முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்க
EN தமிழ் हिंदी
Kadavulmattum.org

இணைப்பு 33: கடவுள் ஏன் இப்பொழுது ஒரு தூதரை அனுப்பினார்?

3:81, மற்றும் பின் இணைப்பு 2-ல் கூறப்பட்டுள்ளபடி, நபிமார்கள் அனைவராலும் சேர்ப்பிக்கப்பட்ட தூதுச் செய்திகளை ஒருங்கிணைத்து அவற்றைத் தூய்மைப்படுத்தி அத்துடன் அவற்றை சரணடைதல் எனும் ஒரே மார்க்கமாக ஒன்றிணைப்பதற்காகக் கடவுள் ஒரு தூதரை அனுப்பியுள்ளார். கீழ்க்கண்ட காரணங்களினால், முக்கியமான இந்த முன்னறிவிப்பினை நிறைவேற்றுவதற்குரிய காலம் நிச்சயமாக கனிந்துவிட்டது.

1. யூதமதம், கிறிஸ்துவம், மற்றும் இஸ்லாம் ஆகியவை அடையாளங்காண முடியாதவாறு சீர்கெடுக்கப்பட்டு விட்டன.

2. கடவுளின் தூதுச்செய்திகள் அனைத்தும் சேர்ப்பிக்கப்பட்டு விட்டன; சூர்ஆன்தான் இறுதி ஏற்பாடாக உள்ளது.

3. இந்த உலகத்தில் வாழ்வதற்கென விதிக்கப்பட்டுள்ள மானிட இனத்தவர்களில் 93% க்கும் அதிகமானோர் இனிமேல்தான் வர இருக்கின்றனர்.அறிமுகவுரையில் சித்தரிக்கப்பட்டுள்ளபடி,பக்கம் xiv, ஆதம் முதல் இந்தப் பூமியில் வசித்த மக்கள், எதிர்பார்க்கப்படுகின்ற மொத்த மக்கள் தொகையில் பதினைந்தில் ஒரு பங்கினராகவே உள்ளனர்.

யூதமதம்

சீர்கெட்டுவிட்ட இன்றைய யூதமதத்தின் மிகச்சிறந்த எடுத்துக்காட்டுகளை பிரசித்தி பெற்ற யூதமதகுருவான ஹெரால்ட் எஸ். குஷ்னரின் புத்தகங்களில் காணலாம். Avon books, 1981-ல் வெளியிட்ட நல்ல மனிதர்களுக்கு கெட்ட விஷயங்கள் நடக்கும் பொழுது, WHEN BAD THINGS HAPPEN TO GOOD PEOPLE, எனும் நன்கு விற்பனையான அவருடைய புத்தகத்தில், யூதமதகுரு குஷ்னர் கீழ்க்கண்டவாறு கூறுகின்றார்:

…… நம்மால் இயன்ற அளவு இந்த உலகத்தைக் கருத்துடன் கவனத்தில் எடுத்துக் கொள்ளுமாறு நாம் உபதேசிக்கப்படுவோம்.ஒரு வேளை நமக்கு எப்பொழுதும் இருக்கக்கூடிய ஒன்றே ஒன்றாக இது இருக்கும் பட்சத்தில், இங்கேயே அர்த்தத்தையும் நீதியையும் காண்பதற்காக. (பக்கம் 29)

இந்த உலகத்தில் நல்ல மனிதர்களுக்குக் கெட்ட விஷயங்கள் நிகழவே செய்கின்றன, ஆனால் அதனை நாடியவர் கடவுள் அல்ல. மக்கள் அவர்களுக்குத் தகுதியானவற்றைப் பெற வேண்டுமெனக் கடவுள் விரும்பக் கூடும்.ஆனால் எல்லா நேரங்களிலும் அதனை அமைத்துத் தர அவரால் இயலாது. [பக்கம் 42)

நன்னெறியாளர்களைத் தீங்கில் இருந்து பாதுகாப்பதற்காகக் கடவுள் இயற்கை விதிகளின் பணிகளில் குறுக்கிட கீழிறங்கி வருவதில்லை.நல்ல மனிதர்களுக்குக் கெட்ட விஷயங்கள் நிகழக் காரணமாகின்ற நம்முடைய உலகின் இரண்டாவது வட்டாரம் அதுவாகும். மேலும் கடவுள் அதனைச் செய்யவில்லை, அத்துடன் அவரால் அதனைத் தடுத்து நிறுத்தவும் இயலாது. (பக்கம் 58]

கடவுளால் எல்லாவற்றையும் செய்ய இயலாது, ஆனால் முக்கியமான சில விஷயங்களை அவரால் செய்ய இயலும். [பக்கம் 113]

நோய்களில் நாம் பாதிக்கப்படாமல் ஆக்குமாறு நாம் அவரைக் கேட்க முடியாது, ஏனெனில் அவரால் அதனைச் செய்ய இயலாது. (பக்கம் 125)

அவருடைய எல்லைகளை நான் அடையாளம் காண்கின்றேன். இயற்கையின் சட்டங்களினாலும், மானிட இயற்கையின் பரிணாமம் மற்றும் மானிட ஒழுக்கச் சுதந்தரத்தினாலும் அவரால் செய்யப்படக் கூடியவற்றில் அவர் எல்லைக்குட்பட்டவராக உள்ளார். [பக்கம் 134]

கிறிஸ்துவம்

ஜீஸஸ் இன்று உயிருடன் திரும்பி வந்தால், கிறிஸ்துவர்களே அவரைச் சிலுவையிலறைந்து விடுவார்கள். இன்றையக் கிறிஸ்துவத்துடன் ஜீஸஸுக்கு எந்தச் சம்பந்தமும் இல்லை, அத்துடன் அதன் மதக்கோட்பாடு,துர்பிரசித்தி பெற்ற நைசீன் மாநாடுகளில் (கி.பி.325] அதீதமாகச் சீர்கெடுக்கப்பட்டு விட்டது என்பதில் பிரபலமான கிறிஸ்துவ அறிஞர்கள் உறுதியான தீர்மானங்களை அடைந்துள்ளனர். 1977-ல் ஃபிலடெல்ஃபியாவின், வெஸ்ட்மினிஸ்டர் பதிப்பகம் வெளியிட்ட THE MYTH OF GOD INCARNATE [கடவுளின் அவதாரம் எனும் கட்டுக்கதை) எனும் புத்தகத்தைப் பார்க்கவும்.

இஸ்லாம்

முஹம்மத் இந்த உலகத்திற்கு திரும்பி வந்தால் “முஸ்லிம்கள்” அவரைக் கல்லால் அடித்துக் கொன்று விடுவார்கள்.இன்று அவர்கள் பின்பற்றுகின்ற மார்க்கத்திற்கும் ஆப்ரஹாம் மற்றும் முஹம்மத் போதித்த இஸ்லாம்.அதாவது சரணடைதலுக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை. “முஸ்லிம்கள்” செய்கின்ற ஒவ்வொன்றும் தவறானதாகும்:முதல் தூண் (வஹாதஹ்), ஸலாத் தொழுகைக்கான அழைப்பு (அதான்), அங்கசுத்தி (உளு], அன்றாட ஸலாத் தொழுகைகள், ஜகாத் தர்மம். ஹஜ், மற்றும் இஸ்லாமின் மற்ற அனைத்து அனுஷ்டானங்களும் (பார்க்க பின் இணைப்புகள் 2,13 &15).

“கடவுளால் ஒருபோதும் அங்கீகரிக்கப்படாத ஒரு மார்க்கம்” (42:21)

இஸ்லாம் [சரணடைதல்)எந்த அளவுக்கு சீர் கெடுக்கப்பட்டுள்ளது எனக் கீழ்க்கண்ட அட்டவணை எடுத்துக் காட்டுகின்றது:

❖ சீர்கேடு (புதுமை) — மீறப்பட்ட குர்ஆன் கோட்பாடுகள்

ஹதீஸ் & சுன்னா — 6:19, 38, 114; 7:1-3; 12:111; 17:46; 31:6; 45:6; 69:38-47; இன்னும் பல.

மதம் துறந்தவர் எனக் கருதுபவர் எவரையும் கொல்லுதல் — 2:256; 4:90; 10:99; 18:29; 88:21-22.

கொடூரமான குற்றவியல் நீதி முறை:

• திருடனின் கையைத் துண்டித்தல் — 5:38, 12:31.

• விபசாரம் செய்தவர்களைக் கல்லெறிந்து கொல்லுதல் — 4:25, 24:2.

• ஸலாத் தொழாதவரைக் கொல்லுதல் — 2:256, 18:29.

• நான்காவது முறை மது அருந்துபவரைக் கொல்லுதல் — 2:256, 18:29.

மாதவிடாய் பெண்கள் வழிபடுவதைத் தடுத்தல் — 2:222.

பெண்கள் வெள்ளிக்கிழமைத் தொழுகையில் கலந்துகொள்வதைத் தடுத்தல் — 62:9.

முஹம்மதை அவரது விருப்பத்திற்கு மாறாக இணைவழிபாடு செய்தல்:

• அவரை “மிக மாண்புமிகு தூதர்” என அழைத்தல் — 2:285.

• அவர் தவறிழைக்காதவர் என்று கூறுதல் — 4:79; 9:117; 17:73-74; 33:37; 40:66, 66:1; 80:1-10; 93:7.

• அவரது கல்லறையை “புனித மஸ்ஜித்” ஆக அமைத்தல் — 2:149-150.

• அவருக்குப் பரிந்துரைக்கும் அதிகாரம் உண்டு என்று கூறுதல் — 2:48, 123, 254; 6:70, 94; 7:53; 10:3; 39:44; 43:86; 74:48.

• ஒளியின் வேகத்தில் ஒரு குதிரையின் மீது வானுலகிற்கு அவர் ஏறிச் சென்று, 50 ஸலாத் தொழுகைகளைக் குறைக்குமாறு கடவுளிடம் பேசினார் என்ற நியாயப்படுத்த முடியாத கதையைப் புனைதல். ஒளியின் வேகத்தில் சென்றாலும் அவர் இன்னும் பால்வெளி மண்டலத்திற்குள்ளேயே பயணித்துக் கொண்டிருப்பார். — 17:1; 53:1-18.

• ஸலாத் தொழுகைகளிலும் அதானிலும் அவரது பெயரைச் சேர்த்தல் — 20:14; 72:18.

• இஸ்லாமின் முதல் தூணில் அவரது பெயரைச் சேர்த்தல் — 3:18; 37:35; 39:45.

முஹம்மதைக் கொடூரமானவராகச் சித்தரித்து அவமதித்தல்:

• அவர் மக்களின் கண்களைப் பறித்தார் என்று கூறுதல் — 3:159, 68:4.

• அவருக்கு 30 ஆண்களின் பாலியல் சக்தி இருந்தது என்று கூறுதல் — 18:110; 25:20.

ஜீஸஸ் மீண்டும் இவ்வுலகிற்கு வருவார் எனப் போதித்து, முஹம்மத்தான் இறுதி நபி என்ற உண்மையை மறுத்தல். இது ஜீஸஸை இறுதி நபியாக்குகின்றது. — 33:40.

முஹம்மத் எழுத்தறிவற்றவர், அறிவற்றவர் என்று கூறுதல். — பார்க்க பின் இணைப்பு 28.

ஏராளமான தடைகளுடன் கூடிய ஒரு விநோதமான உணவு முறை — 6:145-150; 16:115-116.

புனித மாதங்களை மாற்றியமைத்தல் — 9:37.

ஜகாத் தர்மத்தைச் சிதைத்துப் புறக்கணித்தல் — 6:141, பின் இணைப்பு 15.

பெண்களை ஒடுக்கி, தலையை மறைக்கும் ஆடைகளையும் நியாயமற்ற ஆடைகளையும் அணியக் கட்டாயப்படுத்தி, திருமணம், விவாகரத்து, வாரிசுரிமை உட்பட அனைத்து உரிமைகளையும் பறித்தல் — 2:228; 3:195; 4:19, 32; 9:71.

ஒரு குரங்கு, நாய் அல்லது பெண் தொழுபவருக்கு முன்னால் கடந்து சென்றால் அவரது தொழுகை செல்லாது (ஹதீஸ்) என நிறுவி பெண்களை அவமதித்தல்.

அங்கசுத்தி முதல் தொழுகை, உறங்குதல், நகம் வெட்டுதல் வரை ஏராளமான விதிகளைப் புனைதல் — 2:67-71; 5:101; 42:21.

ஆண்களுக்குத் தங்கம் மற்றும் பட்டைத் தடை செய்தல் — 5:48-49; 7:31-32.

இசை மற்றும் கலைகளைத் தடை செய்தல் — 7:32; 34:13; 42:21.

பூமி ஒரு பிரம்மாண்ட திமிங்கிலத்தின் மேல் கட்டப்பட்டுள்ளது எனக் கூறி இஸ்லாமைக் கேலி செய்தல் — (79:30; இப்னு கஸீர், கி.பி. 1200 & பென் பாஸ், கி.பி. 1975).

அது ஓர் அன்றாட அடிப்படையில் “முஸ்லிம்களால் இழைக்கப்படுகின்ற சட்டமீறல்களின் ஒரு மிகச்சிறிய எடுத்துக்காட்டு மட்டுமேயாகும். இதன் காரணமாகத்தான் கடவுள் தன்னுடைய உடன்படிக்கைத் தூதரை இப்போது அனுப்பியுள்ளார்.

📖குர்ஆன் படிக்ககுர்ஆன்