்கப்பட்டோம்?

மிகப் பயங்கரமானதொரு குற்றத்தை நாம் புரிந்ததன் காரணமாகவே இந்த உலகில் நாம் இருக்கின்றோம். அத்துடன் இந்த வாழ்வானது நம்மை மீட்டுக்கொள்வதற்கு, நமது குற்றத்தைப் பழித்துரைத்து கடவுளின் சாம்ராஜ்யத்தில் மீண்டும் சேர்ந்து கொள்வதற்கு, நமக்குரிய வாய்ப்பு ஆகும்.

இது அத்தனையும் ஒரு சில பில்லியன் வருடங்களுக்கு முன்னர் “விண்ணக சமூகத்தினில் ஒரு கலகம் எழுந்த போது” துவங்கியது (38:69). உயர் அந்தஸ்துடைய படைப்புகளில் ஒருவனான, சாத்தான், அவனுக்குக் கடவுளால் கொடுக்கப்பட்ட சக்திகள் கடவுளுடன் மற்றொரு தெய்வமாக இருப்பதற்கு அவனைத் தகுதிப்படுத்தி விட்டது என்ற இறுமாப்பான எண்ணங்களை மனதில் கொண்டிருந்தான். இவ்விதமாக அவன் கடவுளின் பரிபூரண அதிகாரத்திற்கு அறைகூவல் விடுத்தான். சாத்தானின் இந்த எண்ணம் இறைநிந்தனையானதாக மட்டும் இருக்கவில்லை. அது தவறானதாகவும் இருந்தது கடவுள் மட்டுமே. வேறு எவரொருவரும் அல்லர், ஒரு தெய்வமாக இருப்பதற்குரிய தகுதியையும் திறனையும் கொண்டிருக்கிறார். சாத்தானின் இறைநிந்தனையைத் தொடர்ந்து, விண்ணக சமூகத்தில் ஒரு பிரிவினை நிகழ்ந்தது. மேலும் கடவுளுடைய சாம்ராஜ்யத்தின் பிரஜைகள் அனைவரும் நான்கு இளங்களாக வகைப்படுத்தப்பட்டார்கள்:

1. வானவர்கள்: கடவுளின் பரிபூரண அதிகாரத்தை ஆதரித்த படைப்பினங்கள்.

2. விலங்கினங்கள்: கலகம் செய்த போதிலும் பின்னர் திருந்துவதற்கான கடவுளின் அழைப்பினை ஏற்றுக் கொண்ட படைப்பினங்கள்.

3. ஜிள்கள்: சாத்தானுடன் ஒத்துப்போன படைப்பினங்கள்: அவன் ஒரு “தெய்வம்” ஆக இருப்பதற்குரிய திறன் கொண்டவனாக இருக்கிறான் என.

4. மானிடர்கள்: தங்களுடைய மனங்களில் முடிவெடுக்காத படைப்பினங்கள்: கடவுளின் ஏகோபித்த அதிகாரத்தில் ஓர் உறுதியான நிலையை எடுக்க அவர்கள் தவறிவிட்டனர்.

மிக்க கருணையாளர்

அவருடைய பரிபூரண அதிகாரத்தை ஆதரிக்காதவர்களான படைப்பினங்களைக் கடவுள் வெளியேற்றிட வேண்டும் என்று வானவர்கள் எதிர்பார்த்தனர் (2:30]. ஆனால் கடவுளோ மிக்க கருணையாளர்; நம்முடைய தவறைப் பழித்துரைக்க ஒரு வாய்ப்பை நமக்குத் தர அவர் தீர்மானித்தார். அத்துடன் வானவர்களிடம் அவர்கள் அறியாதவற்றை அவர் அறிந்திருப்பதாகத் தெரிவித்தார் (2:30]. சில படைப்புகள் மீட்டுக்கொள்ளப்படுவதற்குரிய ஒரு வாய்ப்புக்குத் தகுதி பெற்றிருப்பதைக் கடவுள் அறிந்திருந்தார்.

நீங்கள் ஒரு விமானத்தைப் பறக்கச் செய்கின்ற திறமையுள்ளவர் என்று கோரினால் உங்களுடைய கோரிக்கையைப் பரிசோதிக்க மிகச்சிறந்த வழி ஒரு விமானத்தை உங்களிடம் தந்து அதனைப் பறக்கச் செய்யும்படி கேட்டுக்கொள்வதுதான். சாத்தானின் கோரிக்கைக்கு பதிலளிக்குமுகமாகக் கடவுள் செய்யத் தீர்மானித்தது மிகச் சரியாக இதனைத்தான். சுடவுள் ஏழு விரிந்த பிரபஞ்சங்களைப் படைத்தார். பின்னர் வானவர்களிடம் “பூமி” என்றழைக்கப்படுகின்ற மிகச்சிறிய துகளினில் சாத்தானை ஒரு தெய்வமாக அவர் நியமிக்கின்றார் என்பதைத் தெரிவித்தார் (2:30). நிலையற்ற ஒரு “தெய்வமாக” சாத்தானை நியமிப்பது தொடர்பான குர்ஆனின் விளக்கங்கள் [36:60] முந்திய வேதத்தினை உறுதிப்படுத்துகின்றது.

கடவுளின் திட்டப்படி மரணம் படைக்கப்பட்டு (67:1-2), பின்னர் மானிடர்களையும் ஜின்களையும் இந்த உலகத்திற்குக் கொண்டு வர வேண்டியதானது. இவ்விதமாக அவர்கள் எந்தப் பாரபட்சமும் இன்றித்துவங்குகின்றனர். மேலும் கடவுளின் பரிபூரண அதிகாரத் தையோ அல்லது சாத்தானின் பல தெய்வக் கோட்பாட்டையோ ஆதரிப்பதற்கான முழு சுதந்தரத்தைப் பிரயோகிக்கின்றனர். மிக முக்கியமான இந்தத் தீர்மானத்தை எடுப்பதற்காக, கடவுளிடமிருந்து அவருடைய பரிபூரண அதிகாரத்தை ஆதரிக்கின்ற ஒரு தூதுச் செய்தியையும், அவ்வண்ணமே சாத்தானிடமிருந்து அவனுடைய பல தெய்வக் கொள்கைகளைப் புகுத்துகின்ற ஒரு செய்தியையும் மானிட இனத்தவர் ஒவ்வொருவரும் பெற்றுக் கொள்கின்றனர்.

சாதகமான துவக்கம் ஒன்றை நமக்குத் தருவதற்காக இந்த உலகத்திற்கு நம்மை அனுப்புவதற்கு முன்னர், மிக்க கருணையாளர் மானிட இனத்தவர் அனைவரையும் அவர் முன் ஒன்று திரட்டினார். மேலும் அவர் மட்டுமே நம்முடைய இரட்சகர் மற்றும் அதிபதியாக உள்ளார் என்று நாம் சாட்சியம் பகர்ந்தோம் (7:172). எனவே, கடவுளின் பரிபூரண அதிகாரத்தை ஆதரிப்பதென்பது மானிட இனத்தவர் ஒவ்வொருவருக்கும் உள்ளமைந்த ஓர் அங்கமாக இருக்கின்ற இயற்கையான ஓர் உள்ளுணர்வாகும்.

தூஸிஃபர், நீ, உன் மனதில் கூறினாய்: நான் வானத்துக்கு ஏறுவேன். தேவனுடைய நட்சத்திரங்களுக்கு மேலாக என் சிங்காசனத்தை உயர்த்துவேன்; வடபுறங்களிலுள்ள ஆராதனைக் கூட்டத்தின் பர்வதத்திலே வீற்றிருப்பேன் என்றும், நான் மேகங்களுக்கு மேலாக உன்னதங்களில் ஏறுவேன்; உன்னத மானவருக்கு ஒப்பாவேன் என்றும் நீ உன் இருதயத்தில் சொன்னாயே!

(ஏசாயா 14:13-15)

பின்னர், சாத்தான் அவரை உயர்ந்த மலையின் மேல் கொண்டு போய், உலகத்தின் சகல ராஜ்யங் களையும் அவைகளின் மகிமையையும் அவருக்குக் காண்பித்து: நீர் சாஷ்டாங்கமாய் விழுந்து. என்னைப் பணிந்து கொண்டால் இவைகளையெல்லாம் உமக்குத் தருவேன் என்று சொன்னான். அப்பொழுது இயேசு: அப்பாலே போ சாத்தானே; உன் தேவனாகிய கர்த்தரைப் பணிந்து கொண்டு, அவர் ஒருவருக்கே ஆராதனை செய்வாயாக என்று எழுதியிருக்கிறதே என்றார்.

[மத்தேயு 4:8-10) & (லூக்கா 4:5-8)

கலகக்காரர்களை மரணத்தில் ஆழ்த்திய பின்னர்.

பின்னர் சோதனைக் காலத்தின்போது ஜின்கள் மற்றும் மானிடர்களின் ஆத்மாக்கள் தங்குவதற்குத் தகுந்த உடல்களைப் படைத்தார். முதலாவது ஜின்னின் உடல் நெருப்பில் இருந்து உருவாக்கப்பட்டது. மேலும் சாத்தான் அந்த உடலுக்கென நிர்ணயிக்கப்பட்டான் [15:27). பூமியிலுள்ள பொருளான, களிமண்ணில் இருந்து முதல் மானிட உடல் படைக்கப்பட்டது (15:28), மேலும் கடவுள் அந்த உடலுக்கென முதல் மானிட ஆத்மாவை நிர்ணயித்தார். தெய்வீகத் திட்டத்தின்படி வானவர்கள் பூமியின் மீது மானிடர்களுக்குச் சேவைபுரிய வேண்டியதானது – அவர்களைப் பாதுகாத்தல், காற்றுக்களை ஓட்டி அதனால் அவர்களுக்காக மழைபொழியச் செய்தல், வாழ்வாதாரங்களை விநியோகித்தல் போன்றவை. இந்த உண்மை இக்குர்ஆனில் உவமானம் வாயிலாக எடுத்துரைக்கப்பட்டுள்ளது: “உம்முடைய இரட்சகர் வானவர்களிடம் கூறினார். ‘ ஆதமின் முன்னர் சிரம் பணிந்து விழுங்கள்”. எதிர்பார்த்தவாறே மானிட இனத்திற்குச் சேவை செய்வதுடன் தொடர்புடைய எந்த ஒன்றையும் செய்வதற்குச் சாத்தான் மறுத்துவிட்டான் (2:34, 7:11, 17:61, 18:50, 20:116).

ஆதமுடைய உடல் பூமியின் மீது இருந்த அதே சமயம், மெய்யான அந்நபர். அந்த ஆத்மா, மிகவும் வெளிப்புறமாக உள்ள பிரபஞ்சத்தில் இருக்கின்ற சுவனத்திற்குள் அனுமதிக்கப்பட்டார். தடுக்கப்பட்ட அந்த மரத்தின் மூலம் சித்தரிக்கப்பட்ட குறிப்பிடப்பட்ட கட்டளைகளைக் கடவுள் ஆதமுக்குக் கொடுத்தார், சாத்தானும் அவனுடைய சாத்தானியத் தூதுச் செய்தியை ஆதமிடம் தெரிவிப்பதற்காக ஆதமின் கூட்டாளியாக நியமிக்கப்பட்டான். மற்றவை மானிட சரித்திரம்.

மானிட இனத்தவர் ஒருவர் பிறக்கின்ற ஒவ்வொரு முறையும், அப்புதிய குழந்தைக்கு ஆத்மாக்களிள் கருவூலத்தில் இருந்து மானிட நபர் ஒருவர் நிர்ணயிக்கப்படுகின்றார். கடவுள் அவருடைய அறிவுக்கேற்ப அவ்வாத்மாக்களை நிர்ணயிக்கின்றார் (28:68). ஒவ்வோர் ஆத்மாவும் குறிப்பிட்ட ஓர் உடலுக்கென நிர்ணயிக்கப்பட்டு, அத்துடன் குறிப்பிட்ட சூழ்நிலைகளின் கீழ் வாழத் தகுதி பெறுகின்றது. எந்த ஆத்மாக்கள் நல்லவையாக உள்ளன. எந்த ஆத்மாக்கள் தீயவையாக உள்ளன என்பதைக் கடவுள் மட்டுமே அறிவார். கடவுளின் திட்டத்திற்கு ஏற்ப நம்முடைய குழந்தைகள் நமது வீடுகளுக்கென நிர்ணயிக்கப்படுகின்றனர்.”

அந்தப் புதிய மானிட இனத்தவருக்கு சாத்தானின் கண்ணோட்டத்தை எடுத்துக் காட்டுவதற்காக சுதந்தரமானதொரு ஜின் ஆத்மாவும் கூட நிர்ணயிக்கப்படுகின்றது. எந்த ஒரு ஜின்னின் பௌதிக உடலும் அதன் பெற்றோர் ஜின்களிடம் இருந்து இனப்பெருக்கம் செய்யப்படுகின்ற அதே சமயம், அந்த ஜின் ஆத்மாவானது சுதந்தரமானதொரு தனி நபருடையதாக உள்ளது. ஜின்கள் சாத்தானின் சந்ததியினராக உள்ளனர் (7:27, 18:50). நிர்ணயிக்கப்பட்ட அந்த ஜின்னானது மானிட இனத்தவனுடன் ஜனனம் முதல் மரணம் வரை உடனிருக்கின்றது. அத்துடன் நியாயத் தீர்ப்பு நாள் அன்று பிரதான சாட்சியாகத் திகழ்கின்றது [50:23]. நமது மண்டைகளுக்குள் மானிட ஆத்மாவுக்கும் ஜின் ஆத்மாவுக்கும் இடையில் அவர்கள் இருவரும் ஒரு கண்ணோட்டத்தில் ஒத்துப்போகின்ற வரை தொடர்ந்ததொரு விவாதம் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது.

ஆதிபாவம்

பொதுவான நம்பிக்கைக்கு மாறாக, “ஆதிபாவம்” ஆனது தடுக்கப்பட்ட அம்மரத்தில் இருந்து ஆதம் உண்டபோது கடவுளின் சட்டத்தை அவர் மீறியது அல்ல. ஆதிபாவமானது மிகப்பெரும் கலகத்தின் போது கடவுளின் பரிபூரண அதிகாரத்தை ஆதரிப்பதில் நமது தோல்வியே ஆகும். அந்த ஆதிபாவத்தைப் பழித்துரைத்து அத்துடன் கடவுளின் பரிபூரண அதிகாரத்தை ஆதரிப்பதற்கு அந்த மானிட நபர் அவனுடைய அல்லது அவளுடைய ஜின் கூட்டாளியை ஒப்புக்கொள்ள வைத்துவிட்டால், இரண்டு படைப்புகளும் தீர்ப்பு நாள் அன்று கடவுளின் நிரந்தர சாம்ராஜ்யத்திற்குள் மீட்டுக் கொள்ளப்படுகின்றனர். ஆனால் அந்த ஜின் கூட்டாளியானது அந்த மானிட நபரை சாத்தானின் இணை வழிபாட்டுக் கண்ணோட்டங்களை ஆதரிப்பதற்கு ஒப்புக்கொள்ள வைத்து விட்டால், பின்னர் இரண்டு படைப்புகளும் கடவுளின் சாம்ராஜ்யத்தில் இருந்து என்றென்றும் வெளியேற்றப்பட்டவர்களாகி விடுகின்றனர்.

அவனுடைய கண்ணோட்டத்தை மேம்படுத்துவதற்காக, சாத்தானும் அவனுடைய பிரதிநிதிகளும் முஹம்மத், ஜீஸஸ், மேரி மற்றும் மகான்கள் முதலான சக்தியற்ற படைப்புகளை இணைவழிபாடு செய்தலை ஆதரித்து வாதாடுகின்றனர். பல தெய்வக் கோட்பாடுடைய நமது சுபாவங்களினால்தான் நாம் இங்கே இருக்கின்றோம் என்பதனால், நம்மில் அதிகமாளோர் சாத்தானுக்கு சுலபமான இரையாகவே இருக்கின்றனர்.

ஒரு “தெய்வம்” ஆக சாத்தானின் யோக்கியதையின்மையானது அவனது சாம்ராஜ்யம் முழுவதும் கலவரம், வியாதி, விபத்துக்கள். துன்பம் மற்றும் யுத்தம் ஆகியன வியாபித்திருத்தல் மூலம் முன்னரே நிரூபிக்கப்பட்டுவிட்டதாக உள்ளது [36:60-62). மற்றொருபுறம், சாத்தானைப் பழித்துரைத்து, கடவுளின் பரிபூரண அதிகாரத்தை ஆதரித்து, அத்துடன் ஜீஸஸ், மற்றும் முஹம்மத் போன்ற சக்தியற்ற அத்துடன் இறந்து விட்ட படைப்புகளை இணைவழிபாடு செய்தலில் இருந்து விலகிக் கொள்கின்ற மானிட இனத்தவர்கள் கடவுளின் பாதுகாப்பிற்குள் மீட்டுக்கொள்ளப்படுகின்றனர் – அவர்கள் இங்கே இந்த உலகிலும் என்றென்றும் குறைவற்ற ஒரு வாழ்வை மகிழ்வுடன் அனுபவிக்கின்றனர்.

இந்த உலகத்தில் நமது வாழ்வானது நம்முடைய பலதெய்வக் கோட்பாட்டு எண்ணங்களை அம்பலப்படுத்து வதற்காக வடிவமைக்கப்பட்ட சோதனைகளின் ஒரு தொடராக இருக்கின்ற காரணத்தால், போலித் தெய்வவழிபாடு மட்டுமே மன்னிக்கப்பட மாட்டாத குற்றமாக உள்ளது (4:48,116). ஒன்று கடவுளின் பரிபூரண அதிகாரத்தையோ, அல்லது சாத்தானின் இணைவழிபாட்டுக் கண்ணோட்டங்களையோ ஆதரிப்பதற்கான நம்முடைய தீர்மானத்தை தெளிவாகக் காட்டுவதற்காக இவ்வுலகமானது தெய்வீகரீதியில் வடிவமைக்கப்பட்டுள்ளது (67:1-2). அதிகாலைத் தொழுகையையும் உச்சபட்ச வெப்பம் கொண்ட மிக நீண்ட நாட்களின்போது நோன்பிருத்தலையும் கடைப்பிடிப்பதன் மூலம் கடவுளின் சட்டங்களை ஆதரிப்பதற்கான நம்முடைய விருப்பத்தை சோதிக்கும் வண்ணம் பகல் மற்றும் இரவு தொடர்ந்து மாறிக்கொண்டிருக்கின்றது. கடவுளின் பரிபூரண அதிகாரத்தைப் பற்றி முற்றிலும் உறுதியுடன் இருக்கின்றவர்கள் மட்டுமே மீட்டுக்கொள்ளப்படுகின்றனர் (26:89).

📖குர்ஆன் படிக்ககுர்ஆன்