முகம்மது நபியை மறுப்பவர்கள் காஃபீகளே!
அல்லாஹ்வுக்கும், அவரின் தூதருக்கும் கட்டுப்படுங்கள். நீங்கள் கிருபை செய்யப்படுவீர்கள் (3:132) நீங்கள் மெய்யாகவே நம்பிக்கை கொண்டவர்களாக இருந்தால் அல்லாஹ்வுக்கும் அவரின் தூதருக்கும் கீழ்படியுங்கள். (8:1) அல்லாஹ் தன் அருள்மறையில் பல வசனங்களில் தூதருக்குக் கட்டுப்பட வேண்டும் என அறிவுறுத்துகிறார். யார் அல்லாஹ்வின் தூதருக்கு கட்டுப்படவில்லையோ,அவர்களுக்கு நரகத்தின் நெருப்பு காத்திருக்கின்றது அதில் அவர் என்றென்றும் தன்ங்கிவிடுவார் என்று அல்குர்ஆன் 72:23ம் வசனம் நமக்குக் கூறுகிறது.
முஹம்மது நபியின் மகத்தான குனம்.
மேலும் முஹம்மது நபியைப் பற்றி அல்லாஹ் தன் திருமறையில் (68:4)ல் “நிச்சயமாக நீர் மகத்தான குணமுடையவராயிருக்கின்றீர் என்று சிறப்பித்துக் கூறுகின்றார். அவர்கள் இரக்க குணமுடையவர்களாக இருந்தார்கள் என்றும் மெய்யான நம்பிக்கை கொண்டவர்களிடம் அன்புடையவர்களாக இருந்தார்கள் என்றும் குர்ஆன் கூறுகிறது.
முஹம்மது நபியின் போதனைகள்.
முஹம்மது நபி இனைவைப்பில் மூழ்கியிருந்த மனித சமுதாயத்தின் கண்களைக் குர்ஆனைக் கொண்டு திறந்து வணக்கத்திற்கு தகுதியானவர் இறைவன் ஒருவரே என்றும் அவரை மட்டுமே நாம் வணங்க வேண்டும் என்றும் அறிவிறுத்தினார்கள். அவர்களும் அவர்கள் இறைவனால் தமக்கு அறுளப்பட்ட அல்குர்ஆனை மட்டுமே பின்பற்றினார்கள் என்று அல்குர்ஆனில் பல வசனங்கள் நமக்குக் கூறுகிறது. (5:48,49, 6:114, 10:15)
முஹம்மது நபியைத் துன்புறுத்தியவர்கள்
நிராகரிக்கும் கயவர்கள் நபியின் காலத்தில் நபிக்கு மாறு செய்து அவர்களை ஏற்றுக்கொள்ளமல் பற்பல துன்பங்களைக் கொடுத்ததையும் நாம் குர்ஆனிலிருந்து அறியமுடிகிறது. அவற்றை முஹம்மது நபி குர்ஆனின் வழிப்படி பொருத்துக் கொண்டதயும் குர் ஆன் நமக்குக் கூறுகிறது. மேலும் அந்நிராகரிப்பவர்கள் குர்ஆனைமாற்றிக் கூறும்படியும் வற்புறுத்தினார்கள் குர்ஆன் வசனம் (17:73 முதல் 75 வரை படியுங்கள்)
நபியை நிர்பந்தித்த நயவஞ்சகர்கள்.
“இன்னும் நாம் உமக்கு வஹீமூலம் அறிவித்ததை விட்டு, அது அல்லாததை நம்மீது நீர் இட்டுக்கட்டி கூறும்படி செய்யவே அவர்கள் முயன்றார்கள் மேலும் நாம் உம்மை உறுதிப்படுத்தி வைத்திருக்கவில்லையெனில் நீர் சற்று அவர்கள் பக்கம் சாய்ந்திருக்கக் கூடும். அவ்வாறு நீர் நடந்திருந்தால் உம் வாழ்நாளில் இரு மடங்கு வேதனையையும், மரணத்திற்குபின் இருமடங்கும் வேதனையைச் சுவைக்கச் செய்திருப்போம்” (17:73,75)
நபியின் விரோதிகள்.
நபியின் வாழ்நாளிலேயே இவ்வாறு செய்ய முயன்ற நயவஞ்சகர்கள் அது நடக்காததால் நபி இறந்து 200 வருடங்கள் கழித்து நபி சொன்னார் என்று பற்பல விஷயங்களை நபியின் பெயரால் இட்டுக்கட்டிக் கூற ஆரம்பித்தனர். இவ்வாறு நடக்கும் என்பதையும் குர்ஆன் முன்னரே அறிவித்து உள்ளது. சூரா 6:112,113, ஐ பாருங்கள். ”இவ்வாறு ஒவ்வொரு நபிக்கும், மனிதர்களிலும், ஜின்களிலும் உள்ள ஷைத்தான்களை விரோதிகளாக, நாம் ஆக்கியிருந்தோம் அவர்கள் தங்களுக்கிடையில் ஒருவருக்கொருவர் அலங்காரமான வார்த்தைகளை, ஏமாற்றும் பொருட்டு அறிவித்துக் கொண்டிருந்தனர். உம் இறைவன் நாடினால் அவர்கள் அவ்வாறு செய்திருக்க மாட்டார்கள். அவர்களையும் அவர்கள் பொய் கற்பனைகளையும் நீர்
விட்டுவிடும்.”மறுமையை மெய்யாகவே நம்பாதவர்களின் உள்ளங்கள் அதை செவிம்டுத்து திருத்தி கொள்வதற்கும், அவர்கள் செய்து வந்ததையே தொடர்ந்து செய்வதற்க்கும்(இவ்வாறு பொய்யுரைக்கின்றனர்) 6:112,113
ஹதீஸ்கள் குர்ஆன்னுக்கு முரணாதா?
இவ்விதம்மாக நபி இறந்து சுமார் 200 வருடங்கள் கழித்து அவர்கள் பெயரால், இட்டுகட்டபட்ட செய்திகளே ஹதீஸ்கள்.இந்த ஹதீஸ்களுக்கும் முஹம்மது நபிக்கும் எந்தச் சம்பந்தமுமில்லை (அவர்கள் பெயரால் கூரப்படிருக்கிறது என்பதைத்தவிர) முஹம்மது நபி நமக்குத் தந்தது பாதுகாக்கப்பட்ட அல்லாஹ்வின் சொல்லான அல்குர்ஆன் மட்டுமே. இது அல்லாத வேறு எதையும் முஹம்மது நபி விட்டுச்செல்லவில்லை.மேலும் குர்ஆன், ”நிச்சயமாக இதுவே கண்ணியமிக்க தூதரின் செல்லாகும். இது அகிலங் களுக்கெல்லாம் அதிபதியிடமிருந்து இறக்கப்பட்டது” என்று கூறுகிறது (69:38,47) குர்ஆனை அல்லாஹ் கற்றுக் கொடுக்கிறார். (55:1,2) குர்ஆனுடைய ஆசிரியர் அல்லாஹ். ஹதீஸ்களுக்கு ஆசிரியர் முஹம்மது நபி அல்லவே! நிருபிக்கப்பட்ட உண்மையான குர்ஆனுக்கு மாற்றமாக, செவிவழிச்செய்திகளை (ஹதீஸ்களை) பின்பற்றுபவர்கள்தாம் மெய்யாகவே நபியை நிராகரிப்பவர்களாவர்.
முஹம்மது நபியை இழிவுசெய்பவர்கள்.
இச்செவிவழிச் செய்திகள்தான் முஹம்மது நபி நமக்குத்தந்த குர்ஆனுக்கு எதிரானதாக உள்ளது. ஒருபுறம் நபியை இறைவனுக்கு அடுத்தபடி உள்ளவர் போல் இணைவைத்துச் சித்தரித்தும் மறுபுறம் நபியை இழிவுபடுத்தும் விதமாகவும் சித்தரித்துக் காட்டுகிறது. நபியைப் பற்றி உள்ள பற்பல ஹதீஸ்களை படிப்பவர்கள் இதை நன்கு உணர்ந்து கொள்ள முடியும். முஹம்மது நபியின் பெயரால் இட்டுக்கட்டப்பட்ட, குர்ஆனுக்கு முரணான, நபியை இழிவுபடுத்தும் விதமாகவும் இறைவன் அளவுக்கு, அதிமாகப் புகழ்தும் கூறப்படும் செவிவழிச் செய்திகளைத் தான் நாங்கள் மறுக்கிறோமே அன்றி முஹம்மது நபியை அல்ல. ஏனெனில் நம்பிக்கை கொண்டவர்கள், தூதர்கள் அனைவரையும் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்பது குர்ஆன் நமக்கிடும் கட்டளை! இவாறிருக்கையில் முஹம்மது நபி தந்த அல்குர்ஆனை மட்டும் பின்பற்ற வேண்டும் என்பவர்கள் எவ்வாறு முஹம்மது நபியை நிராகரிப்பவர்காளவார்கள் என்பதை நடுநிலையாளர்கள் சிந்தித்துப் பார்க்கவேண்டும்.
கருத்துப்பரிமாற்றம்
எங்கள் கருத்துத் தவறு என்று அவர்கள் கருதும் பட்சத்தில், இஸ்லாமிய மார்க்கத்தின் காவலர்கள் என்று தங்களைக் கூறிக்கொள்ளும் இவர்கள், தங்கள் கருத்தே சரியானது என்று நிருபித்து, எங்களை திருத்த முயற்ச்சிக்க வேண்டும். கருத்தைக் கருதால் சந்திக்க வேண்டும். அதை விடுத்து பொதுமக்களிடம் வன்முறையைத் தூண்டும் விதமாக, இவர்களைத் தண்டிக்க வேண்டும், சமூகப் பிரஷ்டம் செய்யவேண்டும், மரணித்தால் அடக்க இடம் தரக்கூடாது, அடக்கம் செய்திருந்தாலும் அதை தோண்டி எடுத்து வெளியில் போட்டுவிட வேண்டும், திருமண லெளகீக தொடர்புகளையும் துண்டிக்க வேண்டும் என்றெல்லாம் கூறுவது இவர்களிடம் சரியான கருத்துக்கள் இல்லை என்பதயே வெளிப்படுத்துகிறது.இத்தகைய நடவடிக்கைகளுக்கு குர்ஆனில் எந்த ஆதாரமுமில்லை. இவர்கள் பின்பற்றும் செவிவழிச் செய்திகளான ஹதீஸ்கள்; இஜ்மாஉ,க்யாஸ் போன்றவற்றில் கூட ஆதாரம் இல்லை. இவை தங்கள் முகமூடி கிழிந்து விடாமலும், பிழைப்பு கெட்டு விடாமலும் இருக்க, இவர்கள் மனோ இச்சைப்படி எடுத்த நடவடிக்கைகளே தவிர வேறு எதுவுமில்லை. நாங்கள் கூறுவது தவறு என்றால் `அல்லாஹ் எங்களை தண்டிக்கட்டும் அல்லது அவர்கள் கூறுவது தவறு எண்றால் அல்லாஹ் அவர்களை தண்டிக்கட்டும். தண்டிக்கவும், மன்னிக்கவும் அல்லாஹ் போதுமானவர். (நபியே) நீர் கூறும் “என் கூட்டத்தாரே! நீங்கள் உங்கள் நிலைமைக்கொப்ப காரியங்களைச் செய்து கொண்டிருங்கள்; நானும் செய்து கொண்டிருப்பவனே; அப்பால் இவ்வுலகத்தின் இறுதி முடிவு யாருக்கு நலமாக இருக்கும் என்பதை நீங்கள் அறிந்து கொள்வீர்கள்” (6:135) எவர் தூதருக்குக் கீழ்படிகிறாரோ, அவர் அல்லாஹ்வுக்கு கீழ்படிகிறார்; யாராவது ஒருவர் நிராகரித்தால் நாம் உம்மை அவர்களின் மேல் கண்காணிப்பவராக அனுப்பவில்லை. (4:80)