(கடவுள்தான்) எதிர்காலத்தை அறிந்தவர்:
அத்தகைய அறிவினைத் திரைவிலக்க எவரொருவரையும் அவர் அனுமதிப்பதில்லை.
அவர் தேர்ந்தெடுக்கின்ற தூதர்களின் வாயிலாக மட்டும் எதிர்காலம் மற்றும்
கடந்த கால நிகழ்வுகளை அவர் வெளிப்படுத்துகின்றார். [72:27]
உலகத்தின் முடிவினைத் திரை விலக்குதலானது கடவுளின் உடன்படிக்கைத் தூதர் என்ற முறையில் என்னிடம் ஒப்படைக்கப்பட்ட கடமைகளில் உள்ளதாகும் (பக்கம் 415). 18:7-8 மற்றும் 69:13-15-ல் இருந்து இந்த உலகம் ஒரு முடிவுக்கு வரும் என்பதை நாம் கற்றுக் கொள்கின்றோம். புதியதொரு பூமியும் புதிய வானங்களும் தற்போதைய வானங்களையும் பூமியையும் மாற்றியமைக்கும்[14:48].
நெருங்கி வருகின்ற உலக முடிவின் அறிகுறிகள்
பற்பல அறிகுறிகனை இக்குர்ஆன் வழங்குகின்றது. மேலும் உலகத்தின் முடிவினைத் திரை விலக்குதற்குரிய உபாயங்கள் கொடுக்கப்பட்டுள்ளன என்றும் கூறுகின்றது(47:18) இக்குர்ஆனில் கொடுக்கப்பட்டுள்ள அறிகுறிகளில் உள்ளவை:
1. நிலவானது பிளக்கப்படுதல்: இது ஏற்கெனவே ஜூன் 1989-ல் நாம் நிலவின் மீது தரை இறங்கியதோடன்றி, திரும்புகையில் நிலவுப் பாறைகளைக் கொண்டு வந்த போது நிகழ்ந்தேறியது. பூமியில் உள்ள மக்கள் இப்போது பல அருங்காட்சியகங்கள், கல்லூரிகள், மற்றும் விண்வெளி ஆராய்ச்சி மையங்களுக்குச் சென்று நிலவின் துண்டுகளைக் காணலாம்.
2. 18-ன் அடிப்படையிலான குர்ஆனுடைய கணிதக் குறியீடு கண்டுபிடிக்கப்படுதல் (74:30-37): 1969-1974-ல் நிறைவேற்றப்பட்டது.
3. விலங்கு (27:82): “பூமியில் இருந்து உருவாக்கப்பட்டு, தங்களுடைய இரட்சகரின் பால் மக்கள் கவனமற்றவர்களாக இருந்து வந்துள்ளனர் என்று அது எச்சரிக்கின்றது”. இந்த விலங்கு. பூமியில் இருந்து உருவாக்கியது. தோன்றிவிட்டதுடன் குர்ஆனுடைய எண்ணியல் குறியீட்டினைத் திரைவிலக்குவதில் உபகரணமாக இருந்து, கடவுளின் தூதுச் செய்தியை இவ்வுலகம் அலட்சியப்படுத்தி விட்டது எனப் பிரகடனம் செய்கின்றது: அந்த விலங்கு கணிணியே ஆகும். 27:82 அங்கங்களான இலக்கங்கள் கூட்டப்பட வருவது 19 என்பதைக் கவனிக்கவும்.
4. கடவுளின் உடன்படிக்கைத் தூதருடைய வருகை (3:81): பின் இணைப்பு 2-ல் விவரிக்கப்பட்டுள்ளபடி, நபிமார்கள் அனைவரும் வேதங்களைச் சேர்ப்பித்துவிட்டவுடன், தூய்மைப்படுத்தவும் ஒன்றிணைக்கவும். இக்குர்ஆனில் முன்னறிவிக்கப்பட்டுள்ள, ஒன்றுபடுத்துகின்ற ஒரு தூதர் வருவார். இந்த முன்னறிவிப்பு ரமளான் 1408-ல் நிறைவேறியது.
5. புகை (44:10): கடவுளின் உடன்படிக்கைத் தூதரானவர் ஒன்றிணைக்கப்பட்ட தூதுச் செய்தியைச் சேர்ப்பிப்பதுடன் கடவுளால் ஏற்றுக்கொள்ளப்படக்கூடிய ஒரே மார்க்கமாக இஸ்லாமை [சரணடைதல்]பிரகடனித்து விட்ட பின்னர் நிகழ்கின்றது.
6. காக் மற்றும் மேகாக்: கடவுளின் திட்டத்திற்கேற்ப, ஹிஜ்ரி 1700-வது வருடம் (கி.பி 2271), அவர்கள் மீண்டும் தோன்றுகின்றனர்.18:94 மற்றும் 21:96-ல் காக் மற்றும் மேகாக் குறிப்பிடப்படுகின்றனர். 18:94-ல் இருந்து 18வது சூராவின் இறுதி வரை வசனங்களை நீங்கள் எண்ணினால், நீங்கள் அவற்றை 17 எனக் காண்கின்றீர்கள். 21:96-ல் இருந்து 21-வது சூராவின் இறுதி வரை வசனங்களை நீங்கள் எண்ணினால், அவற்றையும் கூட நீங்கள்
7. ஆகவே காண்கின்றீர்கள். காக் மற்றும் மேகாக் ஹிஜ்ரி 1700-ல் மீண்டும் தோன்றுவார்கள் என்பதற்குஇக்குர்ஆனின் அறிகுறி இதுவேயாகும்.
அது மறைக்கப்பட்ட நிலையிலேயே இருந்திடாது (20:15)
இவ்வுலகத்தின் முடிவானது இவ்வுலக முடிவிற்கு முன்னரே கடவுளால் வெளிப்படுத்தப்படும் என சூரா 20-ன் வசனம் 15 நமக்குத் தெரிவிக்கின்றது. சூரா 15, வசனம் 87 அந்தச் சம்பவத்திற்குரிய காலத்தைத் தருகின்றது:
நாம் உமக்கு 7 ஜோடிகளையும், மகத்தான இக்குர்ஆனையும் தந்துள்ளோம். [15:87]
14 குர்ஆனியத் துவக்க எழுத்துக்களே அந்த ஏழு ஜோடிகள் ஆகும். இக்குர்ஆனுடைய அற்புதத்தின் ஆழ்ந்த இந்தத் தூண்களின் மொத்த எழுத்தெண் மதிப்பானது உலக முடிவிற்கான வருடத்தைக் குறிப்பாகச் சுட்டிக்காட்டுகின்றது. சூரா 15-ன் வசனம் 85 எடுத்துரைப்பது கவனிக்கத்தக்கதாகும்: “இவ்வுலகத்தின் முடிவானது நிச்சயமாக நிகழ்ந்தேறியே தீரும்”. அதற்கு அடுத்த வசனம், 15:86, கடவுள்தான் இவ்வுலகத்தின் படைப்பாளர் ஆவார், மேலும் ஐயமின்றி, எப்பொழுது அது முடிவடையும் எனவும் அவர் அறிவார் என்று நமக்குச் சொல்கின்றது. தொடர்கின்ற இவ்வசனம், 15:87, இவ்வுலகம் எப்பொழுது முடிவடையும் என்று நமக்குச் சொல்கின்றது. அட்டவணை 1-ல் காட்டப்பட்டுள்ளபடி, குர்ஆனியத் துவக்க எழுத்துக்களான இந்த “ஏழு ஜோடி”களின் மொத்த எழுத்தெண் மதிப்பாவது 1709 ஆகும்[பின் இணைப்பு 1-ன் அட்டவணை 1-ஐயும் பார்க்கவும்). 15:87-ல் கூறப்பட்டுள்ளபடி, குர்ஆனில் இந்த முன்னறிவிப்பு எடுத்துரைக்கப்பட்ட தருணத்தில் இருந்து 1709 சந்திர வருடங்கள் இவ்வுலகம் ஜீவித்திருக்கும். இதன் அர்த்தமாவது இவ்வுலகம் ஹிஜ்ரி 1710-ல் முடிவடைந்து விடும் என்பதேயாகும். இந்த எண் 19-ன் ஒரு பெருக்குத் தொகையாகும்; 1710 = 19 x 90.
அட்டவணை 1: ஞர்ஆனியத் துவக்க எழுத்துக்களின் “ஏழு ஜோடிகளுடைய மொத்த எழுத்தின் மதிப்பு
குர்ஆனியத் துவக்க எழுத்து · எழுத்தெண் மதிப்பு
1. க்க · 100
2. ன · 50
3. ஸ(ஸாத்) · 90
4. ஹ்.ஹ.ம. · 48
5. ய.ச. · 70
6. த.ஹ. · 14
7. த.ச. · 69
8. அ.ல.ம. · 71
9. அ.ல.ர · 231
10. த. ச. ம. · 109
11. அ.ச.க்க. · 230
12. அ.ல.ம.ஸ. · 161
13. அ.ல.ம.ர. · 271
14. க.ஹ.ய.அ.ஸ. · 195
1709
இந்தத் தகவலின் திரைவிலக்கலானது முன்னறிவிக்கப்பட்டுவிட்ட உலக முடிவுக்கு 309 வருடங்கள் முன்னதாக, ஹிஜ்ரி 1400-ம் ஆண்டு நடைபெற்றது (1709-1400=309] 309 எனும் எண் ஒரு குர்ஆனிய எண்ணாகும் (18:25], மேலும் உலகத்தின் முடிவுடன் தொடர்புடையதுமாகும் [18:21]. 18:25-ல் 309 ஆனது. “9-ஆல் அதிகரிக்கப்பட்டு, முந்நூறு வருடங்கள்” என எழுதப்படுகின்ற வினோதமான விதமானது. 309 என்பது சந்திர வருடங்கள் என்பதைக் குறிக்கின்றது. 300 சூரிய வருடங்களுக்கும் 300 சந்திர வருடங்களுக்கும் இடையேயுள்ள வித்தியாசம் 9 வருடங்கள் ஆகும்.
இந்தக் கண்டுபிடிப்பின் வருடமான ஹிஜ்ரி 1400, கி.பி. 1980 உடன் ஒத்திருந்தது. மேலும் 1980 உடன் 300 சூரிய வருடங்கள் கூட்டப்பட வருகின்ற 2280, 19-ன் ஒரு பெருக்குத் தொகையேயாகும் 19 × 120. இவ்விதமாக இந்த உலகம் கி.பி. 2280, 19 x 120 உடன் ஒத்திருக்கின்ற ஹிஜ்ரி 1710, 19 × 90-ல் முடிவுறுகின்றது. வலிமை மிகுந்த இந்தக் குர்ஆனியச் சான்றுகளை ஏற்றுக் கொள்ளாத நம்பமறுப் பவர்களுக்கு இவ்வுலகின் முடிவு திடீரென வரும் (6:31. 44,47; 7:95; 187; 12:107; 21:40:22:55; 26:202; 29:53; 39:55:43:66 மற்றும் 47:18).
மார்க்கப் போதனைகளின் ஒரு மூலாதாரமாக ஹதீஸ் தடைசெய்யப்பட்டுள்ள அதே சமயம் [பிள் இணைப்பு 19] அது பயனுள்ளதொரு வரலாற்று மூலாதாரமாக இருக்க இயலும். இஸ்லாமின்ஆரம்ப நூற்றாண்டுகளின் போதான சரித்திர நிகழ்வுகளையும் அப்பகுதியின் பழக்க வழக்கங்கள் மற்றும் பாரம்பர்யங்களையும் பற்றி ஏராளமானதொரு தகவலை நாம் அடைந்திட இயலும். இந்தக் குர்ஆனியத் துவக்க எழுத்துக்கள் முஸ்லிம் உம்மத்தின் ஆயுட் காலத்தை நிச்சயிப்பதாக நம்பப்பட்டன என்று ஹதீஸ் புத்தகங்கள் சுட்டிக்காட்டுகின்றன. குர்ஆனியத் துவக்க எழுத்துக்களுக்குரிய சாத்தியமானதொரு விளக்கமாக, அல்- பைளாவியின் பாரம்பர்யமிக்க விளக்கவுரை, பின் வருகின்ற சரித்திர நிகழ்வினை எடுத்துக்கூறுகின்றது. இதே நிகழ்ச்சி அல்-ஸுயூத்தியின் இத்கான், முதல்அச்சு ஹிஜ்ரீ 1318, தொகுதி2, பக்கம் 10-ல் விவரிக்கப்பட்டுள்ளது.
மதினாவில் உள்ள யூதர்கள் நபியிடம் சென்று கூறினார்கள், “உம்முடைய சூர்ஆன் அ.ல.ம. கொண்டு துவக்க எழுத்துக்கள் இடப்பட்டுள்ளது. மேலும் இந்தத் துவக்க எழுத்துக்கள் உம்முடைய மார்க்கத்தின் ஆயுட் காலத்தை நிச்சயிக்கின்றன. ‘அ’ 1 ஆகவும், ‘W’ 30 ஆகவும், ‘ம’ 40 ஆகவும் உள்ளதால், உம்முடைய மார்க்கம் 71 ஆண்டுகள் மட்டுமே ஜீவித்திருக்கும் என்பதே இதன் பொருளாகும்.” முஹம்மத் கூறினார், “நாங்கள் அ.ல.ம.ஸ-வையும் பெற்றிருக்கின்றோம்” அவர்கள் கூறினார்கள், அ என்பது 1 ஆகவும் ‘ல’ ஆனது 30 ஆகவும், ‘ம’ ஆனது 40 ஆகவும், மேலும் ‘ஸ’ ஆனது 90 ஆகவும் உள்ளது. இதனைக் கூட்டினால் வருவது 161. வேறு எதுவேனும் உம்மிடம் உள்ளதா?” நபி கூறினார், “ஆம், அ.ல.டீ.ர” அவர்கள் கூறினார்கள், “இது மிக நீளமானதாகவும் மிகக் கனமானதாகவும் உள்ளது; ‘அ’ என்பது 1 ஆக உள்ளது, ‘ல’ 30 ஆக உள்ளது, ம’ 40 ஆக உள்ளது, மேலும் ‘ர’ ஆனது 200 ஆக உள்ளது, மொத்தத்தை 271 ஆக்குகின்றது.” இறுதியில் அவர்கள், “இந்தத் துவக்க எழுத்துக்கள் எத்தனை அவருக்குக் கொடுக்கப்பட்டது என்பதை நாய்கள் அறியமாட்டோம்!.” என்று கூறியவர்களாக, இறுதியில் தங்கள் முயற்சியைக் கைவிட்டு விட்டனர்.
(அல்-ஸுயூத்தியின் பிரசித்தி பெற்ற குறிப்பேடு இத்கான்]
இந்த விவரிப்பு நன்கறியப்பட்டதாக இருந்த போதிலும், குர்ஆனியத் துவக்க எழுத்துக்களுக்கும் இவ்வுலகத்தின் முடிவுக்கும் இடையேயுள்ள தெளிவான தொடர்பினை ஏற்றுக் கொள்ள பற்பல அறிஞர்கள் விருப்பமில்லாதவர்களாகவே இருந்து வந்துள்ளனர். இந்த விஷயத்தை ஏற்றுக்கொள்ள அவர்கள் முன்வர இயலாததன் எளிய காரணம், இக்கணக்கீடுகள் இவ்வுலகத்தின் முடிவினையும், தீர்ப்பினையும், ஒரு நிதர்சனமாக ஆக்குகின்றது என்பதேயாகும்.