Kadavulmattum.orgகுர்ஆன் · அனைத்து 114 அத்தியாயங்கள்

8. அல்-அன்ஃபால் (போரின் வெற்றிப் பொருட்கள்)

الأنفال · 75 வசனங்கள் · மதீனாவில் அருளப்பட்டது

செயலியில் வாசிக்க

‹ அத்தியாயம் 7அத்தியாயம் 9 ›
8:1

يَسـَٔلونَكَ عَنِ الأَنفالِ قُلِ الأَنفالُ لِلَّهِ وَالرَّسولِ فَاتَّقُوا اللَّهَ وَأَصلِحوا ذاتَ بَينِكُم وَأَطيعُوا اللَّهَ وَرَسولَهُ إِن كُنتُم مُؤمِنينَ

போரின் வெற்றிப் பொருட்களைப் பற்றி அவர்கள் உம்மிடம் ஆலோசிக்கின்றனர். கூறுவீராக, போரின் வெற்றிப் பொருட்கள் கடவுள் மற்றும் தூதருக்கு உரியவையாகும். நீங்கள் நம்பிக்கையாளர்களாக இருந்தால், நீங்கள் கடவுளைக் கருத்தில் கொள்ளவும், நன்னெறியுடன் இருக்கும்படி ஒருவர் மற்றவரைத் தூண்டிக் கொள்ளவும், கடவுள் மற்றும் அவருடைய தூதருக்குக் கீழ்ப்படியவும் வேண்டும்.

8:2

إِنَّمَا المُؤمِنونَ الَّذينَ إِذا ذُكِرَ اللَّهُ وَجِلَت قُلوبُهُم وَإِذا تُلِيَت عَلَيهِم ءايٰتُهُ زادَتهُم إيمٰنًا وَعَلىٰ رَبِّهِم يَتَوَكَّلونَ

உண்மையான நம்பிக்கையாளர்கள் எவர்களெனில், எவர்களுடைய இதயங்கள் கடவுளைக் குறிப்பிடும் போது நடுநடுங்கிவிடுகின்றதோ, மேலும் அவருடைய வெளிப்பாடுகள் அவர்களுக்கு எடுத்துரைக்கப்படுகின்ற போது, அவர்களுடைய நம்பிக்கை வலுப்படுகின்றதோ, மேலும் தங்களுடைய இரட்சகரின் மீது பொறுப்பேற்படுத்துகின்றனரோ அவர்களேயாவர்.

8:3

الَّذينَ يُقيمونَ الصَّلوٰةَ وَمِمّا رَزَقنٰهُم يُنفِقونَ

அவர்கள் (ஸலாத்) தொடர்புத் தொழுகைகளைக் கடைப்பிடிக்கின்றனர், மேலும் அவர்களுக்குரிய நம்முடைய வாழ்வாதாரங்களில் இருந்து, அவர்கள் தர்மத்திற்கெனக் கொடுக்கின்றனர்.

8:4

أُولٰئِكَ هُمُ المُؤمِنونَ حَقًّا لَهُم دَرَجٰتٌ عِندَ رَبِّهِم وَمَغفِرَةٌ وَرِزقٌ كَريمٌ

இத்தகையவர்கள்தான் உண்மையான நம்பிக்கையாளர்களாக உள்ளனர். அவர்கள் தங்களுடைய இரட்சகரிடம் உயர் அந்தஸ்துகளையும், அவ்வண்ணமே மன்னிப்பு மற்றும் தாராளமானதொரு வாழ்வாதாரத்தையும் அடைகின்றனர்.

8:5

كَما أَخرَجَكَ رَبُّكَ مِن بَيتِكَ بِالحَقِّ وَإِنَّ فَريقًا مِنَ المُؤمِنينَ لَكٰرِهونَ

குறிப்பிட்டதொரு திட்டத்தை நிறைவேற்றுவதற்காக, உம்முடைய வீட்டை விட்டு நீர் வெளியேற உம்முடைய இரட்சகர் நாடிய பொழுது, சில நம்பிக்கையாளர்கள் தயக்கமுள்ள நம்பிக்கையாளர்களென வெளிப்படுத்தப்பட்டவர்களாக ஆகிவிட்டனர்.

8:6

يُجٰدِلونَكَ فِى الحَقِّ بَعدَما تَبَيَّنَ كَأَنَّما يُساقونَ إِلَى المَوتِ وَهُم يَنظُرونَ

ஒவ்வொன்றும் அவர்களுக்கு விவரிக்கப்பட்டுவிட்ட பின்னரும் கூட, சத்தியத்திற்கெதிராக அவர்கள் உம்மிடம் வாதித்தனர். நிச்சயமாகிவிட்ட மரணத்தின் பால் அவர்கள் செலுத்தப்படுபவர்களைப் போல் அவர்கள் நடந்து கொண்டனர்.

8:7

وَإِذ يَعِدُكُمُ اللَّهُ إِحدَى الطّائِفَتَينِ أَنَّها لَكُم وَتَوَدّونَ أَنَّ غَيرَ ذاتِ الشَّوكَةِ تَكونُ لَكُم وَيُريدُ اللَّهُ أَن يُحِقَّ الحَقَّ بِكَلِمٰتِهِ وَيَقطَعَ دابِرَ الكٰفِرينَ

குறிப்பிட்டதொரு கூட்டத்தின் மீது கடவுள் உங்களுக்கு வெற்றியை வாக்களித்தார் என்பதை நினைவு கூர்ந்திடுங்கள், ஆனால் அவ்வாறிருந்தும் நீங்கள் பலவீனமான கூட்டத்தையே எதிர் கொள்ள விரும்பினீர்கள். தன் வார்த்தைகளைக் கொண்டு சத்தியத்தை நிலைநாட்டுவதும், நம்பமறுப்பவர்களைத் தோற்கடிப்பதும் கடவுளின் திட்டமாக இருந்தது.

8:8

لِيُحِقَّ الحَقَّ وَيُبطِلَ البٰطِلَ وَلَو كَرِهَ المُجرِمونَ

ஏனெனில் தீமை செய்பவர்கள் வெறுத்த போதிலும், சத்தியமானது மிகைத்திட வேண்டும், அத்துடன் பொய்மையானது ஒழிந்திட வேண்டும் என்று அவர் தீர்ப்பளித்துள்ளார்.

8:9

إِذ تَستَغيثونَ رَبَّكُم فَاستَجابَ لَكُم أَنّى مُمِدُّكُم بِأَلفٍ مِنَ المَلٰئِكَةِ مُردِفينَ

எனவே, காப்பாற்ற வருமாறு உங்களுடைய இரட்சகரை நீங்கள் இறைஞ்சிய போது, அவர் உங்களுக்குப் பதிலளித்தார்: ஒருவர் பின் ஒருவராக ஓராயிரம் வானவர்களைக் கொண்டு உங்களுக்கு நான் ஆதரவளிக்கின்றேன்

8:10

وَما جَعَلَهُ اللَّهُ إِلّا بُشرىٰ وَلِتَطمَئِنَّ بِهِ قُلوبُكُم وَمَا النَّصرُ إِلّا مِن عِندِ اللَّهِ إِنَّ اللَّهَ عَزيزٌ حَكيمٌ

உங்களுடைய இதயங்களை வலுப்படுத்துவதற்காக இந்த நற்செய்தியைக் கடவுள் உங்களுக்கு அளித்தார். வெற்றி கடவுளிடமிருந்து மட்டுமே வருகின்றது. கடவுள் எல்லாம் வல்லவர், ஞானம் மிகுந்தவர்.

8:11

إِذ يُغَشّيكُمُ النُّعاسَ أَمَنَةً مِنهُ وَيُنَزِّلُ عَلَيكُم مِنَ السَّماءِ ماءً لِيُطَهِّرَكُم بِهِ وَيُذهِبَ عَنكُم رِجزَ الشَّيطٰنِ وَلِيَربِطَ عَلىٰ قُلوبِكُم وَيُثَبِّتَ بِهِ الأَقدامَ

அமைதி நிறைந்த தூக்கம் உங்களை ஆட்கொண்டு உங்களைச் சாந்தப்படுத்தும்படி அவர் செய்தார், மேலும் விண்ணில் இருந்து தண்ணீரை அவர் இறக்கி அனுப்பினார், அதன் மூலம் உங்களைத் தூய்மைப்படுத்துவதற்காக. சாத்தானின் சாபத்தில் இருந்து உங்களை அவர் பாதுகாத்தார், உங்களுடைய இதயங்களை மறு உறுதி செய்து உங்களுடைய நிலைகளைப் பலப்படுத்தினார்.

8:12

إِذ يوحى رَبُّكَ إِلَى المَلٰئِكَةِ أَنّى مَعَكُم فَثَبِّتُوا الَّذينَ ءامَنوا سَأُلقى فى قُلوبِ الَّذينَ كَفَرُوا الرُّعبَ فَاضرِبوا فَوقَ الأَعناقِ وَاضرِبوا مِنهُم كُلَّ بَنانٍ

உம்முடைய இரட்சகர் வானவர்களுக்கு உள்ளுணர்வளித்ததை நினைவு கூர்ந்திடுங்கள்: நான் உங்களுடன் இருக்கின்றேன்; எனவே நம்பிக்கை கொண்டவர்களுக்கு ஆதரவளியுங்கள். நம்பமறுத்துவிட்டவர்களின் இதயங்களுக்குள் நான் திகிலை எறிவேன். கழுத்துகளின் மேலே அவர்களை நீங்கள் தாக்கலாம், மேலும் ஒவ்வொரு விரலையும் கூட நீங்கள் தாக்கலாம்.

8:13

ذٰلِكَ بِأَنَّهُم شاقُّوا اللَّهَ وَرَسولَهُ وَمَن يُشاقِقِ اللَّهَ وَرَسولَهُ فَإِنَّ اللَّهَ شَديدُ العِقابِ

கடவுள் மற்றும் அவருடைய தூதருடன் சண்டையிடுவதன் மூலம் அவர்கள் நியாயமாக ஆட்பட்டது இதற்குத்தான். கடவுள் மற்றும் அவருடைய தூதருக்கெதிராகச் சண்டையிடுபவர்களுக்குக் கடவுளின் தண்டனை கடுமையானதாகும்.

8:14

ذٰلِكُم فَذوقوهُ وَأَنَّ لِلكٰفِرينَ عَذابَ النّارِ

இது, நம்பமறுப்பவர்களைத் தண்டிப்பதற்கேயாகும்; அவர்கள் நரகத்தின் தண்டனைக்கு உள்ளாகிவிட்டனர்.

8:15

يٰأَيُّهَا الَّذينَ ءامَنوا إِذا لَقيتُمُ الَّذينَ كَفَروا زَحفًا فَلا تُوَلّوهُمُ الأَدبارَ

நம்பிக்கை கொண்டவர்களே உங்களைத்தான், உங்களுக்கெதிராக ஒன்று திரண்டுவிட்ட நம்பமறுப்பவர்களை நீங்கள் எதிர்கொள்வீர்களாயின், புறங்காட்டித் திரும்பி விரண்டோடிவிடாதீர்கள்.

8:16

وَمَن يُوَلِّهِم يَومَئِذٍ دُبُرَهُ إِلّا مُتَحَرِّفًا لِقِتالٍ أَو مُتَحَيِّزًا إِلىٰ فِئَةٍ فَقَد باءَ بِغَضَبٍ مِنَ اللَّهِ وَمَأوىٰهُ جَهَنَّمُ وَبِئسَ المَصيرُ

ஒரு யுத்தத் திட்டத்தைச் செயல்படுத்துவதற்காகவோ அல்லது தன்னுடைய குழுமத்தாருடன் சேர்ந்து கொள்வதற்காகவோ தவிர, எவரேனும் அந்நாளில் புறங்காட்டித் திரும்பிவிட்டால், கடவுளிடமிருந்து கடுங்கோபத்திற்கு உள்ளாகிவிட்டார், மேலும் அவருடைய தங்குமிடம் நரகமேயாகும்; என்ன ஒரு துன்பகரமான விதி!

8:17

فَلَم تَقتُلوهُم وَلٰكِنَّ اللَّهَ قَتَلَهُم وَما رَمَيتَ إِذ رَمَيتَ وَلٰكِنَّ اللَّهَ رَمىٰ وَلِيُبلِىَ المُؤمِنينَ مِنهُ بَلاءً حَسَنًا إِنَّ اللَّهَ سَميعٌ عَليمٌ

அவர்களைக் கொன்றவர்கள் நீங்கள் அல்லர்; கடவுள்தான் அவர்களைக் கொன்றவர். நீர் எறிந்த போது எறிந்தவர் நீர் அல்லர்; எறிந்தவர் கடவுளே ஆவார். ஆனால் அவர் இவ்விதமாக ஏராளமானதொரு வரவுதனைச் சம்பாதிப்பதற்கு நம்பிக்கையாளர்களுக்கு ஒரு வாய்ப்பளிக்கின்றார். கடவுள் செவியேற்பவர், சர்வமும் அறிந்தவர்.

8:18

ذٰلِكُم وَأَنَّ اللَّهَ موهِنُ كَيدِ الكٰفِرينَ

கூடுதலாக, கடவுள் இவ்விதமாக நம்பமறுப்பவர்களின் சூழ்ச்சிகளைப் பயனற்றதாக்கிவிடுகின்றார்.

8:19

إِن تَستَفتِحوا فَقَد جاءَكُمُ الفَتحُ وَإِن تَنتَهوا فَهُوَ خَيرٌ لَكُم وَإِن تَعودوا نَعُد وَلَن تُغنِىَ عَنكُم فِئَتُكُم شَيـًٔا وَلَو كَثُرَت وَأَنَّ اللَّهَ مَعَ المُؤمِنينَ

(நம்பமறுப்பவர்களே), நீங்கள் வெற்றியைத் தேடினீர்கள், மேலும் வெற்றியும் வரவே செய்தது; அது நம்பிக்கையாளர்களுக்கு உரியதாக இருந்தது. (வலுச்சண்டையில் இருந்து) நீங்கள் விலகிக் கொள்வீர்களாயின் அது உங்களுக்கு மேலானதாக இருக்கும், ஆனால் நீங்கள் திரும்புவீர்களாயின், நாமும் அவ்வாறே செய்வோம். உங்களுடைய இராணுவங்கள் ஒருபோதும் உங்களுக்கு உதவிடாது, எவ்வளவு பெரியதென்பது பொருட்டல்ல. ஏனெனில் நம்பிக்கையாளர்களின் பக்கம் கடவுள் இருக்கின்றார்.

8:20

يٰأَيُّهَا الَّذينَ ءامَنوا أَطيعُوا اللَّهَ وَرَسولَهُ وَلا تَوَلَّوا عَنهُ وَأَنتُم تَسمَعونَ

நம்பிக்கை கொண்டோரே உங்களைத்தான், கடவுள் மற்றும் அவருடைய தூதருக்குக் கீழ்ப்படியுங்கள், மேலும் நீங்கள் செவியேற்றுக் கொண்டிருக்கின்ற அதே சமயம் அவரை அலட்சியம் செய்திடாதீர்கள்.

8:21

وَلا تَكونوا كَالَّذينَ قالوا سَمِعنا وَهُم لا يَسمَعونَ

அவர்கள் செவியேற்காதபோதே, நாங்கள் செவியேற்கின்றோம், என்று கூறுபவர்களைப் போல் இருக்காதீர்கள்.

8:22

إِنَّ شَرَّ الدَّوابِّ عِندَ اللَّهِ الصُّمُّ البُكمُ الَّذينَ لا يَعقِلونَ

கடவுளின் பார்வையில் மோசமான படைப்பினங்கள், புரிந்து கொள்ளாத செவிடர்களும் ஊமையர்களுமேயாவார்.

8:23

وَلَو عَلِمَ اللَّهُ فيهِم خَيرًا لَأَسمَعَهُم وَلَو أَسمَعَهُم لَتَوَلَّوا وَهُم مُعرِضونَ

அவர்களிடம் எந்த நன்மையையேனும் கடவுள் அறிந்திருப்பாராயின், செவியேற்கக்கூடியவர்களாக அவர்களை அவர் ஆக்கியிருப்பார். செவியேற்கக் கூடியவர்களாக அவர்களை அவர் ஆக்கியிருந்தாலும், அப்போதும் அவர்கள் வெறுப்பில் திரும்பிச் சென்றிருப்பார்கள்.

8:24

يٰأَيُّهَا الَّذينَ ءامَنُوا استَجيبوا لِلَّهِ وَلِلرَّسولِ إِذا دَعاكُم لِما يُحييكُم وَاعلَموا أَنَّ اللَّهَ يَحولُ بَينَ المَرءِ وَقَلبِهِ وَأَنَّهُ إِلَيهِ تُحشَرونَ

நம்பிக்கை கொண்டோரே உங்களைத்தான், உங்களுக்கு வாழ்வளிக்கக்* கூடியவற்றின்பால் அவர் உங்களை அழைக்கின்ற பொழுது நீங்கள் கடவுளுக்கும் தூதருக்கும், மறுமொழியளிக்க வேண்டும். உங்களுடைய இதயத்தை விடவும் உங்களுக்கு மிகவும் நெருக்கமானவராகக் கடவுள் இருக்கின்றார் என்பதையும், அவர் முன்னர் நீங்கள் ஒன்று திரட்டப்படுவீர்கள் என்பதையும் நீங்கள் அறிந்து கொள்ள வேண்டும்.

8:25

وَاتَّقوا فِتنَةً لا تُصيبَنَّ الَّذينَ ظَلَموا مِنكُم خاصَّةً وَاعلَموا أَنَّ اللَّهَ شَديدُ العِقابِ

உங்களில் உள்ள தீமைபுரிவோருக்கென வரையறுக்கப்படாமல் இருக்கக் கூடியதொரு தண்டனை குறித்து எச்சரிக்கையுடனிருங்கள்.* கடவுளின் தண்டனை கடுமையானதாகும் என்பதை நீங்கள் அறிந்து கொள்ள வேண்டும்.

8:26

وَاذكُروا إِذ أَنتُم قَليلٌ مُستَضعَفونَ فِى الأَرضِ تَخافونَ أَن يَتَخَطَّفَكُمُ النّاسُ فَـٔاوىٰكُم وَأَيَّدَكُم بِنَصرِهِ وَرَزَقَكُم مِنَ الطَّيِّبٰتِ لَعَلَّكُم تَشكُرونَ

மக்கள் உங்களை வாரிச் சென்றுவிடக்கூடும் என்று அஞ்சியவர்களாக, மிகச்சிலராகவும் அடக்குமுறைக்குள்ளானவர்களாகவும் நீங்கள் இருந்து வந்தீர்கள், மேலும் அவர் பாதுகாப்பானதொரு புகலிடத்தை உங்களுக்கு அளித்தார், தன்னுடைய வெற்றியைக் கொண்டு உங்களுக்கு ஆதரவளித்தார், மேலும் நீங்கள் நன்றியுடையவர்களாக இருக்கும் பொருட்டு, நல்ல வாழ்வாதாரங்களை உங்களுக்கு வழங்கினார் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

8:27

يٰأَيُّهَا الَّذينَ ءامَنوا لا تَخونُوا اللَّهَ وَالرَّسولَ وَتَخونوا أَمٰنٰتِكُم وَأَنتُم تَعلَمونَ

நம்பிக்கை கொண்டோரே உங்களைத்தான், இப்பொழுது நீங்கள் அறிந்தவர்களாக இருப்பதால், கடவுள் மற்றும் தூதருக்குத் துரோகமிழைக்காதீர்கள், மேலும் உங்களிடம் பொறுப்பை ஒப்படைப்பவர்களுக்கும் துரோகமிழைக்காதீர்கள்.

8:28

وَاعلَموا أَنَّما أَموٰلُكُم وَأَولٰدُكُم فِتنَةٌ وَأَنَّ اللَّهَ عِندَهُ أَجرٌ عَظيمٌ

உங்களுடைய பணமும் உங்களுடைய பிள்ளைகளும் ஒரு சோதனையாகவே இருக்கின்றன என்பதையும், கடவுள் மகத்தானதொரு பிரதிபலனை வைத்திருக்கின்றார் என்பதையும் நீங்கள் அறிந்து கொள்ள வேண்டும்.

8:29

يٰأَيُّهَا الَّذينَ ءامَنوا إِن تَتَّقُوا اللَّهَ يَجعَل لَكُم فُرقانًا وَيُكَفِّر عَنكُم سَيِّـٔاتِكُم وَيَغفِر لَكُم وَاللَّهُ ذُو الفَضلِ العَظيمِ

நம்பிக்கை கொண்டோரே உங்களைத்தான், நீங்கள் கடவுள் மீது பக்தியோடிருந்தால், அவர் உங்களுக்கு அறிவொளியூட்டுவார், உங்களுடைய பாவங்களை நீக்குவார், மேலும் உங்களை மன்னிப்பார். கடவுள் எல்லையற்ற அருளைக் கொண்டிருக்கின்றார்.

8:30

٣٠:٨وَإِذ يَمكُرُ بِكَ الَّذينَ كَفَروا لِيُثبِتوكَ أَو يَقتُلوكَ أَو يُخرِجوكَ وَيَمكُرونَ وَيَمكُرُ اللَّهُ وَاللَّهُ خَيرُ المٰكِرينَ

உம்மை மட்டுப்படுத்துவதற்கோ, அல்லது உம்மைக் கொல்வதற்கோ, அல்லது நாடு கடத்துவதற்கோ நம்பமறுப்பவர்கள் திட்டமும் சூழ்ச்சியும் செய்கின்றனர். எவ்விதமாக அவர்கள் திட்டமும் சூழ்ச்சியும் செய்த போதிலும், கடவுளும் அவ்வாறே செய்கின்றார். திட்டமிடுபவர்களில் சிறந்தவராகக் கடவுள் இருக்கின்றார்.

8:31

وَإِذا تُتلىٰ عَلَيهِم ءايٰتُنا قالوا قَد سَمِعنا لَو نَشاءُ لَقُلنا مِثلَ هٰذا إِن هٰذا إِلّا أَسٰطيرُ الأَوَّلينَ

நம்முடைய வெளிப்பாடுகள் அவர்களிடம் எடுத்துரைக்கப்படுகின்ற போது, அவர்கள் கூறுகின்றனர், நாங்கள் செவியேற்றுக் கொண்டோம். நாங்கள் விரும்பினால், இதே விஷயங்களை எங்களாலும் கூறியிருக்க இயலும். இவை கடந்த காலத்தில் இருந்துள்ள கட்டுக்கதைகள் என்பதை விட அதிகம் எதுவுமில்லை!

8:32

وَإِذ قالُوا اللَّهُمَّ إِن كانَ هٰذا هُوَ الحَقَّ مِن عِندِكَ فَأَمطِر عَلَينا حِجارَةً مِنَ السَّماءِ أَوِ ائتِنا بِعَذابٍ أَليمٍ

இவ்வாறு கூட அவர்கள் கூறினர், எங்கள் இறைவா, இது மெய்யாகவே உம்மிடமிருந்துள்ள சத்தியமாக இருக்குமாயின், அப்போது விண்ணில் இருந்து பாறைகளை எங்கள் மேல் பொழிவீராக, அல்லது வலி நிறைந்ததொரு தண்டனையை எங்கள் மீது கொட்டுவீராக.

8:33

وَما كانَ اللَّهُ لِيُعَذِّبَهُم وَأَنتَ فيهِم وَما كانَ اللَّهُ مُعَذِّبَهُم وَهُم يَستَغفِرونَ

ஆயினும், நீர் அவர்கள் மத்தியில் இருக்கின்ற சமயம் கடவுள் அவர்களைத் தண்டிப்பதாக இல்லை; அவர்கள் பாவமன்னிப்புத் தேடிக் கொண்டிருக்கையிலும் கடவுள் அவர்களைத் தண்டிப்பதாக இல்லை.

8:34

وَما لَهُم أَلّا يُعَذِّبَهُمُ اللَّهُ وَهُم يَصُدّونَ عَنِ المَسجِدِ الحَرامِ وَما كانوا أَولِياءَهُ إِن أَولِياؤُهُ إِلَّا المُتَّقونَ وَلٰكِنَّ أَكثَرَهُم لا يَعلَمونَ

அவர்கள் புனிதப்பள்ளியின் காப்பாளர்களாக இல்லாத போதிலும், அதிலிருந்து மற்றவர்களை விரட்டுவதன் மூலமாக அவர்கள் கடவுளின் தண்டனைக்குத் தகுதியாகிவிட்டனர் அல்லவா? நன்னெறியாளர்களே அதனுடைய உண்மையான காப்பாளர்கள் ஆவர், ஆனால் அவர்களில் அதிகமானோர் அறிவதில்லை.

8:35

وَما كانَ صَلاتُهُم عِندَ البَيتِ إِلّا مُكاءً وَتَصدِيَةً فَذوقُوا العَذابَ بِما كُنتُم تَكفُرونَ

அந்த ஆலயத்தில் (கஅபா) அவர்களுடைய (ஸலாத்) தொடர்புத் தொழுகைகளானது கேலித்தனமான ஒன்றாகவும், அத்துடன் மக்களை, (அவர்களை நெருக்கியடித்துத் தள்ளுவதன் மூலம் வெளியே) விரட்டுகின்ற ஓர் உபாயமாகவும் இருந்தது என்பதை விட அதிகம் எதுவுமில்லை. எனவே, உங்களுடைய நம்பமறுத்தலுக்குரிய தண்டனையால் துன்புறுங்கள்.

8:36

إِنَّ الَّذينَ كَفَروا يُنفِقونَ أَموٰلَهُم لِيَصُدّوا عَن سَبيلِ اللَّهِ فَسَيُنفِقونَها ثُمَّ تَكونُ عَلَيهِم حَسرَةً ثُمَّ يُغلَبونَ وَالَّذينَ كَفَروا إِلىٰ جَهَنَّمَ يُحشَرونَ

நம்பமறுப்பவர்கள் கடவுளின் பாதையிலிருந்து மற்றவர்களை விரட்டுவதற்காகத் தங்களுடைய பணத்தைச் செலவிடுகின்றனர். அவர்கள் அதனைச் செலவிடுவார்கள், பின்னர் அது அவர்களுக்குத் துக்கமாகவும் குற்றவுணர்வாகவும் மாறிவிடும். இறுதியாக, அவர்கள் தோற்கடிக்கப்படுவார்கள், அத்துடன் நம்பமறுப்பவர்கள் அனைவரும் நரகத்திற்கு ஒன்று திரட்டப்படுவார்கள்.

8:37

لِيَميزَ اللَّهُ الخَبيثَ مِنَ الطَّيِّبِ وَيَجعَلَ الخَبيثَ بَعضَهُ عَلىٰ بَعضٍ فَيَركُمَهُ جَميعًا فَيَجعَلَهُ فى جَهَنَّمَ أُولٰئِكَ هُمُ الخٰسِرونَ

கடவுள் நல்லவர்களில் இருந்து கெட்டவர்களைச் சலித்தெடுப்பார், பின்னர் கெட்டவர்களை ஒருவர் மேல் மற்றவராக அடுக்குவார், அனைவரும் ஒரே அடுக்கு, பின்னர் அதனை நரகத்தில் வீசிவிடுவார். இத்தகையவர்களே நஷ்டவாளிகள் ஆவர்.

8:38

قُل لِلَّذينَ كَفَروا إِن يَنتَهوا يُغفَر لَهُم ما قَد سَلَفَ وَإِن يَعودوا فَقَد مَضَت سُنَّتُ الأَوَّلينَ

நம்பமறுத்துவிட்டவர்களிடம் சொல்வீராக: அவர்கள் நிறுத்திக்கொள்வார்களாயின், அவர்களுடைய கடந்த காலம் அனைத்தும் மன்னிக்கப்பட்டுவிடும். ஆனால் அவர்கள் திரும்புவார்களாயின், அவர்களுக்கு முன்னர் அவர்களுக்கு ஒப்பானவர்களைப் போல் அதே தலைவிதிக்கு அவர்கள் உள்ளாவார்கள்.

8:39

وَقٰتِلوهُم حَتّىٰ لا تَكونَ فِتنَةٌ وَيَكونَ الدّينُ كُلُّهُ لِلَّهِ فَإِنِ انتَهَوا فَإِنَّ اللَّهَ بِما يَعمَلونَ بَصيرٌ

அடக்குமுறையைக் களைவதற்கும், கடவுளுக்கு மட்டும் அர்ப்பணிக்கப்பட்ட உங்களுடைய மார்க்கத்தை நடைமுறைப்படுத்துவதற்கும் நீங்கள் அவர்களுடன் சண்டையிட வேண்டும். வலுச்சண்டையில் இருந்து அவர்கள் விலகிக் கொள்வார்களாயின், பின்னர் கடவுள் அவர்கள் செய்கின்ற ஒவ்வொன்றையும் முற்றிலும் பார்ப்பவராக இருக்கின்றார்.

8:40

وَإِن تَوَلَّوا فَاعلَموا أَنَّ اللَّهَ مَولىٰكُم نِعمَ المَولىٰ وَنِعمَ النَّصيرُ

அவர்கள் திரும்பிச் சென்றுவிட்டால், அப்போது கடவுள்தான் உங்களுடைய இரட்சகராகவும் அதிபதியாகவும் இருக்கின்றார் என்பதை நீங்கள் அறிந்து கொள்ள வேண்டும்; மிகச்சிறந்த இரட்சகர் மற்றும் அதிபதி, மிகச் சிறந்த ஆதரவாளர்.

8:41

وَاعلَموا أَنَّما غَنِمتُم مِن شَىءٍ فَأَنَّ لِلَّهِ خُمُسَهُ وَلِلرَّسولِ وَلِذِى القُربىٰ وَاليَتٰمىٰ وَالمَسٰكينِ وَابنِ السَّبيلِ إِن كُنتُم ءامَنتُم بِاللَّهِ وَما أَنزَلنا عَلىٰ عَبدِنا يَومَ الفُرقانِ يَومَ التَقَى الجَمعانِ وَاللَّهُ عَلىٰ كُلِّ شَىءٍ قَديرٌ

போரில் ஏதேனும் வெற்றிப் பொருட்களை நீங்கள் அடைந்தால், உறவினர்கள், அனாதைகள், ஏழைகள், மற்றும் பயணத்தில் இருக்கின்ற அந்நியர்களுக்குக் கொடுக்கப்படுவதற்காக, ஐந்தில் ஒரு பாகம் கடவுள் மற்றும் தூதரைச் சென்றடைய வேண்டும் என்பதை நீங்கள் அறிந்து கொள்ளுங்கள். கடவுள் மீதும் இரு படைகளும் மோதிக்கொண்ட நாளான, தீர்மானத்தின் நாள் அன்று நம் ஊழியருக்கு நாம் வெளிப்படுத்தியவற்றின் மீதும், நீங்கள் நம்பிக்கை கொண்டிருந்தால் நீங்கள் இதனைச் செய்வீர்கள். கடவுள் சர்வ சக்தியுடையவர்.

8:42

إِذ أَنتُم بِالعُدوَةِ الدُّنيا وَهُم بِالعُدوَةِ القُصوىٰ وَالرَّكبُ أَسفَلَ مِنكُم وَلَو تَواعَدتُم لَاختَلَفتُم فِى الميعٰدِ وَلٰكِن لِيَقضِىَ اللَّهُ أَمرًا كانَ مَفعولًا لِيَهلِكَ مَن هَلَكَ عَن بَيِّنَةٍ وَيَحيىٰ مَن حَىَّ عَن بَيِّنَةٍ وَإِنَّ اللَّهَ لَسَميعٌ عَليمٌ

பள்ளத்தாக்கின் இந்தப்பக்கத்தில் நீங்கள் இருந்த அதே சமயம், அந்தப் பக்கத்தில் அவர்கள் இருந்ததை நினைவு கூர்ந்திடுங்கள். அப்போது அவர்களுடைய கூடார வாகனம் தாழ்வான நிலத்திற்கு நகர்ந்து வர வேண்டியிருந்தது. நீங்கள் இந்த விதமாக அதனைத் திட்டமிட்டிருந்தால், உங்களால் அதனைச் செய்திருக்க இயலாது. ஆனால் கடவுள் முன்னரே தீர்மானிக்கப்பட்டுவிட்ட ஒரு விஷயத்தைச் செய்து முடிக்க இருந்தார், அதன் மூலம் அழித்தொழிக்கப்பட விதிக்கப்பட்டிருந்தவர்கள் தெளிவானதொரு காரணத்திற்காக அழித்தொழிக்கப்பட்டனர், மேலும் காப்பாற்றப்பட விதிக்கப்பட்டிருந்தவர்கள் தெளிவானதொரு காரணத்திற்காகக் காப்பாற்றப்பட்டனர். கடவுள் செவியேற்பவர், சர்வமும் அறிந்தவர்.

8:43

إِذ يُريكَهُمُ اللَّهُ فى مَنامِكَ قَليلًا وَلَو أَرىٰكَهُم كَثيرًا لَفَشِلتُم وَلَتَنٰزَعتُم فِى الأَمرِ وَلٰكِنَّ اللَّهَ سَلَّمَ إِنَّهُ عَليمٌ بِذاتِ الصُّدورِ

(முஹம்மதே) கடவுள் உம்முடைய கனவில் அவர்களை எண்ணிக்கையில் மிகச் சிலராகத் தோன்றும்படிச் செய்தார். மிகவும் ஏராளமானவர்களாக அவர்கள் தோன்றும்படி அவர் செய்திருந்தால், நீங்கள் தோற்றிருப்பீர்கள், அத்துடன் உங்களுக்கிடையிலேயே நீங்கள் தர்க்கித்துக் கொண்டு இருந்திருப்பீர்கள். ஆனால் கடவுள் அந்நிலையிலிருந்து காத்தார். உள்ளார்ந்த எண்ணங்களைப் பற்றி அறிந்தவராக அவர் இருக்கின்றார்.

8:44

وَإِذ يُريكُموهُم إِذِ التَقَيتُم فى أَعيُنِكُم قَليلًا وَيُقَلِّلُكُم فى أَعيُنِهِم لِيَقضِىَ اللَّهُ أَمرًا كانَ مَفعولًا وَإِلَى اللَّهِ تُرجَعُ الأُمورُ

அத்துடன் அந்த நேரம் வந்தவுடன் நீங்கள் அவர்களை எதிர்கொண்ட பொழுது, உங்களுடைய கண்களில் அவர்களை மிகச்சிலராகத் தோன்றுமாறு அவர் செய்தார், மேலும் அவ்வாறே அவர்களுடைய கண்களில் உங்களை மிகச்சிலராகத் தோன்றுமாறும் செய்தார். ஏனெனில் குறிப்பிட்டதொரு திட்டத்தைச் செய்து முடிக்கக் கடவுள் நாடினார். அனைத்துத் தீர்மானங்களும் கடவுளால் செய்யப்படுகின்றன.

8:45

يٰأَيُّهَا الَّذينَ ءامَنوا إِذا لَقيتُم فِئَةً فَاثبُتوا وَاذكُرُوا اللَّهَ كَثيرًا لَعَلَّكُم تُفلِحونَ

நம்பிக்கை கொண்டோரே உங்களைத்தான், ஓர் இராணுவத்தினை நீங்கள் எதிர்கொள்ளும் போது, நீங்கள் உறுதியுடன் நிற்கவும் அத்துடன் கடவுளை அடிக்கடி நினைவு கூர்ந்திடவும் வேண்டும், நீங்கள் வெற்றியடையும் பொருட்டு.

8:46

وَأَطيعُوا اللَّهَ وَرَسولَهُ وَلا تَنٰزَعوا فَتَفشَلوا وَتَذهَبَ ريحُكُم وَاصبِروا إِنَّ اللَّهَ مَعَ الصّٰبِرينَ

நீங்கள் கடவுள் மற்றும் அவருடைய தூதருக்குக் கீழ்ப்படிய வேண்டும், மேலும் நீங்கள் தோல்வியுற்று உங்களுடைய சக்தியைச் சிதறடித்துவிடாதிருக்கும் பொருட்டு, உங்களுக்கிடையில் தர்க்கித்துக்கொள்ளாதீர்கள். நீங்கள் உறுதிப்பாட்டுடன் விடாமுயற்சி செய்ய வேண்டும். உறுதிப்பாட்டுடன் விடாமுயற்சி செய்வோருடன் கடவுள் இருக்கின்றார்.

8:47

وَلا تَكونوا كَالَّذينَ خَرَجوا مِن دِيٰرِهِم بَطَرًا وَرِئاءَ النّاسِ وَيَصُدّونَ عَن سَبيلِ اللَّهِ وَاللَّهُ بِما يَعمَلونَ مُحيطٌ

அரைமனத்துடன், காட்டிக்கொள்வதற்காக மட்டும், தங்களுடைய வீடுகளை விட்டுக் கிளம்பி, உண்மையில் கடவுளின் பாதையைப் பின்பற்றுவதிலிருந்து மற்றவர்களை ஊக்கமிழக்கச் செய்தவர்களைப் போன்று இருக்காதீர்கள். அவர்கள் செய்கின்ற ஒவ்வொன்றைப் பற்றியும் கடவுள் முற்றிலும் அறிந்தவராக இருக்கின்றார்.

8:48

وَإِذ زَيَّنَ لَهُمُ الشَّيطٰنُ أَعمٰلَهُم وَقالَ لا غالِبَ لَكُمُ اليَومَ مِنَ النّاسِ وَإِنّى جارٌ لَكُم فَلَمّا تَراءَتِ الفِئَتانِ نَكَصَ عَلىٰ عَقِبَيهِ وَقالَ إِنّى بَرىءٌ مِنكُم إِنّى أَرىٰ ما لا تَرَونَ إِنّى أَخافُ اللَّهَ وَاللَّهُ شَديدُ العِقابِ

அவர்களுடைய காரியங்களைச் சாத்தான் அவர்களுடைய கண்களுக்கு அழகுபடுத்திவிட்டான், மேலும் கூறினான், இன்றைய தினம் எந்த மக்களாலும் உங்களைத் தோற்கடித்துவிட இயலாது அத்துடன் உங்களுடன் சேர்ந்து நானும் சண்டையிடுவேன். ஆனால் இரண்டு படைகளும் ஒன்றையொன்று எதிர் கொண்ட உடன், நான் உங்களைக் கைவிடுகின்றேன். நீங்கள் பார்க்காதவற்றை நான் பார்க்கின்றேன். நான் கடவுளைக் குறித்து பயப்படுகின்றேன். கடவுளின் தண்டனை அச்சுறுத்தக்கூடியதாகும், எனக்கூறியவனாக, தன் குதிங்கால்கள் மீது புறங்காட்டித் திரும்பி விரண்டோடிவிட்டான்.

8:49

إِذ يَقولُ المُنٰفِقونَ وَالَّذينَ فى قُلوبِهِم مَرَضٌ غَرَّ هٰؤُلاءِ دينُهُم وَمَن يَتَوَكَّل عَلَى اللَّهِ فَإِنَّ اللَّهَ عَزيزٌ حَكيمٌ

நயவஞ்சகர்களும் தங்களுடைய இதயங்களில் சந்தேகத்தைத் தாங்கியிருந்தவர்களும் கூறினார்கள், இந்த மக்கள் அவர்களுடைய மார்க்கத்தால் ஏமாற்றப்பட்டுவிட்டவர்களாக இருக்கின்றனர். ஆயினும், ஒருவர் கடவுளிடம் தன்னுடைய பொறுப்பை ஒப்படைத்து வைப்பாராயின், பின்னர் கடவுள் எல்லாம் வல்லவர், ஞானம் மிகுந்தவர்.

8:50

وَلَو تَرىٰ إِذ يَتَوَفَّى الَّذينَ كَفَرُوا المَلٰئِكَةُ يَضرِبونَ وُجوهَهُم وَأَدبٰرَهُم وَذوقوا عَذابَ الحَريقِ

நம்பமறுத்துவிட்டவர்களை வானவர்கள் மரணத்தில் ஆழ்த்தும் போது உம்மால் அவர்களைப் பார்க்க மட்டும் இயன்றால்! அவர்கள் அவர்களுடைய முகங்களிலும் அவர்களுடைய விலாப்புறங்களிலும் அவர்களை அடிப்பார்கள்: நரகத்தின் தண்டனையைச் சுவையுங்கள்.

8:51

ذٰلِكَ بِما قَدَّمَت أَيديكُم وَأَنَّ اللَّهَ لَيسَ بِظَلّٰمٍ لِلعَبيدِ

இது உங்களுடைய கரங்கள் முற்படுத்தி அனுப்பி வைத்தவற்றின் ஒரு விளைவேயாகும். படைப்பினங்களின் பால் கடவுள் ஒருபோதும் அநீதமானவர் அல்லர்.

8:52

كَدَأبِ ءالِ فِرعَونَ وَالَّذينَ مِن قَبلِهِم كَفَروا بِـٔايٰتِ اللَّهِ فَأَخَذَهُمُ اللَّهُ بِذُنوبِهِم إِنَّ اللَّهَ قَوِىٌّ شَديدُ العِقابِ

இது ஃபேரோவின் சமூகத்தார் மற்றும் அவர்களுக்கு முன்னர் நம்பமறுத்துவிட்டவர்களுடைய அதே தலைவிதியாகும். கடவுளின் வெளிப்பாடுகளை அவர்கள் ஏற்கமறுத்தனர், எனவே அவர்களுடைய பாவங்களுக்காகக் கடவுள் அவர்களைத் தண்டித்தார். கடவுள் சக்தி நிறைந்தவர், மேலும் அவருடைய தண்டனை கடுமையானதாகும்.

8:53

ذٰلِكَ بِأَنَّ اللَّهَ لَم يَكُ مُغَيِّرًا نِعمَةً أَنعَمَها عَلىٰ قَومٍ حَتّىٰ يُغَيِّروا ما بِأَنفُسِهِم وَأَنَّ اللَّهَ سَميعٌ عَليمٌ

எந்த மக்கள் மீதும் அவர் அருளிய ஓர் ஆசீர்வாதத்தைத் தாங்களாகவே மாற்றிக் கொள்ள அவர்கள் முடிவெடுத்தாலேயன்றிக் கடவுள் மாற்றுவதில்லை. கடவுள் செவியேற்பவர், சர்வமும் அறிந்தவர்.

8:54

كَدَأبِ ءالِ فِرعَونَ وَالَّذينَ مِن قَبلِهِم كَذَّبوا بِـٔايٰتِ رَبِّهِم فَأَهلَكنٰهُم بِذُنوبِهِم وَأَغرَقنا ءالَ فِرعَونَ وَكُلٌّ كانوا ظٰلِمينَ

ஃபேரோவின் சமூகத்தார் மற்றும் அவர்களுக்கு முன்னிருந்த மற்றவர்களுடைய நிலையும் இத்தகையதாகவே இருந்தது. முதலில் அவர்கள் தங்களுடைய இரட்சகரின் அத்தாட்சிகளை ஏற்கமறுத்தனர். அதன் விளைவாக, அவர்களுடைய பாவங்களுக்காக அவர்களை நாம் அழித்தொழித்தோம். ஃபேரோவின் சமூகத்தாரை நாம் மூழ்கடித்தோம்; தீயவர்கள் எப்பொழுதும் தண்டிக்கப்பட்டவர்களாகவே இருந்தனர்.

8:55

إِنَّ شَرَّ الدَّوابِّ عِندَ اللَّهِ الَّذينَ كَفَروا فَهُم لا يُؤمِنونَ

நம்பமறுத்துவிட்டவர்கள்தான் கடவுளின் பார்வையில் மோசமான படைப்பினங்களாக இருக்கின்றனர்; அவர்கள் நம்பிக்கை கொள்ள இயலாது.

8:56

الَّذينَ عٰهَدتَ مِنهُم ثُمَّ يَنقُضونَ عَهدَهُم فى كُلِّ مَرَّةٍ وَهُم لا يَتَّقونَ

அவர்களுடன் நீங்கள் ஒப்பந்தம் செய்து கொள்கின்றீர்கள், ஆனால் ஒவ்வொரு முறையும் அவர்களுடைய ஒப்பந்தங்களை அவர்கள் மீறுகின்றனர்; அவர்கள் நன்னெறியாளர்கள் அல்லர்.

8:57

فَإِمّا تَثقَفَنَّهُم فِى الحَربِ فَشَرِّد بِهِم مَن خَلفَهُم لَعَلَّهُم يَذَّكَّرونَ

ஆகவே, போரில் அவர்களை நீங்கள் எதிர்கொள்வீர்களாயின், அவர்களுக்குப் பின்னால் வருபவர்களையும் அச்சுறுத்தித்தடுக்கின்றதொரு முன்னுதாரணமாக அவர்களை நீங்கள் அமைத்திட வேண்டும், அவர்கள் கவனத்தில் எடுத்துக்கொள்ளும் பொருட்டு.

8:58

وَإِمّا تَخافَنَّ مِن قَومٍ خِيانَةً فَانبِذ إِلَيهِم عَلىٰ سَواءٍ إِنَّ اللَّهَ لا يُحِبُّ الخائِنينَ

மக்களின் ஒரு கூட்டத்தாரால் நீங்கள் துரோகமிழைக்கப்படுகின்ற பொழுது, அவர்களுக்கெதிராக அதே விதமாக நீங்கள் ஒன்று திரளவேண்டும். துரோகமிழைப்பவர்களைக் கடவுள் விரும்புவதில்லை.

8:59

وَلا يَحسَبَنَّ الَّذينَ كَفَروا سَبَقوا إِنَّهُم لا يُعجِزونَ

நம்பமறுப்பவர்களாகிய அவர்கள் அப்படியே தப்பிச் சென்றுவிடலாம் என்று நினைத்துக்கொள்ளாதிருக்கட்டும்; அவர்கள் ஒருபோதும் தப்பித்துக்கொள்ள இயலாது.

8:60

وَأَعِدّوا لَهُم مَا استَطَعتُم مِن قُوَّةٍ وَمِن رِباطِ الخَيلِ تُرهِبونَ بِهِ عَدُوَّ اللَّهِ وَعَدُوَّكُم وَءاخَرينَ مِن دونِهِم لا تَعلَمونَهُمُ اللَّهُ يَعلَمُهُم وَما تُنفِقوا مِن شَىءٍ فى سَبيلِ اللَّهِ يُوَفَّ إِلَيكُم وَأَنتُم لا تُظلَمونَ

உங்களால் சேர்க்க இயன்ற அனைத்துச் சக்திகளையும், உங்களால் ஒன்று திரட்ட இயன்ற அனைத்துச் சாதனங்களையும், அவர்களுக்கெதிராக நீங்கள் ஆயத்தப்படுத்திக் கொள்ள வேண்டும், அதனால் கடவுளின் விரோதிகள், உங்களுடைய விரோதிகள், அவ்வண்ணமே நீங்கள் அறிந்திராத மற்றவர்களையும் நீங்கள் அச்சுறுத்தலாம் என்பதற்காக; கடவுள் அவர்களை அறிவார். கடவுளின் நிமித்தம் நீங்கள் செலவிடுகின்ற எதுவாயினும், சிறிதளவும் அநீதமின்றி, தாராளமாக உங்களுக்குத் திருப்பிச் செலுத்தப்படும்.

8:61

وَإِن جَنَحوا لِلسَّلمِ فَاجنَح لَها وَتَوَكَّل عَلَى اللَّهِ إِنَّهُ هُوَ السَّميعُ العَليمُ

அவர்கள் சமாதானத்தின்பால் தஞ்சமடைந்தால், நீங்களும் அவ்வாறே செய்ய வேண்டும், மேலும் கடவுள் மீது உங்களுடைய பொறுப்பை வையுங்கள். அவர்தான் செவியேற்பவர், சர்வமும் அறிந்தவர்.

8:62

وَإِن يُريدوا أَن يَخدَعوكَ فَإِنَّ حَسبَكَ اللَّهُ هُوَ الَّذى أَيَّدَكَ بِنَصرِهِ وَبِالمُؤمِنينَ

அவர்கள் உம்மை வஞ்சிக்க விரும்பினால், அப்போது கடவுள் உமக்குப் போதுமானவர், தன்னுடைய ஆதரவைக் கொண்டும், நம்பிக்கையாளர்களைக் கொண்டும் அவர் உமக்கு உதவியளிப்பார்.

8:63

وَأَلَّفَ بَينَ قُلوبِهِم لَو أَنفَقتَ ما فِى الأَرضِ جَميعًا ما أَلَّفتَ بَينَ قُلوبِهِم وَلٰكِنَّ اللَّهَ أَلَّفَ بَينَهُم إِنَّهُ عَزيزٌ حَكيمٌ

(நம்பிக்கையாளர்களுடைய) இதயங்களை அவர் இணக்கப்படுத்திவிட்டார், பூமியின் மீதுள்ள அத்தனை பணத்தையும் நீர் செலவிட்டிருந்தாலும், அவர்களுடைய இதயங்களை இணக்கப்படுத்தியிருக்க உம்மால் இயலாது. ஆனால் கடவுள் அவர்களை இணக்கப்படுத்தவே செய்தார். அவர் எல்லாம் வல்லவர், ஞானம் மிகுந்தவர்.

8:64

يٰأَيُّهَا النَّبِىُّ حَسبُكَ اللَّهُ وَمَنِ اتَّبَعَكَ مِنَ المُؤمِنينَ

நபியே உம்மைத்தான், கடவுள் உமக்குப் போதுமானவர், மேலும் உம்மைப் பின்பற்றிய நம்பிக்கையாளர்கள்.

8:65

يٰأَيُّهَا النَّبِىُّ حَرِّضِ المُؤمِنينَ عَلَى القِتالِ إِن يَكُن مِنكُم عِشرونَ صٰبِرونَ يَغلِبوا مِا۟ئَتَينِ وَإِن يَكُن مِنكُم مِا۟ئَةٌ يَغلِبوا أَلفًا مِنَ الَّذينَ كَفَروا بِأَنَّهُم قَومٌ لا يَفقَهونَ

நபியே உம்மைத்தான், சண்டையிடுவதற்கு நம்பிக்கையாளர்களை நீர் ஆர்வமூட்ட வேண்டும். உங்களில் உறுதிப்பாடுடைய இருபது நபர்கள் இருப்பார்களாயின், இருநூறு நபர்களை அவர்கள் தோற்கடிக்க இயலும், மேலும் உங்களில் ஒரு நூறு நபர்கள், நம்பமறுத்துவிட்டவர்களில் ஓராயிரம் நபர்களைத் தோற்கடிக்க இயலும். அது ஏனெனில் அவர்கள் புரிந்து கொள்ளாத மக்களாக இருக்கின்றனர் என்பதேயாகும்.

8:66

الـٰٔنَ خَفَّفَ اللَّهُ عَنكُم وَعَلِمَ أَنَّ فيكُم ضَعفًا فَإِن يَكُن مِنكُم مِا۟ئَةٌ صابِرَةٌ يَغلِبوا مِا۟ئَتَينِ وَإِن يَكُن مِنكُم أَلفٌ يَغلِبوا أَلفَينِ بِإِذنِ اللَّهِ وَاللَّهُ مَعَ الصّٰبِرينَ

இப்போது (புதிய ஆட்கள் பலர் உங்களுடன் சேர்ந்துவிட்டதனால்) கடவுள் இதனை உங்களுக்கு மிகவும் எளிதாக ஆக்கிவிட்டார், ஏனெனில் நீங்கள் முன்னிருந்தது போல் அவ்வளவு வலிமையானவர்களாக இல்லை என்பதை அவர் அறிந்திருக்கின்றார். இது முதற்கொண்டு, உறுதிப்பாடுடைய ஒரு நூறு நம்பிக்கையாளர்கள் இருநூறு நபர்களைத் தோற்கடிக்க இயலும், மேலும் உங்களில் ஓராயிரம் நபர்கள், கடவுளின் அனுமதி கொண்டு இரண்டாயிரம் நபர்களைத் தோற்கடிக்க இயலும். உறுதிப்பாட்டோடு தொடர்ந்திருப்பவர்களுடன் கடவுள் இருக்கின்றார்.

8:67

ما كانَ لِنَبِىٍّ أَن يَكونَ لَهُ أَسرىٰ حَتّىٰ يُثخِنَ فِى الأَرضِ تُريدونَ عَرَضَ الدُّنيا وَاللَّهُ يُريدُ الـٔاخِرَةَ وَاللَّهُ عَزيزٌ حَكيمٌ

எந்த நபியும், சண்டையில் அவர் கலந்து கொண்டாலேயன்றி, கைதிகளைக் கையகப்படுத்திக் கொள்ளாதிருக்க வேண்டும். மக்களாகிய நீங்கள் இந்த உலகத்தின் பொருட்களைத் தேடுகின்றீர்கள், அதே சமயம் கடவுள் மறுவுலகத்தைப் பரிந்துரைக்கின்றார். கடவுள் எல்லாம் வல்லவர், ஞானம் மிகுந்தவர்.

8:68

لَولا كِتٰبٌ مِنَ اللَّهِ سَبَقَ لَمَسَّكُم فيما أَخَذتُم عَذابٌ عَظيمٌ

கடவுளிடமிருந்து முன்னரே தீர்மானிக்கப்பட்டதொரு கட்டளை இல்லாதிருந்தால், நீங்கள் கையகப்படுத்திக் கொண்டதன் பொருட்டு பயங்கரமானதொரு தண்டனையில் நீங்கள் துன்புற்றிருப்பீர்கள்.

8:69

فَكُلوا مِمّا غَنِمتُم حَلٰلًا طَيِّبًا وَاتَّقُوا اللَّهَ إِنَّ اللَّهَ غَفورٌ رَحيمٌ

ஆகவே, நீங்கள் சம்பாதித்த போரின் வெற்றிப் பொருட்களில் அனுமதிக்கப்பட்டதும் நல்லதும் ஆனவற்றில் இருந்து உண்ணுங்கள், அத்துடன் கடவுளைக் கருத்தில் கொள்ளுங்கள். கடவுள் மன்னிப்பவர், மிக்க கருணையாளர்.

8:70

يٰأَيُّهَا النَّبِىُّ قُل لِمَن فى أَيديكُم مِنَ الأَسرىٰ إِن يَعلَمِ اللَّهُ فى قُلوبِكُم خَيرًا يُؤتِكُم خَيرًا مِمّا أُخِذَ مِنكُم وَيَغفِر لَكُم وَاللَّهُ غَفورٌ رَحيمٌ

நபியே உம்மைத்தான், உங்கள் வசம் உள்ள போர்க் கைதிகளிடம் கூறுவீராக, உங்கள் இதயங்களில் ஏதேனும் நல்லதைக் கடவுள் அறிந்திருப்பாராயின், நீங்கள் இழந்துவிட்ட எந்த ஒன்றையும் விட மேலானதை அவர் உங்களுக்குத் தந்திருப்பார், அத்துடன் உங்களை மன்னித்தும் இருப்பார். கடவுள் மன்னிப்பவர், மிக்க கருணையாளர்.

8:71

وَإِن يُريدوا خِيانَتَكَ فَقَد خانُوا اللَّهَ مِن قَبلُ فَأَمكَنَ مِنهُم وَاللَّهُ عَليمٌ حَكيمٌ

அன்றி அவர்கள் உமக்குத் துரோகமிழைக்க நாடினால், அவர்கள் ஏற்கெனவே கடவுளுக்குத் துரோகமிழைத்துவிட்டனர். இதனால்தான் அவர்களை நஷ்டவாளிகளாக அவர் ஆக்கினார். கடவுள் சர்வமும் அறிந்தவர். ஞானம் மிகுந்தவர்.

8:72

إِنَّ الَّذينَ ءامَنوا وَهاجَروا وَجٰهَدوا بِأَموٰلِهِم وَأَنفُسِهِم فى سَبيلِ اللَّهِ وَالَّذينَ ءاوَوا وَنَصَروا أُولٰئِكَ بَعضُهُم أَولِياءُ بَعضٍ وَالَّذينَ ءامَنوا وَلَم يُهاجِروا ما لَكُم مِن وَلٰيَتِهِم مِن شَىءٍ حَتّىٰ يُهاجِروا وَإِنِ استَنصَروكُم فِى الدّينِ فَعَلَيكُمُ النَّصرُ إِلّا عَلىٰ قَومٍ بَينَكُم وَبَينَهُم ميثٰقٌ وَاللَّهُ بِما تَعمَلونَ بَصيرٌ

நிச்சயமாக, நம்பிக்கை கொண்டு, மேலும் புலம் பெயர்ந்து, அத்துடன் கடவுளின் நிமித்தம் தங்களுடைய பணம் மற்றும் தங்களுடைய வாழ்வுகளால் பாடுபடுகின்றவர்களும், அவ்வண்ணமே அவர்களை உபசரித்து அடைக்கலம் தந்தவர்களும், அத்துடன் அவர்களுக்கு ஆதரவளித்தவர்களுமாகிய, அவர்கள் ஒருவர் மற்றொருவருக்குக் கூட்டாளிகள் ஆவர். நம்பிக்கை கொண்டு, ஆனால் உங்களுடன் புலம் பெயராதவர்களைப் பொறுத்தவரை, அவர்களும் புலம் பெயர்கின்றவரை, அவர்களுக்கு எந்த ஆதரவும் தர நீங்கள் கடமைப்பட்டவர்கள் அல்லர். ஆயினும், உங்களுடைய உதவி அவர்களுக்குத் தேவைப்பட்டால், உங்கள் மார்க்க சகோதரர்கள் என்ற முறையில், நீங்கள் அவர்களுக்கு உதவ வேண்டும், நீங்கள் ஒரு சமாதான ஒப்பந்தத்தில் கையொப்பமிட்டுள்ளவர்களுக்கு எதிராகவே தவிர. நீங்கள் செய்கின்ற ஒவ்வொன்றையும் பார்ப்பவராகக் கடவுள் இருக்கின்றார்.

8:73

وَالَّذينَ كَفَروا بَعضُهُم أَولِياءُ بَعضٍ إِلّا تَفعَلوهُ تَكُن فِتنَةٌ فِى الأَرضِ وَفَسادٌ كَبيرٌ

நம்பமறுத்தவர்கள் ஒருவர் மற்றொருவருக்குக் கூட்டாளிகளாக உள்ளனர். இந்தக் கட்டளைகளை நீங்கள் கடைப்பிடித்தாலேயன்றி, அங்கே பூமியில் கலவரமும் பயங்கரமான சீர்கேடுமே இருக்கும்.

8:74

وَالَّذينَ ءامَنوا وَهاجَروا وَجٰهَدوا فى سَبيلِ اللَّهِ وَالَّذينَ ءاوَوا وَنَصَروا أُولٰئِكَ هُمُ المُؤمِنونَ حَقًّا لَهُم مَغفِرَةٌ وَرِزقٌ كَريمٌ

நம்பிக்கை கொண்டு மேலும் புலம்பெயர்ந்தவர்கள், அத்துடன் கடவுளின் நிமித்தம் பாடுபட்டவர்கள், மேலும் அவர்களை உபசரித்ததுடன் அவர்களுக்கு அடைக்கலமும் தந்தவர்கள், அன்றியும் அவர்களுக்கு ஆதரவளித்தவர்கள், இவர்கள்தான் உண்மையான நம்பிக்கையாளர்களாக உள்ளனர். அவர்கள் மன்னிப்பிற்கும் தாராளமானதொரு பிரதிபலனுக்கும் தகுதி பெற்றுவிட்டனர்.

8:75

وَالَّذينَ ءامَنوا مِن بَعدُ وَهاجَروا وَجٰهَدوا مَعَكُم فَأُولٰئِكَ مِنكُم وَأُولُوا الأَرحامِ بَعضُهُم أَولىٰ بِبَعضٍ فى كِتٰبِ اللَّهِ إِنَّ اللَّهَ بِكُلِّ شَىءٍ عَليمٌ

அதன் பின்னர் நம்பிக்கை கொண்டு, மேலும் புலம் பெயர்ந்து அத்துடன் உங்களோடு பாடுபட்ட அவர்கள் உங்களைச் சேர்ந்தவர்களே. கடவுளின் கட்டளைகளின் பிரகாரம் ஒருவருக்கொருவர் உறவினராக இருப்பவர்கள்தான் ஒருவர் மற்றவருக்கு ஆதரவளிப்பதில் முதன்மையாக இருத்தல் வேண்டும். கடவுள் அனைத்து விஷயங்களையும் முற்றிலும் அறிந்தவராக இருக்கின்றார்.

‹ அத்தியாயம் 7அத்தியாயம் 9 ›