முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்க
EN தமிழ் हिंदी
Kadavulmattum.org

இணைப்பு 34: கற்பு நெறி

உண்மையான நம்பிக்கையாளர்களின் புதல்வர்கள் மற்றும் புதல்விகள், அவர்களுடைய வாழ்நாள் முழுவதுமான அவர்களுடைய மகிழ்ச்சியானது கடவுளின் சட்டங்களைப் பின்பற்றுவதையும் அவர்களுடைய கற்பைப் பாதுகாத்துக் கொள்வதையும் பொறுத்ததாகும் என்று போதிக்கப்பட வேண்டும்.அவர்கள் தங்களுடைய வாழ்க்கைத் துணைகளுக்காக மட்டுமே என்று தங்களை வைத்துக் கொள்ள வேண்டும், மேலும் வேறு எவரொருவரையும் பாலியல் ரீதியாகத் தங்களைத் தொடுவதற்கு ஒருபோதும் அனுமதிக்கக் கூடாது என்பதே இதன் (23:5-6,24:30,33:35,70:29-30).

இன்றைய சமூகம் சக்திவாய்ந்த தூண்டுதல்கள் நிறைந்ததாக உள்ளது.எண்பதுகளில் அமெரிக்காவின் சமூகத்தில், தங்களுடைய மகள்களின் ஆண் நண்பர்கள் மற்றும் தங்களுடைய மகன்களின் பெண் தோழிகளையும் பற்றி பெற்றோர்களே கூடப் பேசத் துவங்கினர். தங்களுடைய பிள்ளைகள் பதின் பருவத்தை அடைகின்ற பொழுது, பல பெற்றோர்கள் அவர்களுக்கு கருத்தடைச் சாதனங்களையும் கூடக் கொடுக்கின்றனர். பதின் பருவத்தினரில் ஓர் எச்சரிக்கையூட்டுகின்ற சதவிகிதத்தினர், அவர்கள் உடற்கூறு ரீதியாக முதிர்ச்சி அடையாதவர்களாக இருந்த போதிலும், எவ்வித ஒழுக்க வரையறைகளும் இல்லாது பாலியல் ரீதியாக துடிப்புடன் உள்ளனர். இலட்சக்கணக்கான சட்டவிரோத கருத்தரிப்புக்களும், அவற்றுடன் தொடர்பு கொண்ட சோக நிகழ்வுகளும், கூடுதலாக இலட்சக்கணக்கில் பரிதாபமான கருக்கலைப்புக்களும் ஒவ்வொரு மாதமும் ஐக்கிய அமெரிக்க நாடுகளில் நிகழ்ன்றன.

இந்த ஒழுக்கச் சீர்கேட்டின் விளைவுகளில் உள்ளவை: தேவையற்ற மற்றும் ஆதரவற்ற குழந்தைகள்,கடமை தவறுகின்ற மேலும் பொறுப்பற்ற தந்தையர்கள், மக்களின் உயிர்களுக்கோ அல்லது உடமைகளுக்கோ எந்த மதிப்பையும் கொண்டிராத குற்றவாளிகள், இலட்சக்கணக்கான சமூக விரோதிகள், குணப்படுத்த இயலாத பிறப்புறுப்பின் தோல் அழற்சிகள், குணப்படுத்த இயலாத பிறப்புறுப்பின் உண்ணிகள். நாசகரமான மேகப்புண்கள், வெட்டை நோய், டிஸ்ப்லாசியா. உயிர்க்கொல்லி எய்ட்ஸ், மற்றும் முன்னர் ஒருபோதும் அறியப்படாத புதிய நோய்கள்.

அதிகமான மக்கள் அறியாதது என்னவென்றால் இந்த ஒழுக்கச் சீர்கேடு அவர்களுடைய வாழ்நாள் முழுவதும் அவர்களுடைய பெருந்துன்பத்திற்கு விலையாகின்றது என்பதே. ஏனெனில் இவ்வுலகினை ஆளுகின்ற ஒரே சட்டம் கடவுளின் சட்டமேயாகும். எனவே கடவுளுடைய சட்டங்களின் வெளிப்படையான இந்த மீறல்கள் அவர்களுடைய ஏராளமானதொரு துன்பத்திற்கும் பிரச்சினைகளுக்கும் விலையாகின்றது [20:124).

தங்களுடைய குழந்தைகளைப் பற்றி அக்கறை கொண்டவர்களான மெய்யான நம்பிக்கையாளர்கள் மீண்டும் மீண்டும்

விடாப்பிடியாக தங்களுடைய கற்பைக் காத்துக் கொள்ளுமாறு அவர்களுக்கு அறிவுரை கூறுவதுடன் அவர்களுக்கு நினைவூட்டவும் செய்வார்கள் [20:132].தங்களுடைய திருமண இரவு வரை கற்புடன் நிலைத்திருத்தல், பின்னர் தங்களுடைய சொந்த மகிழ்ச்சிக்காக ஒரு போதும் விபசாரம் செய்யாது – தன்னுடைய வாழ்க்கைத் துணைக்கு விசுவாசமாக இருத்தல் என்பதே இதன் அர்த்தமாகும். திருமணத்திற்கு முன்னரும் பின்னரும் நம்முடைய கற்பைக் காத்துக் கொள்ளுமாறான கடவுளின் அறிவுரையானது, நமது சொந்த நலனுக்காகவேயாகும்.நமது ஆரோக்கியம். பொருள் வளம் மற்றும் மகிழ்ச்சி அல்லது துன்பத்தைக் கட்டுபடுத்துகின்ற ஒரே ஒருவர் கடவுள் தான் (53:43,48).

📖குர்ஆன் படிக்ககுர்ஆன்