கடவுளின் பெயரால், மிக்க அருளாளர், மிக்க கருணையாளர்.
அமைப்பு உருவான பின்னணி
இறைவனிடமிருந்து பெறப்பட்ட வழிகாட்டல்கள் மட்டுமே இணை வைக்காமல் கலப்பின்றி இறைவனை அடைய வழி காட்டும் என்ற நம்பிக்கையில், கடந்த 1999 ஆம் வருடம் முதல் தமிழகத்தில் (கடவுள் மட்டும் ) கடவுளுக்கு சரணடைந்தவர்களாக, வாழ்வின் அனைத்து அம்சங்களையும் வழிபாடாக செயலாற்றி வருபவர்கள் தான் சரணடைந்தவர்கள். (SUBMITTERS)
இறைவனின் அருளால் அதன் முக்கியமான செயல்பாடுகளாக ஒவ்வொரு வாரமும் சரணடைந்தவர்கள் குடும்பத்துடன் ஒன்றிணைந்து வெள்ளிக்கிழமை கூட்டுபிரார்த்தனை, ஞாயிற்றுக்கிழமை குடும்பத்துடன் குர்ஆன் வகுப்புகள் மற்றும் வருடந்தோறும் ரமலான் மாதத்தில் லைலத்துல் கலர் இரவு நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது.
2020 ஜனவரி முதல் உலகம் சந்தித்து வரும் COVID -19 என்ற அசாதாரண சூழ்நிலையை சரணடைந்தவர்கள் இறைவனின் அருளால் சாதகமாக மாற்றி வலைதள வகுப்பு மூலம் தினசரி 3 முறை(சூரிய உதயம் முன்பு, அஸ்தமிக்கும் முன்பு மற்றும் இரவு) தொடர்ந்து சந்தித்து குர்ஆன் வகுப்பு மற்றும் திக்ரு (தியானம்) இறைவனின் நாட்டப்படி நடைபெற்று வருகிறது. எல்லா புகழும் இறைவனுக்கே.
இந்த தொடர் வகுப்பில் பங்கு பெறுபவர்களால் ஒன்றிணைந்து உருவாக்கப்பட்டது தான்( Submitters Charity Trust) சரணடைந்தவர்கள் தர்ம ஸ்தாபனம்.
சரணடைந்தவர்கள் தர்ம ஸ்தாபனத்தின் குறிக்கோள்/நோக்கம் (Vision) :
வெளிப்படை தன்மை மற்றும் பொறுப்புணர்வுடன் (Transparency and Accountability) அல் குர்ஆன் (2:195,215 – 9:60- 16:125) வசனங்களை ஒற்றுமையாக நடைமுறைபடுத்துதல்.
சரணடைந்தவர்கள் தர்ம ஸ்தாபனத்தின் செயல் திட்டம் (Mission) :
1.உடனடி செயல் திட்டம்(Short term Goal ) : கடவுள் நாடினால், தேவைகளை அறிந்து, வாழ்வாதாரம் மற்றும் மருத்துவ உதவிகளை பொருளாதாரமாகவோ, ஆலோசனை வழிகாட்டுதல் மூலமாகவே ஏற்பாடுகள் செய்தல்.
2.தொலைநோக்க செயல் திட்டம்: (Long term Goals)
1).தர்மம் பெறுபவர்களை தர்மம் வழங்கும் அளவில் உயர்ந்த.வழிகாட்டுதல் அடிப்படையில் திட்டம் வகுத்து (பொருளாதார தன்னிறைவுக்கு ) பாடுபடுதல்.
2).கல்வி உதவி மற்றும் வழி காட்டுதல் ஆலோசனைகள், சரணடைதலை நோக்கிய கல்விச் சாலைகளை அமைக்க பாடுபடுதல்.
3).பின் இணைப்பு 36 யை செயலாக்கம் பெற செய்ய பாடுபடுதல்.
நமது வலைதள குர்ஆன் பயிலும் குழுமம் சார்பில்
நமது நோக்கம் (குறிக்கோள்) மற்றும் அதை அடையும் செயல் திட்டத்தின் முதல் நடவடிக்கையாக
ஜகாத் / தர்மம் வசூலித்து தேவை யுடையவர்களை கண்டறிந்து விநியோகம் செய்ய ஆரம்பித்த நாள் : 08.06.2020
சரணடைந்தவர்கள் தர்ம ஸ்தாபனத்தின் நிர்வாகம்:
சரணடைந்தவர்கள் தர்ம ஸ்தாபனத்தின் நிர்வாகம பொறுப்பு ஏற்றுக் கொண்டவர்களின்
பெயர் மற்றும் தொலைபேசி எண்கள்.
1. Jahir Hussain / 9884017119
2. Rahim /+91 98417 26681
3. Omar kathaf @Yaseen/+91 90948 65963
4. Mohamed Thameem /+91 95662 68619
5. Zulfiqar Latheef /+91 6369302450
சரணடைந்தவர்கள் தர்ம ஸ்தாபனத்துடன் இணைந்து செயல்பட அன்பான அழைப்பு:
இதில் இணைந்து தர்மம் / ஜகாத் பணம், மற்றும் உதவிகள் வழங்கவும்,
தேவை யுடையவர்கள் பெற்றுக் கொள்ளவும், தேவையுடையவர்களுக்கு வழங்க சிபாரிசு செய்யவும் யார் வேண்டுமானாலும் முன் வரலாம்.
சரணடைந்தவர்கள் தர்ம ஸ்தாபனத்தின் உதவிகளை பெற:
உதவி தேவைப்படின் நிர்வாகிகள் ஏழு பேரில் யாருக்கேனும்,தெரிவித்து அவர்களிடம், அவர்கள் கேட்கும் விபரங்களை வழங்கி இறைவனின் அருளை பெற்றுக் கொள்ளலாம்.
சரணடைந்தவர்கள் தர்ம ஸ்தாபனத்திற்கு எவ்வாறு பங்களிப்பு வழங்குவது
Bank Account Details
SUBMITTERS CHARITY TRUST
A/C No is 50200055890993
IFSC : HDFC0000166
CHENNAI – PARRYS CORNER BRANCH
(Now we are receiving donations within India only)
SUMBITTERS CHARITY TRUST
FIRST ANNUAL REPORT
2020 – 2021
கடவுளின் பெயரால் மிக்க அருளாளர் மிக்க கருணையாளர்
கடந்த ஒரு வருட காலமாக வலைதளம் மூலம் நடக்கும் குர்ஆன் வகுப்பில் பங்கு எடுப்பவர்கள் ஒன்றிணைந்து ஒருங்கிணைந்து ஆரம்பித்த சரணடைந்தவர்கள் தர்ம ஸ்தாபனத்தின் ஒரு வருட அறிக்கையை சமர்ப்பிப்பதில் மகிழ்ச்சி அடைகிறோம்.
அல்ஹம்துலில்லாஹ்
குர்ஆனை பயிலும் குழுக்கள்
[18:28]அவரை மட்டும் தேடியவர்களாக, பகலும் இரவும் தங்கள் இரட்சகரை வழிபடுவோருடன் இருப்பதற்கு உம்மை நீர் நிர்ப்பந்தித்துக் கொள்ள வேண்டும். இவ்வுலகின் வீண்பகட்டுக்களைத் தேடியவர்களாக அவர்களிடமிருந்து உம்முடைய கண்களைத் திருப்பிக் கொள்ள வேண்டாம். அன்றியும் எவனுடைய இதயத்தை நம்முடைய தூதுச் செய்தியில் கவனமற்றதாக நாம் ஆக்கி விட்டோமோ அவனுக்கும், தன் சுய விருப்பங்களைப் பின்பற்றுபவனுக்கும், மேலும் தங்களுடைய முன்னுரிமைகள் குழம்பிப்போனவர்களுக்கும் நீர் கீழ்ப்படிய வேண்டாம். [74:56]கடவுள்-ன் நாட்டத்திற்கெதிராக அவர்கள் கவனத்தில் எடுத்துக் கொள்ள இயலாது. அவர்தான் நன்னெறியின் மூலாதாரமாவார்; அவர்தான் மன்னிப்பின் மூலாதாரமாவார்.நம் அனைவருக்கும் இதற்கான பலனை தருவதற்கு கடவுள் போதுமானவர்.
உங்களிடம் வரும் எதுவும், உங்கள் முயற்சியாலோ, நீங்கள் தகுதியானவர் என்பதாலோ அல்ல. அவைகளை ஒரு பரிசாகவும், அருளாகவும், கருணையாகவும் எண்ணுங்கள். அந்த நன்றியுணர்வால் அருள் மேலும் பெருகும்.
Bank Account Details
SUBMITTERS CHARITY TRUST
A/C No is 50200055890993
IFSC : HDFC0000166
CHENNAI – PARRYS CORNER BRANCH
(Now we are receiving donations within India only)