ص وَالقُرءانِ ذِى الذِّكرِ
ஸ. (ஸாத்),* மேலும் சான்றைக் கொண்டிருக்கின்ற இந்தக் குர்ஆன்.**
ص وَالقُرءانِ ذِى الذِّكرِ
ஸ. (ஸாத்),* மேலும் சான்றைக் கொண்டிருக்கின்ற இந்தக் குர்ஆன்.**
بَلِ الَّذينَ كَفَروا فى عِزَّةٍ وَشِقاقٍ
நம்பமறுப்பவர்கள் ஆணவத்திலும் எதிர்ப்பிலும் மூழ்கிவிட்டனர்.
كَم أَهلَكنا مِن قَبلِهِم مِن قَرنٍ فَنادَوا وَلاتَ حينَ مَناصٍ
அவர்களுக்கு முன்னர் எத்தனையோ தலைமுறையினரை நாம் அழித்தொழித்து உள்ளோம். அவர்கள் உதவிக்கு அழைத்தனர்; வீணாக.
وَعَجِبوا أَن جاءَهُم مُنذِرٌ مِنهُم وَقالَ الكٰفِرونَ هٰذا سٰحِرٌ كَذّابٌ
அவர்களிலிருந்தே ஓர் எச்சரிப்பவர் அவர்களிடம் வந்தது பற்றி அவர்கள் வியப்படைந்தனர். நம்பமறுப்பவர்கள் கூறினர், ஒரு மந்திரவாதி; ஒரு பொய்யர்.
أَجَعَلَ الـٔالِهَةَ إِلٰهًا وٰحِدًا إِنَّ هٰذا لَشَىءٌ عُجابٌ
தெய்வங்களையெல்லாம் ஒரே தெய்வமாக அவர் ஆக்கிவிட்டாரா? இது மெய்யாகவே ஆச்சர்யமாக இருக்கின்றது.
وَانطَلَقَ المَلَأُ مِنهُم أَنِ امشوا وَاصبِروا عَلىٰ ءالِهَتِكُم إِنَّ هٰذا لَشَىءٌ يُرادُ
அந்தத் தலைவர்கள் அறிவித்தனர், சென்று உங்களுடைய தெய்வங்களை வழிபடுவதில் உறுதியோடு விடாமுயற்சியுடனிருங்கள். இதுவே விரும்பத்தக்கதாகும்.
ما سَمِعنا بِهٰذا فِى المِلَّةِ الـٔاخِرَةِ إِن هٰذا إِلَّا اختِلٰقٌ
நம்முடைய தந்தையரின் மார்க்கத்திலிருந்து இதனைப்பற்றி நாம் ஒருபோதும் கேள்விப்பட்டதில்லை. இது ஒரு பொய்யேயாகும்.
أَءُنزِلَ عَلَيهِ الذِّكرُ مِن بَينِنا بَل هُم فى شَكٍّ مِن ذِكرى بَل لَمّا يَذوقوا عَذابِ
நமக்கு அல்லாமல் அந்தச் சான்று அவருக்கு ஏன் இறங்கி வந்தது? உண்மையில், என் சான்றைக் குறித்து அவர்கள் சந்தேகத்திலிருக்கின்றனர். உண்மையில், என் தண்டனையை அவர்கள் இன்னும் சுவைக்கவில்லை.
أَم عِندَهُم خَزائِنُ رَحمَةِ رَبِّكَ العَزيزِ الوَهّابِ
எல்லாம் வல்லவர், கொடையளிப்பவரான உம் இரட்சகரின் கருணைப் பொக்கிஷங்களை அவர்கள் சொந்தங்கொண்டிருக்கின்றனரா.
أَم لَهُم مُلكُ السَّمٰوٰتِ وَالأَرضِ وَما بَينَهُما فَليَرتَقوا فِى الأَسبٰبِ
வானங்கள் மற்றும் பூமி, மேலும் அவற்றிற்கிடையில் உள்ள ஒவ்வொன்றின் ஆட்சியதிகாரத்தைத் தம் வசம் அவர்கள் கொண்டுள்ளனரா? அவர்கள் தங்களுக்கே உதவிக் கொள்ளட்டும்.
جُندٌ ما هُنالِكَ مَهزومٌ مِنَ الأَحزابِ
மாறாக, அவர்கள் ஒன்றுதிரட்ட இயன்ற எந்தப் படைகளானாலும் - அவர்களுடைய கட்சியினர் அனைவரும் கூட்டமாகச் சேர்ந்து கொண்டாலும் - தோற்கடிக்கப்படுவார்கள்.
كَذَّبَت قَبلَهُم قَومُ نوحٍ وَعادٌ وَفِرعَونُ ذُو الأَوتادِ
அவர்களுக்கு முன்னர் நோவாவின் சமூகத்தார், ஆத், அபார பலம் கொண்ட ஃபேரோ ஆகியோர் நம்பமறுத்தனர்.
وَثَمودُ وَقَومُ لوطٍ وَأَصحٰبُ لـَٔيكَةِ أُولٰئِكَ الأَحزابُ
அத்துடன், தமூது, லோத்தின் சமூகத்தார், (மித்யனின்) வனங்களில் வசித்த மக்கள்; அவர்கள் எதிரணியினராக இருந்தனர்.
إِن كُلٌّ إِلّا كَذَّبَ الرُّسُلَ فَحَقَّ عِقابِ
அவர்கள் ஒவ்வொருவரும் தூதர்களை நம்பமறுத்தனர், எனவே இவ்விதமாக, என்னுடைய தண்டனை தவிர்க்க முடியாததானது.
وَما يَنظُرُ هٰؤُلاءِ إِلّا صَيحَةً وٰحِدَةً ما لَها مِن فَواقٍ
இந்த மக்கள் ஒரே ஓர் அடியை எதிர் நோக்கலாம், அதிலிருந்து அவர்கள் ஒருபோதும் மீண்டுவிட முடியாது.
وَقالوا رَبَّنا عَجِّل لَنا قِطَّنا قَبلَ يَومِ الحِسابِ
அவர்கள் சவால் விடுத்தனர்: எங்கள் இரட்சகரே, கணக்குக் கேட்கும் நாளுக்கு முன்னர், எங்களுக்கு உரிய தண்டனையை ஏன் நீர் விரைவுபடுத்தவில்லை.
اصبِر عَلىٰ ما يَقولونَ وَاذكُر عَبدَنا داوۥدَ ذَا الأَيدِ إِنَّهُ أَوّابٌ
அவர்களுடைய கூற்றுகளைக் குறித்து நீர் பொறுமையுடன் இருப்பீராக, மேலும் வளம் நிறைந்தவரான, நம் ஊழியர் டேவிட்டை நினைவில் கொள்வீராக; அவர் கீழ்ப்படிந்தவராக இருந்தார்.
إِنّا سَخَّرنَا الجِبالَ مَعَهُ يُسَبِّحنَ بِالعَشِىِّ وَالإِشراقِ
அவருடன் சேர்ந்து இரவும் பகலும் துதிக்குமாறு, மலைகளை அவருடைய பணிக்கென நாம் ஒப்படைத்தோம்.
وَالطَّيرَ مَحشورَةً كُلٌّ لَهُ أَوّابٌ
அத்துடன் பறவைகளும் அவருக்குப் பணி செய்வதற்காக ஒப்படைக்கப்பட்டன; அனைத்தும் அவருக்குக் கீழ்ப்படிந்தவையாக இருந்தன.
وَشَدَدنا مُلكَهُ وَءاتَينٰهُ الحِكمَةَ وَفَصلَ الخِطابِ
நாம் அவருடைய அரசுரிமையைப் பலப்படுத்தினோம், மேலும் ஞானம் மற்றும் நல்ல சிந்தனைத் திறன் கொண்டு அவருக்குக் கொடையளித்தோம்.
وَهَل أَتىٰكَ نَبَؤُا۟ الخَصمِ إِذ تَسَوَّرُوا المِحرابَ
அவருடைய தொழுமிடத்திற்குள் இரகசியமாக நுழைந்த, சச்சரவிட்டுக் கொண்ட மனிதர்களைப் பற்றிய செய்தியை நீர் பெற்றீரா?
إِذ دَخَلوا عَلىٰ داوۥدَ فَفَزِعَ مِنهُم قالوا لا تَخَف خَصمانِ بَغىٰ بَعضُنا عَلىٰ بَعضٍ فَاحكُم بَينَنا بِالحَقِّ وَلا تُشطِط وَاهدِنا إِلىٰ سَواءِ الصِّرٰطِ
அவருடைய அறைக்குள் அவர்கள் நுழைந்த பொழுது, அவர் திடுக்குற்றார். அவர்கள் கூறினர், அச்சம் கொள்ளாதீர். நாங்கள் ஒருவர் மற்றவருடன் சச்சரவிட்டுக் கொண்டிருக்கின்றோம், மேலும் நாங்கள் உம்முடைய நியாயமான தீர்ப்பைப் பெற விரும்புகின்றோம். எங்களுக்கு அநீதி இழைத்துவிடாதீர், மேலும் சரியான பாதையில் எங்களை வழிநடத்துவீராக.
إِنَّ هٰذا أَخى لَهُ تِسعٌ وَتِسعونَ نَعجَةً وَلِىَ نَعجَةٌ وٰحِدَةٌ فَقالَ أَكفِلنيها وَعَزَّنى فِى الخِطابِ
இந்த என்னுடைய சகோதரர் தொன்னூற்றொன்பது* ஆடுகளைச் சொந்தமாகக் கொண்டுள்ளார், அதே சமயம் நான் ஒரே ஆட்டைச் சொந்தமாகக் கொண்டிருக்கின்றேன். என்னுடைய ஆட்டையும் அவருடையவற்றுடன் கலந்துவிட அவர் விரும்புகின்றார், மேலும் தொடர்ந்து என்னை நெருக்கிக் கொண்டிருக்கின்றார்.
قالَ لَقَد ظَلَمَكَ بِسُؤالِ نَعجَتِكَ إِلىٰ نِعاجِهِ وَإِنَّ كَثيرًا مِنَ الخُلَطاءِ لَيَبغى بَعضُهُم عَلىٰ بَعضٍ إِلَّا الَّذينَ ءامَنوا وَعَمِلُوا الصّٰلِحٰتِ وَقَليلٌ ما هُم وَظَنَّ داوۥدُ أَنَّما فَتَنّٰهُ فَاستَغفَرَ رَبَّهُ وَخَرَّ راكِعًا وَأَنابَ
அவர் கூறினார், உம்முடைய ஆட்டை அவருடையவற்றுடன் சேர்த்துவிடும்படி கேட்டதன் மூலம் அவர் உம்மிடம் நியாயமற்றவராக இருந்துள்ளார். தங்களுடைய சொத்துகளை ஒன்றிணைத்துக்கொள்ளும் பெரும்பாலான மனிதர்கள் ஒருவரையொருவர் அநியாயமாக நடத்திக் கொள்கின்றனர், நம்பிக்கை கொண்டு நன்னெறிகள் புரிபவர்களைத் தவிர, மேலும் இத்தகையவர்கள் மிகச் சிலரே அதன் பின்னர், தான் சரியான தீர்ப்பைத்தான் அளித்தோமா என டேவிட் ஐயம் கொண்டார். நாம் அவரைச் சோதிக்கின்றோம் என்று அவர் எண்ணினார். அவர் பின்னர் தன் இரட்சகரிடம் பாவமன்னிப்புக்காக இறைஞ்சினார், கீழே குனிந்தார், மேலும் வருந்தினார்.*
فَغَفَرنا لَهُ ذٰلِكَ وَإِنَّ لَهُ عِندَنا لَزُلفىٰ وَحُسنَ مَـٔابٍ
நாம் இந்த விஷயத்தில் அவரை மன்னித்தோம். நம்மிடம் கண்ணியமானதொரு அந்தஸ்தையும், அழகியதொரு தங்குமிடத்தையும் நாம் அவருக்கு அளித்தோம்.
يٰداوۥدُ إِنّا جَعَلنٰكَ خَليفَةً فِى الأَرضِ فَاحكُم بَينَ النّاسِ بِالحَقِّ وَلا تَتَّبِعِ الهَوىٰ فَيُضِلَّكَ عَن سَبيلِ اللَّهِ إِنَّ الَّذينَ يَضِلّونَ عَن سَبيلِ اللَّهِ لَهُم عَذابٌ شَديدٌ بِما نَسوا يَومَ الحِسابِ
டேவிட்டே, உம்மை நாம் பூமியின் மீது ஓர் ஆட்சியாளராக ஆக்கியுள்ளோம். எனவே, மக்களுக்கிடையில் நீர் நியாயமாகத் தீர்ப்பளிக்க வேண்டும், மேலும் உம்முடைய சுய அபிப்பிராயத்தைப் பின்பற்றாதீர், கடவுளின் பாதையிலிருந்து உம்மை அது திசை திருப்பிவிடாதிருக்கும் பொருட்டு. நிச்சயமாக, கடவுளின் பாதையிலிருந்து வழிதவறிச் செல்பவர்கள், கேள்விக் கணக்கு நாளை மறந்தமைக்காக கடுமையான தண்டனைக்கு உள்ளாகின்றனர்.
وَما خَلَقنَا السَّماءَ وَالأَرضَ وَما بَينَهُما بٰطِلًا ذٰلِكَ ظَنُّ الَّذينَ كَفَروا فَوَيلٌ لِلَّذينَ كَفَروا مِنَ النّارِ
வானத்தையும் பூமியையும், மேலும் அவற்றிற்கிடையில் உள்ள ஒவ்வொன்றையும் வீணுக்காக நாம் படைக்கவில்லை. இத்தகைய நினைப்பானது நம்பமறுப்பவர்களுடையதேயாகும். ஆகவே, நம்பமறுப்பவர்களுக்குக் கேடுதான்; அவர்கள் நரகத்தில் துயரமடைவார்கள்.
أَم نَجعَلُ الَّذينَ ءامَنوا وَعَمِلُوا الصّٰلِحٰتِ كَالمُفسِدينَ فِى الأَرضِ أَم نَجعَلُ المُتَّقينَ كَالفُجّارِ
பூமியில் தீமைகள் செய்பவர்களை நாம் நடத்துவதைப் போன்று நம்பிக்கை கொண்டு நன்னெறியானதொரு வாழ்வு நடத்துபவர்களை நாம் நடத்துவோமா? தீயவர்களை நாம் நடத்துவதைப் போன்று நன்னெறியாளர்களை நாம் நடத்துவோமா?
كِتٰبٌ أَنزَلنٰهُ إِلَيكَ مُبٰرَكٌ لِيَدَّبَّروا ءايٰتِهِ وَلِيَتَذَكَّرَ أُولُوا الأَلبٰبِ
இது உமக்கு நாம் இறக்கி அனுப்பிய புனிதமான ஒரு வேதமாகும் ஒருவேளை அதன் வசனங்களை அவர்கள் சிந்திக்கக் கூடும். அறிவுத் திறனுடையவர்கள் கவனத்தில் எடுத்துக்கொள்வார்கள்.
وَوَهَبنا لِداوۥدَ سُلَيمٰنَ نِعمَ العَبدُ إِنَّهُ أَوّابٌ
டேவிட்டுக்குச் சாலமனை நாம் அளித்தோம்; ஒரு நல்லவர், மேலும் கீழ்ப்படிந்த ஊழியர்.
إِذ عُرِضَ عَلَيهِ بِالعَشِىِّ الصّٰفِنٰتُ الجِيادُ
ஒரு நாள் இரவு சூழும் வரை, அழகிய குதிரைகளுடன் அவர் தன்னை மறந்து மூழ்கி இருந்தார்.
فَقالَ إِنّى أَحبَبتُ حُبَّ الخَيرِ عَن ذِكرِ رَبّى حَتّىٰ تَوارَت بِالحِجابِ
அப்போது அவர் கூறினார், என் இரட்சகரை வழிபடுவதில் நான் மகிழ்வடைவதை விடவும், பொருள் சார்ந்த விஷயங்களில் நான் மகிழ்ந்திருந்துவிட்டேன், சூரியன் மறைந்துவிடும் வரை.*
رُدّوها عَلَىَّ فَطَفِقَ مَسحًا بِالسّوقِ وَالأَعناقِ
அவற்றை மீண்டும் கொண்டு வாருங்கள் (வழியனுப்புவதற்காக) அவற்றின் கால்களையும் கழுத்துகளையும் அவர் தடவிக் கொடுத்தார்.
وَلَقَد فَتَنّا سُلَيمٰنَ وَأَلقَينا عَلىٰ كُرسِيِّهِ جَسَدًا ثُمَّ أَنابَ
இவ்விதமாக சாலமனை நாம் சோதனையில் ஆழ்த்தினோம்; திரளான பொருள் வளங்களைக் கொண்டு அவரை நாம் ஆசீர்வதித்தோம், ஆனால் அவர் உறுதியோடு சரணடைந்தார்.*
قالَ رَبِّ اغفِر لى وَهَب لى مُلكًا لا يَنبَغى لِأَحَدٍ مِن بَعدى إِنَّكَ أَنتَ الوَهّابُ
அவர் கூறினார், என் இரட்சகரே, என்னை மன்னிப்பீராக, மேலும் வேறு எவரும் ஒருபோதும் அடைந்திராத ஓர் அரசுரிமையை எனக்கு அளிப்பீராக. நீரே கொடையளிப்பவர்.
فَسَخَّرنا لَهُ الرّيحَ تَجرى بِأَمرِهِ رُخاءً حَيثُ أَصابَ
நாம் (அவருடைய பிரார்த்தனைக்குப் பதிலளித்தோம், மேலும்) அவர் விரும்பிய இடமெல்லாம் மழை பொழியும் வண்ணம், காற்றை அவருடைய கட்டளையின் கீழ் பணித்தோம்.
وَالشَّيٰطينَ كُلَّ بَنّاءٍ وَغَوّاصٍ
மேலும் சாத்தான்களை, நிறுவிக்கொண்டும் மூழ்கிக் கொண்டும்.
وَءاخَرينَ مُقَرَّنينَ فِى الأَصفادِ
மற்றவர்கள் அவருடைய கட்டளையின் கீழ் வைக்கப்பட்டனர்.
هٰذا عَطاؤُنا فَامنُن أَو أَمسِك بِغَيرِ حِسابٍ
இது உமக்கு நமது வாழ்வாதாரமாகும்; நீர் தாராளமாகக் கொடுக்கலாம், அல்லது நிறுத்திக் கொள்ளவும் செய்யலாம், வரம்புகள் எதுவுமின்றி.
وَإِنَّ لَهُ عِندَنا لَزُلفىٰ وَحُسنَ مَـٔابٍ
நம்மிடத்தில் கண்ணியமானதொரு அந்தஸ்துக்கும், மேலும் அற்புதமானதொரு தங்குமிடத்திற்கும் அவர் தகுதி பெற்றுவிட்டார்.
وَاذكُر عَبدَنا أَيّوبَ إِذ نادىٰ رَبَّهُ أَنّى مَسَّنِىَ الشَّيطٰنُ بِنُصبٍ وَعَذابٍ
நம் ஊழியர் ஜோபை நினைவில் கொள்வீராக: அவர் தன் இரட்சகரை அழைத்தார், கஷ்டத்தையும் வலியையும் கொண்டு சாத்தான் என்னைத் துன்பப்படுத்திவிட்டான்.
اركُض بِرِجلِكَ هٰذا مُغتَسَلٌ بارِدٌ وَشَرابٌ
உம் பாதங்களால் தரையில் அடிப்பீராக. ஓர் ஊற்று உமக்கு நிவாரணத்தையும் ஒரு பானத்தையும் தரும்.
وَوَهَبنا لَهُ أَهلَهُ وَمِثلَهُم مَعَهُم رَحمَةً مِنّا وَذِكرىٰ لِأُولِى الأَلبٰبِ
அவருடைய குடும்பத்தாரை நாம் அவருக்குத் திருப்பித்தந்தோம்; இரு மடங்குக்கும் அதிகமாக. நம் கருணை இவ்விதமானதேயாகும்; அறிவுத்திறன் பெற்றிருப்போருக்கு ஒரு நினைவூட்டல்.
وَخُذ بِيَدِكَ ضِغثًا فَاضرِب بِهِ وَلا تَحنَث إِنّا وَجَدنٰهُ صابِرًا نِعمَ العَبدُ إِنَّهُ أَوّابٌ
இப்போது, உமது நேர்ச்சையை நிறைவேற்றுவதற்காக, நீர் பூமியில் பிரயாணம் செய்து தூதுச் செய்தியைப் பிரசாரம் செய்ய வேண்டும். நாம் அவரை உறுதியுடையவராகக் கண்டோம். எத்தகையதொரு நல்ல ஊழியர்! அவர் சரணடைந்த ஒருவராக இருந்தார்.
وَاذكُر عِبٰدَنا إِبرٰهيمَ وَإِسحٰقَ وَيَعقوبَ أُولِى الأَيدى وَالأَبصٰرِ
நம்முடைய ஊழியர்கள் ஆப்ரஹாம், ஐசக் மற்றும் ஜேகபையும் நினைவில் கொள்வீராக. அவர்கள் வளம் நிறைந்தவர்களாகவும், அகப்பார்வையுடையவர்களாகவும் இருந்தனர்.
إِنّا أَخلَصنٰهُم بِخالِصَةٍ ذِكرَى الدّارِ
அவர்கள் மீது மகத்தானதொரு ஆசீர்வாதத்தை நாம் அருளினோம்: மறுவுலகத்தைக் குறித்த விழிப்புணர்வு.
وَإِنَّهُم عِندَنا لَمِنَ المُصطَفَينَ الأَخيارِ
அவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர், ஏனெனில் அவர்கள் நன்னெறி மிக்கவர்களில் இருந்தனர்.
وَاذكُر إِسمٰعيلَ وَاليَسَعَ وَذَا الكِفلِ وَكُلٌّ مِنَ الأَخيارِ
மிகவும் நன்னெறியாளர்களில்; இஸ்மாயில், எலிஷா, மற்றும் துல்கிஃப்லை நினைவில் கொள்வீராக.
هٰذا ذِكرٌ وَإِنَّ لِلمُتَّقينَ لَحُسنَ مَـٔابٍ
இது ஒரு நினைவூட்டல் ஆகும்: அற்புதமானதொரு விதிக்கு நன்னெறியாளர்கள் தகுதி பெற்றுவிட்டனர்.
جَنّٰتِ عَدنٍ مُفَتَّحَةً لَهُمُ الأَبوٰبُ
ஏதேன் தோட்டங்கள் அவர்களுக்காகத் தங்களுடைய வாயில்களைத் திறந்து கொள்ளும்.
مُتَّكِـٔينَ فيها يَدعونَ فيها بِفٰكِهَةٍ كَثيرَةٍ وَشَرابٍ
அதில் பொழுது போக்குகையில், பல்வகைக் கனிகளும் பானங்களும் அவர்களுக்குக் கொடுக்கப்படும்.
وَعِندَهُم قٰصِرٰتُ الطَّرفِ أَترابٌ
அற்புதமான துணைகளை அவர்கள் கொண்டிருப்பார்கள்.
هٰذا ما توعَدونَ لِيَومِ الحِسابِ
இதற்குத்தான் கேள்விக் கணக்கு நாளன்று நீங்கள் தகுதி பெற்று இருக்கின்றீர்கள்.
إِنَّ هٰذا لَرِزقُنا ما لَهُ مِن نَفادٍ
நம்முடைய வாழ்வாதாரங்கள் தீர்ந்து போகாதவை.
هٰذا وَإِنَّ لِلطّٰغينَ لَشَرَّ مَـٔابٍ
வரம்புமீறுபவர்களைப் பொறுத்தவரை, அவர்கள் துன்பகரமானதொரு விதிக்கு உள்ளாகிவிட்டனர்.
جَهَنَّمَ يَصلَونَها فَبِئسَ المِهادُ
நரகத்தில்தான் அவர்கள் கருகுவார்கள்; என்ன ஒரு துன்பகரமான தங்குமிடம்.
هٰذا فَليَذوقوهُ حَميمٌ وَغَسّاقٌ
அதில் அவர்கள் சுவைப்பதென்னவென்றால், நரக பானங்களும் கசப்பான உணவுமேயாகும்.
وَءاخَرُ مِن شَكلِهِ أَزوٰجٌ
மேலும் அதே வகையில் இன்னும் மிக அதிகமானவையும்.
هٰذا فَوجٌ مُقتَحِمٌ مَعَكُم لا مَرحَبًا بِهِم إِنَّهُم صالُوا النّارِ
இந்த ஒரு கூட்டம் உங்களுடன் நரகத்தினுள் தள்ளப்பட இருக்கின்றது. (நரகத்தில் வசிப்பவர்களால்) அவர்கள் வரவேற்கப்பட மாட்டார்கள். நரக நெருப்பில் கருகுவதற்கு அவர்கள் தகுதி பெற்றுவிட்டனர்.
قالوا بَل أَنتُم لا مَرحَبًا بِكُم أَنتُم قَدَّمتُموهُ لَنا فَبِئسَ القَرارُ
புதிதாக வந்தவர்கள் மறுமொழியளிப்பார்கள், நீங்களும் வரவேற்கப்பட்டவர்களாக இருக்கவில்லை. நீங்கள் எங்களுக்கு முந்தியவர்களாக இருந்தீர்கள், மேலும் எங்களை வழிதவறச் செய்தீர்கள். எனவே, துன்பகரமான இந்த முடிவை அனுபவியுங்கள்.
قالوا رَبَّنا مَن قَدَّمَ لَنا هٰذا فَزِدهُ عَذابًا ضِعفًا فِى النّارِ
அத்துடன் அவர்கள் கூறுவார்கள், எங்கள் இரட்சகரே, இவர்கள்தான் எங்களை இதனுள் இட்டுச் சென்றவர்கள்; நரக நெருப்பின் தண்டனையை அவர்களுக்கு இருமடங்காக்குவீராக.
وَقالوا ما لَنا لا نَرىٰ رِجالًا كُنّا نَعُدُّهُم مِنَ الأَشرارِ
அவர்கள் கூறுவார்கள், தீயவர்களில் உள்ளவர்கள் என நாம் எண்ணிக் கொண்டிருந்த மக்களை (நரகத்தில்) நாம் காணாதிருப்பது எப்படி?
أَتَّخَذنٰهُم سِخرِيًّا أَم زاغَت عَنهُمُ الأَبصٰرُ
நாம் அவர்களைப் பரிகசிப்பவர்களாக இருந்தோம்; அவர்களை விட்டு நம் கண்களைத் திருப்பிக் கொள்பவர்களாக நாம் இருந்தோம்.
إِنَّ ذٰلِكَ لَحَقٌّ تَخاصُمُ أَهلِ النّارِ
இது முன்னரே தீர்மானிக்கப்பட்டுவிட்ட ஒரு நிகழ்வாகும்: நரகத்தின் மக்கள் ஒருவர் மற்றவருடன் சச்சரவு செய்து கொள்வார்கள்.
قُل إِنَّما أَنا۠ مُنذِرٌ وَما مِن إِلٰهٍ إِلَّا اللَّهُ الوٰحِدُ القَهّارُ
கூறுவீராக, நான் உங்களை எச்சரிக்கின்றேன்; கடவுளுடன் வேறு தெய்வம் இல்லை, ஒருவர், மேலதிகாரம் கொண்டவர்.
رَبُّ السَّمٰوٰتِ وَالأَرضِ وَما بَينَهُمَا العَزيزُ الغَفّٰرُ
வானங்கள் மற்றும் பூமி, மேலும் அவற்றிற்கிடையில் உள்ள ஒவ்வொன்றின் இரட்சகர்; எல்லாம் வல்லவர், மன்னிக்கின்றவர்.
قُل هُوَ نَبَؤٌا۟ عَظيمٌ
கூறுவீராக, இதோ பிரமிப்பூட்டும் செய்தி.
أَنتُم عَنهُ مُعرِضونَ
நீங்கள் முற்றிலும் கவனமற்று இருக்கும் ஒன்று.
ما كانَ لِىَ مِن عِلمٍ بِالمَلَإِ الأَعلىٰ إِذ يَختَصِمونَ
மேலான சமூகத்தாரின்* கலகத்தைப் பற்றி, இதற்கு முன்னர் நான் எந்த அறிவையும் கொண்டிருக்கவில்லை.
إِن يوحىٰ إِلَىَّ إِلّا أَنَّما أَنا۠ نَذيرٌ مُبينٌ
என்னுடைய ஓரே பணி எச்சரிக்கைகளை உங்களிடம் சேர்ப்பிப்பதே என நான் உள்ளுணர்வளிக்கப்பட்டுள்ளேன்.
إِذ قالَ رَبُّكَ لِلمَلٰئِكَةِ إِنّى خٰلِقٌ بَشَرًا مِن طينٍ
உம் இரட்சகர் வானவர்களிடம் கூறினார், களிமண்ணிலிருந்து ஒரு மானிடனை நான் படைக்கின்றேன்.
فَإِذا سَوَّيتُهُ وَنَفَختُ فيهِ مِن روحى فَقَعوا لَهُ سٰجِدينَ
அவரை நான் வடிவமைத்து, என் ஆவியிலிருந்து அவருள் ஊதியவுடன், அவர் முன்னால் நீங்கள் சிரம் பணிந்து விழ வேண்டும்.
فَسَجَدَ المَلٰئِكَةُ كُلُّهُم أَجمَعونَ
வானவர்கள் சிரம்பணிந்து வீழ்ந்தனர், அவர்கள் அனைவரும்,
إِلّا إِبليسَ استَكبَرَ وَكانَ مِنَ الكٰفِرينَ
சாத்தானைத் தவிர; அவன் மறுத்தான், மேலும் மிகவும் ஆணவம் கொண்டவனாகவும், நன்றி கெட்டவனாகவும் இருந்தான்.
قالَ يٰإِبليسُ ما مَنَعَكَ أَن تَسجُدَ لِما خَلَقتُ بِيَدَىَّ أَستَكبَرتَ أَم كُنتَ مِنَ العالينَ
அவர் கூறினார், சாத்தானே, என் கரங்களால் நான் படைத்ததன் முன் சிரம்பணிவதிலிருந்து உன்னைத் தடுத்தது எது? நீ மிகவும் ஆணவம் கொண்டுவிட்டாயா? நீ கலகம் செய்கின்றாயா?
قالَ أَنا۠ خَيرٌ مِنهُ خَلَقتَنى مِن نارٍ وَخَلَقتَهُ مِن طينٍ
அவன் கூறினான், நான் அவரை விடவும் மேலானவன்; என்னை நீர் நெருப்பிலிருந்து படைத்தீர், மேலும் அவரைக் களிமண்ணிலிருந்து படைத்தீர்.
قالَ فَاخرُج مِنها فَإِنَّكَ رَجيمٌ
அவர் கூறினார், அப்படியென்றால், நீ துரத்தப்பட வேண்டியவனாகிவிட்டாய், நீ விரட்டப்படுவாய்.
وَإِنَّ عَلَيكَ لَعنَتى إِلىٰ يَومِ الدّينِ
தீர்ப்பு நாள் வரை என் கண்டனத்துக்கு நீ உள்ளாகிவிட்டாய்.
قالَ رَبِّ فَأَنظِرنى إِلىٰ يَومِ يُبعَثونَ
அவன் கூறினான், என் இரட்சகரே, உயிர்த்தெழுப்பப்படும் நாள் வரை எனக்கு அவகாசமளிப்பீராக.
قالَ فَإِنَّكَ مِنَ المُنظَرينَ
அவர் கூறினார், நீ அவகாசமளிக்கப்பட்டவனாக இருக்கின்றாய்.
إِلىٰ يَومِ الوَقتِ المَعلومِ
நிர்ணயிக்கப்பட்ட அந்நாள் வரை.
قالَ فَبِعِزَّتِكَ لَأُغوِيَنَّهُم أَجمَعينَ
அவன் கூறினான், அவர்களை மொத்தமாக நான் வழிகேட்டில் அனுப்பிவிடுவேன் என்று உமது மாட்சிமையின் மீது நான் ஆணையிடுகின்றேன்.
إِلّا عِبادَكَ مِنهُمُ المُخلَصينَ
உமக்கு மட்டும் பூரணமாக அர்ப்பணித்துக் கொண்ட உம்முடைய அடியார்களைத் தவிர.
قالَ فَالحَقُّ وَالحَقَّ أَقولُ
அவர் கூறினார், இதுதான் சத்தியம், மேலும் நான் சொல்வதெல்லாம் சத்தியம்தான்.
لَأَملَأَنَّ جَهَنَّمَ مِنكَ وَمِمَّن تَبِعَكَ مِنهُم أَجمَعينَ
உன்னையும் உன்னைப் பின்பற்றிய அனைவரையும் கொண்டு நான் நரகத்தை நிரப்புவேன்.
قُل ما أَسـَٔلُكُم عَلَيهِ مِن أَجرٍ وَما أَنا۠ مِنَ المُتَكَلِّفينَ
கூறுவீராக, நான் உங்களிடம் எந்தக் கூலியும் கேட்கவில்லை, மேலும் நான் ஒரு மோசடிக்காரனும் அல்லன்.
إِن هُوَ إِلّا ذِكرٌ لِلعٰلَمينَ
உலகத்திற்கு இது ஒரு நினைவூட்டலாகும்.
وَلَتَعلَمُنَّ نَبَأَهُ بَعدَ حينٍ
மேலும் குறுகியதொரு காலத்திற்குள் நீங்கள் நிச்சயம் கண்டு கொள்வீர்கள்.