
(சரணடைதல்) இஸ்லாமின் முதல் தூண்:
“லா இலாஹ இல்லா அல்லாஹ் (கடவுளைத் தவிர தெய்வம் இல்லை)
வசனம் 3:18 (சரணடைதல்) இஸ்லாமின் முதல் தூணை எடுத்துரைக்கின்றது : “அவருடன் வேறு தெய்வம் இல்லை என்று கடவுள் சாட்சியம் பகர்கின்றார், மேலும் வானவர்களும் அறிவைப் பெற்றிருப்பவர்களும் அவ்வாறே செய்கின்றனர்”.
மிகவும் அதிமுக்கியமான இத்தூண் சிதைக்கப்பட்டுள்ளது. மில்லியன் கணக்கான முஸ்லிம்கள் சாத்தானின் பலதெய்வக் கொள்கை சார்ந்த கூற்றினை சுவீகரித்துக் கொண்டுவிட்டனர், எனவே கடவுளின் பெயருடன் முஹம்மதின் பெயரும் மொழியப்படுதலை அவர்கள் வலியுறுத்துகின்றனர். ஆயினும், 39:45-ல் உள்ள இக்குர்ஆனின் மகத்தான அளவுகோல் இத்தகைய முஸ்லிம்களை நம்பமறுப்பவர்கள் என்று முத்திரையிடுகின்றது: “கடவுள் மட்டும் மொழியப்படுகின்ற போது, மறுவுலகில் நம்பிக்கையற்றவர்களாக இருப்பவர்களுடைய இதயங்கள் வெறுப்புக் கொண்டு சுருங்கிடுகின்றன, ஆனால் அவருடன் மற்றவர்களும் மொழியப்படுகின்ற போது, அவர்கள் திருப்தியடைந்தவர்கள் ஆகிவிடுகின்றனர்”.
இந்த அளவுகோலை மையமாக வைத்து நான் விரிவான ஆய்வு செய்தேன், பின்பு அதிர்ச்சி தருகின்றதொரு தீர்மானத்தை நான் அடைந்தேன்: 3:18-ல் கட்டளையிடப்பட்டுள்ளபடியான இஸ்லாமின் முதல் தூணை ஆதரிக்காத போலித் தெய்வ வழிபாடு செய்கின்றவர்கள் சரியான ஷஹாதாவை உச்சரிப்பதில் இருந்து கடவுளால் தடுக்கப்பட்டு உள்ளனர். அவர்களால் இவ்வாறு மட்டும் கூற இயலாது: முஹம்மதின் பெயரை மொழியாமல் தனித்து “அஷ்ஹது அல்லா இலாஹ இல்லா அல்லாஹ் என்பதை மட்டும். ஒரு முஸ்லிமாக இருப்பதாகக் கூறிக்கொள்ளும் போலித் தெய்வ வழிபாடு செய்கின்ற எவருடனும் இதனை முயற்சித்துப் பாருங்கள். இவ்வாறு கூறும்பΩ அவர்களிடம் அறைகூவல் விடுங்கள் : “அஷ்ஹது அல்லா இலாஹ இல்லாஅல்லாஹ் அவர்கள் ஒருபோதும் அதனைக் கூற இயலாது. இது ஆப்ரஹாமுடைய மார்க்கமாக இருப்பதனால் (2:130, 135; 3:95; 4:125; 6:161; 12:37-38; 16:123; 22:78; பின் இணைப்பு 9) ஒரே சமயக் கோட்பாடு “லா இலாஹ இல்லா அல்லாஹ் (அந்த ஒரு கடவுளைத் தவிர வேறு தெய்வம் இல்லை) என்றுதான் இருக்கவேண்டும். ஆப்ரஹாமுக்கு முன்னர் முஹம்மத் இந்தப்பூமியின் மீது இருந்திடவில்லை.
மிகப்பெயரியதோர் இறைநிந்தனை
நபியான முஹம்மதை அவருடைய விருப்பத்திற்கு எதிரா போலித் தெய்வ வழிபாடு செய்வதற்காகக் குர்ஆனைச் சிதைத்தலை விடவும் மிகபெரிய இறைநிந்தனை எதுவும் இல்லை. சூரா “முஹம்மத்” -ன் வசனம் 19 கூறுகின்து (47:19) : “அந்த ஒரு கடவுளைத் தவிர வேறு தெய்வம் இல்லை என்பதை நீங்கள் அறிந்து கொள்ள வேண்டும்”