Kadavulmattum.orgகுர்ஆன் · அனைத்து 114 அத்தியாயங்கள்

7. அல்-அஃராஃப் (ஆத்ம சுத்திகரிப்பு ஸ்தலம்)

الأعراف · 206 வசனங்கள் · மக்காவில் அருளப்பட்டது

செயலியில் வாசிக்க

‹ அத்தியாயம் 6அத்தியாயம் 8 ›
7:1

المص

அ. ல. ம. ஸ*

7:2

كِتٰبٌ أُنزِلَ إِلَيكَ فَلا يَكُن فى صَدرِكَ حَرَجٌ مِنهُ لِتُنذِرَ بِهِ وَذِكرىٰ لِلمُؤمِنينَ

இந்த வேதம் உமக்கு வெளிப்படுத்தப்பட்டுள்ளது - நீர் உம்முடைய இதயத்தில் அதனைக் குறித்து சந்தேகத்திற்கு இடமளிக்க வேண்டாம் - அதனைக் கொண்டு நீர் எச்சரிப்பதற்காகவும், நம்பிக்கையாளர்களுக்கு ஒரு நினைவூட்டலை வழங்குதற்காகவும்.

7:3

اتَّبِعوا ما أُنزِلَ إِلَيكُم مِن رَبِّكُم وَلا تَتَّبِعوا مِن دونِهِ أَولِياءَ قَليلًا ما تَذَكَّرونَ

உங்களுடைய இரட்சகரிடமிருந்து உங்களுக்கு வெளிப்படுத்தப்பட்டவற்றையே நீங்கள் அனைவரும் பின்பற்ற வேண்டும்; அவருடன் எந்த போலித் தெய்வங்களையும் பின்பற்றாதீர்கள். அரிதாகவே நீங்கள் கவனத்தில் எடுத்துக்கொள்கின்றீர்கள்.

7:4

وَكَم مِن قَريَةٍ أَهلَكنٰها فَجاءَها بَأسُنا بَيٰتًا أَو هُم قائِلونَ

எத்தனையோ ஒரு சமூகத்தை நாம் அழித்தொழித்துள்ளோம்; அவர்கள் உறங்கிக் கொண்டோ, அல்லது நன்கு விழித்துக் கொண்டோ இருந்த போது நம்முடைய தண்டனைக்கு அவர்கள் உள்ளானார்கள்.

7:5

فَما كانَ دَعوىٰهُم إِذ جاءَهُم بَأسُنا إِلّا أَن قالوا إِنّا كُنّا ظٰلِمينَ

நம்முடைய தண்டனையானது அவர்களை வந்தடைந்த போது அவர்களுடைய கூற்றாக இருந்தது: உண்மையில், நாங்கள் வரம்புமீறுகின்றவர்களாகவே இருந்தோம்.

7:6

فَلَنَسـَٔلَنَّ الَّذينَ أُرسِلَ إِلَيهِم وَلَنَسـَٔلَنَّ المُرسَلينَ

தூதுச் செய்தியைப் பெற்றவர்களை நிச்சயமாக நாம் விசாரிப்போம், அத்துடன் தூதர்களையும் நாம் விசாரிப்போம்.

7:7

فَلَنَقُصَّنَّ عَلَيهِم بِعِلمٍ وَما كُنّا غائِبينَ

அதிகாரப்பூர்வமாக அவர்களுக்கு நாம் அறிவிப்போம், ஏனெனில் நாம் ஒருபோதும் கவனமற்றவர்களாக இருந்ததில்லை.

7:8

وَالوَزنُ يَومَئِذٍ الحَقُّ فَمَن ثَقُلَت مَوٰزينُهُ فَأُولٰئِكَ هُمُ المُفلِحونَ

தராசுகள் அந்நாளில், நீதமாக நிறுவப்படும். எடைகள் கனத்தவர்களாக இருக்கின்றவர்களே வெற்றியாளர்களாக இருப்பார்கள்.

7:9

وَمَن خَفَّت مَوٰزينُهُ فَأُولٰئِكَ الَّذينَ خَسِروا أَنفُسَهُم بِما كانوا بِـٔايٰتِنا يَظلِمونَ

அநீதமாக, நம்முடைய வெளிப்பாடுகளை அலட்சியம் செய்ததன் ஒரு பின்விளைவாக, எவர்களுடைய எடைகள் இலேசானவையாக இருக்கின்றனவோ அவர்களைப் பொறுத்த வரை, அவர்கள்தான் தங்களுடைய ஆத்மாக்களைத்* தவறவிட்டவர்களாக இருப்பார்கள்.

7:10

وَلَقَد مَكَّنّٰكُم فِى الأَرضِ وَجَعَلنا لَكُم فيها مَعٰيِشَ قَليلًا ما تَشكُرونَ

பூமியின் மீது உங்களை நாம் நிலைப்படுத்தினோம், மேலும் அதில் உங்களுக்கு ஆதரவளிக்கின்ற உபாயங்களையும் நாம் வழங்கியுள்ளோம். அரிதாகவே நீங்கள் நன்றியுடையவர்களாக இருக்கின்றீர்கள்.

7:11

وَلَقَد خَلَقنٰكُم ثُمَّ صَوَّرنٰكُم ثُمَّ قُلنا لِلمَلٰئِكَةِ اسجُدوا لِـٔادَمَ فَسَجَدوا إِلّا إِبليسَ لَم يَكُن مِنَ السّٰجِدينَ

நாம் உங்களைப் படைத்தோம், பின்னர் நாம் உங்களுக்கு உருக்கொடுத்தோம், பின்னர் நாம் வானவர்களை நோக்கிக் கூறினோம், ஆதமின் முன் சிரம் பணிந்து விழுங்கள். அவர்கள் சிரம் பணிந்து வீழ்ந்தனர், இப்லீஸைத் (சாத்தான்) தவிர; சிரம் பணிந்தவர்களுடன் அவன் இருந்திடவில்லை.

7:12

قالَ ما مَنَعَكَ أَلّا تَسجُدَ إِذ أَمَرتُكَ قالَ أَنا۠ خَيرٌ مِنهُ خَلَقتَنى مِن نارٍ وَخَلَقتَهُ مِن طينٍ

அவர் கூறினார், நான் உனக்குக் கட்டளையிட்ட போது சிரம் பணிவதிலிருந்து உன்னைத் தடுத்தது எது? அவன் கூறினான், நான் அவனை விட மேலானவனாக இருக்கின்றேன்; என்னை நீர் நெருப்பிலிருந்து படைத்தீர், ஆனால் அவனைக் களிமண்ணில் இருந்துதான் படைத்தீர்.

7:13

قالَ فَاهبِط مِنها فَما يَكونُ لَكَ أَن تَتَكَبَّرَ فيها فَاخرُج إِنَّكَ مِنَ الصّٰغِرينَ

அவர் கூறினார், அப்படியென்றால், நீ கீழே சென்றிட வேண்டும், ஏனெனில் இங்கே நீ ஆணவம் கொண்டவனாக இருப்பதற்கில்லை. வெளியேறிவிடு; நீ தரம் தாழ்ந்தவனாக இருக்கின்றாய்.

7:14

قالَ أَنظِرنى إِلىٰ يَومِ يُبعَثونَ

அவன் கூறினான், உயிர்த்தெழுப்பப்படுகின்ற அந்த நாள் வரை, எனக்கு ஓர் அவகாசமளிப்பீராக.

7:15

قالَ إِنَّكَ مِنَ المُنظَرينَ

அவர் கூறினார், ஓர் அவகாசம் உனக்கு வழங்கப்பட்டுள்ளது.

7:16

قالَ فَبِما أَغوَيتَنى لَأَقعُدَنَّ لَهُم صِرٰطَكَ المُستَقيمَ

அவன் கூறினான், நான் வழிதவறுதலில்* செல்ல வேண்டுமென நீர் நாடிவிட்டதால், உம்முடைய நேரான பாதையின் மீது அவர்களுக்காக நான் மறைந்து அமர்ந்திருப்பேன்.

7:17

ثُمَّ لَـٔاتِيَنَّهُم مِن بَينِ أَيديهِم وَمِن خَلفِهِم وَعَن أَيمٰنِهِم وَعَن شَمائِلِهِم وَلا تَجِدُ أَكثَرَهُم شٰكِرينَ

அவர்களுக்கு முன்னிருந்தும் அவர்களுக்குப் பின்னிருந்தும், அவர்களுடைய வலமிருந்தும் அவர்களுடைய இடமிருந்தும் அவர்களிடம் நான் வருவேன், மேலும் அவர்களில் அதிகமானோர் நன்றியற்றவர்களாக இருப்பதை நீர் காண்பீர்.

7:18

قالَ اخرُج مِنها مَذءومًا مَدحورًا لَمَن تَبِعَكَ مِنهُم لَأَملَأَنَّ جَهَنَّمَ مِنكُم أَجمَعينَ

அவர் கூறினார், இழிவுபடுத்தப்பட்டவனாகவும் தோற்கடிக்கப்பட்டவனாகவும், இங்கிருந்து வெளியேறிவிடு. அவர்களில் எவர் உன்னைப் பின்பற்றுகின்றனரோ, உங்கள் அனைவரையும் கொண்டு நரகத்தை நான் நிரப்புவேன்.

7:19

وَيٰـٔادَمُ اسكُن أَنتَ وَزَوجُكَ الجَنَّةَ فَكُلا مِن حَيثُ شِئتُما وَلا تَقرَبا هٰذِهِ الشَّجَرَةَ فَتَكونا مِنَ الظّٰلِمينَ

ஆதமே, உம்மைப் பொறுத்தவரை, உம்முடைய மனைவியுடன் சுவனத்தில் வசித்திருப்பீராக, மேலும் அதிலிருந்து நீங்கள் விரும்பியவாறு உண்ணுங்கள், ஆனால் நீங்கள் பாவத்தில் வீழ்ந்துவிடாதிருக்கும் பொருட்டு, இந்த ஒரு மரத்தை நெருங்காதீர்கள்.

7:20

فَوَسوَسَ لَهُمَا الشَّيطٰنُ لِيُبدِىَ لَهُما ما وۥرِىَ عَنهُما مِن سَوءٰتِهِما وَقالَ ما نَهىٰكُما رَبُّكُما عَن هٰذِهِ الشَّجَرَةِ إِلّا أَن تَكونا مَلَكَينِ أَو تَكونا مِنَ الخٰلِدينَ

அவர்களுக்குத் தென்படாதிருந்த அவர்களுடைய உடல்களை வெளிப்படுத்திவிடும் பொருட்டு, சாத்தான் அவர்களிடம் கிசுகிசுத்தான். அவன் கூறினான், வானவர்களாகிவிடுவதிலிருந்தும், நித்திய வாழ்வை அடைந்திடுவதிலிருந்தும், உங்களைத் தடுத்துவிடுவதற்காகவே தவிர, உங்களுடைய இரட்சகர் இந்த மரத்தில் இருந்து உங்களைத் தடுக்கவில்லை.

7:21

وَقاسَمَهُما إِنّى لَكُما لَمِنَ النّٰصِحينَ

அவன் அவர்களிடம் சத்தியம் செய்தான், நான் உங்களுக்கு நல்லுபதேசமே தருகின்றேன்.

7:22

فَدَلّىٰهُما بِغُرورٍ فَلَمّا ذاقَا الشَّجَرَةَ بَدَت لَهُما سَوءٰتُهُما وَطَفِقا يَخصِفانِ عَلَيهِما مِن وَرَقِ الجَنَّةِ وَنادىٰهُما رَبُّهُما أَلَم أَنهَكُما عَن تِلكُمَا الشَّجَرَةِ وَأَقُل لَكُما إِنَّ الشَّيطٰنَ لَكُما عَدُوٌّ مُبينٌ

இவ்விதமாக அவன் பொய்களைக் கொண்டு அவர்களை ஏமாற்றினான். அவர்கள் அம்மரத்தைச் சுவைத்தவுடன், அவர்களுடைய உடல்கள் அவர்களுக்குத் தென்படலாயின, உடனே அவர்கள் சுவனத்தின் இலைகளால் தங்களை மறைத்துக்கொள்ள முயன்றனர். அவர்களுடைய இரட்சகர் அவர்களை வரவழைத்தார்: அந்த மரத்தில் இருந்து உங்களை நான் தடுக்கவும், மேலும் சாத்தான் உங்களுடைய மிகத் தீவிரமான விரோதியாக இருக்கின்றான் என்று எச்சரிக்கவும் செய்யவில்லையா?

7:23

قالا رَبَّنا ظَلَمنا أَنفُسَنا وَإِن لَم تَغفِر لَنا وَتَرحَمنا لَنَكونَنَّ مِنَ الخٰسِرينَ

அவர்கள் கூறினர், எங்கள் இரட்சகரே, எங்கள் ஆத்மாக்களுக்கு நாங்கள் அநீதமிழைத்துக் கொண்டோம், நீர் எங்களை மன்னித்து எங்கள் மீது கருணை கொண்டாலேயன்றி, நாங்கள் நஷ்டவாளிகளாகவே இருப்போம்.

7:24

قالَ اهبِطوا بَعضُكُم لِبَعضٍ عَدُوٌّ وَلَكُم فِى الأَرضِ مُستَقَرٌّ وَمَتٰعٌ إِلىٰ حينٍ

அவர் கூறினார், ஒருவர் மற்றொருவருடைய விரோதிகளாக, இறங்கிச் சென்றுவிடுங்கள். பூமியின் மீது உங்கள் வசிப்பிடமும், சிறிதொரு காலத்திற்குரிய வாழ்வாதாரமும் இருக்கும்.

7:25

قالَ فيها تَحيَونَ وَفيها تَموتونَ وَمِنها تُخرَجونَ

அவர் கூறினார், அதன் மீது நீங்கள் வாழ்வீர்கள், அதன் மீதே நீங்கள் மரணிப்பீர்கள், மேலும் அதிலிருந்தே நீங்கள் வெளிக்கொண்டு வரப்படுவீர்கள்.

7:26

يٰبَنى ءادَمَ قَد أَنزَلنا عَلَيكُم لِباسًا يُوٰرى سَوءٰتِكُم وَريشًا وَلِباسُ التَّقوىٰ ذٰلِكَ خَيرٌ ذٰلِكَ مِن ءايٰتِ اللَّهِ لَعَلَّهُم يَذَّكَّرونَ

ஆதமுடைய சந்ததியினரே, உங்களுடைய உடல்களை மறைத்துக்கொள்வதற்காகவும், அவ்வண்ணமே வசதிக்காகவும், ஆடைகளை உங்களுக்கு நாம் வழங்கியிருக்கின்றோம். ஆனால் மிகச்சிறந்த ஆடையாவது நன்னெறியெனும் ஆடையேயாகும். இவை கடவுளின் அத்தாட்சிகளில் சில ஆகும், அவர்கள் கவனத்தில் எடுத்துக்கொள்ளும் பொருட்டு.

7:27

يٰبَنى ءادَمَ لا يَفتِنَنَّكُمُ الشَّيطٰنُ كَما أَخرَجَ أَبَوَيكُم مِنَ الجَنَّةِ يَنزِعُ عَنهُما لِباسَهُما لِيُرِيَهُما سَوءٰتِهِما إِنَّهُ يَرىٰكُم هُوَ وَقَبيلُهُ مِن حَيثُ لا تَرَونَهُم إِنّا جَعَلنَا الشَّيٰطينَ أَولِياءَ لِلَّذينَ لا يُؤمِنونَ

ஆதமுடைய சந்ததியினரே, சுவனத்திலிருந்து உங்களுடைய பெற்றோர்கள் வெளியேற்றப்படவும், மேலும் அவர்களுடைய உடல்கள் வெளிப்படுத்தப்படுவதற்காக அவர்களுடைய ஆடைகள் நீக்கப்படவும் காரணமாகிய போது, அவன் செய்ததைப் போல், உங்களையும் சாத்தான் ஏய்த்துவிட நீங்கள் அனுமதிக்காதீர்கள். அவனும் அவனுடைய வம்சத்தவரும் உங்களைப் பார்க்கின்றனர், அதே சமயம் நீங்களோ அவர்களைப் பார்ப்பதில்லை. நம்பிக்கை கொள்ளாதவர்களுடைய தோழர்களாக சாத்தான்களை நாம் நியமித்துவிடுகின்றோம்.

7:28

وَإِذا فَعَلوا فٰحِشَةً قالوا وَجَدنا عَلَيها ءاباءَنا وَاللَّهُ أَمَرَنا بِها قُل إِنَّ اللَّهَ لا يَأمُرُ بِالفَحشاءِ أَتَقولونَ عَلَى اللَّهِ ما لا تَعلَمونَ

அவர்கள் ஒரு பெரும்பாவத்தைப் புரிகின்றனர், பின்னர் கூறுகின்றனர், எங்களுடைய பெற்றோர்கள் இதனைச் செய்ய நாங்கள் கண்டோம், மேலும் இதனைச் செய்யுமாறு கடவுள்தான் எங்களுக்குக் கட்டளையிட்டுள்ளார். கூறுவீராக, கடவுள் ஒருபோதும் பாவத்தை ஏவுவதில்லை. கடவுளைப் பற்றி நீங்கள் அறியாதவற்றை நீங்கள் கூறுகின்றீர்களா?

7:29

قُل أَمَرَ رَبّى بِالقِسطِ وَأَقيموا وُجوهَكُم عِندَ كُلِّ مَسجِدٍ وَادعوهُ مُخلِصينَ لَهُ الدّينَ كَما بَدَأَكُم تَعودونَ

கூறுவீராக, என் இரட்சகர் நீதியையும், ஒவ்வொரு வழிபாட்டுத்தலத்திலும் அவருக்கு மட்டுமே அர்ப்பணித்தவர்களாக நிற்பதையுமே ஏவுகின்றார். நீங்கள் உங்களுடைய வழிபாட்டினை அவருக்கு மட்டுமென அர்ப்பணிக்க வேண்டும். அவர் உங்களைத் துவக்கிய அதே விதமாக, நீங்கள் இறுதியாக அவரிடமே திரும்பிச் செல்வீர்கள்.

7:30

فَريقًا هَدىٰ وَفَريقًا حَقَّ عَلَيهِمُ الضَّلٰلَةُ إِنَّهُمُ اتَّخَذُوا الشَّيٰطينَ أَولِياءَ مِن دونِ اللَّهِ وَيَحسَبونَ أَنَّهُم مُهتَدونَ

சிலரை அவர் வழிநடத்தினார், அதே சமயம் மற்றவர்கள் வழிதவறுதலுக்கு ஆட்படுத்தப்பட்டவர்களாக இருக்கின்றனர். அவர்கள் கடவுளுக்குப் பதிலாக, சாத்தான்களைத் தங்களுடைய எஜமானர்களாக எடுத்துக் கொண்டுவிட்டனர், ஆயினும் அவர்கள் வழிநடத்தப்பட்டவர்களாக இருப்பதாக அவர்கள் நம்பிக் கொண்டிருக்கின்றனர்.

7:31

يٰبَنى ءادَمَ خُذوا زينَتَكُم عِندَ كُلِّ مَسجِدٍ وَكُلوا وَاشرَبوا وَلا تُسرِفوا إِنَّهُ لا يُحِبُّ المُسرِفينَ

ஆதமுடைய சந்ததியினரே, நீங்கள் மஸ்ஜிதுக்குச் செல்கின்ற போது நீங்கள் தூய்மையாக இருக்கவும், நேர்த்தியாக உடையணியவும் வேண்டும். மேலும் நடுத்தரமாக உண்ணுங்கள், பருகுங்கள்; நிச்சயமாக, பெருந்தீனிக்காரர்களை அவர் நேசிப்பதில்லை.

7:32

قُل مَن حَرَّمَ زينَةَ اللَّهِ الَّتى أَخرَجَ لِعِبادِهِ وَالطَّيِّبٰتِ مِنَ الرِّزقِ قُل هِىَ لِلَّذينَ ءامَنوا فِى الحَيوٰةِ الدُّنيا خالِصَةً يَومَ القِيٰمَةِ كَذٰلِكَ نُفَصِّلُ الـٔايٰتِ لِقَومٍ يَعلَمونَ

கூறுவீராக, தன்னுடைய படைப்பினங்களுக்காக கடவுள் படைத்துள்ள விரும்பத்தக்க பொருட்களையும் நல்ல வாழ்வாதாரங்களையும் தடை செய்தவர் யார்? கூறுவீராக, இத்தகைய பொருட்கள் நம்பிக்கை கொண்டோரால் இந்த வாழ்வில் அனுபவிக்கப்படுவதற்காக உள்ளன. அத்துடனன்றி, இந்நல்ல வாழ்வாதாரங்கள் உயிர்த்தெழுப்பப்படுகின்ற நாள் அன்று பிரத்தியேகமாக அவர்களுக்கே உரியதாக இருக்கும். அறிந்திருக்கின்ற மக்களுக்கு இவ்விதமாக இந்த வெளிப்பாடுகளை நாம் விவரிக்கின்றோம்.

7:33

قُل إِنَّما حَرَّمَ رَبِّىَ الفَوٰحِشَ ما ظَهَرَ مِنها وَما بَطَنَ وَالإِثمَ وَالبَغىَ بِغَيرِ الحَقِّ وَأَن تُشرِكوا بِاللَّهِ ما لَم يُنَزِّل بِهِ سُلطٰنًا وَأَن تَقولوا عَلَى اللَّهِ ما لا تَعلَمونَ

கூறுவீராக, பகிரங்கமானவையாகவோ அல்லது மறைக்கப்பட்டவையாகவோ அவை இருப்பினும், தீய செயல்களையும், அன்றி பாவங்களையும், நியாயப்படுத்த இயலாத வலுச்சண்டையையும், கடவுளுடன் சக்தியற்ற போலித் தெய்வங்களை அமைத்துக்கொள்வதையும், கடவுளைப் பற்றி நீங்கள் அறியாதவற்றைக் கூறுவதையும் மட்டுமே என்னுடைய இரட்சகர் தடை செய்கின்றார்.

7:34

وَلِكُلِّ أُمَّةٍ أَجَلٌ فَإِذا جاءَ أَجَلُهُم لا يَستَأخِرونَ ساعَةً وَلا يَستَقدِمونَ

ஒவ்வொரு சமுதாயத்திற்கும், முன்னரே தீர்மானிக்கப்பட்டதொரு வாழ்க்கைத் தவணை உள்ளது. அவர்களுடைய அவகாசம் ஒரு முடிவிற்கு வந்துவிட்டால், ஒரு மணி நேரமும் அதனைத் தாமதப்படுத்தவோ, அல்லது அதனை முற்படுத்தவோ அவர்களால் இயலாது.

7:35

يٰبَنى ءادَمَ إِمّا يَأتِيَنَّكُم رُسُلٌ مِنكُم يَقُصّونَ عَلَيكُم ءايٰتى فَمَنِ اتَّقىٰ وَأَصلَحَ فَلا خَوفٌ عَلَيهِم وَلا هُم يَحزَنونَ

ஆதமுடைய சந்ததியினரே, உங்களில் இருந்தே தூதர்கள் உங்களிடம் வந்து, மேலும் என்னுடைய வெளிப்பாடுகளை உங்களிடம் எடுத்துக் கூறும் போது, கவனத்தில் எடுத்துக்கொள்வதுடன் நன்னெறியானதொரு வாழ்வு நடத்துகின்றவர்கள், அச்சம் கொள்ள எதுவும் இருக்காது, அன்றி அவர்கள் கவலைப்படவும் மாட்டார்கள்.

7:36

وَالَّذينَ كَذَّبوا بِـٔايٰتِنا وَاستَكبَروا عَنها أُولٰئِكَ أَصحٰبُ النّارِ هُم فيها خٰلِدونَ

நம்முடைய வெளிப்பாடுகளை ஏற்கமறுப்பதுடன், அவற்றை ஆதரிக்க மிகவும் ஆணவம் கொண்டவர்களாக இருப்பவர்களைப் பொறுத்தவரை, அவர்கள் நரகத்திற்கு உள்ளாகிவிட்டனர், அங்கே அவர்கள் என்றென்றும் தங்கியிருப்பார்கள்.

7:37

فَمَن أَظلَمُ مِمَّنِ افتَرىٰ عَلَى اللَّهِ كَذِبًا أَو كَذَّبَ بِـٔايٰتِهِ أُولٰئِكَ يَنالُهُم نَصيبُهُم مِنَ الكِتٰبِ حَتّىٰ إِذا جاءَتهُم رُسُلُنا يَتَوَفَّونَهُم قالوا أَينَ ما كُنتُم تَدعونَ مِن دونِ اللَّهِ قالوا ضَلّوا عَنّا وَشَهِدوا عَلىٰ أَنفُسِهِم أَنَّهُم كانوا كٰفِرينَ

கடவுளைப் பற்றிப் பொய்களை உருவாக்குபவர்கள், அல்லது அவருடைய வெளிப்பாடுகளை நிராகரிப்பவர்களை விடவும் மிகத்தீயவர்கள் யார்? வேதத்திற்கு ஏற்ப, இவர்கள் தங்களுடைய பங்கினைப் பெறுவார்கள், பின்னர், அவர்களுடைய வாழ்வுகளை முடிப்பதற்காக நம்முடைய தூதர்கள் வரும் பொழுது, அவர்கள் கூறுவார்கள், கடவுளுடன் நீங்கள் இறைஞ்சிக் கொண்டிருந்த அந்த போலித் தெய்வங்கள் எங்கே? அவர்கள் கூறுவார்கள், அவை எங்களைக் கைவிட்டுவிட்டன. அவர்கள் நம்பமறுப்பவர்களாகவே இருந்தனர் என்று அவர்கள் தங்களுக்கெதிராகவே சாட்சி பகர்வார்கள்.

7:38

قالَ ادخُلوا فى أُمَمٍ قَد خَلَت مِن قَبلِكُم مِنَ الجِنِّ وَالإِنسِ فِى النّارِ كُلَّما دَخَلَت أُمَّةٌ لَعَنَت أُختَها حَتّىٰ إِذَا ادّٰرَكوا فيها جَميعًا قالَت أُخرىٰهُم لِأولىٰهُم رَبَّنا هٰؤُلاءِ أَضَلّونا فَـٔاتِهِم عَذابًا ضِعفًا مِنَ النّارِ قالَ لِكُلٍّ ضِعفٌ وَلٰكِن لا تَعلَمونَ

அவர் கூறுவார், ஜின்கள் மற்றும் மானிடர்களின் முந்திய இச்சமுதாயங்களுடன் நரகத்திற்குள் நுழையுங்கள். ஒவ்வொரு முறையும் ஒரு கூட்டம் நுழையும் போதும், தங்களுடைய முன்னோர்களின் கூட்டத்தை அவர்கள் சபிப்பார்கள். அவர்கள் அனைவரும் அதில் இருக்கும் போது, முந்தியவர்களைப் பற்றிப் பிந்தியவர்கள் கூறுவார்கள், எங்கள் இரட்சகரே, இவர்கள்தான் எங்களைத் தவறாக வழிநடத்தியவர்கள். நரகத்தின் தண்டனையை இருமடங்காக அவர்களுக்குக் கொடுப்பீராக. அவர் கூறுவார், ஒவ்வொருவரும் இரு மடங்கினையே பெறுகின்றீர்கள், ஆனால் நீங்கள் அறிய மாட்டீர்கள்.

7:39

وَقالَت أولىٰهُم لِأُخرىٰهُم فَما كانَ لَكُم عَلَينا مِن فَضلٍ فَذوقُوا العَذابَ بِما كُنتُم تَكسِبونَ

முன்னோர்களின் கூட்டமானது பிந்திய கூட்டத்தை நோக்கிக் கூறும், எங்களை விடவும் சாதகமான சூழ்நிலையை நீங்கள் பெற்றிருந்ததால், உங்களுடைய சொந்தப் பாவங்களுக்குரிய தண்டனையைச் சுவையுங்கள்

7:40

إِنَّ الَّذينَ كَذَّبوا بِـٔايٰتِنا وَاستَكبَروا عَنها لا تُفَتَّحُ لَهُم أَبوٰبُ السَّماءِ وَلا يَدخُلونَ الجَنَّةَ حَتّىٰ يَلِجَ الجَمَلُ فى سَمِّ الخِياطِ وَكَذٰلِكَ نَجزِى المُجرِمينَ

நிச்சயமாக, நம்முடைய வெளிப்பாடுகளை ஏற்கமறுப்பதுடன், அவற்றை ஆதரிக்க மிகவும் ஆணவம் கொண்டவர்களாக இருப்போருக்கு, ஆகாயத்தின் வாசல்கள் ஒருபோதும் அவர்களுக்காகத் திறக்காது, அன்றி ஊசியின் காதிற்குள் ஒட்டகம் கடந்து செல்கின்ற வரை அவர்கள் சுவனத்திற்குள் நுழைய மாட்டார்கள். குற்றவாளிகளுக்கு இவ்விதமாகவே நாம் கூலி கொடுப்போம்.

7:41

لَهُم مِن جَهَنَّمَ مِهادٌ وَمِن فَوقِهِم غَواشٍ وَكَذٰلِكَ نَجزِى الظّٰلِمينَ

நரகத்தை ஒரு தங்குமிடமாக அவர்கள் அடைந்துவிட்டார்கள்; அவர்களுக்கு மேல் தடுப்புகளை அவர்கள் கொண்டிருப்பார்கள். வரம்புமீறுகின்றவர்களுக்கு இவ்விதமாகவே நாம் கூலி கொடுப்போம்.

7:42

وَالَّذينَ ءامَنوا وَعَمِلُوا الصّٰلِحٰتِ لا نُكَلِّفُ نَفسًا إِلّا وُسعَها أُولٰئِكَ أَصحٰبُ الجَنَّةِ هُم فيها خٰلِدونَ

நம்பிக்கை கொண்டு நன்னெறியானதொரு வாழ்வு நடத்துகின்றவர்களைப் பொறுத்த வரை - எந்த ஆத்மாவுக்கும் அதன் சக்திக்கு அப்பால் நாம் ஒருபோதும் சுமத்துவதில்லை - இவர்கள் சுவனவாசிகளாக இருப்பார்கள். அவர்கள் அதனில் என்றென்றும் தங்கியிருப்பார்கள்.

7:43

وَنَزَعنا ما فى صُدورِهِم مِن غِلٍّ تَجرى مِن تَحتِهِمُ الأَنهٰرُ وَقالُوا الحَمدُ لِلَّهِ الَّذى هَدىٰنا لِهٰذا وَما كُنّا لِنَهتَدِىَ لَولا أَن هَدىٰنَا اللَّهُ لَقَد جاءَت رُسُلُ رَبِّنا بِالحَقِّ وَنودوا أَن تِلكُمُ الجَنَّةُ أورِثتُموها بِما كُنتُم تَعمَلونَ

அவர்களுடைய இதயங்களில் இருந்து அனைத்துப் பொறாமையையும் நாம் நீக்கிவிடுவோம். அவர்களுக்குக் கீழே நதிகள் ஓடிக் கொண்டிருக்கும், மேலும் அவர்கள் கூறுவார்கள், எங்களை வழிநடத்தியதற்காகக் கடவுள் புகழப்பட்டவராக இருப்பாராக. கடவுள் எங்களை வழிநடத்தியிருக்காவிட்டால், நாங்கள் வழிநடத்தப்பட்டவர்களாக இருந்திருக்கச் சாத்தியமில்லை. எங்கள் இரட்சகருடைய தூதர்கள் சத்தியத்தையே கொண்டு வந்தனர். அவர்கள் அழைக்கப்படுவார்கள்: இதுவே உங்களுடைய சுவனமாகும். உங்களுடைய காரியங்களின் பலனாக, இதற்கு நீங்கள் வாரிசுகளாகிவிட்டீர்கள்.

7:44

وَنادىٰ أَصحٰبُ الجَنَّةِ أَصحٰبَ النّارِ أَن قَد وَجَدنا ما وَعَدَنا رَبُّنا حَقًّا فَهَل وَجَدتُم ما وَعَدَ رَبُّكُم حَقًّا قالوا نَعَم فَأَذَّنَ مُؤَذِّنٌ بَينَهُم أَن لَعنَةُ اللَّهِ عَلَى الظّٰلِمينَ

சுவனவாசிகள் நரகவாசிகளை அழைப்பார்கள்: எங்களுடைய இரட்சகரின் வாக்குறுதி சத்தியமானதாக இருப்பதை நாங்கள் கண்டு கொண்டோம், உங்களுடைய இரட்சகரின் வாக்குறுதி சத்தியமானதாக இருப்பதை நீங்கள் கண்டு கொண்டீர்களா? அவர்கள் கூறுவார்கள், ஆம். அவர்களுக்கிடையில் அறிவிப்பாளர் ஒருவர் அறிவிப்பார்: வரம்புமீறுகின்றவர்களின் மீது கடவுளின் கண்டனம் நேரிட்டுவிட்டது;

7:45

الَّذينَ يَصُدّونَ عَن سَبيلِ اللَّهِ وَيَبغونَها عِوَجًا وَهُم بِالـٔاخِرَةِ كٰفِرونَ

அவர்கள் கடவுளின் பாதையிலிருந்து விரட்டியடித்து, மேலும் அதனைக் கோணலாக்கப் பாடுபடுபவர்கள், மேலும் மறுவுலகத்தைக் குறித்து அவர்கள் நம்பமறுப்பவர்களாக இருக்கின்றனர்.

7:46

وَبَينَهُما حِجابٌ وَعَلَى الأَعرٰفِ رِجالٌ يَعرِفونَ كُلًّا بِسيمىٰهُم وَنادَوا أَصحٰبَ الجَنَّةِ أَن سَلٰمٌ عَلَيكُم لَم يَدخُلوها وَهُم يَطمَعونَ

அவர்களை ஒரு தடுப்பு பிரிக்கின்றது, அதே சமயம் ஒவ்வொரு தரப்பினரையும் அவர்களுடைய தோற்றங்களைக் கொண்டு அடையாளம் கண்டு கொள்கின்ற மக்களால் ஆத்ம சுத்திகரிப்பு ஸ்தலமானது* நிறைந்திருக்கும். அவர்கள் சுவனவாசிகளை அழைப்பார்கள்: உங்கள் மீது சாந்தி நிலவுவதாக. ஆசை மிகு எண்ணங்கள் மூலமேயன்றி (சுவனத்தில்) அவர்கள் நுழைந்திடவில்லை.

7:47

وَإِذا صُرِفَت أَبصٰرُهُم تِلقاءَ أَصحٰبِ النّارِ قالوا رَبَّنا لا تَجعَلنا مَعَ القَومِ الظّٰلِمينَ

நரகவாசிகளின் பால் தங்களுடைய கண்களை அவர்கள் திருப்பும்பொழுது, அவர்கள் கூறுவார்கள், எங்கள் இரட்சகரே, இந்தத் தீய மக்களுடன் எங்களைப் போட்டுவிடாதீர்.

7:48

وَنادىٰ أَصحٰبُ الأَعرٰفِ رِجالًا يَعرِفونَهُم بِسيمىٰهُم قالوا ما أَغنىٰ عَنكُم جَمعُكُم وَما كُنتُم تَستَكبِرونَ

அவர்களுடைய தோற்றங்களைக் கொண்டு அவர்கள் அடையாளம் கண்டு கொள்ளும் மக்களை, ஆத்ம சுத்திகரிப்பு ஸ்தலவாசிகள் அழைத்து, உங்களுடைய மாபெரும் எண்ணிக்கைகளோ, அன்றி உங்களுடைய ஆணவமோ எவ்வகையிலும் உங்களுக்குப் பலனளிக்கவில்லை, என்று கூறுவார்கள்.

7:49

أَهٰؤُلاءِ الَّذينَ أَقسَمتُم لا يَنالُهُمُ اللَّهُ بِرَحمَةٍ ادخُلُوا الجَنَّةَ لا خَوفٌ عَلَيكُم وَلا أَنتُم تَحزَنونَ

கடவுள் அவர்களையெல்லாம் கருணையைக் கொண்டு ஒருபோதும் தொடமாட்டார் என்று நீங்கள் சத்தியமிட்ட மக்கள் அவர்கள்தானே? (ஆத்ம சுத்திகரிப்பு ஸ்தலத்தில் உள்ள அம்மக்கள் பின்னர் கூறப்படுவார்கள்,) சுவனத்தில் நுழையுங்கள்; நீங்கள் அச்சம் கொள்ள ஒன்றுமில்லை, அன்றி நீங்கள் கவலைப்படவும் மாட்டீர்கள்.

7:50

وَنادىٰ أَصحٰبُ النّارِ أَصحٰبَ الجَنَّةِ أَن أَفيضوا عَلَينا مِنَ الماءِ أَو مِمّا رَزَقَكُمُ اللَّهُ قالوا إِنَّ اللَّهَ حَرَّمَهُما عَلَى الكٰفِرينَ

நரகவாசிகளானவர்கள் சுவனத்தில் வசிப்பவர்களை அழைப்பார்கள்: உங்களுடைய தண்ணீரில் கொஞ்சமோ, அல்லது உங்களுக்குரிய கடவுளின் வாழ்வாதாரங்களில் கொஞ்சமோ எங்களை நோக்கிப் பாய்கின்றவாறு செய்வீர்களாக. அவர்கள் கூறுவார்கள், நம்பமறுப்பவர்களுக்குக் கடவுள் அவற்றைத் தடுத்துவிட்டார்.

7:51

الَّذينَ اتَّخَذوا دينَهُم لَهوًا وَلَعِبًا وَغَرَّتهُمُ الحَيوٰةُ الدُّنيا فَاليَومَ نَنسىٰهُم كَما نَسوا لِقاءَ يَومِهِم هٰذا وَما كانوا بِـٔايٰتِنا يَجحَدونَ

எவர்கள் தங்களுடைய மார்க்கத்தைக் கவனமாக எடுத்துக்கொள்ளாததுடன், இந்த உலகாதாய வாழ்வில் முற்றிலும் மூழ்கியவர்களாக இருக்கின்றனரோ, அவர்கள் அந்த நாளை மறந்துவிட்ட காரணத்தாலும் நம்முடைய வெளிப்பாடுகளை அவர்கள் வெறுத்தொதுக்கிய காரணத்தாலும் அந்நாள் அன்று அவர்களை நாம் மறந்துவிடுகின்றோம்.

7:52

وَلَقَد جِئنٰهُم بِكِتٰبٍ فَصَّلنٰهُ عَلىٰ عِلمٍ هُدًى وَرَحمَةً لِقَومٍ يُؤمِنونَ

அறிவு, வழிகாட்டல் கொண்டு அவர்களுக்கு முற்றிலும் விவரிக்கப்பட்டுள்ள ஒரு வேதத்தையும், நம்பிக்கை கொண்ட மக்களுக்குக் கருணையையும் நாம் தந்திருக்கின்றோம்.

7:53

هَل يَنظُرونَ إِلّا تَأويلَهُ يَومَ يَأتى تَأويلُهُ يَقولُ الَّذينَ نَسوهُ مِن قَبلُ قَد جاءَت رُسُلُ رَبِّنا بِالحَقِّ فَهَل لَنا مِن شُفَعاءَ فَيَشفَعوا لَنا أَو نُرَدُّ فَنَعمَلَ غَيرَ الَّذى كُنّا نَعمَلُ قَد خَسِروا أَنفُسَهُم وَضَلَّ عَنهُم ما كانوا يَفتَرونَ

(முன்னறிவிப்புக்கள்) அனைத்தும் பூர்த்தியாவதற்காக அவர்கள் காத்திருக்கின்றனரா? அத்தகைய பூர்த்தியாதல் நிகழ்ந்தேறும் நாளில், கடந்த காலத்தில் அதனை அலட்சியம் செய்தவர்கள் கூறுவார்கள், நம்முடைய இரட்சகரின் தூதர்கள் சத்தியத்தையே கொண்டு வந்திருந்தனர். நம் சார்பாகப் பரிந்துரைக்க பரிந்துரையாளர்கள் எவரேனும் இருக்கின்றனரா? எங்களுடைய நடவடிக்கைகளை நாங்கள் மாற்றிக் கொண்டு, மேலும் நாங்கள் செய்து கொண்டிருந்தவற்றை விட மேலான காரியங்களைச் செய்வதற்காக, எங்களை நீர் திருப்பி அனுப்புவீரா? அவர்கள் தங்களுடைய ஆத்மாக்களைத் தவறவிட்டுவிட்டனர், மேலும் அவர்களுடைய சொந்தக் கண்டுபிடிப்புகளே அவர்களுடைய அழிவுக்குக் காரணமாகிவிட்டன.

7:54

إِنَّ رَبَّكُمُ اللَّهُ الَّذى خَلَقَ السَّمٰوٰتِ وَالأَرضَ فى سِتَّةِ أَيّامٍ ثُمَّ استَوىٰ عَلَى العَرشِ يُغشِى الَّيلَ النَّهارَ يَطلُبُهُ حَثيثًا وَالشَّمسَ وَالقَمَرَ وَالنُّجومَ مُسَخَّرٰتٍ بِأَمرِهِ أَلا لَهُ الخَلقُ وَالأَمرُ تَبارَكَ اللَّهُ رَبُّ العٰلَمينَ

உங்களுடைய இரட்சகர்தான் ஒரே கடவுள்; வானங்களையும் பூமியையும் ஆறு நாட்களில்* படைத்து, பின்னர் அனைத்து அதிகாரங்களையும் ஏற்றுக் கொண்டவர். விடாது அதனைத் தொடர்ந்தவாறு, இரவானது பகலினை முந்துகின்றது. மேலும் சூரியன், சந்திரன் மற்றும் நட்சத்திரங்கள் அவருடைய கட்டளையின்படி பணிக்கு உட்படுத்தப்பட்டுள்ளன. பரிபூரணமாக, படைத்தல் அனைத்தையும் கட்டளைகள் அனைத்தையும் அவர் கட்டுப்படுத்துகின்றார். பிரபஞ்சத்தின் இரட்சகரான, கடவுள் மிகவும் உயர்ந்தவராக இருக்கின்றார்.

7:55

ادعوا رَبَّكُم تَضَرُّعًا وَخُفيَةً إِنَّهُ لا يُحِبُّ المُعتَدينَ

உங்களுடைய இரட்சகரைப் பகிரங்கமாகவும் அந்தரங்கமாகவும் நீங்கள் வழிபட வேண்டும்; வரம்புமீறுகின்றவர்களை அவர் நேசிப்பதில்லை.

7:56

وَلا تُفسِدوا فِى الأَرضِ بَعدَ إِصلٰحِها وَادعوهُ خَوفًا وَطَمَعًا إِنَّ رَحمَتَ اللَّهِ قَريبٌ مِنَ المُحسِنينَ

பூமியை, அது சீரானதாக ஆக்கப்பட்டுவிட்ட பின்னர் சீர்கெடுக்காதீர்கள், மேலும் பக்தியுடனும், எதிர்பார்ப்புடனும், அவரை வழிபடுங்கள். நிச்சயமாக, கடவுளின் கருணை நன்னெறியாளர்களால் அடையப்படக் கூடியதாகவே உள்ளது.

7:57

وَهُوَ الَّذى يُرسِلُ الرِّيٰحَ بُشرًا بَينَ يَدَى رَحمَتِهِ حَتّىٰ إِذا أَقَلَّت سَحابًا ثِقالًا سُقنٰهُ لِبَلَدٍ مَيِّتٍ فَأَنزَلنا بِهِ الماءَ فَأَخرَجنا بِهِ مِن كُلِّ الثَّمَرٰتِ كَذٰلِكَ نُخرِجُ المَوتىٰ لَعَلَّكُم تَذَكَّرونَ

அவருடைய கரங்களிலிருந்து ஒரு கருணையாக, நல்ல சகுனத்துடன், காற்றை அனுப்புகின்றவர் அவர்தான். கனத்த மேகங்களை அவை ஒன்று திரட்டியவுடன், இறந்துவிட்ட நிலங்களின் பால் அவற்றை நாம் ஓட்டுகின்றோம், மேலும் அதிலிருந்து தண்ணீரை இறக்கி அனுப்புகின்றோம், அதனைக் கொண்டு அனைத்துக் கனிவர்க்கங்களையும் விளைவிப்பதற்காக. இவ்விதமாகவே மரணித்தவர்களை நாம் உயிர்ப்பித்தெழுப்புகின்றோம், நீங்கள் கவனத்தில் எடுத்துக்கொள்ளும் பொருட்டு.

7:58

وَالبَلَدُ الطَّيِّبُ يَخرُجُ نَباتُهُ بِإِذنِ رَبِّهِ وَالَّذى خَبُثَ لا يَخرُجُ إِلّا نَكِدًا كَذٰلِكَ نُصَرِّفُ الـٔايٰتِ لِقَومٍ يَشكُرونَ

நல்ல நிலமானது, அதன் இரட்சகருடைய அனுமதியின்படி அதனுடைய தாவரங்களை உடனடியாக முளைப்பிக்கின்றது, அதே சமயம் கெட்ட நிலமானது, பயனுள்ள எந்த ஒன்றையும் சொற்பமாகவே முளைப்பிக்கின்றது. நன்றியுடைய மக்களாக இருப்பவர்களுக்கு இவ்வெளிப்பாடுகளை நாம் இவ்விதமாக விவரிக்கின்றோம்.

7:59

لَقَد أَرسَلنا نوحًا إِلىٰ قَومِهِ فَقالَ يٰقَومِ اعبُدُوا اللَّهَ ما لَكُم مِن إِلٰهٍ غَيرُهُ إِنّى أَخافُ عَلَيكُم عَذابَ يَومٍ عَظيمٍ

நோவாவை அவருடைய சமூகத்தாரிடம், என் சமூகத்தாரே, கடவுளை வழிபடுங்கள்; அவருடன் வேறு எந்தத் தெய்வமும் உங்களுக்கு இல்லை. அச்சுறுத்துகின்றதொரு நாளின் தண்டனையை உங்களுக்கு நான் அஞ்சுகின்றேன், என்று கூறியவராக நாம் அனுப்பினோம்.

7:60

قالَ المَلَأُ مِن قَومِهِ إِنّا لَنَرىٰكَ فى ضَلٰلٍ مُبينٍ

அவருடைய சமூகத்தாரில் இருந்த தலைவர்கள் கூறினர், மிக நெடிய வழிதவறுதலில் நீர் இருப்பதை நாங்கள் காண்கின்றோம்.

7:61

قالَ يٰقَومِ لَيسَ بى ضَلٰلَةٌ وَلٰكِنّى رَسولٌ مِن رَبِّ العٰلَمينَ

அவர் கூறினார், என் சமூகத்தாரே, நான் வழிதவறியவனாக இல்லை; நான் பிரபஞ்சத்தின் இரட்சகரிடமிருந்து வந்த ஒரு தூதனாகவே இருக்கின்றேன்.

7:62

أُبَلِّغُكُم رِسٰلٰتِ رَبّى وَأَنصَحُ لَكُم وَأَعلَمُ مِنَ اللَّهِ ما لا تَعلَمونَ

என் இரட்சகருடைய தூதுச் செய்தியை நான் உங்களிடம் சேர்ப்பிக்கின்றேன், மேலும் நான் உங்களுக்கு அறிவுறுத்துகின்றேன், மேலும் நீங்கள் அறியாதவற்றைக் கடவுளிடமிருந்து நான் அறிவேன்.

7:63

أَوَعَجِبتُم أَن جاءَكُم ذِكرٌ مِن رَبِّكُم عَلىٰ رَجُلٍ مِنكُم لِيُنذِرَكُم وَلِتَتَّقوا وَلَعَلَّكُم تُرحَمونَ

நீங்கள் கருணையை அடையும் பொருட்டு, உங்களை எச்சரிப்பதற்காகவும், நன்னெறியின் பால் உங்களை வழிநடத்துவதற்காகவும், உங்களைப் போன்ற ஒரு மனிதன் மூலம், உங்களுடைய இரட்சகரிடமிருந்து உங்களுக்கு ஒரு நினைவூட்டல் வருவதென்பது மிகவும் ஆச்சர்யமான ஒன்றாக இருக்கின்றதா?

7:64

فَكَذَّبوهُ فَأَنجَينٰهُ وَالَّذينَ مَعَهُ فِى الفُلكِ وَأَغرَقنَا الَّذينَ كَذَّبوا بِـٔايٰتِنا إِنَّهُم كانوا قَومًا عَمينَ

அவர்கள் அவரை ஏற்கமறுத்தனர், அதன் விளைவாக, அவரையும் மரக்கலத்தில் அவருடன் இருந்தவர்களையும் நாம் காப்பாற்றினோம், அத்துடன் நம்முடைய வெளிப்பாடுகளை நிராகரித்தவர்களை மூழ்கடித்தோம்; அவர்கள் குருடர்களாக இருந்தனர்.

7:65

وَإِلىٰ عادٍ أَخاهُم هودًا قالَ يٰقَومِ اعبُدُوا اللَّهَ ما لَكُم مِن إِلٰهٍ غَيرُهُ أَفَلا تَتَّقونَ

ஆதுகளிடம் அவர்களுடைய சகோதரர் ஹூதை நாம் அனுப்பினோம். அவர் கூறினார், என் சமூகத்தாரே, கடவுளை வழிபடுங்கள்; அவருடன் வேறு தெய்வம் எதுவும் உங்களுக்கு இல்லை. இப்போதாவது நீங்கள் நன்னெறியைக் கடைப்பிடிக்க மாட்டீர்களா?

7:66

قالَ المَلَأُ الَّذينَ كَفَروا مِن قَومِهِ إِنّا لَنَرىٰكَ فى سَفٰهَةٍ وَإِنّا لَنَظُنُّكَ مِنَ الكٰذِبينَ

அவருடைய சமூகத்தாரில் இருந்த நம்பமறுத்தவர்களான தலைவர்கள் கூறினர், நீர் முட்டாள்தனமாக நடந்து கொண்டிருப்பதை நாங்கள் காண்கின்றோம், மேலும் நீர் ஒரு பொய்யர் என்றே நாங்கள் நினைக்கின்றோம்.

7:67

قالَ يٰقَومِ لَيسَ بى سَفٰهَةٌ وَلٰكِنّى رَسولٌ مِن رَبِّ العٰلَمينَ

அவர் கூறினார், என் சமூகத்தாரே, என்னிடம் எந்த முட்டாள்தனமும் இல்லை; நான் பிரபஞ்சத்தின் இரட்சகரிடமிருந்து வந்த ஒரு தூதனாகவே இருக்கின்றேன்.

7:68

أُبَلِّغُكُم رِسٰلٰتِ رَبّى وَأَنا۠ لَكُم ناصِحٌ أَمينٌ

என்னுடைய இரட்சகரின் தூதுச் செய்திகளை நான் உங்களிடம் சேர்ப்பிக்கின்றேன், மேலும் நான் நேர்மையாக உங்களுக்கு அறிவுறுத்துகின்றேன்.

7:69

أَوَعَجِبتُم أَن جاءَكُم ذِكرٌ مِن رَبِّكُم عَلىٰ رَجُلٍ مِنكُم لِيُنذِرَكُم وَاذكُروا إِذ جَعَلَكُم خُلَفاءَ مِن بَعدِ قَومِ نوحٍ وَزادَكُم فِى الخَلقِ بَسْطَةً فَاذكُروا ءالاءَ اللَّهِ لَعَلَّكُم تُفلِحونَ

உங்களை எச்சரிப்பதற்காக, உங்களைப் போன்ற ஒரு மனிதர் மூலம், உங்களுடைய இரட்சகரிடமிருந்து உங்களுக்கு ஒரு தூதுச் செய்தி வருவதென்பது மிகவும் ஆச்சர்யமான ஒன்றாக இருக்கின்றதா? நோவாவின் சமூகத்தாருக்குப் பின்னர் உங்களை அவர் வாரிசுகளாக ஆக்கியதையும், உங்களுடைய எண்ணிக்கையைப் பெருக்கியதையும் நினைவு கூர்ந்திடுங்கள். நீங்கள் வெற்றியடையும் பொருட்டு, கடவுளின் ஆசீர்வாதங்களை நினைவில் கொள்ளுங்கள்.

7:70

قالوا أَجِئتَنا لِنَعبُدَ اللَّهَ وَحدَهُ وَنَذَرَ ما كانَ يَعبُدُ ءاباؤُنا فَأتِنا بِما تَعِدُنا إِن كُنتَ مِنَ الصّٰدِقينَ

அவர்கள் கூறினர், நாங்கள் கடவுளை மட்டும் வழிபடவும், எங்களுடைய பெற்றோர்கள் வழிபட்டு வந்தவற்றைக் கைவிட்டுவிடவும் செய்வதற்காகத்தான் நீர் வந்திருக்கின்றீரா? நீர் உண்மையாளராக இருந்தால், எங்களை நீர் பயமுறுத்துகின்ற அந்த அழிவை கொண்டு வருமாறு உம்மிடம் நாங்கள் சவால் விடுகின்றோம்.

7:71

قالَ قَد وَقَعَ عَلَيكُم مِن رَبِّكُم رِجسٌ وَغَضَبٌ أَتُجٰدِلونَنى فى أَسماءٍ سَمَّيتُموها أَنتُم وَءاباؤُكُم ما نَزَّلَ اللَّهُ بِها مِن سُلطٰنٍ فَانتَظِروا إِنّى مَعَكُم مِنَ المُنتَظِرينَ

அவர் கூறினார், நீங்கள் உங்களுடைய இரட்சகரிடமிருந்து கண்டனத்திற்கும் கடுங்கோபத்திற்கும் உள்ளாகிவிட்டீர்கள். கடவுளால் ஒருபோதும் அங்கீகரிக்கப்படாத, நீங்கள் புனைந்து கொண்ட - நீங்களும் உங்களுடைய பெற்றோர்களும் - புதுமைகளைக் காப்பாற்றுவதற்காக என்னுடன் நீங்கள் வாதிடுகின்றீர்களா? அப்படியென்றால், காத்திருங்கள், நானும் உங்களுடன் சேர்ந்து காத்துக் கொண்டிருப்பேன்.

7:72

فَأَنجَينٰهُ وَالَّذينَ مَعَهُ بِرَحمَةٍ مِنّا وَقَطَعنا دابِرَ الَّذينَ كَذَّبوا بِـٔايٰتِنا وَما كانوا مُؤمِنينَ

பின்னர் அவரையும் அவருடன் இருந்தவர்களையும், நம்மிடமிருந்துள்ள கருணையால் காப்பாற்றினோம், அத்துடன் நம்முடைய வெளிப்பாடுகளை ஏற்கமறுத்தவர்களையும் நம்பிக்கையாளர்களாக இருக்க மறுத்தவர்களையும் நாம் அழித்தொழித்தோம்.

7:73

وَإِلىٰ ثَمودَ أَخاهُم صٰلِحًا قالَ يٰقَومِ اعبُدُوا اللَّهَ ما لَكُم مِن إِلٰهٍ غَيرُهُ قَد جاءَتكُم بَيِّنَةٌ مِن رَبِّكُم هٰذِهِ ناقَةُ اللَّهِ لَكُم ءايَةً فَذَروها تَأكُل فى أَرضِ اللَّهِ وَلا تَمَسّوها بِسوءٍ فَيَأخُذَكُم عَذابٌ أَليمٌ

தமூதுகளிடம் அவர்களுடைய சகோதரர் ஸாலிஹை நாம் அனுப்பினோம். அவர் கூறினார், என் சமூகத்தாரே, கடவுளை வழிபடுங்கள்; அவருடன் வேறு தெய்வம் எதுவும் உங்களுக்கு இல்லை. உங்களுடைய இரட்சகரிடமிருந்து உங்களுக்குச் சான்று வழங்கப்பட்டுள்ளது: உங்களுக்கு ஓர் அத்தாட்சியாகத் திகழ, இதோ கடவுளின் ஒட்டகம் உள்ளது. கடவுளின் நிலத்திலிருந்து அதனை உண்ண அனுமதியுங்கள், அத்துடன் வலி நிறைந்ததொரு தண்டனைக்கு நீங்கள் உள்ளாகிவிடாதிருக்கும் பொருட்டு, எந்தத் தீங்கையும் கொண்டு அதனைத் தீண்டாதீர்கள்.

7:74

وَاذكُروا إِذ جَعَلَكُم خُلَفاءَ مِن بَعدِ عادٍ وَبَوَّأَكُم فِى الأَرضِ تَتَّخِذونَ مِن سُهولِها قُصورًا وَتَنحِتونَ الجِبالَ بُيوتًا فَاذكُروا ءالاءَ اللَّهِ وَلا تَعثَوا فِى الأَرضِ مُفسِدينَ

ஆதுகளுக்குப் பின்னர் அவர் உங்களை வாரிசுகளாக ஆக்கியதையும், மேலும் பூமியின் மீது, அதன் பள்ளத்தாக்குகளில் மாளிகைகளைக் கட்டிக் கொள்ளுமாறு, அதன் மலைகளில் இருந்து வீடுகளைக் குடைந்து கொள்ளுமாறு, உங்களை நிலைப்படுத்தியதையும் நினைவு கூர்ந்திடுங்கள். நீங்கள் கடவுளின் ஆசீர்வாதங்களை நினைவில் கொள்ள வேண்டும், அத்துடன் சீர்கெடுக்கும் விதமாக பூமியைச் சுற்றித் திரியாதீர்கள்.

7:75

قالَ المَلَأُ الَّذينَ استَكبَروا مِن قَومِهِ لِلَّذينَ استُضعِفوا لِمَن ءامَنَ مِنهُم أَتَعلَمونَ أَنَّ صٰلِحًا مُرسَلٌ مِن رَبِّهِ قالوا إِنّا بِما أُرسِلَ بِهِ مُؤمِنونَ

அவருடைய சமூகத்தாரில் இருந்த ஆணவம் கொண்ட தலைவர்கள் நம்பிக்கை கொண்டவர்களான பொதுமக்களிடம் கூறினர், ஸாலிஹ் அவருடைய இரட்சகரால் அனுப்பப்பட்டிருப்பவர் என்பது எப்படி உங்களுக்குத் தெரியும்? அவர்கள் கூறினர், அவர் கொண்டு வந்த தூதுச் செய்திதான் எங்களை நம்பிக்கையாளர்களாக ஆக்கியது.

7:76

قالَ الَّذينَ استَكبَروا إِنّا بِالَّذى ءامَنتُم بِهِ كٰفِرونَ

ஆணவம் கொண்டவர்கள் கூறினர், நீங்கள் நம்பிக்கை கொண்டிருப்பதன் மீது நாங்கள் நம்பிக்கை கொள்ள மறுக்கின்றோம்.

7:77

فَعَقَرُوا النّاقَةَ وَعَتَوا عَن أَمرِ رَبِّهِم وَقالوا يٰصٰلِحُ ائتِنا بِما تَعِدُنا إِن كُنتَ مِنَ المُرسَلينَ

அதன் பின்னர், அவர்கள் அவ்வொட்டகத்தைக் கொன்றுவிட்டனர், அவர்களுடைய இரட்சகரின் கட்டளைக்கெதிராகக் கலகம் செய்தனர், மேலும் கூறினர், ஸாலிஹே, மெய்யாகவே நீர் ஒரு தூதராக இருந்தால், நீர் எங்களை அச்சுறுத்திக் கொண்டிருக்கின்ற அந்த அழிவைக் கொண்டு வாரும்.

7:78

فَأَخَذَتهُمُ الرَّجفَةُ فَأَصبَحوا فى دارِهِم جٰثِمينَ

அதன் விளைவாக, இறந்தவர்களாக அவர்களை அவர்களுடைய வீடுகளில் விட்டுவிட்டு, அதிர்வானது அவர்களை அழித்தொழித்தது.

7:79

فَتَوَلّىٰ عَنهُم وَقالَ يٰقَومِ لَقَد أَبلَغتُكُم رِسالَةَ رَبّى وَنَصَحتُ لَكُم وَلٰكِن لا تُحِبّونَ النّٰصِحينَ

அவர், என் சமூகத்தாரே, என் இரட்சகரின் தூதுச் செய்தியை உங்களிடம் நான் சேர்ப்பித்துவிட்டேன், மேலும் உங்களுக்கு அறிவுறுத்தினேன், ஆனால் அறிவுரை கூறுபவர்கள் எவரையும் நீங்கள் விரும்புவதில்லை, என்று கூறியவராக அவர்களிடமிருந்து திரும்பிக் கொண்டார்.

7:80

وَلوطًا إِذ قالَ لِقَومِهِ أَتَأتونَ الفٰحِشَةَ ما سَبَقَكُم بِها مِن أَحَدٍ مِنَ العٰلَمينَ

லோத் தன் சமூகத்தாரிடம் கூறினார், எத்தகையதொரு அருவருக்கத்தக்கதை நீங்கள் புரிகின்றீர்கள்; இவ்வுலகில் எவரொருவரும் முன்னர் இதனைச் செய்ததில்லை!

7:81

إِنَّكُم لَتَأتونَ الرِّجالَ شَهوَةً مِن دونِ النِّساءِ بَل أَنتُم قَومٌ مُسرِفونَ

பெண்களை விடுத்து ஆண்களுடன் நீங்கள் பாலுறவு கொள்கின்றீர்கள். உண்மையில், நீங்கள் வரம்புமீறுகின்ற ஒரு கூட்டத்தாராகவே இருக்கின்றீர்கள்.

7:82

وَما كانَ جَوابَ قَومِهِ إِلّا أَن قالوا أَخرِجوهُم مِن قَريَتِكُم إِنَّهُم أُناسٌ يَتَطَهَّرونَ

அவருடைய சமூகத்தார், உங்களுடைய நகரத்தில் இருந்து அவர்களை வெளியேற்றிவிடுங்கள், அவர்கள் தூய்மையாக இருக்க விரும்புகின்ற மக்களாக உள்ளனர், என்று கூறியவாறு மறுமொழியளித்தனர்.

7:83

فَأَنجَينٰهُ وَأَهلَهُ إِلَّا امرَأَتَهُ كانَت مِنَ الغٰبِرينَ

அதன் விளைவாக, அவரையும் அவருடைய குடும்பத்தையும் நாம் காப்பாற்றினோம், ஆனால் அவருடைய மனைவியை அல்ல; அவள் அழிக்கப்பட்டவர்களுடன் இருந்தாள்.

7:84

وَأَمطَرنا عَلَيهِم مَطَرًا فَانظُر كَيفَ كانَ عٰقِبَةُ المُجرِمينَ

ஒருவகையான பொழிவைக் கொண்டு அவர்கள் மீது நாம் பொழிந்தோம்; குற்றவாளிகளுக்கான பின் விளைவுகளைக் கவனித்துப் பார்ப்பீராக.

7:85

وَإِلىٰ مَديَنَ أَخاهُم شُعَيبًا قالَ يٰقَومِ اعبُدُوا اللَّهَ ما لَكُم مِن إِلٰهٍ غَيرُهُ قَد جاءَتكُم بَيِّنَةٌ مِن رَبِّكُم فَأَوفُوا الكَيلَ وَالميزانَ وَلا تَبخَسُوا النّاسَ أَشياءَهُم وَلا تُفسِدوا فِى الأَرضِ بَعدَ إِصلٰحِها ذٰلِكُم خَيرٌ لَكُم إِن كُنتُم مُؤمِنينَ

மித்யனுக்கு அவர்களுடைய சகோதரர் ஷுஐபை நாம் அனுப்பினோம், அவர் கூறினார், என் சமூகத்தாரே, கடவுளை வழிபடுங்கள்; அவருடன் வேறு தெய்வம் எதுவும் உங்களுக்கு இல்லை. உங்களுடைய இரட்சகரிடமிருந்து உங்களுக்குச் சான்று வந்துள்ளது. நீங்கள் வணிகம் செய்யும் போது முழு எடையையும், முழு அளவையையும் நீங்கள் கொடுத்திட வேண்டும். மக்களிடமிருந்து அவர்களுடைய உரிமைகளை ஏய்த்துவிடாதீர்கள். பூமியை, அது சீரானதாக ஆக்கப்பட்டுவிட்ட பின்னர் சீர்கெடுக்காதீர்கள். நீங்கள் நம்பிக்கையாளர்களாக இருந்தால், இதுவே உங்களுக்கு மேலானதாகும்.

7:86

وَلا تَقعُدوا بِكُلِّ صِرٰطٍ توعِدونَ وَتَصُدّونَ عَن سَبيلِ اللَّهِ مَن ءامَنَ بِهِ وَتَبغونَها عِوَجًا وَاذكُروا إِذ كُنتُم قَليلًا فَكَثَّرَكُم وَانظُروا كَيفَ كانَ عٰقِبَةُ المُفسِدينَ

கடவுளின் பாதையிலிருந்து நம்பிக்கை கொண்டவர்களைத் துரத்த நாடியவர்களாக, ஒவ்வொரு பாதையையும் அடைத்துக்கொள்வதிலிருந்து விலகிக் கொள்ளுங்கள், மேலும் அதனைக் கோணலானதாக ஆக்காதீர்கள். நீங்கள் சிலராக இருந்தீர்கள், பின்பு அவர் உங்களுடைய எண்ணிக்கையைப் பெருக்கினார் என்பதை நினைவில் கொள்ளுங்கள். தீயவர்களுக்கான பின் விளைவுகளை நினைவு கூர்ந்திடுங்கள்.

7:87

وَإِن كانَ طائِفَةٌ مِنكُم ءامَنوا بِالَّذى أُرسِلتُ بِهِ وَطائِفَةٌ لَم يُؤمِنوا فَاصبِروا حَتّىٰ يَحكُمَ اللَّهُ بَينَنا وَهُوَ خَيرُ الحٰكِمينَ

இப்போது, எதனைக் கொண்டு நான் அனுப்பப்பட்டேனோ அதில் உங்களில் சிலர் நம்பிக்கை கொண்டு, மேலும் சிலர் நம்பமறுத்துவிட்டதால், நமக்கிடையில் கடவுள் தன் தீர்ப்பை வெளியிடும் வரை காத்திருங்கள்; அவர்தான் மிகச் சிறந்த நீதிபதியாக இருக்கின்றார்.

7:88

قالَ المَلَأُ الَّذينَ استَكبَروا مِن قَومِهِ لَنُخرِجَنَّكَ يٰشُعَيبُ وَالَّذينَ ءامَنوا مَعَكَ مِن قَريَتِنا أَو لَتَعودُنَّ فى مِلَّتِنا قالَ أَوَلَو كُنّا كٰرِهينَ

அவருடைய சமூகத்தாரில் ஆணவம் கொண்ட தலைவர்கள் கூறினர், ஷுஐபே, நீர் எங்களுடைய மார்க்கத்திற்குத் திரும்பி வந்துவிட்டாலேயன்றி, எங்களுடைய நகரத்தில் இருந்து உம்மையும், உம்முடன் நம்பிக்கை கொண்டவர்களையும் சேர்த்து நாங்கள் வெளியேற்றிவிடுவோம். அவர் கூறினார், நீங்கள் எங்களைக் கட்டாயப்படுத்தப் போகின்றீர்களா?

7:89

قَدِ افتَرَينا عَلَى اللَّهِ كَذِبًا إِن عُدنا فى مِلَّتِكُم بَعدَ إِذ نَجّىٰنَا اللَّهُ مِنها وَما يَكونُ لَنا أَن نَعودَ فيها إِلّا أَن يَشاءَ اللَّهُ رَبُّنا وَسِعَ رَبُّنا كُلَّ شَىءٍ عِلمًا عَلَى اللَّهِ تَوَكَّلنا رَبَّنَا افتَح بَينَنا وَبَينَ قَومِنا بِالحَقِّ وَأَنتَ خَيرُ الفٰتِحينَ

அதிலிருந்து கடவுள் எங்களைக் காப்பாற்றிவிட்ட பின்னர் உங்களுடைய மார்க்கத்திற்கு நாங்கள் மீண்டும் திரும்பி வந்துவிட்டால் நாங்கள் கடவுளுக்கெதிராக நிந்தனை செய்தவர்களாகிவிடுவோம். எங்கள் இரட்சகரான கடவுளின் நாட்டத்திற்கு எதிராக எவ்வாறு நாங்கள் அதன் பால் மீண்டும் திரும்பி வர இயலும்? எங்களுடைய இரட்சகரின் அறிவு எல்லாப் பொருட்களையும் சூழ்ந்துள்ளது. எங்களுடைய பொறுப்பை நாங்கள் கடவுள் மீது வைத்துவிட்டோம். எங்கள் இரட்சகரே, எங்களுடைய சமூகத்தாரின் மீது தீர்மானமானதொரு வெற்றியை எங்களுக்கு அளிப்பீராக. நீரே மிகச் சிறந்த ஆதரவாளராக இருக்கின்றீர்.

7:90

وَقالَ المَلَأُ الَّذينَ كَفَروا مِن قَومِهِ لَئِنِ اتَّبَعتُم شُعَيبًا إِنَّكُم إِذًا لَخٰسِرونَ

அவருடைய சமூகத்தாரில் நம்பமறுத்துக் கொண்டிருந்த தலைவர்கள் கூறினர், நீங்கள் ஷுஐபைப் பின்பற்றினால், நீங்கள் நஷ்டவாளிகளாக ஆகிவிடுவீர்கள்.

7:91

فَأَخَذَتهُمُ الرَّجفَةُ فَأَصبَحوا فى دارِهِم جٰثِمينَ

இறந்தவர்களாக அவர்களை அவர்களுடைய வீடுகளில் விட்டுவிட்டு, அதிர்வானது அவர்களை அழித்தொழித்தது.

7:92

الَّذينَ كَذَّبوا شُعَيبًا كَأَن لَم يَغنَوا فيهَا الَّذينَ كَذَّبوا شُعَيبًا كانوا هُمُ الخٰسِرينَ

ஷுஐபை ஏற்கமறுத்தவர்கள், அவர்கள் ஒருபோதும் இருந்திராதவர்களைப் போல மறைந்து போயினர். ஷுஐபை ஏற்கமறுத்தவர்கள்தான் நஷ்டவாளிகளாக இருந்தனர்.

7:93

فَتَوَلّىٰ عَنهُم وَقالَ يٰقَومِ لَقَد أَبلَغتُكُم رِسٰلٰتِ رَبّى وَنَصَحتُ لَكُم فَكَيفَ ءاسىٰ عَلىٰ قَومٍ كٰفِرينَ

அவர், என் சமூகத்தாரே, என் இரட்சகரின் தூதுச் செய்திகளை உங்களிடம் நான் சேர்ப்பித்துவிட்டேன், மேலும் உங்களுக்கு நான் அறிவுரையளித்துவிட்டேன். நம்பமறுக்கின்ற மக்களுக்காக நான் எப்படிக் கவலைப்பட இயலும், என்று கூறியவராக அவர்களிடமிருந்து திரும்பிக் கொண்டார்.

7:94

وَما أَرسَلنا فى قَريَةٍ مِن نَبِىٍّ إِلّا أَخَذنا أَهلَها بِالبَأساءِ وَالضَّرّاءِ لَعَلَّهُم يَضَّرَّعونَ

எந்தச் சமூகத்திற்கும் ஒரு நபியை நாம் அனுப்பும் பொழுதெல்லாம், துன்பம் மற்றும் கஷ்டத்தைக் கொண்டு அதன் மக்களை வருத்தினோம். அவர்கள் இறைஞ்சக் கூடும் என்பதற்காக.

7:95

ثُمَّ بَدَّلنا مَكانَ السَّيِّئَةِ الحَسَنَةَ حَتّىٰ عَفَوا وَقالوا قَد مَسَّ ءاباءَنَا الضَّرّاءُ وَالسَّرّاءُ فَأَخَذنٰهُم بَغتَةً وَهُم لا يَشعُرونَ

பின்னர் நாம் அந்தக் கஷ்டத்திற்குப் பதிலாக சாந்தியையும் வளத்தையும் மாற்றியமைத்தோம். ஆனால் அந்தோ, அவர்கள் கவனமற்றவர்களாக மாறியதுடன் கூறினர், வளத்திற்கு முந்திய அந்தக் கஷ்டத்தை அனுபவித்தவர்கள் எங்கள் பெற்றோர்கள்தான். அதன் விளைவாக, அவர்கள் சற்றும் எதிர்பாராத போது திடீரென அவர்களை நாம் தண்டித்தோம்.

7:96

وَلَو أَنَّ أَهلَ القُرىٰ ءامَنوا وَاتَّقَوا لَفَتَحنا عَلَيهِم بَرَكٰتٍ مِنَ السَّماءِ وَالأَرضِ وَلٰكِن كَذَّبوا فَأَخَذنٰهُم بِما كانوا يَكسِبونَ

அந்தச் சமூகங்களின் மக்கள் நம்பிக்கை கொண்டு நன்னெறியுடையவர்களாக மாறியிருந்தால், வானம் மற்றும் பூமியிலிருந்து ஆசீர்வாதங்களை அவர்கள் மீது நாம் பொழிந்திருப்போம். நம்பமறுப்பதென அவர்கள் முடிவெடுத்துவிட்டதனால், அவர்கள் சம்பாதித்தவற்றிற்காக அவர்களை நாம் தண்டித்தோம்.

7:97

أَفَأَمِنَ أَهلُ القُرىٰ أَن يَأتِيَهُم بَأسُنا بَيٰتًا وَهُم نائِمونَ

இன்றைய சமூகங்களின் மக்கள் இரவில் அவர்கள் உறங்கிக் கொண்டிருக்கையில் நம்முடைய தண்டனை அவர்களிடம் வராதென்று உத்தரவாதம் கொண்டிருக்கின்றனரா?

7:98

أَوَأَمِنَ أَهلُ القُرىٰ أَن يَأتِيَهُم بَأسُنا ضُحًى وَهُم يَلعَبونَ

இன்றைய சமூகங்களின் மக்கள் பகற்பொழுதில் அவர்கள் விளையாடிக் கொண்டிருக்கும் பொழுது நம்முடைய தண்டனை அவர்களிடம் வராது என்று உத்தரவாதம் கொண்டிருக்கின்றனரா?

7:99

أَفَأَمِنوا مَكرَ اللَّهِ فَلا يَأمَنُ مَكرَ اللَّهِ إِلَّا القَومُ الخٰسِرونَ

கடவுளின் திட்டங்களை அவர்கள் சாதாரணமாக எடுத்துக் கொண்டனரா? நஷ்டவாளிகளைத் தவிர எவரும் கடவுளின் திட்டங்களைச் சாதாரணமாக எடுத்துக்கொள்ள மாட்டார்கள்.

7:100

أَوَلَم يَهدِ لِلَّذينَ يَرِثونَ الأَرضَ مِن بَعدِ أَهلِها أَن لَو نَشاءُ أَصَبنٰهُم بِذُنوبِهِم وَنَطبَعُ عَلىٰ قُلوبِهِم فَهُم لا يَسمَعونَ

முந்திய தலைமுறைகளுக்குப் பின்னர் பூமிக்கு வாரிசானவர்களுக்கு, நாம் நாடினால், அவர்களுடைய பாவங்களுக்காக அவர்களைத் தண்டித்துவிடவும், மேலும் அவர்கள் செவிடர்களாக மாறிவிடும் வண்ணம், அவர்களுடைய இதயங்களில் முத்திரையிட்டுவிடவும் இயலும் என்று எப்பொழுதாவது தோன்றுகின்றதா?

7:101

تِلكَ القُرىٰ نَقُصُّ عَلَيكَ مِن أَنبائِها وَلَقَد جاءَتهُم رُسُلُهُم بِالبَيِّنٰتِ فَما كانوا لِيُؤمِنوا بِما كَذَّبوا مِن قَبلُ كَذٰلِكَ يَطبَعُ اللَّهُ عَلىٰ قُلوبِ الكٰفِرينَ

அந்தச் சமுதாயங்களின் சரித்திரத்தை நாம் உமக்கு விவரித்துரைக்கின்றோம்: அவர்களுடைய தூதர்கள் தெளிவான சான்றுகளுடன் அவர்களிடம் சென்றனர், ஆனால் அவர்கள் ஏற்கெனவே நிராகரித்துவிட்டவற்றின் மீது நம்பிக்கை கொள்பவர்களாக அவர்கள் இல்லை. கடவுள் இவ்விதமாக நம்பமறுப்பவர்களின் இதயங்களை முத்திரையிட்டுவிடுகின்றார்.

7:102

وَما وَجَدنا لِأَكثَرِهِم مِن عَهدٍ وَإِن وَجَدنا أَكثَرَهُم لَفٰسِقينَ

அவர்களில் அதிகமானோர் தங்களுடைய உடன்படிக்கைகளை அலட்சியம் செய்வதை நாம் கண்டோம்; அவர்களில் அதிகமானோரைத் தீயவர்களாக நாம் கண்டோம்.*

7:103

ثُمَّ بَعَثنا مِن بَعدِهِم موسىٰ بِـٔايٰتِنا إِلىٰ فِرعَونَ وَمَلَإِي۟هِ فَظَلَموا بِها فَانظُر كَيفَ كانَ عٰقِبَةُ المُفسِدينَ

(அந்தத் தூதர்களுக்கு) பின்னர், ஃபேரோ மற்றும் அவனுடைய சமூகத்தாரிடம் நம்முடைய அத்தாட்சிகளுடன், மோஸஸை நாம் அனுப்பினோம், ஆனால் அவர்கள் வரம்புமீறினர். தீயவர்களுக்கான பின் விளைவுகளைக் கவனித்துப் பார்ப்பீராக.

7:104

وَقالَ موسىٰ يٰفِرعَونُ إِنّى رَسولٌ مِن رَبِّ العٰلَمينَ

மோஸஸ் கூறினார், ஃபேரோவே, பிரபஞ்சத்தின் இரட்சகரிடமிருந்து வந்துள்ள ஒரு தூதனாக நான் இருக்கின்றேன்.

7:105

حَقيقٌ عَلىٰ أَن لا أَقولَ عَلَى اللَّهِ إِلَّا الحَقَّ قَد جِئتُكُم بِبَيِّنَةٍ مِن رَبِّكُم فَأَرسِل مَعِىَ بَنى إِسرٰءيلَ

கடவுளைப் பற்றி சத்தியத்தைத் தவிர எதனையும் நான் கூறக் கூடாது என்பது என் மீது கடமையாக உள்ளது. உங்களுடைய இரட்சகரிடமிருந்து ஓர் அத்தாட்சியுடன் நான் உங்களிடம் வந்துள்ளேன்; இஸ்ரேலின் சந்ததியினரைச் செல்ல விட்டுவிடு.

7:106

قالَ إِن كُنتَ جِئتَ بِـٔايَةٍ فَأتِ بِها إِن كُنتَ مِنَ الصّٰدِقينَ

அவன் கூறினான், நீர் ஓர் அத்தாட்சியை வைத்திருப்பீராயின், நீர் உண்மையாளராக இருந்தால், அப்போது அதனைக் கொண்டு வாரும்.

7:107

فَأَلقىٰ عَصاهُ فَإِذا هِىَ ثُعبانٌ مُبينٌ

அவர் தன்னுடைய கைத்தடியைக் கீழே எறிந்தார், உடன் அது பிரம்மாண்டமானதொரு நாகமாக மாறியது.

7:108

وَنَزَعَ يَدَهُ فَإِذا هِىَ بَيضاءُ لِلنّٰظِرينَ

அவர் தன்னுடைய கரத்தினை வெளியே எடுத்தார், உடன் அது பார்ப்பவர்களுக்கு வெண்மையாக இருந்தது.

7:109

قالَ المَلَأُ مِن قَومِ فِرعَونَ إِنَّ هٰذا لَسٰحِرٌ عَليمٌ

ஃபேரோவின் சமூகத்தாரில் இருந்த தலைவர்கள் கூறினர், இவர் ஒரு திறமையான மந்திரவாதி என்பதை விட அதிகம் எதுவுமில்லை.

7:110

يُريدُ أَن يُخرِجَكُم مِن أَرضِكُم فَماذا تَأمُرونَ

உங்களுடைய நாட்டிலிருந்து உங்களை வெளியேற்றிடவே அவர் விரும்புகின்றார்; நீங்கள் பரிந்துரைப்பது என்ன?

7:111

قالوا أَرجِه وَأَخاهُ وَأَرسِل فِى المَدائِنِ حٰشِرينَ

அவர்கள் கூறினர், அவருக்கும் அவருடைய சகோதரருக்கும் அவகாசமளித்துவிட்டு, பின் ஒவ்வொரு நகரத்திற்கும் அழைப்பாளர்களை அனுப்புவீராக.

7:112

يَأتوكَ بِكُلِّ سٰحِرٍ عَليمٍ

அனுபவமிக்க மந்திரவாதிகள் ஒவ்வொருவரையும் அவர்கள் அழைத்து வரட்டும்.

7:113

وَجاءَ السَّحَرَةُ فِرعَونَ قالوا إِنَّ لَنا لَأَجرًا إِن كُنّا نَحنُ الغٰلِبينَ

மந்திரவாதிகள் ஃபேரோவிடம் வந்து கூறினர், நாங்கள் வெற்றியாளர்களானால், எங்களுக்குக் கூலி கொடுக்கப்படும் அல்லவா?

7:114

قالَ نَعَم وَإِنَّكُم لَمِنَ المُقَرَّبينَ

அவன் கூறினான், ஆம் மெய்யாக; நீங்கள் எனக்கு நெருக்கமானவர்களாகவும் கூட ஆகிவிடுவீர்கள்.

7:115

قالوا يٰموسىٰ إِمّا أَن تُلقِىَ وَإِمّا أَن نَكونَ نَحنُ المُلقينَ

அவர்கள் கூறினர், மோஸஸே, ஒன்று நீர் எறியும், அல்லது நாங்கள் எறிகின்றோம்.

7:116

قالَ أَلقوا فَلَمّا أَلقَوا سَحَروا أَعيُنَ النّاسِ وَاستَرهَبوهُم وَجاءو بِسِحرٍ عَظيمٍ

அவர் கூறினார், நீங்கள் எறியுங்கள். அவர்கள் எறிந்த போது, மக்களுடைய கண்களை அவர்கள் திறமையுடன் ஏமாற்றினர், அவர்களைப் பயமுறுத்தினர், மேலும் மகத்தானதொரு மாயாஜாலத்தைத் தோற்றுவித்தனர்.

7:117

وَأَوحَينا إِلىٰ موسىٰ أَن أَلقِ عَصاكَ فَإِذا هِىَ تَلقَفُ ما يَأفِكونَ

பின்னர் நாம் மோஸஸுக்கு உள்ளுணர்வளித்தோம்: உம்முடைய கைத்தடியைக் கீழே எறிவீராக, உடனே அது அவர்கள் உருவாக்கிய அனைத்தையும் விழுங்கிவிட்டது.

7:118

فَوَقَعَ الحَقُّ وَبَطَلَ ما كانوا يَعمَلونَ

இவ்விதமாக, சத்தியமானது மிகைத்தது, அத்துடன் அவர்கள் செய்தவை பயனற்றவையாக்கப்பட்டுவிட்டன.

7:119

فَغُلِبوا هُنالِكَ وَانقَلَبوا صٰغِرينَ

அங்கேயே அக்கணமே அவர்கள் தோற்கடிக்கப்பட்டனர்; அவர்கள் இழிவுபடுத்தப்பட்டனர்.

7:120

وَأُلقِىَ السَّحَرَةُ سٰجِدينَ

மந்திரவாதிகள் சிரம்பணிந்து வீழ்ந்தனர்.

7:121

قالوا ءامَنّا بِرَبِّ العٰلَمينَ

அவர்கள் கூறினர், பிரபஞ்சத்தின் இரட்சகரின் மீது நாங்கள் நம்பிக்கை கொள்கின்றோம்.

7:122

رَبِّ موسىٰ وَهٰرونَ

மோஸஸ் மற்றும் ஆரோனின் இரட்சகர்.

7:123

قالَ فِرعَونُ ءامَنتُم بِهِ قَبلَ أَن ءاذَنَ لَكُم إِنَّ هٰذا لَمَكرٌ مَكَرتُموهُ فِى المَدينَةِ لِتُخرِجوا مِنها أَهلَها فَسَوفَ تَعلَمونَ

ஃபேரோ கூறினான், என்னுடைய உத்தரவின்றி நீங்கள் அவர் மீது நம்பிக்கை கொண்டுவிட்டீர்களா? அதன் மக்களை வெளியேற்றி அழைத்துச் செல்வதற்காக, மாநகரத்தில் நீங்கள் தீட்டிய ஒரு சதித்திட்டமாகத்தான் இது இருக்க வேண்டும். நிச்சயமாக நீங்கள் கண்டு கொள்வீர்கள்.

7:124

لَأُقَطِّعَنَّ أَيدِيَكُم وَأَرجُلَكُم مِن خِلٰفٍ ثُمَّ لَأُصَلِّبَنَّكُم أَجمَعينَ

நான் உங்களை மாறுகால் மாறுகை வாங்கி, பின்னர் உங்கள் அனைவரையும் நான் சிலுவையிலறைந்துவிடுவேன்.

7:125

قالوا إِنّا إِلىٰ رَبِّنا مُنقَلِبونَ

அவர்கள் கூறினர், அப்படியென்றால் எங்கள் இரட்சகரிடமே நாங்கள் திரும்பிச் செல்வோம்.

7:126

وَما تَنقِمُ مِنّا إِلّا أَن ءامَنّا بِـٔايٰتِ رَبِّنا لَمّا جاءَتنا رَبَّنا أَفرِغ عَلَينا صَبرًا وَتَوَفَّنا مُسلِمينَ

எங்களுடைய இரட்சகரின் சான்றுகளான அவை எங்களிடம் வந்தபோது அதில் நாங்கள் நம்பிக்கை கொண்டோம் என்பதற்காக மட்டுமே நீ எங்களை வன்கொடுமை செய்கின்றாய். எங்கள் இரட்சகரே, எங்களுக்கு உறுதிப்பாட்டினை அளிப்பீராக, மேலும் எங்களைச் சரணடைந்தவர்களாக மரணிக்க வைப்பீராக.

7:127

وَقالَ المَلَأُ مِن قَومِ فِرعَونَ أَتَذَرُ موسىٰ وَقَومَهُ لِيُفسِدوا فِى الأَرضِ وَيَذَرَكَ وَءالِهَتَكَ قالَ سَنُقَتِّلُ أَبناءَهُم وَنَستَحى ۦ نِساءَهُم وَإِنّا فَوقَهُم قٰهِرونَ

ஃபேரோவின் சமூகத்தாரில் இருந்த தலைவர்கள் கூறினர், மோஸஸ் மற்றும் அவருடைய சமூகத்தார் பூமியைச் சீர்கெடுக்கவும், உம்மையும் உம்முடைய தெய்வங்களையும் கைவிட்டுவிடவும், நீர் அனுமதிப்பீரா? அவன் கூறினான், நாம் அவர்களுடைய மகன்களைக் கொன்றுவிட்டு, அவர்களுடைய மகள்களை விட்டுவிடுவோம். அவர்களை விட மிகவும் அதிகமான வலிமை மிக்கவர்களாக நாம் இருக்கின்றோம்.

7:128

قالَ موسىٰ لِقَومِهِ استَعينوا بِاللَّهِ وَاصبِروا إِنَّ الأَرضَ لِلَّهِ يورِثُها مَن يَشاءُ مِن عِبادِهِ وَالعٰقِبَةُ لِلمُتَّقينَ

மோஸஸ் தன் சமூகத்தாரிடம் கூறினார், கடவுளின் உதவியைக் கோருங்கள், அத்துடன் உறுதிப்பாட்டுடன் தொடர்ந்து இருங்கள். பூமியானது கடவுளுக்கு உரியது, எனவே தன்னுடைய ஊழியர்களில் இருந்து தான் தேர்ந்தெடுக்கின்ற எவருக்கும் அவர் அதனை அளிக்கின்றார். இறுதி வெற்றியானது நன்னெறியாளர்களுக்கே உரியதாகும்.

7:129

قالوا أوذينا مِن قَبلِ أَن تَأتِيَنا وَمِن بَعدِ ما جِئتَنا قالَ عَسىٰ رَبُّكُم أَن يُهلِكَ عَدُوَّكُم وَيَستَخلِفَكُم فِى الأَرضِ فَيَنظُرَ كَيفَ تَعمَلونَ

அவர்கள் கூறினர், நீர் எங்களிடம் வருவதற்கு முன்னரும் நாங்கள் கொடுமைப்படுத்தப்பட்டவர்களாகவே இருந்தோம், நீர் எங்களிடம் வந்த பின்னரும் கூட. அவர் கூறினார், உங்களுடைய இரட்சகர் உங்களுடைய விரோதியை அழித்தொழித்துவிட்டுப் பூமியின் மீது உங்களை ஸ்திரப்படுத்துவார், பின்னர் நீங்கள் எவ்வாறு நடந்து கொள்கின்றீர்கள் என்று அவர் பார்ப்பார்.

7:130

وَلَقَد أَخَذنا ءالَ فِرعَونَ بِالسِّنينَ وَنَقصٍ مِنَ الثَّمَرٰتِ لَعَلَّهُم يَذَّكَّرونَ

பின்னர் நாம் ஃபேரோவின் சமூகத்தாரை வறட்சி, மற்றும் பற்றாக்குறை விளைச்சல் கொண்டு வருத்தினோம், அவர்கள் கவனத்தில் எடுத்துக்கொள்ளக் கூடும் என்பதற்காக.

7:131

فَإِذا جاءَتهُمُ الحَسَنَةُ قالوا لَنا هٰذِهِ وَإِن تُصِبهُم سَيِّئَةٌ يَطَّيَّروا بِموسىٰ وَمَن مَعَهُ أَلا إِنَّما طٰئِرُهُم عِندَ اللَّهِ وَلٰكِنَّ أَكثَرَهُم لا يَعلَمونَ

நல்ல சகுனங்கள் அவர்களுடைய வழியில் வந்த பொழுதெல்லாம், அவர்கள் கூறினர், நாங்கள் இதற்குத் தகுதி பெற்றவர்களாகவே இருக்கின்றோம், ஆனால் ஒரு கஷ்டம் அவர்களை வருத்திய பொழுதெல்லாம் அவர்கள் மோஸஸையும் அவருடன் இருந்தவர்களையும் பழித்தனர். உண்மையில், அவர்களுடைய சகுனங்கள் கடவுளால் மட்டுமே தீர்மானிக்கப்படுகின்றன, ஆனால் அவர்களில் அதிகமானோர் அறியமாட்டார்கள்.

7:132

وَقالوا مَهما تَأتِنا بِهِ مِن ءايَةٍ لِتَسحَرَنا بِها فَما نَحنُ لَكَ بِمُؤمِنينَ

அவர்கள் கூறினர், உம்முடைய மாயாஜாலத்தைக் கொண்டு எங்களை ஏமாற்றுவதற்காக, எந்த வகையான அத்தாட்சியை நீர் எங்களுக்குக் காட்டுகின்றீர் என்பது பொருட்டல்ல, நாங்கள் நம்பிக்கை கொள்ள மாட்டோம்.

7:133

فَأَرسَلنا عَلَيهِمُ الطّوفانَ وَالجَرادَ وَالقُمَّلَ وَالضَّفٰدِعَ وَالدَّمَ ءايٰتٍ مُفَصَّلٰتٍ فَاستَكبَروا وَكانوا قَومًا مُجرِمينَ

அதன் விளைவாக, வெள்ளம், வெட்டுக்கிளிகள், பேன், தவளைகள், மற்றும் இரத்தம் ஆகிய ஆழ்ந்த அத்தாட்சிகளை நாம் அவர்கள் மீது அனுப்பினோம். ஆனால் அவர்களுடைய ஆணவத்தில் அவர்கள் நிலைத்திருந்தனர். அவர்கள் பாவிகளான மக்களாக இருந்தனர்.

7:134

وَلَمّا وَقَعَ عَلَيهِمُ الرِّجزُ قالوا يٰموسَى ادعُ لَنا رَبَّكَ بِما عَهِدَ عِندَكَ لَئِن كَشَفتَ عَنَّا الرِّجزَ لَنُؤمِنَنَّ لَكَ وَلَنُرسِلَنَّ مَعَكَ بَنى إِسرٰءيلَ

அவர்களை ஒரு பீடை வருத்திய போதெல்லாம், அவர்கள் கூறினர், மோஸஸே, உம்முடைய இரட்சகரை இறைஞ்சுவீராக - நீர் அவருக்கு நெருக்கமானவராக இருக்கின்றீர். இந்தப் பீடையை நீர் விடுவித்துவிட்டால், நாங்கள் உம்முடன் நம்பிக்கை கொள்வதுடன் இஸ்ரேலின் சந்ததியினரையும் உம்முடன் அனுப்பிவிடுவோம்.

7:135

فَلَمّا كَشَفنا عَنهُمُ الرِّجزَ إِلىٰ أَجَلٍ هُم بٰلِغوهُ إِذا هُم يَنكُثونَ

இருப்பினும், எந்த ஒரு கால அளவுக்கு அந்தப் பீடையை நாம் விடுவித்தாலும், அவர்கள் தங்களுடைய வாக்குறுதியை மீறினர்.

7:136

فَانتَقَمنا مِنهُم فَأَغرَقنٰهُم فِى اليَمِّ بِأَنَّهُم كَذَّبوا بِـٔايٰتِنا وَكانوا عَنها غٰفِلينَ

அதன் விளைவாக, அவர்களுடைய செயல்களுக்கு நாம் பழிதீர்த்தோம், மேலும் அவர்களைக் கடலினுள் மூழ்கடித்தோம். அது ஏனெனில் அவர்கள் நம்முடைய அத்தாட்சிகளை ஏற்கமறுத்தனர், மேலும் அதனைப்பற்றி முற்றிலும் கவனமற்றவர்களாக இருந்தனர்.

7:137

وَأَورَثنَا القَومَ الَّذينَ كانوا يُستَضعَفونَ مَشٰرِقَ الأَرضِ وَمَغٰرِبَهَا الَّتى بٰرَكنا فيها وَتَمَّت كَلِمَتُ رَبِّكَ الحُسنىٰ عَلىٰ بَنى إِسرٰءيلَ بِما صَبَروا وَدَمَّرنا ما كانَ يَصنَعُ فِرعَونُ وَقَومُهُ وَما كانوا يَعرِشونَ

அடக்குமுறை செய்யப்பட்ட மக்களைக் கிழக்கிலும் மேற்கிலும், பூமிக்கு வாரிசாகிக் கொள்ள நாம் அனுமதித்தோம், மேலும் அதனை நாம் ஆசீர்வதித்தோம். அவர்களுடைய உறுதிப்பாட்டிற்கு அவர்களுக்கு வெகுமதியளிப்பதற்காக, இஸ்ரேலின் சந்ததியினருக்குரிய உம்முடைய இரட்சகரின் ஆசீர்வதிக்கப்பட்ட கட்டளைகள் இவ்விதமாகப் பூர்த்தியாக்கப்பட்டன, அத்துடன் ஃபேரோ மற்றும் அவனுடைய சமூகத்தாரின் காரியங்களையும், அவர்கள் அறுவடை செய்த ஒவ்வொன்றையும் நாம் அழித்தொழித்தோம்.

7:138

وَجٰوَزنا بِبَنى إِسرٰءيلَ البَحرَ فَأَتَوا عَلىٰ قَومٍ يَعكُفونَ عَلىٰ أَصنامٍ لَهُم قالوا يٰموسَى اجعَل لَنا إِلٰهًا كَما لَهُم ءالِهَةٌ قالَ إِنَّكُم قَومٌ تَجهَلونَ

இஸ்ரேலின் சந்ததியினரைக் கடலின் குறுக்கே நாம் கரைசேர்த்தோம். சிலைகளை வழிபட்டுக் கொண்டிருந்த மக்களை அவர்கள் கடந்து சென்ற போது, அவர்கள் கூறினர், மோஸஸே, அவர்கள் வைத்திருக்கின்ற தெய்வங்களைப் போல, எங்களுக்கும் ஒரு தெய்வத்தை ஆக்குவீராக. அவர் கூறினார், மெய்யாகவே, நீங்கள் அறியாத மக்களாகவே இருக்கின்றீர்கள்.

7:139

إِنَّ هٰؤُلاءِ مُتَبَّرٌ ما هُم فيهِ وَبٰطِلٌ ما كانوا يَعمَلونَ

இந்த மக்கள் ஓர் இறைநிந்தனையைப் புரிந்து கொண்டிருக்கின்றனர், ஆதலால் அவர்கள் செய்து கொண்டிருப்பது அவர்களுக்குப் பெருநாசமுண்டாக்குவதாகும்.

7:140

قالَ أَغَيرَ اللَّهِ أَبغيكُم إِلٰهًا وَهُوَ فَضَّلَكُم عَلَى العٰلَمينَ

இந்த உலகில் வேறு எவரொருவரை விடவும் உங்களை அதிகமாக அவர் ஆசீர்வதித்திருக்கும் போது, உங்களுடைய தெய்வமாக இருப்பதற்காக கடவுளை விடுத்து மற்றொன்றை நான் தேடிட வேண்டுமா?

7:141

وَإِذ أَنجَينٰكُم مِن ءالِ فِرعَونَ يَسومونَكُم سوءَ العَذابِ يُقَتِّلونَ أَبناءَكُم وَيَستَحيونَ نِساءَكُم وَفى ذٰلِكُم بَلاءٌ مِن رَبِّكُم عَظيمٌ

உங்களுடைய மகன்களைக் கொன்றுவிட்டு, உங்களுடைய மகள்களை விட்டுவிட்டவாறு, உங்கள் மீது மோசமான வன்கொடுமையைச் சுமத்தியவர்களான ஃபேரோவின் சமூகத்தாரிடமிருந்து, உங்களை நாம் விடுதலை செய்ததை நினைவு கூர்ந்திடுங்கள். அது உங்களுடைய இரட்சகரிடமிருந்து உங்களுக்கு ஒரு கடும் சோதனையாக இருந்தது.

7:142

وَوٰعَدنا موسىٰ ثَلٰثينَ لَيلَةً وَأَتمَمنٰها بِعَشرٍ فَتَمَّ ميقٰتُ رَبِّهِ أَربَعينَ لَيلَةً وَقالَ موسىٰ لِأَخيهِ هٰرونَ اخلُفنى فى قَومى وَأَصلِح وَلا تَتَّبِع سَبيلَ المُفسِدينَ

மோஸஸை முப்பது* இரவுகளுக்காக நாம் வரவழைத்தோம், அத்துடன் பத்தைக்* கூட்டி அவற்றை முழுமைப்படுத்தினோம். இவ்விதமாக, அவருடைய இரட்சகருடனான அச்சந்திப்பு நாற்பது* இரவுகள் நீடித்தது. மோஸஸ் தன் சகோதரர் ஆரோனிடம் கூறினார், என் சமூகத்தாருடன் இங்கேயே தங்கியிருப்பீராக, நன்னெறியைப் பராமரிப்பீராக. மேலும் சீர்கெடுப்போரின் வழிகளைப் பின்பற்றாதீர்.

7:143

وَلَمّا جاءَ موسىٰ لِميقٰتِنا وَكَلَّمَهُ رَبُّهُ قالَ رَبِّ أَرِنى أَنظُر إِلَيكَ قالَ لَن تَرىٰنى وَلٰكِنِ انظُر إِلَى الجَبَلِ فَإِنِ استَقَرَّ مَكانَهُ فَسَوفَ تَرىٰنى فَلَمّا تَجَلّىٰ رَبُّهُ لِلجَبَلِ جَعَلَهُ دَكًّا وَخَرَّ موسىٰ صَعِقًا فَلَمّا أَفاقَ قالَ سُبحٰنَكَ تُبتُ إِلَيكَ وَأَنا۠ أَوَّلُ المُؤمِنينَ

நம்மால் நியமிக்கப்பட்ட நேரத்தில் மோஸஸ் வந்த போது, அவருடைய இரட்சகர் அவருடன் பேசினார். அவர் கூறினார், என் இரட்சகரே உம்மை நோக்கவும் பார்க்கவும் என்னை அனுமதிப்பீராக. அவர் கூறினார், நீர் என்னைப் பார்க்க இயலாது. அந்த மலையை நோக்குவீராக; அதனுடைய இடத்தில் அது நிலைத்திருந்தால், அப்போது நீர் என்னைப் பார்க்க இயலும். பின்னர், அவருடைய இரட்சகர் அம்மலைக்குத் தன்னை வெளிப்படுத்தினார், அது உடனே அதனை நொறுங்கிவிடச் செய்தது. மோஸஸ் நினைவிழந்து வீழ்ந்தார். அவர் நினைவுக்கு வந்தபோது, அவர் கூறினார், நீர் துதிப்பிற்குரியவர். நான் உம்மிடம் பாவத்திற்காக வருந்துகின்றேன், அத்துடன் மிகவும் உறுதியடைந்த நம்பிக்கையாளனாக நான் இருக்கின்றேன்.

7:144

١٤٤:٧قالَ يٰموسىٰ إِنِّى اصطَفَيتُكَ عَلَى النّاسِ بِرِسٰلٰتى وَبِكَلٰمى فَخُذ ما ءاتَيتُكَ وَكُن مِنَ الشّٰكِرينَ

அவர் கூறினார், மோஸஸே, என்னுடைய தூதுச் செய்தியைக் கொண்டும், மேலும் உம்முடன் பேசியதன் மூலமும் அனைத்து மக்களில் இருந்தும், உம்மை நான் தேர்ந்தெடுத்துள்ளேன். எனவே, நான் உமக்குக் கொடுத்தவற்றை எடுத்துக்கொள்வதோடு நன்றியுடையவராகவும் இருப்பீராக.

7:145

وَكَتَبنا لَهُ فِى الأَلوٰحِ مِن كُلِّ شَىءٍ مَوعِظَةً وَتَفصيلًا لِكُلِّ شَىءٍ فَخُذها بِقُوَّةٍ وَأمُر قَومَكَ يَأخُذوا بِأَحسَنِها سَأُو۟ريكُم دارَ الفٰسِقينَ

அவருக்காகப் பலகைகளின் மீது அனைத்துவகைகளிலுமான அறிவூட்டல்களையும் ஒவ்வொன்றின் விபரங்களையும் நாம் எழுதினோம்: இந்தப் போதனைகளை நீர் பலமாக உயர்த்திப் பிடிக்க வேண்டும், மேலும் அவற்றை உயர்த்திப் பிடிக்கும்படி உம்முடைய சமூகத்தாரையும் தூண்டுவீராக - இவையே மிகச் சிறந்த போதனைகளாகும். தீயவர்களின் தலைவிதியை உமக்கு நான் சுட்டிக் காட்டுவேன்.

7:146

سَأَصرِفُ عَن ءايٰتِىَ الَّذينَ يَتَكَبَّرونَ فِى الأَرضِ بِغَيرِ الحَقِّ وَإِن يَرَوا كُلَّ ءايَةٍ لا يُؤمِنوا بِها وَإِن يَرَوا سَبيلَ الرُّشدِ لا يَتَّخِذوهُ سَبيلًا وَإِن يَرَوا سَبيلَ الغَىِّ يَتَّخِذوهُ سَبيلًا ذٰلِكَ بِأَنَّهُم كَذَّبوا بِـٔايٰتِنا وَكانوا عَنها غٰفِلينَ

நியாயம் இல்லாமல், பூமியின் மீது ஆணவம் கொண்டவர்களாக இருப்பவர்களை, என்னுடைய வெளிப்பாடுகளில் இருந்து நான் திசை திருப்பிவிடுவேன். அதன் விளைவாக, ஒவ்வொரு வகையான சான்றினை அவர்கள் காணும் போதிலும் அவர்கள் நம்பிக்கை கொள்ள மாட்டார்கள். மேலும் வழிகாட்டலுடைய பாதையை அவர்கள் காணும் பொழுது அதனைத் தங்களுடைய பாதையாக அவர்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள், ஆனால் அவர்கள் வழிதவறுதலுடைய பாதையைக் காணும் பொழுது அதனைத் தங்களுடைய பாதையாக அவர்கள் ஏற்றுக்கொள்வார்கள். நம்முடைய சான்றுகளை அவர்கள் ஏற்றுக்கொள்ள மறுத்தது, மற்றும் அது குறித்து முற்றிலும் அலட்சியமாக இருந்ததன் பின்விளைவு இதுவேயாகும்.

7:147

وَالَّذينَ كَذَّبوا بِـٔايٰتِنا وَلِقاءِ الـٔاخِرَةِ حَبِطَت أَعمٰلُهُم هَل يُجزَونَ إِلّا ما كانوا يَعمَلونَ

நம்முடைய வெளிப்பாடுகளையும் மறுவுலகின் சந்திப்பையும் எவர்கள் நிராகரிக்கின்றனரோ, அவர்களுடைய காரியங்கள் பயனற்றவையாக்கப்பட்டுவிட்டன. அவர்கள் செய்தவற்றுக்காக மட்டும்தானே அவர்கள் கைம்மாறு செய்யப்படுகின்றனர்?

7:148

وَاتَّخَذَ قَومُ موسىٰ مِن بَعدِهِ مِن حُلِيِّهِم عِجلًا جَسَدًا لَهُ خُوارٌ أَلَم يَرَوا أَنَّهُ لا يُكَلِّمُهُم وَلا يَهديهِم سَبيلًا اتَّخَذوهُ وَكانوا ظٰلِمينَ

அவர் இல்லாத போது, மோஸஸின் சமூகத்தார் தங்களுடைய ஆபரணங்களில் இருந்து, ஒரு கன்றுக் குட்டியின் சப்தத்தோடு* பூர்த்தியான, ஒரு கன்றுக் குட்டியின் சிலையை வடித்தனர். அது அவர்களுடன் பேசவோ அல்லது எந்தப்பாதையிலும் அவர்களை வழிநடத்தவோ இயலாதென்பதை அவர்கள் காணவில்லையா? அவர்கள் அதனை வழிபட்டனர், மேலும் இவ்விதமாகத் தீயவர்களாக மாறிவிட்டனர்.

7:149

وَلَمّا سُقِطَ فى أَيديهِم وَرَأَوا أَنَّهُم قَد ضَلّوا قالوا لَئِن لَم يَرحَمنا رَبُّنا وَيَغفِر لَنا لَنَكونَنَّ مِنَ الخٰسِرينَ

இறுதியில், அவர்களுடைய செயலுக்காக அவர்கள் வருந்தியதுடன், அவர்கள் வழிதவறிச் சென்றுவிட்டதை உணர்ந்து கொண்ட போது, அவர்கள் கூறினர், நம்முடைய இரட்சகர் அவருடைய கருணையைக் கொண்டு நம்மை மீட்டு எடுத்து, நம்மை மன்னித்தாலேயன்றி, நாம் நஷ்டவாளிகள் ஆகிவிடுவோம்.

7:150

وَلَمّا رَجَعَ موسىٰ إِلىٰ قَومِهِ غَضبٰنَ أَسِفًا قالَ بِئسَما خَلَفتُمونى مِن بَعدى أَعَجِلتُم أَمرَ رَبِّكُم وَأَلقَى الأَلوٰحَ وَأَخَذَ بِرَأسِ أَخيهِ يَجُرُّهُ إِلَيهِ قالَ ابنَؤُمَّ إِنَّ القَومَ استَضعَفونى وَكادوا يَقتُلونَنى فَلا تُشمِت بِىَ الأَعداءَ وَلا تَجعَلنى مَعَ القَومِ الظّٰلِمينَ

கோபத்துடனும் அதிருப்தியுடனும், தன் சமூகத்தாரிடம் மோஸஸ் திரும்பி வந்த பொழுது, அவர் கூறினார், நான் இல்லாத நிலையில் எத்தகையதொரு பயங்கரமான விஷயத்தை நீங்கள் செய்துவிட்டீர்கள்! உங்களுடைய இரட்சகரின் கட்டளைகளுக்காக உங்களால் காத்திருக்க இயலவில்லையா? அவர் பலகைகளைக் கீழே எறிந்தார், மேலும் அவருடைய சகோதரரின் தலையைப் பிடித்துக் கொண்டு, அவரைத் தன் பால் இழுத்தார். (ஆரோன்) கூறினார், என் தாயின் மகனே, இம்மக்கள் என்னுடைய பலஹீனத்தைச் சாதகமாக எடுத்துக் கொண்டனர், மேலும் கிட்டத்தட்ட என்னைக் கொன்றுவிட்டனர். என்னுடைய விரோதிகளைக் களிப்படையவிட்டுவிடாதீர், மேலும் வரம்புமீறிக் கொண்டிருக்கின்ற மக்களுடன் என்னை எண்ணிடாதீர்.

7:151

قالَ رَبِّ اغفِر لى وَلِأَخى وَأَدخِلنا فى رَحمَتِكَ وَأَنتَ أَرحَمُ الرّٰحِمينَ

(மோஸஸ்) கூறினார், என் இரட்சகரே, என்னையும் என்னுடைய சகோதரரையும் மன்னித்திடுவீராக, மேலும் உம்முடைய கருணைக்குள் எங்களை அனுமதிப்பீராக. கருணையாளர்கள் அனைவரிலும் நீரே மிக்க கருணையாளராவீர்.

7:152

إِنَّ الَّذينَ اتَّخَذُوا العِجلَ سَيَنالُهُم غَضَبٌ مِن رَبِّهِم وَذِلَّةٌ فِى الحَيوٰةِ الدُّنيا وَكَذٰلِكَ نَجزِى المُفتَرينَ

நிச்சயமாக, கன்றுக் குட்டியை வழிபட்டவர்கள் அவர்களுடைய இரட்சகரிடமிருந்து கடுங்கோபத்திற்கும், இந்த வாழ்வில் இழிவுக்கும் உள்ளாகிவிட்டனர். புதுமைகளைப் புகுத்துவோருக்கு இவ்விதமாகவே நாம் கூலி கொடுக்கின்றோம்.

7:153

وَالَّذينَ عَمِلُوا السَّيِّـٔاتِ ثُمَّ تابوا مِن بَعدِها وَءامَنوا إِنَّ رَبَّكَ مِن بَعدِها لَغَفورٌ رَحيمٌ

பாவங்களைப் புரிந்துவிட்டவுடன், அதன் பின்னர் பாவத்திற்காக வருந்தி, அத்துடன் நம்பிக்கை கொண்டுவிட்டவர்களைப் பொறுத்த வரை, உம்முடைய இரட்சகர் - இதன் பின்னர் - மன்னிப்பவர், மிக்க கருணையாளர்.

7:154

وَلَمّا سَكَتَ عَن موسَى الغَضَبُ أَخَذَ الأَلوٰحَ وَفى نُسخَتِها هُدًى وَرَحمَةٌ لِلَّذينَ هُم لِرَبِّهِم يَرهَبونَ

மோஸஸின் கோபம் தணிந்த போது, தங்களுடைய இரட்சகரிடம் பக்தியுடையவர்களுக்கு வழிகாட்டலையும் கருணையையும் கொண்டிருந்த அந்தப் பலகைகளை அவர் பொறுக்கி எடுத்துக் கொண்டார்.

7:155

وَاختارَ موسىٰ قَومَهُ سَبعينَ رَجُلًا لِميقٰتِنا فَلَمّا أَخَذَتهُمُ الرَّجفَةُ قالَ رَبِّ لَو شِئتَ أَهلَكتَهُم مِن قَبلُ وَإِيّٰىَ أَتُهلِكُنا بِما فَعَلَ السُّفَهاءُ مِنّا إِن هِىَ إِلّا فِتنَتُكَ تُضِلُّ بِها مَن تَشاءُ وَتَهدى مَن تَشاءُ أَنتَ وَلِيُّنا فَاغفِر لَنا وَارحَمنا وَأَنتَ خَيرُ الغٰفِرينَ

மோஸஸ் பின்னர் தன்னுடைய சமூகத்தாரில் இருந்து எழுபது ஆண்களை, நியமிக்கப்பட்ட நம்முடைய சந்திப்பிற்கு வருவதற்காகத் தேர்ந்தெடுத்தார். அதிர்வானது அவர்களைக் குலுக்கிய போது, அவர் கூறினார், என் இரட்சகரே, நீர் இவ்வாறு நாடியிருந்தால், கடந்த காலத்திலேயே அவர்களை, என்னுடன் சேர்த்து, அழித்தொழித்திருக்க உம்மால் இயலும். எங்களுக்கிடையில் மூடர்களாக இருப்பவர்களின் செய்கைகளுக்காக எங்களை நீர் அழித்தொழித்திடுவீரா? இது எங்களுக்காக நீர் நிர்ணயித்துள்ள சோதனையாகவே இருக்க வேண்டும். இதனைக் கொண்டு, நீர் நாடுகின்ற எவரையும் நீர் கண்டனம் செய்துவிடுகின்றீர், மேலும் நீர் நாடுகின்ற எவரையும் வழிநடத்துகின்றீர். நீரே எங்களுடைய இரட்சகரும் அதிபதியும் ஆவீர், எனவே எங்களை மன்னித்திடுவீராக, உம்முடைய கருணையை எங்கள் மேல் பொழிவீராக; மன்னிப்போரில் நீரே மிகச் சிறந்தவர்.

7:156

وَاكتُب لَنا فى هٰذِهِ الدُّنيا حَسَنَةً وَفِى الـٔاخِرَةِ إِنّا هُدنا إِلَيكَ قالَ عَذابى أُصيبُ بِهِ مَن أَشاءُ وَرَحمَتى وَسِعَت كُلَّ شَىءٍ فَسَأَكتُبُها لِلَّذينَ يَتَّقونَ وَيُؤتونَ الزَّكوٰةَ وَالَّذينَ هُم بِـٔايٰتِنا يُؤمِنونَ

மேலும் இந்த உலகிலும் அத்துடன் மறுவுலகத்திலும் எங்களுக்கு நன்மையை விதித்திடுவீராக. நாங்கள் உம்மிடம் வருந்துகின்றோம். அவர் கூறினார், நான் நாடுகின்ற எவர் மீதும் என்னுடைய தண்டனை ஏற்படும். ஆனால் என்னுடைய கருணை அனைத்துப் பொருட்களையும் சூழ்ந்து கொண்டுள்ளது. இருப்பினும், அதனை நான் இவர்களுக்கெனக் குறிப்பிட்டு வைப்பேன், (1) நன்னெறியானதொரு வாழ்வு நடத்துபவர்கள், (2) கடமையான (ஜகாத்)* தர்மத்தைக் கொடுப்பவர்கள், (3) நம்முடைய வெளிப்பாடுகள் மீது நம்பிக்கை கொள்பவர்கள், மேலும்

7:157

الَّذينَ يَتَّبِعونَ الرَّسولَ النَّبِىَّ الأُمِّىَّ الَّذى يَجِدونَهُ مَكتوبًا عِندَهُم فِى التَّورىٰةِ وَالإِنجيلِ يَأمُرُهُم بِالمَعروفِ وَيَنهىٰهُم عَنِ المُنكَرِ وَيُحِلُّ لَهُمُ الطَّيِّبٰتِ وَيُحَرِّمُ عَلَيهِمُ الخَبٰئِثَ وَيَضَعُ عَنهُم إِصرَهُم وَالأَغلٰلَ الَّتى كانَت عَلَيهِم فَالَّذينَ ءامَنوا بِهِ وَعَزَّروهُ وَنَصَروهُ وَاتَّبَعُوا النّورَ الَّذى أُنزِلَ مَعَهُ أُولٰئِكَ هُمُ المُفلِحونَ

(4) தங்களுடைய தோராவிலும் சுவிசேஷத்திலும்* எழுதப்பட்டிருப்பதை அவர்கள் காண்கின்றவரான, வேதம் வழங்கப்படாத சமுதாயத்தின் இந்த நபி (முஹம்மத் எனும்) இத்தூதரைப் பின்பற்றுகின்றவர்கள். அவர்களை நன்னெறியாளர்களாக இருக்கும்படி அவர் தூண்டுகின்றார், தீமைகளில் இருந்து அவர்களைத் தடுக்கின்றார், எல்லா நல்ல உணவுகளையும் அவர்களுக்கு அனுமதிக்கின்றார், அத்துடன் கெட்டதாக இருப்பதைத் தடை செய்கின்றார், மேலும் அவர்கள் மீது சுமத்தப்பட்டுள்ள சுமைகளையும் தளைகளையும் இறக்கி வைக்கின்றார். அவர் மீது நம்பிக்கை கொண்டு, அவரை மதித்து, அவருக்கு ஆதரவளித்து மேலும் அவருடன் வந்த ஒளியினைப் பின்பற்றுகின்றவர்களே வெற்றி பெற்றவர்களாக இருக்கின்றனர்.

7:158

قُل يٰأَيُّهَا النّاسُ إِنّى رَسولُ اللَّهِ إِلَيكُم جَميعًا الَّذى لَهُ مُلكُ السَّمٰوٰتِ وَالأَرضِ لا إِلٰهَ إِلّا هُوَ يُحى ۦ وَيُميتُ فَـٔامِنوا بِاللَّهِ وَرَسولِهِ النَّبِىِّ الأُمِّىِّ الَّذى يُؤمِنُ بِاللَّهِ وَكَلِمٰتِهِ وَاتَّبِعوهُ لَعَلَّكُم تَهتَدونَ

கூறுவீராக, மக்களே, நான் உங்கள் அனைவருக்குமான கடவுளின் தூதனாக இருக்கின்றேன். வானங்கள் மற்றும் பூமியின் ஆட்சியதிகாரம் அவருக்கே உரியது. அவரைத் தவிர தெய்வம் இல்லை. அவர் வாழ்வையும் மரணத்தையும் கட்டுப்படுத்துகின்றார். எனவே, நீங்கள் கடவுள் மற்றும் வேதம் வழங்கப்படாத சமுதாயத்தைச் சேர்ந்த இந்த நபியாகிய அவருடைய தூதர் மீது நம்பிக்கை கொள்ள வேண்டும், அவர் கடவுள் மற்றும் அவருடைய வார்த்தைகள் மீது நம்பிக்கை கொள்கின்றார். நீங்கள் வழிநடத்தப்படும் பொருட்டு, அவரைப் பின்பற்றுங்கள்.

7:159

وَمِن قَومِ موسىٰ أُمَّةٌ يَهدونَ بِالحَقِّ وَبِهِ يَعدِلونَ

மோஸஸைப் பின்பற்றுபவர்களில் சத்தியத்திற்கு ஏற்ப வழிநடத்தக் கூடியவர்களும் உள்ளனர், மேலும் அந்தச் சத்தியம் அவர்களை நன்னெறியாளர்களாக ஆக்குகின்றது.

7:160

وَقَطَّعنٰهُمُ اثنَتَى عَشرَةَ أَسباطًا أُمَمًا وَأَوحَينا إِلىٰ موسىٰ إِذِ استَسقىٰهُ قَومُهُ أَنِ اضرِب بِعَصاكَ الحَجَرَ فَانبَجَسَت مِنهُ اثنَتا عَشرَةَ عَينًا قَد عَلِمَ كُلُّ أُناسٍ مَشرَبَهُم وَظَلَّلنا عَلَيهِمُ الغَمٰمَ وَأَنزَلنا عَلَيهِمُ المَنَّ وَالسَّلوىٰ كُلوا مِن طَيِّبٰتِ ما رَزَقنٰكُم وَما ظَلَمونا وَلٰكِن كانوا أَنفُسَهُم يَظلِمونَ

நாம் அவர்களைப் பன்னிரண்டு குலச் சமுதாயங்களாகப் பிரித்தோம், மேலும் அவருடைய சமூகத்தார் அவரிடம் தண்ணீர் கேட்ட போது, மோஸஸுக்கு நாம் உள்ளுணர்வளித்தோம்: உம்முடைய கைத்தடியால் பாறையை அடிப்பீராக, உடன் அதிலிருந்து பன்னிரண்டு ஊற்றுகள் பொங்கியெழுந்தன. இவ்விதமாக, ஒவ்வொரு சமுதாயமும் அதனுடைய தண்ணீரை அறிந்து கொண்டது, மேலும் மேகங்களைக் கொண்டு அவர்களுக்கு நாம் நிழல் தந்தோம், மேலும் மன்னா மற்றும் காடைகளை அவர்களுக்கு இறக்கி அனுப்பினோம்: உங்களுக்கு நாம் வழங்கிய நல்ல பொருட்களில் இருந்து உண்ணுங்கள். அவர்கள் தீங்கிழைத்தது நமக்கு அல்ல; அவர்கள் தங்களுடைய சொந்த ஆத்மாக்களுக்குத்தான் தீங்கிழைத்துக் கொண்டனர்.

7:161

وَإِذ قيلَ لَهُمُ اسكُنوا هٰذِهِ القَريَةَ وَكُلوا مِنها حَيثُ شِئتُم وَقولوا حِطَّةٌ وَادخُلُوا البابَ سُجَّدًا نَغفِر لَكُم خَطيـٰٔتِكُم سَنَزيدُ المُحسِنينَ

வசிப்பதற்காக இந்நகரத்தினுள் செல்லுங்கள், மேலும் நீங்கள் விரும்பியவாறு அதிலிருந்து உண்ணுங்கள், மக்களை இணக்கத்துடன் நடத்திடுங்கள், அத்துடன் எளிமையாக அதன் வாசலுக்குள் நுழையுங்கள். அப்போது நாம் உங்களுடைய வரம்புமீறல்களை மன்னிப்போம். நன்னெறியாளர்களுக்குரிய வெகுமதியை நாம் பெருக்குவோம், என்று அவர்களிடம் கூறப்பட்டதை நினைவு கூர்ந்திடுங்கள்.

7:162

فَبَدَّلَ الَّذينَ ظَلَموا مِنهُم قَولًا غَيرَ الَّذى قيلَ لَهُم فَأَرسَلنا عَلَيهِم رِجزًا مِنَ السَّماءِ بِما كانوا يَظلِمونَ

ஆனால் அவர்களில் பாவிகள் அவர்களுக்குக் கொடுக்கப்பட்டிருந்த கட்டளைகளின் இடத்தில் வேறு கட்டளைகளை மாற்றியமைத்துக் கொண்டனர். அதன் விளைவாக, அவர்களுடைய தீய தன்மையின் காரணத்தால், விண்ணிலிருந்து கண்டனத்தை அவர்கள் மீது நாம் இறக்கினோம்.

7:163

وَسـَٔلهُم عَنِ القَريَةِ الَّتى كانَت حاضِرَةَ البَحرِ إِذ يَعدونَ فِى السَّبتِ إِذ تَأتيهِم حيتٰنُهُم يَومَ سَبتِهِم شُرَّعًا وَيَومَ لا يَسبِتونَ لا تَأتيهِم كَذٰلِكَ نَبلوهُم بِما كانوا يَفسُقونَ

ஸப்பாத்தை அவமரியாதை செய்தவர்களான, கடலின் அருகிலிருந்த அந்தச் சமுதாயத்தைப் பற்றி அவர்களுக்கு நினைவூட்டுவீராக, அவர்கள் ஸப்பாத்தைக் கடைப்பிடித்துக் கொண்டிருந்த போது, மீன்கள் அவர்களுக்கு அபரிமிதமாக வந்தன. ஆனால் அவர்கள் ஸப்பாத்தை மீறியபோது, மீன்கள் வரவில்லை. அவர்களுடைய வரம்புமீறலின் ஒரு பின் விளைவாக, இவ்விதமாக அவர்களை நாம் வருத்தினோம்.

7:164

وَإِذ قالَت أُمَّةٌ مِنهُم لِمَ تَعِظونَ قَومًا اللَّهُ مُهلِكُهُم أَو مُعَذِّبُهُم عَذابًا شَديدًا قالوا مَعذِرَةً إِلىٰ رَبِّكُم وَلَعَلَّهُم يَتَّقونَ

அவர்களில் ஒரு கூட்டத்தார் கூறியதை நினைவு கூர்ந்திடுவீராக, கடவுள் நிச்சயமாக அழித்தொழித்துவிடவோ அல்லது கடுமையாகத் தண்டிக்கவோ இருக்கின்ற மக்களுக்கு நீங்கள் ஏன் உபதேசிக்க வேண்டும்? அவர்கள் பதிலளித்தனர், உங்களுடைய இரட்சகரிடம் பிழைபொறுக்கக் கேளுங்கள், அவர்கள் காப்பாற்றப்படக்கூடும் என்பதற்காக.

7:165

فَلَمّا نَسوا ما ذُكِّروا بِهِ أَنجَينَا الَّذينَ يَنهَونَ عَنِ السّوءِ وَأَخَذنَا الَّذينَ ظَلَموا بِعَذابٍ بَـٔيسٍ بِما كانوا يَفسُقونَ

அவர்களுக்கு நினைவூட்டப்பட்டவற்றை அவர்கள் அலட்சியம் செய்தபோது, தீமையைத் தடுத்தவர்களை நாம் காப்பாற்றினோம், அத்துடன் தவறிழைத்தவர்களை அவர்களுடைய தீய தன்மைக்காக பயங்கரமானதொரு தண்டனையைக் கொண்டு வருத்தினோம்.

7:166

فَلَمّا عَتَوا عَن ما نُهوا عَنهُ قُلنا لَهُم كونوا قِرَدَةً خٰسِـٔينَ

கட்டளைகளை அவர்கள் தொடர்ந்து எதிர்த்த போது, நாம் அவர்களிடம் கூறினோம், இழிவுக்குட்பட்ட குரங்குகளாக நீங்கள் ஆகிவிடுங்கள்.

7:167

وَإِذ تَأَذَّنَ رَبُّكَ لَيَبعَثَنَّ عَلَيهِم إِلىٰ يَومِ القِيٰمَةِ مَن يَسومُهُم سوءَ العَذابِ إِنَّ رَبَّكَ لَسَريعُ العِقابِ وَإِنَّهُ لَغَفورٌ رَحيمٌ

கூடுதலாக, உயிர்த்தெழுப்பப்படுகின்ற நாள் வரை, அவர்கள் மீது கடும் வன்கொடுமையைச் சுமத்தக் கூடிய மக்களை அவர்களுக்கெதிராக அவர் எழுப்புவார் என்று உம்முடைய இரட்சகர் விதித்துள்ளார். உம்முடைய இரட்சகர் தண்டனையை நிறைவேற்றுவதில் மிகவும் திறன் வாய்ந்தவராக இருக்கின்றார், மேலும் உறுதியாக அவர் மன்னிப்பவர், மிக்க கருணையாளர்.

7:168

وَقَطَّعنٰهُم فِى الأَرضِ أُمَمًا مِنهُمُ الصّٰلِحونَ وَمِنهُم دونَ ذٰلِكَ وَبَلَونٰهُم بِالحَسَنٰتِ وَالسَّيِّـٔاتِ لَعَلَّهُم يَرجِعونَ

பூமி எங்கிலும் பல சமுதாயங்களுக்கிடையில் அவர்களை நாம் சிதறடித்தோம். அவர்களில் சிலர் நன்னெறியாளர்களாக இருந்தனர், மேலும் சிலர் நன்னெறியில் குறைந்தவர்களாக இருந்தனர். வளம் மற்றும் கஷ்டத்தைக் கொண்டு அவர்களை நாம் சோதித்தோம், அவர்கள் திரும்பக் கூடும் என்பதற்காக.

7:169

فَخَلَفَ مِن بَعدِهِم خَلفٌ وَرِثُوا الكِتٰبَ يَأخُذونَ عَرَضَ هٰذَا الأَدنىٰ وَيَقولونَ سَيُغفَرُ لَنا وَإِن يَأتِهِم عَرَضٌ مِثلُهُ يَأخُذوهُ أَلَم يُؤخَذ عَلَيهِم ميثٰقُ الكِتٰبِ أَن لا يَقولوا عَلَى اللَّهِ إِلَّا الحَقَّ وَدَرَسوا ما فيهِ وَالدّارُ الـٔاخِرَةُ خَيرٌ لِلَّذينَ يَتَّقونَ أَفَلا تَعقِلونَ

அவர்களுக்குப் பின்னர், வேதத்தை வாரிசாகப் பெற்றவர்களான புதிய தலைமுறைகளை அவர் மாற்றியமைத்தார். ஆனால் அதற்கு மாறாக, அவர்கள், நாங்கள் மன்னிக்கப்பட்டுவிடுவோம், என்று கூறியவர்களாக இவ்வுலக வாழ்வைத் தேர்ந்தெடுத்துக் கொண்டனர். ஆனால் பின்னரும் அவர்கள் இவ்வுலகத்தின் பொருட்களையே தொடர்ந்து தேர்ந்தெடுத்தனர், வேதத்தை உயர்த்திப் பிடிப்பதென்றும், கடவுளைப் பற்றிச் சத்தியத்தைத் தவிர எதனையும் கூறுவதில்லையென்றும் ஓர் உடன்படிக்கையை அவர்கள் செய்யவில்லையா? வேதத்தை அவர்கள் கற்றுக்கொள்ளவில்லையா? உறுதியாக, மறுவுலகத்தின் தங்குமிடமானது நன்னெறியில் நிலைத்திருப்பவர்களுக்கு மிகவும் மேலானதாக உள்ளது. நீங்கள் புரிந்து கொள்ளவில்லையா?

7:170

وَالَّذينَ يُمَسِّكونَ بِالكِتٰبِ وَأَقامُوا الصَّلوٰةَ إِنّا لا نُضيعُ أَجرَ المُصلِحينَ

எவர்கள் வேதத்தை உயர்த்திப் பிடித்து, மேலும் (ஸலாத்) தொடர்புத் தொழுகைகளைக் கடைப்பிடிக்கின்றனரோ, பக்திமான்களுக்குப் பிரதிபலனளிக்க நாம் ஒருபோதும் தவறுவதில்லை.

7:171

وَإِذ نَتَقنَا الجَبَلَ فَوقَهُم كَأَنَّهُ ظُلَّةٌ وَظَنّوا أَنَّهُ واقِعٌ بِهِم خُذوا ما ءاتَينٰكُم بِقُوَّةٍ وَاذكُروا ما فيهِ لَعَلَّكُم تَتَّقونَ

ஒரு குடையைப் போல் அந்த மலையை அவர்களுக்கு மேல் நாம் உயர்த்தினோம், மேலும் அது தங்கள் மீது விழுந்துவிடப்போகின்றது என்று அவர்கள் நினைத்தனர்: நாம் உங்களுக்குக் கொடுத்தவற்றை, நீங்கள் பலமாக உயர்த்திப் பிடிக்க வேண்டும், மேலும் நீங்கள் காப்பாற்றப்படும் பொருட்டு, அதில் உள்ளவற்றை நினைவில் கொள்ளுங்கள்.

7:172

وَإِذ أَخَذَ رَبُّكَ مِن بَنى ءادَمَ مِن ظُهورِهِم ذُرِّيَّتَهُم وَأَشهَدَهُم عَلىٰ أَنفُسِهِم أَلَستُ بِرَبِّكُم قالوا بَلىٰ شَهِدنا أَن تَقولوا يَومَ القِيٰمَةِ إِنّا كُنّا عَن هٰذا غٰفِلينَ

ஆதமுடைய வழிவந்தவர்கள் அனைவரையும் உம் இரட்சகர் ஒன்று திரட்டி, அவர்களுக்கு அவர்களையே சாட்சியாக வைத்ததை நினைவு கூர்ந்திடுவீராக: நான்தான் உங்களுடைய இரட்சகன் அல்லவா? அவர்கள் அனைவரும் கூறினர், ஆம். நாங்கள் சாட்சி பகர்கின்றோம். ஆகவே, உயிர்த்தெழுப்பப்படுகின்ற நாள் அன்று, இது குறித்து நாங்கள் அறியாதவர்களாக இருந்தோம், என்று நீங்கள் கூற இயலாது.

7:173

أَو تَقولوا إِنَّما أَشرَكَ ءاباؤُنا مِن قَبلُ وَكُنّا ذُرِّيَّةً مِن بَعدِهِم أَفَتُهلِكُنا بِما فَعَلَ المُبطِلونَ

அன்றி, எங்கள் பெற்றோர்கள்தான் போலித் தெய்வ வழிபாட்டை கடைப்பிடித்தனர், எனவே நாங்கள் அவர்களுடைய காலடிச் சுவடுகளை மட்டுமே பின்பற்றினோம். மற்றவர்கள் புகுத்திய புதுமைகளுக்காக எங்களை நீர் தண்டிப்பீரா,? என்றும் நீங்கள் கூற இயலாது.

7:174

وَكَذٰلِكَ نُفَصِّلُ الـٔايٰتِ وَلَعَلَّهُم يَرجِعونَ

மக்கள் தங்களையே மீட்டுக்கொள்வதைச்* சாத்தியமாக்குவதற்காக, இவ்வெளிப்பாடுகளை இவ்விதமாக நாம் விவரிக்கின்றோம்.

7:175

وَاتلُ عَلَيهِم نَبَأَ الَّذى ءاتَينٰهُ ءايٰتِنا فَانسَلَخَ مِنها فَأَتبَعَهُ الشَّيطٰنُ فَكانَ مِنَ الغاوينَ

நம்முடைய சான்றுகள் கொடுக்கப்பட்டு, ஆனால் அவற்றை அலட்சியம் செய்வதைத் தேர்ந்தெடுத்துக் கொண்ட ஒருவனைப் பற்றிய செய்தியை அவர்களுக்கு எடுத்துக் கூறுவீராக. அதன் பின்விளைவாக, அவனொரு வழிதவறியவனாகிவிடும் வரை, சாத்தான் அவனைப் பின்தொடர்ந்தான்.

7:176

وَلَو شِئنا لَرَفَعنٰهُ بِها وَلٰكِنَّهُ أَخلَدَ إِلَى الأَرضِ وَاتَّبَعَ هَوىٰهُ فَمَثَلُهُ كَمَثَلِ الكَلبِ إِن تَحمِل عَلَيهِ يَلهَث أَو تَترُكهُ يَلهَث ذٰلِكَ مَثَلُ القَومِ الَّذينَ كَذَّبوا بِـٔايٰتِنا فَاقصُصِ القَصَصَ لَعَلَّهُم يَتَفَكَّرونَ

நாம் நாடியிருந்தால், அதனைக் கொண்டு அவனை நாம் உயர்த்தியிருப்போம், ஆனால் அவன் பூமியில் ஒட்டிக் கொள்வதில் பிடிவாதமாக இருந்தான், அத்துடன் தன்னுடைய சுய அபிப்பிராயங்களைப் பின் தொடர்ந்தான். எனவே, அவன் நாயைப் போன்றவன்; நீர் அதனைக் கொஞ்சினாலும் அல்லது அதனைத் திட்டினாலும் அது ஏங்கத்தான் செய்யும். நம்முடைய சான்றுகளை நிராகரிக்கின்ற மக்களுடைய உதாரணம் இத்தகையதேயாகும். அவர்கள் சிந்திக்கும் பொருட்டு, இந்த விவரங்களை விவரிப்பீராக.

7:177

ساءَ مَثَلًا القَومُ الَّذينَ كَذَّبوا بِـٔايٰتِنا وَأَنفُسَهُم كانوا يَظلِمونَ

நம்முடைய சான்றுகளை நிராகரிக்கின்றவர்களான மக்களுடைய உதாரணம் உண்மையில் கெட்டதாகும்; அவர்கள் அநீதமிழைப்பது தங்களுடைய சொந்த ஆத்மாக்களுக்கு மட்டுமேயாகும்.

7:178

مَن يَهدِ اللَّهُ فَهُوَ المُهتَدى وَمَن يُضلِل فَأُولٰئِكَ هُمُ الخٰسِرونَ

எவரைக் கடவுள் வழிநடத்துகின்றாரோ அவரே உண்மையில் வழிநடத்தப்பட்டவராவார், மேலும் எவரையெல்லாம் அவர் வழிகேட்டிற்கு ஆட்படுத்திவிடுகின்றாரோ, இவர்கள்தான் நஷ்டவாளிகள் ஆவர்.

7:179

وَلَقَد ذَرَأنا لِجَهَنَّمَ كَثيرًا مِنَ الجِنِّ وَالإِنسِ لَهُم قُلوبٌ لا يَفقَهونَ بِها وَلَهُم أَعيُنٌ لا يُبصِرونَ بِها وَلَهُم ءاذانٌ لا يَسمَعونَ بِها أُولٰئِكَ كَالأَنعٰمِ بَل هُم أَضَلُّ أُولٰئِكَ هُمُ الغٰفِلونَ

ஜின்கள் மற்றும் மனிதர்களில் ஏராளமானோரை நாம் நரகத்திற்கு ஆட்படுத்திவிட்டோம். அவர்களுக்கு மனங்கள் உண்டு, அதனைக் கொண்டு அவர்கள் புரிந்து கொள்வதில்லை, கண்கள் உண்டு, அதனைக் கொண்டு அவர்கள் பார்ப்பதில்லை, மேலும் காதுகள் உண்டு, அதனைக் கொண்டு அவர்கள் செவியேற்பதில்லை. அவர்கள் விலங்குகளைப் போன்றவர்கள்; அல்ல, அவர்கள் இன்னும் மோசமானவர்கள் - அவர்கள் முற்றிலும் அறியாதவர்களாக இருக்கின்றனர்.

7:180

وَلِلَّهِ الأَسماءُ الحُسنىٰ فَادعوهُ بِها وَذَرُوا الَّذينَ يُلحِدونَ فى أَسمٰئِهِ سَيُجزَونَ ما كانوا يَعمَلونَ

மிகவும் அழகிய பெயர்கள் கடவுளுக்கே உரியன; அதனைக் கொண்டு அவரை அழையுங்கள், அவருடைய பெயர்களைத் திரிப்பவர்களை அலட்சியம் செய்திடுங்கள். அவர்களுடைய பாவங்களுக்காக அவர்கள் கூலி கொடுக்கப்படுவார்கள்.

7:181

وَمِمَّن خَلَقنا أُمَّةٌ يَهدونَ بِالحَقِّ وَبِهِ يَعدِلونَ

நம்முடைய படைப்பினங்களில், சத்தியத்தைக் கொண்டு வழிநடத்துகின்றவர்கள் உள்ளனர், மேலும் அந்தச் சத்தியம் அவர்களை நன்னெறியாளர்களாக ஆக்குகின்றது.

7:182

وَالَّذينَ كَذَّبوا بِـٔايٰتِنا سَنَستَدرِجُهُم مِن حَيثُ لا يَعلَمونَ

நம்முடைய வெளிப்பாடுகளை நிராகரிப்பவர்களைப் பொறுத்தவரை, அவர்கள் அதனை எப்போதும் உணர்ந்து கொள்ளாதவாறு, அவர்களை நாம் இழுத்துச் செல்கின்றோம்.

7:183

وَأُملى لَهُم إِنَّ كَيدى مَتينٌ

அவர்களுக்கு நான் ஊக்கமும் கூடக் கொடுப்பேன்; என்னுடைய திட்டம் வலியதாக உள்ளது.

7:184

أَوَلَم يَتَفَكَّروا ما بِصاحِبِهِم مِن جِنَّةٍ إِن هُوَ إِلّا نَذيرٌ مُبينٌ

(தூதராகிய) அவர்களுடைய தோழரைப் பற்றி அவர்கள் ஏன் சிந்திக்கக் கூடாது? அவர் கிறுக்கர் அல்லர். அவர் ஆழ்ந்ததோர் எச்சரிப்பவர் மட்டுமேயாவார்.

7:185

أَوَلَم يَنظُروا فى مَلَكوتِ السَّمٰوٰتِ وَالأَرضِ وَما خَلَقَ اللَّهُ مِن شَىءٍ وَأَن عَسىٰ أَن يَكونَ قَدِ اقتَرَبَ أَجَلُهُم فَبِأَىِّ حَديثٍ بَعدَهُ يُؤمِنونَ

வானங்கள் மற்றும் பூமியின் சாம்ராஜ்யத்தையும், மேலும் கடவுள் படைத்துள்ள எல்லாப் பொருட்களையும் அவர்கள் நோட்டமிடவில்லையா? அவர்களுடைய வாழ்க்கையின் முடிவு அருகிலேயே இருக்கக் கூடும் என்று எப்பொழுதாவது அவர்களுக்குத் தோன்றுகின்றதா? இதனைத் தவிர, எந்த ஹதீஸின் மீது அவர்கள் நம்பிக்கை கொள்கின்றனர்?

7:186

مَن يُضلِلِ اللَّهُ فَلا هادِىَ لَهُ وَيَذَرُهُم فى طُغيٰنِهِم يَعمَهونَ

கடவுள் எவரை வழிதவறுதலுக்கு உட்படுத்திவிட்டாரோ, அவரை வழிநடத்துவதற்கு எவரொருவருக்கும் எந்த வழிவகையும் இல்லை. மூடத்தனமான தவறுகள் புரிகின்றவர்களாக, அவர்களுடைய பாவங்களில் அவர்களை அவர் விட்டுவிடுகின்றார்.

7:187

يَسـَٔلونَكَ عَنِ السّاعَةِ أَيّانَ مُرسىٰها قُل إِنَّما عِلمُها عِندَ رَبّى لا يُجَلّيها لِوَقتِها إِلّا هُوَ ثَقُلَت فِى السَّمٰوٰتِ وَالأَرضِ لا تَأتيكُم إِلّا بَغتَةً يَسـَٔلونَكَ كَأَنَّكَ حَفِىٌّ عَنها قُل إِنَّما عِلمُها عِندَ اللَّهِ وَلٰكِنَّ أَكثَرَ النّاسِ لا يَعلَمونَ

(வேளை எனும்)* உலகத்தின் முடிவைப்பற்றியும், எப்பொழுது அது நிகழ்ந்தேறும் என்றும் அவர்கள் உம்மிடம் கேட்கின்றனர். கூறுவீராக, அதனைப் பற்றிய அறிவு என் இரட்சகரிடம் உள்ளது. அவர் மட்டுமே அதன் நேரத்தை* வெளிப்படுத்துகின்றார். வானங்கள் மற்றும் பூமியில், பளுவானதாக அது உள்ளது. திடீரெனவே தவிர உங்களிடம் அது வந்துவிடாது.** அதன் கட்டுப்பாடு உம்மிடத்தில் இருப்பதைப் போல் அவர்கள் உம்மிடம் கேட்கின்றனர். கூறுவீராக, அதனைப் பற்றிய அறிவு கடவுளிடத்தில் உள்ளது, ஆனால் அதிகமான மக்கள் அறிய மாட்டார்கள்.

7:188

قُل لا أَملِكُ لِنَفسى نَفعًا وَلا ضَرًّا إِلّا ما شاءَ اللَّهُ وَلَو كُنتُ أَعلَمُ الغَيبَ لَاستَكثَرتُ مِنَ الخَيرِ وَما مَسَّنِىَ السّوءُ إِن أَنا۠ إِلّا نَذيرٌ وَبَشيرٌ لِقَومٍ يُؤمِنونَ

கூறுவீராக, எனக்கே நன்மையோ அல்லது எனக்கே தீமையோ செய்து கொள்வதற்கு என்னிடம் எந்தச் சக்தியும் இல்லை. கடவுள் நாடுவது மட்டுமே எனக்கு நேரிடுகின்றது. நான் எதிர்காலத்தை அறிந்திருப்பேனாயின், என்னுடைய செல்வவளத்தை நான் அதிகரித்துக் கொண்டு இருந்திருப்பேன், அத்துடன் எந்தத் தீங்கும் என்னை வருத்தியிருக்காது. நம்பிக்கை கொண்டவர்களுக்கு ஓர் எச்சரிப்பவன் அத்துடன் நற்செய்தி தாங்கிய ஒருவன் என்பதை விட நான் அதிகம் எதுவுமில்லை.

7:189

هُوَ الَّذى خَلَقَكُم مِن نَفسٍ وٰحِدَةٍ وَجَعَلَ مِنها زَوجَها لِيَسكُنَ إِلَيها فَلَمّا تَغَشّىٰها حَمَلَت حَملًا خَفيفًا فَمَرَّت بِهِ فَلَمّا أَثقَلَت دَعَوَا اللَّهَ رَبَّهُما لَئِن ءاتَيتَنا صٰلِحًا لَنَكونَنَّ مِنَ الشّٰكِرينَ

ஒரு நபரில் (ஆதம்) இருந்து உங்களை அவர் படைத்தார். அதனைத் தொடர்ந்து, ஒவ்வொரு மனிதனுக்கும் ஒரு ஜோடியை, அவளுடன் அமைதி காண்பதற்காக அவர் தருகின்றார். அவள் பின்னர் அவளால் உணரக் கூட இயலாத ஓர் இலேசான சுமையைச் சுமக்கின்றாள். அச்சுமையானது கனமாகிக் கொண்டே போகும் போது, அவர்கள் தங்களுடைய இரட்சகராகிய கடவுளிடம் இறைஞ்சுகின்றனர்: ஒரு நல்ல குழந்தையை எங்களுக்கு நீர் தந்தால், நாங்கள் நன்றியுடையவர்களாக இருப்போம்.

7:190

فَلَمّا ءاتىٰهُما صٰلِحًا جَعَلا لَهُ شُرَكاءَ فيما ءاتىٰهُما فَتَعٰلَى اللَّهُ عَمّا يُشرِكونَ

ஆனால் ஒரு நல்ல குழந்தையை அவர்களுக்கு அவர் கொடுக்கின்ற போது, அவர்கள் அவருடைய பரிசையே அவருக்குப் போட்டியாகிவிடுகின்ற அளவுக்கு ஒரு போலித் தெய்வமாக மாற்றிவிடுகின்றனர். எந்தப் பங்குதாரர்களுக்கும் மிகவும் அப்பாற்பட்டு, கடவுள் உயர்ந்தவராவார்.

7:191

أَيُشرِكونَ ما لا يَخلُقُ شَيـًٔا وَهُم يُخلَقونَ

எந்த ஒன்றையும் படைக்காத, மேலும் அவர்களே படைக்கப்பட்டவர்களாக இருக்கின்ற போலித் தெய்வங்களை அவர்கள் இணைவழிபாடு செய்கின்றனர் என்பது ஒரு நிதர்சனமல்லவா?

7:192

وَلا يَستَطيعونَ لَهُم نَصرًا وَلا أَنفُسَهُم يَنصُرونَ

அவர்களுக்கு உதவி செய்யவோ அன்றி தங்களுக்கே கூட உதவி செய்து கொள்ளவோ இயலாத போலித் தெய்வங்கள்?

7:193

وَإِن تَدعوهُم إِلَى الهُدىٰ لا يَتَّبِعوكُم سَواءٌ عَلَيكُم أَدَعَوتُموهُم أَم أَنتُم صٰمِتونَ

வழிகாட்டுதலின் பால் நீங்கள் அவர்களை அழைக்கும் போது, அவர்கள் உங்களைப் பின்பற்றுவதில்லை. எனவே, அவர்களை நீங்கள் அழைக்கின்றீர்களோ, அல்லது மௌனமாக இருந்துவிடுகின்றீர்களோ, அவர்களுக்கு அது சமமேயாகும்.

7:194

إِنَّ الَّذينَ تَدعونَ مِن دونِ اللَّهِ عِبادٌ أَمثالُكُم فَادعوهُم فَليَستَجيبوا لَكُم إِن كُنتُم صٰدِقينَ

கடவுளுடன் நீங்கள் பிரார்த்திக்கின்ற போலித் தெய்வங்கள் உங்களைப் போன்ற படைப்பினங்களேயாவர். சென்று அவர்களை அழைத்துப் பாருங்கள்; நீங்கள் சரியானவர்களாக இருந்தால், அவர்கள் உங்களுக்குப் பதிலளிக்கட்டும்.

7:195

أَلَهُم أَرجُلٌ يَمشونَ بِها أَم لَهُم أَيدٍ يَبطِشونَ بِها أَم لَهُم أَعيُنٌ يُبصِرونَ بِها أَم لَهُم ءاذانٌ يَسمَعونَ بِها قُلِ ادعوا شُرَكاءَكُم ثُمَّ كيدونِ فَلا تُنظِرونِ

அவர்கள் நடக்கக்கூடிய கால்கள் அவர்களுக்கு இருக்கின்றனவா? தங்களையே அவர்கள் தற்காத்துக்கொள்ளக்கூடிய கரங்கள் அவர்களுக்கு இருக்கின்றனவா? அவர்கள் காணக்கூடிய கண்கள் அவர்களுக்கு இருக்கின்றனவா? அவர்கள் செவியேற்கக் கூடிய காதுகள் அவர்களுக்கு இருக்கின்றனவா? கூறுவீராக, உங்களுடைய போலித் தெய்வங்களை அழையுங்கள், மேலும் தாமதமின்றி என்னைக் கடுமையாகத் தாக்கும்படி அவர்களைக் கேட்டுக்கொள்ளுங்கள்.

7:196

إِنَّ وَلِـِّۧىَ اللَّهُ الَّذى نَزَّلَ الكِتٰبَ وَهُوَ يَتَوَلَّى الصّٰلِحينَ

கடவுள்தான் என்னுடைய ஒரே இரட்சகரும் அதிபதியும் ஆவார்; இந்த வேதத்தை வெளிப்படுத்திய அந்த ஒருவர். அவர் நன்னெறியாளர்களைப் பாதுகாக்கின்றார்.

7:197

وَالَّذينَ تَدعونَ مِن دونِهِ لا يَستَطيعونَ نَصرَكُم وَلا أَنفُسَهُم يَنصُرونَ

அவருடன் நீங்கள் அமைத்துக்கொள்கின்ற போலித் தெய்வங்களைப் பொறுத்தவரை, அவர்கள் உங்களுக்கு உதவி செய்ய இயலாது, அன்றி அவர்கள் தங்களுக்கே உதவி செய்து கொள்ள இயலாது.

7:198

وَإِن تَدعوهُم إِلَى الهُدىٰ لا يَسمَعوا وَتَرىٰهُم يَنظُرونَ إِلَيكَ وَهُم لا يُبصِرونَ

வழிகாட்டுதலின் பால் அவர்களை நீங்கள் அழைக்கும் போது, அவர்கள் செவியேற்பதில்லை, அத்துடன் அவர்கள் உம்மை நோக்குவதை நீர் காண்கின்றீர், ஆனால் அவர்கள் காண்பதில்லை.

7:199

خُذِ العَفوَ وَأمُر بِالعُرفِ وَأَعرِض عَنِ الجٰهِلينَ

நீர் பிழைபொறுத்தலைக் கைக்கொள்ளவும், சகிப்புத் தன்மையைப் பரிந்துரைக்கவும், அறிவற்றவர்களை அலட்சியம் செய்திடவும் வேண்டும்.

7:200

وَإِمّا يَنزَغَنَّكَ مِنَ الشَّيطٰنِ نَزغٌ فَاستَعِذ بِاللَّهِ إِنَّهُ سَميعٌ عَليمٌ

சாத்தான் ஏதேனும் கிசுகிசுப்பை உம்மிடம் கிசுகிசுத்தால், கடவுளிடம் அடைக்கலம் தேடுவீராக; அவர் செவியேற்பவர், சர்வமும் அறிந்தவர்.

7:201

إِنَّ الَّذينَ اتَّقَوا إِذا مَسَّهُم طٰئِفٌ مِنَ الشَّيطٰنِ تَذَكَّروا فَإِذا هُم مُبصِرونَ

நன்னெறியாளர்களாக இருப்பவர்கள், சாத்தான் ஒரு திட்டத்துடன் அவர்களை நெருங்குகின்ற போதெல்லாம், அவர்கள் நினைவுபடுத்திக் கொள்வார்கள், உடனே அவர்கள் காணக்கூடியவர்களாக ஆகிவிடுகின்றனர்.

7:202

وَإِخوٰنُهُم يَمُدّونَهُم فِى الغَىِّ ثُمَّ لا يُقصِرونَ

வழிதவறுதலில் சென்றுவிடுமாறு அவர்களுடைய சகோதரர்கள் அவர்களை இடையறாது மயக்குகின்றனர்.

7:203

وَإِذا لَم تَأتِهِم بِـٔايَةٍ قالوا لَولَا اجتَبَيتَها قُل إِنَّما أَتَّبِعُ ما يوحىٰ إِلَىَّ مِن رَبّى هٰذا بَصائِرُ مِن رَبِّكُم وَهُدًى وَرَحمَةٌ لِقَومٍ يُؤمِنونَ

அவர்கள் கோருகின்ற ஓர் அற்புதத்தை நீர் கொண்டு வராவிட்டால், அவர்கள் கூறுகின்றனர், ஏன் அதற்காகக் கேட்கக் கூடாது? கூறுவீராக, என்னுடைய இரட்சகரிடமிருந்து எனக்கு வெளிப்படுத்தப்பட்டவற்றை மட்டுமே நான் பின்பற்றுகின்றேன். இவை உங்களுடைய இரட்சகரிடமிருந்துள்ள அறிவூட்டல்களாகவும், வழிகாட்டுதலாகவும், நம்பிக்கை கொண்ட மக்களுக்குக் கருணையுமாக இருக்கின்றன.

7:204

وَإِذا قُرِئَ القُرءانُ فَاستَمِعوا لَهُ وَأَنصِتوا لَعَلَّكُم تُرحَمونَ

குர்ஆன் எடுத்துக் கூறப்படும்போது, அதனை நீங்கள் கருத்தூன்றிச் செவியேற்கவும் கவனத்தில் எடுத்துக்கொள்ளவும் வேண்டும், நீங்கள் கருணையை அடையும் பொருட்டு.

7:205

وَاذكُر رَبَّكَ فى نَفسِكَ تَضَرُّعًا وَخيفَةً وَدونَ الجَهرِ مِنَ القَولِ بِالغُدُوِّ وَالـٔاصالِ وَلا تَكُن مِنَ الغٰفِلينَ

உமக்குள்ளேயும், பகிரங்கமாகவும், தனிமையிலும், சாந்தமாகவும், பகலும் இரவும் உம்முடைய இரட்சகரை நீர் நினைவில் கொள்ள வேண்டும்; அறியாதவராக இருந்திடாதீர்.*

7:206

إِنَّ الَّذينَ عِندَ رَبِّكَ لا يَستَكبِرونَ عَن عِبادَتِهِ وَيُسَبِّحونَهُ وَلَهُ يَسجُدونَ

உம்முடைய இரட்சகரிடம் இருப்பவர்கள் ஒருபோதும் அவரை வழிபடுவதற்கு மிகவும் கர்வம் கொண்டவர்களாக இருப்பதில்லை; அவர்கள் அவரைத் துதிக்கின்றனர், மேலும் அவர் முன்னர் சிரம் பணிந்து விழுகின்றனர்.

‹ அத்தியாயம் 6அத்தியாயம் 8 ›