Kadavulmattum.orgகுர்ஆன் · அனைத்து 114 அத்தியாயங்கள்

17. பனீ இஸ்ராயீல் (இஸ்ரவேலின் சந்ததியர்)

الإسراء · 111 வசனங்கள் · மக்காவில் அருளப்பட்டது

செயலியில் வாசிக்க

‹ அத்தியாயம் 16அத்தியாயம் 18 ›
17:1

سُبحٰنَ الَّذى أَسرىٰ بِعَبدِهِ لَيلًا مِنَ المَسجِدِ الحَرامِ إِلَى المَسجِدِ الأَقصَا الَّذى بٰرَكنا حَولَهُ لِنُرِيَهُ مِن ءايٰتِنا إِنَّهُ هُوَ السَّميعُ البَصيرُ

நம்முடைய அத்தாட்சிகளில் சிலவற்றை அவருக்குக் காட்டுவதற்காக, (மக்காவின்) புனிதப்பள்ளியில் இருந்து, அதன் சுற்றுப்புறங்களை நாம் ஆசீர்வதித்திருக்கின்ற அந்தத் தொலைவிலுள்ள சிரம்பணியும் இடத்திற்கு,* இரவுப் பொழுதில் தன் ஊழியரை (முஹம்மத்) வரவழைத்த அவர் மிகவும் துதிப்பிற்குரியவர். அவர் செவியேற்பவர், பார்ப்பவர்.

17:2

وَءاتَينا موسَى الكِتٰبَ وَجَعَلنٰهُ هُدًى لِبَنى إِسرٰءيلَ أَلّا تَتَّخِذوا مِن دونى وَكيلًا

அது போலவே, மோஸஸுக்கு நாம் வேதத்தைக் கொடுத்தோம், மேலும் அதனை இஸ்ரேலின் சந்ததியினருக்கு, ஒரு கலங்கரை விளக்காகவும் ஆக்கினோம்: என்னுடன் எந்த போலித் தெய்வத்தையும் நீங்கள் எஜமானனாகவோ அதிபதியாகவோ அமைத்துக்கொள்ள வேண்டாம்.

17:3

ذُرِّيَّةَ مَن حَمَلنا مَعَ نوحٍ إِنَّهُ كانَ عَبدًا شَكورًا

அவர்கள் நோவாவோடு நாம் சுமந்து சென்றோரின் சந்ததியினர்; அவர் நன்றியுள்ள ஒரு ஊழியராக இருந்தார்.

17:4

وَقَضَينا إِلىٰ بَنى إِسرٰءيلَ فِى الكِتٰبِ لَتُفسِدُنَّ فِى الأَرضِ مَرَّتَينِ وَلَتَعلُنَّ عُلُوًّا كَبيرًا

இஸ்ரவேலின் சந்ததியினரிடம் வேதத்தில் நாம் உரைத்தோம்: நீங்கள் பூமியில், இருமுறை மிகப்பெரும் அக்கிரமம் செய்வீர்கள். ஆணவத்தின் உயர் உச்சங்களில் வீழ்ந்திடவேண்டும் என்று நீங்கள் விதிக்கப்பட்டுள்ளீர்கள்.

17:5

فَإِذا جاءَ وَعدُ أولىٰهُما بَعَثنا عَلَيكُم عِبادًا لَنا أُولى بَأسٍ شَديدٍ فَجاسوا خِلٰلَ الدِّيارِ وَكانَ وَعدًا مَفعولًا

முதல் முறை நிகழும் பொழுது, மிகவும் பலம் வாய்ந்த நம்முடைய ஊழியர்களை உங்களுக்கெதிராக நாம் அனுப்புவோம், அவர்கள் உங்களுடைய வீடுகள் மீது படையெடுப்பார்கள். இது நிகழ்ந்தே தீர வேண்டிய ஒரு முன்னறிவிப்பாகும்.

17:6

ثُمَّ رَدَدنا لَكُمُ الكَرَّةَ عَلَيهِم وَأَمدَدنٰكُم بِأَموٰلٍ وَبَنينَ وَجَعَلنٰكُم أَكثَرَ نَفيرًا

அதன் பின்னர், அவர்கள் மீது உங்களுக்கொரு வாய்ப்புத்தருவோம், மேலும் திரளான வளங்களையும், பிள்ளைகளையும் நாம் வழங்குவோம்; நாம் உங்களுக்கு மேன்மையைத் தருவோம்.

17:7

إِن أَحسَنتُم أَحسَنتُم لِأَنفُسِكُم وَإِن أَسَأتُم فَلَها فَإِذا جاءَ وَعدُ الـٔاخِرَةِ لِيَسـٔوا وُجوهَكُم وَلِيَدخُلُوا المَسجِدَ كَما دَخَلوهُ أَوَّلَ مَرَّةٍ وَلِيُتَبِّروا ما عَلَوا تَتبيرًا

நீங்கள் நன்மைகள் செய்தால், உங்கள் சொந்த நலனுக்கே நீங்கள் நன்மைகள் செய்து கொள்கின்றீர்கள், ஆனால் நீங்கள் தீமைகள் செய்தால் உங்களுக்கே கேடாகத்தான் அவ்வாறு நீங்கள் செய்கின்றீர்கள். இவ்விதமாக, இரண்டாவது முறை நிகழ்ந்தேறும் பொழுது, அவர்கள் உங்களைத் தோற்கடிப்பார்கள், மேலும் முதல் முறை அவர்கள் செய்ததைப் போலவே, பள்ளிக்குள் நுழைவார்கள். நீங்கள் சேகரித்த இலாபங்கள் அனைத்தையும் அவர்கள் துடைத்தெடுத்துவிடுவார்கள்.

17:8

عَسىٰ رَبُّكُم أَن يَرحَمَكُم وَإِن عُدتُم عُدنا وَجَعَلنا جَهَنَّمَ لِلكٰفِرينَ حَصيرًا

உங்கள் இரட்சகர் உங்கள் மீது தன் கருணையைப் பொழிகின்றார். ஆனால் நீங்கள் வரம்புமீறலுக்குத் திரும்பிவிட்டால், தண்டனையைக் கொண்டு நாம் எதிர்கொள்வோம். நம்பமறுப்பவர்களுக்கான இறுதித் தங்குமிடமாக எரிகிடங்கினை நாம் நியமித்திருக்கின்றோம்.

17:9

إِنَّ هٰذَا القُرءانَ يَهدى لِلَّتى هِىَ أَقوَمُ وَيُبَشِّرُ المُؤمِنينَ الَّذينَ يَعمَلونَ الصّٰلِحٰتِ أَنَّ لَهُم أَجرًا كَبيرًا

இந்தக் குர்ஆன் மிகச் சிறந்த பாதையை நோக்கி வழிநடத்துகின்றது, மேலும் நன்னெறியானதொரு வாழ்வு நடத்துகின்ற நம்பிக்கையாளர்களுக்கு, மகத்தானதொரு பிரதிபலனுக்கு அவர்கள் தகுமானவர்களாகிவிட்டார்கள் என்ற நற்செய்தியைக் கொண்டு வருகின்றது.

17:10

وَأَنَّ الَّذينَ لا يُؤمِنونَ بِالـٔاخِرَةِ أَعتَدنا لَهُم عَذابًا أَليمًا

மறுவுலகினை நம்பமறுப்பவர்களைப் பொறுத்த வரை, வலிமிகுந்ததொரு தண்டனையை அவர்களுக்காக நாம் தயாரித்துள்ளோம்.

17:11

وَيَدعُ الإِنسٰنُ بِالشَّرِّ دُعاءَهُ بِالخَيرِ وَكانَ الإِنسٰنُ عَجولًا

ஏதோ ஒரு நன்மைக்காக அவன் பிரார்த்திப்பதாக எண்ணிக் கொண்டு, தனக்குத் தீங்கிழைக்கக் கூடிய ஏதேனும் ஒன்றுக்காக மனிதன் அடிக்கடி பிரார்த்திக்கின்றான். மனிதன் பொறுமையற்றவனாக இருக்கின்றான்.

17:12

وَجَعَلنَا الَّيلَ وَالنَّهارَ ءايَتَينِ فَمَحَونا ءايَةَ الَّيلِ وَجَعَلنا ءايَةَ النَّهارِ مُبصِرَةً لِتَبتَغوا فَضلًا مِن رَبِّكُم وَلِتَعلَموا عَدَدَ السِّنينَ وَالحِسابَ وَكُلَّ شَىءٍ فَصَّلنٰهُ تَفصيلًا

இரவையும் பகலையும் நாம் இரண்டு அத்தாட்சிகளாக்கினோம். இரவை இருண்டதாகவும், உங்களுடைய இரட்சகரிடமிருந்து வாழ்வாதாரங்களை நீங்கள் அதில் தேடிக்கொள்ளும் பொருட்டு, பகலைப் பிரகாசமானதாகவும் நாம் ஆக்கினோம். இன்னும் உங்களுக்கு இது காலம்கணிக்கும் ஒரு வழிமுறையையும், கணக்கிடுவதற்கு ஓர் உபாயத்தையும் நிர்மாணிக்கின்றது. இவ்விதமாக நாம் ஒவ்வொன்றையும் விரிவாக விவரிக்கின்றோம்.

17:13

وَكُلَّ إِنسٰنٍ أَلزَمنٰهُ طٰئِرَهُ فى عُنُقِهِ وَنُخرِجُ لَهُ يَومَ القِيٰمَةِ كِتٰبًا يَلقىٰهُ مَنشورًا

ஒவ்வொரு மனிதனின் விதியையும் நாம் பதிவு செய்திருக்கின்றோம்; அது அவன் கழுத்தில் கட்டப்பட்டுள்ளது. உயிர்த்தெழுப்பப்படும் நாள் அன்று அவன் காணக்கூடிய ஒரு பதிவேட்டை நாம் அவனிடம் கொடுப்போம்.

17:14

اقرَأ كِتٰبَكَ كَفىٰ بِنَفسِكَ اليَومَ عَلَيكَ حَسيبًا

நீயே உன் சொந்தப் பதிவேட்டைப் படி. இன்றைய தினம், உனக்குரிய கணக்காளனாக, நீயே போதுமானவன்.

17:15

مَنِ اهتَدىٰ فَإِنَّما يَهتَدى لِنَفسِهِ وَمَن ضَلَّ فَإِنَّما يَضِلُّ عَلَيها وَلا تَزِرُ وازِرَةٌ وِزرَ أُخرىٰ وَما كُنّا مُعَذِّبينَ حَتّىٰ نَبعَثَ رَسولًا

வழிநடத்தப்பெற்றவரெல்லாம், தன் சொந்த நலனுக்காகவே வழிநடத்தப்படுகின்றார், மேலும் வழிதவறிச் செல்பவரெல்லாம் தனக்கே கேடாகத்தான் அவ்வாறு செய்கின்றார். எந்தப் பாவியும் மற்றெவருடைய பாவத்தையும் சுமக்கமாட்டான். முதலில் ஒரு தூதரை அனுப்பி வைக்காமல் ஒருபோதும் நாம் தண்டிப்பதில்லை.

17:16

وَإِذا أَرَدنا أَن نُهلِكَ قَريَةً أَمَرنا مُترَفيها فَفَسَقوا فيها فَحَقَّ عَلَيهَا القَولُ فَدَمَّرنٰها تَدميرًا

எந்தச் சமூகத்தையேனும் நாம் அழிப்பதாக இருந்தால், அதன் தலைவர்களை அங்கு ஏராளமான சீர் கேடுகளைச் செய்வதற்கு நாம் அனுமதிப்போம். தண்டனைக்கு அவர்கள் தகுதியானவுடன், அதனை முற்றிலும் நாம் அழித்துவிடுவோம்.

17:17

وَكَم أَهلَكنا مِنَ القُرونِ مِن بَعدِ نوحٍ وَكَفىٰ بِرَبِّكَ بِذُنوبِ عِبادِهِ خَبيرًا بَصيرًا

நோவாவுக்குப் பின்னர் எத்தனையோ தலைமுறையினரை நாம் அழித்திருக்கின்றோம். தன் ஊழியர்களின் பாவங்கள் மீது நடவடிக்கை எடுப்பதில் உம்முடைய இரட்சகர் மிகத்திறன் வாய்ந்தவர்; அவர் முற்றிலும் நன்கறிந்தவர், பார்ப்பவர்.

17:18

مَن كانَ يُريدُ العاجِلَةَ عَجَّلنا لَهُ فيها ما نَشاءُ لِمَن نُريدُ ثُمَّ جَعَلنا لَهُ جَهَنَّمَ يَصلىٰها مَذمومًا مَدحورًا

எவனொருவன் விரைந்தோடும் இவ்வுலகைத் தனது முன்னுரிமையாகத் தேர்ந்தெடுத்துக்கொள்கின்றானோ, அவனுக்கு நாம் கொடுக்கத் தீர்மானித்தவற்றை அவனிடம் விரைந்திடச் செய்வோம், பின்னர் அவனை எரிகிடங்கிற்கு உட்படுத்திவிடுவோம், அங்கே அவன் இழிவடைந்தவனும் தோற்கடிக்கப்பட்டவனுமாகி, நிரந்தரமாகத் துன்பப்படுவான்.

17:19

وَمَن أَرادَ الـٔاخِرَةَ وَسَعىٰ لَها سَعيَها وَهُوَ مُؤمِنٌ فَأُولٰئِكَ كانَ سَعيُهُم مَشكورًا

மறுவுலகைத் தனது முன்னுரிமையாகத் தேர்ந்தெடுத்துக் கொண்டு, நம்பிக்கை கொண்ட நிலையில், நன்னெறிகள் புரிவோரைப் பொறுத்தவரை, அவர்களுடைய முயற்சிகள் பாராட்டப்படும்.

17:20

كُلًّا نُمِدُّ هٰؤُلاءِ وَهٰؤُلاءِ مِن عَطاءِ رَبِّكَ وَما كانَ عَطاءُ رَبِّكَ مَحظورًا

அவர்கள் ஒவ்வொருவருக்கும் நாம் வழங்குகின்றோம்; அவர்களுக்கும் இவர்களுக்கும் உம்முடைய இரட்சகரின் கொடைகளில் இருந்து நாம் வழங்குகின்றோம். உம்முடைய இரட்சகரின் கொடைகள் தீர்ந்து போகாதவை.

17:21

انظُر كَيفَ فَضَّلنا بَعضَهُم عَلىٰ بَعضٍ وَلَلـٔاخِرَةُ أَكبَرُ دَرَجٰتٍ وَأَكبَرُ تَفضيلًا

சில மக்களை மற்றவர்களைவிட மேலாக (இவ்வுலகில்) நாம் எவ்வாறு தேர்ந்தெடுத்திருக்கின்றோம் என்பதைக் கவனித்துப் பார்ப்பீராக. மறுவுலகின் வேறுபாடுகள் மிகப்பெரிதானதும் மிகவும் விசேஷமானதும் ஆகும்.

17:22

لا تَجعَل مَعَ اللَّهِ إِلٰهًا ءاخَرَ فَتَقعُدَ مَذمومًا مَخذولًا

இகழப்பட்டவராகவும் அவமானமடைந்தவராகவும் நீர் ஆகிவிடாதிருக்கும் பொருட்டு, கடவுளுடன் வேறு எந்தத் தெய்வத்தையும் நீர் அமைத்துக்கொள்ள வேண்டாம்.

17:23

وَقَضىٰ رَبُّكَ أَلّا تَعبُدوا إِلّا إِيّاهُ وَبِالوٰلِدَينِ إِحسٰنًا إِمّا يَبلُغَنَّ عِندَكَ الكِبَرَ أَحَدُهُما أَو كِلاهُما فَلا تَقُل لَهُما أُفٍّ وَلا تَنهَرهُما وَقُل لَهُما قَولًا كَريمًا

அவரை அன்றி நீர் வழிபடக்கூடாதெனவும், உம்முடைய பெற்றோர்கள் கண்ணியப்படுத்தப்பட வேண்டுமெனவும் உம்முடைய இரட்சகர் விதித்துள்ளார். அவர்களில் ஒருவரோ அல்லது இருவருமோ உயிரோடிருக்கும் வரை, அவர்களை நோக்கி நீர் சே (வெறுப்பைக் காட்டும் மிகச்சிறிய செய்கை) என்று ஒருபோதும் கூறிவிட வேண்டாம், அன்றி அவர்களிடத்தில் நீர் கூச்சலிடவும் வேண்டாம், நீர் அவர்களை இணக்கத்துடன் நடத்திட வேண்டும்.

17:24

وَاخفِض لَهُما جَناحَ الذُّلِّ مِنَ الرَّحمَةِ وَقُل رَبِّ ارحَمهُما كَما رَبَّيانى صَغيرًا

மேலும் பணிவு மற்றும் கனிவின் இறக்கைகளை அவர்களுக்காகத் தாழ்த்திக் கொள்ளும், மேலும் கூறும், என் இரட்சகரே, அவர்கள் மீது கருணை கொள்வீராக, ஏனெனில் அவர்கள் குழந்தைப் பருவத்திலிருந்து என்னை வளர்த்து வந்தனர்.

17:25

رَبُّكُم أَعلَمُ بِما فى نُفوسِكُم إِن تَكونوا صٰلِحينَ فَإِنَّهُ كانَ لِلأَوّٰبينَ غَفورًا

உங்கள் இரட்சகர் உங்களுடைய உள்ளார்ந்த எண்ணங்களைப்பற்றி முற்றிலும் அறிந்திருக்கின்றார். நீங்கள் நன்னெறிகளைப் பராமரித்து வந்தால், வருந்துகின்றவர்களை அவர் மன்னிப்பவராக இருக்கின்றார்.

17:26

وَءاتِ ذَا القُربىٰ حَقَّهُ وَالمِسكينَ وَابنَ السَّبيلِ وَلا تُبَذِّر تَبذيرًا

உறவினர்களுக்கும், தேவையுடையவர்களுக்கும், ஏழைகளுக்கும், வழிப்போக்கர்களுக்கும், உரிய தர்மத்தை நீங்கள் கொடுக்க வேண்டும், ஆனால் மிதமிஞ்சியும், ஊதாரித்தனமாகவும் இருக்கக் கூடாது.

17:27

إِنَّ المُبَذِّرينَ كانوا إِخوٰنَ الشَّيٰطينِ وَكانَ الشَّيطٰنُ لِرَبِّهِ كَفورًا

ஊதாரிகள் சாத்தானிகளின் சகோதரர்கள் ஆவர், மேலும் சாத்தானோ தன் இரட்சகருக்கு நன்றியற்றவன் ஆவான்.

17:28

وَإِمّا تُعرِضَنَّ عَنهُمُ ابتِغاءَ رَحمَةٍ مِن رَبِّكَ تَرجوها فَقُل لَهُم قَولًا مَيسورًا

உம்முடைய இரட்சகரின் கருணையை நீர் தேடியவராக இருக்கும்போது, அவர்களிடமிருந்து நீர் திரும்பிக் கொள்ள நேர்ந்தாலும், மிக நல்ல முறையில் நீங்கள் அவர்களை நடத்திட வேண்டும்.

17:29

وَلا تَجعَل يَدَكَ مَغلولَةً إِلىٰ عُنُقِكَ وَلا تَبسُطها كُلَّ البَسطِ فَتَقعُدَ مَلومًا مَحسورًا

கஞ்சத்தனமாக உமது கரங்களை உமது கழுத்தில் கட்டிக்கொள்ள வேண்டாம், மூடத்தனமாக அதனைத் திறந்துவிட்டுவிடவும் வேண்டாம், பழிக்கப்பட்டவராகவும், வருத்தப்பட்டவராகவும் நீர் ஆகிவிடாதிருக்கும் பொருட்டு.

17:30

إِنَّ رَبَّكَ يَبسُطُ الرِّزقَ لِمَن يَشاءُ وَيَقدِرُ إِنَّهُ كانَ بِعِبادِهِ خَبيرًا بَصيرًا

ஏனெனில் தான் தேர்ந்தெடுக்கின்ற எவரொருவருக்கும் உம்முடைய இரட்சகர் வாழ்வாதாரத்தை அதிகரிக்கின்றார், மேலும் அதனைக் குறைக்கவும் செய்கின்றார். தன் படைப்புக்களை அவர் முற்றிலும் நன்கறிந்தவர், பார்ப்பவர்.

17:31

وَلا تَقتُلوا أَولٰدَكُم خَشيَةَ إِملٰقٍ نَحنُ نَرزُقُهُم وَإِيّاكُم إِنَّ قَتلَهُم كانَ خِطـًٔا كَبيرًا

வறுமையின் அச்சத்தினால் உங்கள் குழந்தைகளை நீங்கள் கொலை செய்ய வேண்டாம். அவர்களுக்கும், அவ்வண்ணமே உங்களுக்கும் நாமே வழங்குகின்றோம். அவர்களைக் கொல்வது மிகப்பெரும் குற்றமாகும்.

17:32

وَلا تَقرَبُوا الزِّنىٰ إِنَّهُ كانَ فٰحِشَةً وَساءَ سَبيلًا

நீங்கள் விபசாரம் செய்ய வேண்டாம்; அது மிகப் பெரியதொரு பாவம், மேலும் கெட்டதொரு நடத்தையும் ஆகும்.

17:33

وَلا تَقتُلُوا النَّفسَ الَّتى حَرَّمَ اللَّهُ إِلّا بِالحَقِّ وَمَن قُتِلَ مَظلومًا فَقَد جَعَلنا لِوَلِيِّهِ سُلطٰنًا فَلا يُسرِف فِى القَتلِ إِنَّهُ كانَ مَنصورًا

எந்த ஒரு நபரையும் நீங்கள் கொலை செய்ய வேண்டாம் - ஏனெனில் கடவுள் உயிர்களைப் புனிதமான தாக்கியிருக்கின்றார் - நீதியின் பாதையிலேயே தவிர. அநீதமாக ஒருவர் கொலை செய்யப்பட்டுவிட்டால், அப்போது நாம் அவருடைய வாரிசுக்கு நீதியை நிறைவேற்றும் அதிகாரத்தைத் தருகின்றோம். இதனால், கொலைக்குப் பழி தீர்ப்பதில் வரம்புகளை அவர் மீறவேண்டாம், அவர் உதவி செய்யப்பட்டவராக இருப்பார்.

17:34

وَلا تَقرَبوا مالَ اليَتيمِ إِلّا بِالَّتى هِىَ أَحسَنُ حَتّىٰ يَبلُغَ أَشُدَّهُ وَأَوفوا بِالعَهدِ إِنَّ العَهدَ كانَ مَسـٔولًا

அனாதைகளின் பணத்தை அவர்கள் முதிர்ச்சியை அடையும் வரை, அவர்களுடைய சொந்த நலனுக்காகவே தவிர, நீங்கள் தொட வேண்டாம். உங்களுடைய உடன்படிக்கைகளை நீங்கள் நிறைவேற்ற வேண்டும், ஏனெனில் ஓர் உடன்படிக்கை என்பது மிகப் பெரியதொரு பொறுப்பு ஆகும்.

17:35

وَأَوفُوا الكَيلَ إِذا كِلتُم وَزِنوا بِالقِسطاسِ المُستَقيمِ ذٰلِكَ خَيرٌ وَأَحسَنُ تَأويلًا

நீங்கள் வணிகம் செய்யும் போது அளவையை நிறைவாகக் கொடுக்கவும், நியாயமாக எடைபோடவும் வேண்டும். இதுவே மேலானதும் நன்னெறி மிகுந்ததும் ஆகும்.

17:36

وَلا تَقفُ ما لَيسَ لَكَ بِهِ عِلمٌ إِنَّ السَّمعَ وَالبَصَرَ وَالفُؤادَ كُلُّ أُولٰئِكَ كانَ عَنهُ مَسـٔولًا

உங்களுக்காக நீங்களே சரிபார்த்துக் கொண்டாலே அன்றி, எந்தத் தகவலையும் நீங்கள் ஏற்றுக்கொள்ள வேண்டாம். நான் உங்களுக்குக் கேட்கும் திறனையும், கண்பார்வையையும், மூளையையும் வழங்கியுள்ளேன், மேலும் அதனைப் பயன்படுத்துவதற்கு நீங்கள் பொறுப்பாகின்றீர்கள்.

17:37

وَلا تَمشِ فِى الأَرضِ مَرَحًا إِنَّكَ لَن تَخرِقَ الأَرضَ وَلَن تَبلُغَ الجِبالَ طولًا

பூமியின் மீது நீங்கள் கர்வத்துடன் நடைபோட வேண்டாம் - பூமியின் ஊடே நீங்கள் துளைபோட்டுவிட முடியாது, அன்றியும் நீங்கள் மலையைப் போல் உயர்ந்துவிடவும் முடியாது.

17:38

كُلُّ ذٰلِكَ كانَ سَيِّئُهُ عِندَ رَبِّكَ مَكروهًا

கெட்ட நடத்தை அனைத்தும் உம்முடைய இரட்சகரால் கண்டனம் செய்யப்படுகின்றது.

17:39

ذٰلِكَ مِمّا أَوحىٰ إِلَيكَ رَبُّكَ مِنَ الحِكمَةِ وَلا تَجعَل مَعَ اللَّهِ إِلٰهًا ءاخَرَ فَتُلقىٰ فى جَهَنَّمَ مَلومًا مَدحورًا

இது உம்முடைய இரட்சகர் உமக்கு உள்ளுணர்வூட்டிய ஞானத்தில் சில ஆகும். பழிக்கப்பட்டவராகவும் தோற்கடிக்கப்பட்டவராகவும் எரிகிடங்கினை நீர் அடைந்துவிடாதிருக்கும் பொருட்டு, கடவுளுடன் மற்றொரு தெய்வத்தை நீர் அமைத்துக்கொள்ள வேண்டாம்.

17:40

أَفَأَصفىٰكُم رَبُّكُم بِالبَنينَ وَاتَّخَذَ مِنَ المَلٰئِكَةِ إِنٰثًا إِنَّكُم لَتَقولونَ قَولًا عَظيمًا

உங்கள் இரட்சகர் வானவர்களைத் தனக்கு மகள்களாகத் தந்து கொண்டு, அதே சமயம் உங்களுக்கு மகன்களைத் தந்துவிட்டாரா?! இத்தகையதொரு இறைநிந்தனையை எப்படி நீங்கள் உதிர்க்கலாம்?

17:41

وَلَقَد صَرَّفنا فى هٰذَا القُرءانِ لِيَذَّكَّروا وَما يَزيدُهُم إِلّا نُفورًا

அவர்கள் கவனத்தில் எடுத்துக்கொள்ளும் பொருட்டு, இந்தக் குர்ஆனில் (எல்லாவிதமான உதாரணங்களையும்) நாம் எடுத்துரைத்திருக்கின்றோம், ஆனால் அது அவர்களுடைய வெறுப்பைத்தான் அதிகரிக்கின்றது.

17:42

قُل لَو كانَ مَعَهُ ءالِهَةٌ كَما يَقولونَ إِذًا لَابتَغَوا إِلىٰ ذِى العَرشِ سَبيلًا

கூறுவீராக, அவர்கள் கூறுவதைப்போல், மற்றெந்தத் தெய்வங்களும் அவருடன் இருந்திருந்தால், அவர்கள் அரியாசனத்தின் உடமையாளரை வெற்றி கொள்ள முயன்றிருப்பார்கள்.

17:43

سُبحٰنَهُ وَتَعٰلىٰ عَمّا يَقولونَ عُلُوًّا كَبيرًا

அவர் துதிப்பிற்குரியவர், அவர்களுடைய கூற்றுக்களுக்கு அப்பாற்பட்டு, அவர் மிக மிக உயர்வானவர்.

17:44

تُسَبِّحُ لَهُ السَّمٰوٰتُ السَّبعُ وَالأَرضُ وَمَن فيهِنَّ وَإِن مِن شَىءٍ إِلّا يُسَبِّحُ بِحَمدِهِ وَلٰكِن لا تَفقَهونَ تَسبيحَهُم إِنَّهُ كانَ حَليمًا غَفورًا

ஏழு பிரபஞ்சங்களும், பூமியும், இன்னும் அவற்றிலுள்ள ஒவ்வொருவரும் அவரைத் துதி செய்கின்றனர். அவரைத் துதிக்காத எதுவும் அங்கில்லை, ஆனால் அவர்களுடைய துதியை நீங்கள் புரிந்து கொள்வதில்லை. அவர் கனிவானவர், மன்னிப்பவர்.

17:45

وَإِذا قَرَأتَ القُرءانَ جَعَلنا بَينَكَ وَبَينَ الَّذينَ لا يُؤمِنونَ بِالـٔاخِرَةِ حِجابًا مَستورًا

நீர் குர்ஆனைப் படிக்கும் போது, உமக்கும் மறுவுலகின் மீது நம்பிக்கை கொள்ளாதோருக்கும் இடையில் காணமுடியாததொரு தடுப்பினை நாம் அமைத்துவிடுகின்றோம்.

17:46

وَجَعَلنا عَلىٰ قُلوبِهِم أَكِنَّةً أَن يَفقَهوهُ وَفى ءاذانِهِم وَقرًا وَإِذا ذَكَرتَ رَبَّكَ فِى القُرءانِ وَحدَهُ وَلَّوا عَلىٰ أَدبٰرِهِم نُفورًا

அவர்கள் அதனைப் புரிந்து கொள்வதை விட்டுத் தடுப்பதற்காக, அவர்களுடைய மனங்களைச் சுற்றிக் கவசங்களையும், அவர்களுடைய காதுகளில் செவிட்டுத்தனத்தையும் நாம் அமைத்துவிடுகின்றோம். மேலும் குர்ஆனை மட்டும்* பயன்படுத்தி, உம்முடைய இரட்சகரைப்பற்றி நீர் உபதேசித்தால், அவர்கள் வெறுப்பினால் விரண்டோடிவிடுகின்றனர்.

17:47

نَحنُ أَعلَمُ بِما يَستَمِعونَ بِهِ إِذ يَستَمِعونَ إِلَيكَ وَإِذ هُم نَجوىٰ إِذ يَقولُ الظّٰلِمونَ إِن تَتَّبِعونَ إِلّا رَجُلًا مَسحورًا

உம்மைச் செவியேற்கும்போது அவர்கள் விளங்குவது என்ன என்பதை நாம் நன்கறிகின்றோம், மேலும் அவர்கள் இரகசியமாகச் சதிசெய்யும் போது - நம்பமறுப்பவர்கள் கூறுகின்றனர், நீங்கள் சித்த சுவாதீனமற்ற ஒரு மனிதனையே பின்பற்றுகின்றீர்கள்.

17:48

انظُر كَيفَ ضَرَبوا لَكَ الأَمثالَ فَضَلّوا فَلا يَستَطيعونَ سَبيلًا

அவர்கள் உம்மை எவ்வாறு வர்ணிக்கின்றனர் என்பதையும், எவ்வாறு இது அவர்களைப் பாதையிலிருந்து வழிதவறச் செய்கின்றது என்பதையும் கவனித்துப் பார்ப்பீராக.

17:49

وَقالوا أَءِذا كُنّا عِظٰمًا وَرُفٰتًا أَءِنّا لَمَبعوثونَ خَلقًا جَديدًا

அவர்கள் கூறினர், எலும்புகளாகவும் துண்டுகளாகவும் நாம் மாறிவிட்ட பின்னர், புதிதாக நாம் உயிர்த்தெழுப்பப்படுவோமா?!

17:50

قُل كونوا حِجارَةً أَو حَديدًا

கூறும், நீங்கள் பாறைகளாகவோ அல்லது இரும்பாகவோ மாறிவிட்ட போதிலும்.

17:51

أَو خَلقًا مِمّا يَكبُرُ فى صُدورِكُم فَسَيَقولونَ مَن يُعيدُنا قُلِ الَّذى فَطَرَكُم أَوَّلَ مَرَّةٍ فَسَيُنغِضونَ إِلَيكَ رُءوسَهُم وَيَقولونَ مَتىٰ هُوَ قُل عَسىٰ أَن يَكونَ قَريبًا

நிகழவே சாத்தியமற்றது என்று நீங்கள் கருதும் எந்த வகைப்படைப்பாக நீங்கள் மாறிவிட்ட போதிலும். அப்போது அவர்கள் கூறுவார்கள், யார் நம்மைத் திரும்பக் கொண்டு வருவார்? கூறும், முதல் தடவை உங்களைப் படைத்தாரே அந்த ஒருவர் பின்னர் அவர்கள் தங்கள் மண்டைகளை ஆட்டியவாறு கூறுவார்கள், அது எப்போது நிகழும்? கூறும், அது நீங்கள் நினைப்பதை விடவும் அருகில் இருக்கக்கூடும்.

17:52

يَومَ يَدعوكُم فَتَستَجيبونَ بِحَمدِهِ وَتَظُنّونَ إِن لَبِثتُم إِلّا قَليلًا

அவர் உங்களை அழைக்கும் அந்நாளில், அவரைப்புகழ்வதன் மூலம் நீங்கள் மறுமொழியளிப்பீர்கள், மேலும் ஒரு குறுகிய காலம்தான் இந்த வாழ்வில் நீங்கள் நிலைத்திருந்தீர்கள் என்பதை அப்போது நீங்கள் உணர்ந்து கொள்வீர்கள்.

17:53

وَقُل لِعِبادى يَقولُوا الَّتى هِىَ أَحسَنُ إِنَّ الشَّيطٰنَ يَنزَغُ بَينَهُم إِنَّ الشَّيطٰنَ كانَ لِلإِنسٰنِ عَدُوًّا مُبينًا

இயன்றவரை மிகச்சிறப்பாக ஒருவரை ஒருவர் நடத்திக்கொள்ளும்படி என் ஊழியர்களிடம் கூறுவீராக, ஏனெனில் சாத்தான் எப்போதும் அவர்களுக்கிடையில் ஒரு பிளவை உண்டாக்க முயற்சிப்பான். நிச்சயமாக, சாத்தான் மனிதர்களுடைய மிகத் தீவிரமான விரோதியாவான்.

17:54

رَبُّكُم أَعلَمُ بِكُم إِن يَشَأ يَرحَمكُم أَو إِن يَشَأ يُعَذِّبكُم وَما أَرسَلنٰكَ عَلَيهِم وَكيلًا

உங்கள் இரட்சகர் உங்களை நன்கறிவார். அவருடைய அறிவுக்கேற்ப, கருணையை உங்கள் மீது அவர் பொழியலாம், அல்லது அவர் உங்களைப் பழி தீர்க்கவும் செய்யலாம். அவர்களுடைய வழக்குரைஞராக இருப்பதற்காக உம்மை நாம் அனுப்பவில்லை.

17:55

وَرَبُّكَ أَعلَمُ بِمَن فِى السَّمٰوٰتِ وَالأَرضِ وَلَقَد فَضَّلنا بَعضَ النَّبِيّـۧنَ عَلىٰ بَعضٍ وَءاتَينا داوۥدَ زَبورًا

உம்முடைய இரட்சகர் வானங்களிலும் பூமியிலும் உள்ள ஒவ்வொருவரையும் நன்கறிந்தவர். இந்த அறிவிற்கேற்ப சில நபிமார்களை மற்றவர்களை விட மேலாக நாம் தேர்ந்தெடுத்தோம். உதாரணத்திற்கு, டேவிட்டுக்கு நாம் சங்கீதத்தைக் கொடுத்தோம்.

17:56

قُلِ ادعُوا الَّذينَ زَعَمتُم مِن دونِهِ فَلا يَملِكونَ كَشفَ الضُّرِّ عَنكُم وَلا تَحويلًا

கூறும், அவருடன் நீங்கள் அமைத்துக் கொண்ட போலித்தெய்வங்கள் எதை வேண்டுமானாலும் இறைஞ்சிக் கொள்ளுங்கள். உங்கள் துன்பங்களை நிவர்த்திக்கும் சக்தி எதுவும் அவர்களுக்கு இல்லை, அன்றியும் அவர்களால் அவற்றைத் தடுத்துவிடவும் முடியாது.

17:57

أُولٰئِكَ الَّذينَ يَدعونَ يَبتَغونَ إِلىٰ رَبِّهِمُ الوَسيلَةَ أَيُّهُم أَقرَبُ وَيَرجونَ رَحمَتَهُ وَيَخافونَ عَذابَهُ إِنَّ عَذابَ رَبِّكَ كانَ مَحذورًا

அவர்கள் இறைஞ்சுகின்ற போலித் தெய்வங்கள் கூட தங்களுடைய இரட்சகரின் பால் வழிகளையும் உபாயங்களையும் தேடிக் கொண்டிருக்கின்றனர். அவருடைய கருணைக்காக அவர்கள் பிரார்த்திக்கின்றனர், மேலும் அவருடைய தண்டனையை அஞ்சுகின்றனர். நிச்சயமாக, உம்முடைய இரட்சகரின் தண்டனை, அச்சமூட்டுவதாகவே உள்ளது.

17:58

وَإِن مِن قَريَةٍ إِلّا نَحنُ مُهلِكوها قَبلَ يَومِ القِيٰمَةِ أَو مُعَذِّبوها عَذابًا شَديدًا كانَ ذٰلِكَ فِى الكِتٰبِ مَسطورًا

உயிர்த்தெழுப்பப்படும் நாளுக்கு முன்னர் நம்மால் அழிக்கப்பட இல்லாத, அல்லது கடும் தண்டனைக்கு அவர்கள் உட்படுத்தப்படாத எந்த ஒரு சமுதாயமும் இல்லை. இது முன்னரே புத்தகத்தில் எழுதப்பட்டுள்ளது.

17:59

وَما مَنَعَنا أَن نُرسِلَ بِالـٔايٰتِ إِلّا أَن كَذَّبَ بِهَا الأَوَّلونَ وَءاتَينا ثَمودَ النّاقَةَ مُبصِرَةً فَظَلَموا بِها وَما نُرسِلُ بِالـٔايٰتِ إِلّا تَخويفًا

அற்புதங்களை அனுப்புவதிலிருந்து நம்மைத் தடுத்தது என்னவெனில், முந்திய தலைமுறையினர் அவற்றை ஏற்றுக்கொள்ள மறுத்துவிட்டனர் என்பதுதான். உதாரணமாக, தமூதுக்கு ஓர் ஒட்டகத்தை நாம் காட்டினோம். ஆழ்ந்த ஓர் (அற்புதம்), ஆனால் அவர்கள் அதற்கெதிராக வரம்புமீறினர். பக்தியை ஊட்டுவதற்காக மட்டுமே நாம் அற்புதங்களை அனுப்பினோம்.

17:60

وَإِذ قُلنا لَكَ إِنَّ رَبَّكَ أَحاطَ بِالنّاسِ وَما جَعَلنَا الرُّءيَا الَّتى أَرَينٰكَ إِلّا فِتنَةً لِلنّاسِ وَالشَّجَرَةَ المَلعونَةَ فِى القُرءانِ وَنُخَوِّفُهُم فَما يَزيدُهُم إِلّا طُغيٰنًا كَبيرًا

உம்முடைய இரட்சகர் மனிதர்களை முற்றிலும் கட்டுப்படுத்துகின்றார் என்பதை உமக்கு நாம் தெரியப்படுத்தினோம், மேலும் நாம் உமக்குக் காட்டிய காட்சியையும், குர்ஆனில்* சபிக்கப்பட்டுள்ள அந்த மரத்தையும் மனிதர்களுக்கு ஒரு சோதனையாக நாம் ஆக்கினோம். அவர்களுக்குப் பக்தியை ஊட்டுவதற்காக உறுதியான சான்றுகளை அவர்களுக்கு நாம் காட்டினோம், ஆனால் இது அவர்களுடைய எதிர்ப்பைத்தான் அதிகரித்தது.

17:61

وَإِذ قُلنا لِلمَلٰئِكَةِ اسجُدوا لِـٔادَمَ فَسَجَدوا إِلّا إِبليسَ قالَ ءَأَسجُدُ لِمَن خَلَقتَ طينًا

வானவர்களிடம் நாம் ஆதமின் முன் சிரம்பணியுங்கள், என்று கூறிய போது, அவர்கள் சிரம் பணிந்தனர், சாத்தானைத் தவிர. அவன் கூறினான், நீர் சேற்றால் படைத்த ஒருவருக்கு நான் சிரம்பணிய வேண்டுமா?

17:62

قالَ أَرَءَيتَكَ هٰذَا الَّذى كَرَّمتَ عَلَىَّ لَئِن أَخَّرتَنِ إِلىٰ يَومِ القِيٰمَةِ لَأَحتَنِكَنَّ ذُرِّيَّتَهُ إِلّا قَليلًا

அவன் கூறினான், எனக்கும் மேலாக அவரை நீர் கௌரவப்படுத்தியதால், உயிர்த்தெழுப்பப்படும் நாள் வரை எனக்கு நீர் அவகாசம் அளிப்பீராயின், அவருடைய சந்ததியினர் அனைவரையும் நான் கைப்பற்றிவிடுவேன், ஒரு சிலரைத் தவிர.

17:63

قالَ اذهَب فَمَن تَبِعَكَ مِنهُم فَإِنَّ جَهَنَّمَ جَزاؤُكُم جَزاءً مَوفورًا

அவர் கூறினார், அப்படியென்றால் சென்றுவிடு; நீயும் உன்னைப் பின்பற்றியவர்களும் உங்களுக்குரிய கூலியாக நரகத்தைச் சென்றடைவீர்கள்; ஒரு நியாயமான கூலி.

17:64

وَاستَفزِز مَنِ استَطَعتَ مِنهُم بِصَوتِكَ وَأَجلِب عَلَيهِم بِخَيلِكَ وَرَجِلِكَ وَشارِكهُم فِى الأَموٰلِ وَالأَولٰدِ وَعِدهُم وَما يَعِدُهُمُ الشَّيطٰنُ إِلّا غُرورًا

உனது குரலைக் கொண்டு நீ அவர்களை வசீகரிக்கலாம், மேலும் அவர்களுக்கெதிராக உனது படை பலம் அனைத்தையும் உனது ஆட்கள் அனைவரையும் ஒன்று திரட்டிக்கொள், மேலும் அவர்களுடைய பணத்திலும் பிள்ளைகளிலும் பங்கு பெற்றுக்கொள், மேலும் அவர்களுக்கு வாக்குறுதி கொடு. சாத்தான் வாக்களிக்கும் எந்த ஒன்றும் ஒரு மாயையைக் காட்டிலும் அதிகம் எதுவுமில்லை.

17:65

إِنَّ عِبادى لَيسَ لَكَ عَلَيهِم سُلطٰنٌ وَكَفىٰ بِرَبِّكَ وَكيلًا

எனது ஊழியர்களைப் பொறுத்த வரை, அவர்கள் மீது உனக்கு ஆதிக்கம் எதுவுமில்லை. பொறுப்பேற்றுக்கொள்ள உம்முடைய இரட்சகர் போதுமானவர்.

17:66

رَبُّكُمُ الَّذى يُزجى لَكُمُ الفُلكَ فِى البَحرِ لِتَبتَغوا مِن فَضلِهِ إِنَّهُ كانَ بِكُم رَحيمًا

உம்முடைய இரட்சகர்தான் அவருடைய அருட்கொடைகளை நீங்கள் தேடிக்கொள்ளும் பொருட்டு, பெருங்கடலில்* கப்பல்களை மிதக்குமாறு செய்தவர். அவர் உங்கள்பால் மிக்க கருணை கொண்டவராக இருக்கின்றார்.

17:67

وَإِذا مَسَّكُمُ الضُّرُّ فِى البَحرِ ضَلَّ مَن تَدعونَ إِلّا إِيّاهُ فَلَمّا نَجّىٰكُم إِلَى البَرِّ أَعرَضتُم وَكانَ الإِنسٰنُ كَفورًا

நடுக்கடலில் நீங்கள் கஷ்டத்தில் சிக்கிக் கொண்டால், நீங்கள் உங்களுடைய போலித் தெய்வங்களை மறந்துவிடுகின்றீர்கள், மேலும் கலப்பற்றவாறு அவரை மட்டுமே இறைஞ்சுகின்றீர்கள். ஆனால் அவர் உங்களைக் காப்பாற்றிக் கரை சேர்த்துவிட்ட உடன், நீங்கள் மீண்டும் உங்கள் பழைய நிலைக்குத் திரும்பிவிடுகின்றீர்கள். உண்மையில், மனிதன் நன்றி கெட்டவனாக இருக்கின்றான்.

17:68

أَفَأَمِنتُم أَن يَخسِفَ بِكُم جانِبَ البَرِّ أَو يُرسِلَ عَلَيكُم حاصِبًا ثُمَّ لا تَجِدوا لَكُم وَكيلًا

கரையின் மேல், பூமி உங்களை விழுங்கிவிடுமாறு அவர் செய்துவிடமாட்டார் என்று நீங்கள் உத்தரவாதம் கொண்டிருக்கின்றீர்களா? அல்லது, உங்கள் மீது ஒரு சூறைக்காற்றை அனுப்பி, பாதுகாப்பவர் எவரையும் நீங்கள் காணாதபடி அவர் ஆக்கிவிடமாட்டார் என்று?

17:69

أَم أَمِنتُم أَن يُعيدَكُم فيهِ تارَةً أُخرىٰ فَيُرسِلَ عَلَيكُم قاصِفًا مِنَ الرّيحِ فَيُغرِقَكُم بِما كَفَرتُم ثُمَّ لا تَجِدوا لَكُم عَلَينا بِهِ تَبيعًا

இன்னொரு முறை அவர் உங்களைக் கடலுக்குத் திருப்பி, பின்னர் உங்களுடைய நம்பமறுத்தலின் காரணமாக உங்களை மூழ்கடித்துவிடக் கூடிய ஒரு புயல் காற்றை அனுப்பிவிடமாட்டார் என்று நீங்கள் உத்தரவாதம் கொண்டிருக்கின்றீர்களா? இது நிகழ்ந்துவிட்டால், மற்றுமொரு வாய்ப்பை உங்களுக்கு நாம் தர மாட்டோம்.

17:70

وَلَقَد كَرَّمنا بَنى ءادَمَ وَحَمَلنٰهُم فِى البَرِّ وَالبَحرِ وَرَزَقنٰهُم مِنَ الطَّيِّبٰتِ وَفَضَّلنٰهُم عَلىٰ كَثيرٍ مِمَّن خَلَقنا تَفضيلًا

ஆதமின் சந்ததியினரை நாம் கௌரவப்படுத்தினோம், மேலும் கரையிலும் கடலிலும் அவர்களுக்குச் சவாரிகளை வழங்கினோம். நல்ல வாழ்வாதாரங்களை அவர்களுக்கு நாம் வழங்கினோம், மேலும் நமது படைப்பினங்கள் பலவற்றை விட அவர்களுக்கு மிகப்பெரும் மேன்மைகளை நாம் தந்தோம்.

17:71

يَومَ نَدعوا كُلَّ أُناسٍ بِإِمٰمِهِم فَمَن أوتِىَ كِتٰبَهُ بِيَمينِهِ فَأُولٰئِكَ يَقرَءونَ كِتٰبَهُم وَلا يُظلَمونَ فَتيلًا

ஒவ்வொரு சமூகத்தினரையும் அவர்களுடைய பதிவேடுகளுடன் நாம் வரவழைக்கும் அந்நாள் வரும். நன்னெறியின் பதிவேடு கொடுக்கப்பட்டோரைப் பொறுத்த வரை, அவர்கள் தங்கள் பதிவேடுகளைப் படிப்பார்கள், மேலும் சிறிதளவு அநீதியையும் அனுபவிக்கமாட்டார்கள்.

17:72

وَمَن كانَ فى هٰذِهِ أَعمىٰ فَهُوَ فِى الـٔاخِرَةِ أَعمىٰ وَأَضَلُّ سَبيلًا

இந்த வாழ்வில் குருடர்களாக இருந்தவர்களைப் பொறுத்தவரை, மறுவுலகிலும் அவர்கள் குருடர்களாக இருப்பார்கள்; அதை விடவும் மிக மோசமாக.

17:73

وَإِن كادوا لَيَفتِنونَكَ عَنِ الَّذى أَوحَينا إِلَيكَ لِتَفتَرِىَ عَلَينا غَيرَهُ وَإِذًا لَاتَّخَذوكَ خَليلًا

நாம் உமக்குக் கொடுத்த வெளிப்பாடுகளை விட்டு அவர்கள் உம்மைக் கிட்டத்தட்டத் திருப்பிவிட்டனர். உம்மை ஒரு நண்பராகக் கருதிக் கொள்வதற்காக, வேறு எதையாவது நீர் புனைந்து கூற வேண்டுமென்று அவர்கள் விரும்பினர்.

17:74

وَلَولا أَن ثَبَّتنٰكَ لَقَد كِدتَ تَركَنُ إِلَيهِم شَيـًٔا قَليلًا

உம்மை நாம் பலப்படுத்தி இருக்காவிட்டால், நீர் கிட்டத்தட்ட சற்றேனும் அவர்கள் பக்கம் சாய்ந்திருக்கக் கூடும்.

17:75

إِذًا لَأَذَقنٰكَ ضِعفَ الحَيوٰةِ وَضِعفَ المَماتِ ثُمَّ لا تَجِدُ لَكَ عَلَينا نَصيرًا

அதனை நீர் செய்திருந்தால், இந்த வாழ்விலும், மரணத்திற்குப் பின்னரும், உமது தண்டனையை நாம் இருமடங்காக ஆக்கியிருப்போம், மேலும் நமக்கெதிராக உமக்கு உதவி செய்ய எவர் ஒருவரையும் நீர் கண்டிருக்க மாட்டீர்.

17:76

وَإِن كادوا لَيَستَفِزّونَكَ مِنَ الأَرضِ لِيُخرِجوكَ مِنها وَإِذًا لا يَلبَثونَ خِلٰفَكَ إِلّا قَليلًا

உம்மைவிட்டு நீங்கிக் கொள்வதற்காக, நாட்டை விட்டுக் கிட்டத்தட்ட அவர்கள் உம்மை வெளியேற்றிவிட்டனர், நீர் விலகிச் சென்றவுடன் அவர்கள் தங்களுடைய பழைய நிலைக்குத் திரும்பிவிடலாம் என்பதற்காக.

17:77

سُنَّةَ مَن قَد أَرسَلنا قَبلَكَ مِن رُسُلِنا وَلا تَجِدُ لِسُنَّتِنا تَحويلًا

உமக்கு முன்னர் நாம் அனுப்பிய அனைத்துத் தூதர்களுக்கும், இந்த நிலைதான் தவறாது இருந்து வந்தது, மேலும் நமது வழிமுறை ஒருபோதும் மாறுவதில்லை என்பதை நீர் கண்டு கொள்வீர்.

17:78

أَقِمِ الصَّلوٰةَ لِدُلوكِ الشَّمسِ إِلىٰ غَسَقِ الَّيلِ وَقُرءانَ الفَجرِ إِنَّ قُرءانَ الفَجرِ كانَ مَشهودًا

நண்பகலில் சூரியன் அதன் உச்சியிலிருந்து சாய்ந்து அஸ்தமனத்தை நோக்கி அது நகரும் பொழுது நீர் (ஸலாத்) தொடர்புத் தொழுகையைக் கடைப்பிடிக்க வேண்டும். அதிகாலையில் நீர் குர்ஆன் (ஓதுதலை) கடைப்பிடிக்கவும் வேண்டும். அதிகாலையில் குர்ஆன் (ஓதுதல்) சாட்சி பகரப்படுகின்றது.

17:79

وَمِنَ الَّيلِ فَتَهَجَّد بِهِ نافِلَةً لَكَ عَسىٰ أَن يَبعَثَكَ رَبُّكَ مَقامًا مَحمودًا

மற்றும் மேலதிகமான நன்மைக்காக, உம்முடைய இரட்சகர் ஒரு கௌரவமான அந்தஸ்திற்கு உம்மை உயர்த்தக் கூடும் என்பதற்காக, இரவுப் பொழுதில், நீர் தியானம் செய்ய வேண்டும்.

17:80

وَقُل رَبِّ أَدخِلنى مُدخَلَ صِدقٍ وَأَخرِجنى مُخرَجَ صِدقٍ وَاجعَل لى مِن لَدُنكَ سُلطٰنًا نَصيرًا

மேலும் கூறும், என் இரட்சகரே, கௌரவமானதொரு நுழைவுடன் நுழைய என்னை அனுமதிப்பீராக, மேலும் கௌரவமானதொரு புறப்பாட்டுடன் என்னைப் புறப்பட அனுமதிப்பீராக, மேலும் உம்மிடமிருந்து சக்திமிக்கதொரு ஆதரவை எனக்கு வழங்குவீராக.

17:81

وَقُل جاءَ الحَقُّ وَزَهَقَ البٰطِلُ إِنَّ البٰطِلَ كانَ زَهوقًا

பிரகடனப்படுத்துவீராக, சத்தியம் மிகைத்துவிட்டது, மேலும் அசத்தியம் மறைந்துவிட்டது; தவிர்த்துவிட முடியாதவாறு அசத்தியம் மறைந்தேபோகும்.

17:82

وَنُنَزِّلُ مِنَ القُرءانِ ما هُوَ شِفاءٌ وَرَحمَةٌ لِلمُؤمِنينَ وَلا يَزيدُ الظّٰلِمينَ إِلّا خَسارًا

நம்பிக்கை கொண்டோருக்கு நிவாரணத்தையும் கருணையையும் இந்தக் குர்ஆனில் நாம் இறக்கி அனுப்புகின்றோம். அதே சமயம், வரம்புமீறுபவர்களின் அக்கிரமத்தைத்தான் இது அதிகரிக்கின்றது.

17:83

وَإِذا أَنعَمنا عَلَى الإِنسٰنِ أَعرَضَ وَنَـٔا بِجانِبِهِ وَإِذا مَسَّهُ الشَّرُّ كانَ يَـٔوسًا

மனிதனை நாம் ஆசீர்வதிக்கும்போது, அவன் மூழ்கிப் போனவனாகவும், கவனமற்றவனாகவும் ஆகிவிடுகின்றான். ஆனால் கஷ்டங்கள் அவனைத் தாக்கும் போது, அவன் மனச் சோர்வடைந்தவனாக மாறிவிடுகின்றான்.

17:84

قُل كُلٌّ يَعمَلُ عَلىٰ شاكِلَتِهِ فَرَبُّكُم أَعلَمُ بِمَن هُوَ أَهدىٰ سَبيلًا

கூறும், ஒவ்வொருவரும் தனது நம்பிக்கைக்கு ஏற்பவே செயல்படுகின்றார், மேலும் சரியான பாதையில் வழிநடத்தப்பட்டவர் எவர் என்பதை உங்கள் இரட்சகர் நன்கறிவார்.

17:85

وَيَسـَٔلونَكَ عَنِ الرّوحِ قُلِ الرّوحُ مِن أَمرِ رَبّى وَما أوتيتُم مِنَ العِلمِ إِلّا قَليلًا

வெளிப்பாடுகளைப் பற்றி உம்மிடம் அவர்கள் கேட்கின்றனர். கூறும், வெளிப்பாடானது என் இரட்சகரிடமிருந்து வருகின்றது. உங்களுக்குக் கொடுக்கப்பட்டிருக்கும் அறிவு சொற்பமேயாகும்.

17:86

وَلَئِن شِئنا لَنَذهَبَنَّ بِالَّذى أَوحَينا إِلَيكَ ثُمَّ لا تَجِدُ لَكَ بِهِ عَلَينا وَكيلًا

நாம் நாடினால், உமக்கு நாம் வெளிப்படுத்தியவற்றை நம்மால் திருப்பி எடுத்துக்கொள்ள முடியும், பின்னர் நமக்கெதிராகப் பாதுகாவலர் எவரையும் நீர் காணமாட்டீர்.

17:87

إِلّا رَحمَةً مِن رَبِّكَ إِنَّ فَضلَهُ كانَ عَلَيكَ كَبيرًا

இது உம் இரட்சகரிடமிருந்து கருணையே அன்றி வேறில்லை. உம்மீது அவருடைய நல்லாசிகள் மிகப் பெரிதாக உள்ளன.

17:88

قُل لَئِنِ اجتَمَعَتِ الإِنسُ وَالجِنُّ عَلىٰ أَن يَأتوا بِمِثلِ هٰذَا القُرءانِ لا يَأتونَ بِمِثلِهِ وَلَو كانَ بَعضُهُم لِبَعضٍ ظَهيرًا

கூறும், எல்லா மனிதர்களும், எல்லா ஜின்களும் இது போன்ற ஒரு குர்ஆனைக் கொண்டு வருவதற்காக ஒன்று சேர்ந்தாலும், இதைப்போன்ற எதையும் அவர்களால் ஒருபோதும் கொண்டு வர முடியாது, அவர்கள் ஒருவர் மற்றொருவருக்கு எவ்வளவு துணை செய்து கொண்டனர் என்பது பொருட்டல்ல.

17:89

وَلَقَد صَرَّفنا لِلنّاسِ فى هٰذَا القُرءانِ مِن كُلِّ مَثَلٍ فَأَبىٰ أَكثَرُ النّاسِ إِلّا كُفورًا

இந்தக் குர்ஆனில் மனிதர்களுக்காக நாம் எல்லா விதமான உதாரணங்களையும் எடுத்துரைத்திருக்கின்றோம், ஆனால் அதிகமான மனிதர்கள் நம்பமறுத்தலையே வலியுறுத்துகின்றனர்.

17:90

وَقالوا لَن نُؤمِنَ لَكَ حَتّىٰ تَفجُرَ لَنا مِنَ الأَرضِ يَنبوعًا

அவர்கள் கூறினர், பூமியிலிருந்து ஒரு நீரூற்றைப் பொங்கிவரும்படி நீர் செய்தாலன்றி உம்மை நாங்கள் நம்பமாட்டோம்.

17:91

أَو تَكونَ لَكَ جَنَّةٌ مِن نَخيلٍ وَعِنَبٍ فَتُفَجِّرَ الأَنهٰرَ خِلٰلَها تَفجيرًا

அல்லது ஆறுகள் அதன் ஊடே ஓடக்கூடிய, பேரீச்சை மற்றும் திராட்சைகள் கொண்ட ஒரு தோட்டத்தை நீர் சொந்தமாகக் கொண்டிருந்தால் அன்றி.

17:92

أَو تُسقِطَ السَّماءَ كَما زَعَمتَ عَلَينا كِسَفًا أَو تَأتِىَ بِاللَّهِ وَالمَلٰئِكَةِ قَبيلًا

அல்லது நீர் கூறிய வண்ணம், விண்ணிலிருந்து பாளங்களை எங்கள் மீது நீர் விழச் செய்தாலன்றி. அல்லது கடவுளையும் வானவர்களையும் எங்கள் கண்களின் முன்னால் கொண்டு வந்தாலன்றி.

17:93

أَو يَكونَ لَكَ بَيتٌ مِن زُخرُفٍ أَو تَرقىٰ فِى السَّماءِ وَلَن نُؤمِنَ لِرُقِيِّكَ حَتّىٰ تُنَزِّلَ عَلَينا كِتٰبًا نَقرَؤُهُ قُل سُبحانَ رَبّى هَل كُنتُ إِلّا بَشَرًا رَسولًا

அல்லது ஆடம்பரமானதோர் மாளிகையை நீர் சொந்தமாகக் கொண்டிருந்தாலன்றி, அல்லது வானத்தினுள் நீர் ஏறிச் சென்றாலன்றி. அவ்வாறு நீர் ஏறிய போதிலும், நாங்கள் படிக்கக் கூடிய ஒரு புத்தகத்தை நீர் கொண்டு வந்தாலன்றி நாங்கள் நம்பிக்கை கொள்ள மாட்டோம்.* கூறும், என் இரட்சகர் துதிப்பிற்குரியவர். நான் ஒரு மனிதத் தூதன் என்பதை விட அதிகமாக எதுவும் ஆவேனா?

17:94

وَما مَنَعَ النّاسَ أَن يُؤمِنوا إِذ جاءَهُمُ الهُدىٰ إِلّا أَن قالوا أَبَعَثَ اللَّهُ بَشَرًا رَسولًا

வழிகாட்டல் அவர்களிடம் வந்தபோது நம்பிக்கை கொள்வதிலிருந்து மனிதர்களைத் தடுத்தது என்னவென்றால், ஒரு மனிதரைத்தான் கடவுள் தூதராக அனுப்பினாரா? என்று அவர்கள் கூறியதுதான்.

17:95

قُل لَو كانَ فِى الأَرضِ مَلٰئِكَةٌ يَمشونَ مُطمَئِنّينَ لَنَزَّلنا عَلَيهِم مِنَ السَّماءِ مَلَكًا رَسولًا

கூறும், பூமியானது வானவர்கள் வசிக்கக் கூடியதாக இருந்திருந்தால், வானவரான ஒரு தூதரை விண்ணிலிருந்து நாம் அவர்களுக்கு இறக்கி அனுப்பியிருப்போம்.

17:96

قُل كَفىٰ بِاللَّهِ شَهيدًا بَينى وَبَينَكُم إِنَّهُ كانَ بِعِبادِهِ خَبيرًا بَصيرًا

கூறும், எனக்கும் உங்களுக்கும் இடையில் ஒரு சாட்சியாக இருக்கக் கடவுள் போதுமானவர். அவரை வழிபடுபவர்களை அவர் முற்றிலும் நன்கறிந்தவர், பார்ப்பவர்.

17:97

وَمَن يَهدِ اللَّهُ فَهُوَ المُهتَدِ وَمَن يُضلِل فَلَن تَجِدَ لَهُم أَولِياءَ مِن دونِهِ وَنَحشُرُهُم يَومَ القِيٰمَةِ عَلىٰ وُجوهِهِم عُميًا وَبُكمًا وَصُمًّا مَأوىٰهُم جَهَنَّمُ كُلَّما خَبَت زِدنٰهُم سَعيرًا

எவரொருவரைக் கடவுள் வழிநடத்துகின்றாரோ, அவர்தான் உண்மையில் வழிகாட்டப்பட்டவர். மேலும் எவரையெல்லாம் அவர் வழிகேட்டில் அனுப்பிவிடுகின்றாரோ, அவர்களுக்கு அவரையன்றி எஜமானர்களையும் அதிபதிகளையும் நீர் ஒருபோதும் காணமாட்டீர். உயிர்த்தெழுப்பப்படும் நாளில் வலுக்கட்டாயமாக அவர்களை நாம் ஒன்று திரட்டுவோம்; குருடர்கள், ஊமைகள், மேலும் செவிடர்கள். அவர்களுடைய சேருமிடம் நரகமேயாகும்; அதன் சூடுதணியும்போதெல்லாம், அவர்களுடைய நெருப்பை நாம் அதிகரிப்போம்.

17:98

ذٰلِكَ جَزاؤُهُم بِأَنَّهُم كَفَروا بِـٔايٰتِنا وَقالوا أَءِذا كُنّا عِظٰمًا وَرُفٰتًا أَءِنّا لَمَبعوثونَ خَلقًا جَديدًا

நமது வெளிப்பாடுகளை அவர்கள் ஏற்றுக்கொள்ள மறுத்ததால், அவர்களுக்குரிய நியாயமான தண்டனை இத்தகையதேயாகும். அவர்கள் கூறினர், எலும்புகளாகவும், துண்டுகளாகவும் நாம் மாறிய பின்னர், புதியதொரு படைப்பாக நாம் உயிர்த்தெழுப்பப்படுவோமா?

17:99

أَوَلَم يَرَوا أَنَّ اللَّهَ الَّذى خَلَقَ السَّمٰوٰتِ وَالأَرضَ قادِرٌ عَلىٰ أَن يَخلُقَ مِثلَهُم وَجَعَلَ لَهُم أَجَلًا لا رَيبَ فيهِ فَأَبَى الظّٰلِمونَ إِلّا كُفورًا

வானங்களையும், பூமியையும் படைத்த அந்தக் கடவுள் அதே போன்ற படைப்புகளைப் படைக்கும் திறனுடையவர் என்பதை அவர்களால் காண முடியவில்லையா? மாற்றமுடியாததொரு வாழ்க்கைத் தவணையை அவர்களுக்காக அவர் முன்னரே தீர்மானித்திருக்கின்றார்? இருப்பினும், நம்பமறுப்பவர்கள் நம்பமறுத்தலையே வலியுறுத்துகின்றனர்.

17:100

قُل لَو أَنتُم تَملِكونَ خَزائِنَ رَحمَةِ رَبّى إِذًا لَأَمسَكتُم خَشيَةَ الإِنفاقِ وَكانَ الإِنسٰنُ قَتورًا

பிரகடனப்படுத்துவீராக, என்னுடைய இரட்சகரின் கருணைப் பொக்கிஷங்களையே நீங்கள் சொந்தமாகக் கொண்டிருந்தாலும், அவற்றை நீங்கள் தீர்த்துவிடக்கூடும் என்று அஞ்சி, நீங்கள் அவற்றைத் தடுத்து நிறுத்திக் கொள்வீர்கள். மனிதப்படைப்பு கஞ்சத்தனம் கொண்டதாக இருக்கின்றது.

17:101

وَلَقَد ءاتَينا موسىٰ تِسعَ ءايٰتٍ بَيِّنٰتٍ فَسـَٔل بَنى إِسرٰءيلَ إِذ جاءَهُم فَقالَ لَهُ فِرعَونُ إِنّى لَأَظُنُّكَ يٰموسىٰ مَسحورًا

ஒன்பது ஆழ்ந்த அற்புதங்கள் கொண்டு மோஸஸுக்கு நாம் ஆதரவளித்தோம் - இஸ்ரேலின் சந்ததியினரைக் கேட்டுக்கொள்ளுங்கள். அவர்களிடம் அவர் சென்ற போது, ஃபேரோ அவரிடம் கூறினான், நான் நினைக்கின்றேன், மோஸஸே, நீர் சூனிய வசப்பட்டவர் என்று.

17:102

قالَ لَقَد عَلِمتَ ما أَنزَلَ هٰؤُلاءِ إِلّا رَبُّ السَّمٰوٰتِ وَالأَرضِ بَصائِرَ وَإِنّى لَأَظُنُّكَ يٰفِرعَونُ مَثبورًا

அவர் கூறினார், கண்கூடாக, வானங்கள் மற்றும் பூமியின் இரட்சகரைத் தவிர, எவராலும் இவற்றைத் தெளிவாகக்காட்ட இயலாது என்பதை நீ நன்கறிவாய். நான் நினைக்கின்றேன், ஃபேரோவே, நீ அழிந்தாய் என்று.

17:103

فَأَرادَ أَن يَستَفِزَّهُم مِنَ الأَرضِ فَأَغرَقنٰهُ وَمَن مَعَهُ جَميعًا

அவன் அவர்களை நாட்டை விட்டு வெளியே துரத்தியவாறு, அவர்களைப் பின்தொடர்ந்த போது, அவன் பக்கம் இருந்தவர்களுடன் சேர்த்து, அவனையும், அவர்கள் அனைவரையும் நாம் மூழ்கடித்தோம்.

17:104

وَقُلنا مِن بَعدِهِ لِبَنى إِسرٰءيلَ اسكُنُوا الأَرضَ فَإِذا جاءَ وَعدُ الـٔاخِرَةِ جِئنا بِكُم لَفيفًا

மேலும் அதன் பின்னர் இஸ்ரவேலின் சந்ததியினரிடம் நாம் கூறினோம், சென்று இந்த நாட்டில் வாழுங்கள். இறுதி முன்னறிவிப்பு நிகழ்ந்தேறும் போது, உங்கள் அனைவரையும் ஒரே கூட்டமாக நாம் ஒன்று திரட்டுவோம்.

17:105

وَبِالحَقِّ أَنزَلنٰهُ وَبِالحَقِّ نَزَلَ وَما أَرسَلنٰكَ إِلّا مُبَشِّرًا وَنَذيرًا

சத்தியம் நிறைந்ததாக, இதனை நாம் இறக்கி அனுப்பினோம், மேலும் சத்தியத்துடனே இது இறங்கி வந்தது. நற்செய்தியைக் கொண்டு செல்லும் ஒருவராகவும், அத்துடன் ஓர் எச்சரிப்பவராகவுமே அன்றி உம்மை நாம் அனுப்பவில்லை.

17:106

وَقُرءانًا فَرَقنٰهُ لِتَقرَأَهُ عَلَى النّاسِ عَلىٰ مُكثٍ وَنَزَّلنٰهُ تَنزيلًا

ஒரே தடவையில் இது அனைத்தையும் நாம் கீழே இறக்கிய போதிலும், மனிதர்களுக்கு ஒரு நீண்ட காலம் நீர் அதனைப் படித்துக் காட்டுவதற்கு ஏதுவாக, மெதுவாக நாம் வெளிப்படுத்திய ஒரு குர்ஆன்.

17:107

قُل ءامِنوا بِهِ أَو لا تُؤمِنوا إِنَّ الَّذينَ أوتُوا العِلمَ مِن قَبلِهِ إِذا يُتلىٰ عَلَيهِم يَخِرّونَ لِلأَذقانِ سُجَّدًا

பிரகடனப்படுத்துவீராக, இதில் நம்பிக்கை கொள்ளுங்கள், அல்லது இதில் நம்பிக்கை கொள்ளாதிருங்கள். முந்திய வேதங்களிலிருந்து அறிவைப் பெற்றவர்கள், அவர்களுக்கு இது ஓதிக்காட்டப்படும் போது, சிரம் பணிந்தவர்களாக, முகவாய்க் கட்டைகளில் அவர்கள் கீழே விழுகின்றனர்.

17:108

وَيَقولونَ سُبحٰنَ رَبِّنا إِن كانَ وَعدُ رَبِّنا لَمَفعولًا

அவர்கள் கூறுகின்றனர், எங்கள் இரட்சகர் துதிப்பிற்குரியவர். இது எங்கள் இரட்சகரின் முன்னறிவிப்பைப் பூர்த்தி செய்கின்றது.

17:109

وَيَخِرّونَ لِلأَذقانِ يَبكونَ وَيَزيدُهُم خُشوعًا

அவர்கள் சிரம் பணிந்தவர்களாகவும் தேம்பியழுதவர்களாகவும், தங்கள் முகவாய்க்கட்டைகள் மீது கீழே விழுகின்றனர். ஏனெனில் அது அவர்களுடைய பக்தியை அதிகரிக்கிறது.

17:110

قُلِ ادعُوا اللَّهَ أَوِ ادعُوا الرَّحمٰنَ أَيًّا ما تَدعوا فَلَهُ الأَسماءُ الحُسنىٰ وَلا تَجهَر بِصَلاتِكَ وَلا تُخافِت بِها وَابتَغِ بَينَ ذٰلِكَ سَبيلًا

கூறும், கடவுள் என அவரை அழையுங்கள், அல்லது மிக்க அருளாளர் என அவரை அழையுங்கள்; எந்த ஒரு பெயரை நீங்கள் பயன்படுத்தினாலும், அழகிய பெயர்கள்தான் அவருக்குரியவை. உமது (ஸலாத்) தொடர்புத் தொழுகைகளை நீர் மிகவும் சப்தமாகவோ, அன்றி இரகசியமாகவோ கூற வேண்டாம், நடுத்தரமானதொரு தொனியைப் பயன்படுத்துவீராக.

17:111

وَقُلِ الحَمدُ لِلَّهِ الَّذى لَم يَتَّخِذ وَلَدًا وَلَم يَكُن لَهُ شَريكٌ فِى المُلكِ وَلَم يَكُن لَهُ وَلِىٌّ مِنَ الذُّلِّ وَكَبِّرهُ تَكبيرًا

மேலும் பிரகடனப்படுத்துவீராக: புகழ்ச்சி கடவுளுக்குரியது, அவர் ஒருபோதும் பிள்ளை ஒன்றைப் பெற்றெடுக்கவில்லை, அன்றி அவருடைய அரசுரிமையில் அவருக்குப் பங்குதாரர்களும் இல்லை, அன்றியும் பலஹீனம் காரணமாகக் கூட்டணி எதுவும் அவருக்குத் தேவையுமில்லை, மேலும் இடைவிடாது அவரைப் பெருமைப்படுத்துவீராக.

‹ அத்தியாயம் 16அத்தியாயம் 18 ›