முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்க
EN தமிழ் हिंदी
Kadavulmattum.org

இணைப்பு 2: கடவுளின் உடன்படிக்கைத் தூதர்

கடவுளின் உடன்படிக்கைத் தூதரானவர் ஒன்றுபடுத்துகின்ற ஒரு தூதராவார். அவருடைய பணியாவது இருக்கின்ற எல்லா மார்க்கங்களையும் தூய்மைப்படுத்தியும், ஒற்றுமைப்படுத்தியும் அவற்றை ஒன்றாக : இஸ்லாம் [சரணடைதல்) ஆக்குவதே.

இஸ்லாம் என்பது ஒரு பெயர் அல்ல; அது ஜீஸ்ஸையோ, மேரியையோ, முஹம்மதையோ அல்லது புனிதர்களையோ இணை வழிபாடு செய்யாது கடவுளுக்கு மட்டுமேயான ஒருவரது பூரண சரணடைதல் மற்றும் அர்ப்பணித்தலைப் பற்றியதொரு விவரிப்பு ஆகும். இந்த அளவுகோலைப் பூர்த்தி செய்கின்ற எவரொருவரும் ஒரு “முஸ்லிம்” (சரணடைந்தவர் ஆவார். எனவே, ஒருவர் ஒரு யூத முஸ்லிமாக, ஒரு கிறிஸ்தவ முஸ்லிமாக, ஒரு ஹிந்து முஸ்லிமாக, ஒரு பௌத்த முஸ்லிமாக அல்லது ஒரு முஸ்லிம் முஸ்லிமாகவும் இருக்கலாம்.

கடவுளின் உடன்படிக்கைத் தூதர், “கடவுளால் அங்கீகரிக்கப்பட்ட ஒரே மார்க்கம் சரணடைதலேயாகும்” [3:19) எனவும், மேலும் “எவரொருவர் சரணடைதலை விடுத்து மற்றவற்றை ஒரு மார்க்கமாகத் தேடுகின்றாரோ, அவன்/அவளிடமிருந்து அது ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது” (3:85) எனவும் கடவுளின் பிரகடனத்தைச் சேர்ப்பிக்கின்றார்.

கடவுளின் ஒரு தூதர் அவர் கடவுளின் தூதர்தான் என்பதற்கான சான்றினை முன் வைத்தாக வேண்டும். அவருடைய தூதுச் செய்திகளைச் சேர்ப்பிப்பதற்கு எல்லாம் வல்லவரால் அங்கீகரிக்கப்பட்டவராக அவர் இருக்கின்றார் என்பதை நிரூபிக்கின்ற மறுக்க இயலாத தெய்வீக அத்தாட்சிகளால் கடவுளின் ஒவ்வொரு தூதரும் ஆதரவளிக்கப்படுகின்றார். மோஸஸ் தன்னுடைய கைக்தடியைக் கீழே எறிய அது ஒரு நாகமாக மாறியது. ஜீஸஸ் கடவுளின் அனுமதியுடன் தொழுநோயாளிகளுக்கு நிவாரணமளித்தார், மேலும் இறந்தவர்களை உயிர்ப்பித்தார், ஸாலிஹின் அத்தாட்சி பிரசித்தி பெற்ற அந்த ஒட்டகமாக இருந்தது. ஆப்ரஹாம் நெருப்பைக் கடந்து வெளியே வந்தார். மேலும் முஹம்மதின் அற்புதம் இக்குர்ஆனாகவே இருந்தது (29:50-51).

இந்தக் குர்ஆன் (3:81, 33:7, 33:40] மற்றும் பைபிள் (மல்க்கியா 3:1-3] ஆகியவை கடவுளின் உடன்படிக்கைத்தூதரான, ஒன்றுபடுத்துகின்ற இத்தூதரின் வருகையைப் பற்றி முன்னறிவித்து உள்ளன. இத்தகையதொரு மிக முக்கியத்துவம் வாய்ந்த இறைப்பணியைக் கொண்ட ஒரு தூதர் மிகவும் வலிமையான அற்புதத்தின் மூலம் ஆதரவளிக்கப்பட வேண்டும் என்பது பொருத்தமான ஒன்றேயாகும் (74:30-35). முந்திய தூதர்களின் அற்புதங்கள் காலம் மற்றும் இடத்தின் வரையறைக்கு உட்பட்டதாக இருந்த அதே சமயம், அவருடைய உடன்படிக்கைத் தூதருக்கு ஆதரவளிக்கின்ற கடவுளின் அற்புதம் நிலைத்திருப்பதாகும்; எவரொருவராலும், எந்த நேரத்திலும், எந்த இடத்திலும் அதனைக்காண இயலும்.

கடவுளின் உடன்படிக்கைத் தூதர் ரஷாத் கலீஃபாவேயாவார் என்பதற்கான, பௌதீகரீதியான, சோதித்தறியக்கூடிய, சரி பார்த்துக் கொள்ளக் கூடிய அத்துடன் சற்றும் மறுக்க இயலாத ஆதாரத்தை இந்தப் பின் இணைப்பு எடுத்துக்காட்டுகின்றது.

ஒரு குர்ஆனிய உண்மை

நபிமார்கள் அனைவரும் இந்த உலகிற்கு வந்துவிட்ட பின்னர், கடவுளின் அனைத்து வேதங்களும் சேர்ப்பிக்கப்பட்டு விட்ட பின்னர், கடவுளின் உடன்படிக்கைத் தூதரானவர் அனுப்பப்படுவார் என்பது குர்ஆனிலுள்ள முக்கியமான முன்னறிவிப்புகளில் ஒன்றாகும்.

நபிமார்களிடம் கடவுள், “நான் உங்களுக்கு வேதத்தையும் ஞானத்தையும் கொடுப்பேன். அதன் பின்னர், வழக்கிலுள்ள அனைத்து வேதங்களையும் உறுதிப்படுத்துவதற்காக ஒரு தூதர் வருவார். நீங்கள் அவர் மீது நம்பிக்கை கொள்ளவும் அவருக்கு ஆதரவளிக்கவும் வேண்டும்.” என்று கூறியவாறு ஓர் உடன்படிக்கை எடுத்தார். அவர் கூறினார். “இதனை நீங்கள் ஏற்றுக்கொள்ளவும், இந்த உடன்படிக்கையை நிறைவேற்றவும் உறுதிமொழியளிக்கின்றீர்களா?” அவர்கள் கூறினர். “நாங்கள் ஏற்றுக்கொள்கின்றோம்”. அவர் கூறினார். “இவ்விதமாக நீங்கள் சாட்சியம் பகர்ந்துள்ளீர்கள். அத்துடன் நானும் உங்களுடன் சேர்ந்து சாட்சி பகர்கின்றேன்.” [3:81]

முஹம்மத் மர்மட்யூக் பிக்தால் 3:81 ஐக் கீழ்க்கண்டவாறு மொழிபெயர்த்தார்:

நபிமார்களுடனான (தன்னுடைய] உடன்படிக்கையை அல்லாஹ் செய்த போது. [அவர் கூறினார்] : வேதம் மற்றும் அறிவில் இருந்து நாள் உங்களுக்குக் கொடுத்தவற்றைக் கவனித்துப் பாருங்கள். மேலும் அதன் பின்னர் நீங்கள் கொண்டிருப்பவற்றை உறுதிப்படுத்தியவராக, ஒரு தூதர் உங்களிடம் வருவார். நீங்கள் அவர் மீது நம்பிக்கை கொள்ள வேண்டும். அத்துடன் நீங்கள் அவருக்கு உதவி செய்ய வேண்டும். அவர் கூறினார்: நீங்கள் இதனை ஏற்றுக் கொண்டு, மேலும் இதில் (இந்த விஷயத்தில்] [நான் உங்கள் மீது சுமத்துகின்ற) என்னுடைய சுமையை நீங்கள் எடுத்துக் கொள்வீர்களா? அவர்கள் பதிலளித்தனர்: நாங்கள் ஏற்றுக் கொள்கின்றோம். அவர் கூறினார்: அப்படியெனில் சாட்சியம் பகருங்கள். உங்களுடன் நாலும் ஒரு சாட்சியாக இருப்பேன்.

கடவுளுடன் அந்தப் பவித்திரமான உடன்படிக்கை செய்து கொண்ட நபிமார்களில் முஹம்மதும் ஒருவராக இருந்தார் என்பதை சூரா 33-ல் இருந்து நாம் அறிந்து கொள்கிறோம்.

நபிமார்களிடம் இருந்தும், [முஹம்மதே) உம்மிடமிருந்தும், மேலும் நோவா மற்றும் ஆப்ரஹாம் மற்றும் மோஸஸ் மற்றும் மேரியின் மகனான ஜீஸஸிடமிருந்தும் ஓர் உடன்படிக்கையை நாம் வாங்கியபோது, பவித்திரமானதொரு உடன்படிக்கையையே அவர்களிடமிருந்து நாம் எடுத்தோம். (33:7) (முஹம்மத் மர்மட்யூக் பிக்தாலின் மொழிபெயர்ப்பின்படி]

ஏனைய பல வசனங்களுடன், வசனம் 3:81. “நபி” (வேதம் வழங்கப்பட்ட தூதர்] மற்றும் “ரஸுல்” (தூதர்) ஆகியோரின் வரையறைதனை வழங்குகின்றது. இவ்விதமாக “நபி” என்பவர் புதியதொரு வேதத்தைச் சேர்ப்பிக்கின்ற கடவுளின் ஒரு தூதராவார், அதே சமயம் “ரஸூசீல்” என்பவர் வழக்கிலுள்ள வேதத்தை உறுதிப்படுத்துவதற்காகக் கடவுளால் நியமிக்கப்பட்ட ஒரு தூதுவராவார்; அவர் புதியதொரு வேதத்தைக் கொண்டு வருவதில்லை. குர்ஆனின்படி, ஒவ்வொரு “நபி’யும் ஒரு “ராபல்” ஆக இருக்கின்றார். ஆனால் ஒவ்வொரு “ரஸில்”-ம் ஒரு “நபி” ஆக இருப்பதில்லை.

ஒவ்வொரு தூதருக்கும் புதியதொரு வேதம் கொடுக்கப்படவில்லை. சில முஸ்லிம் “அறிஞர்களால்” கூறப்படுவதைப் போல், கடவுள் ஒரு வேதத்தை நபிக்குத் தந்து அதனை அவருக்கு மட்டுமெனத் தனிப்பட்ட முறையில் வைத்துக் கொள்ளுமாறு கூறுவார் என்பது அறிவுக்குகந்ததாக இல்லை (2:42, 146, 159). குர்ஆனுடன் போதுமான அளவுக்குப் பரிச்சயமில்லாதவர்கள், 19:53ல் கூறப்பட்டுள்ளதனால், ஆரோன் வேதம் ஒன்றினைப் பெற்றிராத ஒரு “தபி”யாக இருந்தார் என்று எண்ண முற்படுகின்றனர். ஆயினும், சாசனப் புத்தகமானது குறிப்பாக “மோஸஸ் மற்றும் ஆரோன் இருவருக்கும்” கொடுக்கப்பட்டது என்பதைக் குர்ஆன் தெளிவாக எடுத்துரைக்கின்றது [21:48, 37:117).

குர்ஆனின், 33:40ல் இருந்து, முஹம்மத் இறுதி தபியாக இருந்தாரே அன்றி, இறுதித் தூதர் (ரஸூல்) ஆக இல்லை என்று நாம் கற்றுக் கொள்கின்றோம்:

உங்களுடைய ஆண்களில் எவருக்கும் முஹம்மத் தந்தையாக இருந்ததில்லை; அவர் கடவுளின் ஒரு தூதராகவும் (ரஸூல்] மேலும் இறுதி நபியாகவும் இருந்தார். (33:40)

மிக முக்கியமான இந்த வரையறை குர்ஆனுடைய கணிதக் குறியீட்டின் மூலம் உறுதிப்படுத்தப்படு கின்றது. 33:40ல் உபயோகப்படுத்தப்படுகின்ற சொற்றொடரான “முஹம்மத் காத்தம் அல் – நபிய்யின்” (இறுதி நபி] என்பது 1349, 19×71 என்ற எழுத்தெண் மதிப்பினைக் கொண்டுள்ளது, அதே சமயம் தவறான சொற்றொட ரான “முஹம்மத் காத்தம் அல் – முர்ஸலீன்” (கடைசித்தூதர்] என்பது 19ன் ஒரு பெருக்குத் தொகை அல்ல.

சமகாலத்திய, உயிருடன் உள்ள ஒரு தூதரை ஏற்றுக்கொள்ள மறுத்தல் புராதன காலம் முதலே மானிடர்களின் ஓர் இயல்பாக இருந்து வந்துள்ளது. ஜோசஃப் “கடைசித் தூதர்” (40:34) என்று அறிவிக்கப்பட்டார். இருப்பினும், அவருக்குப் பின்னர் மோஸஸ், டேவிட், ஸாலமன். ஜீஸஸ் மற்றும் முஹம்மத் உட்பட பல தூதர்கள் வந்தனர்.

உடன்படிக்கை பூர்த்தியானது

இவ்வுலகத்தைப் பொறுத்த வரை. நபிமார்கள் இறந்தவர்களாகி விட்ட போதிலும், அவர்களுடைய ஆன்மாக்கள், உண்மையான அந்த நபர்கள், ஆதமும் ஏவாளும் வசித்திருந்த அந்த ஏதேன் தோட்டத்தில் இப்போது உள்ளனர் என நாம் அறிவோம். தங்கள் உடல்களை உதிர்த்து விட்டு, இந்த உலகத்திலிருந்து புறப்பட்டு விட்ட நம்பிக்கையாளர்களை இறந்து விட்டவர்களென்று எண்ணுவதிலிருந்து சில வசனங்கள் நம்மைத் தடுக்கின்றன (2:154, 3:169, 4:69]. நம்முடைய உலகத்திற்கு அவர்கள் திரும்பி வர இயலாது என்ற போதிலும் (23:100), அவர்கள் சுவனத்தில் “உயிருடன்” இருக்கின்றனர். தயவுசெய்து பின் இணைப்பு 17ஐப் பார்க்கவும்.

மெக்காவிற்கு என்னுடைய ஹஜ் புனிதயாத்திரையின் போது, டிசம்பர் 21, 1971, ஹிஜ்ஜஹ் 3, 1391, செவ்வாய்க்கிழமை அன்று சூரிய உதயத்திற்க முன்னர் நான், ரஷாத் கலீஃபா, அந்த ஆன்மா, உண்மையான அந்த நபர், உடல் அல்ல. பிரபஞ்சத்தில் உள்ள ஓர் இடத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டு, கடவுளின் உடன்படிக்கைத் தூதர் நான் என நபிமார்கள் அனைவருக்கும் அறிமுகப்படுத்தப்பட்டேன். 1408 ரமதான் வரை அந்த நிகழ்வைப் பற்றிய விவரங்கள் மற்றும் மெய்யான தாத்பர்யம் எனக்குத் தெரிவிக்கப்படவில்லை.

கூர்மையான தன்னுணர்வுடன், நான் கண்ட தென்னவென்றால், நான் அசைவற்று அமர்ந்திருந்தேன், அதேசமயம், நபிமார்கள், ஒருவர் பின் ஒருவராக, என்னை நோக்கி வந்தனர். என் முகத்தை நோக்கினர். பின்னர் அவர்களுடைய தலைகளை அசைத்தனர். இந்த உலகத்தில் அவர்கள் காட்சியளித்தபடி, அவர்களுக்குரிய பாணியிலான உடை அணிந்தவர்களாக, கடவுள் அவர்களை எனக்கு காட்டினார். மகத்தான பிரமிப்பு, ஆனந்தம், மற்றும் மரியாதையான ஒரு சூழ்நிலை அங்கு நிலவியது.

ஆப்ரஹாமைத் தவிர. நபிமார்கள் எவரும் எனக்கு அடையாளம் காட்டப்படவில்லை. மோஸஸ், ஜீஸஸ், முஹம்மத், ஆரோன், டேவிட், நேவா மற்றும் ஏனையவர்கள் உட்பட அனைத்து நபிமார்களும் அங்கே இருந்தனர் என்பதை நான் அறிந்திருந்தேன். ஆப்ரஹாமின் அடையாளம் வெளிப்படுத்தப்பட்டதன் காரணமாக நான் நம்புவதென்னவென்றால், நான் அவரைப்பற்றிக் கேட்டேன் என்பதேயாகும். என்னுடைய சொந்தக் குடும்பத்தினர் – நான். என் தந்தை, என் தந்தையுடன் பிறந்தவர்கள் ஆகியோருடன் அவர் கொண்டிருந்த அழுத்தமான சாயலினால் நான் வியப்படைந்தேன். நான் வியந்து நின்ற ஒரே நேரம் அதுவாகத்தான் இருந்தது. “என்னுடைய உறவினர்களைப் போல் தோற்றமளிக்கின்ற இந்த நபி யார்?” விடை வந்தது: “ஆப்ரஹாம்”. எந்த மொழியும் பேசப்படவில்லை. தகவல் தொடர்பு அனைத்தும் மனோரீதியிலேயே செய்யப்பட்டது.

நபிமார்களின் இந்த உடன்படிக்கை பூர்த்தியடைந்த தேதியானது ஜூல் ஹிஜ்ஜஹ் 3, 1391 என்பது கவனிக்கத்தக்கதாகும். மாதத்துடன் (12), தேதியைக் கூட்டி (3). அத்துடன் வருடத்தையும் (1391] நாம் கூட்டினால், நமக்குக் கிட்டுகின்ற ஒரு மொத்தத் தொகை 1406, 19 × 74. சூரா 74-ல் தான் குர்ஆனின் பொது வகு எண்ணான, 19 எனும் எண், குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த எண் 1406, குர்ஆன் வெளிப்படுத்தப்பட்டது முதல் அதன் அற்புதம் வெளிப்படுத்தப்பட்ட காலம் வரையிலான வருடங்களின் எண்ணிக்கையும் ஆகும் என்பதைக் கவனியுங்கள் (பின் இணைப்பு 1].

கடவுளின் உடன்படிக்கைத் தூதருடைய இறைப் பணியாவது வழக்கிலுள்ள வேதங்களை உறுதிப்படுத்தி, அவற்றை தூய்மைப்படுத்தி, ஒரே தெய்வீகச் செய்தியாக அதனை ஒன்றுபடுத்துவதேயாகும். கடவுனின் தூதுச் செய்தியை அதன் தூய்மையான பழைய நிலைக்கு மீட்பது, நன்னெறியுடைய நம்பிக்கையாளர்களை யூதர்கள், கிறிஸ்தவர்கள், முஸ்லிம்கள் பௌத்தர்கள், சீக்கியர்கள், இந்துக்கள் இன்னும் மற்றவர்களை காரிருளிலிருந்து வெளியேற்றி ஒளியினுள் கொண்டுவருவது ஆகிய பொறுப்புக்கள் இத்தகையதொரு தூதர் மீது சாட்டப்பட்டுள்ளன என்பதைக் குர்ஆன் எடுத்துரைக்கின்றது (5:19, & 65:11). கடவுளால் ஏற்றுக்கொள்ளப் படக்கூடிய ஒரே மார்க்கம் இஸ்லாம் (கடவுளுக்குப் பூரணமாகச் சரணடைதல்) ஆகும் எனப் பிரகடனிப்பவராக அவர் உள்ளார் (3:19).

இதோ நான் என் தூதனை அனுப்புகின்றேன், அவள் எனக்கு முன்பாகப்போய் வழியை ஆயத்தம் பண்ணுவான்: அப்பொழுது நீங்கள் தேடுகிற ஆண்டவரும் நீங்கள் விரும்புகிற உடன்படிக்கையின் தூதனுமானவர் தம்முடைய ஆலயத்துக்குத் தீவிரமாய் வருவார்; இதோ வருகிறார் என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார்.

ஆனாலும் அவர் வரும் நாளைச் சகிப்பபவன் யார்?

அவர் வெளிப்படுகையில் நிலை நிற்பவன் யார்?

அவர் புடமிடுகிறவலுடைய அக்கினையைப் போலவும்

வண்ணாருடைய சவுக்காரத்தைப் போலவும் இருப்பார். (மல்கியா 3:1-2)

சான்று

கடவுளின் உடன்படிக்கைத் தூதரின் பெயர் “ரஷாத் கலீஃபா” என்று குர்ஆனுக்குள் கணித ரீதியில் குறியீடு செய்யப்பட்டுள்ளது. கணிணியுகத்தில் உலகத்திற்குக் கடவுளின் தூதரை அறிமுகப்படுத்த மிகவும் உகந்த முறை நிச்சயமாக இதுவேயாகும்.

(1) பின் இணைப்பு 1ல் காட்டப்பட்டுள்ளபடி, குர்ஆனில் உள்ள கடவுளின் மகத்தான அற்புதம் பகா எண்ணான 19ன் அடிப்படையிலானது. மேலும் 1406 வருடங்கள் (19 × 74] அது மறைக்கப்பட்டதாக இருந்து வந்தது. பிரமிப்பூட்டும் இந்த அற்புதம் ரஷாத் கலீஃபா மூலம் திரைவிலக்கப்பட வேண்டுமென எல்லாம் வல்ல கடவுளால் முன்னரே விதிக்கப்பட்டிருந்தது. கடந்த பதினான்கு நூற்றாண்டுகளாக நூற்றுக்கணக்கான முஸ்லிம்களும், கீழ்த்திசை நாடுகளைச் சேர்ந்த பண்டிதர்களும் வீணாக முயற்சித்துக் கொண்டிருந்தனர், ஆனால் அவர்களில் எவரும் குர்ஆனுடைய துவக்க எழுத்துக்களுடைய தாத்பர்யத்தின் இரகசியத்தை விடுவிக்க அனுமதிக்கப்படவில்லை.

(2) உண்மையான நம்பிக்கையாளர் களுக்கும், தேடுபவர்களுக்கும் இந்தக் குர்ஆன் இலகுவாக்கப்பட்டுள்ளது (54:17, 22, 32, 40; 39:28). குறிப்பிட்ட தெய்வீக அங்கீகாரம் கொடுக்கப்பெற்ற உண்மையான நம்பிக்கை யாளராக அவனோ அல்லது அவளோ இருந்தா லேயன்றி, இந்தக் குர்ஆனை, அதன் மகத்தான அற்புதத்தைக் கூறவில்லை, அடைவதற்குக்கூட எவர் ஒருவரும் அனுமதிக்கப்படுவதில்லை என்பது ஒரு மாற்றப்பட மாட்டாத தெய்வீக ली (17:45-46, 18:57, 41:44, 56:79). ரஷாத் கலீஃபா மூலம் குர்ஆனின் அற்புதம் திரைவிலக்கப்படுதலானது, அவருடைய தூதுத் துவத்திற்குரிய முக்கியமானதோர் அத்தாட்சியாகும்.

(3) “ரஷாத் எனும் பெயரின் வேர்ச் சொல் “ரஷத ” (நேர்வழி காட்டலை உயர்த்திப் பிடித்தல்) ஆகும். இந்த வேர்ச் சொல்லானது குர்ஆனில் 19 முறைகள் குறிப்பிடப்பட்டுள்ளது. குர்ஆனின் பொது வகுஎண் பத்தொன்பதே யாகும். (பார்க்க குர்ஆனிலுள்ள வார்த்தைகளுக்கான சொல்லகராதி, முதல் அச்சு, பக்கம் 320).

அட்டவணை : 1 “ரஷத” மற்றும் “கலீஃபா”வுடைய சூராக்கள் மற்றும் வசனங்கள்

“ரஷத” “கலீஃபா”

எண் · சூரா · வசனம் · சூரா · வசனம்

1. · 2 · 186 · 2 · 30

2. · – · 256 · 38 · 26

3. · 4 · 6

4. · 7 · 146

5. · 11 · 78

6. · – · 87

7. · – · 97

8. · 18 · 10

9. · – · 17

10. · – · 24

11. · – · 66

12. · 21 · 51

13. · 40 · 29

14. · – · 38

15. · 49 · 7

16. · 72 · 2

17. · – · 10

18. · – · 14

19. · – · 21

224 · 1145 · 38 · 56

(சூரா 2 மீண்டும் இடம் பெறுகின்றது] 224+1145+38+56=1463=19×77

(4) “ரஷாத்” எனும் வார்த்தை 40:29 மற்றும் 38ல் இடம்பெறுகிறது. “கலீஃபா” எனும் வார்த்தை 2:30 மற்றும் 38:26ல் இடம் பெறுகின்றது. முதலாவது “கலீஃபா” மானிடர் அல்லாத ஒரு “கலீஃபாவை”, அதாவது சாத்தானைக் குறிக்கின்றது. அதே சமயம் இரண்டாவது நிகழ்வு (சூரா 38), ஒரு மானிட ‘கலீஃபாவைக்” குறிக்கின்றது. “ரஷாத்” (40:29, 38] மற்றும் “கலீஃபா” [38:26] ஆகியவற்றின் சூராக்கள் மற்றும் வசனங்களின் எண்களை நாம் கூட்டினால் நமக்குக் கிட்டுவது 40+28+38+38+26 = 171 = 19 x 9.

(5) பாகுபாடின்றி எல்லா “ரஷத”க்களும் மற்றும் எல்லாக் “கலீஃபா”க்களும் இடம் பெறுகின்ற எல்லா சூரா மற்றும் வசன எண்களின் கூட்டுத்தொகையானது 1463, 19×77 என கூடிவருகின்றது (அட்டவணை 1).

(6) “ரஷத” எனும் வேர்ச்சொல் இடம் பெறுகின்ற அனைத்து சூராக்கள் மற்றும் வசனங்களின் மொத்தத் தொகையானது 1369, அல்லது (19 × 72) + 1. அதே சமயம் “கலீஃபாவின் அனைத்து இடம்பெறுதல்களுக்கும் உரிய மொத்தத் தொகையாவது 94, (19 × 5)-1 ஆகும். “ரஷத” வில் ஒன்று கூட உள்ளது, மேலும் “கலீஃபா” வில் ஒன்று குறைவாக உள்ளது எனும் உண்மையானது அந்தப் பெயர் “ரஷாத் கலீஃபா” என்பதைத் தெளிவாக ஒன்று சேர்க்கின்றது. வேறு “ரஷாத்” எவரையோ அல்லது வேறு “கலீஃபா” எவரையோ அல்ல.

7) “ரஷாத்” தின் எழுத்தெண்மதிப்பு 505 ஆகும். அத்துடன் “கலீஃபா” ( வின் மதிப்பு 725 ஆகும் (அட்டவணை 7. பின்இணைப்பு 1]. குர்ஆனின் துவக்கத் தில் இருந்து முதல் “ரஷத”வின் முதல் நிகழ்வு வரை சூரா எண்கள் மற்றும் வசனங்களின் எண்ணிக்கையுடன் “ரஷாத் கலீஃபா”வின் மதிப்பை (1230) நாம் கூட்டினால், மொத்தத் தொகை 1425, 19 × 75 ஆகும். விபரங்கள் அட்டவணை 2ல் கொடுக்கப்பட்டுள்ளன.

(8) குர்ஆனின் துவக்கத்தில் இருந்து “ரஷத” எனும் வேர்ச்சொல்லின் முதல் நிகழ்வு வரையுள்ள ஒவ்வொரு சூராவிலுமுள்ள எல்லா வசனங்களின் எண்களையும் நாம் கூட்டினால், அதாவது வசன எண்களின் கூட்டுத்தொகை (1+2+3++n) மொத்தத் தொகையாக வருவது 17233, 19 × 907 (அட்டவணை 2].

அட்டவனை-2: குர்ஆனின் துவக்கம் முதல் “ரஷத” எனும் வேர்சொல்லின் முதல் நிகழ்வு வரையுள்ள சூராக்கள் மற்றும் வசனங்கள்.

சூரா எண் · வசனங்களின் எண்ணிக்கை · வசன எண்களின் கூட்டுத்தொகை

1 · 7 · 28

2 · 185 · 17205

3 · 192 · 17233

( 19 X 907 )

அத்துடன், “ரஷாத்” (505] + “கலீஃபா” (725) + சூரா கூட்டுத் தொகை (3) மொத்த வசனங்கள் [192)-1425 (19×75) 505253 192 1425 19 x 75

(9) குர்ஆனுடைய அற்புதத்தின் அடிப்படை அஸ்திவாரமாக அமைந்திருப்பது குர்ஆனியத் துவக்க எழுத்துக்கள் ஆகும். இத்துவக்க எழுத்துக்கள் சூராக்கள் 2, 3, 7, 10, 11, 12, 13, 14, 15, 19, 20, 26, 27, 28, 29, 30, 31, 32, 36, 38, 40, 41, 42, 43, 44, 45, 46, 50 மற்றும் 68ல் இடம்பெறுகின்றன. “ரஷாத் கலீஃபா” வின் மதிப்புடன் (1230), இந்த எண்களின் கூட்டுத்தொகையை [822] நாம் சேர்த்தால் மொத்தத் தொகை 2052, 19×108 ஆகும்.

(10) அட்டவணை 3ல் காட்டப்பட்டுள்ளபடி, “ரஷத” எனும் வேர்ச்சொல் இடம்பெறுகின்ற அனைத்து சூராக்களின் எண்களுடன் வசனங்களின் எண்ணிக்கையை நாம் கூட்டினால், நமக்குக் கிட்டுவது 1368, அல்லது 19 x 72

(11) “ரஷத” எனும் வேர்ச்சொல்லின் முதல் இடம்பெறுதலில் இருந்து (2:186) “ரஷத”வின் கடைசி இடம் பெறுதல் (72:21] வரை, ஆரா எண்ணை நாம் எழுதி. ஒவ்வொரு சூராவின் வசனங்களின் எண்ணிக்கையால் தொடரச் செய்து, தனித்தனி வசன எண்களால் தொடர்ந்து, அத்துடன் இந்த எண்களை ஒன்றின் அருகில் மற்றொன்றை நாம் அமைத்தால், 11087 இலக்கங்கள் கொண்ட மிக நீண்டதொரு எண் நமக்குக் கிட்டுகின்றது. அத்துடன் 19ன் ஒரு பெருக்குத் தொகையாகவும் உள்ளது. மிக நீண்ட இந்த எண் சூராவின் எண்ணான 2ஐக் கொண்டு துவங்கி வசனம் 186ல் உள்ள “ரஷத” வின் முதல் நிகழ்வில் இருந்து அந்த சூராவின் இறுதி வரை [100 வசனங்கள்] சூரா 2ல் உள்ள வசனங்களின் எண்ணிக்கையால் தொடரப்படுகின்றது. எனவே, இந்த எண்ணின் துவக்கம் இதனைப் போல் காட்சியளிக்கின்றது : 2 100. இந்த 100 தனித்தனி வசனங்களின் எண்கள் (187 முதல் 286) இந்த எண்ணிற்கு அடுத்து அமைக்கப்படுகின்றன. இவ்விதமாக, சூரா 2ஐ எடுத்துக் காட்டுகின்ற இந்த எண்ணானது இதனைப் போல் காட்சியளிக்கின்றது: 2 100 187 188 189 285 286. இதே செயல் முறை “ரவுத” எனும் வேர்ச்சொல்லின் கடைசி நிகழ்வான. 72:21 வரை தொடர்ந்து செய்யப்படுகின்றது. அந்த முழு எண் இவ்வாறு காட்சியளிக்கின்றது:

2 100 187 188 189……..72 21 1 2 3……..19 20 21

“ரவுத” வின் முதல் நிகழ்வில் இருந்து கடைசி வரை (2:187 முதல் 72:21 வரை] சூரா எண்ணானது வசனங்களின் எண்ணிக்கையைக் கொண்டும், பின்னர் தனித்தனி வசனங்களின் எண்களைக் கொண்டும் தொடரப்படுகின்றது.

அந்த முழு எண் 11087 இலக்கங்களைக் கொண்டது, அத்துடன் 19 ஆல் வகுபடக்கூடியதாகவும் உள்ளது.

(12) “ரஷத” எனும் வேர்ச்சொல்லின் முதல் இடம் பெறுதலில் இருந்து 38:26ல் உள்ள “கலீஃபா” எனும் வார்த்தை வரையுள்ள சூராக்கள் மற்றும் வசனங்களை நாம் ஆராய்ந்தால், சூரா எண்கள் மற்றும் அவற்றின் வசனங்களுடைய எண்ணிக்கைகளின் கூட்டுத் தொகை 4541, அல்லது 19 × 239 என்பதை நாம் காண்கிறோம். விபரங்கள் அட்டவணை 4ல் உள்ளன.

அட்டவணை 4: முதல் “ரஷத” வில் இருந்து கலீஃபா வரையுள்ள சூராக்கள் மற்றும் வசனங்கள்.

சூரா எண் · வசனங்களின் எண்ணிக்கை · மொத்தம்

2 · 100 ( 187 – 286 ) · 102

3 · 200 · 203

4 · 176 · 180

5 · 120 · 125

–

36 · 83 · 119

37 · 182 · 219

38 · 26 · 64

740 · 3801 · 4541

(19X239)

(13) “ரஷாத்” தின் மதிப்பை நாம் எழுதி (505), “கலீஃபா வின் மதிப்பால் தொடர்ந்து (725). “ரஷத” எனும் வேர்ச்சொல் இடம் பெறுகின்ற ஒவ் வொரு சூரா எண்ணால் தொடர்ந்து, முதல் “ரஷத” வில் (2:186) இருந்து “கலீஃபா” (38:26) எனும் வார்த்தை வரை அதன் வசனங்களின் எண்களால் தொடரச் செய்தால், 19ஆல் வகுபடக்கூடிய நீண்ட தொரு எண் நமக்குக்கிட்டுகின்றது.

“ரஷத”வின் முதல் நிகழ்வானது 2:186 ல் உள்ளது. எனவே நாம் 2 186ஐ எழுதுகின்றோம். இரண்டாம் நிகழ்வானது 2:256ல் உள்ளது. எனவே நாம் 256ஐ எழுதுகின்றோம். அடுத்த நிகழ்வானது 4:6 ல் உள்ளது. எனவே நாம் 4 6ஜ எழுதுகின்றோம். தொடர்ந்து 38 26ஐ (38:26ல் “கலீஃபா” இடம்பெறுகின்றது] நாம் எழுதுகின்ற வரை அவ்வாறே செய்கின்றோம். அந்த முழு எண் இவ்வாறு காட்சியளிக்கின்றது.

505 725 2 186 256 4 6………….. 38 26

“ரஷாத்” தின் எழுத்தெண் மதிப்பு “கலீஃபா”வின் மதிப்பால் தொடரப்பட்டு, “ரஷத”வின் முதல் நிகழ்வில் இருந்து 38:26ல் “கலீஃபா”வின் நிகழ்வு வரை, “ரஷத” என்னும் வேர்ச்சொல்லின் ஒவ்வொரு நிகழ்வுக்குமுரிய சூரா எண் மற்றும் வசன எண்களால் தொடரப்படுகின்றது.

கடவுளால் அங்கீகரிக்கப்பட்ட ஒரே மார்க்கம் இஸ்லாம் ஆகும் (3:19)

(14) இக்குர்ஆன் (சரணடைதல்] இஸ்லாமின் மூன்று தூதர்களை குறிப்பிடுகின்றது:

ஆப்ரஹாம் : இஸ்லாமின் அனுஷ்டானங்கள் அனைத்தையும் சேர்ப்பித்தார். அவருடைய பெயரின் மதிப்பாவது =258

முஹம்மத் : இக்குர்ஆனைச் சேர்ப்பித்தார். அவருடைய பெயரின் மதிப்பாவது = 92

ரஷாத் : இஸ்லாமின் நம்பகத்தன்மைக்குரிய சான்றினைச் சேர்ப்பித்தார். அவருடைய பெயரின் மதிப்பாவது = 505 இந்த மூன்று பெயர்களின் மொத்த எழுத்தெண் மதிப்பு = 505

258 + 92 + 505 = 855 = ( 19 X 45 )

உண்மையான யூதமதம், கிறிஸ்துவம் மற்றும் இஸ்லாம் ஆகியவை ஒரே மார்க்கமாக ஒன்றுபடுத்தப்படும் கடவுளுக்கு மட்டுமேயான முழுமையான சரணடைதல் மற்றும் பரிபூரண அர்ப்பணிப்பு.

வழக்கிலுள்ள மதங்களான யூத மதம், கிறிஸ்துவம் மற்றும் இஸ்லாம் ஆகியவை கடுமையாகச் சீர்கெட்டு விட்டன. எனவே அவை அப்படியே மடிந்து போகும் [9:33, 48:28, 61:9).

(15) சில சமயங்களில் இக்குர்ஆன் “ஆப்ரஹாம், இஸ்மாயில், மற்றும் ஐஸாக்” எனக் குறிப்பிடுவதால். இஸ்மாயில் மற்றும் ஐஸாக் உட்படுத்தப்பட வேண்டும் என்று யோசனை கூறப்பட்டது. குறிப்பிடத்தக்க விதமாக, இஸ்மாயில் மற்றும் ஐஸாக் சேர்த்துக் கொள்ளப்பட்டபோது, அப்போதும் 19-ன் பெருக்குத் தொகையாக உள்ள ஒரு மொத்தத் தொகையையே தந்தது. அட்டவணை 5ல் காட்டப்பட்டுள்ளபடி, புதிய மொத்தத் தொகையானது 1235 அல்லது 19×65 ஆக உள்ளது. 19ஆல் வகுபடக்கூடிய இத்தன்மையானது, ஆப்ரஹாம், முஹம்மத், அல்லது ரஷாத் ஆகிய பெயர்களில் ஏதேனுமொன்று விடுபட்டுவிட்டால் சாத்தியமாகாது

அட்டவணை 5: ஐந்து தூதர்களின் எழுத்தெண் மதிப்பு

தனித்தனி எழுத்துக்களின்

பெயர் · மதிப்பு · மொத்தம்

ஆப்ரஹாம் · 1+2+200+5+10+40 · 258

இஸ்மாயில் · 1+60+40+70+10+30 · 211

ஐஸாக் · 1+60+8+100 · 169

முஹம்மத் · 40+8+40+4 · 92

ரஷாத் · 200+300+1+4 · 505

1235

(19×65)

ஏன் 81 : வசனம் 81 & சூரா 81.

(16) சூரா 3-ன் வசனம் 81ல் கடவுளின் உடன்படிக்கைத் தூதர் முன்னறிவிக் கப்படுகின்றார். “ரஷாத்” தின் எழுத்தெண் மதிப்புடன் (505) “கலீஃபா”வின் எழுத்தெண் மதிப்பை (725) கூட்டி, அத்துடன் இந்த வசன எண்ணை யும் [81] கூட்டினால், விளைவது 05+725+81 1311-19×69

(17) சூரா 81-ஐ நாம் நோக்கினால், எல்லாம் வல்லவரால் வலிமையாக ஆதரிக்கப்பட்டு மேலும் அங்கீகரிக்கப்பட்டவரான கடவுளின் ஒரு தூதரைப்பற்றி நாம் படிக்கின்றோம் (வசனம் 19]. எனவே சூரா 3ன் வசனம் 81, மற்றும் சூரா 81, வசனம் 19 ஆகியவை “ரஷாத் கலீஃபா” எனும் பெயருடன் பலமான தொடர்புகொண்டுள்ளன . 505+725+81=1311=19×69.

(18) குர்ஆனின் துவக்கத்தில் இருந்து. கடவுளின் உடன்படிக்கைத் தூதர் முன்னறி விக்கப்படுகின்ற வசனம் 3:81 வரையுள்ள வசனங்களின் எண்ணிக்கையுடன் சூரா எண் களை நாம் கூட்டினால், மொத்தத் தொகை யானது 380, 19X20 என வருகின்றது. இந்தத் தகவல் தொகுப்புக்கள் அட்டவணை 6-ல் உள்ளன.

அட்டவணை 6: சூராக்கள் மற்றும் வசனங்கள்

1 : 1 முதல் 3:81 வரை

சூரா எண் · வசனங்களின் எண்ணிக்கை · மொத்தம்

1 · 7 · 8

2 · 286 · 288

3 · 81 · 84

6 · 374 · 380

( 19 X 20 )

(19) வசனம் 3:81-ன் எழுத்தெண் மதிப்பாவது 13148, 19X692 ஆகும். இந்த மதிப்பு இந்த வசனத்தில் உள்ள ஒவ்வொரு எழுத்தின் எண் மதிப்பையும் கூட்டுவதன் மூலம் பெறப்படுகின்றது.

(20) “நீங்கள் கொண்டிருப்பவற்றை உறுதிப்படுத்துகின்றவரான, ஒரு தூதர் உங்களிடம் வருவார்”: என்று வசனம் 3:81-ல் உடன்படிக்கைத் தூதரைக் குறிப்பாகச் சுட்டிக்காட்டுகின்ற அந்தப் பகுதியை நாம் நோட்டமிட்டால், அரபி மொழியில்:

“ஜாஅகும் ரஸுலுன் முஸத்திகுன் லிமா மஅகும்”

இந்த முக்கியமான சொற்றொடரின் எழுத்தெண் மதிப்பு 836, 19×44 என்பதை நாம் காண்கின்றோம்.

“நிச்சயமாக, நீர் தூதர்களில் ஒருவராக இருக்கின்றீர்” (36:3)

(21) சூரா 36-ன் வசனம் 3 குறிப்பாக என்னைச் சுட்டிக்காட்டுகின்றது என வானவர் கேப்ரியேல் மூலமாக நான் மிகவும் உறுதிபடக் கூறப்பட்டேன். சூரா 2, பின்னர் சூரா 3, பின்னர் சூரா 7, எனத் தொடர்ந்து துவக்க எழுத்துக்கள் கொண்ட சூராக்களை மட்டும் நாம் வரிசைப்படுத்தினால், யா சீன், சூரா 36, 19ம் இடத்தினை ஆக்கிரமித்திருப்பதை நாம் காண்கிறோம்.

(22) சூரா 36-ன் வசனம் 3 கூறுகின்றது, “நிச்சயமாக, நீர் தூதர்களில் ஒருவராக இருக்கின்றீர்.’ இந்தச் சொற்றொடரின் எழுத்தெண் மதிப்பு 612 ஆகும். இந்த மதிப்புடன் (612), சூரா எண்ணையும் (36), வசன எண்ணையும் (3), “ரஷாத் கலீஃபா” வின் எழுத்தெண் மதிப்பையும் (505+725), கூட்டினால் நமக்குக் கிடைப்பது 36+3+612+505+725=1881=19X99.

(23) சூரா 36, வசனங்கள் 83 கொண்டது. சூரா எண்ணுடன் (36), அதன் வசனங்களின் எண்ணிக்கையைக் கூட்டி (83), “ரஷாத் கலீஃபா” வின் எழுத்தெண் மதிப்பையும் நாம் கூட்டினால் நமக்குக் கிடைப்பது (505+725), 36+83+505+725=1349=19X71.

(24) உடன்படிக்கைத் தூதர் முன்னறிவிக் கப்படுகின்ற 3:81 முதல் சூரா 36 வரை 3330 வசனங்கள் உள்ளன. “ரஷாத் கலீஃபா” வின் எழுத்தெண் மதிப்புடன் (1230), இந்த வசனங் களின் எண்ணிக்கையை (3330] கூட்டுவதன் மூலம் நமக்குக் கிடைப்பது 505+725+3330=4560, 19X240.

(25) 3:81 45 36:3 ໙ 3333 வசனங்கள் அங்கே உள்ளன. இந்த எண்ணை “ரஷாத்” என்பதன் எழுத்தெண் மதிப்புடன் கூட்டுவதன் மூலம் (505), நமக்குக் கிடைப்பது 3333+505=3838=19X202.

அட்டவணை 7: சூரா 1 முதல் சூரா 36 வசனம் 3 வரையுள்ள சூராக்கள் மற்றும் வசனங்கள்

சூரா எண் · வசனங்களின் எண்ணிக்கை · வசன எண்களின் கூட்டுத்தொகை

1 · 7 · 28

2 · 286 · 41041

3 · 200 · 20100

–

9 · 127 · 8128

–

34 · 54 · 1485

35 · 45 · 1035

36 · 2 · 3

666 · 3705 · 257925

( 19 X 195 ) ( 19 X 13575)

(26) 1:1 முதல் 36:3 வரையுள்ள வசனங்களின் எண்ணிக்கை 3705 ஆகும். 19X195 [அட்டவணை 7].

(27) 1:1 முதல் 36:3 வரையுள்ள ஒவ்வொரு சூராவினுடைய வசன எண்களின் கூட்டுத்தொகை 257925, 19X13575 (அட்டவணை 7].

(28) சூரா 1 முதல் சூரா 36 வரையுள்ள சூரா எண்களின் கூட்டுத்தொகை 666 ஆகும் (அட்டவணை 7). “ரஷாத் கலீஃபா” வின் எழுத்தெண் மதிப்பினை (505+725), இந்தக் கூட்டுத்தொகையுடன் நாம் கூட்டி, அத்துடன் வசனம் 36:3ன் “நிச்சயமாக நீர் தூதர்களில் ஒருவராக இருக்கின்றீர்”, என்பதன் எழுத்தெண் மதிப்பையும் (612] கூட்டினால், மொத்தத் தொகையாவது:666+505+725+612=2508= 19×132.

(29) “ரஷத” எனும் வேர்ச்சொல்லின் முதல் இடம் பெறுதலில் இருந்து 36:3 (நீர் தூதர்களில் ஒருவராக இருக்கின்றீர்] வரை யுள்ள வசன எண்களின் கூட்டுத் தொகையுடன் (1+2+3+…..+n) சூராக்களின் மொத்தத்தையும் [35] கூட்டி, அத்துடன் சூரா எண்களையும் நாம் கூட்டினால், கூட்டுத் தொகையானது. 241395, 19 x 12705 ஆகும் [அட்டவணை 8].

அட்டவணை 8: முதல் “ரஷத” வில் இருந்து 36:3 வரையுள்ள சூராக்கள் மற்றும் வசனங்கள்:

எண் · சூரா எண் · வசன எண்களின் கூட்டுத்தொகை

1. · 2 ( 186 – 286 ) · 23836

2. · 3 · 20100

3. · 4 · 15576

4. · 5 · 7260

–

10. · 9 · 8128

–

33. · 34 · 1485

34. · 35 · 1035

35. · 36 ( 1- 3 ) · 6

35 · 665 · 240695

35+665+240695 = 241395 ( 19 X 12705 )

(30) “ரஷத” எனும் வேர்ச்சொல்லின் முதல் இடம்பெறுதலில் இருந்து 36:3 வரையுள்ள சூரா எண்களின் கூட்டுத்தொகையானது 665, 19 × 35 ஆகும். இவை 35 சூராக்கள் என்பதை கவனிக்கவும்.

“வேதத்தையுடைய மக்களுக்கு ஒரு தூதர்”

(யூதர்கள், கிறிஸ்தவர்கள், மற்றும் முஸ்லிம்கள்)

வேதத்தையுடைய மக்களே, தூதர்கள் இல்லாத நீண்டதொரு காலத்திற்குப் பின்னர், விஷயங்களை உங்களுக்குத் தெளிவுபடுத்துவதற்காக, நம்முடைய தூதர் உங்களிடம் வந்துள்ளார். “எந்த ஒரு பிரச்சாரகரோ அல்லது எச்சரிப்பவரோ எங்களிடம் வரவில்லை” என நீங்கள் கூறாதிருக்கும் பொருட்டு, ஒரு பிரச்சாரகர் மற்றும் எச்சரிப்பவர் உங்களிடம் வந்துள்ளார். கடவுள் சர்வ சக்தியுடையவர். (5:19)

(31) கண்கூடாக, இந்த வசனத்தின் எண்ணானது, ரஷாத்தினால் கண்டுபிடிக்கப்பட்ட குர்ஆனின் பொது வகு எண்ணும், இக்குர்ஆனில் “ரஷத” இடம்பெறுகின்ற எண்ணிக்கையுமான 19 ஆகும்.

(32) “ரஷாத் கலீஃபா” வின் மதிப்புடன் (1230), சூரா எண்ணான [5] ஐக் கூட்டி, வசன எண்ணான 19ஐ நாம் கூட்டினால், நமக்குக் கிடைப்பது 1230+5+19=1254-19 x 66.

(33) குர்ஆனின் துவக்கத்தில் இருந்து இந்த வசனம் (5:19) வரையுள்ள சூரா எண்கள் மற்றும் வசனங்களுடைய எண்ணிக்கையின் கூட்டுத்தொகை யானது 703, 19×37 ஆகும். பார்க்க அட்டவணை : 9

அட்டவணை 9: துவக்கம் முதல் 5:19 வரையுள்ள சூராக்கள் மற்றும் வசனங்கள்

சூரா எண் · வசனங்களின் எண்ணிக்கை · மொத்தம்

1 · 7 · 8

2 · 289 · 288

3 · 200 · 203

4 · 176 · 180

5 · 19 · 24

15 · 688 · 703

( 19 X 37 )

(34) “சான்று” எனும் சூரா 98ன் வசனம் 2, “வேதத்தையுடைய மக்களின் (யூதர்கள், கிறிஸ்தவர்கள். முஸ்லிம்கள்)” நலனுக்காக கடவுளின் உடன்படிக்கைத் தூதரின் வருகையைப் பிரகடனிக் கின்றது. “ரஷாத் கலீஃபாவின் எழுத்தெண் மதிப்புடன் (505+725]. சூராவின் எண்ணைக் கூட்டி [98], அத்துடன் வசன எண்ணையும் (2) நாம் கூட்டினால், நமக்கு கிடைப்பது 505+725+98+2=1330=19×70.

வேதத்தையுடைய மக்களுக்கிடையில் (யூதர்கள், கிறிஸ்துவர்கள், முஸ்லிம்கள்) நம்பமறுத்து விட்டவர்கள், மற்றும் போலித் தெய்வ வழிபாடு செய்பவர்கள், ஆழ்ந்த அத்தாட்சிகள் அவர்களுக்குக் கொடுக்கப்பட்ட போதிலும், நம்பிக்கை கொள்ள மாட்டார்கள். [98:1] கடவுளிடமிருந்து ஒரு தூதர், புனித வேதங்களை எடுத்துரைக்கின்றவர்.

(98:2)

(35) “ஆழ்ந்த அத்தாட்சி” எனப்பொருள் தருகின்றதும், அத்துடன் சூரா 98-ள் தலைப்பாகவும் உள்ள “பய்யினஹ்” எனும் வார்த்தை இக்குர்ஆனில் 19 முறைகள் இடம்பெறுகின்றது என்பது கவனிக்கத்தக்கதாகும். குர்ஆனுடைய தெய்வீக இயற்றுதலுக்குரிய சான்று பகா எண்ணான 19ன் அடிப்படையிலானது, மேலும் 98:2ல் தூதர் எனப்படுபவர் “ரஷாத் கலீஃபா “வே ஆவார் என்பதற்கு, இது மற்றொரு கணிதரீதியிலான உறுதிப்படுத்துதல் ஆகும்.

ஓர் ஆழ்ந்த தூதர் வந்துள்ளார் [44:13]

(36) 1:1 முதல் 44:13 வரை சூரா எண்களை. ஒவ்வொரு சூராவிலுமுள்ள வசனங்களின் எண்ணிக்கையுடன் கூட்டுவதன் மூலம், மொத்தமாக வருவது 5415, 19X19X15 (அட்டவணை 10].

(37) இந்த சூராவின் எண்ணுடன் (44). தூதர் முன்னுரைக்கப்படுகின்ற வசனத்தின் (13), கூட்டுத் தொகையானது 57, 19×3க்கு சமம். பார்க்க அட்டவணை 10.

அட்டவணை 10: சூராக்கள் மற்றும் வசனங்கள், 1:1 முதல் 44:13 வரை

சூரா எண் · வசனங்களின் எண்ணிக்கை · மொத்தம்

1 · 7 · 8

2 · 286 · 288

3 · 200 · 203

4 · 176 · 180

5 · 120 · 125

–

9 · 127 · 136

–

41 · 54 · 95

42 · 53 · 95

43 · 89 · 132

44 · 13 · 57

990 · 4425 · 5415

( 19 X 19 X 15 )

இவ்வுலகத்தின் முடிவு

(38) எதிர்காலத்தை அறிந்தவர் கடவுள் ஒருவர்தான்; இந்த உலகம் எப்பொழுது முடிவுறும் என்று மிகச் சரியாக அவர் அறிவார் (7:187; 31:34; 33:63; 41:47; 43:85). தேர்ந்தெடுக்கப்பட்ட அவருடைய தூதர்களுக்கு எதிர்காலத்தின் குறிப்பிட்ட அம்சங்களைக் கடவுள் வெளிப்படுத்துகிறார் என்று குர்ஆனில் இருந்து நாம் கற்றுக்கொள்கிறோம். 72:27-ல் உள்ளபடி, ரஷாத் கலீஃபா உலக முடிவின் திரைவிலக்கம் கொண்டு ஆசிர்வதிக்கப்பட்டவராக இருந்தார் என்பதற்கான ஆதாரம் பின் இணைப்பு 25ல் காட்டப்படுகின்றது.

(39) குர்ஆனின் துவக்கத்தில் இருந்து வசனம் 72:27 வரையுள்ள வசனங்களின் எண்ணிக்கையானது 5472, அல்லது 19 × 72 x 4. 72 : 27ல் அத்தூதர் எதிர்காலத்தைப் பற்றிய தகவல் தரப்படுகின்றார் என்பதையும், அத்துடன் இந்த சூரா 4 “ரஷத” எனும் வார்த்தைகளைக் கொண்டுள்ளது என்பதையும் கவனியுங்கள் (72:2. 10. 14 & 21). “ரஷாத் கலீஃபாவின் எழுத்தெண் மதிப்புடன் (1230), சூரா எண்ணான (72)ஐக் கூட்டி, “ரவுத” குறிப்பிடப்படுகின்ற அந்த 4 வசனங்களின் எண்களைக் கூட்டினால் நமக்குக் கிடைப்பது 1230+72+2+10+14+21 =1349 =19×71.

(40) வசனம் 72:27 இவ்வாசகத்துடன் துவங்கு கின்றது:

(அவர் தேர்ந்தெடுக்கின்ற அத்தூதர் மட்டும்]. எதிர்காலத்தைப் பற்றிய செய்தியைப் பெறுவதற்குக் கடவுளால் தேர்ந்தெடுக்கப் பட்டவரான அத்தூதருக்கான இந்தக் குறிப்பு 1919 எனும் ஓர் எழுத்தெண் மதிப்பைக் கொண்டுள்ளது. அட்டவணை 11 தகவல்களை முன்வைக்கின்றது.

அட்டவணை II: வசனப் 72:27ல் உள்ள தேர்ந்தெடுக்கப்பட்ட தூதனின் எழுத்தெண் மதிப்பு

எழுத்து · எழுத்தெண் மதிப்பு

அ · 1

ல · 30

அ · 1

ம · 40

60T · 50

அ · 1

ர · 200

த · 400

L · 800

ய · 10

ம · 40

60T · 50

ர · 200

ச · 60

வ · 6

ல · 30

1919

ஒரு போலித்தூதரிடம் இருந்து கடவுளின் தூதரை எவ்வாறு பிரித்தறிவது

தூதர்களை வேறுபடுத்திக் காண நேரடியான அளவுகோல் களைக் குர்ஆன் வழங்குகின்றது.

[1] கடவுளை மட்டும் வழிபடுதலையும். அனைத்து வடிவங்களிலுமான போலித் தெய்வ வழிபாட்டினை முடிவுக்குக் கொண்டு வருவதையும் சுடவுளின் தூதர் ஆதரிப்பார்.

(2) கடவுளின் தூதர் தனக்கென ஒரு கூலியை ஒருபோதும் கேட்பதில்லை.

(3) கடவுளின் தூதர் அவருடைய தூதுத்துவத்திற்குரிய தெய்வீகமான, மறுக்க இயலாத சான்று கொடுக்கப்படு கின்றார்.

எவரேனும் கடவுளின் தூதராக இருப்பதாகக் கோரிக் கொண்டு, மேலே குறிப்பிடப்பட்டுள்ள இம்மூன்று குறைந்தபட்ச அளவுகோல்களைப் பூர்த்தி செய்யவில்லை எனில் அவர் பொய்யாகக் கோருகின்றவர் ஆவார்.

கடவுளின் தூதருக்கும் போலியானதொரு தூதருக்கும் இடையில் மிகவும் முக்கியமான வித்தியாசமாவது, கடவுனின் தூதர் கடவுளால் ஆதரவளிக்கப்பட்டவராக உள்ளார், அதே சமயம் போலித் தூதரானவர் அப்படியல்ல:

கண்களுக்குத் தென்படாத, கடவுளுடைய படைவீரர்கள் மூலம் கடவுளின் தூதர் ஆதரவளிக்கப் பட்டவராக உள்ளார் (3:124-126; 9:26 & 40; 33:0; 37:177-1731 4814 & 7; 74:31).

கடவுளின் தூதர் கடவுளின் பொக்கிஷத்தைக் கொண்டு ஆதரவளிக்கப்படுகின்றார். (63:7-8)

கடவுனின் தூதரும், அவ்வண்ணமே நம்பிக்கையாளர்களும், இந்த உலகத்திலும் என்றென்றும் வெற்றி மற்றும் கண்ணியத்திற்கு உத்தரவாதமளிக்கப்பட்டவர்களாக உள்ளனர் (40:51 & 58:21).

எனவே, கடவுளின் தூதருடைய சத்தியத்தன்மை ஒரே சீராக மிகைக்கின்றது, அதே சமயம் ஒரு போலித்தூதரின் பொய்பையானது மாற்றமின்றி, விரைவிலோ அல்லது சற்றுத் தாமதமாகவோ, வெளிப்படுத்தப்பட்டு விடுகின்றது.

கடவுளின் உடன்படிக்கைத் தூதருடைய பிரதான கடமைகள்

குர்ஆன் 3:81-ல் கூறப்பட்டுள்ளபடி, கடவுளின் உடன்படிக்கைத் தூதரானவர் நபிமார்கள் அனைவராலும் சேர்ப்பிக்கப்பட்ட வேதங்கள் அனைத்தையும் உறுதிப்படுத்திடவும். மேலும் அவற்றின் அசலான தூய நிலைக்கு மீட்டெடுக்கவும் வேண்டும்.

கடவுளிடமிருந்துள்ள கருணை (21:107)

நம்பிக்கை கொண்டவர்கள் ஒரு பிரச்சனையை சந்திக்கின்றபோது, அவர்கள் சாத்தியமுள்ள ஒரு சில தீர்வுகளை உருவாக்குகின்றனர். ஆயினும் இது எப்பொழுதும் மாற்றமின்றி கணிசமான சச்சரவுகள், ஒற்றுமைக் குலைவு, மற்றும் ஒழுங்கின்மைக்கு வழிகோலுகின்றது. 2:151, 3:164, மற்றும் 21:107-லிருந்து நம்முடைய பிரச்சினைகளுக்கான இறுதியான தீர்வுகளை வழங்குவதற்காக நம்மிடம் தூதர்களை அவர் அனுப்புவது என்பது கடவுளிடமிருந்து வந்துள்ள கருணையை அன்றி வேறில்லை என்று நாம் கற்றுக் கொள்கின்றோம். நம்முடன் தொடர்பு கொள்வதற்காகவும், அத்துடன் புதிய தகவல்களைப் பரப்புவதற்காகவும் கடவுள் தன்னுடைய தூதர்களை அனுப்புகின்றார் என்று நாம் 42:51-லிருந்து கற்றுக்கொள்கின்றோம். இதனால்தான் 4:65, 80ல் சிறிதளவும் தயக்கமின்றி, கடவுளின் தூதர்கள் மூலம் நம்மிடம் சேர்ப்பிக்கப்பட்ட போதனைகளை ஏற்றுக் கொள்ளுமாறு அழுத்தமான உத்தரவிடப்பட்டுள்ளது.

பின்வருவது கடவுளின் உடன்படிக்கை தூதருடைய பிரதான கடமைகளின் ஒரு பட்டியல் ஆகும்:

குர்ஆனுடைய கணிதரீதியிலான அற்புதத்தைத் திரைவிலக்குதல் மேலும் பிரகடனித்தல் [பின்இலணப்பு 1).

குர்ஆனில் இருந்து இரண்டு போலியான வசனங்களான 9:128-129-ஐ வெளிப்படுத்தி அகற்றுதல் (பின்இணைப்பு 24)

நம்முடைய வாழ்வுகளின் நோக்கத்தை விவரிப்பது ; நாம் ஏன் இங்கு இருக்கின்றோம் (பின்இணைப்பு 7).

அனைத்து மக்களுக்குமுரிய ஒரு மார்க்கத்தைப் பிரகடனித்தல், அத்துடன் யூதம் கிறிஸ்துவம் மற்றும் இஸ்லாமினைப் பீடித்திருக்கின்ற அனைத்துச் சீர்கேடுகளையும் சுட்டிக்காட்டுவதும் சுத்திகரிப்பதும் (பின் இணைப்பு 13, 15, 19).

ஜகாத் (கடமையான தர்மம்] மீட்சிக்குரிய ஒரு முன் அவசியமாக உள்ளது [7:156] எனப் பிரகடனித்தல், மேலும் ஐகாத்தைக் கடைப்பிடிக்கும் சரியான வழிமுறையை விளக்குதல் (பின்இணைப்பு 15).

இவ்வுலக முடிவுதனைத் திரை விலக்குதல் (பின் இணைப்பு 25).

40 வயதிற்கு முன்னர் மரணிக்கின்றவர்கள் சுவர்க்கம் செல்கின்றனர் எனப் பிரகடனித்தல் [பின்இணைப்பு 32).

ஜீஸஸின் மரணத்தை விளக்குதல் (பின்இணைப்பு 22).

முஹம்மதிற்கும், பின்னர் அவர் வாயிலாகவும் குர்ஆன் சேர்ப்பிக்கப்படுதல் குறித்து விளக்குதல் (பின் இணைப்பு 28).

கடவுளின் வெரிப்பாடுகளை [இந்தக் குர் ஆனை) முஹம்மத் தன் சொந்தக் கரத்தினால் எழுதினார் என்பதை அறிவித்தல் (பின்இணைப்பு 28).

கடவுள் மீது நம்பிக்கை கொண்டவர்களில் அதிகமானோர் ஏன் சுவனத்தை அடைய முடிவதில்லையென விளக்குதல் (பின்இணைப்பு 27).

ஆப்ரஹாமிடம் அவருடைய மகனைக் கொல்லும்படி கடவுள் ஒருபோதும் கட்டளையிடவில்லை எனப் பிரகடனித்தல் (பின்இணைப்பு 9),

பரிபூரண மகிழ்ச்சியின் இரகசியத்தைப் பிரசுடனித்தல் (அறிமுகவுரை XX].

குற்றவியல் நீதி வழிமுறை ஒன்றை நிறுவுதல் (பின்இணைப்பு 37).

📖குர்ஆன் படிக்ககுர்ஆன்