முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்க
EN தமிழ் हिंदी
Kadavulmattum.org

இணைப்பு 35: போதைப் பொருள்கள் & மதுவகைகள்

சட்டவிரோதமான போதைப்பொருட்கள் மற்றும் மதுபானங்களைப் பொறுத்தவரை எந்தவிதமான சமரசமும் இல்லை; அவை “அருவருக்கத்தவை மற்றும் சாத்தானின் காரியம் (5:90) என்று வர்ணிக்கப்படுகின்றன. 2:219 மற்றும் 5:90-ல் “போதையூட்டுபவை, சூதாட்டம், சிலைப்பீடங்கள், மற்றும் அதிர்ஷ்ட விளையாட்டுக்கள்” கண்டிப்புடன் தடுக்கப்பட்டுள்ளன என்பதை நாம் காண்கிறோம்.”மூடுதல்” எனும் அர்த்தம் கொண்ட “க்ஹமர” எனும் வேர்ச்சொல்லில் இருந்து பெறப்படுகின்ற “க்ஹம்ர்” எனும் வார்த்தையே போதையூட்டுபவற்றைக் குறிக்கப் பயன்படுத்தப் படுகின்றது. எனவே, புத்தியைத் தடுக்கின்ற அல்லது மூடுகின்ற எந்த ஒன்றும் தடைசெய்யப்பட்டுள்ளது. புத்தியை தடுமாறச் செய்கின்ற எந்த ஒன்றையும், கஞ்சா, ஹெராயின், கோக்கெய்ன், மதுவகைகள், ஹஷிஷ் போன்றவை மற்றும் புத்தியைப் பாதிக்கின்ற எந்த ஒன்றையும் இது உட்படுத்துகின்றது.

📖குர்ஆன் படிக்ககுர்ஆன்