இந்தக் குர்ஆன் இவ்வுலகிற்குரிய கடவுளின் இறுதி ஏற்பாடாகும். மேலும் மிகச்சிறிய சிதைவில் இருந்தும் அதனைப் பாதுகாப்பதாக அவர் உறுதிமொழி அளித்துள்ளார் (15:9). எனவே, இக்குர்ஆளானது, அதனைப் பாதுகாத்து அதற்குப் பணிபுரிகின்ற கண்ணுக்குத் தென்படாத படைகளால் சூழப்பட்டுள்ளது [13:39, 41:42, 42:24).
மற்ற எந்தப் புத்தகத்தையும் போல் அல்லாமல், குர்ஆனானது கடவுளால் கற்றுக்கொடுக்கப்படுகின்றது (55:1- 2) நமக்குத் தேவையானதை நமக்குத் தேவைப்படுகின்ற நேரத்தில் அவர் நமக்குக் கற்றுத் தருகின்றார். இதன்
காரணமாகவே சலிப்படையாமல் நூற்றுக்கணக்கான முறைகள் நாம் இக்குர்ஆனைப் படிக்கின்றோம். உதாரணத்திற்கு, ஒரு நெடுங்கதையினை. ஒரு முறை மட்டுமே நாம் படிக்க இயலும், ஆனால் இக்குர்ஆன் எண்ணற்ற முறைகள் படிக்கப்பட இயலும், மேலும் ஒவ்வொரு முறையும் அதிலிருந்து புதிய மற்றும் மதிப்பு மிக்க தகவல்களை நாம் பெறுகின்றோம். மற்றொருபுறம், வஞ்சகத்தனமுடைய வாசகர்கள் அதனில் குற்றங்குறை காண்பதற்காகக் குர்ஆனை படிப்பவர்கள் குர்ஆனில் இருந்து திசை திருப்பப்படுகின்றனர் [7:146, 17:45, 18:57, 41:44). உண்மையில், அவர்கள் தேடுகின்ற குற்றங்குறைகளைக் கண்டுபிடிக்க, கண்ணுக்குத் தென்படாத கடவுளின் படைகள் அவர்களுக்கு உதவுகின்றன. இக்குர்ஆன் குறையற்றதாக இருப்பதனால், இத்தகைய “குற்றங்குறைகள்” கடவுளுடைய விரோதிகளின் மூடத்தனத்தை வெளிப்படுத்த மட்டுமே துணை செய்கின்றன.
இக்குர்ஆனை வர்ணிப்பதற்காகக் கடவுள் தன்னுடைய சொந்தப் பண்புப் பெயர்களைப் பயன்படுத்துகின்றார்! இந்தக் குர்ஆனை “அஸீம் = மகத்தானது” (15:87), “ஹகிம் = ஞானம் நிறைந்தது” (36:2). “மஜீத்-மகிமைமிக்கது” (50:1) மற்றும் “கரீம் கண்ணியத்திற்குரியது” (56:77), என்று அவர் அழைக்கின்றார். நாம் என்ன சொல்ல இயலும்?
அவர்களுடைய மொழி ஒரு பொருட்டின்றி. அனைத்து மக்களுக்கும் உரிய கடவுளின் தூதுச் செய்தியாக இக்குர்ஆன் இருப்பதனால், அவர்களுடைய மொழி ஒரு பொருட்டின்றி, இக்குர்ஆன் நம்பிக்கையாளர்களால் அடையப்படக்கூடியதாக உள்ளது (41:44). ஆழ்ந்ததோர் அசாதாரண நடப்பினை இது விளக்குகின்றது: அரபி தெரியாத நம்பிக்கையாளர்கள், அரபி பேசுகின்ற நம்பிக்கையற்றவர்களை விடவும் இக்குர்ஆனை மிகவும் நன்றாக அறிந்திருக்கின்றனர். இக்குர்ஆனுக்குப் பணிபுரிகின்ற கண்ணுக்குத் தென்படாத படைகளின் காரணத்தால், உண்மையான நம்பிக்கையாளர்களுக்கு அது உடனடியாகவும், அனுபவித்து மகிழத்தக்கதாகவும் அடையப்படக் கூடியதாக, ஆனால் நம்பிக்கையற்றவர்களுக்கு முற்றிலுமாக அனுகிட இயலாததாக உள்ளது (17:45, 18:57, 56:79).