ஓர் கடவுளை மட்டும் வணங்குவது என்றால் என்ன?
பிரபஞ்சத்தை படைத்த அந்த ஓர் கடவுளை எந்த கலப்பும் இன்றி தனித்து வழிபட வேண்டும் என்பதற்காகவே கடவுள் நம்மை படைத்தார்.
இணைவைப்பு என்பது சிலைகளை வணங்குவது மட்டுமல்ல, கடவுளை தவிர எந்த ஒன்றிற்கும் சக்தி உண்டு அவை நம்மை காப்பாற்றும் என்ற நினைப்பே இணைவைப்பாகும். நம்முடைய பிள்ளைகள் நம்முடைய சொத்து நம்முடைய வாழ்க்கை துணை நம்மை காப்பாற்றும் என்று நினைப்பதே, கடவுளை அன்றி மற்றவைகளுக்கும் நம்மை காப்பாற்றும் சக்தி உண்டு என்றாகிவிடுகிறது.
கடவுள் மட்டுமே நாம் பிறந்ததில் இருந்து இறப்பு வரை நம் கூடவே இருந்து நம்முடைய பிரச்சனைகளை செவியேற்று அவற்றை சரிசெய்து தருகிறார், நம்முடைய தேவைகளை பூர்த்தி செய்கிறார். அவர் தனித்தவர் இணை துணை எதுவும் அற்றவர்.

நபிமார்கள் அனைவருக்கும் சம அந்தஸ்து அளிக்க வேண்டும், அவர்களுக்கு இடையில் எந்த பேதமும் பார்க்கக்கூடாது என குர்ஆன் 2:285 கூறுகிறது. கடவுள் ஒருவரை ஒருவர் அந்தஸ்தில் உயர்வாக வைத்து உள்ளார், ஆனால் நாம் அவ்வாறு வேதம் பாராட்டக் கூடாது.
முகம்மது அத்தியாயத்திலும் குர்ஆன் முழுவதும் தேடிப்பார்த்தால் “லா இலாஹா இல்லல்லாஹ்” என்று மட்டுமே உள்ளது.
சாத்தானின் வலையில் சிக்கிய இஸ்லாமிய சமூகத்தவர்கள் ஷஹாதா வை சிதைத்து விட்டார்கள் 39:45ல் கடவுள் மட்டும் என்று கூறப்படும் பொழுது மறு உலகின் மீது நம்பிக்கை கொள்ளாதவர்களின் இதயங்கள் வெறுப்பினால் சுருங்கி விடுகிறது ஆனால் அவருடன் மற்றவர்களை சேர்த்து கூறப்படும் போது அவர்கள் திருப்தி அடைகின்றனர்.
ஒரு இணைவைப்பாளர் அல்லாஹ் மட்டும் என்று தனித்து கூறுவதில் இருந்து கடவுளால் தடுக்க படுகிறார். நாம் “லா இலாஹ இல்லல்லாஹ்” என்று கூறுகிறோம் என்றால் நாம் கடவுளால் ஆசீர்வதிக்கப்பட்ட மக்களாக இருக்கின்றோம்.

அல்ஹம்துலில்லாஹ்.

– Sister Mehraj, July,2020