திரித்துவக் கொள்கை மிகைத்திருக்கின்ற, ஆங்கிலம் பேசும் இவ்வுலகில், இந்தக் குர்ஆனில் பன்மைப் பதத்தின் கடவுளுடைய பிரயோகத்தின் மூலம் சில மக்கள் வியப்படைகின்றனர். இந்தக் குர்ஆனின் மகத்தான தூதுச் செய்தியானது, எந்தச் சமரசத்திற்கும் நிச்சயம் இடமில்லாத, “கடவுள் ஒருவரேயாவார்” என்பதேயாகும் [2:133, 163; 4:171; 5:73; 6:19; 9:31; 12:39; 13:16; 14:48,52; 16:22, 51; 18:110; 21:108; 22:34; 37:4; 38:65: 39:4; 40:16; 41:6; 112:1).
எல்லாம் வல்லவரால் தன்மையில் பன்மை வடிவம் பயன்படுத்தப்படுகின்ற பொழுதெல்லாம், அது ஒரே சீராக வானவர்கள் முதலான மற்றப் படைப்புகளின் பங்கெடுப்பினைக் குறிக்கின்றது. உதாரணத்திற்கு, இந்தக் குர்ஆனின் வெளிப்பாட்டில் வானவர் கேப்ரியேல் மற்றும் நபி முஹம்மதின் பங்களிப்பு உள்ளடங்கியுள்ளது. எனவேதான் 15:9-ல் பன்மை வடிவத்தின் பிரயோகம் : “நாமே இந்த வேதத்தை வெளிப்படுத்தினோம், மேலும் நாமே அதனைப் பாதுகாப்போம்.” இங்கே பன்மை வடிவமானது இக்குர்ஆனைச் சேர்ப்பிக்கின்ற செயல்பாட்டினில் வானவர் கேப்ரியேல் மற்றும் நபி முஹம்மதின் பங்கெடுப்பினை நேரடியாகப் பிரதிபலிக்கின்றது.
ஆதம் மற்றும் ஜீஸஸினுள் உயிர்மூச்சு ஊதப்படுதல் இத்துடன் தொடர்பு கொண்ட மற்றோர் உதாரணமாகும். ஆதமுடைய படைப்பு விண்ணில் நடைபெற்றதால் கடவுள் அவருக்குள் உயிர் மூச்சை நேரடியாக ஊதினார். எனவே மாறுதலின்றி ஒருமைப் பதம் தன்மையில் பயன்படுத்தப்படுகின்றது:
“என்னுடைய ஆவியில் இருந்து ஆதமுக்குள் நான் ஊதினேன்” (15:29, 38:72). மற்றொருபுறம், ஜீஸஸின் படைப்பானது பூமியில் நடைபெற்றது, எனவே மேரியிடம் கடவுளின் “வார்த்தையை” கேப்ரியேல் எடுத்துச் சென்றார். இயேசுவின் படைப்பை குறிக்கின்றபோதெல்லாம் மாறுதலின்றி பன்மை வடிவம் பயன்படுத்தப் படுகின்றது [21:91,66:12).
கடவுள் மோஸஸுடன் நேரடியாக வானவர்களின் இடையீடு இன்றிப் பேசியபோது, கடவுள் பிரத்தியேகமாக ஒருமைப் பதத்தில் பேசுவதை நாம் காண்கின்றோம்: தான் தான் கடவுள். என்னை அன்றி தெய்வம் இல்லை. நீங்கள் என்னை மட்டுமே வழிபட வேண்டும். மேலும் (ஸலாத்] அன்றாடத் தொடர்புத் தொழுகைகளை என்னை நினைவு கூர்வதற்காகக் கடைப்பிடியுங்கள்” (20:12-14).
கடவுளின் வழிபாட்டைப் பற்றிக் குறிப்பிடப்படுகின்றபோதெல்லாம். ஒருமைப் பதம் பயன்படுத்தப் படுகின்றது [51:56).