ZAKAT - ஜகாத்
ஜகாத் என்றால் என்ன?
ஜகாத் என்றால் கடமையான தர்மம் . இஸ்லாம் (அடிபணிதல்) மார்க்கத்தின் முக்கிய கடமைகளில் ஒன்று.
ஜகாத் கடமை எப்போது வெளிப்படுத்தப்பட்டது? குர்ஆனுக்கு முன்பு ஜகாத் முறைகள் உள்ளதா?
ஆம், மார்க்கத்தின் மற்ற கடமைகள் போன்று ஜகாத்தும் குர்ஆனுக்கு முன்பு, அதாவது இப்ராஹீம் நபி மூலமாக கடவுள் நமக்கு கடமையாற்றியுள்ளார் என்று குர்ஆன் மூலமாக கடவுள் நமக்கு கற்றுத் தருகிறார்.
குர்ஆனுக்கு முன்பு ஜகாத் முறைகள் கடைப்பிடிக்கப்பட்டது என்று நாம் குர்ஆனிலிருந்து கற்றுக் கொள்கின்றோம்.
ஆப்ரஹாம் (21:72-73, 22:78, 16:123).
ஜீஸஸ் (இயேசு) (19:31)
இஸ்மாயில் (19:55)
இஸ்ரேலியர்கள் (2:83, 5:12).
ஆப்ரஹாம்: இஸ்லாத்தின் மார்க்கக் கடமைகள் அனைத்தையும் சேர்ப்பித்தவர்
[21:73] நம்முடைய கட்டளைகளுக்கேற்ப வழிநடத்திய இமாம்களாக நாம் அவர்களை ஆக்கினோம், மேலும் நன்மைகள் செய்வது எப்படி என்பதையும், (ஸலாத்) தொடர்புத் தொழுகைகளையும் (ஜகாத்)* கடமையான தர்மத்தையும் கடைப்பிடிப்பது எப்படி என்பதையும் நாம் அவர்களுக்குக் கற்றுக் கொடுத்தோம். நமக்கு, அர்ப்பணித்துக் கொண்ட அடியார்களாக அவர்கள் இருந்தனர்.
22:78 நீங்கள் கடவுள்-ன் நிமித்தம் பாடுபட வேண்டியவாறு அவர் நிமித்தமாக நீங்கள் பாடுபட வேண்டும். அவர் உங்களைத் தேர்ந்தெடுத்துக் கொண்டார், மேலும் உங்கள் தந்தை ஆப்ரஹாமின் மார்க்கமாகிய-உங்கள் மார்க்கத்தைப் பயில்வதில் உங்கள் மீது எந்தச் சிரமத்தையும் அவர் வைக்கவில்லை. அவர்தான் முதலில் உங்களுக்கு "சரணடைந்தோர்" எனப் பெயரிட்டார். இப்படியாக, தூதர் உங்களுக்கிடையில் ஒரு சாட்சியாகத் திகழ வேண்டும், மேலும் நீங்கள் மக்களுக்கிடையில் சாட்சிகளாகத் திகழவேண்டும், எனவே நீங்கள் (ஸலாத்) தொடர்புத் தொழுகைகளைக் கடைப்பிடிக்கவும், மேலும் (ஜகாத்) கடமையான தர்மத்தைக் கொடுத்து வரவும், மேலும் கடவுள் -ஐ பற்றிக் கொள்ளவும் வேண்டும்; அவர்தான் உங்கள் இரட்சகர், மிகச்சிறந்த இரட்சகர், மேலும் மிகச் சிறந்த ஆதரவாளர்.
19:55 தொடர்புத் தொழுகைகளையும் (ஸலாத்) கடமையான தர்மத்தையும் (ஜகாத்) நிறைவேற்றும்படித் தன் குடும்பத்தாரை ஏவுபவராக அவர் (இஸ்மாயில்) இருந்தார்; அவருடைய இரட்சகரிடம், ஏற்றுக் கொள்ளப்படக் கூடியவராக அவர் இருந்தார்.
19:31 "நான் (ஜீஸஸ்) செல்லுமிடமெல்லாம் என்னை அவர் ஆசீர்வதித்துள்ளார், மேலும் நான் வாழும் காலமெல்லாம் (ஸலாத்) தொடர்புத் தொழுகைகளையும் (ஜகாத்) கடமையான தர்மத்தையும் நிறைவேற்ற எனக்குக் கட்டளையிட்டுள்ளார்..
2:83 இஸ்ரவேலின் சந்ததியினருடன் நாம் ஓர் உடன்படிக்கை செய்தோம்: "நீங்கள் கடவுள்-ஐத் தவிர வழிபடக் கூடாது. நீங்கள் உங்களுடைய பெற்றோரைக் கண்ணியப்படுத்தவும், உறவினர்கள், அனாதைகள், மற்றும் ஏழைகளுக்கு மதிப்பளிக்கவும் வேண்டும். நீங்கள் மனிதர்களை இணக்கத்துடன் நடத்திட வேண்டும். நீங்கள் (ஸலாத்) தொடர்புத் தொழுகைகளைக் கடைப்பிடிக்கவும், மேலும் (ஜகாத்) கடமையான தர்மத்தை கொடுக்கவும் வேண்டும்." ஆனால் உங்களில் சிலரைத் தவிர, நீங்கள் திரும்பிச் சென்று விட்டீர்கள், மேலும் நீங்கள் வெறுப்புக் கொண்டவர்களாகி விட்டீர்கள்.
5:12 இஸ்ரவேலின் சந்ததியினரிடமிருந்து ஓர் உடன்படிக்கையைக் கடவுள் எடுத்திருந்தார், மேலும் அவர்களுக்கிடையில் பன்னிரண்டு வம்சத் தலைவர்களை நாம் எழுப்பினோம். மேலும் கடவுள் கூறினார், "நீங்கள் (ஸலாத்) தொடர்புத் தொழுகைகளைக் கடைப்பிடித்து, (ஜகாத்) கடமையான தர்மத்தைக் கொடுத்து, மேலும் என்னுடைய தூதர்கள் மீது நம்பிக்கை கொண்டு மேலும் அவர்களைக் கண்ணியப்படுத்தி, மேலும் நன்னெறியெனும் ஒரு கடனைக் கடவுள்-க்கு இரவலாகத் தொடர்ந்து கொடுத்துவருகின்ற பட்சத்தில், நான் உங்களுடன் இருக்கின்றேன். பின்னர் நான் உங்களுடைய பாவங்களை நீக்குவேன், மேலும் பாய்கின்ற ஆறுகள் கொண்ட தோட்டங்களுக்குள் உங்களை அனுமதிப்பேன். இதன் பின்னரும் நம்பமறுக்கின்றவர் எவராயினும், உண்மையில் சரியான பாதையிலிருந்து விலகிச் சென்று விட்டார்."
ஜகாத்தின் முக்கியத்துவம்
[7:156] "மேலும் இந்த உலகிலும் அத்துடன் மறுவுலகத்திலும் எங்களுக்கு நன்மையை விதித்திடுவீராக. நாங்கள் உம்மிடம் வருந்துகின்றோம்." அவர் கூறினார், "நான் நாடுகின்ற எவர் மீதும் என்னுடைய தண்டனை ஏற்படும். ஆனால் என்னுடைய கருணை அனைத்துப் பொருட்களையும் சூழ்ந்து கொண்டுள்ளது. இருப்பினும், அதனை நான் இவர்களுக்கெனக் குறிப்பிட்டு வைப்பேன், (1) நன்னெறியானதொரு வாழ்வு நடத்துபவர்கள், (2) கடமையான (ஜகாத்) தர்மத்தைக் கொடுப்பவர்கள், (3) நம்முடைய வெளிப்பாடுகள் மீது நம்பிக்கை கொள்பவர்கள், மேலும்
[24:56] நீங்கள் (ஸலாத்) தொடர்புத் தொழுகைகளைக் கடைப்பிடிக்கவும் (ஜகாத்) கடமையான தர்மத்தைக் கொடுத்துவரவும், மேலும் தூதருக்குக் கீழ்ப்படியவும் வேண்டும்,நீங்கள் கருணையை அடையும் பொருட்டு.
[9:71] நம்பிக்கை கொண்ட ஆண்களும் பெண்களும் ஒருவர் மற்றொருவருக்குக் கூட்டாளிகளாக இருக்கின்றனர். அவர்கள் நன்மையை ஆதரிக்கின்றனர், அத்துடன் தீமையைத் தடுக்கின்றனர், அவர்கள் (ஸலாத்) தொடர்புத் தொழுகைகளைக் கடைப்பிடிக்கின்றனர், மேலும் (ஜகாத்) கடமையான தர்மத்தைக் கொடுக்கின்றனர், அத்துடன் கடவுள் மற்றும் அவருடைய தூதருக்கு அவர்கள் கீழ்ப்படிகின்றனர். இவர்கள் கடவுள்-ன் கருணை கொண்டு பொழியப்படுவார்கள். கடவுள் எல்லாம் வல்லவர், ஞானம் மிகுந்தவர்.
[4:162] அவர்களில் உள்ள அறிவில் நன்கு உறுதிப்பாடு கொண்டவர்களையும், நம்பிக்கை கொண்டவர்களையும் பொறுத்த வரை, அவர்கள் உமக்கு வெளிப்படுத்தப்பட்டவற்றின் மீதும், மேலும் உமக்கு முன்னர் வெளிப்படுத்தப்பட்டவற்றின் மீதும் நம்பிக்கை கொள்கின்றனர். அவர்கள் (ஸலாத்) தொடர்புத் தொழுகைகளைக் கடைப்பிடிப்பவர்களாகவும், (ஜகாத்) கடமையான தர்மத்தைக் கொடுப்பவர்களாகவும் இருக்கின்றனர்; அவர்கள் கடவுள் மற்றும் இறுதி நாளின் மீது நம்பிக்கை கொண்டவர்களாக இருக்கின்றனர். இத்தகையவர்களுக்கு மகத்தானதொரு பிரதிபலனை நாம் வழங்குகின்றோம்.
> நன்னெறியாளர்கான அளவுகோல்கள் 2:177, 31:2-4
> நம்பிக்கையாளர்களாக இருப்பதற்கு 23:4, 9:71, 27:2-3
> இது நம் ஆன்மாவை பலப்படுத்தவும் சுத்திகரிக்கவும் உதவுகிறது 2:110, 33:33, 11:114
> பாவங்களை சரிசெய்ய மற்றும் மீட்பைப் பெற உதவுகிறது 9:103-104
> கடவுளின் கருணையை அடைய 7:156, 9:71, 24:56
> அவர்கள் பயப்பட ஒன்றுமில்லை துக்கம் அடையவும் மாட்டார்கள். 2:277
> மகத்தான பிரதிபலன் 4:162
> வழிநடத்தபட்டவர்களில் இருக்க 9:18
> சிறந்த மற்றும் தாராளமாக வெகுமதி 73:29
> கடவுளின் ஆசீர்வாதங்களுக்கான நன்றி பாராட்டுதல் 108-1-2
ஜகாத் கொடுப்பதில் ஏதாவது சலுகை உண்டா?
ஒருவர் வருமான ஈட்டும் நபராக இருப்பின் ஜகாத் கொடுப்பதற்கு எந்தவித சலுகையும் குர்ஆனில் நம்மால் காணமுடியாது.
41:7 "(ஜகாத்) கடமையான தர்மத்தைக் கொடுக்காதவர்கள், மேலும் மறுவுலகத்தைக் குறித்து, அவர்கள் நம்பமறுப்பவர்களாக இருக்கின்றனர்."
யார் யாருக்கு ஜகாத் கடமையாகும்?
வருமானம் ஈட்டும் அனைவருக்கும் ஜகாத் கடமையாகும்.
3:134 அவர்கள் நல்ல காலங்களிலும் அவ்வண்ணமே கஷ்ட காலங்களிலும் தர்மத்திற்கெனக் கொடுப்பார்கள்.
தர்மம் செய்கின்ற ஆண்கள் தர்மம் செய்கின்ற பெண்கள் (33:35, 57:18)
யாருக்கு ஜகாத் கொடுக்க வேண்டும்?
2:215 (revelation order 87) கொடுப்பதைப் பற்றி அவர்கள் உம்மிடம் கேட்கின்றனர்: கூறுவீராக, "நீங்கள் கொடுக்கின்ற தர்மம் பெற்றோர்கள், உறவினர்கள், அனாதைகள், ஏழைகள், மற்றும் பிரயாணத்திலிருக்கின்ற அந்நியர்களைச் சென்றடைய வேண்டும்." நீங்கள் செய்கின்ற எந்த நன்மையாயினும், கடவுள் அது குறித்து முற்றிலும் அறிந்திருக்கின்றார்.
17:26 (revelation order 50), உறவினர்களுக்கும், தேவையுடையவர்களுக்கும், ஏழைகளுக்கும், வழிப்போக்கர்களுக்கும், உரிய தர்மத்தை நீங்கள் கொடுக்க வேண்டும், ஆனால் மிதமிஞ்சியும், ஊதாரித்தனமாகவும் இருக்கக் கூடாது.
பெற்றோர்கள்.
உறவினர்கள்.
அனாதைகள்.
ஏழைகள்.
பிரயாணத்திலிருக்கின்ற அந்நியர்கள்.
எப்பொழுது ஜகாத் கொடுக்க வேண்டும்?
அறுவடை நாள் அன்றே வருமானம் ஈட்டும் நாளன்றே ஜகாத் கொடுக்க வேண்டும் என்று கடவுள் நமக்கு 6:141ல் கட்டளையிடுகிறார்.
[6:141] அவர்தான் பந்தலிடப்பட்ட மற்றும் பந்தலிடப்படாத தோட்டங்களையும், கிளைகளற்ற மரங்களையும், வெவ்வேறு ருசிகளுடைய பயிர்களையும், ஒலிவம், மற்றும் மாதுளைத் தோட்டங்களையும் நிர்மாணித்தவர் - ஒரே மாதிரியாக இருக்கின்ற பழங்கள், ஆயினும் மாறுபட்டவை. அவற்றின் பழங்களிலிருந்து உண்ணுங்கள், அத்துடன் அதற்குரிய தர்மத்தை அறுவடை நாள் அன்றே கொடுத்து விடுங்கள், மேலும் எந்த ஒன்றையும் வீணடிக்காதீர்கள். வீணடிப்பவர்களை அவர் நேசிப்பதில்லை.
ஜகாத் தர்மம் எந்த அளவுக்கு முக்கியமானதெனில், மிக்க கருணையாளர் அதனைக் கொடுப்பவர்களுக்கே தன்னுடைய கருணை எனவரையறுத்துள்ளார் (7:156). இருப்பினும், முஸ்லிம்களில் பெரும்பாலோர் அடிப்படையற்ற ஹதீஸ்களை பின்பற்றி மிக முக்கியமான இந்தக் கட்டளையைத் தவற விட்டு விட்டனர்; அவர்கள் ஒரு வருடத்திற்கு ஒரு முறை மட்டுமே ஜகாத்தைக் கொடுக்கின்றனர் "நாம் வருமானத்தைப் பெறுகின்ற நாள் அன்றே" ஜகாத் கொடுக்கப்பட்டு விடவேண்டும் என்பதை இங்கே நாம் காண்கின்றோம்.
எவ்வளவு ஜகாத் கொடுக்க வேண்டும்?
நிகர வருமானத்தில் 2.5%
மார்க்கத்தின் மற்ற கடமைகள் மாதிரி ஜக்காத் 2.5% தான் கொடுக்க வேண்டும் என்று இப்ராஹிம் நபி காலத்திலிருந்து வழிமுறையாக உள்ளது.
முஹம்மது நபி காலத்தில் ஜக்காத் 2.5% தான் கொடுக்கவேண்டும் என்று நடைமுறையில் இருந்ததால் கடவுள் ஜகாத்தை குறிப்பிடும்போது அது யார் யாருக்கு கொடுக்க வேண்டும் என்று மட்டுமே அறிவிக்கின்றார்.
ஆப்ரஹாமின் மூலமாக நம்மிடம் வந்துள்ள விகிதாச்சாரமானது நம்முடைய நிகர வருமானத்தில் 2.5%
ஸதகா என்றால் என்ன?
கடவுள் நமக்கு ஒரு குறிப்பிட்ட சதவீதத்தை ஜகாத்தாக கொடுக்க வேண்டும் என்று இருக்கின்ற போதிலும், அதிகப்படியான நன்மைகள் பெறுவதற்கு “ஸதகா(தர்மம்)” என்னும் கதவை நமக்காக திறந்து வைத்துள்ளார்.
மிகச்சிறந்த முதலீடு (1 = 700 மேல்)
2:261 கடவுள்-ன் நிமித்தம் தங்களுடைய பணங்களைச் செலவிடுபவர்களுக்குரிய உதாரணமாவது ஒவ்வொரு கதிரிலும் ஒரு நூறு தானியங்களைக் கொண்ட, ஏழு கதிர்களை முளைப்பிக்கின்ற ஒரு விதையைப் போன்றதாகும். தான் நாடுகின்ற எவருக்கும் கடவுள் இதனைப் பன்மடங்காகப் பெருக்குகின்றார். கடவுள் கொடையளிப்பவர், அறிந்தவர்.
யாருக்கு ஸதகா(தர்மம்) கொடுக்க வேண்டும்?
> ஏழைகள்
> தேவையுடையவர்கள்
> அவற்றைத் திரட்டுகின்ற பணியாளர்கள்
> புதிதாக மதம் மாறியவர்கள்
> அடிமைகளை விடுதலை செய்வதற்கு
> திடீர் செலவினங்களால் சுமத்தப்பட்டவர்களுக்கு
> கடவுள்-ன் நிமித்தமாக, மற்றும் பயணத்திலுள்ள அந்நியர்களுக்கு
> உறவினர்களுக்கும்
> அனாதைகளுக்கும்
> யாசிப்பவர்களுக்கும்
> கடவுள்-ன் நிமித்தம் கஷ்டப்பட்டுக் கொண்டு, மேலும் புலம் பெயர இயலாத ஏழைகளுக்கு
- 9:60, 2:177, 2:273.
9:60 தர்மங்களானவை, ஏழைகள், தேவையுடையவர்கள், அவற்றைத் திரட்டுகின்ற பணியாளர்கள், புதிதாக மதம் மாறியவர்கள், அடிமைகளை விடுதலை செய்வதற்கு, திடீர் செலவினங்களால் சுமத்தப்பட்டவர்களுக்கு, கடவுள்-ன் நிமித்தமாக, மற்றும் பயணத்திலுள்ள அந்நியர்களுக்குச் சென்றிட வேண்டும். கடவுள்-ன் கட்டளை இதுவேயாகும். கடவுள் சர்வமும் அறிந்தவர், ஞானம் மிகுந்தவர்.
2:177 நன்னெறி என்பது உங்களுடைய முகங்களைக் கிழக்கையோ அல்லது மேற்கையோ நோக்கித் திருப்பிக் கொள்வது அல்ல. நன்னெறியாளர்கள் எவரென்றால் கடவுள், இறுதிநாள், வானவர்கள், வேதம், மற்றும் நபிமார்கள் மீது நம்பிக்கை கொள்பவர்களேயாவர்; மேலும் அவர்கள் உறவினர்களுக்கும், அனாதைகளுக்கும், தேவையுடையவர்களுக்கும், பயணத்திலிருக்கின்ற அந்நியர்களுக்கும், யாசிப்பவர்களுக்கும், மேலும் அடிமைகளை விடுவிப்பதற்கும் பணத்தை, உவப்புடன் அளிப்பார்கள்; மேலும் அவர்கள் (ஸலாத்) தொடர்புத் தொழுகைகளைக் கடைப்பிடிப்பார்கள் அத்துடன் (ஜகாத்) கடமையான தர்மத்தைக் கொடுப்பார்கள்; மேலும் அவர்கள் வாக்குறுதி ஒன்றைச் செய்கின்ற போதெல்லாம் அவர்கள் தங்களுடைய வார்த்தையைக் காப்பாற்றுவார்கள்; மேலும் அவர்கள் வன்கொடுமை, கஷ்டம் மற்றும் போரை எதிர்கொள்ளும் போது உறுதிப்பாட்டுடன் தளராதிருப்பார்கள். இவர்கள்தான் உண்மையாளர்கள்; இவர்கள்தான் நன்னெறியாளர்கள்.
2:273 கடவுள்-ன் நிமித்தம் கஷ்டப்பட்டுக் கொண்டு, மேலும் புலம் பெயர இயலாத ஏழைகளுக்கு தர்மம் சென்று சேர வேண்டும். அவர்களுடைய கண்ணியத்தின் காரணமாக, அறியாதவர்கள் அவர்களைச் செல்வந்தர்கள் என்று நினைக்கக் கூடும். ஆனால் சில அறிகுறிகளைக் கொண்டு அவர்களை நீங்கள் அடையாளம் காண இயலும்; அவர்கள் ஒருபோதும் மக்களிடம் வலிந்து யாசிக்க மாட்டார்கள். நீங்கள் கொடுக்கின்ற தர்மம் எதுவாயினும், கடவுள் அது குறித்து முற்றிலும் அறிந்தவராக இருக்கின்றார்.
2:219 …தர்மமாக எதனைக் கொடுப்பது என்றும் அவர்கள் உம்மிடம் கேட்கின்றனர்: கூறுவீராக, "எஞ்சியிருப்பவற்றை." கடவுள் இவ்விதமாக இவ்வெளிப்பாடுகளை உங்களுக்காக விவரிக்கின்றார், நீங்கள் சிந்திக்கும் பொருட்டு.
மேலதிகமான நன்மைகள் அடைவதற்கு கடவுள் நமக்கு ஸதகாவை அமைத்துள்ளார்.
Types of charities in Quran.
Zakat and Zakat-like instances
Zakat (கடமையான தர்மம்) as in: 2:43, 2:83, 2:110, 2:177, 2:277, 4:77, 4:162, 5:12, 5:55, 7:156, 9:5, 9:11, 9:18, 9:71, 19:13, 19:31, 19:55, 21:73, 22:41, 22:78, 23:4, 24:37, 24:56, 27:3, 30:39, 31:4, 33:33, 41:7, 58:13, 73:20, and 98:5
Haqqahu (உரிய தர்மம்/ உரிமையுள்ள) 6:141, 17:26, 30:38,
Haqqun (உரிமையுள்ள / கடமையான) as in 51:19, 70:24
Anfaqa (செலவிடுவது / கொடுப்பது) அல்லது அதன் வேர் சொல் (Root Word):
2:215, 2:219, 2:261, 2:262, 2:265, 2:267, 2:272, 2:273, 2:274, 3:134, 8:3, 9:121, 22:35, 28:54, 32:16, 63:10…..etc.
Sadaqah (தர்மம்) or its roots:
2:196, 2:263, 2:264, 2:271, 4:114, 9:60, 9:79, 9:103, 9:104 and 58:12
ஜகாத் மற்றும் பிற வகையான தர்மம் பற்றி குர்ஆனில் உள்ள அனைத்து வசனங்களையும் நாம் படிக்கும்போது, ஜகாத் " எஞ்சியிருப்பவற்றை" விஷயத்தில் இருக்க முடியாது என்பதை நாங்கள் உணர்கிறோம். மாறாக, இது அறியப்பட்ட சதவீதம் என்று அறிகிறோம். (70:24). ஜகாத் கடமையான தர்மம் அறுவடை நாளன்று கொடுக்கவேண்டும் என்பதை நாம் அறிகின்றோம் (6:141).
கடவுள் கடமையான தர்மத்தை குறிப்பிடும் பொழுது “ஜக்காத்” என்றும் அல்லது “Haqqun” (கடமை) or “Haqqun ma’luum” (அழிந்த கடமை) என்றும் குறிப்பிடுகின்றார்.
ஸதகாவை குறிப்பிடும்போது “Anfaqa” (செலவிடுவது / கொடுப்பது) குறிப்பிடுகின்றார்.
எல்லாம் புகழும் கடவுளுக்கே..