ரமலான் - நோன்பு
மார்க்க கடமையான நோன்பு அரபியில் “Siyam” or “Saum,” என்று அழைக்கப்படுகிறது,
மார்க்கத்தின் மற்ற கடமைகள் போன்று நோன்பும் இப்ராஹிம் நபி மூலமாக வெளிப்படுத்தப்பட்டது பார்க்க 21:73, 22:78
நம்பிக்கை கொண்டவர்களே உங்களைத்தான், உங்களுக்கு முன்னிருந்தோர்களுக்கு விதிக்கப்பட்டிருந்தவாறே, உங்களுக்கும் நோன்பிருந்தல் விதிக்கப்படுகின்றது, நீங்கள் மீட்சியை அடையும் பொருட்டு. (2:183)
- மீட்சியை அடையும் பொருட்டு 2:183, 2:187
- நோன்பிருத்தலே உங்களுக்குச் சிறந்ததாகும். 2:184
- உங்களுடைய நன்றியறிதலை வெளிப்படுத்த 2:185
- ரமளான் மாதத்தின் தான் குர்ஆன் வெளிப்படுத்தப்பட்டது.
நோன்பின் விதிமுறைகள் :
> ஒருவர் நோயிலோ அல்லது பிரயாணத்திலோ இருந்தால், ஒரு சமமான எண்ணிக்கையுள்ள மற்ற நாட்களைக் கொண்டு பகரமாக்கிக் கொள்ளலாம். (2:184)
> சிரமத்துடனேயே அன்றி, நோன்பிருக்க இயன்றவர்கள், நோன்பை முறிக்கின்ற ஒவ்வொரு நாளுக்கும் ஒரு ஏழை மனிதருக்கு உணவளித்து ஈடு செய்து கொள்ளலாம். (2:184)
> விடியலின் போது இரவின் கருப்பு நூலில் இருந்து வெளிச்சத்தின் வெள்ளை நூலானது தெளிவாகத் தெரிகின்ற வரை நீங்கள் உண்ணவும் பருகவும் செய்யலாம். பின்னர், சூரிய அஸ்தமனம் வரை நீங்கள் நோன்பிருத்தல் வேண்டும்.
2:184 குறிப்பிடப்பட்ட நாட்கள் (நோன்பிருத்தலுக்கென நியமிக்கப்பட்டுள்ளன); ஒருவர் நோயிலோ அல்லது பிரயாணத்திலோ இருந்தால், ஒரு சமமான எண்ணிக்கையுள்ள மற்ற நாட்களைக் கொண்டு பகரமாக்கிக் கொள்ளலாம். மிகுந்த சிரமத்துடனேயே அன்றி, நோன்பிருக்க இயன்றவர்கள், நோன்பை முறிக்கின்ற ஒவ்வொரு நாளுக்கும் ஒரு ஏழை மனிதருக்கு உணவளித்து ஈடு செய்து கொள்ளலாம். (அதிகமான நன்னெறியான காரியங்களை) ஒருவர் தாமாகவே முன் வந்து செய்தால், அது மேலானதேயாகும். ஆனால் நீங்கள் மட்டும் அறிந்திருந்தால், நோன்பிருத்தலே உங்களுக்குச் சிறந்ததாகும்.
2:185 ரமளான் எனும் மாதத்தின் போதுதான், மனிதர்களுக்கு வழிகாட்டல், தெளிவான போதனைகள், மற்றும் சட்டப் புத்தகத்தை வழங்குவதான இந்தக் குர்ஆன் வெளிப்படுத்தப்பட்டது. உங்களில் இந்த மாதத்தைக் காண்பவர்கள் அதில் நோன்பிருத்தல் வேண்டும். நோயிலோ அல்லது பிரயாணத்திலோ இருக்கின்றவர்கள் அதே எண்ணிக்கையிலான மற்ற நாட்களைக் கொண்டு ஈடு செய்து கொள்ளலாம்.கடவுள் உங்களுக்குச் சௌகரியத்தையே விரும்புகின்றார், கஷ்டத்தை அல்ல, உங்களுடைய கடமைகளை நீங்கள் பூர்த்தி செய்யவும், உங்களுக்கு வழிகாட்டியதற்காக கடவுள்-ஐத் துதிக்கவும், உங்களுடைய நன்றியறிதலை வெளிப்படுத்தவும் கூடும் என்பதற்காக.
2:187 நோன்புக்கால இரவுகளின் போது உங்கள் மனைவியருடன் உங்களுக்குத் தாம்பத்ய உறவு அனுமதிக்கப்படுகின்றது. அவர்கள் உங்களுடைய இரகசியங்களைப் பாதுகாப்பவர்களாக இருக்கின்றனர், மேலும் நீங்கள் அவர்களுடைய இரகசியங்களைப் பாதுகாப்பவர்களாக இருக்கின்றீர்கள். மேலும் நீங்கள் உங்களுடைய ஆத்மாக்களுக்குத் துரோகமிழைத்துக் கொண்டிருந்தீர்கள் என்பதைக் கடவுள் அறிந்திருந்தார், மேலும் அவர் உங்களை மீட்டுக் கொண்டார், அத்துடன் உங்களைப் பிழை பொறுத்துக் கொண்டார். இனிமேல்,கடவுள் உங்களுக்கு அனுமதித்ததைத் தேடியவர்களாக, நீங்கள் அவர்களுடன் தாம்பத்ய உறவு கொள்ளலாம். விடியலின் போது இரவின் கருப்பு நூலில் இருந்து வெளிச்சத்தின் வெள்ளை நூலானது தெளிவாகத் தெரிகின்ற வரை நீங்கள் உண்ணவும் பருகவும் செய்யலாம். பின்னர், சூரிய அஸ்தமனம் வரை நீங்கள் நோன்பிருத்தல் வேண்டும். (ரமளானின் கடைசிப் பத்து நாட்களின் போது) பள்ளிவாசலில் அடைக்கலமாகிக் கொள்ள நீங்கள் தீர்மானித்தால் தாம்பத்யஉறவு தடை செய்யப்படுகின்றது. இவை கடவுள்-ன் சட்டங்களாகும்; நீங்கள் அவற்றை வரம்புமீறவேண்டாம். கடவுள் இவ்விதமாகத் தன்னுடைய வெளிப்பாடுகளை மக்களுக்குத் தெளிவுபடுத்துகின்றார், அவர்கள் ஆன்ம மீட்சியடையும் பொருட்டு.
நோன்பு போன்ற கடவுளால் கடமையாக்கப்பட்ட மார்க்க வழிமுறைகள் நம் ஆன்மாவை மீட்டுக்கொள்ள கடவுளின் ஆசீர்வாதங்கள் ஆகும்.
பெண்கள் மாதவிடாய் சமயத்தில் நோன்பு நோற்கலாமா?
கண்டிப்பாக, பெண்கள் மாதவிடாய் சமயத்தில் நோன்பு நோற்க வேண்டும். குர்ஆனில் எந்த தடையும் இல்லை.
2:222 மாதவிடாயைப் பற்றி அவர்கள் உம்மிடம் கேட்கின்றனர்: கூறுவீராக, "அது தீங்காகும்; மாத விடாய்க் காலத்தின் போது பெண்களுடன் நீங்கள் தாம்பத்ய உறவிலிருந்து விலகி கொள்ள வேண்டும்; அதனை விட்டு அவர்கள் விடுபடும் வரை அவர்களை நெருங்காதீர்கள். அவர்கள் அதிலிருந்து விடுபட்டவுடன், கடவுள்-ஆல் வடிவமைக்கப்பட்ட முறையில் அவர்களுடன் நீங்கள் தாம்பத்ய உறவு வைத்துக் கொள்ளலாம். பாவங்களுக்காக வருந்துபவர்களைக் கடவுள் நேசிக்கின்றார், மேலும் அவர் தூய்மையாக இருப்பவர்களை நேசிக்கின்றார்."
பிறை பார்ப்பது அவசியமா ?
கடவுள் குர்ஆனில் எந்த இடத்திலும் நீங்கள் நிலவை கண்ணால் பார்த்து தான் நோன்பு நோற்க வேண்டும் என்று கூறவில்லை.
நிலவை கண்ணால் பார்த்து தான் நோன்பு நோற்க வேண்டும் என்ற தவறான நடைமுறையால், அல்லாஹ் கடமையாக்கி உள்ள ரமலான் நோன்பை, குர்ஆன் அல்லாத மற்ற ஆதாரத்தை பின்பற்றி தவறவிட்டு விடுகின்றனர்.
6:96 விடியல் பிளக்கையில், அவர் காலைப் பொழுதினை புலரும்படிச் செய்கின்றார். இரவை அமைதியானதாக அவர் ஆக்கினார், மேலும் அவர் சூரியனையும் சந்திரனையும் கணக்கிடுதலுக்கான கருவிகளாகப் பயன்படச் செய்தார். எல்லாம் வல்லவர், சர்வமும் அறிந்தவருடைய வடிவமைப்பு இத்தகையதேயாகும்.
[Quran 9:36] கடவுள்-ஐப் பொறுத்த அளவில், மாதங்களின் எண்ணிக்கையானது, பன்னிரண்டு* ஆகும். வானங்களையும் பூமியையும் அவர் படைத்த நாள் முதல், இதுவே கடவுள்-ன் விதிமுறையாக இருந்து வந்துள்ளது.அவற்றில் நான்கு புனிதமானவையாகும்…..
[Quran 10:5] அவர்தான் சூரியனை ஒளிரக்கூடியதாகவும், சந்திரனை ஒரு விளக்காகவும் ஆக்கியவர், மேலும் வருடங்களை எண்ணும் முறையை நீங்கள் அறிந்து கொள்ளவும், கணக்கிடவும் ஏதுவாக அதன் நிலைகளை அவர் வடிவமைத்தார். கடவுள் இவை அனைத்தையும் ஒரு குறிப்பிட்ட நோக்கத்திற்காகவே அன்றிப் படைக்கவில்லை. அறிந்திருக்கின்ற மக்களுக்கு இந்த வெளிப்பாடுகளை அவர் விவரிக்கின்றார்.
[Quran 17:12] இரவையும் பகலையும் நாம் இரண்டு அத்தாட்சிகளாக்கினோம். இரவை இருண்டதாகவும், உங்களுடைய இரட்சகரிடமிருந்து வாழ்வாதாரங்களை நீங்கள் அதில் தேடிக் கொள்ளும் பொருட்டு, பகலைப் பிரகாசமானதாகவும் நாம் ஆக்கினோம். இன்னும் உங்களுக்கு இது காலம்கணிக்கும் ஒரு வழிமுறையையும், கணக்கிடுவதற்கு ஓர் உபாயத்தையும் நிர்மாணிக்கின்றது. இவ்விதமாக நாம் ஒவ்வொன்றையும் விரிவாக விவரிக்கின்றோம்.
55:5 சூரியனும் சந்திரனும் மிகச் சரியாகக் கணக்கிடப்பட்டுள்ளன.
கடவுள் "மாதம்" என்ற வார்த்தையை முழு குர்ஆனிலும் 12 முறை மற்றும் "நாள்" என்ற வார்த்தையை முழு குர்ஆனிலும் 365 முறை பயன்படுத்தியுள்ளார்.
Please check these Quran verse 55:5, 36:38-39, 31:29 and 39:5.
ஒரு சந்திர மாதம் எப்போது தொடங்கும் மற்றும் முடிவடையும் என்பதைத் கண்டுகொள்ளும் அறிவியல் அறிவைக் கடவுள் நமக்கு வழங்கியுள்ளார்.
இன்றைய முஸ்லிம்கள் பிறை பார்த்து நோன்பு நோற்கின்ற காரணத்தால் பொரும்பாலும் முதல் நோன்பை தவற விடுகின்ற ஒரு துர்பாக்கிய நிலையை நம்மால் காணமுடிகின்றது. இதன் விளைவாக பாக்கியம் நிறைந்த லைலத்துல்கத்ர் இரவையும், இஃதிகாஃப் எனப்படும் கடைசி பத்து நாட்களின் முதல் நாளையும் இவர்கள் இழந்து விடுகின்றனர்.
ரமலானை எப்படி கணக்கிடுவது?
சந்திர மாதம் சூரியன் அஸ்தமித்த பிறகு தான் ஆரம்பமாகிறது.
ரமலான் தொடக்க தேதியைக் கணக்கிட NEW MOON நேரத்தை உங்கள் இருப்பிடத்தில் சூரிய அஸ்தமனத்துடன் ஒப்பிடுங்கள்.
சூரிய அஸ்தமனத்திற்கு முன்பே NEW MOON பிறந்தால், அன்றே ரமலான் தொடங்கி விடுகின்றது. இன்ஷா அல்லாஹ்.
> NEW MOON - பிறை பிறந்தவுடன் சில மணிநேரங்களுக்கு கண்ணுக்கு தெரியாது.
> சூரியன் உதயமாகும் நேரத்திலேயே பிறை வந்தாள், சூரிய
வெளிச்சத்தினால் பிறை நம் கண்ணுக்கு தெரியாது.
> மேகங்கள் அதிகமாக இருந்தால் பிறை கண்ணுக்கு தெரியாது.
> மழைக்காலத்தில் பிறை கண்ணுக்கு தெரியாது.
> முதல் நாள் பிறை தெரியவில்லை என்றால் இரண்டாம் நாள் பிறையைப்
பார்க்காமலே நோன்பு வைக்க நோன்புவைக்கின்றனர்.
For your place please check at : https://www.masjidtucson.org/submission/practices/ramadan/rc/
தராவீஹ்
“தொடர்புத் தொழுகைகள் (ஸலாத்)” நேரம்குறித்த கடமையாக இருக்கின்றது என்று குர்ஆனில் அல்லாஹ் நமக்கு கட்டளை இட்டிருக்கின்றார். (4:103) …தொடர்புத் தொழுகைகள் (ஸலாத்) நம்பிக்கையாளர்கள் மீது குறிப்பிட்ட நேரங்களில் விதியாக்கப்பட்டதாக இருக்கின்றது. அதனடிப்படையில் ஃபர்லான (கடமையான) 5 வேளை தொடர்புத்தொழுகைகளைத்தவிர வேறு எந்த தொடர்புத் தொழுகையையும் அல்லாஹ் நமக்கு விதிக்கவில்லை. அவ்வாறிருக்கையில், தராவீஹ் தொழுகையை கடைப்பிடிப்பதன் மூலமும், இன்னும் பலவிதமாக உபரி தொழுகைகளை ரமலான் மற்றும் ரமலான் அல்லாத மாதங்களில் கடைபிடிப்பதன் மூலமும் இன்றைய முஸ்லிம்கள் அல்லாஹ்வின் கட்டளைக்கு மாறு செய்கின்றார்கள். அதாவது அல்லாஹ் மார்க்கம் ஆக்காததை மார்க்கமாக ஆக்குகின்றார்கள். அல்லாஹ் மார்க்கம் ஆக்காததை மார்க்கமாக ஆக்குவது தண்டனைக்குரிய குற்றமாகும்.
வருமானம் ஈட்டும் அன்றே ஜகாத் கொடுக்க வேண்டும் என்று அல்லாஹ் குர்ஆனில் கூறி இருக்கையில், மனிதர்கள் இயற்றிய ஹதீஸை பின்பற்றுபவர்கள் ரமலான் மாதத்தில் மட்டும் ஜகாத்தை தவறான முறையில் கொடுக்கின்றனர்.
எல்லாம் புகழும் கடவுளுக்கே…