SHAHAADAH- ஷஹாதஹ்
ஷஹாதஹ் என்பதன் பொருள் என்ன?
Shahaadah ஷஹாதஹ் என்றால் “விசுவாசத்தின் பிரகடனம்” / “சாட்சியம் பகர்தல்” என்று பொருள்.
ஷஹாதஹ் என்றால் என்ன?
குர்ஆன் 3 :18 கடவுள் நமக்கு சரியான ஷஹாதஹ் கற்றுத் தருகிறார்.
கடவுளால் விதிக்கப்பட்ட விசுவாசப் பிரகடனமாவது (ஷஹாதஹ்): "கடவுளைத் தவிர வேறு தெய்வம் இல்லை," அரபி மொழியில் "லா இலாஹ இல்லல்லாஹ்" 3:18, 37:35, 47:19.
3:18 அவரைத் தவிர தெய்வம் இல்லை என்று கடவுள் சாட்சியம் பகர்கின்றார், மேலும் வானவர்களும் அறிவுடையவர்களும் அவ்வாறே செய்கின்றனர். சத்தியமாகவும் நீதமாகவும், அவர்தான் பரிபூரணமான தெய்வமாக இருக்கின்றார்; அவரை அன்றி தெய்வம் இல்லை, எல்லாம் வல்லவர், ஞானம் மிகுந்தவர்.
ஷஹாதஹ்வை நாம் ஏன் கூறவேண்டும்?
நம் கடவுள் மீது நம் சரணடைந்ததை வெளிப்படுத்தும் முகமாக “விசுவாசத்தின் பிரகடனம்” “சாட்சி பகர்தல்” குர்ஆனில் கூறியபடி நாம் சரியாக ஷஹாதஹ்வை கூறவேண்டும்.
ஷஹாதஹ்வில் மற்றொரு பெயரை சேர்த்து கூறலாமா? சரியாக இருந்தாலும்.
எக்காலத்திலும் ஷஹாதஹ்வில் மற்றொரு பெயரை சேர்த்து கூற கூடாது. கடவுளின் வார்த்தையை யாரும் மாற்றக்கூடாது என்று கடவுள் நமக்கு எச்சரித்திருக்கிறார்.
உண்மையான நம்பிக்கையாளர்கள் முஹம்மது நபி அல்லாஹ்வுடைய தூதர் என்று நம்பிக்கை கொள்வார்கள். சரியான ஷஹாதஹ்வை "லா இலாஹ இல்லல்லாஹ்" “கடவுளைத் தவிர வேறு தெய்வம் இல்லை” என்று பிரகடனம் செய்வார்கள்.
4:36 நீங்கள் கடவுள்-ஐ மட்டும் வழிபட வேண்டும் - அவருடன் எந்த ஒன்றையும் இணைக்காதீர்கள்..
22:31 நீங்கள் உங்களுடைய அர்ப்பணிப்பை கடவுள்-க்கு மட்டுமே பரிபூரணமாகப் பேணிவர வேண்டும். கடவுள்-வுடன் போலித் தெய்வங்களை அமைத்துக் கொள்கின்ற எவரும், விண்ணிலிருந்து விழுந்து, பின்னர் வல்லூறுகளால் பிடுங்கிச் செல்லப்பட்ட,அல்லது ஆழமானதொரு கணவாய்க்குள் காற்றில் அடித்துச் செல்லப்பட்ட ஒருவருக்கு ஒப்பாவார்.
39:3 நிச்சயமாக, மார்க்கம் கடவுள்-க்கு மட்டுமே அர்ப்பணிக்கப்பட வேண்டும். அவருடன் போலித் தெய்வங்களை அமைத்துக் கொள்பவர்கள் கூறுகின்றனர், "கடவுள்-க்கு நெருக்கமாக எங்களைக் கொண்டு செல்வதற்காகவே நாங்கள் அவர்களை இணைவழிபாடு செய்கின்றோம்; ஏனெனில் அவர்கள் மேலானதொரு நிலையில் இருக்கின்றனர்!" அவர்களுடைய தர்க்கங்கள் குறித்து கடவுள் அவர்களுக்குத் தீர்ப்பளிப்பார். இத்தகைய பொய்யர்களை, நம்பமறுப்பவர்களைக் கடவுள் வழிநடத்துவதில்லை.
மாபெரும் அளவுகோல்:
39:45 கடவுள் மட்டும் மொழியப்பட்டால், மறுவுலகின் மீது நம்பிக்கை கொள்ளாதவர்களின் இதயங்கள் வெறுப்பினால் சுருங்கி விடுகின்றன. ஆனால் அவருடன் மற்றவர்களும் மொழியப்பட்டால், அவர்கள் திருப்தி அடைகின்றனர்.
காரணத்தைக் கவனியுங்கள் :
40:12 இது ஏனெனில் கடவுள் மட்டும் ஆதரிக்கப்பட்ட போது, நீங்கள் நம்பமறுத்தீர்கள், ஆனால் அவருடன் மற்றவர்களும் மொழியப்பட்டபோது நீங்கள் நம்பிக்கை கொண்டீர்கள், ஆகையால் கடவுள்-ன் தீர்ப்பு வழங்கப்பட்டு விட்டது; அவர் மிகவும் உயர்ந்தவர், மகாப்பெரியவர்.
மற்ற மார்க்க கடமைகள் மாதிரி குர்ஆனுக்கு முன்பே அதாவது முகம்மது நபிக்கு முன்பே “ஷஹாதஹ்” உள்ளது.
உண்மையான நம்பிக்கையாளர்கள் முஹம்மது நபி அல்லாஹ்வுடைய தூதர் என்று நம்பிக்கை கொள்வார்கள். சரியான ஷஹாதஹ்வை "லா இலாஹ இல்லல்லாஹ்" “கடவுளைத் தவிர வேறு தெய்வம் இல்லை” என்று பிரகடனம் செய்வார்கள்.
மிகப்பெரும் இறைநிந்தனை
பெரும்பாலான முஸ்லிம்கள், முஹம்மத் கடவுளின் தூதராக இருக்கின்றார் எனப் பிரகடனிக்கின்ற ஓர் இரண்டாம் "ஷஹாதஹ்"வைச் சேர்த்துக் கொள்வதை வலியுறுத்துகின்றனர். வரையறையின்படி இது "ஷிர்க்" (போலித் தெய்வ வழிபாடு) ஆகும், மேலும் கடவுள் மற்றும் அவருடைய தூதருக்கு வெளிப்படையானதொரு கீழ்ப்படியாமையும் ஆகும்.
இது பற்பல கட்டளைகளை மீறுகின்றது.
குர் ஆனில் வசனம் சூரா அல்-முனாஃபிகூன் (நயவஞ்சகர்கள்) 63:1 ஒரு இடத்தில் மட்டுமே, இத்தகையதொரு வாசகம் கூறப்படுகின்றது. நயவஞ்சகர்கள் மட்டுமே இத்தகையதொரு வாசகத்தைக் கூறுகின்றனர் என்று கடவுள் நமக்கு தெரிய படுத்துகின்றார்.
63:1 வசனம் நயவஞ்சகர்கள் உம்மிடம் வரும் பொழுது அவர்கள் கூறுகின்றனர், "நீர் கடவுள்-ன் தூதர்தான் என நாங்கள் சாட்சியம் பகர்கின்றோம்." நீர் அவருடைய தூதராக இருக்கின்றீர் என்பதைக் கடவுள் அறிவார், மேலும் இந்நயவஞ்சகர்கள் பொய்யர்களாக இருக்கின்றனர் என்று கடவுள் சாட்சியம் பகர்கின்றார்.
கடவுள் இது “மில்லத் இப்ராஹிம்” (இப்ராஹீமின் மார்க்கம்) என்று நமக்கு தெரிய படுத்துகின்றார் (2:130, 135; 3:95; 4:125; 6:161; 12:37-38; 16:123; 22:78). ஒரே ஷஹாதா “லாயிலாஹ இல்லல்லாஹ்” என்பதுதான்.
முஹம்மது நபி இப்ராஹீம் நபிக்கு பிறகுதான் வந்தவர்.
கடவுளின் தூதர்களுக்கிடையில் எந்தப் பாகுபாடும் செய்யாதீர்:
போலியான ஷஹாதா கூடுதலாக, இது 2:136, 2:285, 3:84, 4:150-152ல் உள்ள, கடவுளின் தூதர்களுக்கிடையில் பாகுபாடு எதுவும் செய்வதைத் தடுக்கின்ற முக்கியக் கட்டளைகளையும் மீறுகின்றது. "முஹம்மத் கடவுளின் ஒரு தூதராக இருக்கின்றார்," எனப் பிரகடனிப்பதன் மூலம், மேலும் ஆப்ரஹாம், மோஸஸ், ஜீஸஸ், ஸாலிஹ், ஜோனஹ் போன்ற மற்றத் தூதர்களுக்கு அதே பிரகடனத்தைச் செய்யத் தவறுவதால் ஒரு பாகுபாடு செய்யப்படுகின்றது, அத்துடன் ஒரு முக்கிய கட்டளை மீறப்படுகின்றது.
2:136 கூறுங்கள், "நாங்கள் கடவுள் மீதும், மேலும் எங்களுக்கு இறக்கி அனுப்பப்பட்டுள்ளவற்றிலும், மேலும் ஆப்ரஹாம், இஸ்மாயில், ஐசக், ஜேகப், மற்றும் அந்த வம்சத்தின் தலைவர்களுக்கு இறக்கி அனுப்பப்பட்டுள்ளவற்றிலும்; மேலும் மோஸஸுக்கும் ஜீஸஸுக்கும் மற்றும் நபிமார்கள் அனைவருக்கும் அவர்களுடைய இரட்சகரிடமிருந்து கொடுக்கப்பட்டவற்றிலும் நம்பிக்கை கொள்கின்றோம். அவர்களில் எந்த ஒரு வருக்கிடையிலும் நாங்கள் பாகுபாடு செய்யமாட்டோம். அவருக்கு மட்டுமே நாங்கள் சரணடைந்தோராக இருக்கின்றோம்."
2:285 தன்னுடைய இரட்சகரிடமிருந்து அவருக்கு இறக்கி அனுப்பப்பட்டவற்றின் மீது இத்தூதர் நம்பிக்கை கொண்டு விட்டார், மேலும் நம்பிக்கையாளர்களும் அவ்வாறே செய்தனர். கடவுள், அவருடைய வானவர்கள், அவருடைய வேதம், மற்றும் அவருடைய தூதர்கள் மீது அவர்கள் நம்பிக்கை கொள்கின்றனர்: "அவருடைய தூதர்களில் எவருக்கிடையிலும் நாங்கள் பாகுபாடு எதுவும் செய்யமாட்டோம்." அவர்கள் கூறுகின்றனர், "நாங்கள் செவியேற்கின்றோம், மேலும் நாங்கள் கீழ்ப்படிகின்றோம்.* எங்களை மன்னிப்பீராக, எங்கள் இரட்சகரே. இறுதி விதியானது உம்மிடமே உள்ளது."
3:84 கூறுவீராக, "நாங்கள் கடவுள் மீதும், மேலும் எங்களுக்கு இறக்கி அனுப்பப்பட்டவற்றிலும், மேலும் ஆப்ரஹாம், இஸ்மாயீல், ஐசக், ஜேக்கப் மற்றும் அவ்வம்சாவளித் தலைவர்களுக்கு இறக்கி அனுப்பப்பட்டுள்ளவற்றிலும், மேலும் மோஸஸ், ஜீஸஸ், மற்றும் நபிமார்களுக்கு அவர்களுடைய இரட்சகரிடமிருந்து கொடுக்கப்பட்டவற்றிலும் நம்பிக்கை கொள்கின்றோம். அவர்களில் எந்த ஒருவருக்கிடையிலும் பாகுபாடு செய்ய மாட்டோம். அவருக்கு மட்டுமே நாங்கள் சரணடைந்தோராக இருக்கின்றோம்."
4:150-152 கடவுள் மற்றும் அவருடைய தூதர்களை நம்பமறுத்து, அத்துடன் கடவுள் மற்றும் அவருடைய தூதர்களுக்கிடையில் பாகுபாடு செய்ய நாடி, "நாங்கள் சிலர் மீது நம்பிக்கை கொள்கின்றோம். மேலும் சிலரை ஏற்கமறுக்கின்றோம்," என்று கூறி, அத்துடன் இடையில் ஒரு பாதையைப் பின்பற்ற விரும்புகின்றவர்கள்;
இவர்கள்தான் மெய்யான நம்பமறுப்பவர்களாக இருக்கின்றனர். இழிவு நிறைந்ததொரு தண்டனையை நம்பமறுப்பவர்களுக்காக நாம் தயாரித்து வைத்துள்ளோம்.
எவர்கள் கடவுள் மற்றும் அவருடைய தூதர்கள் மீது நம்பிக்கை கொண்டு, மேலும் அவர்களுக்கிடையில் எந்தப் பாகுபாடும் செய்யாதிருக்கின்றனரோ, அவர்களைப் பொறுத்த வரை அவர்களுடைய பிரதிபலனை அவர்களுக்கு அவர் வழங்குவார். கடவுள் மன்னிப்பவர், மிக்க கருணையாளர்.
37:35 "லா இலாஹ இல்லல்லாஹ் [கடவுள்-வுடன் வேறு தெய்வம் இல்லை]," என்று அவர்களிடம் கூறப்பட்ட போது, அவர்கள் ஆணவங் கொண்டார்கள்.
கணித அற்புதம் மூலம் உறுதிப்படுத்துகிறது:
ஒவ்வொரு எழுத்துக்களின் அப்ஜத் (ABJAD) மதிப்பு நாம் எழுதினால் அந்த நீண்ட எண் 19 பேருக்கு தொகையாக உள்ளது
30113051301130305 = 19 x 1584897436901595.
இந்த கணித அற்புதம் சரியான ஷஹாதஹ்வைவை கடவுளின் முத்திரையான 19 இன் மூலம் உறுதிப்படுத்துகிறது
-------------------
கடவுளைக் குறிக்கும் மட்டும் “wahdahu” என்ற வார்த்தை 4 சூராக்களில் இடம்பெறுகின்றன. அதன் சூரா எண்னையும் வசன எண்ணெயும் நாம் கூட்டினால் 19 பேருக்கு தொகையாக அமைகிறது 361= 19 x 19
SURA NO | VERSE NO | TOTAL |
7 | 70 | 77 |
39 | 45 | 84 |
40 | 12,84 | 136 |
60 | 4 | 64 |
|
| 361 |
|
| 19 X 19 |
-------------------
இந்த முக்கிய கட்டளையான "கடவுளைத் தவிர வேறு தெய்வம் இல்லை," அரபி மொழியில் "லா இலாஹ இல்லல்லாஹ்" குர்ஆனில் 19 சூராக்களில் இடம்பெறுகின்றன அவை :
Sura No. 2, 3, 4, 6, 7, 9, 11, 13, 20, 23, 27, 28, 35, 39, 40, 44, 59, 64, 73 = 19 Suras
-------------------
"லா இலாஹ இல்லல்லாஹ்" குர்ஆனில் 19 சூராக்களில் 29 முறை இடம்பெறுகின்றன.
சூராக்கள் எண்னையும் வசன எண்ணெயும் மற்றும் எத்தனை முறைகள் (29) என்பதையும் நாம் கூட்டினால் 19 பேருக்கு தொகையாக அமைகிறது 2128 = 19 X 112.
SURA NO | VERSE NO | Total Occurrence |
2 | 163 | 1 |
| 255 | 1 |
3 | 2 | 1 |
| 6 | 1 |
| 18 | 2 |
4 | 87 | 1 |
6 | 102 | 1 |
| 106 | 1 |
7 | 158 | 1 |
9 | 31 | 1 |
11 | 14 | 1 |
13 | 30 | 1 |
20 | 8 | 1 |
| 98 | 1 |
23 | 116 | 1 |
27 | 26 | 1 |
28 | 70 | 1 |
| 88 | 1 |
35 | 3 | 1 |
39 | 6 | 1 |
40 | 3 | 1 |
| 62 | 1 |
| 65 | 1 |
44 | 8 | 1 |
59 | 22 | 1 |
| 23 | 1 |
64 | 13 | 1 |
73 | 9 | 1 |
|
|
|
507 | 1592 | 29 |
TOTAL 507+1592+29 = 2128 (19 X 112)
-------------------
"லா இலாஹ இல்லல்லாஹ்" இடம் பெறும் முதல் வசனம் 2:163 முதல் கடைசியாக இடம்பெறும் வசனம் 73:9 வரை உள்ள. அனைத்து சூரா எண்ணையும், வாசனை எண்ணையும் மற்றும் அதன் கூட்டுத் தொகையையும் நாம் கூட்டினால்.. அந்த பெரிய எண் 19 பெருக்கு தொகையாக அமைகிறது.
Sura | Verses | Sum of Verses |
|
|
|
2 | 123 | 27675 |
3 | 200 | 20100 |
4 | 176 | 15576 |
5 | 120 | 7260 |
6 | 165 | 13695 |
7 | 206 | 21321 |
8 | 75 | 2850 |
9 | 127 | 8128 |
10 | 109 | 5995 |
11 | 123 | 7626 |
12 | 111 | 6216 |
13 | 43 | 946 |
14 | 52 | 1378 |
15 | 99 | 4950 |
16 | 128 | 8256 |
17 | 111 | 6216 |
18 | 110 | 6105 |
19 | 98 | 4851 |
20 | 135 | 9180 |
21 | 112 | 6328 |
22 | 78 | 3081 |
23 | 118 | 7021 |
24 | 64 | 2080 |
25 | 77 | 3003 |
26 | 227 | 25878 |
27 | 93 | 4371 |
28 | 88 | 3916 |
29 | 69 | 2415 |
30 | 60 | 1830 |
31 | 34 | 595 |
32 | 30 | 465 |
33 | 73 | 2701 |
34 | 54 | 1485 |
35 | 45 | 1035 |
36 | 83 | 3486 |
37 | 182 | 16653 |
38 | 88 | 3916 |
39 | 75 | 2850 |
40 | 85 | 3655 |
41 | 54 | 1485 |
42 | 53 | 1431 |
43 | 89 | 4005 |
44 | 59 | 1770 |
45 | 37 | 703 |
46 | 35 | 630 |
47 | 38 | 741 |
48 | 29 | 435 |
49 | 18 | 171 |
50 | 45 | 1035 |
51 | 60 | 1830 |
52 | 49 | 1225 |
53 | 62 | 1953 |
54 | 55 | 1540 |
55 | 78 | 3081 |
56 | 96 | 4656 |
57 | 29 | 435 |
58 | 22 | 253 |
59 | 24 | 300 |
60 | 13 | 91 |
61 | 14 | 105 |
62 | 11 | 66 |
63 | 11 | 66 |
64 | 18 | 171 |
65 | 12 | 78 |
66 | 12 | 78 |
67 | 30 | 465 |
68 | 52 | 1378 |
69 | 52 | 1378 |
70 | 44 | 990 |
71 | 28 | 406 |
72 | 28 | 406 |
73 | 9 | 45 |
|
|
|
|
|
|
2700 | 5312 | 308490 |
2700 + 5312 + 308490 = 316502 ( 19 x 16658 )
உண்மையான நம்பிக்கையாளர்கள் முஹம்மது நபி அல்லாஹ்வுடைய தூதர் என்று நம்பிக்கை கொள்வார்கள். சரியான ஷஹாதஹ்வை "லா இலாஹ இல்லல்லாஹ்" “கடவுளைத் தவிர வேறு தெய்வம் இல்லை” என்று பிரகடனம் செய்வார்கள்.
எல்லாம் புகழும் கடவுளுக்கே.