EN தமிழ் हिंदी
Kadavulmattum.org

அறிமுகம் — கடவுளுக்கு மட்டும் சரணடைதல் என்றால் என்ன?

கடவுளுக்கு மட்டும் சரணடைதல் என்ற தூய செய்திக்கு உங்களை வரவேற்கிறோம் — பாரம்பரிய எல்லைகள் அனைத்தையும் கடந்து, ஒரே உண்மைக் கடவுளின் வழிபாட்டின் கீழ் மனிதகுலத்தை ஒன்றிணைக்கும் உலகளாவிய மார்க்கம்.

بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ

கடவுளின் பெயரால், மிக்க அருளாளர், மிக்க கருணையாளர்.

1

மூன்று அடித்தளங்கள்

🕌

சரணடைதல் (இஸ்லாம்) என்றால் என்ன?

சரணடைதல் (அரபியில் “இஸ்லாம்”) என்பது கடவுள் தனது அனைத்துப் படைப்புகளுக்கும் நிர்ணயித்த மார்க்கம். இது ஒரு புதிய மார்க்கம் அல்ல; வரலாறு முழுவதும் கடவுளின் எல்லாத் தூதர்களும் கொண்டுவந்த அதே செய்திதான் — ஆப்ரஹாம் முதல் மோஸஸ் வரை, ஜீஸஸ் முதல் முஹம்மத் வரை.

☝️

கடவுள் மட்டுமே — لا إله إلا الله

சரணடைதலின் அடித்தளம் “அவரைத் தவிர தெய்வம் இல்லை” என்ற பிரகடனமே — எந்தப் பங்காளியோ இடைத்தரகரோ பரிந்துரையாளரோ இல்லாமல், கடவுளை மட்டுமே வழிபடுதல்.

🔢

கணித அற்புதம்

குர்ஆன் தன்னிடமிருந்து வந்தது என்பதற்குக் கடவுள் ஒரு வலுவான பௌதீகச் சான்றை அளித்துள்ளார்: 19 என்ற எண்ணை அடிப்படையாகக் கொண்ட கணிதக் குறியீடு — மனிதக் கைகளால் உருவாக்கியிருக்க முடியாத அமைப்புகள்.

மேலும் அறிய →

إِنَّ الدّينَ عِندَ اللَّهِ الإِسلٰمُ وَمَا اختَلَفَ الَّذينَ أوتُوا الكِتٰبَ إِلّا مِن بَعدِ ما جاءَهُمُ العِلمُ بَغيًا بَينَهُم وَمَن يَكفُر بِـٔايٰتِ اللَّهِ فَإِنَّ اللَّهَ سَريعُ الحِسابِ

கடவுளால் அங்கீகரிக்கப்பட்ட ஒரே மார்க்கம் சரணடைதல் ஆகும். முரண் நகையாக, வேதத்தைப் பெற்றவர்கள்தான் அவர்கள் பெற்றிருக்கின்ற அறிவிற்குப் பின்னரும், பொறாமையின் காரணமாக, இந்த உண்மையைத் தர்க்கிப்பவர்களாக இருக்கின்றனர். கடவுளின் வெளிப்பாடுகளை ஏற்கமறுக்கின்ற இத்தகையவர்களுக்கு, கணக்கெடுப்பதில் கடவுள் மிகவும் கண்டிப்பானவராக இருக்கின்றார்.

குர்ஆன் 3:19
2

வழிபாட்டின் ஐந்து கடமைகள்

ஷஹாதா — நம்பிக்கையின் பிரகடனம்

“அவரைத் தவிர தெய்வம் இல்லை.”

شَهِدَ اللَّهُ أَنَّهُ لا إِلٰهَ إِلّا هُوَ وَالمَلٰئِكَةُ وَأُولُوا العِلمِ قائِمًا بِالقِسطِ لا إِلٰهَ إِلّا هُوَ العَزيزُ الحَكيمُ

அவரைத் தவிர தெய்வம் இல்லை என்று கடவுள் சாட்சியம் பகர்கின்றார், மேலும் வானவர்களும் அறிவுடையவர்களும் அவ்வாறே செய்கின்றனர். சத்தியமாகவும் நீதமாகவும், அவர்தான் பரிபூரணமான தெய்வமாக இருக்கின்றார்; அவரை அன்றி தெய்வம் இல்லை, எல்லாம் வல்லவர், ஞானம் மிகுந்தவர்.

குர்ஆன் 3:18
ஸலாத் — தொடர்புத் தொழுகை

கடவுளுடன் உறவைப் பேணுவதற்காக, ஒரு நாளில் ஐந்து முறை தொடர்புத் தொழுகை.

وَأَقِمِ الصَّلوٰةَ طَرَفَىِ النَّهارِ وَزُلَفًا مِنَ الَّيلِ إِنَّ الحَسَنٰتِ يُذهِبنَ السَّيِّـٔاتِ ذٰلِكَ ذِكرىٰ لِلذّٰكِرينَ

பகலின் இரு முனைகளிலும், இரவின் போதும் நீங்கள் (ஸலாத்) தொடர்புத் தொழுகைகளைக் கடைப்பிடிக்க வேண்டும். நற்செயல்கள் தீய செயல்களைத்துடைத்தெடுத்து விடும். கவனத்தில் கொள்ளக் கூடியவர்களுக்கு இது ஒரு நினைவூட்டல் ஆகும்.

குர்ஆன் 11:114
ஜகாத் — கடமையான தர்மம்

தேவையுள்ளோருக்கு உதவுவதன் மூலம் செல்வத்தைத் தூய்மைப்படுத்துதல்.

وَأَقيمُوا الصَّلوٰةَ وَءاتُوا الزَّكوٰةَ وَاركَعوا مَعَ الرّٰكِعينَ

நீங்கள் (ஸலாத்) தொடர்புத் தொழுகைகளைக் கடைப்பிடிக்கவும், மேலும் (ஜகாத்) கடமையான தர்மத்தைக் கொடுக்கவும், மேலும் குனிந்து வழிபடுபவர்களுடன் சேர்ந்து குனிந்து வழிபடவும் வேண்டும்.

குர்ஆன் 2:43
ஸவ்ம் — நோன்பு

ஆன்மீகத் தூய்மைக்காக ரமலான் மாதத்தில் நோன்பு.

يٰأَيُّهَا الَّذينَ ءامَنوا كُتِبَ عَلَيكُمُ الصِّيامُ كَما كُتِبَ عَلَى الَّذينَ مِن قَبلِكُم لَعَلَّكُم تَتَّقونَ

நம்பிக்கை கொண்டவர்களே உங்களைத்தான், உங்களுக்கு முன்னிருந்தோர்களுக்கு விதிக்கப்பட்டிருந்தவாறே, உங்களுக்கும் நோன்பிருத்தல் விதிக்கப்படுகின்றது, நீங்கள் மீட்சியை அடையும் பொருட்டு.

குர்ஆன் 2:183
ஹஜ் — புனிதப் பயணம்

சக்தி உள்ளவர்களுக்கு, வாழ்வில் ஒருமுறை மக்காவுக்குப் பயணம்.

فيهِ ءايٰتٌ بَيِّنٰتٌ مَقامُ إِبرٰهيمَ وَمَن دَخَلَهُ كانَ ءامِنًا وَلِلَّهِ عَلَى النّاسِ حِجُّ البَيتِ مَنِ استَطاعَ إِلَيهِ سَبيلًا وَمَن كَفَرَ فَإِنَّ اللَّهَ غَنِىٌّ عَنِ العٰلَمينَ

அதனில் தெளிவான அடையாளங்கள் உள்ளன: ஆப்ரஹாம் நின்ற இடம். அதில் நுழைகின்ற எவரும் பாதுகாப்புடன் கடந்து செல்ல அனுமதிக்கப்பட வேண்டும். அவர்களால் அதற்குச் செலவு செய்ய இயலும் போது, இந்த ஆலயத்திற்கு ஹஜ்ஜைக் கடைப்பிடிக்க வேண்டும் என்பது மக்கள் கடவுளுக்குச் செலுத்த வேண்டிய கடமையாகும். நம்பமறுப்பவர்களைப் பொறுத்த வரை, கடவுளுக்கு எவரும் தேவையில்லை.

குர்ஆன் 3:97
3

சரணடைதலில் ஒற்றுமை

உண்மையான சரணடைந்தோர் எல்லா இடங்களிலும் உள்ளனர்

ஒவ்வொரு காலத்திலும் ஒவ்வொரு சமூகத்திலும், தங்கள் பெயர் எதுவாக இருந்தாலும், உள்ளங்கள் கடவுளுக்கு மட்டுமே அர்ப்பணிக்கப்பட்ட மனிதர்கள் இருந்துள்ளனர்.

إِنَّ الَّذينَ ءامَنوا وَالَّذينَ هادوا وَالنَّصٰرىٰ وَالصّٰبِـٔينَ مَن ءامَنَ بِاللَّهِ وَاليَومِ الـٔاخِرِ وَعَمِلَ صٰلِحًا فَلَهُم أَجرُهُم عِندَ رَبِّهِم وَلا خَوفٌ عَلَيهِم وَلا هُم يَحزَنونَ

நிச்சயமாக, நம்பிக்கை கொண்டவர்கள், யூதர்களாக இருப்பவர்கள், கிறிஸ்துவர்கள், மேலும் மதம் மாறியவர்கள்; எவராயினும் (1) கடவுள் மீது நம்பிக்கை கொண்டு, மேலும் (2) இறுதி நாளின் மீதும் நம்பிக்கை கொண்டு, மேலும் (3) நன்னெறியானதொரு வாழ்வு நடத்துகின்றவர்கள், தங்களுடைய இரட்சகரிடமிருந்து தங்களுடைய பிரதிபலனைப் பெற்றுக்கொள்வார்கள். அவர்கள் அஞ்சுவதற்கு எதுவுமில்லை, அன்றி அவர்கள் துக்கப்படவும் மாட்டார்கள்.

குர்ஆன் 2:62

நல்லவர்கள் அனைவரும் ஒன்றே

நல்லவர்கள் அனைவரும், தங்கள் மதப் பெயர்களைக் கடந்து, கடவுளுக்குச் சரணடைவதில் ஒன்றாக இருக்கிறார்கள். இன்று காணப்படும் பிளவுகள் மனிதன் உருவாக்கியவை; மனிதகுலத்திற்கான கடவுளின் விருப்பத்திற்கு எதிரானவை.

4

இறுதிச் செய்தி

اليَومَ أَكمَلتُ لَكُم دينَكُم وَأَتمَمتُ عَلَيكُم نِعمَتى وَرَضيتُ لَكُمُ الإِسلٰمَ دينًا

இன்றைய தினம், உங்களுடைய மார்க்கத்தை நான் முழுமைப்படுத்தி, மேலும் உங்கள் மீதான என்னுடைய ஆசீர்வாதத்தைப் பூரணப்படுத்தி விட்டேன், மேலும் உங்களுக்கான மார்க்கமாக சரணடைதலை நான் விதித்துள்ளேன்.

குர்ஆன் 5:3 (ஒரு பகுதி)

இது மனிதகுலத்திற்கான கடவுளின் இறுதிச் செய்தி — கடவுளின் அனைத்து நபிமார்களும் கொண்டுவந்த செய்திகளைத் தூய்மைப்படுத்தி ஒரே செய்தியாக ஒன்றிணைக்கும் நேரம் வந்துவிட்டது: கடவுளுக்கு மட்டும் சரணடைதல்.

📖குர்ஆன் படிக்ககுர்ஆன்