ஒரு திருடன் உங்களிடமிருந்து ஓர் ஆயிரம் ரூபாயைத் திருடிவிடுகின்றான். உடனே அவர்கள் அவனைச் சிறையிலிட்டு விட்டால் உங்களுக்கு என்ன கிடைக்கும்? அத்திருடன் ஒரு மனைவியையும் பிள்ளைகளையும் கொண்டிருந்தால், அவர்களுடைய குற்றம் என்ன? அவர்கள் ஏன் தந்தையை இழந்தவர்களாக இருக்க வேண்டும்? இந்தப் பிரச்சனையையும், அவ்வண்ணமே இன்றைய உலகில் நிலவுகின்ற குற்றவியல் நீதிமுறையுடன் தொடர்பு கொண்ட பிரச்சனைகளையும் இக்குர்ஆன் தீர்த்து வைக்கின்றது.
சமநீதியே சட்டம் ஆகும் (2:178-179)
இக்குர்ஆனுடைய குற்றவியல் நீதிமுறையின் படி, உங்களிடம் இருந்து ஓர் ஆயிரம் ரூபாயைத் திருடியதாக குற்றம் நிரூபிக்கப்பட்டவர் நீங்கள் இழந்த அந்த ஆயிரம் ரூபாய்க்கும், அத்துடன் அத்திருட்டு உங்களுக்கு உண்டாக்கி இருக்கக் கூடிய வேறு எந்த நஷ்டத்திற்கு அசௌகரியத்திற்கும், நீங்கள் முழுமையாகச் செலுத்தப்படுகின்ற வரை உங்களுக்காகப் பணி செய்தல் வேண்டும். அதே நேரத்தில், அத்திருடனின் குற்றமற்ற மனைவியும் பிள்ளைகளும் அவர்களுடைய குடும்பத்தலைவனை இழந்தவர்களாக இருப்பதில்லை, அத்துடன் செலவு மிகுந்த சிறைச்சாலை அமைப்பும் நீக்கப்பட்டு விடுகின்றது. சிறையிலடைத்தல், சம்பந்தப்பட்டவர்கள் அனைவருக்கும் பயனற்றதென நிரூபிக்கப்பட்டுள்ள ஒரு கொடூரமான, மேலும் மனிதத்தன்மையற்ற தண்டனையாக உள்ளது.
பொதுவான நம்பிக்கைக்கு மாற்றமாக, திருடனின் கை வெட்டி எடுக்கப்படக் கூடாது.அவருடைய கருணைக்காகவும் இக்குர்ஆனில் உள்ள அவருடைய கணித அற்புதத்திற்காகவும் கடவுளுக்கு நன்றி செலுத்துவோமாக, திருடனின் கை அடையாளமிடப்பட வேண்டும் என்பதை இப்போது நாம் அறிந்திருக்கின்றோம்.திருடனின் கை அடையாளமிடப்படுவது 5:38-ல் கூறப்படுகின்றது. இந்த சூரா மற்றும் வசனத்தின் எண்கள் கூட்டப்பட வருவது 5+38=43. இக்குர்ஆனில் “கை வெட்டப்படுகின்ற” மற்றொரு இடம் 12:31-ல் காணப்படுகின்றது. இங்குதான் தங்கள் கைகளை “வெட்டிக் கொள்ளும்” அளவுக்கு, ஜோஸஃபை வியந்த பெண்களை நாம் காண்கின்றோம். கண்கூடாக, அவர்கள் தங்களுடைய கைகளைத் துண்டாக்கிக் கொள்ளவில்லை; எவர் ஒருவரும் அதனைச் செய்ய இயலாது. அந்த சூரா மற்றும் வசனத்தின் எண்கள் கூட்டப்பட வருவது 12+31-43,5:38-ல் உள்ளது போன்ற அதே கூட்டுத்தொகை. இக்குர்ஆனின் சட்டம் திருடனின் கையில் அடையாளமிடுவதைத்தான் ஆதரிக்கின்றது. அதனைத் துண்டாக்குவதை அல்ல என்பதற்கான கணிதரீதியான ஆதாரத்தை இது தருகின்றது. கூடுதலான கணிதரீதியான ஆதாரமும் வழங்கப்படுகின்றது: 12:31-க்கு 19 வசனங்களுக்குப் பின்னர், “கையை வெட்டிக் கொள்ளுதலை “நாம் மீண்டும் காண்கின்றோம். இஸ்லாமில் (சரணடைதல்] தண்டனையானது சமநீதி மற்றும் சமூக நிர்ப்பந்தத்தின் அடிப்படையில் ஆனது (2:178,5:38,24:2).
“ஹதீஸ் & சுன்னா” என்றழைக்கப்படுகின்ற இறைநிந்தனையானது திருமணமானபின் விபசாரம் புரிகின்றவர்களுக்குரிய தண்டனையாக கல்லால் அடித்துக் கொல்வதை நிறுவியுள்ளது. இது கடவுளின் சட்டம் அல்ல.24:2-ல் கூறப்பட்டுள்ளபடி, விபசாரத்திற்குரிய தண்டனையாவது பகிரங்கமாகச் சாட்டையால் அடிப்பதாகும்: அடையாளபூர்வமான ஒரு நூறு சாட்டையடிகள். மேலே குறிப்பிட்டுள்ளபடி, அடிப்படைத் தண்டனையாவது சமூக நிர்ப்பந்தம் மற்றும் குற்றவாளியை அவமானப்படுத்துவதுமேயாகும். பகிரங்கமாகச் சாட்டையாலடித்தல் இந்தக் குறிக்கோளை நிறைவேற்றுகின்றது.
கொலைக்கான நடவடிக்கையில், இக்குர்ஆள் நிச்சயமாக மரண தண்டனையை ஊக்குவிக்கவில்லை [2:179). “சுதந்திரமானவருக்கு சுதந்திரமானவர். அடிமைக்கு அடிமை, பெண்ணுக்குப் பெண்” [2:178). மானிட அற்பத்தனத்தினாலும் அநீதத்தினாலும் ஏராளமான மக்கள் இந்தக் குர்ஆனியச் சட்டம் கூறுவது என்ன என்பதைக் கற்பனை கூடச் செய்ய இயலாமல் இருக்கின்றனர். கண்டிப்பான சமநீதி கடைப்பிடிக்கப்பட வேண்டுமென்று இத்தெளிவான உத்தரவினை அவர்கள் ஏற்றுக்கொள்ள மறுக்கின்றனர். ஒரு பெண் ஓர் ஆணைக் கொன்றாலோ, அல்லது ஓர் ஆண் ஒரு பெண்ணைக் கொன்றாலோ, அல்லது ஓர் அடிமை சுதந்திரமான ஒரு நபரைக் கொன்றாலோ, அல்லது சுதந்திரமான ஒரு நபர் ஓர் அடிமையைக் கொன்றாலோ, மரண தண்டனை பிரயோகிக்கப்பட இயலாது. கொலையாளி பலியானவரின் குடும்பத்திற்கு நஷ்ட ஈடு செய்வதையே இக்குர்ஆன் தேர்ந்தெடுக்கின்றது. கொலையாளியைக் கொன்று விடுதல் பலியானவரைத் திரும்பக் கொண்டு வருவதில்லை, அன்றி கொலையாளிக்கு மரணதண்டனை அளிப்பதன் மூலம் பலியானவரின் குடும்பத்தார் பலனடைவதுமில்லை. நஷ்டஈடானது, எப்படியிருப்பினும், மற்றவர்களுக்கு ஓர் அச்சுறுத்தலாக இருக்கப் போதுமான அளவுக்கு அமைய வேண்டும். இஸ்லாமில் (சரணடைதல்), பலியானவர் மற்றும்/அல்லது பலியானவரின் குடும்பத்தாரே அனைத்துக் குற்றங்களுக்கும் நீதிபதிகளாக உள்ளனர்: அவர்கள் குர்ஆனை அறிந்திருக்கின்ற ஒரு நபருடைய மேற்பார்வையின் கீழ் தண்டனை என்னவாக இருக்க வேண்டும் என்பதைத் தீர்மானிப்பார்கள்.