طس تِلكَ ءايٰتُ القُرءانِ وَكِتابٍ مُبينٍ
த. ச.* (எழுத்துக்களாகிய) இவை இந்தக் குர்ஆனின் சான்றுகளாக அமைகின்றன; ஆழ்ந்ததோர் வேதம்.
طس تِلكَ ءايٰتُ القُرءانِ وَكِتابٍ مُبينٍ
த. ச.* (எழுத்துக்களாகிய) இவை இந்தக் குர்ஆனின் சான்றுகளாக அமைகின்றன; ஆழ்ந்ததோர் வேதம்.
هُدًى وَبُشرىٰ لِلمُؤمِنينَ
நம்பிக்கையாளர்களுக்கு ஒரு கலங்கரை விளக்கு, மற்றும் நற்செய்தி ஆகும்.
الَّذينَ يُقيمونَ الصَّلوٰةَ وَيُؤتونَ الزَّكوٰةَ وَهُم بِالـٔاخِرَةِ هُم يوقِنونَ
அவர்கள் (ஸலாத்) தொடர்புத் தொழுகைகளைக் கடைப்பிடித்து, கடமையான தர்மத்தை (ஜகாத்) கொடுத்து வருபவர்கள், மேலும் அவர்கள், மறுவுலகைக் குறித்து, பரிபூரணமான உறுதியோடிருப்பார்கள்.
إِنَّ الَّذينَ لا يُؤمِنونَ بِالـٔاخِرَةِ زَيَّنّا لَهُم أَعمٰلَهُم فَهُم يَعمَهونَ
எவர்கள் மறுவுலகின் மீது நம்பிக்கை கொள்ளவில்லையோ, அவர்களுடைய செயல்களை அவர்களுடைய கண்களில் நாம் அழகானதாக ஆக்கிவிடுவோம். இவ்விதமாக, அவர்கள் பெருந்தவறுகளைத் தொடர்ந்து புரிகின்றனர்.
أُولٰئِكَ الَّذينَ لَهُم سوءُ العَذابِ وَهُم فِى الـٔاخِرَةِ هُمُ الأَخسَرونَ
மிக மோசமான தண்டனைக்குள்ளானவர்கள் இவர்கள்தான், மேலும் மறுவுலகில், மிகவும் மோசமான நஷ்டமடைந்தவர்களாக அவர்கள் இருப்பார்கள்.
وَإِنَّكَ لَتُلَقَّى القُرءانَ مِن لَدُن حَكيمٍ عَليمٍ
நிச்சயமாக, இந்தக் குர்ஆனை ஞானம் மிக்கவரும், எல்லாம் அறிந்தவருமான ஒருவரிடமிருந்தே நீர் பெறுகின்றீர்.
إِذ قالَ موسىٰ لِأَهلِهِ إِنّى ءانَستُ نارًا سَـٔاتيكُم مِنها بِخَبَرٍ أَو ءاتيكُم بِشِهابٍ قَبَسٍ لَعَلَّكُم تَصطَلونَ
மோஸஸ் தன் குடும்பத்தாரிடம் கூறியதை நினைவு கூர்வீராக, நான் ஒரு நெருப்பைக் காண்கின்றேன்; அதிலிருந்து உங்களுக்குச் செய்தியையோ, அல்லது உங்களுக்குக் கதகதப்பளிக்கும் ஒரு தீப்பந்தத்தையோ கொண்டு வருகின்றேன்.
فَلَمّا جاءَها نودِىَ أَن بورِكَ مَن فِى النّارِ وَمَن حَولَها وَسُبحٰنَ اللَّهِ رَبِّ العٰلَمينَ
அவர் அதன் அருகில் வந்தபோது, அவர் அழைக்கப்பட்டார்: நெருப்புக்குள்ளிருந்து (பேசுகின்ற) அந்த ஒருவரும், மேலும் அதனைச் சூழ்ந்திருப்பவர்களும் பாக்கியமானவர்கள். கடவுள் துதிப்பிற்குரியவர், பிரபஞ்சத்தின் இரட்சகர்.
يٰموسىٰ إِنَّهُ أَنَا اللَّهُ العَزيزُ الحَكيمُ
மோஸஸே, நான்தான், கடவுள், எல்லாம் வல்லவன், ஞானம் மிகுந்தவன்.
وَأَلقِ عَصاكَ فَلَمّا رَءاها تَهتَزُّ كَأَنَّها جانٌّ وَلّىٰ مُدبِرًا وَلَم يُعَقِّب يٰموسىٰ لا تَخَف إِنّى لا يَخافُ لَدَىَّ المُرسَلونَ
உமது கைத்தடியைக் கீழே வீசுவீராக. அது ஒரு பிசாசை போல் நகர்வதை அவர் கண்டபோது, அவர் திரும்பியடித்து ஓடினார். மோஸஸே, அச்சம் கொள்ளாதீர். என்னுடைய தூதர்கள் அச்சப்பட வேண்டியதில்லை.
إِلّا مَن ظَلَمَ ثُمَّ بَدَّلَ حُسنًا بَعدَ سوءٍ فَإِنّى غَفورٌ رَحيمٌ
ஒரு வரம்புமீறலைச் செய்தவர்களைத் தவிர, பாவம் புரிந்துவிட்ட பின்னர் நன்னெறியை மாற்றியமைத்தால்; நான் மன்னிப்பவன், மிக்க கருணையாளன்.
وَأَدخِل يَدَكَ فى جَيبِكَ تَخرُج بَيضاءَ مِن غَيرِ سوءٍ فى تِسعِ ءايٰتٍ إِلىٰ فِرعَونَ وَقَومِهِ إِنَّهُم كانوا قَومًا فٰسِقينَ
உமது சட்டைப்பைக்குள் உமது கரத்தை வைப்பீராக; ஒரு மாசுமின்றி வெண்மையாக அது வெளியில் வரும். இவை ஃபேரோவுக்கும் அவனுடைய சமூகத்தாருக்கும் ஒன்பது அற்புதங்களில் உள்ளவையாகும், ஏனெனில் அவர்கள் தீய மக்களாக இருக்கின்றனர்.
فَلَمّا جاءَتهُم ءايٰتُنا مُبصِرَةً قالوا هٰذا سِحرٌ مُبينٌ
தெளிவான மற்றும் ஆழ்ந்த நமது அற்புதங்கள் அவர்கள் முன்வைக்கப்பட்டபோது, அவர்கள் கூறினர், இது கண்கூடான மாயாஜாலமே ஆகும்.
وَجَحَدوا بِها وَاستَيقَنَتها أَنفُسُهُم ظُلمًا وَعُلُوًّا فَانظُر كَيفَ كانَ عٰقِبَةُ المُفسِدينَ
அவற்றை அவர்கள் ஏற்கமறுத்தனர், மேலும் அவர்களுடைய ஆணவத்தின் காரணத்தால், தங்களுடைய தவறான வழிகளில் முற்றிலும் உறுதியான நம்பிக்கையை அடைந்திருந்தனர். தீமை செய்தவர்களுக்கான பின்விளைவுகளைக் கவனித்துப் பார்ப்பீராக.
وَلَقَد ءاتَينا داوۥدَ وَسُلَيمٰنَ عِلمًا وَقالَا الحَمدُ لِلَّهِ الَّذى فَضَّلَنا عَلىٰ كَثيرٍ مِن عِبادِهِ المُؤمِنينَ
டேவிட்டுக்கும் ஸாலமனுக்கும் நாம் அறிவைக் கொடையளித்தோம், மேலும் அவர்கள் கூறினர், நம்பிக்கை கொண்ட தன்னுடைய ஊழியர்களில் பலரை விட அதிகமாக எங்களை ஆசீர்வதித்ததற்காக கடவுளைப் புகழுங்கள்.
وَوَرِثَ سُلَيمٰنُ داوۥدَ وَقالَ يٰأَيُّهَا النّاسُ عُلِّمنا مَنطِقَ الطَّيرِ وَأوتينا مِن كُلِّ شَىءٍ إِنَّ هٰذا لَهُوَ الفَضلُ المُبينُ
ஸாலமன் டேவிட்டின் வாரிசாக இருந்தார். அவர் கூறினார், மக்களே, பறவைகளின் மொழியைப் புரிந்து கொள்ளும் திறன் கொண்டு நாங்கள் கொடையளிக்கப்பட்டுள்ளோம், மேலும் அனைத்து விதமான பொருள்களும் எங்களுக்கு அருளப்பட்டுள்ளன. உண்மையிலேயே இது மெய்யானதொரு ஆசீர்வாதமாகும்.
وَحُشِرَ لِسُلَيمٰنَ جُنودُهُ مِنَ الجِنِّ وَالإِنسِ وَالطَّيرِ فَهُم يوزَعونَ
ஜின்களிலும் மனிதர்களிலும் அவ்வண்ணமே பறவைகளிலும் இருந்த அவருக்குக் கீழ்ப்படிந்த ராணுவத்தினர் ஸாலமனின் பணிக்கென ஒன்று திரட்டப்பட்டிருந்தனர்; அனைத்தும் அவருடைய கட்டளையின் கீழ்.
حَتّىٰ إِذا أَتَوا عَلىٰ وادِ النَّملِ قالَت نَملَةٌ يٰأَيُّهَا النَّملُ ادخُلوا مَسٰكِنَكُم لا يَحطِمَنَّكُم سُلَيمٰنُ وَجُنودُهُ وَهُم لا يَشعُرونَ
எறும்புகளின் பள்ளத்தாக்கை அவர்கள் நெருங்கிய போது, ஓர் எறும்பு கூறியது, ஓ எறும்புகளே, ஸாலமனும் அவருடைய படையினரும் அறியாமல் உங்களை நசுக்கிவிடாதிருக்கும் பொருட்டு, உங்களுடைய வீடுகளுக்குள் சென்றுவிடுங்கள்.*
فَتَبَسَّمَ ضاحِكًا مِن قَولِها وَقالَ رَبِّ أَوزِعنى أَن أَشكُرَ نِعمَتَكَ الَّتى أَنعَمتَ عَلَىَّ وَعَلىٰ وٰلِدَىَّ وَأَن أَعمَلَ صٰلِحًا تَرضىٰهُ وَأَدخِلنى بِرَحمَتِكَ فى عِبادِكَ الصّٰلِحينَ
அவளுடைய கூற்றைக்கேட்டு அவர் புன்னகைத்தார், மேலும் சிரித்தார்,* மேலும் கூறினார், என் இரட்சகரே, என் மீதும் என் பெற்றோர்கள் மீதும் நீர் அருளியிருக்கின்ற ஆசிகளுக்கு நன்றிபாராட்டுபவனாக இருப்பதற்கும், உம்மை மகிழ்விக்கும் நன்னெறியான காரியங்களைச் செய்வதற்கும் என்னைச் செலுத்துவீராக, உமது கருணையால், நன்னெறி கொண்ட உம்முடைய ஊழியர்களின் குழுமத்தில் என்னை நுழைய அனுமதிப்பீராக.
وَتَفَقَّدَ الطَّيرَ فَقالَ ما لِىَ لا أَرَى الهُدهُدَ أَم كانَ مِنَ الغائِبينَ
அவர் பறவைகளைப் பரிசீலித்தார், மேலும் கவனித்தார்: நான் ஹூப்போவை காணமுடியாதது ஏன்? அது தொலைந்து போனது ஏன்?
لَأُعَذِّبَنَّهُ عَذابًا شَديدًا أَو لَأَا۟ذبَحَنَّهُ أَو لَيَأتِيَنّى بِسُلطٰنٍ مُبينٍ
சரியானதொரு காரணத்தை அது எனக்குத் தரவில்லையென்றால், நான் அதனைக் கடுமையாகத் தண்டிப்பேன், அல்லது அதனைப் பலிகொடுத்துவிடுவேன்.
فَمَكَثَ غَيرَ بَعيدٍ فَقالَ أَحَطتُ بِما لَم تُحِط بِهِ وَجِئتُكَ مِن سَبَإٍ بِنَبَإٍ يَقينٍ
அவர் நீண்ட நேரம் காத்திருக்கவில்லை. (ஹூப்போ) கூறியது, நீங்கள் பெற்றிராத செய்தி என்னிடம் இருக்கின்றது. ஷீபாவிலிருந்து, ஒரு முக்கியமான தகவல்தனை உங்களுக்கு நான் கொண்டு வந்துள்ளேன்.
إِنّى وَجَدتُ امرَأَةً تَملِكُهُم وَأوتِيَت مِن كُلِّ شَىءٍ وَلَها عَرشٌ عَظيمٌ
ஒவ்வொரு பொருளையும் கொண்டு ஆசீர்வதிக்கப்பட்ட, மேலும் பிரம்மாண்டமானதொரு மாளிகையைக் கொண்ட ஒரு பெண்மணி அவர்களை ஆட்சி செய்ய நான் கண்டேன்.
وَجَدتُها وَقَومَها يَسجُدونَ لِلشَّمسِ مِن دونِ اللَّهِ وَزَيَّنَ لَهُمُ الشَّيطٰنُ أَعمٰلَهُم فَصَدَّهُم عَنِ السَّبيلِ فَهُم لا يَهتَدونَ
அவளும் அவளுடைய சமூகத்தாரும், கடவுளை விடுத்து, சூரியன் முன் சிரம்பணிந்து கொண்டிருக்க நான் கண்டேன். சாத்தான் அவர்களுடைய செயல்களை அவர்களுடைய கண்களில் அழகானதாக்கிவிட்டான், மேலும் அவர்களைப் பாதையிலிருந்து விரட்டிவிட்டான்; அதன் விளைவாக, அவர்கள் வழிகாட்டப்பட்டவர்களாக இல்லை.
أَلّا يَسجُدوا لِلَّهِ الَّذى يُخرِجُ الخَبءَ فِى السَّمٰوٰتِ وَالأَرضِ وَيَعلَمُ ما تُخفونَ وَما تُعلِنونَ
அவர்கள் கடவுள் முன் சிரம்பணிந்திருக்க வேண்டும், வானங்களிலும் பூமியிலும் உள்ள அனைத்து மர்மங்களையும் வெளியாக்குகின்ற அந்த ஒருவர், மேலும் நீங்கள் மறைத்து வைக்கும் ஒவ்வொன்றையும் நீங்கள் அறிவிக்கும் ஒவ்வொன்றையும் அறிந்திருக்கும் அந்த ஒருவர்.
اللَّهُ لا إِلٰهَ إِلّا هُوَ رَبُّ العَرشِ العَظيمِ
கடவுள்: அவருடன் வேறு எந்தத் தெய்வமும் இல்லை; மகத்தான சாம்ராஜ்யம் கொண்ட இரட்சகர்.
قالَ سَنَنظُرُ أَصَدَقتَ أَم كُنتَ مِنَ الكٰذِبينَ
(ஸாலமன்) கூறினார், நீ உண்மையைக் கூறினாயா, அல்லது நீ ஒரு பொய்யனாக இருக்கின்றாயா என்பதை நாம் காண்போம்.
اذهَب بِكِتٰبى هٰذا فَأَلقِه إِلَيهِم ثُمَّ تَوَلَّ عَنهُم فَانظُر ماذا يَرجِعونَ
இந்தக் கடிதத்தை என்னிடமிருந்து எடுத்துக்கொள், அவர்களிடம் அதனைக் கொடு, பின்னர் அவர்களுடைய மறுமொழியைக் கவனித்துப்பார்.
قالَت يٰأَيُّهَا المَلَؤُا۟ إِنّى أُلقِىَ إِلَىَّ كِتٰبٌ كَريمٌ
அவள் கூறினாள், என்னுடைய ஆலோசகர்களே, நான் கண்ணியமானதொரு கடிதத்தைப் பெற்றிருக்கின்றேன்.
إِنَّهُ مِن سُلَيمٰنَ وَإِنَّهُ بِسمِ اللَّهِ الرَّحمٰنِ الرَّحيمِ
அது ஸாலமனிடமிருந்து வந்துள்ளது, மேலும் அது ‘கடவுளின் பெயரால், மிக்க அருளாளர், மிக்க கருணையாளர்,* என்றுள்ளது.
أَلّا تَعلوا عَلَىَّ وَأتونى مُسلِمينَ
பிரகடனிப்பதாவது: ‘ஆணவம் கொண்டவர்களாக இருக்காதீர்கள்; சரணடைந்தவர்களாக என்னிடம் வாருங்கள்.’
قالَت يٰأَيُّهَا المَلَؤُا۟ أَفتونى فى أَمرى ما كُنتُ قاطِعَةً أَمرًا حَتّىٰ تَشهَدونِ
அவள் கூறினாள், என் ஆலோசகர்களே, இந்த விஷயத்தில் எனக்கு ஆலோசனையளியுங்கள். நீங்கள் எனக்கு ஆலோசனையளிக்காத வரை, நான் எந்த ஒரு முடிவும் எடுக்க மாட்டேன்.
قالوا نَحنُ أُولوا قُوَّةٍ وَأُولوا بَأسٍ شَديدٍ وَالأَمرُ إِلَيكِ فَانظُرى ماذا تَأمُرينَ
அவர்கள் கூறினர், நாம் வலிமையைக் கொண்டிருக்கின்றோம், போர்த்திறனையும் நாம் பெற்றிருக்கின்றோம், எனினும் இறுதிக் கட்டளை உம் கரத்திலேயே உள்ளது. என்ன செய்வதென்பதை நீரே முடிவெடுப்பீராக.
قالَت إِنَّ المُلوكَ إِذا دَخَلوا قَريَةً أَفسَدوها وَجَعَلوا أَعِزَّةَ أَهلِها أَذِلَّةً وَكَذٰلِكَ يَفعَلونَ
அவள் கூறினாள், மன்னர்கள் தாங்கள் படையெடுக்கின்ற எந்த நாட்டையும் சீர்குலைத்துவிடுகின்றனர், அதன் கண்ணியத்திற்குரிய மக்களை அடிமைப்படுத்திவிடுகின்றனர், இதுதான் அவர்கள் வழமையாகச் செய்வது.
وَإِنّى مُرسِلَةٌ إِلَيهِم بِهَدِيَّةٍ فَناظِرَةٌ بِمَ يَرجِعُ المُرسَلونَ
நான் அவர்களுக்கு ஒரு பரிசை அனுப்புகின்றேன்; தூதர்கள் திரும்பக் கொண்டு வருவது என்ன என நாம் காண்போம்.
فَلَمّا جاءَ سُلَيمٰنَ قالَ أَتُمِدّونَنِ بِمالٍ فَما ءاتىٰنِ ۦَ اللَّهُ خَيرٌ مِمّا ءاتىٰكُم بَل أَنتُم بِهَدِيَّتِكُم تَفرَحونَ
ஹூப்போ ஸாலமனிடம் திரும்பிய போது (அது அவரிடம் செய்தியைச் சொன்னது) மேலும் அவர் (ஷீபாவின் மக்களுக்கு) மறுமொழியுரைத்தார்: எனக்கு நீங்கள் பணம் தருகின்றீர்களா? கடவுள் எனக்குத் தந்திருப்பது, உங்களுக்கு அவர் தந்திருப்பதை விட மிகவும் மேலானது. நீங்கள்தான் இத்தகைய பரிசுகளில் ஆனந்தம் அடைகின்றீர்கள்.
ارجِع إِلَيهِم فَلَنَأتِيَنَّهُم بِجُنودٍ لا قِبَلَ لَهُم بِها وَلَنُخرِجَنَّهُم مِنها أَذِلَّةً وَهُم صٰغِرونَ
(ஹூப்போவிடம், அவர் கூறினார்), அவர்களிடம் திரும்பிச் செல், மேலும் அவர்களால் கற்பனையும் செய்யமுடியாத படைகளுடன் அவர்களிடம் நாம் வருவோம் (என்பதை அவர்கள் அறிந்து கொள்ளட்டும்). இழிவடைந்தவர்களாகவும், சிறுமைப்படுத்தப்பட்டவர்களாகவும் அவர்களை நாம் வெளியேற்றுவோம்.
قالَ يٰأَيُّهَا المَلَؤُا۟ أَيُّكُم يَأتينى بِعَرشِها قَبلَ أَن يَأتونى مُسلِمينَ
அவர் கூறினார், என் பிரதானிகளே, சரணடைந்தவர்களாக இங்கே அவர்கள் வருவதற்கு முன்னர், அவளுடைய மாளிகையை என்னிடம் கொண்டு வர உங்களில் எவரால் இயலும்?
قالَ عِفريتٌ مِنَ الجِنِّ أَنا۠ ءاتيكَ بِهِ قَبلَ أَن تَقومَ مِن مَقامِكَ وَإِنّى عَلَيهِ لَقَوِىٌّ أَمينٌ
ஜின்களில் இருந்து அஃப்ரீத் என்ற ஒன்று கூறியது, நீர் எழுந்து நிற்பதற்கு முன்னர் உம்மிடம் அதனைக் கொண்டு வர என்னால் இயலும். அதனைச் செய்யும் அளவுக்குச் சக்தி நிறைந்தவனாக நான் இருக்கின்றேன்.
قالَ الَّذى عِندَهُ عِلمٌ مِنَ الكِتٰبِ أَنا۠ ءاتيكَ بِهِ قَبلَ أَن يَرتَدَّ إِلَيكَ طَرفُكَ فَلَمّا رَءاهُ مُستَقِرًّا عِندَهُ قالَ هٰذا مِن فَضلِ رَبّى لِيَبلُوَنى ءَأَشكُرُ أَم أَكفُرُ وَمَن شَكَرَ فَإِنَّما يَشكُرُ لِنَفسِهِ وَمَن كَفَرَ فَإِنَّ رَبّى غَنِىٌّ كَريمٌ
புத்தகத்திலிருந்து அறிவைப் பெற்றிருந்த ஒருவர் கூறினார், உமது கண்ணிமைப்பில் அதனை உம்மிடம் கொண்டு வர என்னால் இயலும். அவருக்கு முன்னால் அது நிர்மாணிக்கப்பட்டிருப்பதை அவர் கண்டதும், அவர் கூறினார், இது என் இரட்சகரிடமிருந்து ஓர் ஆசீர்வாதமாகும், நான் நன்றியுடையவனாக இருக்கின்றேனா அல்லது நன்றி கெட்டவனா என்று காட்டுவதற்காக, இதன் மூலம் அவர் என்னைச் சோதிக்கின்றார். எவரொருவர் நன்றியுடையவராக இருக்கின்றாரோ, அவர் தன் சொந்த நலனுக்காகவே நன்றியுடையவராக இருக்கின்றார், மேலும் ஒருவன் நன்றி கெட்டவனாக மாறிவிட்டால், பின்னர் என்னுடைய இரட்சகர் அவன்பால் எந்தத் தேவையும் இல்லாதவர், மிக்க கண்ணியமுடையவர்.
قالَ نَكِّروا لَها عَرشَها نَنظُر أَتَهتَدى أَم تَكونُ مِنَ الَّذينَ لا يَهتَدونَ
அவர் கூறினார், அவளுடைய மாளிகையினை அவளுக்காக நீங்கள் மாற்றிவிடுங்கள். அவள் வழிகாட்டப்பட்டவளாக இருக்கப் போகின்றாளா அல்லது தவறாக வழிநடத்தப்பட்டவர்களுடன் தொடரப் போகின்றாளா என்பதை நாம் காண்போம்.
فَلَمّا جاءَت قيلَ أَهٰكَذا عَرشُكِ قالَت كَأَنَّهُ هُوَ وَأوتينَا العِلمَ مِن قَبلِها وَكُنّا مُسلِمينَ
அவள் வருகை தந்தபோது, அவளிடம் கேட்கப்பட்டது, உன் மாளிகை இதைப் போன்றுதான் தோற்றமளிக்குமா? அவள் கூறினாள், இதுதான் அது என்று தோன்றுகிறது.(ஸாலமன் கூறினார்) அவள் என்ன செய்யப்போகின்றாள் என்பதை நாங்கள் முன்னரே அறிந்திருந்தோம், மேலும் நாங்கள் ஏற்கனவே சரணடைந்தவர்களாக இருந்தோம்.
وَصَدَّها ما كانَت تَعبُدُ مِن دونِ اللَّهِ إِنَّها كانَت مِن قَومٍ كٰفِرينَ
கடவுளுக்குப் பதிலாக போலித்தெய்வங்களை வழிபட்டதனால் திசை திருப்பப்பட்டவளாக அவள் இருந்தாள்; நம்பமறுக்கும் கூட்டத்தைச் சேர்ந்தவளாக அவள் இருந்தாள்.
قيلَ لَهَا ادخُلِى الصَّرحَ فَلَمّا رَأَتهُ حَسِبَتهُ لُجَّةً وَكَشَفَت عَن ساقَيها قالَ إِنَّهُ صَرحٌ مُمَرَّدٌ مِن قَواريرَ قالَت رَبِّ إِنّى ظَلَمتُ نَفسى وَأَسلَمتُ مَعَ سُلَيمٰنَ لِلَّهِ رَبِّ العٰلَمينَ
அவளிடம் கூறப்பட்டது, மாளிகையின் உள்ளே செல். அதன் உட்புறத்தை அவள் கண்டபோது, அதனை ஒரு நீர்த் தடாகம் என்று எண்ணினாள், மேலும் (தன் ஆடையை உயர்த்தியவளாக) தன்னுடைய கால்களை வெளிப்படுத்தினாள். அவர் கூறினார், இதன் உட்புறமானது இப்போது பளிங்கினால் மேவப்பட்டுள்ளது. அவள் கூறினாள், என் இரட்சகரே, நான் என்னுடைய ஆத்மாவுக்குத் தீங்கிழைத்துக் கொண்டேன். இப்போது நான் சாலமனுடன் பிரபஞ்சத்தின் இரட்சகரான கடவுளுக்குச் சரணடைகின்றேன்.
وَلَقَد أَرسَلنا إِلىٰ ثَمودَ أَخاهُم صٰلِحًا أَنِ اعبُدُوا اللَّهَ فَإِذا هُم فَريقانِ يَختَصِمونَ
நீங்கள் கடவுளை வழிபட வேண்டும் என்று கூறியவராக, தமூதுகளிடம் அவர்களுடைய சகோதரர் ஸாலிஹை நாம் அனுப்பினோம். ஆனால் அவர்கள் சச்சரவு செய்கின்ற இரு பிரிவினர்களாக மாறினார்கள்.
قالَ يٰقَومِ لِمَ تَستَعجِلونَ بِالسَّيِّئَةِ قَبلَ الحَسَنَةِ لَولا تَستَغفِرونَ اللَّهَ لَعَلَّكُم تُرحَمونَ
அவர் கூறினார், என் சமூகத்தாரே, நல்ல செயல்களுக்குப் பதிலாகத் தீமைகளைப் புரிய நீங்கள் ஏன் அவசரப்படுகின்றீர்கள்? பாவமன்னிப்புக்காகக் கடவுளை நீங்கள் இறைஞ்சினால் மட்டுமே, நீங்கள் கருணையை அடையலாம்.
قالُوا اطَّيَّرنا بِكَ وَبِمَن مَعَكَ قالَ طٰئِرُكُم عِندَ اللَّهِ بَل أَنتُم قَومٌ تُفتَنونَ
அவர்கள் கூறினர், நாங்கள் உம்மை, உம்மையும் உம்முடன் சேர்ந்து கொண்டவர்களையும், எங்களுக்கு ஒரு கெட்ட சகுனமாக கருதுகின்றோம். அவர் கூறினார், உங்களுடைய சகுனம் கடவுளால் முற்றிலும் கட்டுப்படுத்தப்படுகின்றது. உண்மையில், நீங்கள் வழிபிசகுகின்ற மக்களாக இருக்கின்றீர்கள்.
وَكانَ فِى المَدينَةِ تِسعَةُ رَهطٍ يُفسِدونَ فِى الأَرضِ وَلا يُصلِحونَ
அந்நகரில், தீயவர்களான, மேலும் நல்லது எதனையும் ஒருபோதும் செய்திராத, ஒன்பது கொடுங்குற்றவாளிகள் இருந்தனர்.
قالوا تَقاسَموا بِاللَّهِ لَنُبَيِّتَنَّهُ وَأَهلَهُ ثُمَّ لَنَقولَنَّ لِوَلِيِّهِ ما شَهِدنا مَهلِكَ أَهلِهِ وَإِنّا لَصٰدِقونَ
அவர்கள் கூறினர், அவரையும் அவருடைய கூட்டத்தாரையும் கொன்றுவிடுவதாகக் கடவுள் மீது ஆணையிட்டுவிட்டுப் பின்னர், அவருடைய குலத்தவரிடம், ‘அவர்களுடைய மரணத்தைப் பற்றி எங்களுக்கு எதுவும் தெரியாது. நாங்கள் உண்மையாளர்களே,’ என்று கூறிவிடுவோம்.
وَمَكَروا مَكرًا وَمَكَرنا مَكرًا وَهُم لا يَشعُرونَ
அவர்கள் திட்டமிட்டுச் சூழ்ச்சி செய்தனர், ஆனால் அதே சமயம் அவர்கள் உணராது, நாமும் திட்டமிட்டுச் சூழ்ச்சி செய்தோம்.
فَانظُر كَيفَ كانَ عٰقِبَةُ مَكرِهِم أَنّا دَمَّرنٰهُم وَقَومَهُم أَجمَعينَ
அவர்களுடைய சூழ்ச்சியின் விளைவுகளைக் கவனிப்பீராக; அவர்களையும் அவர்களுடைய சமூகத்தார் அனைவரையும் நாம் அழித்துவிட்டோம்.
فَتِلكَ بُيوتُهُم خاوِيَةً بِما ظَلَموا إِنَّ فى ذٰلِكَ لَـٔايَةً لِقَومٍ يَعلَمونَ
அவர்களுடைய வரம்புமீறலின் காரணமாக, இதோ அவர்களுடைய வீடுகள் முற்றிலும் சிதிலமாகிக் கிடக்கின்றன. அறிந்திருக்கும் மக்களுக்கு இது ஒரு படிப்பினையாகத் திகழ வேண்டும்.
وَأَنجَينَا الَّذينَ ءامَنوا وَكانوا يَتَّقونَ
நம்பிக்கை கொண்டு மேலும் நன்னெறியானதொரு வாழ்வு நடத்துவோரை நாம் காப்பாற்றுகின்றோம்.
وَلوطًا إِذ قالَ لِقَومِهِ أَتَأتونَ الفٰحِشَةَ وَأَنتُم تُبصِرونَ
லோத் தன்னுடைய சமூகத்தாரிடம் கூறினார், இத்தகையதொரு அருவருக்கத்தக்க ஒன்றினை, பகிரங்கமாக, நீங்கள் பார்த்துக் கொண்டிருக்கும்போதே உங்களால் எப்படிச் செய்ய முடிகின்றது?
أَئِنَّكُم لَتَأتونَ الرِّجالَ شَهوَةً مِن دونِ النِّساءِ بَل أَنتُم قَومٌ تَجهَلونَ
பெண்களை விடுத்து, காமத்துடன், நீங்கள் ஆண்களோடு பாலுறவு கொள்கின்றீர்கள். உண்மையில், நீங்கள் அறிவில்லாத மக்களாக இருக்கின்றீர்கள்.
فَما كانَ جَوابَ قَومِهِ إِلّا أَن قالوا أَخرِجوا ءالَ لوطٍ مِن قَريَتِكُم إِنَّهُم أُناسٌ يَتَطَهَّرونَ
அவருடைய சமூகத்தாரின் ஒரே மறுமொழி, லோத்தின் குடும்பத்தாரை உங்களுடைய நகரத்தை விட்டு வெளியேற்றிவிடுங்கள்; அவர்கள் தூய்மையுடன் இருக்க விரும்புகின்ற மக்களாக உள்ளனர், என்று கூறுவதாகவே இருந்தது.
فَأَنجَينٰهُ وَأَهلَهُ إِلَّا امرَأَتَهُ قَدَّرنٰها مِنَ الغٰبِرينَ
அதன் விளைவாக, அவரையும் அவருடைய குடும்பத்தாரையும் நாம் காப்பாற்றினோம், அவருடைய மனைவியைத் தவிர; அழிந்துவிட்டவர்களுடன் அவளை நாம் கணக்கிட்டோம்.
وَأَمطَرنا عَلَيهِم مَطَرًا فَساءَ مَطَرُ المُنذَرينَ
குறிப்பிட்டதொரு பொழிவைக் கொண்டு அவர்கள் மீது நாம் பொழிந்தோம். எச்சரிக்கப்பட்ட மக்களாக இருந்தவர்கள் மீது துன்பகரமானதொரு பொழிவாக அது இருந்தது.
قُلِ الحَمدُ لِلَّهِ وَسَلٰمٌ عَلىٰ عِبادِهِ الَّذينَ اصطَفىٰ ءاللَّهُ خَيرٌ أَمّا يُشرِكونَ
கூறும், புகழ்ச்சி கடவுளுக்குரியது, மேலும் அவர் தேர்ந்தெடுத்துக்கொண்ட அவருடைய ஊழியர்கள் மீது சாந்தி நிலவுவதாக. கடவுள் மேலானவரா, அல்லது சில மனிதர்கள் அமைத்துக்கொள்கின்ற போலித்தெய்வங்களா?
أَمَّن خَلَقَ السَّمٰوٰتِ وَالأَرضَ وَأَنزَلَ لَكُم مِنَ السَّماءِ ماءً فَأَنبَتنا بِهِ حَدائِقَ ذاتَ بَهجَةٍ ما كانَ لَكُم أَن تُنبِتوا شَجَرَها أَءِلٰهٌ مَعَ اللَّهِ بَل هُم قَومٌ يَعدِلونَ
வானங்களையும் பூமியையும் படைத்த ஒருவர் யார்? எதன் மூலம் எழில் நிறைந்த தோட்டங்களை நாம் உருவாக்குகின்றோமோ அந்தத் தண்ணீரை விண்ணிலிருந்து உங்களுக்கு இறக்கி அனுப்புகின்ற ஒருவர் யார் - அதன் மரங்களை நீங்கள் உற்பத்தி செய்யச் சாத்தியமில்லையே? கடவுளுடன் மற்றொரு தெய்வமா? உண்மையில், அவர்கள் வழிபிசகிச் சென்றுவிட்ட மக்களாக இருக்கின்றனர்.
أَمَّن جَعَلَ الأَرضَ قَرارًا وَجَعَلَ خِلٰلَها أَنهٰرًا وَجَعَلَ لَها رَوٰسِىَ وَجَعَلَ بَينَ البَحرَينِ حاجِزًا أَءِلٰهٌ مَعَ اللَّهِ بَل أَكثَرُهُم لا يَعلَمونَ
வசிக்கத்தக்கதாக பூமியை ஆக்கி, அதனூடே ஆறுகளை ஓடச் செய்து, அதன் மீது மலைகளை அமைத்ததுடன், நீர்ப்பரப்புகள் இரண்டிற்குமிடையே ஒரு தடுப்பினை உருவாக்கிய ஒருவர் யார்? கடவுளுடன் மற்றொரு தெய்வமா? உண்மையில், அவர்களில் அதிகமானோர் அறியாதவர்களே.
أَمَّن يُجيبُ المُضطَرَّ إِذا دَعاهُ وَيَكشِفُ السّوءَ وَيَجعَلُكُم خُلَفاءَ الأَرضِ أَءِلٰهٌ مَعَ اللَّهِ قَليلًا ما تَذَكَّرونَ
விரக்தியடைந்து அவரை அழைப்பவர்களை மீட்டு, இன்னலை நிவர்த்திப்பதுடன் மேலும் பூமிக்கு உங்களை வாரிசுகளாக ஆக்கிய ஒருவர் யார்? கடவுளுடன் மற்றொரு தெய்வமா? அரிதாகவே நீங்கள் கவனத்தில் எடுத்துக்கொள்கின்றீர்கள்.
أَمَّن يَهديكُم فى ظُلُمٰتِ البَرِّ وَالبَحرِ وَمَن يُرسِلُ الرِّيٰحَ بُشرًا بَينَ يَدَى رَحمَتِهِ أَءِلٰهٌ مَعَ اللَّهِ تَعٰلَى اللَّهُ عَمّا يُشرِكونَ
நிலத்திலும் கடலிலும் உள்ள இருள்களில் உங்களை வழிநடத்துகின்ற ஒருவர் யார்? அவருடைய கருணையின் அடையாளமாக, நற்செய்திகளுடன் காற்றுகளை அனுப்புகின்ற ஒருவர் யார்? கடவுளுடன் மற்றொரு தெய்வமா? பங்குதாரர் எவரையும் கொண்டிருப்பதற்கெல்லாம் மேலாக, கடவுள் மிகவும் உயர்வானவர்.
أَمَّن يَبدَؤُا۟ الخَلقَ ثُمَّ يُعيدُهُ وَمَن يَرزُقُكُم مِنَ السَّماءِ وَالأَرضِ أَءِلٰهٌ مَعَ اللَّهِ قُل هاتوا بُرهٰنَكُم إِن كُنتُم صٰدِقينَ
படைப்பைத் துவக்கி, பின்னர் அதனை மீண்டும் செய்கின்ற ஒருவர் யார்? வானத்திலிருந்தும் பூமியிலிருந்தும் உங்களுக்கு வழங்குகின்ற ஒருவர் யார்? கடவுளுடன் மற்றொரு தெய்வமா? கூறும், நீங்கள் உண்மையாளர்களாக இருந்தால், உங்களுடைய சான்றினை எனக்குக் காட்டுங்கள்.
قُل لا يَعلَمُ مَن فِى السَّمٰوٰتِ وَالأَرضِ الغَيبَ إِلَّا اللَّهُ وَما يَشعُرونَ أَيّانَ يُبعَثونَ
கூறுவீராக, கடவுளைத் தவிர வானங்கள் மற்றும் பூமியில் உள்ள எவர் ஒருவருக்கும் எதிர்காலம் தெரியாது. எப்படி அல்லது எப்பொழுது அவர்கள் உயிர்த்தெழுப்பப்படுவார்கள் என்பதைக் கூட அவர்கள் உணரமாட்டார்கள்.
بَلِ ادّٰرَكَ عِلمُهُم فِى الـٔاخِرَةِ بَل هُم فى شَكٍّ مِنها بَل هُم مِنها عَمونَ
நிதர்சனத்தில், மறுவுலகைக் குறித்து அவர்களுடைய அறிவு குழம்பியுள்ளது. நிதர்சனத்தில், அதைப் பற்றி அவர்கள் சந்தேகங்களைத் தாங்கி இருக்கின்றனர். நிதர்சனத்தில், அவர்கள் அதில் முற்றிலும் கவனமற்று இருக்கின்றனர்.
وَقالَ الَّذينَ كَفَروا أَءِذا كُنّا تُرٰبًا وَءاباؤُنا أَئِنّا لَمُخرَجونَ
நம்பமறுத்தவர்கள் கூறினர், நாங்களும் எங்களுடைய பெற்றோரும் கூட, மண்ணாக மாறிய பின்னர், நாங்கள் வெளிக்கொண்டு வரப்படுவோமா?
لَقَد وُعِدنا هٰذا نَحنُ وَءاباؤُنا مِن قَبلُ إِن هٰذا إِلّا أَسٰطيرُ الأَوَّلينَ
கடந்த காலத்திலும் இதே வாக்குறுதி எங்களுக்குக் கொடுக்கப்பட்டது. இவை கடந்த காலத்திலிருந்துள்ள கட்டுக்கதைகளேயன்றி வேறில்லை.
قُل سيروا فِى الأَرضِ فَانظُروا كَيفَ كانَ عٰقِبَةُ المُجرِمينَ
கூறுவீராக, பூமியைச் சுற்றிப்பார்த்துக் குற்றவாளிகளுக்கான விளைவுகளைக் கவனிப்பீராக.
وَلا تَحزَن عَلَيهِم وَلا تَكُن فى ضَيقٍ مِمّا يَمكُرونَ
அவர்களுக்காக வருத்தப்படாதீர், மேலும் அவர்களுடைய சூழ்ச்சிகளால் நீர் எரிச்சல் அடையாதீர்.
وَيَقولونَ مَتىٰ هٰذَا الوَعدُ إِن كُنتُم صٰدِقينَ
அவர்கள் கூறுகின்றனர், நீர் உண்மையானவராக இருந்தால், எப்பொழுது அந்த வாக்குறுதி நிகழ்ந்தேறும்?
قُل عَسىٰ أَن يَكونَ رَدِفَ لَكُم بَعضُ الَّذى تَستَعجِلونَ
கூறும், நீங்கள் அறைகூவல் விடுகின்ற அத்தண்டனையில் சிலவற்றால் நீங்கள் ஏற்கனவே துன்புற்றுக் கொண்டிருக்கின்றீர்கள்.
وَإِنَّ رَبَّكَ لَذو فَضلٍ عَلَى النّاسِ وَلٰكِنَّ أَكثَرَهُم لا يَشكُرونَ
உம்முடைய இரட்சகர் மனிதர்கள்பால் அருள் நிறைந்தவராக இருக்கின்றார், ஆனால் அவர்களில் அதிகமானோர் நன்றிகெட்டவர்களே.
وَإِنَّ رَبَّكَ لَيَعلَمُ ما تُكِنُّ صُدورُهُم وَما يُعلِنونَ
அவர்களுடைய நெஞ்சங்கள் மறைத்து வைப்பவற்றையும், அவர்கள் அறிவிப்பவற்றையும் உம்முடைய இரட்சகர் முற்றிலும் அறிவார்.
وَما مِن غائِبَةٍ فِى السَّماءِ وَالأَرضِ إِلّا فى كِتٰبٍ مُبينٍ
வானங்கள் மற்றும் பூமியில் (கடவுளிடமிருந்து) மறைக்கப்பட்டவை எதுவுமில்லை; ஒவ்வொன்றும் ஆழ்ந்ததோர் பதிவேட்டில் உள்ளது.
إِنَّ هٰذَا القُرءانَ يَقُصُّ عَلىٰ بَنى إِسرٰءيلَ أَكثَرَ الَّذى هُم فيهِ يَختَلِفونَ
இஸ்ரேலுடைய சந்ததியினரின் விவகாரங்களில் பலவற்றை இந்தக் குர்ஆன் தீர்த்து வைக்கின்றது; இன்னமும் அவர்கள் தர்க்கித்துக் கொண்டிருக்கும் விவகாரங்கள்.
وَإِنَّهُ لَهُدًى وَرَحمَةٌ لِلمُؤمِنينَ
மேலும் மிக நிச்சயமாக, நம்பிக்கை கொண்டவர்களுக்கு இது ஒரு வழிகாட்டியாகவும் கருணையாகவும் உள்ளது.
إِنَّ رَبَّكَ يَقضى بَينَهُم بِحُكمِهِ وَهُوَ العَزيزُ العَليمُ
உம்முடைய இரட்சகர்தான் தனது சட்டங்களுக்கேற்ப அவர்களுக்கிடையில் தீர்ப்பளிப்பவர். அவர் எல்லாம் வல்லவர், எல்லாம் அறிந்தவர்.
فَتَوَكَّل عَلَى اللَّهِ إِنَّكَ عَلَى الحَقِّ المُبينِ
எனவே, உமது பொறுப்பைக் கடவுள் மீது வைப்பீராக; தெளிவான சத்தியத்தையே நீர் பின்பற்றுகின்றீர்.
إِنَّكَ لا تُسمِعُ المَوتىٰ وَلا تُسمِعُ الصُّمَّ الدُّعاءَ إِذا وَلَّوا مُدبِرينَ
இறந்துவிட்டவர்களையோ, அன்றிச் செவிடர்களையோ, அவர்கள் திரும்பிச் சென்றுவிட்டால், அழைப்பைச் செவியேற்கும்படிச் செய்ய உம்மால் முடியாது.
وَما أَنتَ بِهٰدِى العُمىِ عَن ضَلٰلَتِهِم إِن تُسمِعُ إِلّا مَن يُؤمِنُ بِـٔايٰتِنا فَهُم مُسلِمونَ
அன்றியும், குருடர்களை அவர்களுடைய வழி கேட்டிலிருந்து வெளியில் நடத்தவும் உம்மால் முடியாது. நம்முடைய வெளிப்பாடுகளின் மீது நம்பிக்கை கொண்டு சரணடைந்தோராக இருக்க முடிவெடுத்தவர்கள் மட்டுமே உம்மைச் செவியேற்பார்கள்.
وَإِذا وَقَعَ القَولُ عَلَيهِم أَخرَجنا لَهُم دابَّةً مِنَ الأَرضِ تُكَلِّمُهُم أَنَّ النّاسَ كانوا بِـٔايٰتِنا لا يوقِنونَ
சரியான தருணத்தில், மனிதர்கள் நம் வெளிப்பாடுகளைக் குறித்து உறுதி இல்லாதவர்களாக இருக்கின்றனர் என்பதை அறிவிக்கின்ற, பூமியின் பொருட்களால் செய்யப்பட்ட, ஒரு விலங்கினை அவர்களுக்காக நாம் உருவாக்குவோம்.
وَيَومَ نَحشُرُ مِن كُلِّ أُمَّةٍ فَوجًا مِمَّن يُكَذِّبُ بِـٔايٰتِنا فَهُم يوزَعونَ
ஒவ்வொரு சமுதாயத்திலிருந்தும், நமது சான்றுகளின் மீது நம்பிக்கை கொள்ளாத சிலரை, நிர்ப்பந்தமாக, நாம் வரவழைக்கும் அந்நாள் வரும்.
حَتّىٰ إِذا جاءو قالَ أَكَذَّبتُم بِـٔايٰتى وَلَم تُحيطوا بِها عِلمًا أَمّاذا كُنتُم تَعمَلونَ
அவர்கள் வந்து சேர்ந்தவுடன், அவர் கூறுவார், எனது வெளிப்பாடுகளைப் பற்றிய அறிவை அடைவதற்கு முன்னர், அவற்றை நீங்கள் ஏற்றுக்கொள்ள மறுத்துவிட்டீர்கள். இதுதான் நீங்கள் செய்தது, அல்லவா?
وَوَقَعَ القَولُ عَلَيهِم بِما ظَلَموا فَهُم لا يَنطِقونَ
அவர்களுடைய துஷ்டத்தனத்திற்குரிய கூலிக்கு அவர்கள் உள்ளாவார்கள்; அவர்கள் எதுவும் கூறமாட்டார்கள்.
أَلَم يَرَوا أَنّا جَعَلنَا الَّيلَ لِيَسكُنوا فيهِ وَالنَّهارَ مُبصِرًا إِنَّ فى ذٰلِكَ لَـٔايٰتٍ لِقَومٍ يُؤمِنونَ
இரவை அவர்களுடைய ஓய்வுக்கெனவும், பகலை ஒளிமிக்கதாகவும் நாம் ஆக்கினோம் என்பதை அவர்கள் காணவில்லையா? நம்பிக்கை கொண்ட மக்களுக்கு இவை போதுமான சான்றுகளாகத் திகழ வேண்டும்.
وَيَومَ يُنفَخُ فِى الصّورِ فَفَزِعَ مَن فِى السَّمٰوٰتِ وَمَن فِى الأَرضِ إِلّا مَن شاءَ اللَّهُ وَكُلٌّ أَتَوهُ دٰخِرينَ
கொம்பு ஊதப்படும் அந்நாளில், கடவுளால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களைத் தவிர, வானங்களிலும் பூமியிலும் உள்ள ஒவ்வொருவரும் திகிலடைந்துவிடுவார்கள். நிர்ப்பந்திக்கப்பட்டவர்களாக, அனைவரும் அவர் முன்னர் வருவார்கள்.
وَتَرَى الجِبالَ تَحسَبُها جامِدَةً وَهِىَ تَمُرُّ مَرَّ السَّحابِ صُنعَ اللَّهِ الَّذى أَتقَنَ كُلَّ شَىءٍ إِنَّهُ خَبيرٌ بِما تَفعَلونَ
மலைகளை நீர் பார்க்கும் போது, அவை அசையாமல் நிற்பதாக நீர் நினைக்கின்றீர். ஆனால் அவை மேகங்களைப் போல் நகர்கின்றன. ஒவ்வொன்றையும் மிகச் சரியாக ஆக்கிய, கடவுளின் உற்பத்தி இவ்விதமானதாகும். நீங்கள் செய்யும் ஒவ்வொன்றையும் அவர் முற்றிலும் நன்கறிந்திருக்கின்றார்.
مَن جاءَ بِالحَسَنَةِ فَلَهُ خَيرٌ مِنها وَهُم مِن فَزَعٍ يَومَئِذٍ ءامِنونَ
(தங்களுடைய பதிவேடுகளில்) நல்ல செயல்களைக் கொண்டு வருபவர்கள் மிகச் சிறப்பான வெகுமதிகளைப் பெறுவார்கள், மேலும் அந்நாளின் திகில்களிலிருந்து அவர்கள் பூரணமான பாதுகாப்புடன் இருப்பார்கள்.
وَمَن جاءَ بِالسَّيِّئَةِ فَكُبَّت وُجوهُهُم فِى النّارِ هَل تُجزَونَ إِلّا ما كُنتُم تَعمَلونَ
தீய காரியங்களைக் கொண்டு வருவோரைப் பொறுத்தவரை, அவர்கள் நரகத்திற்குள் நிர்ப்பந்திக்கப்படுவார்கள். நீங்கள் செய்தவற்றுக்குத்தான் நீங்கள் கூலி கொடுக்கப்படுகின்றீர்கள் அல்லவா?
إِنَّما أُمِرتُ أَن أَعبُدَ رَبَّ هٰذِهِ البَلدَةِ الَّذى حَرَّمَها وَلَهُ كُلُّ شَىءٍ وَأُمِرتُ أَن أَكونَ مِنَ المُسلِمينَ
இந்த நகரத்தின் இரட்சகரை வழிபடவேண்டும் என்றுதான் நான் கட்டளையிடப்பட்டுள்ளேன் - அவர் இதனைப் பாதுகாப்பானதொரு புனிதத்தலமாக ஆக்கியுள்ளார் - மேலும் அவர் அனைத்துப் பொருட்களையும் தன் வசம் கொண்டுள்ளார். சரணடைந்த ஒருவனாக இருக்க வேண்டுமென்று நான் கட்டளையிடப்பட்டுள்ளேன்.
وَأَن أَتلُوَا۟ القُرءانَ فَمَنِ اهتَدىٰ فَإِنَّما يَهتَدى لِنَفسِهِ وَمَن ضَلَّ فَقُل إِنَّما أَنا۠ مِنَ المُنذِرينَ
மேலும் இந்தக் குர்ஆனை ஓதி வர வேண்டுமென்றும். எவரொருவர் வழிநடத்தப்படுகின்றாரோ அவர் தன் சொந்த நலனுக்காகவே வழிநடத்தப்படுகின்றார், மேலும் அவர்கள் வழிதவறிச் சென்றால், பின்னர் கூறும், நான் ஓர் எச்சரிப்பவன் மட்டுமே.
وَقُلِ الحَمدُ لِلَّهِ سَيُريكُم ءايٰتِهِ فَتَعرِفونَها وَما رَبُّكَ بِغٰفِلٍ عَمّا تَعمَلونَ
மேலும் கூறும், புகழ்ச்சி கடவுளுக்குரியது; அவர் தன் சான்றுகளை நீங்கள் அங்கீகரிக்கும் வரை அவற்றை உங்களுக்குக் காட்டுவார். நீங்கள் செய்யும் எந்த ஒன்றையும் உம் இரட்சகர் ஒருபோதும் அறியாதவர் அல்லர்.