குர்ஆன்
ஹதீஸ் & இஸ்லாம்
ஆங்கிலத்தில் ஆக்கம் :
ரஷாத் கலீஃபா Phd.,
இமாம், மஸ்ஜித் டுக்ஸன்,
அரிஸோனா, U.S.A.
இந்த புத்தகத்தில் இடம் பெற்றுள்ள குர்ஆன் வசனங்களில் “அல்லாஹ்” என்ற சொல் இடம் பெறும் இடங்களில் “கடவுள்” என்ற சொல் பயன்படுத்தப்பட்டுள்ளது. மேலும் இப்ராஹிம், இஸ்மாயில், ஈஸா மற்றும் நபி ஆகிய பெயர்கள் முறையே ஆப்ரஹாம், இஸ்மவேல், இயேசு மற்றும் வேதம் வழங்கப்பட்டவர் என்று குறிப்பிடப்பட்டுள்ளதை கவனத்தில் கொள்ளவும்.
மனித சமுதாயம் முழுவதற்குமான வழிகாட்டியாகவும், வாழ்க்கைத் திட்டமாகவும் மேலும் இறுதி வேதமாகவும் குர்ஆன் இருப்பதால், அனைத்து தரப்பு மக்களும் புரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காகவே இந்த மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதில் எந்த பொருள் மாறுபாடும் இல்லை என்பதை தயவு செய்து நினைவில் கொள்ளவும்.
முன்னுரை
12 ஆண்டுகளுக்கும் மேலாக கணினியைப் பயன்படுத்தி குர்ஆனை ஆராய்ச்சி செய்த பிறகு, குர்ஆன் உண்மையிலேயே கடவுளின் தவறிழைக்காத வார்த்தை என்பதை நிரூபிக்கும் கண்கூடான சான்று கண்டுபிடிக்கப்பட்டது. இந்த கண்டுபிடிப்பு உலகம் முழுவதிலும் உள்ள முஸ்லிம்கள் மத்தியில் மிகவும் பிரபலம் அடைந்தது. மேலும் இந்த கண்டுபிடிப்பு குறித்த தொகுப்புகள் அச்சிடப்பட்டு, இலட்சக்கணக் கானவர்களால் விநியோகிக்கப்பட்டது. மிகவும் ஊக்கமூட்டுகின்ற மேலும் மிகவும் எளிமையாக இந்த கண்டுபிடிப்புடன் சேர்ந்து என்னைப் பற்றிய நன்மதிப்பும் அதிகமானது.
தொடர்ச்சியான இந்த ஆராய்ச்சியானது, மிகவும் பிரபலமான “ஹதீஸ் & சுன்னத்” ஆகியவை முஹம்மது நபியுடன் எந்த சம்பந்தமும் இல்லாதவை, மேலும் அவற்றைப் பின்பற்றுவது அல்லாஹ்விற்கும் மேலும் அவருடைய இறுதி நபிக்கும் பகிரங்கமாக கீழ்படிய மறுக்கும் நிலை (குர் ஆன் 6:112 & 25:31) என்கின்ற ஒரு திடுக்கிடும் உண்மையை அப்போது வெளிப்படுத்தியது. இந்த கண்டு பிடிப்பானது எல்லா இடங்களிலும் உள்ள முஸ்லிம்களின் நம்பிக்கைகளுக்கு எதிராக இருந்தது. அதன் விளைவாக, என்னைப் பற்றிய நன்மதிப்பும் மேலும் குர்ஆன் உடைய அற்புதத்தின் நன்மதிப்பும் கூட தலைகீழாக மாறியது. எந்த அளவிற்கென்றால், என்னுடைய உயிருக்கும் நற்பெயருக்கும் ஆபத்து விளைவிக்கும் அளவிற்கு தலைகீழாக மாறியது. இப்பொழுது வெளிப்பட்டுள்ளபடி “ஹதீஸ் & சுன்னத்” ஆகியவை சைத்தானிய புதுமைகள் என்று முஸ்லிம்களிடம் கூறுவது, கிறிஸ்தவர்களிடம் இயேசு கடவுளின் மகன் அல்ல என்று கூறுவதைப் போன்றதாகும்.
கண்கூடான சான்றின் மூலம் ஹதீஸ் மற்றும் சுன்னத் ஆகியவை சைத்தானிய புதுமைகள் என்று அடையாளம் காட்டப்படுவதால் சுயமாக நன்கு சிந்திக்கக் கூடிய மக்கள் அனைவரும் இந்தப் புத்தகத்தில் தெரிவிக்கப்பட்டுள்ள கண்டுபிடிப்புகளை ஏற்றுக் கொள்வார்கள். இத்தகைய மக்களுக்காக, மீட்சி பற்றிய முற்றிலும் புதியதோர் கருத்து மேலும் பெரும்பாலான முஸ்லிம்கள் சைத்தானுடைய சூழ்ச்சிகளுக்கு பலியாகிவிட்டனர் என்பது குறித்த முழுமையான விழிப்புணர்வு ஆகியவற்றை உள்ளடக்கியதாக இதன் அறிவிப்புகள் இருக்கின்றன.
ஆகஸ்ட் 19, 1982
ரஷாத் கலீஃபா
தூதருக்கு கீழ்படியாது மீட்சி கிடையாது
قُلْ اِنْ كُنْتُمْ تُحِبُّونَ اللَّهَ فَاتَّبِعُونِي يُحْبِبْكُمْ اللَّهُ وَيَغْفِرْ لَكُمْ ذُنُوبَكُمْ وَاللَّهُ غَفُورٌ رَحِيمٌ
قُلْ اطِيعُوا اللَّهَ وَالرَّسُولَ فَاِنْ تَوَلَّوْا فَاِنَّ اللَّهَ لَا يُحِبُّ الْكَفِرِينَ
3:31 பிரகடனிப்பீராக: "நீங்கள் கடவுள்-ஐ நேசிப்பீர்களாயின், நீங்கள் என்னைப் பின்பற்ற வேண்டும்." கடவுள் அப்போது உங்களை நேசிப்பார், மேலும் உங்களுடைய பாவங்களை மன்னிப்பார். கடவுள் மன்னிப்பவர், மிக்க கருணையாளர்.
3:32 பிரகடனிப்பீராக: "நீங்கள் கடவுள் மற்றும் தூதருக்குக் கீழ்ப்படிய வேண்டும்." அவர்கள் திரும்பிச் சென்று விட்டால், கடவுள் நம்பமறுப்பவர்களை நேசிப்பதில்லை.
وَأَقِيمُوا الصَّلَوةَ وَءاتُوا الزَّكَوةَ وَأَطِيعُوا الرَّسُولَ لَعَلَّكُمْ تُرْحَمُونَ
24:56 நீங்கள் (ஸலாத்) தொடர்புத் தொழுகைகளைக் கடைப்பிடிக்கவும் (ஜகாத்) கடமையான தர்மத்தைக் கொடுத்து வரவும், மேலும் தூதருக்குக் கீழ்ப்படியவும் வேண்டும், நீங்கள் கருணையை அடையும் பொருட்டு.
إِلَّا بَلَغًا مِنْ اللَّهِ وَرِسَلَتِهِ وَمَنْ يَعْصِ اللَّهَ وَرَسُولَهُ فَإِنَّ لَهُ نَارَ جَهَنَّمَ خَلِدِينَ فِيهَا أَبَدًا
"நான் கடவுள்-ன் பிரகடனங்களையும் தூதுச் செய்திகளையும் சேர்ப்பிக்கின்றேன்." கடவுள் மற்றும் அவருடைய தூதருக்குக் கீழ்ப்படிய மறுப்பவர்கள் நரகத்தின் நெருப்புக்கு உள்ளாகின்றனர், அங்கே அவர்கள் என்றென்றும் தங்கியிருப்பார்கள். (அல்-குர்ஆன் 72:23)
“அல்லாஹ்வைத் தவிர எதனையும் நீங்கள் வழிபட வேண்டாம்” என்ற ஒரே செய்தியைத் தான் தூதர்கள் அனைவரும் ஒப்படைத்ததால் அவர்களுக்கு கீழ்படியாமை, நம்பிக்கையின்மையை அல்லது இணைத்தெய்வ வழிபாட்டை உருவாக்குகின்றது.
அல்லாஹ்வின் செய்திகளை ஒப்படைக்கும் பொழுது, தூதர்கள் தாங்களாகவே சுயமாக முயற்சித்து பேசுவதில்லை
உன் தேவனாகிய கர்த்தர் என்னைப் போல ஒரு தீர்க்கதரிசியை உனக்காக உன் நடுவே உன் சகோதரரிலிருந்து எழும்பப் பண்ணுவார்; அவருக்குச் செவிகொடுப்பீர்களாக. (உபாகமத்தில் மோஸஸ் 18:15)
உன்னைப்போல ஒரு தீர்க்கதரிசியை நான் அவர்களுக்காக அவர்கள் சகோதரரிலிருந்து எழும்பப்பண்ணி, என் வார்த்தைகளை அவர் வாயில் அருளுவேன்; நான் அவருக்குக் கற்பிப்பதையெல்லாம் அவர்களுக்குச் சொல்வார். என் நாமத்தினாலே அவர் சொல்லும் என் வார்த்தைகளுக்குச் செவிகொடாதவன் எவனோ அவனை நான் விசாரிப்பேன். (உபாகமத்தில் மோஸஸ் 18:18-19)
நான் பிதாவிலும், பிதா என்னிலும் இருக்கிறதை நீ விசுவாசிக்கிறதில்லையா? நான் உங்களுடனே சொல்லுகிற வசனங்களை என் சுயமாய்ச் சொல்லவில்லை, என்னிடத்தில் வாசமாயிருக்கிற பிதாவானவரே இந்தக் கிரியைகளைச் செய்துவருகிறார். (யோவானின் சுவிஷேசம் 14:10)
சத்தியஆவியாகிய அவர் வரும் போது, சகல சத்தியத்திற்குள்ளும் உங்களை நடத்துவார்; அவர்தம்முடைய சுயமாய்ப் பேசாமல், தாம் கேள்விப்பட்டவைகள் யாவையுஞ்சொல்லி, வரப்போகிற காரியங்களை உங்களுக்கு அறிவிப்பார். (யோவானின் சுவிஷேசம் 16:13)
தூதருக்கு கீழ்படிவது கடவுளுக்கு கீழ்படிவது ஆகும் (குர்ஆன் 4:80)
“மேலும் அவர் (முஹம்மது) தன் சொந்த முயற்சியின்படி பேசுவதில்லை”. அல்-குர்ஆன் 53:3
குர்ஆனை மட்டுமே முஹம்மது எடுத்துரைத்தார்
وَأَنزَلْنَا إِلَيْكَ الْكِتَبَ بِالْحَقِّ مُصَدِّقًا لِمَا بَيْنَ يَدَيْهِ مِنْ الْكِتَبِ وَمُهَيْمِنًا عَلَيْهِ فَاحْكُمْ بَيْنَهُمْ بِمَا أَنزَلَ اللَّهُ وَلَا تَتَّبِعْ أَهْوَاءَهُمْ عَمَّا جَاءَكَ مِنْ الْحَقِّ لِكُلٍّ جَعَلْنَا مِنْكُمْ شِرْعَةً وَمِنْهَاجًا وَلَوْ شَاءَ اللَّهُ لَجَعَلَكُمْ أُمَّةً وَاحِدَةً وَلَكِنْ لِيَبْلُوَكُمْ فِي مَا آتَاكُمْ فَاسْتَبِقُوا الْخَيْرَاتِ إِلَى اللَّهِ مَرْجِعُكُمْ جَمِيعًا فَيُنَبِّئُكُمْ بِمَا كُنتُمْ فِيهِ تَخْتَلِفُونَ
وَأَنْ احْكُمْ بَيْنَهُمْ بِمَا أَنزَلَ اللَّهُ وَلَا تَتَّبِعْ أَهْوَاءَهُمْ وَاحْذَرْهُمْ أَنْ يَفْتِنُوكَ عَنْ بَعْضِ مَا أَنزَلَ اللَّهُ إِلَيْكَ فَإِنْ تَوَلَّوْا فَاعْلَمْ أَنَّمَا يُرِيدُ اللَّهُ أَنْ يُصِيبَهُمْ بِبَعْضِ ذُنُوبِهِمْ وَإِنَّ كَثِيرًا مِنْ النَّاسِ لَفَاسِقُونَ
أَفَحُكْمَ الْجَاهِلِيَّةِ يَبْغُونَ وَمَنْ أَحْسَنُ مِنْ اللَّهِ حُكْمًا لِقَوْمٍ يُوقِنُونَ
5:48 பின்னர் சத்தியம் நிறைந்தாகவும், முந்திய வேதங்களை உறுதிப்படுத்துவதாகவும், அவற்றின் இடத்தில் இந்த வேதத்தை நாம் உமக்கு வெளிப்படுத்தினோம். நீர் அவர்களுக்கிடையில் கடவுள்-ன் வெளிப்பாடுகளுக்கு ஏற்பத் தீர்ப்பளிக்க வேண்டும், மேலும் உமக்கு வந்திருக்கின்ற சத்தியத்திலிருந்து அவர்கள் வேறுபட்டால் அவர்களுடைய விருப்பங்களைப் பின்பற்றாதீர். உங்களில் ஒவ்வொருவருக்கும் சட்டங்களையும் வேறு பட்ட சடங்குகளையும் நாம் விதித்துள்ளோம். கடவுள் நாடியிருந்தால், உங்களை ஒரே கூட்டமாக ஆக்கியிருக்க அவரால் இயலும், ஆனால் அவர் இவ்விதமாக உங்களில் ஒவ்வொருவருக்கும் அவர் தந்திருக்கின்ற வெளிப்பாடுகளின் மூலமாக உங்களைச் சோதனையில் ஆழ்த்துகின்றார். நீங்கள் நன்னெறிகளில் போட்டியிட வேண்டும். உங்களுடைய இறுதி விதி கடவுள் வசமே உள்ளது - உங்கள் அனைவருடையதும் - பின்னர் நீங்கள் சர்ச்சை செய்த ஒவ்வொன்றைப் பற்றியும் அவர் உங்களுக்கு தெரியப்படுத்துவார்.
5:49 உமக்கு அளிக்கப்பட்ட கடவுள்-ன் வெளிப்பாடுகளுக்கு ஏற்பவே அவர்களுக்கிடையில் நீர் தீர்ப்பளிக்க வேண்டும். அவர்களுடைய விருப்பங்களைப் பின்பற்றாதீர், மேலும் உமக்கு அளிக்கப்பட்ட கடவுள்-ன் வெளிப்பாடுகளில் சிலவற்றில் இருந்து அவர்கள் உம்மைத் திசை திருப்பி விடாதவாறு எச்சரிக்கையுடன் இருப்பீராக. அவர்கள் திரும்பிச் சென்று விட்டால், பின்னர் அவர்களுடைய பாவங்களில் சில வற்றுக்காகக் கடவுள் அவர்களைத் தண்டிக்க நாடுகின்றார் என்பதை அறிந்து கொள்வீராக. உண்மையில், அதிகமான மக்கள் தீயவர்களாகவே இருக்கின்றனர்.
5:50 அறியாமைக் காலத்தின் சட்டத்தையா அவர்கள் ஆதரிக்க நாடுகின்றனர்? உறுதிப்பாட்டினை அடைந்து விட்டவர்களுக்குக் கடவுள்-வுடையதை விடவும் எவருடைய சட்டம் மேலானது?
குர் ஆனைத் தவிர வேறு எந்த மார்க்க விளக்கங்களை கூறுவதை விட்டும் முஹம்மது தடுக்கப்பட்டிருந்தார்
ِنَّهُ لَقَوْلُ رَسُولٍ كَرِيمٍ
وَمَا هُوَ بِقَوْلِ شَاعِرٍ قَلِيلًا مَا تُؤْمِنُونَ
وَلَا بِقَوْلِ كَاهِنٍ قَلِيلًا مَا تَذَكَّرُونَ
تَنزِيلٌ مِنْ رَبِّ الْعَلَمِينَ
وَلَوْ تَقَوَّلَ عَلَيْنَا بَعْضَ الْأَقَاوِيلِ
لَأَخَذْنَا مِنْهُ بِالْيَمِينِ
ثُمَّ لَقَطَعْنَا مِنْهُ الْوَتِينَ
فَمَا مِنْكُمْ مِنْ أَحَدٍ عَنْهُ حَجِزِينَ
69:40 இது கண்ணியமானதொரு தூதரின் கூற்றாகும்.
69:41 ஒரு கவிஞனின் கூற்றல்ல; அரிதாகவே நீங்கள் நம்பிக்கை கொள்கின்றீர்கள்.
69:42 அன்றி ஒரு ஜோசியக்காரனின் கூற்றுமல்ல; அரிதாகவே நீங்கள் கவனத்தில் எடுத்துக் கொள்கின்றீர்கள்.
69:43 பிரபஞ்சத்தின் இரட்சகரிடமிருந்து ஒரு வெளிப்பாடு.
69:44 வேறு எந்தப் போதனைகளையும் அவர் கூறியிருப்பாராயின்.
69:45 நாம் அவரைத் தண்டித்திருப்போம்.
69:46 வெளிப்பாடுகளை நாம் அவருக்கு நிறுத்தியிருப்போம்.
69:47 உங்களில் எவரும் அவருக்கு உதவி செய்திருக்க இயலாது.
குர் ஆனைத் தவிர வேறு எந்த மார்க்க உபதேசங்களை கூறுவதை விட்டும் முஹம்மது தடுக்கப்பட்டிருந்தார் என்பதை மிகத் தெளிவான இந்த வசனங்கள் நமக்கு கற்பிக்கின்றன. அரபி மூலத்தின் வலிமையை முழுவதுமாக பிற மொழிகளில் மொழியாக்கம் செய்ய இயலாது. ஆயினும் குர்ஆன், முழுக்குர்ஆன் மேலும் வேறெதுவும் இல்லாது குர்ஆனை மட்டும் ஒப்படைப்பதே நபியுடைய ஒரே பணியாக இருந்தது என்பதை ஆற்றல் மிக்க அந்த சொற்றொடர்கள் எவ்வித சந்தேகமும் இல்லாது விளக்குகின்றன.
குர்ஆனை விட்டு ஒருபோதும் விலகக் கூடாது என்று முஹம்மதிற்கு கட்டளையிடப்பட்டிருந்தது. அதாவது விலகினால் கடுமையான தண்டனை
وَإِنْ كَادُوا لَيَفْتِنُونَكَ عَنْ الَّذِي أَوْحَيْنَا إِلَيك لِتَفْتَرِي عَلَيْنَا غَيْرَهُ وَإِذًا لَاتَّخَذُوكَ خَلِيلًا
وَلَوْلَا أَنْ ثَبَّتْنَكَ لَقَدْ كِدْتَ تَرْكَنُ إِلَيْهِمْ شىءا قَلِيلًا
إِذًا لَأَذَقْنَكَ ضِعْفَ الْحَيَوةِ وَضِعْفَ الْمَمَاتِ ثُمَّ لَا تَجِدُ لَكَ عَلَيْنَا نَصِيرًا
17:73 நாம் உமக்குக் கொடுத்த வெளிப்பாடுகளை விட்டு அவர்கள் உம்மைக் கிட்டத்தட்டத் திருப்பிவிட்டனர். உம்மை ஒரு நண்பராகத் கருதிக் கொள்வதற்காக, வேறு எதையாவது நீர் புனைந்து கூற வேண்டுமென்று அவர்கள் விரும்பினர்.
17:74 உம்மை நாம் பலப்படுத்தி இருக்காவிட்டால், நீர் கிட்டத்தட்ட சற்றேனும் அவர்கள் பக்கம் சாய்ந்திருக்கக் கூடும்.
17:75 அதனை நீர் செய்திருந்தால், இந்த வாழ்விலும், மரணத்திற்குப் பின்னரும், உமது தண்டனையை நாம் இருமடங்காக ஆக்கியிருப்போம், மேலும் நமக் கெதிராக உமக்கு உதவி செய்ய எவர் ஒருவரையும் நீர் கண்டிருக்கமாட்டீர்.
நமக்கு முன் மாதிரியை ஏற்படுத்தும் விதத்தில், அவருக்கு கொடுக்கப்பட்ட அல்லாஹ்வின் வெளிப்பாடுகளை (வஹியை) உறுதியாகப் பற்றிக் கொள்ளும்படி நபிக்கு கட்டளையிடப்பட்டது, (பக்கம் 4) குறிப்பாக அது குர்ஆன்தான் என்று 5:48-50ல் அடையாளம் காட்டப்படுகின்றது.
குர்ஆனை விட்டு மிகச்சிறிய அளவில் விலகுவதும் கடும் தண்டனைக்கு உள்ளாக்குகின்றது (மேலேயுள்ள வசனம் 75ஐப் பார்க்கவும்).
மிகச்சிறிய மாற்றம் கூட செய்யாமல் மேலும் ஒரு போதும் எந்த ஒன்றையும் “இட்டுக்கட்டாமல்”, குர் ஆனை மட்டுமே ஒப்படைக்கும் படி முஹம்மது கட்டளையிடப்பட்டிருந்தார்.
وَإذَا تُتْلَى عَلَيْهِمْ ءايَتُنَا بَيِّنَتٍ قَالَ الَّذِينَ لَا يَرْجُونَ لِقَاءَنَا ائْتِ بِقُرْءانٍ غَيْرِ هَذَا أوْ بَدِّلْهُ قُلْ مَا يَكُونُ لِي أنْ أبَدِّلَهُ مِنْ تِلْقَائ نَفْسِي إنْ أتَّبِعُ إلَّا مَا يُوحَى إلَيَّ إنِّي أخَافُ إنْ عَصَيْتُ رَبِّي عَذَابَ يَوْمٍ عَظِيمٍ
قُلْ لَوْ شَاءَ اللَّهُ مَا تَلَوْتُهُ عَلَيْكُمْ وَلَا أدْرَكُمْ بِهِ فَقَدْ لَبِثْتُ فِيكُمْ عُمُرًا مِنْ قَبْلِهِ أفَلَا تَعْقِلُونَ
فَمَنْ أظْلَمُ مِمَّنْ افْتَرَى عَلَى اللَّهِ كَذِبًا أوْ كَذَّبَ بءايَتِهِ إنَّهُ لَا يُفْلِحُ الْمُجْرِمُونَ
وَيَعْبُدُونَ مِنْ دُونِ اللَّهِ مَا لَا يَضُرُّهُمْ وَلَا يَنْفَعُهُمْ وَيَقُولُونَ هَؤُلَاءِ شُفَعَؤُنَا عِنْدَ اللَّهِ قُلْ أتُنَبِّءونَ اللَّهَ بِمَا لَا يَعْلَمُ فِي السَّمَوَتِ وَلَا فِي الْأرْضِ سُبْحنَهُ وَتَعلَى عَمَّا يُشْرِكُونَ
10:15 நம்முடைய வெளிப்பாடுகள், அவர்களிடம் ஓதிக் காட்டப்பட்டால், நம்முடைய சந்திப்பை எதிர்பார்க்காதிருப்பவர்கள் கூறுகின்றனர், "இது அல்லாத ஒரு குர்ஆனை* கொண்டுவாரும், அல்லது இதனை மாற்றி விடும்!" கூறும், "நானே சுயமாக இதனை மாற்றிவிட எனக்குச் சாத்தியமில்லை. எனக்கு வெளிப்படுத்தப்பட்டவற்றை நான் பின்பற்றுகின்றேன் அவ்வளவுதான். என் இரட்சகருக்கு நான் கீழ்ப்படியாவிட்டால், அச்சமூட்டும் ஒரு நாளின் தண்டனைக்கு நான் அஞ்சுகின்றேன்."
10:16 கூறும், "கடவுள் நாடியிருந்தால், இதனை நான் உங்களிடம் ஓதிக்காட்டியிருக்க மாட்டேன், அன்றியும், இது குறித்து எதனையும் நீங்கள் அறிந்திருக்கவும் மாட்டீர்கள். இதற்கு முன்னர், ஒரு முழுமையான வாழ்வை உங்கள் மத்தியில் நான் வாழ்ந்திருக்கின்றேன். (மேலும் நீங்கள் என்னை புத்தியுள்ள, உண்மையான ஒரு மனிதனாக அறிந்திருக்கின்றீர்கள்) நீங்கள் புரிந்து கொள்ளவில்லையா?"
10:17 கடவுள்-ஐப்பற்றிப் பொய்களை இட்டுக்கட்டும் ஒருவனை விட, அல்லது அவருடைய வெளிப்பாடுகளை ஏற்றுக்கொள்ள மறுப்பவனை விடப் பெரிய பாவி யார்? மிக உறுதியாக, வரம்புமீறுபவர்கள் ஒருபோதும் வெற்றியடைய மாட்டார்கள்.
10:18 கடவுள்-வுடன் தங்களுக்குத் தீங்கிழைக்கவோ அல்லது பயனளிக்கவோ சக்தியற்ற போலித் தெய்வங்களையும் அவர்கள் வழிபடுகின்றனர், மேலும் அவர்கள் கூறுகின்றனர், "இவர்கள் கடவுள்-யிடம் எங்களுக்கு பரிந்துரை செய்பவர்கள்!" கூறும், "வானங்களிலோ அல்லது பூமியிலோ, அவர் அறியாத சிலவற்றைக் கடவுள்-க்கு நீங்கள் அறிவிக்கின்றீர்களா?" அவர் துதிப்பிற்குரியவர். அவர் மிகவும் உயர்வானவர்; பங்குதாரர்கள் தேவைப்படுவதற்கும் அப்பால்.
ஒரே கடவுள் / ஒரே மூல ஆதாரம்
குர்ஆன் , குறிப்பாக குர்ஆன் மட்டுமே மார்க்க உபதேசங்களின் ஒரே மூல ஆதாரமாக இருக்க வேண்டும் என்று எல்லாம் வல்ல நம்முடைய படைப்பாளர் கட்டளையிடுகின்றார்.
இன்னும் கூடுதலாக, மார்க்க வழிகாட்டுதலுக்காக வேறு எந்த ஆதாரங்களையும் ஏற்றுக் கொள்வது அல்லாஹ்வுடன் மற்ற தெய்வங்களை ஏற்படுத்துவதற்குச் சமமாகும் என்றும் நமக்கு கூறப்பட்டுள்ளது.
قُلْ أَيُّ شَيْءٍ أَكْبَرُ شَهَادَةً قُلْ اللَّهُ شَهِيدٌ بَيْنِي وَبَيْنَكُمْ وَأُوحِيَ إِلَيَّ هَذَا الْقُرْآنُ لِأُنذِرَكُمْ بِهِ وَمَنْ بَلَغَ أَئِنَّكُمْ لَتَشْهَدُونَ أَنَّ مَعَ اللَّهِ آلِهَةً أُخْرَى قُلْ لَا أَشْهَدُ قُلْ إِنَّمَا هُوَ إِلَهٌ وَاحِدٌ وَإِنَّنِي بَرِيءٌ مِمَّا تُشْرِكُونَ
6:19 கூறுவீராக, "எவருடைய சாட்சியம் மிகப் பெரியது?" கூறுவீராக, "கடவுள்-வுடையது. உங்களுக்கும், மேலும் இது சென்று அடைகின்ற எவருக்கும் பிரச்சாரம் செய் வதற்காக, இந்தக் குர்ஆன் எனக்கு உள்ளுணர் வளிக்கப்பட்டுள்ளது என்பதற்கு எனக்கும் உங்களுக்குமிடையில் அவரே சாட்சியாக இருக்கின்றார். உண்மையில், கடவுள்-வுடன் வேறு தெய்வங்கள் இருப்பதாக நீங்கள் சாட்சியம் பகர்கின்றீர்கள்." கூறுவீராக, "நீங்கள் செய்வதைப் போல நான் சாட்சியளிப்ப தில்லை; ஒரே ஒரு தெய்வம்தான் உள்ளது, மேலும் உங்களுடைய போலித் தெய்வ வழிபாட்டினை நான் கைவிட்டு விட்டேன்."
சூரா 6-ன் 19-வது வசனமான, ஆழ்ந்த கருத்தையுடைய இந்த வசனம், குர்ஆனுடன் வேறு எந்த ஆதாரங்களையும் ஆதரிப்பதை விட்டும் அல்லது பின்பற்றுவதை விட்டும் நம்பிக்கையாளர்களை தடுப்பதுடன் மேலும் இவ்வாறு செய்வது அல்லாஹ் உடன் மற்ற தெய்வங்களை ஏற்படுத்துவதற்குச் சமமாகும் என்றும் கூறுகின்றது.
குர்ஆன், முழுக்குர்ஆன் மேலும் வேறெதுவுமில்லாது குர்ஆனை மட்டுமே உறுதியாகக் பின்பற்றும்படி மிகவும் கண்டிப்பான முறையிலும் மேலும் நமக்கு புரிகின்ற வகையிலும் கட்டளை இடப்பட்டுள்ளது.
மார்க்க வழிகாட்டுதலின் ஒரே ஆதாரமாக குர்ஆனை உறுதியாக பின்பற்றும்படி, மீண்டும் மீண்டும் நாம் கட்டளையிடப்படுகின்றோம்.
குர்ஆனுடன் வேறு எந்த ஆதாரத்தையும் பின்பற்றுவது அல்லாஹ்வுடன் மற்ற தெய்வங்களை ஏற்படுத்துவதற்குச் சமமாகும் என்று, மீண்டும் மீண்டும் நாம் நினைவூட்டப்படுகின்றோம்.
17-வது சூராவின் 22-லிருந்து 38 வரையிலுள்ள வசனங்கள், குர்ஆனில் உள்ள மிக முக்கியமான கட்டளைகள் சிலவற்றை எடுத்துக் கூறுகின்றன. இந்த வசனங்களைத் தொடர்ந்து அடுத்ததாக கீழே காட்டப்பட்டுள்ள வசனத்தை நாம் காண்கின்றோம்.
ذَلِكَ مِمَّا أَوْحَى إِلَيْكَ رَبُّكَ مِنْ الْحِكْمَةِ وَلَا تَجْعَلْ مَعَ اللَّهِ إِلَهًا ءاخَرَ فَتُلْقَى فِي جَهَنَّمَ مَلُومًا مَدْحُورًا
17:39 இது உம்முடைய இரட்சகர் உமக்கு உள்ளுணர்வூட்டிய ஞானத்தில் சில ஆகும். பழிக்கப்பட்டவராகவும் தோற்கடிக்கப்பட்டவராகவும் எரிகிடங்கினை நீர் அடைந்துவிடாதிருக்கும் பொருட்டு, கடவுள்-வுடன் மற்றொரு தெய்வத்தை நீர் அமைத்துக் கொள்ள வேண்டாம்.
இவை அனைத்தும் தெளிவான கட்டளைகளாகவும் மேலும் வெளிப்படையான கடுமையான தடை உத்தரவுகளாகவும் இருக்கும் நிலையில் ஹதீஸ் & சுன்னத்தை பின்பற்றுபவர்கள் குர்ஆன் மட்டும் என்பதை உறுதியாக பின்பற்றத்தவறுவது ஏன்? பதிலை கீழே பார்க்கவும்.
குர்ஆன்: ஓர் அசாதாரணமான புத்தகம்
புத்தகம்தெளிவான கட்டளைகள் இருந்த போதிலும், ஹதீஸ் & சுன்னத்தை பின்பற்றுபவர்கள் குர்ஆன் மட்டும் என்பதை உறுதியாக பின்பற்ற தவறுவது ஏன்?
10-வது பக்கத்தில் காட்டப்பட்டுள்ள கட்டளையைத் தொடர்ந்து, இதற்கான பதில் அதே சூராவில் வழங்கப்பட்டுள்ளது. அல்லாஹ்வின் மீது நம்பிக்கை கொள்ள மறுப்பவர்களும், மேலும் குர்ஆனை மட்டுமே உறுதியாக பின்பற்ற வேண்டும் என்ற அவருடைய கட்டளையின் மீது கவனம் செலுத்த மறுப்பவர்களும் வேண்டுமென்றே குர்ஆனை விட்டு விலக்கிவைக்கப் படுகின்றனர் என்பதை சூரா 17-ன் 45 மற்றும் 46வது வசனங்கள் நமக்கு தெரிவிக்கின்றன. மிக முக்கியமான இந்த இரண்டு வசனங்களும் கீழே காட்டப்பட்டுள்ளன.
وَإِذَا قَرَأْتَ الْقُرْءانَ جَعَلْنَا بَيْنَكَ وَبَيْنَ الَّذِينَ لَا يُؤْمِنُونَ بِالْاءخِرَةِ حِجَابًا مَسْتُورًا
وَجَعَلْنَا عَلَى قُلُوبِهِمْ أَكِنَّةً أَنْ يَفْقَهُوهُ وَفِي ءاذَانِهِمْ وَقْرًاوَإِذَا ذَكَرْتَ رَبَّكَ فِي الْقُرْءانِ وَحْدَهُ وَلَّوْا عَلَى أَدْبَرِهِمْ نُفُورًا
17:45 நீர் குர்ஆனைப் படிக்கும் போது, உமக்கும் மறுவுலகின் மீது நம்பிக்கை கொள்ளாதோருக்கும் இடையில் காணமுடியாததொரு தடுப்பினை நாம்அமைத்து விடுகின்றோம்.
17:46 அவர்கள் அதனைப் புரிந்து கொள்வதை விட்டுத் தடுப்பதற்காக, அவர்களுடைய மனங்களைச் சுற்றிக் கவசங்களையும், அவர்களுடைய காதுகளில் செவிட்டுத்தனத்தையும் நாம் அமைத்து விடுகின்றோம். மேலும் குர்ஆனை மட்டும் பயன்படுத்தி, உம்முடைய இரட்சகரைப்பற்றி நீர் உபதேசித்தால், அவர்கள் வெறுப்பினால் விரண்டோடிவிடுகின்றனர்.
இதற்கு மேல் நாம் என்ன கூறமுடியும் ? ?
நீங்கள் அல்லாஹ்வை நம்புகின்றீர்களா அல்லது இல்லையா?
குர்ஆன் முழுமையானதாக மிகச்சரியானதாக & முற்றிலும் விவரிக்கப்பட்டதாக இருக்கின்றது, மேலும் நீங்கள் எந்த ஆதாரத்தையும் தேட வேண்டாம் என்று அல்லாஹ் கூறுகின்றார்.
مَا فَرَّطْنَا فِي الْكِتَبِ مِنْ شَيْءٍ ثُمَّ إِلَى رَبِّهِمْ يُحْشَرُونَ
وَالَّذِينَ كَذَّبُوا بِآيَاتِنَا صُمٌّ وَبُكْمٌ فِي الظُّلُمَاتِ مَنْ يَشَأْ اللَّهُ يُضْلِلْهُ وَمَنْ يَشَأْ يَجْعَلْهُ عَلَى صِرَاطٍ مُسْتَقِيمٍ
6:38 பூமியின் மீதுள்ள அனைத்துப் படைப்பினங்களும், மேலும் சிறகுகளுடன் பறக்கின்ற அனைத்துப் பறவைகளும் உங்களைப் போன்ற சமுதாயங்களாகவே இருக்கின்றன. இந்தப் புத்தகத்தில் எந்த ஒன்றையும் நாம் விட்டு விடவில்லை. அவற்றின் இரட்சகரிடம், இந்த அனைத்துப் படைப்பினங்களும் ஒன்று திரட்டப்படும்.
6:39 நம்முடைய சான்றுகளை ஏற்றுக் கொள்ள மறுப்பவர்கள் முற்றிலும் காரிருளில் செவிடர்களாகவும் ஊமையர்களாகவும் இருக்கின்றனர். கடவுள் நாடுகின்ற எவரையும், அவர் வழி தவறுதலில் அனுப்பிவிடுகின்றார், மேலும் தான் நாடுகின்ற எவரையும், நேரானதொரு பாதையில் அவர் செலுத்துகின்றார்.
أَفَغَيْرَ اللَّهِ أَبْتَغِي حَكَمًا وَهُوَ الَّذِي أَنزَلَ إِلَيْكُمْ الْكِتَبَ مُفَصَّلًا
6:114 அவர் இந்தப் புத்தகத்தை முற்றிலும் விவரிக்கப்பட்ட தாக உங்களுக்கு வெளிப்படுத்தியிருக்கின்றபோது, கடவுள்-ஐ விடுத்து மற்றவற்றை சட்ட மூலாதாரமாக நான் தேட வேண்டுமா?* வேதத்தைப் பெற்றுக் கொண்டவர்கள் இது உம்முடைய இரட்சகரிடமிருந்து சத்தியத்துடன், வெளிப்படுத்தப்பட்டுள்ளது என்பதை அடையாளம் கண்டு கொள்கின்றனர். எந்தச் சந்தேகத்திற்கும் நீர் இடமளிக்க வேண்டாம்.
وَتَمَّتْ كَلِمَةُ رَبِّكَ صِدْقًا وَعَدْلًا
6:115 உம்முடைய இரட்சகரின் வார்த்தையானது சத்தியம் மற்றும் நீதத்தால் முழுமையடைந்ததாக உள்ளது.* அவருடைய வார்த்தைகளை எந்த ஒன்றும் மாற்றி விடாதிருக்க வேண்டும். அவர்தான் செவியேற்பவர், சர்வமும் அறிந்தவர்.
அல்லாஹ்வை நம்ப மறுப்பதின் விளைவு
குர்ஆன் முழுமையானதாக மிகச்சரியானதாக மேலும் முற்றிலும் விவரிக்கப்பட்டதாக இருக்கின்றது என்று அல்லாஹ் கூறுகின்றார்.
மார்க்க வழிகாட்டுதலுக்கு ஆதாரமாக குர்ஆனைத் தவிர வேறு எதனையும் நீங்கள் பின்பற்ற வேண்டாம் என்கின்ற அவருடைய கட்டளைகள் தெளிவானதாகவும் மேலும் கண்டிப்பானதாகவும் இருக்கின்றன (பக்கங்கள் 9 & 10-ஜப் பார்க்கவும்)
ஏற்படுகின்ற பின்விளைவுகளை விருப்பத்துடன் (அல்லது விருப்பமின்றி) ஏற்றுக் கொள்வதற்கு நீங்கள் சம்மதிக்கின்றீர்கள் என்னும் நிபந்தனையின் பேரில், அல்லாஹ்வை நம்புவதென்றோ அல்லது அவருடைய கூற்றுக்களை ஏற்க மறுத்து, மேலும் அவருடைய கட்டளைகளை புறக்கணிப்பதென்றோ முடிவெடுப்பதற்கான முழுமையான சுதந்திரத்தை இப்பொழுது நீங்கள் பெற்றிருக்கின்றீர்கள்.
அல்லாஹ்வை நம்பமறுப்பது, மிகக்கடுமையான குற்றம் என்பதை சந்தேகமின்றி நீங்கள் ஒப்புக் கொள்கின்றீர்கள். அது எவ்வளவு ஆபத்தானது என்பதை சூரா 7-ன் வசனம் 40-ல் தெளிவாகக் கூறப்பட்டுள்ளது.
انَّ الَّذِينَ كَذَّبُوا بِءايَتِنَا وَاسْتَكْبَرُوا عَنْهَا لَا تُفَتَّحُ لَهُمْ ابْوَبُ السَّمَاءِ وَلَا يَدْخُلُونَ الْجَنَّةَ حَتَّى يَلِجَ الْجَمَلُ فِي سَمِّ الْخِيَاطِ وَكَذَلِكَ نَجْزِي الْمُجْرِمِينَ
7:40 நிச்சயமாக, நம்முடைய வெளிப்பாடுகளை ஏற்க மறுப்பதுடன், அவற்றை ஆதரிக்க மிகவும் ஆணவம் கொண்டவர்களாக இருப்போருக்கு, ஆகாயத்தின் வாசல்கள் ஒருபோதும் அவர்களுக்காகத் திறக்காது, அன்றி ஊசியின் காதிற்குள் ஒட்டகம் கடந்து செல்கின்றவரை அவர்கள் சுவனத்திற்குள் நுழைய மாட்டார்கள். குற்றவாளிகளுக்கு இவ்விதமாகவே நாம் கூலி கொடுப்போம்.
இவ்விதமாக அல்லாஹ்வை நம்ப மறுப்பவர்கள் சுவனத்தில் நுழைவதென்பது இயலாததொரு காரியமாகும்.
தெய்வீக வெளிப்பாடுகளின் முக்கியமான அளவுகோல்
“ஹதீஸ் & சுன்னத்” ஆகியவை தெய்வீக வெளிப்பாடுகள் என்று மக்களில் சிலர் வாதிடுகின்றனர். மிகத்தெளிவாக, தெய்வீக வெளிப்பாடுகளுக்குரிய அளவுகோலானது “அவை முழுமையாக பாதுகாக்கப்பட்டதாக இருக்கும்”, என்பதை அவர்கள் அறியாதவர்களாக இருக்கின்றனர். நபியின் “ஹதீஸ் & சுன்னத்” என்றழைக்கப்படுபவை மிகப் பெரிய அளவில் சிதைக்கப்பட்டிருப்பதால், அவை தெய்வீக வெளிப்பாடுகள் (வஹி) என்பதற்கான அளவுகோலுக்கு ஒருபோதும் பொருந்தாது. ஹதீஸ்களில் மிகப்பெரும்பாலானவை பொய்யாக இட்டுக்கட்டப்பட்டவை என்பது ஏற்றுக் கொள்ளப்பட்ட உண்மையாக இருக்கின்றது.
انَّا نَحْنُ نَزَّلنَا الذِّكْر وَانَّا لهُ لحَفِظُونَ
15:9 நிச்சயமாக, நாம் இந்நினைவூட்டலை வெளிப்படுத்தினோம், மேலும் நிச்சயமாக, நாம் இதனைப் பாதுகாப்போம்.
وَإِنَّهُ لَكِتَبٌ عَزِيزٌ
لَا يَأْتِيهِ الْبَطِلُ مِنْ بَيْنِ يَدَيْهِ وَلَا مِنْ خَلْفِهِ تَنزِيلٌ مِنْ حَكِيمٍ حَمِيدٍ
41:41 குர்ஆனின் சான்றானது அவர்களிடம் வந்த பொழுது அதனை ஏற்றுக் கொள்ள மறுத்தவர்கள், கண்ணியமானதொரு புத்தகத்தையும் ஏற்றுக் கொள்ள மறுத்தவர்களாகி விட்டனர்.
41:42 கடந்த காலத்திலோ அல்லது எதிர்காலத்திலோ எந்தப் பொய்மையும் அதில் நுழைந்திட முடியாது; ஞானம் மிகுந்தவர், புகழுக்குத் தகுதியானவரிடமிருந்து வந்த ஒரு வெளிப்பாடு.
ஹதீஸ் மற்றும் சுன்னத் ஆகியவை தெய்வீக வெளிப்பாடுகள் (வஹி) என்று அவர்கள் உரிமை கோரும் போதே அவர்களுடைய இறை நிந்தனை வெளிப்படையாகத் தெரிகின்றது. சர்வ வல்லமையுடைய அல்லாஹ், தான் வெளிப்படுத்தியவற்றை பாதுகாக்கும் திறன் உடையவர் என்பதை அவர்கள் உணரவில்லையா?
ஹதீஸ் & சுன்னத் = 100% கற்பனை
கற்பனைகுர்ஆன் முற்றிலும் விவரிக்கப்பட்டதாக இருக்கின்றது என்றும் & ஒரே ஆதாரமாக இருக்க வேண்டுமென்றும் அல்லாஹ் பிரகடனம் செய்கின்ற போதிலும் பெரும்பாலான முஸ்லிம்கள் ஹதீஸ் & சுன்னத் என்று அழைக்கப்படும் கற்பனைகளை பின்பற்றும் படி செய்யப்பட்டு ஏமாற்றப்பட்டுக் கொண்டிருக்கின்றார்கள்.
குர்ஆன் உண்மையானதாகவும் மேலும் மாற்றவே முடியாத அல்லாஹ்வின் வார்த்தையாகவும் இருக்கின்றது (குர்ஆன்: “விஷுவல் பிரசென்டேஷன் ஆஃப்த மிரகிள்” என்ற புத்தகத்தைப் பார்க்கவும்) என்பது கண்கூடான சான்றின் மூலம் நிரூபிக்கப்பட்டிருக்கின்ற அதே சமயம் ஹதீஸ் மற்றும் சுன்னத் ஆகியவை கற்பனை என்று ஏகமனதாக ஒப்புக்கொள்ளப்பட்டுள்ளது.
أَفَغَيْرَ اللَّهِ أَبْتَغِي حَكَمًا وَهُوَ الَّذِي أَنزَلَ إِلَيْكُمْ الْكِتَبَ مُفَصَّلًا وَالَّذِينَ آتَيْنَاهُمْ الْكِتَبَ يَعْلَمُونَ أَنَّهُ مُنَزَّلٌ مِنْ رَبِّكَ بِالْحَقِّ فَلَا تَكُونَنَّ مِنْ الْمُمْتَرِينَ
وَتَمَّتْ كَلِمَةُ رَبِّكَ صِدْقًا وَعَدْلًا لَا مُبَدِّلَ لِكَلِمَاتِهِ وَهُوَ السَّمِيعُ الْعَلِيمُ
وَإِنْ تُطِعْ أَكْثَرَ مَنْ فِي الْأَرْضِ يُضِلُّوكَ عَنْ سَبِيلِ اللَّهِ إِنْ يَتَّبِعُونَ إِلَّا الظَّنَّ وَإِنْ هُمْ إِلَّا يَخْرُصُونَ
6:114 அவர் இந்தப் புத்தகத்தை முற்றிலும் விவரிக்கப்பட்டதாக உங்களுக்கு வெளிப்படுத்தியிருக்கின்றபோது, கடவுள்-ஐ விடுத்து மற்றவற்றை சட்ட மூலாதாரமாக நான் தேட வேண்டுமா? வேதத்தைப் பெற்றுக் கொண்டவர்கள் இது உம்முடைய இரட்சகரிடமிருந்து சத்தியத்துடன், வெளிப்படுத்தப்பட்டுள்ளது என்பதை அடையாளம் கண்டு கொள்கின்றனர். எந்தச் சந்தேகத்திற்கும் நீர் இடமளிக்க வேண்டாம்.
6:115 உம்முடைய இரட்சகரின் வார்த்தையானது சத்தியம் மற்றும் நீதத்தால் முழுமையடைந்ததாக உள்ளது. அவருடைய வார்த்தைகளை எந்த ஒன்றும் மாற்றி விடாதிருக்க வேண்டும். அவர்தான் செவியேற்பவர், சர்வமும் அறிந்தவர்.
6:116 பூமியில் உள்ள மக்களில் பெரும்பான்மையினருக்கு நீர் கீழ்ப்படிவீராயின், அவர்கள் உம்மைக் கடவுள்-ன் பாதையிலிருந்து திசை திருப்பி விடுவார்கள். அவர்கள் யூகத்தை மட்டுமே பின்பற்றுகின்றனர்; அவர்கள் அனுமானிக்க மட்டுமே செய்கின்றனர்.
إِنْ يَتَّبِعُونَ إِلَّا الظَّنَّ وَمَا تَهْوَى الْأَنْفُسُ وَلَقَدْ جَاءَهُمْ مِنْ رَبِّهِمْ الْهُدَى
53:23 இவை நீங்கள் புனைந்து கொண்ட பெயர்களேயன்றி வேறில்லை, நீங்களும் உங்களுடைய மூதாதையர்களும். இத்தகையதொரு இறை நிந்தனைக்குக் கடவுள் ஒருபோதும் அங்கீகாரம் அளிக்கவில்லை. அவர்களுடைய இரட்சகரிடமிருந்து அவர்களுக்கு சத்திய வழிகாட்டல் இதிலே வந்துள்ள பொழுது, அவர்கள் அனுமானங்களையும் சுய விருப்பங்களையும் பின்பற்றுகின்றனர்.
தூதருக்கு கீழ்படிவது நிபந்தனைக்குட்பட்டது
தூதருக்கு கீழ்படிவது குர்ஆனிய வெளிப்பாடுகளை (வஹி) பின்பற்றுவதன் மூலம் தான் முழுமையடைகின்றது.
தூதருக்கு கீழ்படிவது குர்ஆனை, முழுக்குர்ஆனை, மேலும் வேறு எதுவுமில்லாது குர்ஆனை மட்டுமே உறுதியாகக் கடைபிடிப்பதில் தான் இருக்கின்றது.
கீழ்படிவதற்கான நிபந்தனை என்னவென்றால் தூதரின் மூலமாக மிகச்சரியாக அல்லாஹ்வை ஆதாரமாக கொள்வதே தவிர, தவறுகளுக்குட்பட்ட மனிதராகிய அந்த தூதரை அல்ல.
கீழேயுள்ள வசனத்தில் காட்டியுள்ளபடி ஒரு மனிதர் என்ற முறையில் தூதருக்கு, அவர் சரியான பாதையில் இருந்தால் மட்டுமே கீழ்படிய வேண்டும்.
يَايُّهَا النَّبِيُّ إِذَا جَاءَكَ الْمُؤْمِنَتُ يُبَايِعْنَكَ عَلَى أَنْ لَا يُشْرِكْنَ بِاللَّهِ شَيْءا وَلَا يَسْرِقْنَ وَلَا يَزْنِينَ وَلَا يَقْتُلْنَ أَوْلَدَهُنَّ وَلَا يَأْتِينَ بِبُهْتَنٍ يَفْتَرِينَهُ بَيْنَ أَيْدِيهِنَّ وَأَرْجُلِهِنَّ وَلَا يَعْصِينَكَ فِي مَعْرُوفٍ فَبَايِعْهُنَّ وَاسْتَغْفِرْ لَهُنَّ اللَّهَ إِنَّ اللَّهَ غَفُورٌ رَحِيمٌ
60:12 நபியே உம்மைத்தான், (நம்பமறுப்பவர்களைக் கைவிட்டு விட்டவர்களான) நம்பிக்கை கொண்ட பெண்கள் உம்மிடம் அபயம் தேடுவதற்காக வந்து, அவர்கள், கடவுள்-வுடன் எந்த போலித் தெய்வங்களையும் அமைத்துக் கொள்ள மாட்டோம், அன்றித் திருடமாட்டோம், அன்றி விபசாரம் செய்ய மாட்டோம், அன்றித் தங்களுடைய குழந்தைகளைக் கொல்ல மாட்டோம், அன்றிப் பொய்மை எதனையும் புனைந்துரைக்க மாட்டோம், அன்றி உம்முடைய நன்னெறியான கட்டளைகளுக்குக் கீழ்ப்படியாதிருக்கமாட்டோம் என்று உம்மிடம் உறுதி மொழி செய்தால், நீர் அவர்களுடைய உறுதிமொழியை ஏற்றுக் கொள்ளவும் அவர்களுடைய பாவங்களை மன்னிக்கும்படிக் கடவுள்-ஐப் பிரார்த்திக்கவும் வேண்டும். கடவுள் மன்னிப்பவர், மிக்க கருணையாளர்.
இவ்விதமாக மனிதராகிய முஹம்மது, தூதராகிய முஹம்மதைப் போன்றவரல்ல. அவர் சரியான பாதையில் இருந்தால் மட்டுமே அவருக்கு கீழ்படிய வேண்டும் என்ற நிபந்தனை தெளிவானதாக இருக்கின்றது.
மூல ஆதாரமாக அல்லாஹ் இருக்கும் போது தான் கீழ்படிதல் முழுமை அடைகின்றது. அதே சமயம் தூதருடைய சொந்த கருத்து அவருக்கும், அவருடைய சொந்த கருத்துக்களை பின்பற்றுபவர்களுக்கும் தீங்கு விளைவிக்கக் கூடியதாக இருக்கலாம் என்று குர்ஆன் வலியுறுத்திக் கூறுகின்றது.
مَا أَصَابَكَ مِنْ حَسَنَةٍ فَمِنْ اللَّهِ وَمَا أَصَابَكَ مِنْ سَيِّئَةٍ فَمِنْ نَفْسِكَ وَأَرْسَلْنَكَ لِلنَّاسِ رَسُولًا وَكَفَى بِاللَّهِ شَهِيدًا
مَنْ يُطِعْ الرَّسُولَ فَقَدْ أَطَاعَ اللَّهَ وَمَنْ تَوَلَّى فَمَا أَرْسَلْنَكَ عَلَيْهِمْ حَفِيظًا
4:79 உங்களுக்கு நேரிடுகின்ற எந்த ஒரு நல்லதும் கடவுள்-யிடமிருந்தே வருகின்றது, மேலும் உங்களுக்கு நேரிடுகின்ற எந்த ஒரு கெட்டதும் உங்களிடமிருந்தே வருகின்றது. மக்களுக்கு ஒரு தூதராக உம்மை நாம் அனுப்பியுள்ளோம், மேலும் சாட்சியாகக் கடவுள் போதுமானவர்.
4:80 தூதருக்குக் கீழ்ப்படிகின்ற எவரும் கடவுள்-க்கே கீழ்ப்படிகின்றார். திரும்பிச் சென்று விடுகின்றவர்களைப் பொறுத்தவரை, அவர்களுடைய பொறுப்பாளராக உம்மை நாம் அனுப்பவில்லை.
இவ்விதமாக முஹம்மதுடைய சொந்தக் கருத்து கெட்டதாக இருக்கலாம். மேலும் கெட்ட நிகழ்வுகள் நிகழ்வதற்கு காரணமாகலாம். மற்றொருபுறம் தூதராகிய முஹம்மது, அல்லாஹ்வின் வார்த்தைகளை அதாவது குர்ஆனை கூறுகின்றார் என்றால் அதற்கு முழுமையாக கீழ்படிந்தாக வேண்டும். ஏனெனில் எவரொருவர் தூதுருக்கு கீழ்படிகின்றாறோ அவர் அல்லாஹ்வுக்கு கீழ்படிந்தவர் ஆவார். மேலும் நாம் அல்லாஹ்வின் கட்டளைகளுக்குத் தான் கீழ்படிய வேண்டும். மனிதர்களின் கட்டளைகளுக்கு அல்ல.
ஒரு தூதராக முஹம்மது என்ன கூறினாரோ, அதற்கு நாம் கட்டாயம் கீழ்படிந்தாக வேண்டும். மேலும் ஒரு மனிதராக அவர் என்ன கூறினாரோ அதற்கு கீழ்படிய வேண்டிய அவசியம் இல்லை என்பதற்கு பல உதாரணங்களை குர்ஆன் வழங்குகின்றது. ஒரு தூதராக அவர் குர்ஆனை, வேறு எதுவும் இன்றி குர்ஆனை மட்டுமே கூறினார். இன்னும் கூடுதலாக ஒரு மனிதராக முஹம்மது உண்மையில், அலட்சியம் செய்யமுடியாத தவறுகளை செய்தார் என்று குர்ஆன் போதிக்கின்றது. இவ்விதமாக கீழே காட்டப்பட்டுள்ள வசனத்தில் ஒரு மனிதர் தன்னுடைய வளர்ப்பு மகனால் விவாகரத்து செய்யப்பட்ட மனைவியை திருமணம் செய்து கொள்ளலாம் என்கின்றதொரு சட்டத்தை நிலைநிறுத்த அல்லாஹ் விரும்பியதை நாம் காண்கின்றோம். முஹம்மது நமக்கு முன்மாதிரியாக இருக்க வேண்டியவர். ஆயினும் இது அரேபியாவின் பரம்பரை வழக்கங்களுக்கு எதிரானதாக இருந்தது, மேலும் நபி, உண்மையில் அல்லாஹ்விற்கு அஞ்சுவதற்கு பதிலாக மக்களுக்கு அஞ்சினார்.
وَإِذْ تَقُولُ لِلَّذِي أَنْعَمَ اللَّهُ عَلَيْهِ وَأَنْعَمْتَ عَلَيْهِ أَمْسِكْ عَلَيْكَ زَوْجَكَ وَاتَّقِ اللَّهَ وَتُخْفِي فِي نَفْسِكَ مَا اللَّهُ مُبْدِيهِ وَتَخْشَى النَّاسَ وَاللَّهُ أَحَقُّ أَنْ تَخْشَهُ فَلَمَّا قَضَى زَيْدٌ مِنْهَا وَطَرًا زَوَّجْنَكَهَا لِكَيْ لَا يَكُونَ عَلَى الْمُؤْمِنِينَ حَرَجٌ فِي أَزْوَجِ أَدْعِيَائِهِمْ إِذَا قَضَوْا مِنْهُنَّ وَطَرًا وَكَانَ أَمْرُ اللَّهِ مَفْعُولًا
33:37 கடவுள்-ஆல் ஆசீர்வதிக்கப்பட்டு, மேலும் உம்மாலும் ஆசீர்வதிக்கப்பட்ட ஒருவரிடம் நீர் கூறியதை நினைவு கூர்வீராக, "உம்முடைய மனைவியைத் தக்க வைத்துக் கொள்வீராக, மேலும் கடவுள்-ஐ அஞ்சிக் கொள்வீராக," மேலும் கடவுள் பிரகடனிக்க நாடியதை உமக்குள்ளேயே நீர் மறைத்துக் கொண்டீர். இவ்விதமாக, கடவுள்-ஐ மட்டுமே அஞ்ச வேண்டியவராக நீர் இருக்கும் பொழுது, நீர் மக்களுக்கு அஞ்சினீர். ஒரு மனிதன் தன்னுடைய தத்துப்பிள்ளையின் விவாகரத்துச் செய்யப்பட்ட மனைவியை மணந்து கொள்ளலாம் என்ற முன்மாதிரியை நிலைநாட்டுவதற்காக, ஜைது தன்னுடைய மனைவியை விட்டு முழுமையாக நீங்கிக் கொண்டு விட்ட பின்னர், அவரை நாம் உமக்கு மணம் செய்வித்தோம். கடவுள்-ன் கட்டளைகள் செய்து முடிக்கப்படவேண்டும்.
நாம் முஹம்மதிற்கு அவருடைய குர்அனிய கூற்றுக்களுக்கு மட்டுமே கீழ்படிய வேண்டும், மேலும் அவருடைய தனிப்பட்ட கூற்றுக்களுக்கோ அல்லது தனிப்பட்ட நடத்தைகளுக்கோ கீழ்படியக் கூடாது என்ற உண்மையை ஒரு முழுசூரா விளக்கமாக கூறுகின்றது. இது ஹதீஸ் மற்றும் சுன்னத் என்று அழைக்கப்படுபவை சட்டப்பூர்வமான மார்க்க வழி காட்டுதல்களாக இருப்பதற்கு தகுதி அற்றவை என்று தீர்ப்பு அளிக்கின்றது.
அந்த சூரா “அபஸா = அவர் முகம் சுளித்தார்” என்ற பெயரை தலைப்பாக கொண்ட சூரா ஆகும். மேலும் அது முஹம்மது பார்வையற்ற ஒரு ஏழை மனிதரை புறக்கணித்துவிட்டு, ஒரு பணக்கார மனிதரிடம் தனது முழு கவனத்தையும் செலுத்திய ஒரு நிகழ்ச்சியை விவரிக்கின்றது.
عَبَسَ وَتَوَلَّى
َنْ جَاءَهُ الْأَعْمَى
وَمَا يُدْرِيكَ لَعَلَّهُ يَزَّكَّى
أَوْ يَذَّكَّرُ فَتَنْفَعَهُ الذِّكْرَى
أَمَّا مَنْ اسْتَغْنَى
فَأَنْتَ لَهُ تَصَدَّى
وَمَا عَلَيْكَ أَلَّا يَزَّكَّى
وَأَمَّا مَنْ جَاءَكَ يَسْعَى
وَهُوَ يَخْشَى
فَأَنْتَ عَنْهُ تَلَهَّى
كَلَّا إِنَّهَا تَذْكِرَةٌ
فَمَنْ شَاءَ ذَكَرَهُ
80:1 அவர் (முஹம்மத்) முகம் சுளித்தார், மேலும் திரும்பிக் கொண்டார்.
80:2 பார்வையற்ற அந்த மனிதர் அவரிடம் வந்த பொழுது.
80:3 உமக்கு எப்படித் தெரியும்? தன்னையே அவர் தூய்மைப் படுத்திக் கொள்ளக் கூடும்.
80:4 அல்லது அவர் கவனத்தில் எடுத்துக் கொள்ளக் கூடும், மேலும் தூதுச் செய்தியிலிருந்து பயன் பெறக் கூடும்.
80:5 செல்வந்தனான அம்மனிதனைப் பொறுத்த வரை.
80:6 உம்முடைய கவனத்தை நீர் அவனிடம் செலுத்தினீர்.
80:7 அவனுடைய மீட்சிக்கு உம்மால் உத்தரவாதம் அளிக்க இயலாத போதிலும்.
80:8 ஆர்வத்துடன் உம்மிடம் வந்த அந்த ஒருவர்.
80:9 மேலும் மெய்யாகவே பக்தியுடையவர்.
80:10 அவரை நீர் அசட்டை செய்தீர்.
80:11 உண்மையில், இது ஒரு நினைவூட்டலாகும்.
80:12 விரும்புகின்ற எவரும் கவனத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும்.
முஹம்மதை இணை தெய்வ வழிபாடு செய்தல்
குர்ஆன் முழுமையானது, மிகச்சரியனது & மார்க்க வழிகாட்டுதலுக்கான ஒரே ஆதாரமாக இருக்க வேண்டும் என்று அல்லாஹ்வால் மீண்டும், மீண்டும் வலியுறுத்தப்பட்டும், அல்லாஹ்வை நம்பமறுத்து, ஹதீஸ் & சுன்னத் எனப்படும் கற்பனைகளை பின்பற்றுவது முஹம்மதை அவருடைய விருப்பத்திற்கெதிராக தெய்வமாக ஆக்குகின்ற செயலாகும்.
قُلْ لَوْ كَانَ الْبَحْرُ مِدَادًا لِكَلِمَتِ رَبِّي لَنَفِدَ الْبَحْرُ قَبْلَ أَنْ تَنفَدَ كَلِمَتُ رَبِّي وَلَوْ جِئْنَا بِمِثْلِهِ مَدَدًا
قُلْ إِنَّمَا أَنَا بَشَرٌ مِثْلُكُمْ يُوحَى إِلَيَّ أَنَّمَا إِلَهُكُمْ إِلَهٌ وَحِدٌ فَمَنْ كَانَ يَرْجُوا لِقَاءَ رَبِّهِ فَلْيَعْمَلْ عَمَلًا صَلِحًا وَلَا يُشْرِكْ بِعِبَادَةِ رَبِّهِ أَحَدًا
18:109 கூறும், "பெருங்கடலே என் இரட்சகரின் வார்த்தைகளுக்கு மையாக ஆனபோதிலும், என் இரட்சகரின் வார்த்தைகள் தீர்ந்து போகுமுன்னர் பெருங்கடல் தீர்ந்து போகும், இரு மடங்கு மையை நாம் வழங்கினாலும் சரியே."
18:110 கூறும், "உங்கள் தெய்வம் ஒரே தெய்வம் என்று உள்ளுணர்வளிக்கப்பட்டிருக்கும் நான், உங்களைப் போன்ற ஒரு மனிதன் என்பதை விட அதிகம் எதுவுமில்லை. தங்கள் இரட்சகரைச் சந்திப்பதை எதிர்ப் பார்த்திருப்பவர்கள் நன்மையான காரியங்களைச் செய்யவும், மேலும் தன்னுடைய இரட்சகருடன் வேறு தெய்வம் எதனையும் ஒருபோதும் வழிபடாதிருக்கவும் வேண்டும்."
அல்லாஹ் வார்த்தைகள் பற்றாக் குறையால் பாதிக்கப்படுவதில்லை. அதாவது இந்த குர்ஆனில் நமக்கு தேவையான அனைத்து வார்த்தைகளையும் அவர் நமக்கு வழங்கியுள்ளார். மேலும் முஹம்மதுடைய வார்த்தைகளையோ, அல்லது வேறெவருடைய வார்த்தைகளையோ நாம் தேடக்கூடாது, மேலும் முஹம்மதும் மற்ற மனிதர்களைப் போன்ற மனிதரே ஆவார், அவரை இணைதெய்வ வழிபாடு செய்தல் கூடாது போன்ற விவரங்களை இந்த வசனங்கள் தெளிவாக நமக்கு அறிவிக்கின்றன. (வசன முடிவில் பார்க்கவும்)
குர்ஆன்; நீங்கள் முஹம்மதை
இணைதெய்வ வழிபாடு செய்ய வேண்டாம்
முஹம்மது நபி “உங்களைப் போன்ற மனிதரேயன்றி வேறில்லை” என்று விவரிக்கின்ற வசனங்கள் இரண்டு மட்டுமே குர்ஆனில் உள்ளன. அந்த இரண்டு வசனங்களுமே அவற்றின் முடிவில் இணைத்தெய்வ வழிபாட்டை தடுக்கின்றன என்பது தற்செயலானதா ?? முதல் வசனம் முந்தைய பக்கத்தில் காட்டப்பட்டுள்ளது. இரண்டாவது வசனம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
قُلْ إِنَّمَا أَنَا بَشَرٌ مِثْلُكُمْ يُوحَى إِلَيَّ أَنَّمَا إِلَهُكُمْ إِلَهٌ وَحِدٌ فَاسْتَقِيمُوا إِلَيْهِ وَاسْتَغْفِرُوهُ وَوَيْلٌ لِلْمُشْرِكِينَ
(முஹம்மதே) கூறுவீராக, “உங்கள் தெய்வம் ஒரே தெய்வம் என்று உள்ளுணர்வளிக்கப்பட்டுள்ள நான், உங்களைப் போன்ற ஒரு மனிதர் என்பதை விட அதிகம் எதுவுமில்லை. நீங்கள் அவருக்கு அர்ப்பணித்துக் கொண்டவர்களாக இருக்கவும், மேலும் அவருடைய மன்னிப்பைக் கேட்கவும் வேண்டும். இணைத் தெய்வ வழிபாடு செய்பவர்களுக்கு கேடுதான்.
உண்மையான நம்பிக்கையாளர்கள் தங்கள் இரட்சகரை, குர்ஆன் முழுமையானது, மிகச்சரியானது முற்றிலும் விவரிக்கப்பட்டது மேலும் மார்க்க வழிகாட்டுதலின் ஒரே ஆதாரமாக இருக்க வேண்டும் என்கின்ற அவருடைய கூற்றுகளில் நம்பிக்கை கொள்கின்றனர். இணைதெய்வ வழிபாடு செய்பவர்கள் மட்டுமே, குர்ஆன் அல்லாத மற்றதை தேடுவார்கள். “ஹதீஸ் & சுன்னத்” ஆகியவற்றை பின்பற்றுவது முஹம்மது நபியை அவருடைய விருபத்திற்கெதிராக இணை தெய்வ வழிபாடு செய்வதாகும்.
குர்ஆனை தவறாக பயன்படுத்துதல்
إِنَّ اللَّهَ وَمَلَئِكَتَهُ يُصَلُّونَ عَلَى النَّبِيِّ يَأيُّهَا الَّذِينَ ءامَنُوا صَلُّوا عَلَيْهِ وَسَلِّمُوا تَسْلِيمًا
33:56 கடவுள்-ம் அவருடைய வானவர்களும் நபிக்கு உதவியும் ஆதரவும் அளிக்கின்றனர். நம்பிக்கை கொண்டோரே, உங்களைத்தான், நீங்கள் அவருக்கு உதவியும் ஆதரவும் அளிக்க வேண்டும், மேலும் எவ்வாறு அவர் மதிக்கப்பட வேண்டுமோ அவ்வாறு அவரை மதியுங்கள்.
முழு குர் ஆனிலும் அதிக அளவில், மிகவும் தவறாக பயன்படுத்தப்பட்ட வசனமாக இது இருக்கின்றது. அல்லாஹ்வை பெருமை படுத்துவதற்குப் பதிலாக, சைத்தானிய சிதைவுகள், அறிவீனம் மற்றும் இணைதெய்வ வழிபாடு ஆகியவை மூலமாக கோடிக்கணக்கான முஸ்லிம்கள் நபியை அவருடைய விருப்பத்திற்கு எதிராக பெருமைபடுத்துவதற்கு இந்த வசனம் காரணமாகின்றது. குறிப்பிட்ட இந்த வசனத்தின் புகழ்ச்சிகளை இரவும் பகலும் பாடுகின்ற மக்கள், வெளிப்படையாக இரண்டு உண்மைகளை அறியாதவர்களாக இருக்கின்றனர். 1 நபி = வேதம் வழங்கப்பட்டவர் = 00 என்கின்ற இந்த வார்த்தையானது முஹம்மது நபியைக் குறிக்கும் பொழுதெல்லாம் அவர் உயிரோடு இருந்த காலத்தில் அவரைப் பற்றி குறிப்பிடுகின்றதே தவிர அவருடைய மரணத்திற்கு பின்னர் அல்ல.
2. இதே சூராவில் இந்த வசனத்திற்கு 13 வசனங்கள் முன்னதாக அல்லாஹ்வும் அவருடைய வானவர்களும் அதே மரியாதையை நம்பிக்கையாளர்கள் அனைவருக்கும் செய்வதை நாம் காண்கின்றோம்.
هُوَ الَّذِي يُصَلِّي عَلَيْكُمْ وَمَلَئِكَتُهُ لِيُخْرِجَكُمْ مِنْ الظُّلُمَتِ إِلَى النُّورِ
33:43 அவர்தான் தன்னுடைய வானவர்களுடன் சேர்ந்து, உங்களை இருளிலிருந்து வெளியேற்றி ஒளியினுள் வழிநடத்துவதற்காக உங்களுக்கு உதவுகின்றார். நம்பிக்கையாளர்களின்பால் அவர் மிக்க கருணையாளராக இருக்கின்றார்.
சூரா 9-ன் வசனம் 103, “ஸல்லூ மற்றும் யுஸல்லி" ஆகிய வார்த்தைகளின் அர்த்தத்தை தெளிவு படுத்துகின்றது. சூரா 33-ன் வசனம் 56-ல் நபிக்கு "யுஸல்லி" செய்யும்படி நம்பிக்கையாளர்களிடம் கேட்டுக் கொள்ளப்பட்ட அதே விதமாக நம்பிக்கையாளர்களுக்கு “யுஸல்லீ” செய்யும் படி நபிக்கு இந்த வசனத்தில் கட்டளையிடப்படுகின்றது (பக்கம் 26ஐ பார்க்கவும்).
خُذْ مِنْ أَمْوَلِهِمْ صَدَقَةً تُطَهِّرُهُمْ وَتُزَكِّيهِمْ بِهَا وَصَلِّ عَلَيْهِمْ إِنَّ صَلَوتَكَ سَكَنٌ لَهُمْ وَاللَّهُ سَمِيعٌ عَلِيمٌ
9:103 அவர்களைத் தூய்மைப்படுத்துவதற்காகவும், அவர்களைப் பாவங்களில் இருந்து விடுவிப்பதற்காகவும் அவர்களுடைய பணத்தில் இருந்து ஓரு தர்மத்தை ஏற்றுக் கொள்வீராக. அத்துடன் அவர்களை ஊக்கப் படுத்துவீராக, ஏனெனில் உம்முடைய ஊக்கப்படுத் தல் அவர்களுக்கு மறுவுறுதியளிக்கின்றது. கடவுள் செவியேற்பவர், சர்வமும் அறிந்தவர்.
இவ்விதமாக, இந்த சொற்றொடரின் உண்மையான அர்த்தம் “உற்சாகமூட்டுங்கள்” என்பதே தவிர, குர்ஆனை தவறாக பயன்படுத்துபவர்கள் குறிப்பிடுவதைப் போல “இரவும், பகலும் புகழ்ந்திடுங்கள்” என்பதல்ல.
சுருக்கம்
1. அல்லாஹ்வும் மேலும்அவருடைய மலக்குகளும் நம்பிக்கையாளர்களை இருளிலிருந்து வெளியேற்றி ஒளியினுள் வழி நடத்துவதற்காக உதவுகின்றனர் [33:43].
2. அல்லாஹ்வும் மேலும் அவருடைய மலக்குகளும் நபிக்கு, அவருடைய வாழ்நாளின் பொழுது நேரான பாதையின் மீது அவர் நிலைத்திருப்பதற்கு உதவுகின்றனர் [33:56].3. நபி வாழ்ந்த காலத்தில் அவருக்கு ஆதரவு அளிக்கும்படி நம்பிக்கையாளர்கள் கேட்டுக் கொள்ளப்பட்டனர் (33:56) மேலும், நபியும் நம்பிக்கையாளர்களுக்கு ஆதரவு அளிக்கும்படி கேட்டுக் கொள்ளப்பட்டார் [9:103].
لَقَدْ كَانَ لَكُمْ فِي رَسُولِ اللَّهِ أُسْوَةٌ حَسَنَةٌ لِمَنْ كَانَ يَرْجُوا اللَّهَ وَالْيَوْمَ الْاءخِرَ وَذَكَرَ اللَّهَ كَثِيرًا
33:21 உங்களில், கடவுள்-ஐயும் இறுதி நாளையும் தேடுபவர்களுக்கும், மேலும் இடையறாது கடவுள்-ஐப் பற்றி நினைப்பவர்களுக்கும் கடவுள்-ன் தூதர் நல்லதொரு முன்மாதிரியை அமைத்துள்ளார்.
முஹம்மதை இணைதெய்வ வழிபாடு செய்வதற்கான ஒரு சிறப்பு அந்தஸ்தினை கோருவதற்கும் மேலும் நபியுடைய சுன்னத் (வழி வழிச் செய்தி) தேவை என்று மக்களை நம்பும்படி செய்வதற்கும் சைத்தான் இந்த வசனத்தை பயன்படுத்தி விட்டான்.
முஹம்மது நபி நமக்கு சிறந்த முன்மாதிரி என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை. மேலும் குர்ஆனை, வேறெதுவும் இல்லாது, குர்ஆனை மட்டுமே உறுதியாக கடைபிடிப்பதில் தான் அவருடைய முன் மாதிரி அமைந்திருக்கின்றது.
சந்தேகத்திற்கிடமின்றி, வார்த்தைக்கு வார்த்தை இதே வார்த்தைகளால் தான் இப்ராஹிம் குர்ஆனில் விவரிக்கப்படுகின்றார் என்ற உண்மையை சைத்தானின் வலையில் விழுந்தவர்கள் அறியாதவர்களாக இருக்கின்றனர்:
قَدْ كَانَتْ لَكُمْ أُسْوَةٌ حَسَنَةٌ فِي إِبْرَهِيمَ وَالَّذِينَ مَعَهُ
لَقَدْ كَانَ لَكُمْ فِيهِمْ أُسْوَةٌ حَسَنَةٌ لِمَنْ كَانَ يَرْجُوا اللَّهَ وَالْيَوْمَ الاءخِرَ وَمَن يَتَوَلَّ فَإِنَّ اللَّهَ هُوَ الْغَنِيُّ الْحَمِيدُ
60:4 ஆப்ரஹாம் மற்றும் அவருடன் இருந்தவர்கள் மூலம் உங்களுக்கு நல்லதொரு முன்னுதாரணம் அமைக்கப்பட்டுள்ளது. அவர்கள் தங்களுடைய சமூகத்தாரிடம் கூறினர், "உங்களையும் கடவுள்-ஐ அன்றி நீங்கள் வழிபடுபவற்றையும் விட்டு நாங்கள் விலகிக் கொண்டோம். உங்களை நாங்கள் கண்டனம் செய்கின்றோம், மேலும் கடவுள் மட்டும் என்பதில் நீங்கள் நம்பிக்கை கொள்ளும் வரை, எங்களிடமிருந்து பகைமையையும் வெறுப்பையும் தவிர எந்த ஒன்றையும் நீங்கள் காணமாட்டீர்கள்." ஆயினும், அவர் தன் தந்தையிடம் "உம்முடைய பாவமன்னிப்பிற்காக நான் பிரார்த்திப்பேன், ஆனாலும் கடவுள்-யிடமிருந்து உம்மைக் காக்கின்ற எந்தச் சக்தியையும் நான் பெற்றி ருக்கவில்லை," என்று கூறிய பொழுது ஆப்ரஹாம் ஒரு தவறு புரிந்துவிட்டார். "எங்கள் இரட்சகரே, நாங்கள் உம்மிடம் பொறுப்பேற்படுத்துகின்றோம், மேலும் உமக்குச் சரணடைகின்றோம்; இறுதி விதியானது உம்வசமே உள்ளது.
60:6 கடவுள் மற்றும் இறுதி நாளைத் தேடுபவர்களுக்கு நல்லதொரு முன்னுதாரணம் அவர்களால் அமைக்கப்பட்டுள்ளது. திரும்பிச் சென்று விடுபவர்களைப் பொறுத்தவரை(அவர்களிடம்) கடவுள் எந்தத் தேவையுமற்றவர், மிகவும் புகழுக்குத் தகுதியானவர்.
அல்லாஹ் முஹம்மதை வெறுக்கின்றாரா???
நிச்சயமாக இல்லை. ஆனால் குர்ஆனில் முஹம்மதைப் பற்றி அல்லாஹ் கூறுகின்ற செய்திகளை நீங்கள் கூறும்பொழுது முஹம்மதை வெறுப்பதாக உங்கள் மீது அவர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
இதைப் போலவே இயேசு ஒரு மனிதரும் மேலும் அல்லாஹ்வுடைய தூதருமாவார் என்று கிறிஸ்தவர்களிடம் நீங்கள் கூறும் பொழுது அவர்கள் இயேசுவை வெறுப்பதாக உங்கள் மீது குற்றம் சாட்டுவர்.
முஹம்மதால் எவரொருவரையும் வழிநடத்த இயலாது. (28:56)
إِنَّكَ لَا تَهْدِي مَنْ أَحْبَبْتَ وَلَكِنَّ اللَّهَ يَهْدِي مَنْ يَشَاءُ وَهُوَ أَعْلَمُ بِالْمُهْتَدِينَ
28:56 நீர் நேசிப்பவர்களை எல்லாம் உம்மால் வழிநடத்த முடியாது. கடவுள் தான் தன்னுடைய நாட்டத்திற் கேற்பவும், வழிகாட்டலுக்குத் தகுதியுடையவர் எவர் என்ற அவருடைய அறிவிற்கேற்பவும் வழி நடத்துகின்ற ஒரே ஒருவர்.
எந்தவொரு மாற்றமோ, கூட்டலோ குறைத்தலோ, அல்லது விளக்கமோ இல்லாது குர்ஆனை ஒப்படைப்பது தான் நபியுடைய ஒரே பணியாக இருந்தது.
முஹம்மது மீதான உண்மையான அன்பு
இயேசுவை உண்மையாக நேசிப்பது என்பது, அவரை ஒரு மனிதராக மேலும் அல்லாஹ்வின் ஒரு தூதராக அடையாளம் காண்பதேயாகும். கிறிஸ்தவர்கள் இயேசுவை மிகவும் அதிகமாக நேசிக்கின்றனர், ஆயினும் தீர்ப்பு நாளில் அவர்களை, அவர் கைவிடுகின்றார் (மத்தேயு 7:23 மற்றும் குர் ஆன் 5:116).
முஹம்மதை உண்மையாக நேசிப்பதென்பது அவரை ஒரு மனிதராக அடையாளம் கண்டும் மேலும் அவருடைய போதனைகளை பின்பற்றுவது, அதாவது குர்ஆனை, வேறெதுவுமில்லாது குர்ஆனை மட்டுமே உறுதியாக பின்பற்றுவதாகும், “ஹதிஸ் & சுன்னத்தை” பின்பற்றுபவர்கள் முஹம்மதுடைய எதிரிகளென அழைக்கப் படுகின்றனர். மேலும் நாம் கீழே காண்கின்றபடி, தீர்ப்புநாளில் அவர்களை முஹம்மது கைவிடுகின்றார்.
وَقَالَ الرَّسُولُ يَرَبِّ إِنَّ قَوْمِي اتَّخَذُوا هَذَا الْقُرْءانَ مَهْجُورًا
وَكَذَلِكَ جَعَلْنَا لِكُلِّ نَبِيٍّ عَدُوًّا مِنْ الْمُجْرِمِينَ وَكَفَى بِرَبِّكَ هَادِيًا وَنَصِيرًا
25:30 தூதர் கூறினார், "என் இரட்சகரே, என் சமூகத்தார் இந்தக் குர்ஆனைக் கைவிட்டு விட்டார்கள்."
25:31 ஒவ்வொரு நபிக்கும் எதிராக குற்றவாளிகளிலிருந்து விரோதிகளையும் நாம் அமைக்கின்றோம். ஒரு வழிகாட்டியாகவும், ஓர் எஜமானராகவும் உம்முடைய இரட்சகர் போதுமானவர்.
மேலேயுள்ள 31-வது வசனத்திற்கும் மேலும் பிரத்யேகமாக “ஹதீஸை” பற்றி விவரிக்கும் சூரா 6-ன் 112-வது வசனத்திற்கும் இடையிலுள்ள வார்த்தைக்கு வார்த்தை ஒற்றுமையை தயவு செய்து கவனிக்கவும்.
அல்லாஹ்தான் உங்களைப் படைத்தவர்; அல்லாஹ் தான் உங்களுக்கு வழங்குபவர்; அல்லாஹ் தான் உங்களுடைய வாழ்வை முடிவடையச் செய்கின்றவர்; அல்லாஹ் தான் உங்களை மீண்டும் உயிர்ப்பித்தெழுப்புபவர்; அல்லாஹ் தான் கணக்கு கேட்பதற்காக உங்களை அழைக்கின்றவர். இவைகளில் எந்த ஒன்றையும் முஹம்மது செய்வதில்லை (30:40ஐப் பார்க்கவும்).
முஹம்மது எதிர்காலத்தை அறிந்தவர் அல்ல
قُلْ مَا كُنْتُ بِدْعًا مِنْ الرُّسُلِ وَمَا أَدْرِي مَا يُفْعَلُ بِي وَلَا بِكُمْ إِنْ أَتَّبِعُ إِلَّا مَا يُوحَى إِلَيَّ وَمَا أَنَا إِلَّا نَذِيرٌ مُبِينٌ
46:9 கூறுவீராக, "மற்றத் தூதர்களிலிருந்து நான் வேறு பட்டவன் அல்லன். எனக்கோ அல்லது உங்களுக்கோ என்ன நிகழும் என்பது குறித்து எனக்கு அறிவு எதுவும் கிடையாது. எனக்கு வெளிப்படுத்தப்பட்டவற்றை மட்டுமே நான் பின்பற்றுகின்றேன். ஆழ்ந்ததொரு எச்சரிப்பவன் என்பதை விட நான் அதிகம் எதுவு மில்லை."
قُلْ لَا امْلِكُ لِنَفْسِي نَفْعًا وَلَا ضَرًّا الَّا مَا شَاء اللَّهُ وَلَوْ كُنتُ اعْلَمُ الْغَيْبَ لَاسْتَكْثَرْتُ مِنْ الْخَيْرِ وَمَا مَسَّنِي السُّوءُ انْ انَا الَّا نَذِيرٌ وَبَشِيرٌ لِقَوْمٍ يُؤْمِنُونَ
7:188 கூறுவீராக, "எனக்கே நன்மையோ அல்லது எனக்கே தீமையோ செய்து கொள்வதற்கு என்னிடம் எந்தச் சக்தியும் இல்லை. கடவுள் நாடுவது மட்டுமே எனக்கு நேரிடுகின்றது. நான் எதிர்காலத்தை அறிந்திருப்பேனாயின், என்னுடைய செல்வவளத்தை நான் அதிகரித்துக் கொண்டு இருந்திருப்பேன், அத்துடன் எந்தத் தீங்கும் என்னை வருத்தியிருக்காது. நம்பிக்கை கொண்டவர்களுக்கு ஓர் எச்சரிப்பவன் அத்துடன் நற்செய்தி தாங்கிய ஒருவன் என்பதை விட நான் அதிகம் எதுவுமில்லை."
ஆயினும் நூற்றுக்கணக்கான ஹதீஸ்கள் எதிர்கால நிகழ்வுகளை விவரிக்கின்றன, அவற்றிற்கும் குர்ஆனிற்கும் எந்த சம்பந்தமும் இல்லை. மேலும் அவை சொந்த யூகங்களையே எடுத்துக் கூறுகின்றன.
------------------------------------------------------------------------
மிகவும் பிரபலமான ஹதீஸ்களில் ஒன்று கீழே காட்டப்பட்டுள்ளது.
நீங்கள் என்னுடைய சுன்னத்தையும் (வழி வழிச் செய்தி) மேலும் எனக்குப் பின்னர் வர இருக்கின்ற வழிகாட்டப்பட்ட கலீஃபாக்களின் (அல்-குலஃபா ‘அல்-ராஷிதீன்) சுன்னத்தையும் உறுதியாக கடைபிடிக்க வேண்டும்.
“அல்-குலஃபா ‘அல்-ராஷிதீன்’ ” என்கின்ற இந்த சொற்றொடரானது நபிக்கு பின்னால் 200 ஆண்டுகள் வரையிலும் அரேபிய இலக்கியங்களில் காணப்படவில்லை என்பது கவனிக்கத் தக்கதாகும். இது ஒரு நவீன சொற்றொடராகும்.
தன்னைத் தொடர்ந்து “குலஃபாக்கள்” இருப்பார்கள் என்பதை நபி எவ்வாறு அறிந்தார், மேலும் அவர்கள் “அல்குலஃபா ‘அல்ராஷிதீன்” என்று அழைக்கப்படுவார்கள் என்பதை அவர் எவ்வாறு அறிந்தார்?
-----------------------------------------------------------------------------
“அல்குலஃபா ‘அல்-ராஷிதீன்” என்ற சொற்றொடரானது குறிப்பாக அபுபக்கர், உமர், உதுமான் மற்றும் அலி ஆகிய நான்கு கலீஃபாக்களையே குறிக்கின்றது இது நபிக்கு பின்னர் இரண்டு நூற்றாண்டுகள் வரையிலும் அறியப்படாததாகவே இருந்தது.
பரிந்துரை எனும் கட்டுக்கதை
பரிந்துரை என்பது, மக்களை ஏமாற்றி அவர்களை தங்களுடைய நபிமார்கள் மற்றும் / அல்லது மகான்களை இணைதெய்வ வழிபாடு செய்பவர்களாக ஆக்குவதற்கு சைத்தானால் பயன்படுத்தப்படும் மிகவும் திறன் வாய்ந்த யுக்திகளில் ஒன்றாகும்.
தீர்ப்பு நாளில் பரிந்துரை கிடையாது என்று குர்ஆன் மீண்டும் மீண்டும் கூறுகின்ற போதிலும் “முஹம்மது நபியை அவருடைய விருப்பத்திற்கு எதிராக இணைதெய்வ வழிபாடு செய்பவர்களாக “ஹதீஸ் & சுன்னத்” மூலம் பெரும்பாலான முஸ்லிம்கள் ஏமாற்றப்பட்டு விட்டனர். மேலும் பரிந்துரை (ஸஃபாத்) என்னும் கருத்தை கண்டு பிடித்துக் கொண்டனர்.
انفِقُوا مِمَّا رَزَقْنَكُمْ مِنْ قَبْلِ انْ يَاْتِيَ يَوْمٌ لَا بَيْعٌ فِيهِ وَلَا خُلَّةٌ وَلَا شَفَعَةٌ وَالْكَفِرُونَ هُمْ الظَّلِمُونَ
2:254 நம்பிக்கை கொண்டோரே உங்களைத்தான், எந்த வியாபாரமும், எந்த உறவு முறைச் சலுகைகளும், எந்தச் சிபாரிசும் இல்லாத ஒரு நாள் வருவதற்கு முன்னர், நாம் உங்களுக்குக் கொடுத்திருக்கின்ற வாழ்வாதாரங்களில் இருந்து நீங்கள் தர்மம் கொடுக்க வேண்டும். நம்பமறுப்பவர்கள் அநியாயக்காரர்களாகவே இருக்கின்றனர்.
يَعْلَمُ مَا بَيْنَ أَيْدِيهِمْ وَمَا خَلْفَهُمْ وَلَا يَشْفَعُونَ إِلَّا لِمَنْ ارْتَضَى وَهُمْ مِنْ خَشْيَتِهِ مُشْفِقُونَ
21:28 அவர்களுடைய எதிர்காலத்தையும் அவர்களுடைய கடந்த காலத்தையும் அவர் அறிந்திருக்கின்றார். முன்னரே அவரால் ஏற்றுக்கொள்ளப்பட்டு விட்டவர் களுக்கே அன்றி, அவர்கள் பரிந்துரை செய்ய மாட் டார்கள், மேலும் அவர்கள் தங்களைப் பற்றியே* கவலையுற்றவர்களாக இருக்கின்றனர்.
முஹம்மதை தெய்வமாக்குதல்
பரிந்துரை எனும் கட்டுக்கதை
முஹம்மது எவரொருவருக்கும் நன்மை செய்வதற்கோ அல்லது தீங்கிழைப்பதற்கோ சக்தியற்றவர் (பக்கம் 34 & பக்கம் 39 ஐப் பார்க்கவும்) என்ற குர்ஆனின் வலியுறுத்தல்கள் மீண்டும் மீண்டும் இருந்த போதிலும் பரிந்துரை என்னும் கருத்தின் மூலமாக ஏராளமான மக்களை ஏமாற்றுவதில் சைத்தான் வெற்றியடைந்து விட்டான். உண்மையிலேயே முஹம்மது தங்களை நரகிலிருந்து வெளியேற்றி சுவனத்தினுள் பிரவேசிக்கச் செய்வார் என்று தன்னால் ஏமாற்றப்பட்டவர்களை நம்பும்படி சைத்தான் செய்து விட்டான்!
தங்களை “முஸ்லிம்கள்” என்று அழைத்துக் கொள்பவர்களில் பெரும்பாலோர் பரிந்துரை என்கின்ற இந்த கருத்தை எண்ணற்ற மகான்கள் மற்றும் / அல்லது இமாம்களை இணைத்துக் கொள்வதற்காகவும் நீட்டித்துக் கொள்கின்றனர்.
وَيَعْبُدُونَ مِنْ دُونِ اللَّهِ مَا لَا يَضُرُّهُمْ وَلَا يَنْفَعُهُمْ وَيَقُولُونَ هَؤُلَاءِ شُفَعَؤُنَا عِنْدَ اللَّهِ قُلْ أتُنَبِّءونَ اللَّهَ بِمَا لَا يَعْلَمُ فِي السَّمَوَتِ وَلَا فِي الْأرْضِ سُبْحنَهُ وَتَعلَى عَمَّا يُشْرِكُونَ
10:18 கடவுள்-வுடன் தங்களுக்குத் தீங்கிழைக்கவோ அல்லது பயனளிக்கவோ சக்தியற்ற போலித் தெய்வங்களையும் அவர்கள் வழிபடுகின்றனர், மேலும் அவர்கள் கூறுகின்றனர், "இவர்கள் கடவுள்-யிடம் எங்களுக்கு பரிந்துரை செய்பவர்கள்!" கூறும், "வானங்களிலோ அல்லது பூமியிலோ, அவர் அறியாத சிலவற்றைக் கடவுள்-க்கு நீங்கள் அறிவிக்கின்றீர்களா?" அவர் துதிப்பிற்குரியவர். அவர் மிகவும் உயர்வானவர்; பங்குதாரர்கள் தேவைப்படுவதற்கும் அப்பால்.
பரிந்துரையின் கருத்தானது, மனிதர்கள் சார்பாக பரிந்து பேசும் சில பங்காளிகளை, அல்லாஹ், தன்னுடன் கொண்டிருக்கின்றார் என்கின்ற பொருளைத் தருகின்றது.
ஆகையால், பரிந்துரை என்பது இணை தெய்வ வழிபாடாக இருக்கின்றது, மேலும் எவருக்கேனும் முஹம்மது பரிந்துரை செய்வார் என்று நம்புபவர்கள், அந்த நபியை அவருடைய விருப்பத்திற்கு எதிராக இணை தெய்வ வழிபாடு செய்பவர்கள் ஆவர். முஹம்மதுடைய பரிந்துரையானது ஹதீஸ் & சுன்னத் எனப்படும் சைத்தானிய புதுமைகளில் சாதாரணமாகக் காணப்படுகின்றது.
பரிந்துரையை இணைதெய்வ வழிபாடு என்று குர்ஆன் தெளிவாக அடையாளம் காட்டுகின்றது. மேலும் ஒரு மகத்தான அளவுகோலையும் அறிவிக்கின்றது; அது பரிந்துரையின் மீது நம்பிக்கை கொள்பவர்களால் அல்லாஹ் மட்டும் என்பதைக் குறித்து பேச இயலாது ; அவர்களுக்கு தங்களுடைய இணை தெய்வங்களையும் சேர்த்தே குறிப்பிட்டாக வேண்டும்.
وَإِذَا ذُكِرَ اللَّهُ وَحْدَهُ اشْمَأَزَّتْ قُلُوبُ الَّذِينَ لَا يُؤْمِنُونَ بِالْاءخِرَةِ وَإِذَا ذُكِرَ الَّذِينَ مِنْ دُونِهِ إِذَا هُمْ يَسْتَبْشِرُونَ
39:45 கடவுள் மட்டும் மொழியப்பட்டால், மறுவுலகின் மீது நம்பிக்கை கொள்ளாதவர்களின் இதயங்கள் வெறுப் பினால் சுருங்கி விடுகின்றன. ஆனால் அவருடன் மற்றவர்களும் மொழியப்பட்டால், அவர்கள் திருப்தி அடைகின்றனர்.
கணக்கு கேட்பதற்காக முஹம்மது உங்களை அழைக்க மாட்டார்
فَانَّما عَليْكَ البَلغُ وَعَليْنَا الحِسَابُ
13:40 அவர்களுக்கு நாம் வாக்களித்ததை உமக்கு நாம் காட்டினாலும் சரி, அல்லது அதற்கு முன்னர் உம் வாழ்வை முடித்து விட்டாலும் சரி, உமது ஒரே பணி (தூதுச் செய்தியைச்) சேர்ப்பிப்பதே. அவர்களைக் கணக்குக் கேட்க அழைக்கப் போவது நாம்தான்.
முஹம்மதால் உங்களுக்கு நன்மையோ அல்லது
உங்களுக்கு தீமையோ செய்ய இயலாது.
قُلْ لَا امْلِكُ لِنَفْسِي ضَرًّا وَلَا نَفْعًا
10:49 கூறும், "எனக்கே தீங்கிழைத்துக் கொள்ளவோ, அல்லது எனக்கே நன்மை செய்து கொள்ளவோ நான் எந்தச் சக்தியும் கொண்டவனல்லன்; கடவுள் நாடியது மட்டுமே நிகழ்கின்றது." ஒவ்வொரு சமூகத்திற்கும் முன்னரே தீர்மானிக்கப்பட்ட ஒரு வாழ்க்கைக் கால அளவு உள்ளது. அவர்களுடைய தவணை ஒரு முடிவுக்கு வந்து விட்டால், அவர்களால் அதனை ஒரு மணி நேரம் கூடத் தாமதப்படுத்தவோ, அல்லது முற்படுத்தவோ முடியாது.
قُلْ إِنِّي لَا أَمْلِكُ لَكُمْ ضَرًّا وَلَا رَشَدًا
72:21 கூறுவீராக, "உங்களுக்குத் தீங்கிழைக்கவோ, அன்றி உங்களை வழி நடத்தவோ எந்தச் சக்தியையும் நான் பெற்றிருக்கவில்லை."
இவ்விதமாக, நபி உங்களை சுவனத்தில் போடவும் மாட்டார், அன்றி உங்களை நரகிலிருந்து வெளியேற்றவும் மாட்டார். அன்றி கணக்கு கேட்பதற்காக உங்களை தனக்கு முன்பாக அழைக்கவும் மாட்டார், அன்றி அவரால் உங்களுக்கு நன்மை செய்யவோ அன்றி உங்களுக்கு தீமை செய்யவோ இயலாது. அவருடைய ஒரே இறைப்பணி குர்ஆனை & வேறெதுவும் இல்லாது குர்ஆனை மட்டுமே ஒப்படைப்பதாக இருந்தது. குர்ஆனை மட்டுமே பின்பற்றுவதும், மேலும் அவர் மீது இட்டுக் கட்டப்பட்டுள்ள கற்பனைகளை நிராகரிப்பதுமே, அவரை நேசிப்பதும் மேலும் கண்ணியப்படுத்துவதும் ஆகும்.
ஒவ்வொரு தூதரின் பணி
அல்லாஹ்வைத் தவிர வேறு எவரையும் வழிபட வேண்டாம் என்பதே
அல்லாஹ்வைத் தவிர வேறு எவரையும் வழிபட வேண்டாம் என்பதே தாங்கள் இணை தெய்வ வழிபாடு செய்யப்பட வேண்டும் என்று இயேசுவோ அன்றி முஹம்மதோ விரும்புவதில்லை. அல்லாஹ்வை மட்டும் வழிபடுவதை உபதேசிப்பதே அவர்களுடைய ஒரே பணியாக இருந்தது.
وَمَا أَرْسَلْنَا مِنْ قَبْلِكَ مِنْ رَسُولٍ إِلَّا نُوحِي إِلَيْهِ أَنَّهُ لَا إِلَهَ إِلَّا أَنَا فَاعْبُدُون
وَقَالُوا اتَّخَذَ الرَّحْمَنُ وَلَدًا سُبْحَنَهُ بَلْ عِبَادٌ مُكْرَمُونَ
لَا يَسْبِقُونَهُ بِالْقَوْلِ وَهُمْ بِأَمْرِهِ يَعْمَلُونَ
يَعْلَمُ مَا بَيْنَ أَيْدِيهِمْ وَمَا خَلْفَهُمْ وَلَا يَشْفَعُونَ إِلَّا لِمَنْ ارْتَضَى وَهُمْ مِنْ خَشْيَتِهِ مُشْفِقُونَ
وَمَنْ يَقُلْ مِنْهُمْ إِنِّي إِلَهٌ مِنْ دُونِهِ فَذَلِكَ نَجْزِيهِ جَهَنَّمَ كَذَلِكَ نَجْزِي الظَّلِمِينَ
21:25 இவ்வாறு உள்ளுணர்வளிக்கப்பட்டே அன்றி உமக்கு முன்னர் எந்தத் தூதரையும் நாம் அனுப்பியதில்லை: "என்னைத் தவிர தெய்வம் இல்லை; நீங்கள் என்னை மட்டுமே வழிபடவேண்டும்."
21:26 இருப்பினும், அவர்கள் கூறினர், "மிக்க அருளாளர் ஒரு மகனைப் பெற்றெடுத்திருக்கின்றார்!" துதிகள் அவருக்குரியவை. அனைத்து (தூதர்களும் அவருடைய) கண்ணியப்படுத்தபட்ட ஊழியர்களே ஆவர்.
21:27 அவர்கள் ஒருபோதும் சொந்தமாகப் பேச மாட்டார்கள், மேலும் அவருடைய கட்டளைகளைக் கண்டிப்புடன் பின்பற்றுவார்கள்.
21:28 அவர்களுடைய எதிர்காலத்தையும் அவர்களுடைய கடந்த காலத்தையும் அவர் அறிந்திருக்கின்றார். முன்னரே அவரால் ஏற்றுக்கொள்ளப்பட்டு விட்டவர்களுக்கே அன்றி, அவர்கள் பரிந்துரை செய்ய மாட்டார்கள், மேலும் அவர்கள் தங்களைப் பற்றியே கவலையுற்றவர்களாக இருக்கின்றனர்.
21:29 அவருடன் ஒரு தெய்வமாக இருப்பதாக அவர்களில் எவரேனும் கூறினால், நாம் நரகத்தைக் கொண்டு அவருக்குக் கூலி கொடுப்போம்; இவ்விதமாகவே தீயவர்களுக்கு நாம் கூலி கொடுப்போம்.
நபியுடைய ஒரே பணி : குர்ஆனை ஒப்படைப்பதே
குர்ஆனை ஒப்படைப்பது தவிர வேறு எந்தப் பணியும் முஹம்மதிற்கு இருக்கவில்லை என்பதை அழுத்தமாகக் கூறுவதற்காக குர்ஆன் “இரண்டு எதிர்மறை”களை மீண்டும் மீண்டும் பயன்படுத்துகின்றது.
إِنْ عَلَيْكَ إِلَّا الْبَلَغُ
42:48 உம்முடைய ஒரே இறைப்பணி தூதுச்செய்தியை (குர்ஆனை) ஒப்படைப்பதேயாகும்.
فَانَّما عَليْكَ البَلغُ وَعَليْنَا الحِسَابُ
13:40 உமது ஒரே பணி (தூதுச் செய்தியை) (குர்ஆனை) ஒப்படைப்பது மட்டுமே.
مَا عَلَى الرَّسُولِ إِلَّا الْبَلَاغُ وَاللَّهُ يَعْلَمُ مَا تُبْدُونَ وَمَا تَكْتُمُونَ
قُلْ لَا يَسْتَوِي الْخَبِيثُ وَالطَّيِّبُ وَلَوْ أَعْجَبَكَ كَثْرَةُ الْخَبِيثِ فَاتَّقُوا اللَّهَ يَا أُولِي الْأَلْبَابِ لَعَلَّكُمْ تُفْلِحُونَ
5:99 தூதருடைய ஒரே கடமையாவது தூதுச் செய்தியைச் சேர்ப்பிப்பதேயாகும், மேலும் நீங்கள் அறிவிக்கின்ற ஒவ்வொன்றையும் நீங்கள் மறைக்கின்ற ஒவ்வொன்றையும் கடவுள் அறிந்திருக்கின்றார்.
5:100 பிரகடனப்படுத்துவீராக: "கெட்டவற்றின் மிகை உம்மைக் கவர்ந்த போதிலும், கெட்டவையும் நல்லவையும் சமமாக மாட்டாது. (நீங்கள் சிறுபான்மையினரில் இருந்த போதிலும்) அறிவுத் திறனுடையவர்களே, நீங்கள் வெற்றியடையும் பொருட்டு, நீங்கள் கடவுள்-யிடம் பக்தி கொள்ள வேண்டும்."
துர்பாக்கியமாக, மார்க்க வழிகாட்டுதலின் ஒரே ஆதாரம் குர்ஆன் தான் என்பதை ஏற்றுக் கொள்ள மறுப்பவர்கள் தான் நம்பிக்கை கொண்டவர்களை விட மிகவும் அதிகமான எண்ணிக்கையில் இருக்கின்றனர். (16:35,82; 24:54; 29:18; 36:17; & 64:12 ஐயும் பார்க்கவும்).
முஹம்மது குர்ஆனை விளக்கவோ பொருள் கூறவோ
அல்லது எதிர்பார்க்கவோ கூடாது; அப்படியே
ஒப்படைப்பதும் & பின்பற்றுவதுமே,
குர்ஆனை விளக்குவதற்கு ஹதீஸ் & சுன்னத் தேவையாக இருக்கின்றது என்ற கோரிக்கையை ஹதீஸ் & சுன்னத் ஆதரிக்கின்றது. ஆயினும், குர்ஆனின் ஆசிரியர் அல்லாஹ் என்றும் நம்பிக்கையாளர்களின் தாய்மொழிக்கு அப்பாற்பட்டு அவர்களுடைய இதயங்களில் குர்ஆனை அல்லாஹ் பதிய வைப்பார் என்றும், மேலும் முஹம்மது குர்ஆனை விளக்க மாட்டார் என்றும், குர்ஆன் போதிக்கின்றது. ஆவணங்கள் கீழே காட்டப்பட்டுள்ளன.
الرَّحْمَنُ
عَلَّمَ الْقُرْءانَ
ءأَعْجَمِيٌّ وَعَرَبِيٌّ قُلْ هُوَ لِلَّذِينَ ءامَنُوا هُدًى وَشِفَاءٌ وَالَّذِينَ لَا يُؤْمِنُونَ فِي ءاذَانِهِمْ وَقْرٌ وَهُوَ عَلَيْهِمْ عَمًى أُوْلَئِكَ يُنَادَوْنَ مِنْ مَكَانٍ بَعِيدٍ
41:44 அரபி மொழி அல்லாத குர்ஆனாக நாம் இதனை ஆக்கியிருப்போமாயின், அவர்கள் கூறியிருப்பார்கள், "ஏன் இது அந்த மொழியில் இறங்கி வந்தது?" அது அரபி மொழியோ அல்லது அரபி மொழி அல்லாததோ, கூறுவீராக, "நம்பிக்கை கொண்டவர்களுக்கு, இது ஒரு வழிகாட்டலும் நிவாரணமும் ஆகும். நம்ப மறுப்பவர்களைப் பொறுத்தவரை, அவர்கள் மிகத் தொலைவிலிருந்து உரையாற்றப்படுவதைப் போன்று, இதன்பால் அவர்கள் செவிடர்களாகவும் குருடர்களாகவும் இருப்பார்கள்."
لَا تُحَرِّكْ بِهِ لِسَانَكَ لِتَعْجَلَ بِهِ
ِنَّ عَلَيْنَا جَمْعَهُ وَقُرْءانَهُ
فَإِذَا قَرَأْنَهُ فَاتَّبِعْ قُرْءانَهُ
ثُمَّ إِنَّ عَلَيْنَا بَيَانَهُ
75:16 அதனை விரைவுபடுத்துவதற்காக உமது நாவை அசைக்காதீர்.
75:17 குர்ஆனாக அதனை ஒன்று சேர்க்கப்போவது நாம் தாம்.
75:18 அதனை நாம் ஓதிக்காட்டியவுடன், அந்தக் குர் ஆனை நீர் பின்பற்ற வேண்டும்.
75:19 பின்னர் அதனை நாமே விளக்குவோம்.
ஹதீஸ் & சுன்னத்தை பின்பற்றுபவர்கள்
தங்களுடைய சொந்த போதனைகளையே
பின்பற்றுவதில்லை
ஹதீஸ் புத்தகங்களில் மிகவும் அதிகாரப்பூர்வமான முஸ்லிம் & இப்னு ஹம்பல் எனப்படுபவை, குர்ஆனைத்தவிர தன்னிடமிருந்து வேறு எதனையும் எவர் ஒருவரும் எடுத்துக் கொள்ள வேண்டாம் என்று நபி கட்டளையிட்டதாக தெரிவிக்கின்றது.
கீழே காட்டப்பட்டுள்ளது அந்த ஹதீஸின் அரபி மூலமாகும்.
“அபிசயித் அல் - குத்ரி - அவருடன் அல்லாஹ் பொருந்தி கொள்வாராக - அறிவிக்கின்றார், அல்லாஹ்வின் தூதர் - அல்லாஹ் அவரை மேன்மைப்படுத்துவாராக & அவருக்கு அமைதியை வழங்குவாராக - கூறினார், ‘என்னிடமிருந்து குர்ஆனைத்தவிர வேறு எதையும் எழுதாதீர்கள், எவரேனும் குர்ஆன் அல்லாத வேறு எதையேனும் எழுதி இருந்தால் அதை அழித்துவிட வேண்டும்”!!!
இவ்விதமாக, அவர்களுடைய சொந்த போதனைகளுக்கிணங்க,
அவர்களே நபிக்கு கீழ்படிவதில்லை
நம்பமுடியாத உண்மை
தங்களுடைய சொந்த போதனைகளை அவர்களே
பின்பற்றுவதில்லை
ஹதீஸின் மிகவும் “அதிகாரப்பூர்வமான” ஆதாரங்களின் படி நபி தன்னிடமிருந்து குர்ஆனை மட்டுமே எழுதுவது குறித்த அவருடைய மனதை ஒருபோதும் மாற்றிக் கொள்ளவில்லை.
(வெளிப்பாடுகளை (வஹி) எழுதுபவரும், நபிக்கு மிகவும் நெருக்கமானவருமான) ஜயித் இப்னு தாபித், (நபி மரணமடைந்து 30க்கும் அதிகமான ஆண்டுகள் கழித்து) கலீஃபா மூஆவியாவை சந்தித்து அவரிடம் நபியைப் பற்றிய ஒரு நிகழ்ச்சியைக் கூறினார். மூ’ஆவியா அந்த நிகழ்ச்சியை விரும்பியவராக அதை எழுதிக் கொள்ளுமாறு ஒருவரிடம் கட்டளையிட்டார். ஆனால் ஜயித், “அல்லாஹ்வின் தூதர் அவருடைய ஹதீஸ் எதையும் ஒரு போதும் எழுதக் கூடாது” என்று எங்களுக்கு கட்டளையிட்டுள்ளார் என்று கூறினார். (இப்னு ஹன்பல் மூலம் அறிவிக்கப்பட்டது)
தாங்களாக இட்டுக்கட்டிக் கொண்ட இணைக்கும்
அவர்கள் கீழ்படிவதில்லை !!ர்ஆன்: தாங்கள் விரும்புகின்ற எந்த ஒன்றையும்
தங்களால் காணுகின்றதொரு “புத்தகத்தை”
அவர்கள் வைத்திருக்கின்றனரா?
முந்தைய பக்கத்தில் காட்டப்பட்டுள்ள ஹதீஸைக் கொண்டு ஹதீஸ் & சுன்னத்தைப் பின்பற்றுபவர்களை நீங்கள் எதிர்கொள்ளும் போது, இத்தகைய ஹதீஸ் இருப்பதை அவர்கள் ஒப்புக் கொள்வார்கள். தங்களுடைய சொந்த போதனைகளை பின்பற்ற தாங்களே தவறிவிட்டதை, தன்னுடைய ஹதீஸ்களை எழுதிக் கொள்ளும்படி நபி கட்டளையிட்டதாக சொல்லும் “நம்பகமான” ஹதீஸ்களும் சம அளவில் உள்ளன என்ற செய்தியின் மூலம் விளக்குவார்கள்!!
இத்தகைய மனிதர்களை “குற்றவாளிகள்” என்று குர்ஆன் விவரிக்கின்றது, மேலும் “தாங்கள் விரும்புகின்ற எந்த ஒன்றையும், தங்களால் காண முடிகின்றதொரு ‘புத்தகத்தை’ அவர்கள் வைத்திருக்கின்றனரா???” என்றும் கேட்கின்றது.
أَفَنَجْعَلُ الْمُسْلِمِينَ كَالْمُجْرِمِينَ
مَا لَكُمْ كَيْفَ تَحْكُمُونَ
أَمْ لَكُمْ كِتَبٌ فِيهِ تَدْرُسُونَ
إِنَّ لَكُمْ فِيهِ لَمَا تَخَيَّرُونَ
68:35 சரணடைந்தவர்களைக் குற்றவாளிகளைப் போல் நாம் நடத்துவோமா?
68:36 உங்களுடைய பகுத்தறிவில் என்ன கோளாறு?68:37 நீங்கள் ஆதரிப்பதற்கு வேறொரு புத்தகம் இருக்கின்றதா?
68:38 அதனில், நீங்கள் விரும்புகின்ற எந்த ஒன்றையும் நீங்கள் காண்கின்றீர்களா?
“நீங்கள் விரும்புகின்ற எந்த ஒன்றையும் உங்களால் காண முடிகின்றதொரு புத்தகமாக” என்கின்ற இந்த குர்ஆனிய விளக்கம் ஹதீஸ் மற்றும் சுன்னத் ஆகிய இரண்டிற்கும் பொருந்தும்.
---------------------------------------------------------------------------------------------------------------------------
ஹதீஸ் மற்றும் சுன்னத் ஆகியவற்றின் கற்பனையான மற்றும் முரண்பாடான இயல்பானது எல்லோராலும் அறியப்பட்டதாக இருக்கின்றது.
அவர்களுக்கு மிகவும் பிடித்தமான கேள்வி
“(அல்லாஹ் கூறுகின்றபடி) குர்ஆன் முழுமையானது மற்றும் முற்றிலும் விவரிக்கப்பட்டது என்றால், தொடர்புத் தொழுகைகளின் விவரங்களை நாம் எங்கே காண முடியும்?”
---------------------------------------------------------------------------------------------------------------------------
பிரபலமான இந்த கேள்வி, குர்ஆனைக் குறித்த அவர்களுடைய ஒட்டு மொத்த அறியாமையையும் மேலும் குர்ஆன் “முழுமையானதாகவும்”, “முற்றிலும் விவரிக்கப்பட்டதாகவும்” இருக்கின்றது என்று மீண்டும், மீண்டும் வலியுறுத்திக் கூறுகின்ற தன்னுடைய கூற்றில் கடவுள் தவறானவராக இருக்கின்றார் என்று நிரூபிக்க, முற்றிலும் உணராத நிலையில் அவர்கள் செய்கின்ற முயற்சியையும் வெளிப்படுத்துகின்றது.
---------------------------------------------------------------------------------------------------------------------------
ஏனெனில் இன்றைய தினம் நடைமுறையில் இருக்கும் இஸ்லாத்தின் ஸ்தாபகர் இப்ராஹிம் என்று குர்ஆன் மிக உறுதியாக போதிக்கின்றது. அவ்வாறெனில், முஸ்லிம்களாகிய நம்முடைய அன்றாட வாழ்விற்கு தன்னுடைய பங்களிப்பாக இப்ராஹிம் செய்தது என்ன?
---------------------------------------------------------------------------------------------------------------------------
இஸ்லாத்தின் மார்க்க வழிபாட்டு முறைகள் அனைத்தும் (ஸலாத், ஜகாத், நோன்பு & ஹஜ்) இப்ராஹிமிடமிருந்து தலைமுறைக்கு பின் தலைமுறையாக நம்மிடம் வந்தன என்று குர் ஆன் போதிக்கின்றது.
---------------------------------------------------------------------------------------------------------------------------
இவ்விதமாக, இன்றைய தினம் நடைமுறையில் இருக்கும் இஸ்லாம். அதன் இறுதி வடிவில் இரண்டு விஷயங்களை அடைப்படையாக கொண்டுள்ளது.
(1) முஹம்மது மூலமாக கொடுக்கப்பட்ட “குர்ஆன்”, மேலும்
(2) இப்ராஹிம் மூலமாக கொடுக்கப்பட்ட “மார்க்க வழிபாட்டு முறைகள்”
---------------------------------------------------------------------------------------------------------------------------
இஸ்லாத்தின் மார்க்க வழிபாட்டு முறைகள் அனைத்தும் முஹம்மதிற்கு முந்தியே இருந்தன.
---------------------------------------------------------------------------------------------------------------------------
முஹம்மதுடைய ஒரே பணி குர்ஆனை ஒப்படைப்பதாகவே இருந்தது
இப்ராஹிம் : இஸ்லாத்தின் ஸ்தாபகர்
இஸ்லாத்தின் மார்க்க வழிபாட்டு முறைகளை முதன் முதலில் பெற்றவரும், மேலும் “முஸ்லிம்” என்ற வார்த்தையை முதன் முதலில் பயன்படுத்தியவரும் இப்ராஹிம் ஆவார் (2:131ஐப் பார்க்கவும்).
وَجَهِدُوا فِي اللَّهِ حَقَّ جِهَادِهِ هُوَ اجْتَبَكُمْ وَمَا جَعَلَ عَلَيْكُمْ فِي الدِّينِ مِنْ حَرَجٍ مِلَّةَ أَبِيكُمْ إِبْرَهِيمَ هُوَ سَمَّكُمْ الْمُسْلِمينَ مِنْ قَبْلُ وَفِي هَذَا لِيَكُونَ الرَّسُولُ شَهِيدًا عَلَيْكُمْ وَتَكُونُوا شُهَدَاءَ عَلَى النَّاسِ فَأَقِيمُوا الصَّلَوةَ وَءاتُوا الزَّكَوةَ وَاعْتَصِمُوا بِاللَّهِ هُوَ مَوْلَكُمْ فَنِعْمَ الْمَوْلَى وَنِعْمَ النَّصِيرُ
22:78 நீங்கள் கடவுள்-ன் நிமித்தம் பாடுபட வேண்டியவாறு அவர் நிமித்தமாக நீங்கள் பாடுபட வேண்டும். அவர் உங்களைத் தேர்ந்தெடுத்துக் கொண்டார், மேலும் உங்கள் தந்தை ஆப்ரஹாமின் மார்க்கமாகிய-உங்கள் மார்க்கத்தைப் பயில்வதில் உங்கள் மீது எந்தச் சிரமத்தையும் அவர் வைக்கவில்லை. அவர்தான் முதலில் உங்களுக்கு "சரணடைந்தோர்" எனப் பெயரிட்டார். இப்படியாக, தூதர் உங்களுக்கிடையில் ஒரு சாட்சியாகத் திகழ வேண்டும், மேலும் நீங்கள் மக்களுக்கிடையில் சாட்சிகளாகத் திகழவேண்டும், எனவே நீங்கள் (ஸலாத்) தொடர்புத் தொழுகைகளைக் கடைப்பிடிக்கவும், மேலும் (ஜகாத்) கடமையான தர்மத்தைக் கொடுத்து வரவும், மேலும் கடவுள் -ஐ பற்றிக் கொள்ளவும் வேண்டும்; அவர்தான் உங்கள் இரட்சகர், மிகச்சிறந்த இரட்சகர், மேலும் மிகச் சிறந்த ஆதரவாளர்.
இவ்விதமான, இஸ்லாத்தின் ஸ்தாபகர் இப்ராஹிம் என்றால், நம்முடைய இஸ்லாமிய வாழ்க்கைக்கு எதையேனும் அவர் கொடுத்திருக்கின்றாரா?
---------------------------------------------------------------------------------------------------------------------------
அதற்கான பதில்: “ஆம்; மார்க்க வழிபாட்டு முறைகளை (ஸலாத்,ஜகாத், நோன்பு, & ஹஜ்) அவர் கொடுத்திருக்கின்றார்.
இஸ்லாம் இப்ராஹிமின் மார்க்கமாக இருக்கின்றது.
முஹம்மதுடைய பணி, ஒரே பணி, குர்ஆனை ஒப்படைப்பதாக இருந்த அதே சமயம், மார்க்க வழிபாட்டு முறைகள் அனைத்தும் இப்ராஹிம் மூலமாகவே வந்தது.
وَقَالُوا كُونُوا هُودًا اوْ نَصَرَى تَهْتَدُوا قُلْ بَلْ مِلَّةَ اِبْرَهِمَ حَنِيفًا وَمَا كَانَ مِنْ الْمُشْرِكِينَ
2:135 அவர்கள் கூறினர், "வழிநடத்தப்பட்டவர்களாக இருப்பதற்கு, நீங்கள் யூதராகவோ அல்லது கிறிஸ்துவராக இருத்தல் வேண்டும்." கூறுவீராக, "நாங்கள் ஆப்ரஹாமின் மார்க்கத்தைப் பின்பற்றுகின்றோம் - ஏகத்துவம் -அவர் ஒருபோதும் போலித்தெய்வ வழிபாடு செய்யும் ஒருவராக இருந்ததில்லை."
مَا كَانَ اِبْرَهِيمُ يَهُودِيًّا وَلَا نَصْرَانِيًّا وَلَكِنْ كَانَ حَنِيفًا مُسْلِمًا وَمَا كَانَ مِنْ الْمُشْرِكِينَ
اِنَّ اوْلَى النَّاسِ بِابْرَهِيمَ لَلَّذِينَ اتَّبَعُوهُ وَهَذَا النَّبِيُّ وَالَّذِينَ ءامَنُوا وَاللَّهُ وَلِيُّ الْمُؤْمِنِينَ
3:67 ஆப்ரஹாம் யூதர்களைச் சார்ந்தவராகவோ, அன்றிக் கிறிஸ்துவராகவோ இருக்கவில்லை; அவர் ஏகத்துவ வாதியான ஒரு சரணடைந்தவராகவே இருந்தார். அவர் ஒரு போதும் போலித் தெய்வ வழிபாடு செய்பவராக இருந்ததில்லை.
3:68 ஆப்ரஹாமிடத்தில் மிகவும் மதிப்பிற்குரிய மக்கள் எவர்களென்றால், அவரைப் பின்பற்றியவர்கள், மேலும் இந்த நபி, மேலும் நம்பிக்கை கொண்டவர்களுமே ஆவர். கடவுள்தான் நம்பிக்கையாளர்களின் இரட்சகரும் அதிபதியுமாக இருக்கின்றார்.
முஹம்மது இப்ராஹிமை பின்பற்றுகின்ற
ஒருவராக இருந்தார்
ثُمَّ أَوْحَيْنَا إِلَيْكَ أَنْ اتَّبِعْ مِلَّةَ إِبْرَهِيمَ حَنِيفًا وَمَا كَانَ مِنْ الْمُشْرِكِينَ
16:123 பின்னர் நாம் உமக்கு (முஹம்மத்) ஏகத்துவவாதி யான ஆப்ரஹாமின் மார்க்கத்தைப்* பின்பற்றும்மாறு உள்ளுணர்வூட்டினோம்; அவர் ஒருபோதும் போலித் தெய்வங்களை வழிபட்டவராக இருந்ததில்லை.
நியாயப்படி, இப்ராஹிமைப் பின்பற்றுகின்ற ஒருவராக முஹம்மது இருந்தார் என்றால், மேலும் முஹம்மதைப் பின்பற்றுகின்றவர்களாக நாம் இருக்கின்றோம் என்றால், அப்போது இப்ராஹிமைப் பின்பற்று கின்றவர்களாகத்தான் நாம் இருக்கின்றோம். இப்ராஹிமிடமிருந்து நாம் எதனைக் கற்றுக் கொண்டோம்???
நாம், இஸ்லாத்தின் மார்க்க வழிபாட்டு முறைகள் அனைத்தையும் இப்ராஹிமிடமிருந்தே கற்றுக் கொண்டோம் என்று குர்ஆன் போதிக்கின்றது. இதில் ஸலாத், ஜகாத், நோன்பு மற்றும் ஹஜ் ஆகியவை அடங்கும்.
ஆகையால், இஸ்லாம் இரண்டு விஷயங்களை அடிப்படையாக கொண்டுள்ளது.
1. முஹம்மது மூலமாக : குர்ஆன்
2. இப்ராஹிம் வழியாக : மார்க்க வழிபாட்டு முறைகள்
முஹம்மதுடைய எதிரிகளாலும்
ஸலாத் கடைபிடிக்கப்பட்டது
முஹம்மதுடைய காலத்திற்கு முன்பும், மேலும் அவர் வாழ்ந்த காலத்திலும், முழு அரேபிய சமுதாயமும் இப்ராஹிமின் மார்க்கத்தை பின்பற்றியது. இவ்விதமாக, அபுலஹப், அபுஜஹ்ல் மற்றும் குரைஷி இனத்தைச் சேர்ந்த இணைத் தெய்வ வழிபாடு செய்தவர்களும் ஒரே ஒரு விதிவிலக்காக இப்ராஹிமின் பாத்திஹாவிற்காக குர்ஆனிய பாத்திஹாவை மாற்றியது தவிர மிகச் சரியாக, நாம் இன்று செய்வது போலவே ஐந்து வேளை தொடர்புத் தொழுகைகளையும் கடைப்பிடிப்பவர்களாக இருந்தனர்.
وَمَا كَانَ اللَّهُ لِيُعَذِّبَهُمْ وَأَنْتَ فِيهِمْ وَمَا كَانَ اللَّهُ مُعَذِّبَهُمْ وَهُمْ يَسْتَغْفِرُونَ
وَمَا لَهُمْ أَلَّا يُعَذِّبَهُمْ اللَّهُ وَهُمْ يَصُدُّونَ عَنْ الْمَسْجِدِ الْحَرَامِ وَمَا كَانُوا أَوْلِيَاءَهُ إِنْ أَوْلِيَاؤُهُ إِلَّا الْمُتَّقُونَ وَلَكِنَّ أَكْثَرَهُمْ لَا يَعْلَمُونَ
وَمَا كَانَ صَلَاتُهُمْ عِنْدَ الْبَيْتِ إِلَّا مُكَاءً وَتَصْدِيَةً فَذُوقُوا الْعَذَابَ بِمَا كُنتُمْ تَكْفُرُونَ
8:33 ஆயினும், நீர் அவர்கள் மத்தியில் இருக்கின்ற சமயம் கடவுள் அவர்களைத் தண்டிப்பதாக இல்லை; அவர்கள் பாவமன்னிப்புத் தேடிக் கொண்டிருக்கையிலும் கடவுள் அவர்களைத் தண்டிப்பதாக இல்லை.
8:34 அவர்கள் புனிதப்பள்ளியின் காப்பாளர்களாக இல்லாத போதிலும், அதிலிருந்து மற்றவர்களை விரட்டுவதன் மூலமாக அவர்கள் கடவுள்-ன் தண்டனைக்குத் தகுதியாகி விட்டனர் அல்லவா? நன்னெறியாளர்களே அதனுடைய உண்மையான காப்பாளர்கள் ஆவர், ஆனால் அவர்களில் அதிகமானோர் அறிவதில்லை.
8:35 நீங்கள் வேதத்தைப் படித்துக் கொண்டிருந்த போதிலும், உங்களையே மறந்து விட்ட நிலையில், மக்களை நன்னெறியாளர்களாகும்படி நீங்கள் தூண்டுகின்றீர்களா? நீங்கள் புரிந்து கொள்ளவில்லையா?
முஹம்மதிற்கு முன்பே புனித மாதங்கள் கடைபிடிக்கப்பட்டன
முஹம்மதுடைய காலத்திற்கு முன்பிருந்தே இஸ்லாத்தில் உள்ள நான்கு புனித மாதங்களும் கடைபிடிக்கப்பட்டு வந்தன. இது, இஸ்லாத்தின் மார்க்க வழிபாட்டு முறைகள் அனைத்தும் முஹம்மது நபியால் ஆரம்பிக்கப்பட்டதோ அல்லது கற்பிக்கப்பட்டதோ இல்லை என்பதை மேலும் நிரூபிக்கின்றது. அவருடைய ஒரே பணியாக குர்ஆனை ஒப்படைப்பது மட்டுமே இருந்தது.
إِنَّ عدَّةَ الشُّهُورِ عِنْدَ اللَّهِ اثْنَا عَشَرَ شَهْرًا فِي كِتَبِ اللَّهِ يَوْمَ خَلَقَ السَّمَوَتِ وَالْأَرْضَ مِنْهَا أَرْبَعَةٌ حُرُمٌ ذَلِكَ الدِّينُ الْقَيِّمُ فَلَا تَظْلِمُوا فِيهِنَّ أَنْفُسَكُمْ وَقَتِلُوا الْمُشْرِكِينَ كَافَّةً كَمَا يُقَتِلُونَكُمْ كَافَّةً وَاعْلَمُوا أَنَّ اللَّهَ مَعَ الْمُتَّقِينَ
إِنَّمَا النَّسِيءُ زِيَادَةٌ فِي الْكُفْرِ يُضَلُّ بِهِ الَّذِينَ كَفَرُوا يُحِلُّونَهُ عَامًا وَيُحَرِّمُونَهُ عَامًا لِيُوَاطِءوا عِدَّةَ مَا حَرَّمَ اللَّهُ فَيُحِلُّوا مَا حَرَّمَ اللَّهُ زُيِّنَ لَهُمْ سُوءُ أَعْمَلِهِمْ وَاللَّهُ لَا يَهْدِي الْقَوْمَ الْكَفِرِينَ
9:36 கடவுள்-ஐப் பொறுத்த அளவில், மாதங்களின் எண்ணிக்கையானது, பன்னிரண்டு ஆகும். வானங்களையும் பூமியையும் அவர் படைத்த நாள் முதல், இதுவே கடவுள்-ன் விதிமுறையாக இருந்து வந்துள்ளது. அவற்றில் நான்கு புனிதமானவையாகும். இதுவே பூரணமான மார்க்கமாகும்; புனித மாதங்களின் போது (சண்டையிடுவதன் மூலம்) உங்களுடைய ஆத்மாக்களுக்கு நீங்கள் அநீதமிழைத்துக் கொள்ள வேண்டாம். ஆயினும், உங்களுக்கெதிராக அவர்கள் முழுமையான போரைப் பிரகடனப்படுத்தினால், (புனித மாதங்களின் போது கூட), போலித் தெய்வ வழிபாடு செய்பவர்களுக்கு எதிராக முழுமையான போரை நீங்கள் பிரகடனப்படுத்தலாம், மேலும் கடவுள் நன்னெறியாளர்களின் பக்கம் இருக்கின்றார் என் பதை அறிந்து கொள்ளுங்கள்.
9:37 புனித மாதங்களை மாற்றியமைத்துக் கொள்ளுதல் மிதமிஞ்சிய நம்பமறுப்பின் ஓர் அடையாளமேயாகும்; நம்பமறுத்தவர்களின் வழிதவறுதலை அது அதிகரிக்கின்றது. கடவுள்-ஆல் புனிதப் படுத்தப்பட்டுள்ள மாதங்களின் எண்ணிக்கையைத் தக்கவைத்துக் கொள்கின்ற அதே சமயம், புனித மாதங்களையும் வாடிக்கையான மாதங்களையும் அவர்கள் மாற்றியமைத்துக் கொள்கின்றனர். இவ்விதமாக அவர்கள் கடவுள் புனிதப்படுத்தியவற்றை அவமரியாதை செய்கின்றனர். அவர்களுடைய தீயகாரியங்கள் அவர்களுடைய கண்களுக்கு அலங்காரமாக்கப்பட்டுள்ளன. நம்பமறுக்கின்ற சமூகத்தாரைக் கடவுள் வழிநடத்துவதில்லை.
இன்றைய இணைதெய்வ வழிபாடு செய்பவர்களும், குரைஷிய இணை தெய்வ வழிபாடு செய்பவர்களும் எதிரெதிரில் இன்றைய தினம், கோடிக்கணக்கான “முஸ்லிம்களால்” செயல்படுத்தப்படும் இணைத்தெய்வ வழிபாட்டின் ஒரு வகையானது, முஹம்மதிற்கு முந்தைய குரைஷிகளால் செயல்படுத்தப்பட்ட இணைத் தெய்வ வழிபாட்டைப் போன்றதாகவே இருக்கின்றது.
எகிப்து, ஈரான், பாகிஸ்தான், இந்தியா மற்றும் பல நாடுகளில் உள்ள கோடிக்கணக்கான “முஸ்லிம்கள்” தொழுவதற்காக பள்ளிவாசலுக்கு செல்கின்றனர். அவர்களுடைய தொடர்பு தொழுகைகள் நிச்சயமாக கடவுளுக்கு உரியதாக இருக்கின்றது. தங்களுடைய தொடர்பு தொழுகையை முடித்த பிறகு, அவர்கள் புனிதர்களின் சமாதிகளுக்கு சென்று, ஆரோக்கியத்திற்காகவும், செல்வத்திற்காகவும், மற்றும் குழந்தைகளுக் காகவும் அவர்களிடம் கேட்கின்றனர்.
மிகச்சரியாக, நாம் இப்பொழுது செய்வது போலவே, ஐந்து வேளை தொடர்புத் தொழுகைகளையும் குரைஷிய இணை தெய்வ வழிபாடு செய்தவர்களும் கடைபிடித்தனர். ஆனால் அவர்களும் ஆரோக்கியத்தை, செல்வத்தை மற்றும் குழந்தைகளை கேட்பதற்காக தங்களுடைய இணை தெய்வங்களான அல்லாத், அல்-உஸ்ஸாஹ், மனாத் போன்றவைகளிடம் செல்பவர்களாக இருந்தனர்.
இவ்விதமாக, இன்றைய தினம் கோடிக்கணக்கான முஸ்லிம்களால் செயல்படுத்தப்படும் வெளிப்படையான இணை தெய்வ வழிபாடானது முஹம்மதிற்கு முன்பும், மேலும் அவருடைய காலத்திலும் குரைஷியர்கள் செய்த இணை தெய்வ வழிபாட்டிற்கு எல்லா வகையிலும் ஒத்ததாகவே இருக்கின்றது; இணை தெய்வங்கள் மட்டுமே மாறுபடுகின்றன.
யூத மற்றும் கிறிஸ்தவ சிறுபான்மையினரைத் தவிர, முஹம்மதுடைய தூதுப் பணிக்கு முந்தைய அரேபிய சமுதாயம், இப்ராஹிமின் மார்க்கத்தையே பின்பற்றியது. அவர்கள் இஸ்லாத்தின் மார்க்க வழிபாட்டு முறைகள் அனைத்தையும் கடைபிடித்தனர். அவர்களுடைய தொடர்புத் தொழுகைகள் நம்முடைய தொடர்புத் தொழுகைகள் போன்றே இருந்தன, ஆனால் அவர்கள் இணை தெய்வ வழிபாட்டையும் சேர்த்து செயல்படுத்தினர். இன்றைக்கு பெரும்பாலான “முஸ்லிம்கள்” நபியை, அவருடைய விருப்பத்திற்கு எதிராக இணை தெய்வ வழிபாடு செய்வதன் மூலமும், தங்களுடைய மகான்கள் மற்றும் புனிதர்கள் அல்லது இமாம்கள் ஆகியோரை இணை தெய்வ வழிபாடு செய்வதன் மூலமும், மேலும் குர்ஆனுடன் மற்ற ஆதாரங்களை பின்பற்றுவதன் மூலமும் இணை தெய்வ வழிபாட்டை செயல்படுத்துகின்றனர்.
“நீங்கள் ஸலாத்தை கடைபிடிப்பதை தொடர்ந்திட வேண்டும்”
இந்த கட்டளையானது குர்ஆனிய வெளிப்பாடுகள் வெளிப்படத் துவங்கி சில வாரங்களுக்குள் பிறப்பிக்கப்பட்டது.
ஏற்கனவே அறியப்படாத ஒன்றை கடைப்பிடிக்கும்படியான ஒரு கட்டளையை அல்லாஹ் வெளியிட்டிருப்பார் என்பது அறிவிற்கு பொருத்தமாக இருக்கின்றதா???
وَأَقِيمُوا الصَّلَوةَ وَءاتُوا الزَّكَوةَ وَأَقْرِضُوا اللَّهَ قَرْضًا حَسَنًا وَمَا تُقَدِّمُوا لِأَنْفُسِكُمْ مِنْ خَيْرٍ تَجِدُوهُ عِنْدَ اللَّهِ هُوَ خَيْرًا وَأَعْظَمَ أَجْرًا وَاسْتَغْفِرُوا اللَّهَ إِنَّ اللَّهَ غَفُورٌ رَحِيمٌ
73:20 இரவுப் பொழுதினில் மூன்றில் இரண்டு பாகம், அல்லது அதில் பாதி, அல்லது அதில் மூன்றில் ஒரு பாகம் நீர் தியானிக்கின்றீர், மேலும் உம்முடன் நம்பிக்கை கொண்ட சிலரும் அவ்வாறே செய்கின்றனர் என்பதை உம்முடைய இரட்சகர் அறிகின்றார். இரவையும் பகலையும் கடவுள் வடிவமைத்துள்ளார், மேலும் எல்லாக் காலங்களிலும் உங்களால் இதனைச் செய்ய முடியாது என்பதையும் அவர் அறிகின்றார். அவர் உங்களைப் பிழை பொறுத்து விட்டார். அதற்குப்பதிலாக, குர்ஆனிலிருந்து உங்களால் இயன்றவரை நீங்கள் படிக்க வேண்டும். உங்களில் சிலர் நோயுற்றிருக்கக் கூடும், மற்றவர்கள் கடவுள்-ன் வாழ்வாதாரங்களைத் தேடியவாறு பிரயாணத்தில் இருக்கக் கூடும், மேலும் மற்றவர்கள் கடவுள்-ன் நிமித்தம் பாடுபட்டுக் கொண்டிருக்கக் கூடும் என்பதை அவர் அறிகின்றார். அதிலிருந்து உங்களால் இயன்றவரை நீங்கள் படிக்க வேண்டும், மேலும் (ஸலாத்) தொடர்புத் தொழுகைகளைக் கடைப்பிடிக்கவும் (ஜகாத்) கடமை யான தர்மத்தைக் கொடுக்கவும், மேலும் நன்னெறியெனும் ஒரு கடனைக் கடவுள்-க்குக் கடனளிக்கவும் வேண்டும். உங்களுடைய ஆத்மாக்களுக்காக நீங் கள் முற்படுத்தி அனுப்பிவைக்கின்ற நல்லது எதுவாயினும், அதனை மிகச் சிறந்ததாகவும் தாராளமாக வெகுமதியளிக்கப்பட்டதாகவும் கடவுள்-யிடம் நீங்கள் காண்பீர்கள். மேலும் பாவமன்னிப்பிற்காகக் கடவுள்-யிடம் இறைஞ்சுங்கள். கடவுள் மன்னிப்பவர், மிக்க கருணையாளர்.
“ஸலாத்” எனும் வார்த்தை மிகவும் பிரத்யேகமானதாகவும் மேலும் ஒரே ஒரு விஷயத்தை குறிப்பதாகவும் இருக்கின்றது. அதாவது, குனிதலையும், சிரம் பணிதலையும் உள்ளடக்கிய பிரத்யேகமான வழிபாட்டு முறைகள் கடைபிடிக்கப்படுதலைக் குறிப்பிடுகின்றது. குர்ஆன் முழுவதிலும், யுகங்கள் முழுவதிலும் மேலும் எந்த நபி, தூதர் போன்றோரின் வழிபாட்டு முறைகளிலும் இதுவே உண்மையாக இருக்கின்றது.
இஸ்லாத்திலுள்ள மார்க்க வழிபாட்டு முறைகள் அனைத்தும் (ஸலாத் ஜகாத் நோன்பு ஹஜ்)இப்ராஹிம் மூலமாகவே நமக்கு வந்தது
2:128ல் இப்ராஹிமும், இஸ்மாயிலும் “இஸ்லாத்தின் மார்க்க வழிபாட்டு முறைகளை” தங்களுக்கு கற்றுத்தருமாறு அல்லாஹ்வை இறைஞ்சி பிரார்த்திப்பதை நாம் காண்கின்றோம்.
وَاِذْ يَرْفَعُ اِبْرَهِمُ الْقَوَاعِدَ مِنْ الْبَيْتِ وَاِسْمَعِيلُ رَبَّنَا تَقَبَّلْ مِنَّا اِنَّكَ انْتَ السَّمِيعُ الْعَلِيمُ
رَبَّنَا وَاجْعَلْنَا مُسْلِمَيْنِ لَكَ وَمِنْ ذُرِّيَّتِنَا اُمَّةً مُسْلِمَةً لَكَ وَارِنَا مَنَاسِكَنَا وَتُبْ عَلَيْنَا اِنَّكَ انْتَ التَّوَّابُ الرَّحِيمُ
2:127 ஆலயத்தின் அஸ்திவாரங்களை ஆப்ரஹாம் உயர்த்திய போது, இஸ்மாயீலுடன் சேர்ந்து (அவர்கள் பிரார்த்தித்தனர்): "எங்கள் இரட்சகரே, இதனை எங்களிடமிருந்து ஏற்றுக் கொள்வீராக. நீரே செவியேற்பவர், எல்லாம் அறிந்தவர்.
2:128 "எங்கள் இரட்சகரே, உமக்குச் சரணடைந்தவர்களாக எங்களை ஆக்குவீராக, மேலும் எங்களுடைய சந்ததியினரிலிருந்து உமக்குச் சரணடைந்தவர்களாக ஒரு சமூகத்தை இருக்கச் செய்வீராக. எங்களுடைய மார்க்கத்தின் சடங்குகளை எங்களுக்குக் கற்றுத்தருவீராக, மேலும் எங்களை மீட்பீராக. நீரே மீட்பவர், மிக்க கருணையாளர்.
இப்ராஹிம் : பிரத்யேகமான மார்க்க வழிபாட்டு
முறைகளை முதலாவதாக (இறுதியாகவும்) பெற்றவர்
இப்ராஹிமிற்கு முந்தைய நபிமார்களுக்கும், தூதர்களுக்கும் எந்த மார்க்க வழிபாட்டு முறைகளும் வழங்கப்பட்டிருக்கவில்லை. மனித சமுதாயம் மிகவும் பழமையானதாக இருந்த காலம் அது. கடவுள் மட்டும் என்பதில் கொள்கின்ற நம்பிக்கை மட்டுமே மீட்சிக்கு தேவையான அனைத்துமாக இருந்தது. உதாரணத்திற்கு “நூஹ்” என்ற தலைப்பையுடைய சூரா 71ஐப் பார்க்கவும். இவ்விதமாக, குர்ஆனில் காணப்படுகின்ற மார்க்க வழிபாட்டு முறைகள் இப்ராஹிமிற்கு பிந்தியதே தவிர ஒருபோதும் அவருக்கு முந்தியது அல்ல.
وَاقِيمُوا الصَّلَوةَ وَ ءاتُوا الزَّكَوةَ وَارْكَعُوا مَعَ الرَّكِعِينَ
2:43 நீங்கள் (ஸலாத்) தொடர்புத் தொழுகைகளை கடைப் பிடிக்கவும், மேலும் (ஜகாத்) கடமையான தர்மத்தைக் கொடுக்கவும், மேலும் குனிந்து வழிபடுபவர்களுடன் சேர்ந்து குனிந்து வழிபடவும் வேண்டும்.
وَاِذْ جَعَلْنَا الْبَيْتَ مَثَابَةً لِلنَّاسِ وَامْنًا وَاتَّخِذُوا مِنْ مَقَامِ اِبْرَهِمَ مُصَلًّى وَعَهِدْنَا اِلَى اِبْرَهِمَ وَاِسْمَعِيلَ انْ طَهِّرَا بَيْتِي
لِلطَّائِفِينَ وَالْعَكِفِينَ وَالرُّكَّعِ السُّجُودِ
2:125 நாம் மக்களுக்கு அந்த ஆலயத்தை (கஅபா) ஒரு குவிமையமாகவும், பாதுகாப்பானதொரு புகலிடமாகவும் ஆக்கியுள்ளோம். ஆப்ரஹாமின் ஆலயத்தை நீங்கள் ஒரு பிரார்த்தனை மையமாக பயன்படுத்திக் கொள்ளலாம். ஆப்ரஹாம் மற்றும் இஸ்மாயிலுக்கு நாம் பொறுப்பை அளித்தோம்: "தரிசிக்க வருபவர்களுக்கும், அங்கே வசிப்பவர்களுக்கும், அத்துடன் குனிந்து மேலும் சிரம் பணிபவர்களுக்காகவும் என் வீட்டை நீங்கள் தூய்மை செய்திட வேண்டும்."
ஸலாத் தொழுகைகள் முஹம்மதிற்கு முன்னரே கடைபிடிக்கப்பட்டது
ஆயினும் யூதர்களும், கிறிஸ்தவர்களும் ஸலாத் தொழுகைகளை “தொலைத்தனர்”.
يَمَرْيَمُ اقْنُتِي لِرَبِّكِ وَاسْجُدِي وَارْكَعِي مَعَ الرَّكِعِينَ
3:43 "மேரியே, நீர் உம்முடைய இரட்சகருக்குச் சரணடையவும், சிரம் பணியவும் குனிந்து வழிபடுபவர்களுடன் சேர்ந்து குனிந்திடவும் வேண்டும்."
وَجَعَلَنِي مُبَارَكًا أَيْنَ مَا كُنتُ وَأَوْصَنِي بِالصَّلَوَةِ وَالزَّكَوَةِ مَا دُمْتُ حَيًّا
19:31 "நான் செல்லுமிடமெல்லாம் என்னை அவர் ஆசீர்வதித்துள்ளார், மேலும் நான் வாழும் காலமெல்லாம் (ஸலாத்) தொடர்புத் தொழுகைகளையும் (ஜகாத்) கடமையான தர்மத்தையும் நிறைவேற்ற எனக்குக் கட்டளையிட்டுள்ளார்.
فَخَلَفَ مِنْ بَعْدِهِمْ خَلْفٌ أَضَاعُوا الصَّلَوةَ وَاتَّبَعُوا الشَّهَوَتِ
19:59 அவர்களுக்குப் பின்னர், (ஸலாத்) தொடர்புத் தொழுகைகளைத் தொலைத்து விட்ட, மேலும் தங்களுடைய மோகங்களைப் பின்பற்றிய தலைமுறையினரை அவர் மாற்றியமைத்தார். அதன் விளைவுகளை அவர்கள் அனுபவிப்பார்கள்.
யூதர்கள், அதாவது சமேரியர்கள் மற்றும் கிறிஸ்தவர்களுக்கு இடையில் ஸலாத் தொழுகைகளின் மிச்சமீதங்கள் உள்ளன (ரஷ்யன் ஆர்தோடக்ஸ் சர்ச்). சமேரிய யூதர்கள் தால்மூதில் உள்ள மனிதர்களால் இயற்றப்பட்ட கட்டளைகளை பகிரங்கமாக கண்டனம் செய்து விட்டு, மேலும் அல்லாஹ்வின் வார்த்தையை மட்டும், அதாவது தவ்ராத்தை மட்டும் பற்றிக் கொள்வதென தீர்மானித்தது கவனிக்கத் தக்கதாக இருக்கின்றது (“தி மித் ஆஃப் காட் இன்கார்னேட்”
ஸலாத் & ஜகாத் இப்ராஹிம் வழியாகவே நமக்கு வந்தது
(“*6:19, 38 & 114ல் கூறப்பட்டுள்ளபடி) குர்ஆன் முழுமையானது மேலும் முற்றிலும் விவரிக்கப்பட்டது என்றால் ஸலாத் மற்றும் ஜகாத்தின் விவரங்களை நாம் எங்கே காண்பது?” என்று கேட்பதன் மூலம், அல்லாஹ்வை நம்ப மறுப்பவர்கள் குர்ஆனிற்கு சவால் விடுபவர்களாக இருக்கின்றனர். தெள்ளத் தெளிவாக குர்ஆனை விட்டு ஒதுக்கி வைக்கப்பட்டுள்ள இத்தகைய மனிதர்களுக்காக (18:57ஐப் பார்க்கவும்) பின்வரும் குர்ஆனிய உண்மையை நாங்கள் வழங்குகின்றோம்:
وَوَهَبْنَا لَهُ إِسْحَقَ وَيَعْقُوبَ نَافِلَةً وَكُلًّا جَعَلْنَا صَلِحِينَ
وَجَعَلْنَهُمْ أَئِمَّةً يَهْدُونَ بِأَمْرِنَا وَأَوْحَيْنَا إِلَيْهِمْ فِعْلَ الْخَيْرَتِ وَإِقَامَ الصَّلَوةِ وَإِيتَاءَ الزَّكَوةِ وَكَانُوا لَنَا عَبِدِينَ
21:72 ஐசக்கையும் ஜேகபையும் ஒரு பரிசாக நாம் அவருக்களித்தோம், மேலும் அவர்கள் இருவரையும் நன்னெறியாளர்களாக நாம் ஆக்கினோம்.
21:73 நம்முடைய கட்டளைகளுக்கேற்ப வழிநடத்திய இமாம்களாக நாம் அவர்களை ஆக்கினோம், மேலும் நன்மைகள் செய்வது எப்படி என்பதையும், (ஸலாத்) தொடர்புத் தொழுகைகளையும் (ஜகாத்) கடமையான தர்மத்தையும் கடைப்பிடிப்பது எப்படி என்பதையும் நாம் அவர்களுக்குக் கற்றுக் கொடுத்தோம். நமக்கு, அர்ப்பணித்துக் கொண்ட அடியார்களாக அவர்கள் இருந்தனர்.
துர்பாக்கியமாக, குர்ஆன் முழுமையானது அல்ல என்று நிரூபிப்பதற்காக தொடர்ந்து முயன்று வருபவர்களால் தெளிவான இந்த குர்ஆனிய உண்மையை அணுக முடிவதில்லை.
முதலில், அவர்கள் குர்ஆன் முழுமையானது, மிகச் சரியானது மேலும் முற்றிலும் விவரிக்கப்பட்டது என்பதை கபடமின்றி, உறுதியாக நம்ப வேண்டும், அவர்கள் தங்களுடைய இரட்சகரை நம்ப வேண்டும். இந்த உறுதியான நம்பிக்கையை அவர்கள் அடைந்து விட்டால், அவர்களுடைய இதயங்களை சுற்றிலுமுள்ள கவசங்கள் நீக்கப்படும், அவர்களுடைய காதுகளிலிருந்து செவிட்டுத்தனம் நீக்கப்படும், பின்னர் அவர்கள் குர்ஆனிய உண்மையை உணரும் தகுதியுடையவர்கள் ஆவார்கள்.
நோன்பு இப்ராஹிம் வழியாகவே நமக்கு வந்தது (பின்னர் குர்ஆனில், அதில் சிறிய மாற்றம் செய்யப்பட்டது)
اُحِلَّ لَكُمْ لَيْلَةَ الصِّيَامِ الرَّفَثُ اِلَى نِسَايْكُمْ هُنَّ لِبَاسٌ لَكُمْ وَانْتُمْ لِبَاسٌ لَهُنَّ عَلِمَ اللَّهُ انَّكُمْ كُنتُمْ تَخْتَانُونَ انفُسَكُمْ فَتَابَ عَلَيْكُمْ وَعَفَا عَنْكُمْ فَالءنَ بَشِرُوهُنَّ وَابْتَغُوا مَا كَتَبَ اللَّهُ لَكُمْ وَكُلُوا وَاشْرَبُوا حَتَّى يَتَبَيَّنَ لَكُمْ الْخَيْطُ الْابْيَضُ مِنْ الْخَيْطِ الْاسْوَدِ مِنْ الْفَجْرِ ثُمَّ اتِمُّوا الصِّيَامَ اِلَى الَّيْلِ وَلَا تُبَشِرُوهُنَّ وَانْتُمْ عَكِفُونَ فِي الْمَسَجِد¯ِ تِلْكَ حُدُودُ اللَّهِ فَلَا تَقْرَبُوهَا كَذَلِكَ يُبَيِّنُ اللَّهُ ءايَتِهِ لِلنَّاسِ لَعَلَّهُمْ يَتَّقُونَ
2:187 நோன்புக் கால இரவுகளின் போது உங்கள் மனைவியருடன் உங்களுக்குத் தாம்பத்ய உறவு அனுமதிக் கப்படுகின்றது. அவர்கள் உங்களுடைய இரகசியங்களைப் பாதுகாப்பவர்களாக இருக்கின்றனர், மேலும் நீங்கள் அவர்களுடைய இரகசியங்களைப் பாதுகாப்பவர்களாக இருக்கின்றீர்கள். நீங்கள் உங்களுடைய ஆத்மாக்களுக்குத் துரோகமிழைத்துக் கொண்டிருந்தீர்கள் என்பதைக் கடவுள் அறிந்திருந்தார், மேலும் அவர் உங்களை மீட்டுக் கொண்டார், அத்துடன் உங்களைப் பிழை பொறுத்துக் கொண்டார். இனிமேல், கடவுள் உங்களுக்கு அனுமதித்ததைத் தேடியவர்களாக, நீங்கள் அவர்களுடன் தாம்பத்ய உறவு கொள்ளலாம். விடியலின் போது இரவின் கருப்பு நூலில் இருந்து வெளிச்சத்தின் வெள்ளை நூலானது தெளிவாகத் தெரிகின்ற வரை நீங்கள் உண்ணவும் பருகவும் செய்யலாம். பின்னர், சூரிய அஸ்தமனம் வரை நீங்கள் நோன்பிருத்தல் வேண்டும். (ரமளானின் கடைசிப் பத்து நாட்களின் போது) பள்ளிவாசலில் அடைக்கலமாகிக் கொள்ள நீங்கள் தீர்மானித்தால் தாம்பத்ய உறவு தடை செய்யப்படுகின்றது. இவை கடவுள்-ன் சட்டங்களாகும்; நீங்கள் அவற்றை வரம்புமீற வேண்டாம். கடவுள் இவ்விதமாகத் தன்னுடைய வெளிப்பாடுகளை மக்களுக்குத் தெளிவுபடுத்துகின்றார், அவர்கள் ஆன்ம மீட்சியடையும் பொருட்டு.
ஆகையால், முஹம்மதிற்கு முன்பே, இப்ராஹிமின் மார்க்கத்திற்கு (இஸ்லாம்) இணங்க நோன்பு கடைபிடிக்கப்பட்டு வந்தது என்பதை இந்த வசனம் நமக்கு தெளிவாக அறிவிக்கின்றது.
துவக்கத்தில் இப்ராஹிம் மூலமாக நோன்பு கட்டளையிடப்பட்ட போது, நோன்பு வைக்கின்ற ரமலான் மாதம் முழுவதும் இரவிலும், பகலிலும் தாம்பத்ய உறவு தடை செய்யப்பட்டிருந்தது.
(ஹஜ்) இப்ராஹிம் வழியாகவே நமக்கு வந்தது
இந்த வசனம் ஸலாத் தொழுகையின் வழிமுறையையும் (குனிதல் & சிரம் பணிதல்) காட்டுவதை தயவு செய்து கவனிக்கவும் :
وَإِذْ بَوَّأْنَا لِإِبْرَهِيمَ مَكَانَ الْبَيْتِ أَنْ لَا تُشْرِكْ بِي شَيْءا وَطَهِّرْ بَيْتِي لِلطَّائِفِينَ وَالْقَائِمِينَ وَالرُّكَّعِ السُّجُودِ
وَأَذِّنْ فِي النَّاسِ بِالْحَجِّ يَأْتُوكَ رِجَالًا وَعَلَى كُلِّ ضَامِرٍ يَأْتِينَ مِنْ كُلِّ فَجٍّ عَمِيقٍ
22:26 ஆலயத்தை நிர்மாணிக்க ஆப்ரஹாமை நாம் நியமித்தோம்: "என்னுடன் வேறு எந்தத் தெய்வத்தையும் நீர் இணைவழிபாடு செய்ய வேண்டாம், மேலும் அதனைத் தரிசிக்க வருவோர், மற்றும் அதன் அருகில் வசிப்போர், மேலும் குனிவோர் மற்றும் சிரம் பணிவோருக்காக என் ஆலயத்தை தூய்மைப்படுத்துவீராக.
22:27 "மேலும் மக்கள் ஹஜ் புனிதயாத்திரை மேற்கொள்ள வேண்டுமெனப் பிரகடனிப்பீராக.* அவர்கள் உம்மிடம் நடந்து அல்லது களைத்துப்போன பல்வேறு (போக்குவரத்து சாதனங்கள் மீது) சவாரி செய்தவர்களாக உம்மிடம் வருவார்கள். மிகத் தொலைவிலுள்ள இடங்களிலிருந்து அவர்கள் வருவார்கள்."
இவ்விதமாக, இஸ்லாத்திலுள்ள மார்க்க வழிபாட்டு முறைகள் அனைத்தும் (ஸலாத், ஜகாத், நோன்பு & ஹஜ்) இப்ராஹிம் வழியாகவே நமக்கு வந்தன என்று குர்ஆன் தெளிவாகப் போதிக்கின்றது.
ஸலாத், ஜகாத், நோன்பு & ஹஜ் ஆகியவற்றை எவ்வாறு செய்வது என்பதை இப்ராஹிமிற்கு அல்லாஹ் கற்றுக் கொடுத்ததாக குர்ஆன் போதிக்கின்றது, பின்னர் இந்தப் பயிற்சிகளை தன்னுடைய பிள்ளைகளுக்கு இப்ராஹிம் கற்றுக் கொடுத்தார், மேலும் இவ்வாறே தலைமுறை தலைமுறையாக கற்பிக்கப்பட்டுவருகின்றது.
ஆயினும் அவர்கள் பிடிவாதமாயிருக்கின்றார்கள்
கடவுளை நம்பாதவர்களிடம், இந்த குர்ஆனிய சான்றுகள் அனைத்தையும் காட்டிய பிறகும் கூட அவர்கள், தங்களுடைய பாதைகளையே வலியுறுத்துவதை நீங்கள் பார்ப்பீர்கள். இவை அனைத்திற்கு பிறகும் அவர்கள் “ஸலாத் தொழுகைகளின் விபரங்கள் குர்ஆனில் எங்கே உள்ளது?” என்று உங்களிடம் கேட்டால் அதிர்ச்சி அடையாதீர்கள்.
தங்களைப் படைத்தவர் மீண்டும் மீண்டும் வலியுறுத்தி கூறுகின்ற, “குர்ஆன் முழுமையானது” என்ற அவருடைய கூற்றுகளின் மீது நம்பிக்கை கொள்ளாதவரை, அவர்களால் குர்ஆனிய உண்மையை ஒரு போதும் காண இயலாது. இது ஆதாரத்துடன் கீழே காட்டப்பட்டுள்ளது.
குர் ஆனை நம்ப மறுப்பதன் விளைவுகள்
குர்ஆனை பார்ப்பதை விட்டும், கேட்பதை விட்டும், அல்லது புரிந்து கொள்வதைவிட்டும் விலக்கி வைக்கப்படுதல். இவ்விதமாக, வழிகாட்டுதல் சாத்தியமற்றதாகி விடுகின்றது.
وَمَنْ أَظْلَمُ مِمَّنْ ذُكِّرَ بِءايَتِ رَبِّهِ فَأَعْرَضَ عَنْهَا وَنَسِيَ مَا قَدَّمَتْ يَدَاهُ إِنَّا جَعَلْنَا عَلَى قُلُوبِهِمْ أَكِنَّةً أَنْ يَفْقَهُوهُ وَفِي ءاذَانِهِمْ وَقْرًا وَإِنْ تَدْعُهُمْ إِلَى الْهُدَى فَلَنْ يَهْتَدُوا إِذًا أَبَدًا
18:57 தங்கள் இரட்சகரின் சான்றுகள் குறித்து நினைவூட் டப்பட்டும் பின்னர் தாங்கள் என்ன செய்கின்றோம் என்பதை உணர்ந்து கொள்ளாது, அவற்றைப் புறக் கணிப்பவர்களை விட மிகத் தீயவர்கள் யார். அதன் விளைவாக, இதனை (இந்தக் குர்ஆனை) புரிந்து கொள்வதை விட்டும் அவர்களைத் தடுப்பதற்காக அவர்களுடைய இதயங்களின் மீது கவசங்களையும், அவர்களுடைய காதுகளில் செவிட்டுத்தனத்தையும் நாம் அமைத்து விடுகின்றோம். எனவே, அவர்களை வழிநடத்துவதற்காக நீர் என்ன செய்கின்றீர் என்பது பொருட்டல்ல, அவர்கள் ஒருபோதும் எக்காலத்தி லும் வழிநடத்தப் படமாட்டார்கள்.
வாழ்க்கையின் இரண்டு துர்பாக்கியமான உண்மைகள்
(1) மனிதர்களில் பெரும்பாலோர் நம்ப மறுப்பவர்களாக இருக்கின்றனர்.
(2) நம்பிக்கையாளர்களில் பெரும்பாலோர் நரகத்திற்கு செல்பவர்களாக இருக்கின்றனர்
وَمَا اكْثَرُ النَّاسِ وَلَوْ حَرَصْتَ بِمُؤْمِنِينَ
12:103 மனிதர்களில் பெரும்பாலோர், நீர் என்ன செய்த போதிலும் சரியே, நம்பிக்கை கொள்ள மாட்டார்கள்.
وَمَا يُؤْمِنُ اكْثَرُهُمْ بِاللَّهِ اِلَّا وَهُمْ مُشْرِكُونَ
12:106 கடவுள் மீது நம்பிக்கை கொண்டவர்களில் பெரும்பாலோர், போலித்தெய்வ வழிபாட்டைச் செயல்படுத்திய வண்ணமே அன்றி அவ்வாறு செய்வதில்லை.
இவ்விதமாக, நீங்கள் பெரும்பான்மையினருடன் இருந்தால், நீங்கள் மிகப் பெரிய ஆபத்தில் இருக்கின்றீர்கள்.
நம்பிக்கை கொண்டவர்களில் பெரும்பான்மையினருடன் நீங்கள் இருந்தாலும் கூட அப்போதும் நீங்கள் மிகப் பெரிய ஆபத்தில் தான் இருக்கின்றீர்கள்.
அல்லாஹ்வை மட்டும் வழிபடுபவர்கள் மிகவும் அரிதானவர் களாகவும், மேலும் பெரும் பாக்கியம் பெற்ற பிரிவினராகவும் இருக்கின்றனர். அவர்கள் சிறுபான்மையினரிலும் சிறுபான்மையினராக இருக்கின்றனர்.
\
பிரச்சினை என்னவென்றால்; அவர்கள் தங்களை
நன்னெறியாளர்கள் என எண்ணுகின்றனர்
وَمَنْ يَعْشُ عَنْ ذِكْرِ الرَّحْمَنِ نُقَيِّضْ لَهُ شَيْطَنًا فَهُوَ لَهُ قَرِينٌ
وَإِنَّهُمْ لَيَصُدُّونَهُمْ عَنْ السَّبِيلِ وَيَحْسَبُونَ أَنَّهُمْ مُهْتَدُونَ
43:36 எவனொருவன் மிக்க அருளாளரின் தூதுச் செய்தியை அலட்சியம் செய்கின்றானோ, அவனுடைய நிலையான கூட்டாளியாக இருப்பதற்கென ஒரு சாத்தானை நாம் நியமிக்கின்றோம்.
43:37 அத்தகைய கூட்டாளிகள் பாதையிலிருந்து அவர்களைத் திசை திருப்பிவிடுவார்கள், இருப்பினும் அவர்கள் வழிகாட்டப்பட்டவர்களாகவே இருக்கின்றனர் என அவர்கள் நம்பும்படிச் செய்து விடுகின்றனர்.
قُلْ امَرَ رَبِّي بِالْقِسْطِ وَاقِيمُوا وُجُوهَكُمْ عِنْدَ كُلِّ مَسْجِدٍ وَادْعُوهُ مُخْلِصِينَ لَهُ الدِّينَ كَمَا بَدَاكُمْ تَعُودُونَ
فَرِيقًا هَدَى وَفَرِيقًا حَقَّ عَلَيْهِمْ الضَّلَلَةُ انَّهُمْ اتَّخَذُوا الشَّيَطِينَ اوْلِيَاء مِنْ دُونِ اللَّهِ وَيَحْسَبُونَ انَّهُمْ مُهْتَدُونَ
7:29 கூறுவீராக, " என் இரட்சகர் நீதியையும், ஒவ்வொரு வழிபாட்டுத்தலத்திலும் அவருக்கு மட்டுமே அர்ப்பணித்தவர்களாக நிற்பதையுமே ஏவுகின்றார். நீங்கள் உங்களுடைய வழிபாட்டினை அவருக்கு மட்டுமென அர்ப்பணிக்க வேண்டும். அவர் உங்களைத் துவக்கிய அதே விதமாக, நீங்கள் இறுதியாக அவரிடமே திரும்பிச் செல்வீர்கள்." கவனம்: தாங்கள் வழிநடத்தப்பட்டவர்கள் என அவர்கள் நம்பிக்கொண்டிருக்கின்றனர்
7:30 சிலரை அவர் வழிநடத்தினார், அதே சமயம் மற்றவர்கள் வழிதவறுதலுக்கு ஆட்படுத்தப்பட்டவர்களாக இருக்கின்றனர். அவர்கள் கடவுள்-க்குப் பதிலாக, சாத்தான்களைத் தங்களுடைய எஜமானர்களாக எடுத்துக் கொண்டு விட்டனர், ஆயினும் அவர்கள் வழிநடத்தப்பட்டவர்களாக இருப்பதாக அவர்கள் நம்பிக் கொண்டிருக்கின்றனர்.
قُلْ هَلْ نُنَبِّئُكُمْ بِالْأَخْسَرِينَ أَعْمَلًا
الَّذِينَ ضَلَّ سَعْيُهُمْ فِي الْحَيَوةِ الدُّنْيَا وَهُمْ يَحْسَبُونَ أَنَّهُمْ يُحْسِنُونَ صُنْعًا
18:103 கூறும், "மோசமான நஷ்டவாளிகள் யார் என்பதை நான் உங்களுக்குக் கூறட்டுமா?
18:104 "எவர்களுடைய காரியங்கள் இந்த வாழ்வில் முற்றிலும் வழிதவறியதாக இருந்தபோதிலும், தாங்கள் நல்ல காரியங்கள் செய்வதாக எண்ணிக் கொண்டிருக்கின்றார்களோ அவர்கள்தான்."
தங்களுடைய இணை தெய்வ வழிபாட்டை
அறியாதிருக்கின்றனர்.
“நம்பிக்கையாளர்களில்” பெரும்பாலோர் இணை தெய்வ வழிபாட்டில், அதனை உணராமலேயே விழுகின்றனர்; தாங்கள் இணை தெய்வ வழிபாடு செய்பவர்கள் என்பதை அவர்கள் அறியாதவர்களாக இருக்கின்றனர்.
وَيَوْمَ نَحْشُرُهُمْ جَمِيعًا ثُمَّ نَقُولُ لِلَّذِينَ أَشْرَكُوا أَيْنَ شُرَكَاؤُكُمْ الَّذِينَ كُنتُمْ تَزْعُمُونَ
ثُمَّ لَمْ تَكُنْ فِتْنَتُهُمْ إِلَّا أَنْ قَالُوا وَاللَّهِ رَبِّنَا مَا كُنَّا مُشْرِكِينَ
انظُرْ كَيْفَ كَذَبُوا عَلَى أَنفُسِهِمْ وَضَلَّ عَنْهُمْ مَا كَانُوا يَفْتَرُونَ
6:22 அவர்கள் அனைவரையும் நாம் ஒன்று திரட்டுகின்ற அந்நாளில், போலித்தெய்வ வழிபாடு செய்பவர்களை நாம் வினவுவோம், "நீங்கள் அமைத்துக் கொண்ட போலித் தெய்வங்கள் எங்கே இருக்கின்றன?"
6:23 நாசம் விளைவிக்கின்ற அவர்களுடைய மறுமொழியாவது, "எங்கள் இரட்சகரான கடவுள் மீது ஆணை யாக, நாங்கள் ஒருபோதும் போலித்தெய்வ வழிபாடு செய்பவர்களாக இருந்ததில்லை."
6:24 அவர்கள் எவ்வாறு தங்களிடமே பொய் கூறிக் கொண் டனர், மேலும் அவர்கள் கண்டுபிடித்துக் கொண்ட போலித்தெய்வங்கள் எவ்வாறு அவர்களைக்கை கழுவி விட்டன என்பதைக் கவனிப்பீராக.
இவ்விதமாக, தாங்கள் இணை தெய்வ வழிபாடு செய்கின்றோம் என்பதை அறியாமலேயே இணைதெய்வ வழிபாடு செய்கின்ற மனிதர்களும் இருக்கின்றார்கள். அவர்களில் ஒருவராக நீங்கள் இருக்க முடியுமா? அவர்களில் ஒருவராக நீங்கள் இல்லை என்பதை எவ்வாறு நீங்கள் அறிவீர்கள்? நீங்கள் ஒரு இணை தெய்வ வழிபாடு செய்பவர் அல்ல என்பதை ஆராய்ந்து அறிந்திட இதுதான் உங்களுக்கான ஒரே வாய்ப்பாக இருக்கின்றது.
நீங்கள் ஒரு இணை தெய்வ வழிபாடு செய்பவர் அல்ல என்பதை எவ்வாறு நீங்கள் ஆராய்ந்து அறிந்திட இயலும்?
இதற்கான பதில் பக்கம் 70-ல் உள்ளது.
ஹதீஸ் மற்றும் சுன்னத்தின் முக்கியத்துவம்
போலியான முஸ்லிமிடமிருந்து உண்மையான முஸ்லிமை அடையாளம் காணுவதற்கு அவசியமான சோதனையை “ஹதீஸ் & சுன்னத்” அமைக்கின்றது என்று குர்ஆன் போதிக்கின்றது.
உண்மையான முஸ்லிம் அல்லாஹ்வை, குர்ஆன் முழுமையானது, மிகச்சரியானது, மேலும் முற்றிலும் விவரிக்கப்பட்டது (6:19, 38 & 114) என்கின்ற அவருடைய கூற்றுகளில் நம்புகின்றார். அதன் விளைவாக, மார்க்க வழிகாட்டுதலுக்காக வேறு எந்த ஆதாரத்தையும் அந்த உண்மையான முஸ்லிம் ஏற்கமாட்டார்.
போலியான முஸ்லிமைப் பொறுத்தவரை, ஆணோ அல்லது பெண்ணோ “ஹதீஸ் & சுன்னத்தின்” பால் ஈர்க்கப்பட்டவராக இருப்பார், மேலும் நம்பிக்கையை கூறிக் கொண்டும் அதே சமயம் இதயத்திற்குள் மறுத்துக் கொண்டும் இருப்பவர்கள் இவ்விதமாக ஒரு நயவஞ்சகராக வெளிப்படுத்தப்படுகின்றார் (16:22ஐப் பார்க்கவும்).
وَكَذَلِكَ جَعَلْنَا لِكُلِّ نَبِيٍّ عَدُوًّا شَيَاطِينَ الْإِنسِ وَالْجِنِّ يُوحِي بَعْضُهُمْ إِلَى بَعْضٍ زُخْرُفَ الْقَوْلِ غُرُورًا وَلَوْ شَاءَ رَبُّكَ مَا فَعَلُوهُ فَذَرْهُمْ وَمَا يَفْتَرُونَ
وَلِتَصْغَى إِلَيْهِ أَفْئِدَةُ الَّذِينَ لَا يُؤْمِنُونَ بِالْآخِرَةِ وَلِيَرْضَوْهُ وَلِيَقْتَرِفُوا مَا هُمْ مُقْتَرِفُونَ
6:112 ஒவ்வொரு நபியுடைய விரோதிகளும் - மானிடர்கள் மற்றும் ஜின்களிலுள்ள சாத்தான்கள் - ஏமாற்றிக் கொள்ளும் பொருட்டு, ஒருவரில் இருந்து மற்றவர் அலங்காரமான வார்த்தைகளைப் உருவாக்கிக் கொள்ள நாம் அனுமதித்துள்ளோம். உம்முடைய இரட்சகர் நாடியிருந்தால், அவர்கள் அதனைச் செய்திருக்க மாட்டார்கள். நீர் அவர்களையும் அவர்களுடைய புனைந்துரைகளையும் அலட்சியம் செய்திட வேண்டும்.
6:113 இது, மறுவுலகின் மீது நம்பிக்கை கொள்ளாதவர் களுடைய மனங்கள் இத்தகைய புனைந்துரைகளை செவியேற்று, அவற்றை ஏற்றுக் கொண்டு, அதன் மூலம் அவர்களுடைய உண்மையான திட நம்பிக்கைகளை வெளிப்படுத்தச் செய்வதற்கேயாகும்.
குர்ஆனைக் கொண்டு நீங்கள் திருப்தி அடைகின்றீர்களா? நீங்கள் அல்லாஹ்வை நம்புகின்றீர்களா? அல்லது, குர்ஆன் முழுமையானதாக இல்லை என்று நீங்கள் உணர்கின்றீர்களா; அதாவது மார்க்க வழிகாட்டுதலுக்கு கூடுதலான ஆதாரங்கள் உங்களுக்கு தேவைப்படுகின்றதா?
நம்பத்தக்கதொரு “ஹதீஸ்”
தீர்ப்பு நாளன்று முஹம்மது, அவருடைய எதிரிகளால் இட்டுக்கட்டப்பட்டவைகளுக்கு (ஹதீஸ் & சுன்னத்) ஆதரவாக, அவரைப் பின்பற்றியவர்கள், குர்ஆனை கைவிட்டு விட்டனர் என்று புகார் கூறுவதில் முதலாவதாக இருப்பார்.
وَقَالَ الرَّسُولُ يَرَبِّ إِنَّ قَوْمِي اتَّخَذُوا هَذَا الْقُرْءانَ مَهْجُورًا
وَكَذَلِكَ جَعَلْنَا لِكُلِّ نَبِيٍّ عَدُوًّا مِنْ الْمُجْرِمِينَ وَكَفَى بِرَبِّكَ هَادِيًا وَنَصِيرًا
25:30 தூதர்* கூறினார், "என் இரட்சகரே, என் சமூகத்தார் இந்தக் குர்ஆனைக் கைவிட்டு விட்டார்கள்."
25:31 ஒவ்வொரு நபிக்கும் எதிராக குற்றவாளிகளிலிருந்து விரோதிகளையும் நாம் அமைக்கின்றோம். ஒரு வழிகாட்டியாகவும், ஓர் எஜமானராகவும் உம்முடைய இரட்சகர் போதுமானவர்.
மேலே காட்டப்பட்டுள்ள 25:31ற்கும், முந்தைய பக்கத்தில் காட்டப்பட்டுள்ள 6:112ற்கும் இடையில் உள்ள வார்த்தைக்கு வார்த்தை ஒற்றுமையை கவனியுங்கள். இது தற்செயலான நிகழ்வாக இருக்க முடியுமா?
இவ்விதமாக, எவ்வாறு இயேசு, தன்னை கடவுளாக அல்லது கடவுளின் மகனாக கருதுகின்ற கிறிஸ்தவர்களைக் கொண்டு ஏமாற்றமடைவாரோ, அதே போல் முஹம்மதும் தன்னை அளவிற்கதிகமாக நேசிக்கின்றவர்களைக் கொண்டு ஏமாற்றமடைவார்.
குர்ஆன் : சட்டப்பூர்வமான ஒரே “ஹதீஸ்”
تِلْكَ ءايَتُ اللَّهِ نَتْلُوهَا عَلَيْكَ بِالْحَقِّ فَبِأَيِّ حَدِيثٍ بَعْدَ اللَّهِ وَءايَتِهِ يُؤْمِنُونَ
وَيْلٌ لِكُلِّ أَفَّاكٍ أَثِيمٍ
يَسْمَعُ ءايَتِ اللَّهِ تُتْلَى عَلَيْهِ ثُمَّ يُصِرُّ مُسْتَكْبِرًا كَأَنْ لَمْ يَسْمَعْهَا فَبَشِّرْهُ بِعَذَابٍ أَلِيمٍ
وَإِذَا عَلِمَ مِنْ ءايَتِنَا شَيْءا اتَّخَذَهَا هُزُوًا أُوْلَئِكَ لَهُمْ عَذَابٌ مُهِينٌ
مِنْ وَرَائِهِمْ جَهَنَّمُ وَلَا يُغْنِي عَنْهُمْ مَا كَسَبُوا شَيْءا وَلَا مَا اتَّخَذُوا مِنْ دُونِ اللَّهِ أَوْلِيَاءَ وَلَهُمْ عَذَابٌ عَظِيمٌ
هَذَا هُدًى وَالَّذِينَ كَفَرُوا بِءايَتِ رَبِّهِمْ لَهُمْ عَذَابٌ مِنْ رِجْزٍ أَلِيمٌ
45:6 இவை, சத்தியத்துடன், நாம் உமக்கு எடுத்துரைக்கின்ற கடவுள்-ன் வெளிப்பாடுகளாகும். கடவுள்-க் கும் அவருடைய வெளிப்பாடுகளுக்கும் பின்னர் வேறு எந்த ஹதீஸில் அவர்கள் நம்பிக்கை கொள்கின்றனர்?
45:7 புனைந்துரைப்பவனான குற்றவாளி ஒவ்வொரு வனுக்கும் கேடுதான்.*
45:8 கடவுள்-ன் வெளிப்பாடுகள் அவனிடம் எடுத்து ரைக்கப்படுவதைச் செவியேற்றும், பின்னர் அவற்றை அவன் ஒருபோதும் செவியேற்காதவனைப் போல, ஆணவத்துடன் தன் வழியில் பிடிவாதமாக இருக்கின்றவன். வலி நிறைந்ததொரு தண்டனையை அவனுக்கு வாக்களிப்பீராக.
45:9 நம்முடைய வெளிப்பாடுகளைக் குறித்து எதையேனும் அவன் அறிந்து கொள்ளும் போது, அவற்றை அவன் கேலி செய்கின்றான். இத்தகையோர் இழிவு நிறைந்ததொரு தண்டனைக்கு உள்ளாகி விட்டார்கள்.
45:10 எரிகிடங்கு அவர்களுக்காகக் காத்துக் கொண்டிருக்கின்றது. அவர்களுடைய சம்பாத்தியங்களோ அன்றிக் கடவுள்-வுடன் அவர்கள் அமைத்துக் கொண்ட போலித் தெய்வங்களோ அவர்களுக்கு உதவாது. பயங்கரமானதொரு தண்டனைக்கு அவர்கள் உள்ளாகி விட்டனர்.
45:11 இது ஒரு கலங்கரை விளக்காகும், மேலும் தங்கள் இரட்சகரின் இந்த வெளிப்பாடுகள் மீது நம்பிக்கை கொள்ள மறுப்பவர்கள் கண்டனத்திற்கும் வலி நிறைந்ததொரு தண்டனைக்கும் உள்ளாகி விட்டனர்.
நீங்கள் அல்லாஹ்வின் வசனங்களை நம்புகின்றீர்களா? நீங்கள் குர்ஆன் முழுமையானது, மிகச்சரியானது மேலும் முற்றிலும் விவரிக்கப்பட்டது (6:19, 38 & 114) என்பதை நம்புகின்றீர்களா? அல்லது உங்களுக்கு குர்ஆனுடன் வேறு ஆதாரங்கள் தேவைப்படுகின்றதா?
பின்பற்றப்பட வேண்டிய ஒரே “ஹதீஸாக” குர்ஆன் இருக்கின்றது; மற்ற அனைத்து ஹதீஸ்களும் இறை நிந்தனையாகவும் மேலும் தவறாக வழிநடத்தக்கூடிய கற்பனைகளாகவும் இருக்கின்றன.
اللَّهُ نَزَّلَ أَحْسَنَ الْحَدِيثِ كِتَبًا مُتَشَبِهًا مَثَانِيَ تَقْشَعِرُّ مِنْهُ جُلُودُ الَّذِينَ يَخْشَوْنَ رَبَّهُمْ ثُمَّ تَلِينُ جُلُودُهُمْ وَقُلُوبُهُمْ إِلَى ذِكْرِ اللَّهِ ذَلِكَ هُدَى اللَّهِ يَهْدِي بِهِ مَنْ يَشَاءُ وَمَنْ يُضْلِلْ اللَّهُ فَمَا لَهُ مِنْ هَادٍ
39:23 கடவுள் இதிலே மிகச்சிறந்த ஹதீஸ்களை வெளிப்படுத்தியுள்ளார்; முரண்பாடுகளற்ற ஒரு புத்தகம், மேலும் (சொர்க்கத்திற்கும் நரகத்திற்குமுரிய) இரு வழிகளையும் சுட்டிக்காட்டுகின்றது. தங்கள் இரட்சகரிடம் பக்தியோடிருப்பவர்களின் தோல்கள் அதன் மூலம் சிலிர்த்து விடுகின்றன, பின்னர் அவர்களுடைய தோல்களும் இதயங்களும் கடவுள்-ன் தூதுச் செய்திக்காக இளகி விடுகின்றன. கடவுள்-ன் வழி காட்டல் இத்தகையதாகும்; தான்நாடுகின்ற எவர் மீதும் அதனை அவர் அருள்கின்றார். கடவுள் -ஆல் வழிகேட்டிற்கு அனுப்பப்பட்டு விட்டவர்களைப் பொறுத்தவரை, எந்த ஒன்றும் அவர்களை வழிநடத்த முடியாது.
وَمِنْ النَّاسِ مَنْ يَشْتَرِي لَهْوَ الْحَدِيثِ لِيُضِلَّ عَنْ سَبِيلِ اللَّهِ بِغَيْرِ عِلْمٍ وَيَتَّخِذَهَا هُزُوًا اُولَئكَ لَهُمْ عَذَابٌ مُهِينٌ
وَاذَا تُتْلَى عَلَيْهِ ءايَتُنَا وَلَّى مُسْتَكْبِرًا كَانْ لَمْ يَسْمَعْهَا كَانَّ فِي اُذُنَيْهِ وَقْرًا فَبَشِّرْهُ بِعَذَابٍ الِيمٍ
31:6 மனிதர்கள் மத்தியில், அடிப்படையற்ற ஹதீஸ்களை ஆதரிப்பவர்கள் இருக்கின்றனர், மேலும் இவ்விதமாக அறிவின்றி மற்றவர்களைக் கடவுள்-ன் பாதையிலிருந்து திருப்புகின்றனர், மேலும் அதனை வீணாகவும் எடுத்துக் கொள்கின்றனர். இழிவு நிறைந்த தொரு தண்டனைக்கு இவர்கள் உள்ளாகி விட்டனர்.
31:7 மேலும் அவர்களில் ஒருவனுக்கு நமது வெளிப்பாடுகள் ஓதிக்காட்டப்படும் போது, அவற்றை அவன் ஒரு போதும் கேளாததைப் போலவும், அவனது காதுகள் செவிடானதைப் போலவும் ஆணவத்துடன் அவன் திரும்பிச் சென்று விடுகின்றான். வலி நிறைந்த தொரு தண்டனையை அவனுக்கு வாக்களிப்பீராக.
கண்கூடான சான்று
குர்ஆன் முழுமையானது, மிகச்சரியானது, முற்றிலும் விவரிக்கப்பட்டது மேலும் மார்க்க வழிகாட்டுதலுக்கான ஒரே ஆதாரமாக இருக்க வேண்டியது என்று நம்பிக்கையாளர்களுக்கு உறுதியளிக்கின்ற தெளிவான குர்ஆனிய கூற்றுகளுடன், கூடுதலாக, மறுக்கவே முடியாத கண்கூடான சான்றைக் கொண்டு இந்த வெளிப்பாடுகளுக்கு (வசனங்களுக்கு) இன்னும் கூடுதலான ஆதரவை அளிக்க வேண்டும் என்பது சர்வ வல்லமையுடைய அல்லாஹ்வின் நாட்டமாக இருந்தது.
குர்ஆனில் ஒவ்வொரு வார்த்தையும், உண்மையில் ஒவ்வொரு எழுத்தும் மிகவும் சிக்கலானதொரு எண்ணியல் குறியீட்டிற்கு இணங்க அமைக்கப்பட்டுள்ளது என்பதை அறிவிக்கும் ஒரு கணித அற்புதம் குர்ஆனில் கண்டுபிடிக்கப்பட்டது. அந்த குறியீடு, குர்ஆனின் முதல் வாக்கியத்தில் உள்ள எழுத்துகளின் எண்ணிக்கையும், மேலும் குர்ஆன் மனிதத் தயாரிப்பு என்று கூறுபவர்களுக்கு பதில் அளிக்கும் விதமாக 74:30ல் சுட்டிக் காட்டப்பட்டுள்ளதுமான, எண்(19)ஐ அடிப்படையாகக் கொண்டது. இந்த கணித அற்புதமானது, குர்ஆன் ஒரு இறை வேதமாக இருக்கின்றது, மேலும் குர்ஆன் முழுமையாக பாதுகாக்கப்பட்டதாக இருக்கின்றது என்பதை சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்கின்றது. மேலும் விபரங்களுக்கு “குர்ஆன்: விஷீவல் ப்ரரெசன்டேஷன் ஆஃப்தி மிரகிள்” என்ற புத்தகத்தை தயவு செய்து பார்க்கவும். மார்க்க வழிகாட்டுதலின் ஒரே ஆதாரம் குர்ஆன் தான் என்பதற்கு ஆதரவளிக்கின்ற அந்த கண்கூடான சான்றானது, குர்ஆனின் கணித அற்புதத்துடன் பிணைக்கப்பட்ட நிலையில் இருக்கின்றது. அதுவும் கூட எண்(19)ஐ அடிப்படையாகக் கொண்டே உள்ளது. பக்கங்கள் 82-89 வரை இதற்கான சான்று வழங்கப்பட்டுள்ளது.
அந்த சான்றானது விளக்கிக் கூறுவதைக் காட்டிலும், மிகத் தெளிவாக காணக்கூடியதாக இருப்பதால், சுதந்திரமாக சிந்திக்கின்ற மனிதர்கள் அனைவரும் இதனை ஏற்றுக் கொள்வார்கள். நன்மை என்று நம்பி போலியான நம்பிக்கைகளில் சிக்கிக் கொண்டவர்கள் மட்டுமே, குர்ஆனை நிராகரித்ததால் ஏற்பட்ட சாபத்தின் காரணமாக தெளிவான உண்மையை காணத்தவறி விடுவார்கள் (17:45 ஐப் பார்க்கவும்).
குர்ஆனின் அற்புதத்தை சுருக்கி கூறுகின்ற பின்வரும் நான்கு பக்கங்கள், குர்ஆன் : விஷீவல் ப்ரசென்டேஷன் ஆஃப்தி மிரகிள்” புத்தகத்தில் இருந்து மறுபதிப்பு ஆகும்.
குர்ஆன் : விஷீவல் ப்ரசென்டேஷன் ஆஃப்தி மிரகிள்
ஆக்கம் : ரஷாத் கலீஃபா, Ph.D
இமாம், மஸ்ஜித் டுக்ஸன், அரிஸோனா