மாபெரும் அற்புதங்களில் ஒன்று

(74:35)

மானிடர்களால் இயற்றப்பட்ட எந்தப் புத்தகத்திலும் ஒருபோதும் காணப்படாததோர் ஒப்பற்ற அற்புத நிகழ்வினால் இக்குர்ஆன். இக்குர்ஆனின் ஒவ்வொரு அம்சமும் கணித ரீதியில் தொகுக்கப்பட்டுள்ளது- இதன் சூராக்கள்,​​ வசனங்கள்,​​ வார்த்தைகள்,​​ குறிப்பிட்ட எழுத்துகளின் எண்ணிக்கை,​​ ஒரே வேர்ச்சொல்லில் இருந்து பெறப்படுகின்ற வார்த்தைகளின் எண்ணிக்கை,​​ தெய்வீகப் பெயர்களின் எண்ணிக்கை மற்றும் வகைகள்,​​ குறிப்பிட்ட வார்த்தைகளின் தனித்துவமான எழுத்துக் கூட்டமைப்பு,​​ குறிப்பிட்ட வார்த்தைகளுக்குள் குறிப்பிட்ட எழுத்துக்களின் இடம் பெறாமை அல்லது வேண்டுமென்றே செய்யப்பட்டுள்ள மாற்றங்கள்,​​ மற்றும் அதன் உள்ளடக்கத்திற்கும் அப்பால் மற்ற பல அம்சங்கள். இக்குர்ஆனின் கணித ரீதியிலான ஒழுங்கமைப்பில் இரண்டு முக்கிய பரிமாணங்கள் உள்ளன: (1)​​ கணிதரீதியிலான இலக்கியத் தொகுப்பு,​​ மற்றும் (2)​​ சூராக்கள் மற்றும் வசனங்களின் எண்ணிக்கைகளை உள்ளடக்கிய கணிதக் கட்டமைப்பு. அனைத்தையும் உள்ளடக்கியதான இக்கணிதக் குறியீட்டின் காரணத்தினால்,​​ குர்ஆனுடைய மூல வாசகங்கள் அல்லது உருவ ஒழுங்கமைப்பின் சிறிதளவு சிதைவும் உடனடியாக வெளிப்படுத்தப்பட்டு விடுகின்றது.

புரிந்து கொள்ள எளிதானது போலியாகத் தயாரிக்க சாத்தியமற்றது

சரித்திரத்தில் முதன் முறையாக தெய்வீக இயற்றுதலுக்குரிய சான்றினைத் தன்னுள் கட்டமைத்துக் கொண்டுள்ள ஒரு வேதம் நம்மிடம் உள்ளது- மானிட சக்திக்கு அப்பாற்பட்டதொரு கணித ரீதியிலான​​ தொகுப்பு.


இந்தக் குர்ஆனின் கணித ரீதியிலான அற்புதத்தை இந்தப் புத்தகத்தின் எந்த வாசகரும் எளிதில் சரிபார்த்துக் கொள்ள இயலும். இதன் உரை முழுவதிலும் “கடவுள்” (அல்லாஹ்) எனும் வார்த்தை தடித்த எழுத்துக்களால் எழுதப்பட்டுள்ளது. “கடவுள்” எனும் வார்த்தையின் நிகழ்வுகளுடைய தொடர்கூட்டல் எண்ணிக்கை​​ 2698,​​ அல்லது​​ 19​​ x​​ 142​​ எனக் காட்டப்பட்டுள்ளது. “கடவுள்” எனும் வார்த்தையைக் கொண்டுள்ள எல்லா வசனங்களின் வசன எண்களுடைய மொத்தக் கூட்டுத் தொகை​​ 118123​​ ஆகும்,​​ இதுவும்​​ 19-ன் ஒரு பெருக்குத்தொகையே, (118123 = 19​​ x​​ 6217).


இக்குர்ஆனுடைய கணித ரீதியிலான ஒழுங்கமைப்பு முழுவதிலும் பொது வகு எண்ணாக உள்ளது பத்தொன்பதுதான்.


இந்தக் குர்ஆன் உலகத்திற்குரிய கடவுளின் தூதுச் செய்திதான் என்பதற்கு மறுக்க இயலாத சான்றாக இந்த அற்புத நிகழ்வே போதுமானதாகும். மானிட இனத்தவர்(கள்) எவரும் " கடவுள்" எனும்​​ வார்த்தையின்​​ 2698​​ நிகழ்வுகளையும்,​​ அவை இடம் பெறுகின்ற வசனங்களின் எண்களையும் தொடர்ந்து தடம் பார்த்துக் கொண்டு இருந்திருக்க இயலாது. குறிப்பாக (1)​​ குர்ஆன் வெளிப்படுத்தப்பட்ட போது நிலவிய அறியாமை யுகத்தையும்,​​ மேலும் (2)​​ சூராக்கள் மற்றும் வசனங்கள்,​​ அவை வெளிப்படுத்தப்பட்ட நேரம் மற்றும் அகன்ற அளவில் வேறுபட்டிருந்தன என்ற உண்மையையும் கண்ணோட்டத்தில் கொண்டால் குறிப்பிடத்தக்கவாறு இது சாத்தியமற்றதாகவே உள்ளது. வெளிப்பாடு காலவாரியான வரிசையானது இறுதி வடிவத்தில் இருந்து விரிந்த வேறுபாடுகளைக் கொண்டிருந்தது (பின் இணைப்பு​​ 23).​​ னினும்,​​ இக்குர்ஆனின் கணித ஒழுங்கமைப்பு " கடவுள்" என்ற வார்த்தைக்கு மட்டும் வரையறுக்கப்பட்டதல்ல;​​ அது பெருமளவு விரிந்தது,​​ பெருமளவு பின்னிப்பிணைந்தது,​​ அத்துடன் அனைத்தையும் உள்ளடக்கியதாகவும் உள்ளது.

எளிய உண்மைகள்

குர்ஆனாகிய அதனைப்போலவே,​​ குர்ஆனின் கணிதக்​​ குறியீடும் மிக எளிதானவற்றிலிருந்து,​​ மிகவும் சிக்கலானவை வரை விரிந்த எல்லை கொண்டதாக உள்ளது. எளிதான உண்மைகளானவை கருவிகள் எதனையும் பயன்படுத்தாமல் உறுதிப்படுத்திக்கொள்ள இயன்ற. சிக்கலானவற்றிற்கு ஒரு கணக்கிடும் கருவி அல்லது கணிணியின் உதவி அவசியமாகின்றது. கீழ்க்கண்ட உண்மைகளைச் சரிபார்த்துக் கொள்ளக் கருவிகள் எதுவும் அவசியமில்லை,​​ ஆனால் அவை அனைத்தும் அரபி மூல உரையாகும் என்பதை தயவுசெய்து நினைவில் கொள்ளுங்கள்:


1. "பஸ்மலஹ்" என்று அறியப்படுகின்ற முதல் வசனம் (1:1)​​ கொண்டிருப்பது...................................................​​ 19​​ எழுத்துக்கள்.


2.​​ குர்ஆன்​​ 114​​ சூராக்களைக் கொண்டது,​​ அதாவது...................................................................................................​​ 19 x 6.


3.​​ குர்ஆனிலுள்ள வசனங்களின் மொத்த எண்ணிக்கை​​ 6346​​ அல்லது ............................................................​​ 19 x​​ 334.

[6234​​ எண் இடப்பட்ட வசனங்கள் மற்றும்​​ 112​​ எண் இடப்படாத வசனங்கள் (பஸ்மலஹ்கள்)​​ 6234+112=6346]​​ கவனிக்கவும்​​ 6+3+4+6=................................................................................... 19.


4.​​ கவனத்தை ஈர்க்கும் விதமாக சூரா​​ 9ல் பஸ்மலஹ் இடம் பெறாத போதிலும்,​​ அது​​ 114​​ முறைகளே இடம் பெறுகின்றது. (சூரா27ல் அது இருமுறை இடம்பெறுகின்றது)​​ & 114=............................................................... 19 x​​ 6.


5.​​ பஸ்மலஹ் இடம் பெறாத சூரா​​ 9​​ முதல்​​ அதிகப்படியான பஸ்மலஹ் இடம் பெறுகின்ற சூரா​​ 27​​ வரை,​​ இடையில் மிகச்சரியாக உள்ளவை.......................................​​ 19​​ சூராக்கள்.


6.​​ அதனைத் தொடர்வது​​ 9​​ முதல்​​ 27​​ வரையுள்ள சூரா எண்களின் கூட்டுத்தொகை (9+10+11+12........ 26+27) 342,​​ அல்லது ........................................................................................​​ 19 x​​ 18.


7.​​ இந்தக் கூட்டுத் தொகை (342)​​ சூரா​​ 27ன் இரண்டு பஸ்மலஹ்களுக்கு இடையில் உள்ள வார்த்தைகளின்எண்ணிக்கைக்குச் சமமானதாகவும் உள்ளது,​​ மேலும்​​ 342=............................................................................... 19x18.


8.​​ பிரசித்தி பெற்ற முதல் வெளிப்பாடு (96:1-5)​​ கொண்டிருப்பது......................................................................................19​​ வார்த்தைகள்.


9. 19​​ வார்த்தைகளையுடைய இந்த முதல் வெளிப்பாடு​​ 76​​ எழுத்துக்களை கொண்டது...............................​​ 19x4.


10.​​ கால வரிசைமுறையில் முதன்மையான சூரா​​ 96​​ கொண்டிருப்பது.....................................................................19​​ வசனங்கள்.


11.​​ கால வரிசை முறையில் முதலாவதான இந்தசூரா அமைக்கப்பட்டிருப்பது கடைசியிலிருந்து முன்னதாக.........................​​ 19​​ சூராக்கள்.


12.​​ சூரா​​ 96,​​ அரபி எழுத்துக்கள்​​ 304​​ கொண்டது,​​ அத்துடன்​​ 304=...........................................................................19x16.


13.​​ இறுதி வெளிப்பாடு (சூரா​​ 110)​​ கொண்டிருப்பது ...............................................................................................................19​​ வார்த்தைகள்.


14.​​ இறுதி வெளிப்பாட்டின் முதல் வசனம் (110:1)​​ கொண்டிருப்பது ..........................................................................​​ 19​​ எழுத்துக்கள்.


15. 14​​ வெவ்வேறு அரபி எழுத்துக்கள், "குர்ஆனின் துவக்க எழுத்துக்களைக்" கொண்ட​​ 14​​ வெவ்வேறு வகைகளை (2:1​​ ன் அ.ல.ம. போன்றவை),​​ உருவாக்குகின்றன,​​ அத்துடன்​​ 29​​ சூராக்களின் துவக்கத்தில் வைக்கப்பட்டுள்ளன. இந்த எண்கள் கூட்டப்பட்டால்​​ 14+14+29=57=.................................. 19x3.


16.​​ குர்ஆனின் துவக்க எழுத்துக்கள்​​ இடம்பெறுகின்ற​​ 29​​ சூரா எண்களின் கூட்டுத் தொகையாவது​​ 2+3+7+....+50+68=822,​​ மேலும்​​ 822+14 (14​​ வகைகளிலான துவக்க எழுத்துக்கள்) =836​​ அல்லது ..............................................................................................................................................................................​​ 19x44.


17.​​ துவக்க எழுத்துக்கள் கொண்ட முதல் சூராவுக்கும் (சூரா2)​​ துவக்க எழுத்துக்கள் கொண்ட கடைசி சூராவுக்கும் (சூரா68)​​ இடையில் துவக்க எழுத்துக்கள் இல்லாத சூராக்கள்​​ 38​​ உள்ளன....................​​ 19x2.


18.​​ முதல் மற்றும் கடைசியான துவக்க எழுத்துக்கள் கொண்ட சூராக்களுக்கிடையில் "துவக்க எழுத்துக்கள்" கொண்டதும், "​​ துவக்க எழுத்துக்கள்" இல்லாத சூராக்களுமாக மாறி மாறி வருபவை...........................19​​ வகைகள்.


19.​​ குர்ஆன்​​ 30​​ வெவ்வேறு எண்களைக் குறிப்பிடுகின்றது:​​ 1,2,3,4,5,6,7, 8,9,10,11,12,19,20,30,40,50,60,70,80,99,100,200,300, 1000,2000,3000,5000,50,000, & 100,000​​ இந்த எண்களின் கூட்டுத்தொகை​​ 162146=...................................................................................... 19x8534.


இது எளிய உண்மைகளின்​​ சுருக்கப்பட்டதொரு தொகுப்பேயாகும்.

கணிதரீதியிலான​​ இலக்கியத் தொகுப்பு

இந்தக் குர்ஆன் வேறு எந்தப் புத்தகத்திலும் ஒருபோதும் காணப்படாத ஒப்பற்றதோர் அற்புத நிகழ்வினால்​​ தனித்தன்மை உடையதாக உள்ளது.​​ ஒரு வகைதனில் ஒன்று முதல் ஐந்து எழுத்துக்கள் வரையிலான"​​ குர்ஆனியத் துவக்க எழுத்துக்கள்" கொண்ட​​ 14​​ வெவ்வேறு வகைகள்,​​ 29​​ சூராக்களின் துவக்கத்தில் வைக்கப்பட்டுள்ளன. பதினான்கு எழுத்துக்கள்,​​ அரபி அகர வரிசையில் சரிபாதி,​​ இந்தத் துவக்க எழுத்துக்களில் பங்கு பெறுகின்றன. இந்தக் குர்ஆனியத் துவக்க எழுத்துக்களின் உள்ளர்த்தம்​​ 14​​ நூற்றாண்டுகளாக தெய்வீகமான முறையில் பாதுகாக்கப்பட்ட ரகசியமாக இருந்து வந்தது.


10:20​​ மற்றும்​​ 25:4-6ல் அதன் அற்புதம்,​​ அதாவது,​​ தெய்வீக இயற்றுதலுக்குரிய அதன் ஆதாரம்,​​ முன்னரே தீர்மானிக்கப்பட்டதொரு குறிப்பிட்ட தவணை வரை இரகசியமாக இருக்க வேண்டும் என விதிக்கப்பட்டிருந்ததாகக் குர்ஆன் கூறுகின்றது.


அவர்கள் கூறினர், "அவருடைய இரட்சகரிட மிருந்து ஏன் அவருக்கு ஓர் அற்புதம் இறங்கி வரவில்லை?"​​ கூறுவீராக, "எதிர்காலத்தை அறிந்தவர் கடவுள் மட்டுமே. எனவே,​​ காத்தி ருங்கள்,​​ அத்துடன் நானும் உங்களோடு சேர்ந்து​​ காத்திருப்பேன். " (10:20)​​ 


நம்பமறுத்துவிட்டவர்கள் கூறினர், “மற்ற மக்களின் உதவியுடன்,​​ அவரால் உருவாக்கிக் கொள்ளப்பட்ட ஒரு புனைந்துரை இது என்பதை விட அதிகம் எதுவுமில்லை”. மெய்யாகவே,​​ அவர்கள் இறை நிந்தனை ஒன்றை உதிர்த்து விட்டனர்;​​ ஒரு பொய்மை. மற்றவர்கள் கூறினர், "அவர் எழுதிக் கொண்ட,​​ கடந்த காலத்தில் இருந்துள்ள கட்டுக்கதைகள்;​​ அவை இரவிலும் பகலிலும் அவருக்கு எடுத்துரைக்கப்பட்டன." கூறுவீராக,"வானங்கள் மற்றும் பூமியில் உள்ள ‘இரகசியத்தை’ அறிந்த ஒருவ இது இறக்கி அனுப்பப்பட்டது". நிச்சயமாக,​​ அவர்​​ ,​​ மிக்க கருணையாளர். (25:4-6)


குர் ஆனின் இந்த துவக்க எழுத்துக்கள் குர்ஆனுடைய​​ 19-இன் அடிப்படையில் அமைந்த கணித அற்புதத்தின் முக்கிய பகுதியாக அமைகின்றது.



அட்டவணை​​ 1:​​ குர்ஆனிய துவக்க எழுத்துக்கள்

மற்றும் அவற்றின் சூராக்களுடைய பட்டியல்

 

 

 

 

சூரா எண்

சூரா எண்

சூராவின் தலைப்பு

குர்ஆனிய துவக்க எழுத்துக்கள்.

1

2

பசுங்கன்று

அ.ல.ம.

2

3

இம்ரானியர்கள்

அ.ல.ம.

3

7

ஆன்மா தூய்மையடையும் இடம்

அ.ல.ம.ஸ

4

10

ஜோனஹ்

அ.ல.ர

5

11

ஹூத்

அ.ல.ர

6

12

ஜோசப்

அ.ல.ர

7

13

இடியோசை

அ.ல.ம.ர

8

14

ஆப்ரஹாம்

அ.ல.ர.

9

15

அல்-ஹிஜ்ர் பள்ளத்தாக்கு

அ.ல.ர

10

19

மேரி

கா.ஹ.ய.’ஐ.ஸ.

11

20

தா.ஹா.

த.ஹ.

12

26

கவிஞர்கள்

த.ஸீ.ம.

13

27

எறும்பு

த.ஸீ.

14

28

வரலாறு

த.ஸீ.ம.

15

29

சிலந்திப்பூச்சி

அ.ல.ம.

16

30

ரோமானியர்கள்

அ.ல.ம.

17

31

லுக்மான்

அ.ல.ம.

18

32

சிரம்பணிதல்

அ.ல.ம.

19

36

ய.ச.

ய.ஸீ.

20

38

ஸாத்

ஸ.

21

40

மன்னிப்பவர்

ஹா.ம.

22

41

விவரிக்கப்பட்டது

ஹா.ம.

23

42

கலந்தாலோசித்தல்

ஹா.ம.‘.​​ ஸீ. க.

24

43

ஆபரணங்கள்

ஹா.ம.

25

44

புகை

ஹா.ம.

26

45

முழந்தாளிடுதல்

ஹா.ம.

27

46

மணற்குன்றுகள்

ஹா.ம.

28

50

காஃப்

க.

29

68

பேனா

நூ.

 


வரலாற்றுப் பின்னணி

1968ல்,​​ வழக்கிலுள்ள குர்ஆனின் ஆங்கில மொழிபெயர்ப்புக்கள் கடவுளுடைய இறுதி ஏற்பாட்டின் உண்மையான தூதுச் செய்தியை முன்வைக்கவில்லை என்பதை நான் புரிந்து கொண்டேன். உதாரணத்திற்கு,​​ மிகவும் பிரசித்தி பெற்ற இரண்டு மொழிபெயர்ப்பாளர்களான,​​ யூசுஃப் அலீயும் மர்மட்யூக் பிக்தலும்​​ 39:45ல் உள்ள குர்ஆனின் மகத்தான அளவுகோல் என்று வந்த போது,​​ சீர்கெட்டுப் போய் விட்ட அவர்களுடைய மார்க்கப் பாரம்பர்யங்களை மீறி வர இயலவில்லை.


கடவுள் மட்டும் குறிப்பிடப்படுகின்ற போது,​​ மறுவுலகத்தின் மீது நம்பிக்கை கொள்ளாதவர்களுடைய இதயங்கள் வெறுப்பினால் சுருங்கி விடுகின்றன. ஆனால் அவருடன் மற்றவர்கள் குறிப்பிடப்படுகின்ற போது,​​ அவர்கள் களிப்படைகின்றனர். (39:45)


யூசுஃப் அலீ தன் மொழி பெயர்ப்பில் "மட்டும்" எனும் முக்கியத்துவம் வாய்ந்த வார்த்தையைத் தவிர்த்து விட்டார்,​​ மேலும் வசனத்தின் எஞ்சிய​​ " (தெய்வங்கள்)" எனும் வார்த்தையை நுழைத்ததன் மூலம் புரட்டி விட்டார். இவ்விதமாக,​​ அவர் மிகவும் முக்கியமான குர்ஆனிய அளவுகோலை முற்றிலும் தகர்த்தெறிந்து விட்டார்.​​ 39:45​​ ஐ அவர் கீழ்கண்டவாறு மொழிபெயர்த்தார்.


கடவுளான,​​ அந்த ஒரே ஒருவர்,​​ மொழியப்பட்டால்,​​ மறுவுலகத்தின் மீது நம்பிக்கை கொள்ளாதவர்களுடைய இதயங்கள் வெறுப்பு மற்றும் திகில் நிறைந்தவையாகி விடுகின்றன;​​ ஆனால் அவரை விடுத்த (தெய்வங்கள்) மொழியப்பட்டால்,​​ கவனியுங்கள்,​​ அவர்கள் சந்தோஷத்தில் திருப்தியடைந்தவர்களாகி விடுகின்றனர் (39:45). (யூசுஃப் அலீயின் மொழிபெயர்ப்பின் படி)


"​​ கடவுளான,​​ அந்த​​ ஒரே ஒருவர்,​​ மொழியப்பட்டால், "​​ எனும் சொற்றொடரும் " கடவுள் மட்டும் மொழியப்பட்டால்,"​​ என்று கூறுவதும் ஒன்றல்ல. ஒருவர் “கடவுளான அந்த ஒரே ஒருவர்" என்று மொழிந்து விட்டு,​​ அத்துடன் முஹம்மத் அல்லது ஜீஸஸையும்​​ கூடக் குறிப்பிடலாம்,​​ அதனால் எவரும் பாதிக்கப்பட்டுவிட மாட்டார்கள். ஆனால்" கடவுள் மட்டும் மொழியப்பட்டால்,"​​ நீங்கள் வேறு எவரொருவரையும் குறிப்பிட இயலாது,​​ அதனால் மக்களில் திரளானவர்கள் - முஹம்மதை அல்லது ஜீஸஸை​​ போலித் தெய்வ வழிபாடு செய்கின்றவர்கள் - பாதிக்கப்பட்டு விடுவார்கள். இவ்விதமாக,​​ குர்ஆனுடைய சத்தியத்தை எடுத்து வைப்பதற்கு யூசுஃப் அலீ முன்வரவில்லை,​​ சீர்கெட்டுப் போய் விட்ட அவருடைய நம்பிக்கையை அது வெளிப்படுத்தி விட்ட போதிலும். மர்மட்யூக் பிக்தல் "மட்டும்" என்பதை சரியாகவே மொழிபெயர்த்தார்,​​ ஆனால் தன்னுடைய தனிப்பட்ட நம்பிக்கையை அடைப்புக்குறிக்குள் நுழைத்ததன் மூலம் இந்த அளவுகோலைத் தகர்த்தெறிந்து விட்டார்; 39:45ஐ அவர் கீழ்க்கண்டவாறு மொழிபெயர்த்தார்:


மேலும் அல்லாஹ் மட்டும் மொழியப்பட்டால்,​​ மறுவுலகின் மீது நம்பிக்கை கொள்ளாதவர்களுடைய இதயங்கள் வெறுப்புக் கொண்டவையாகி விடுகின்றன,​​ மேலும் அவருடன் (அவர்கள் வழிபடுகின்றவர்கள்) மொழியப்பட்டால்,​​ கவனியுங்கள்! அவர்கள் மகிழ்வடைகின்றனர் . (39:45). (மர்மட்யூக் பிக்தலுடைய மொழிபெயர்ப்பின் படி)


கடவுளுடைய வார்த்தைன் சத்தியமானது இவ்விதமாகத் திரித்துக் கூறப்பட்டிருப்பதை நான் கண்ட போது,​​ குறைந்தபட்சம் என் சொந்தப் பிள்ளைகளின்​​ நலனுக்காகவேனும்,​​ குர்ஆனை மொழிபெயர்க்க நான் முடிவெடுத்தேன். உத்தியோக ரீதியில் நான் ஒரு ரசாயன விஞ்ஞானியாக இருந்ததனால்,​​ என்னுடைய விசாலமான மார்க்கப் பின்னணியையும் பொருட்படுத்தாது - என் தந்தையார் எகிப்தில் புகழ்பெற்ற ஒரு சூஃபி தலைவராக இருந்தார் - ஒரு வசனத்திலிருந்து அடுத்ததற்கு அதனை நான் முழுமையாகப் புரிந்து கொண்டாலேயன்றி நான் நகர மாட்டேன் என்று கடவுளிடம் நான் பிரமாணம் செய்து கொண்டேன்.


என்னால் காண இயன்ற,​​ கிடைக்கக் கூடிய குர்ஆனின் மொழிபெயர்ப்புக்கள் மற்றும் விரிவுரைகள் (தஃப்ஸீர்கள்) அத்தனையையும் நான் வாங்கிக் கொண்டேன்,​​ ஒரு பெரிய மேஜையின் மீது அவற்றை வைத்துக் கொண்டு,​​ என்னுடைய மொழிபெயர்ப்பைத் துவக்கினேன். முதல் சூராவான,​​ திறவுகோல்,​​ ஒரு சில தினங்களில் பூர்த்தியானது.​​ 2வது சூராவின் முதல் வசனம் “அ.ல.ம.” இந்த வசனத்திற்குரிய மொழிபெயர்ப்புக்கு நான்கு ஆண்டுகள் எடுத்துக்கொண்டது,​​ அத்துடன் குர்ஆனுடைய​​ மகத்தான​​ கணித அற்புதமெனும் " இரகசியத்தின்" தெய்வீகத் திரை விலக்குதலுடன் ஒத்திருந்தது.


குர்ஆனின் விரிவுரைப் புத்தகங்கள், “குர்ஆனியதுவக்க எழுத்துகளாகிய அ.ல.மவின்,​​ அல்லது வேறு எந்தத் துவக்க எழுத்துக்களின் அர்த்தத்தையோ அல்லது முக்கியத்துவத்தையோ எவர் ஒருவரும் அறிய மாட்டார்",​​ என்று ஒருமித்து ஒத்துக்கொண்டன. நான் குர்ஆனை கணிணிக்குள் எழுதி,​​ உரைப்பகுதி முழுமையையும் விரிவாக ஆய்ந்து பார்க்கவும்,​​ குர்ஆனின் இந்தத் துவக்க எழுத்துக்களுக்கிடையில் ஏதேனும் கணித ரீதியானசம்பந்தங்கள்​​ இருக்கின்றனவா என்றும் பார்க்க முடிவெடுத்தேன்.


தொலைபேசி மூலம் ஓர் இராட்சசக் கணிணியுடன் இணைப்புக் கொண்ட நேரப்பங்கீட்டு முளையம் ஒன்றை நான் பயன்படுத்திக் கொண்டேன். என்னுடைய உத்தேசத்தைச் சோதித்துப் பார்ப்பதற்காக,​​ ஓரெழுத்துக் கொண்ட குர்ஆனின் துவக்க எழுத்துக்களை உற்று நோக்க முடிவெடுத்தேன் – சூராக்கள்​​ 42​​ மற்றும்​​ 50ன் (க்காஃப்) " க்க", ​​ சூராக்கள்​​ 7,​​ 19,​​ மற்றும்​​ 38ன் (ஸாத்) "ஸ" மற்றும் சூரா​​ 68ன் (னுன்) " ன." என்னுடைய முதல் புத்தகமான குர்ஆனின் அற்புதம் : மர்ம எழுத்துக்களின் மெய்ப்பொருள்-ல் (இஸ்லாமிக் ப்ரொக்ஷன்ஸ்,​​ 1973)​​ விவரிக்கப்பட்டுள்ளபடி,​​ இந்த மர்மத்தை விடுவிப்பதற்கான முந்திய பல முயற்சிகள் தோல்வி அடைந்துவிட்டன.


குர்ஆனின் துவக்க எழுத்தான ‘‘க்க’’ (க்காஃப்)


கணிணித் தகவல் விபரங்கள் க்க - எனும் துவக்க எழுத்தினைக் கொண்ட சூராக்களின் உரைப்பகுதி மட்டும்,​​ 42​​ மற்றும்​​ 50,​​ ஒரே எண்ணிக்கையிலான ‘க்க’- க்களைக் கொண்டிருப்பதாகக் காட்டியது,​​ 57​​ மற்றும்​​ 57.​​ நிதானித்து செய்யப்பட்டுள்ள ஒரு கணித ஒழுங்கமைப்பு குர்ஆனுக்குள் இருக்கக் கூடும் என்பதற்கான முதல் தடயம் அதுவாகவே இருந்தது.


சூரா​​ 50 "க்க" என்று தலைப்பிடப்பட்டுள்ளது, "​​ க்க" - வைத் துவக்கத்தில் கொண்டுள்ளது. அத்துடன் முதல் வசனமானது, "​​ க்க,​​ மேலும் மகிமைமிக்க இக்குர்ஆன்,"​​ எனப்பொருள் தருகின்றது. " க்க" என்பது “குர்ஆனை”க் குறிக்கின்றது என்றும்,​​ அத்துடன் "க்க" எனும் துவக்க எழுத்தினைக் கொண்ட சூராக்கள் இரண்டிலும் உள்ள "க்க"- க்களின் மொத்த எண்ணிக்கையானது குர்ஆனின்​​ 114​​ சூராக்களைச் சுட்டிக்காட்டுகின்றது என்றும் இது குறிப்பாகக் கூறியது, (57+57=114=19​​ x​​ 6). "குர்ஆன்" என்பது இக்குர்ஆனில்​​ 57​​ முறைகள் காணப்படுகின்றது எனும் உண்மைன் மூலம் இந்த எண்ணம் வலுப்படுத்தப்பட்டது.


சூரா "க்க"- வில்​​ குர்ஆனானது "மஜீத்" (மகிமை மிக்கது) என்று வர்ணிக்கப்படுகின்றது,​​ அத்துடன் "மஜீத்” எனும் அரபி வார்த்தையானது​​ 57​​ எனும் எழுத்தெண் மதிப்பினைக் கொண்டது: ம (40) +​​ ஜ் (3) +யீ (10) +​​ த் (4) = 57.


சூரா​​ 42​​ கொண்டிருப்பவை​​ 53​​ வசனங்கள்,​​ மேலும்​​ 42+53 =95 =19x5


சூரா​​ 50​​ கொண்டிருப்பவை​​ 45​​ வசனங்கள்,​​ மேலும்​​ 50+45 =95,​​ சூரா​​ 42ன் அதே கூட்டுத் தொகை.


குர்ஆன் முழுவதிலுமுள்ள " வசனம்​​ 19"​​ ஒவ்வொன்றிலும் உள்ள "க்க" எனும் எழுத்தைக் கூட்டுவதன் மூலம்,​​ கூட்டுத்தொகை​​ 76க்கு வருகின்றது,​​ 19x4.​​ க்க - தொடர்பான தகவல் தொகுப்புக்களின் ஒரு சுருக்கமான வரைவு இங்கே உள்ளது.


1. "க்க" சூராவில் (எண்​​ 50)​​ காணப்படுகின்ற "க்க" வின் எண்ணிக்கை​​ 57​​ ஆகும், 19x3.


2.​​ மற்றொரு " க்க" துவக்க எழுத்துக் கொண்ட சூரா (எண்42)ல் "க்க" எனும் எழுத்து மிகச்சரியாக அதே எண்ணிக்கையில் இடம் பெறுகின்றது, 57.


3."க்க" எனும்​​ துவக்க எழுத்துக் கொண்ட இரண்டு சூராக்களிலும் "க்க" எனும் எழுத்து இடம்பெறுகின்ற மொத்த எண்ணிக்கை​​ 114​​ ஆகும்,​​ இது குர்ஆனிலுள்ள சூராக்களின் எண்ணிக்கைக்குச் சமமானதாகும்.


4. "குர்ஆன்" என்பது இக்குர்ஆனில்​​ 57​​ முறைகள் குறிப்பிடப்படுகின்றது.


5.​​ இக்குர்ஆனின் வர்ணனையான “மஜீத்” (மகிமை மிக்கது) எனப்படுவது "க்க" எனும் துவக்க எழுத்துக்களைக் கொண்டுள்ள ஒவ்வொரு சூராவிலுமுள்ள "க்க" எனும் எழுத்து இடம்பெறுகின்ற எண்ணிக்கையுடன் தொடர்புடையதாக​​ உள்ளது. "மஜீத்" எனும் வார்த்தை​​ 57ஐ எழுத்தெண் மதிப்பாகக் கொண்டுள்ளது.


6.​​ சூரா42​​ கொண்டிருப்பவை​​ 53​​ வசனங்கள்,​​ எனவே​​ 42+53 =95,​​ அல்லது​​ 19x5.


7.​​ சூரா​​ 50​​ கொண்டிருப்பவை​​ 45​​ வசனங்கள்,​​ எனவே​​ 50+45ம் கூட​​ 95​​ ஆகும், 19x5.


8.​​ குர்ஆன் முழுவதிலுமுள்ள "19"​​ என்ற எண்ணிடப்பட்டுள்ள எல்லா வசனங்களிலும் இடம் பெறுகின்ற "க்க" க்களின் எண்ணிக்கை​​ 76, 19x4​​ ஆகும்.


குர்ஆனுடைய கணிதத் தொகுப்பின் ஒளிக் கீற்றுக்கள் தோன்றத் துவங்கின. உதாரணத்திற்கு,​​ லோத்தின் மீது நம்பிக்கை கொள்ள மறுத்த மக்கள்​​ 50:13ல் குறிப்பிடப்படுகின்றனர் என்றும்,​​ மேலும்​​ குர்ஆனில்​​ 13​​ முறைகள் -​​ 7:80;​​ 11:70,​​ 74,​​ 89;​​ 21:74;​​ 22:43;​​ 26:160;​​ 27:54,​​ 56;​​ 29:28;​​ 38:13;​​ 50:13,​​ மற்றும்​​ 54:33​​ ல் அவர்கள்இடம்​​ பெறுகின்றனர் என்றும் கவனிக்கப்பட்டது. "இக்ஹ்வான்" என்று அவர்கள்​​ குறிப்பிடப்படுகின்ற, "க்க" எனும் துவக்க எழுத்தைக் கொண்ட சூரா​​ 50​​ என்ற ஒரே ஒரு விதிவிலக்கினைத்​​ தவிரஒரே சீராக அவர்கள் "க்கவ்ம்" என்றே குறிப்பிடப்படுகின்றனர். கண்கூடாக, "க்க" என்னும் எழுத்தினைக் கொண்ட "க்கவ்ம்" என்ற வழக்கமான வார்த்தை பயன்படுத்தப்பட்டிருந்தால்,​​ சூரா​​ 50ல் உள்ள " க்க" எனும் எழுத்தின் எண்ணிக்கை​​ 58​​ ஆகியிருக்கும்,​​ அத்துடன் இந்த அற்புத நிகழ்வு முழுமையும் மறைந்து விட்டிருக்கும்.​​ கணிதவியலின் அங்கீகரிக்கப்பட்டுள்ள பரிபூரணமான பிழையற்ற தன்மையினால்,​​ ஒரே ஓர் எழுத்தின் மாற்றமும் கூட இந்த ஒழுங்கமைப்பைக் குலைத்து விடுகின்றது.


மற்றுமொரு பொருத்தமான உதாரணமாவது,​​ 3:96ல் மெக்காவை "பெக்கா" எனக் குறிப்பிடுவதாகும்! கீர்த்திமிக்க இந்நகரத்தைக் குறிக்கின்ற வித்தியாசமான இந்த எழுத்துக் கோவை பல நூற்றாண்டுகளாக இஸ்லாமிய அறிஞர்களை​​ புதிரில் ஆழ்த்தி வந்துள்ளது. 48:24ல் இந்தக் குர்ஆனிலேயே முறையான எழுத்துக் கோவையில் மெக்கா குறிப்பிடப்பட்டிருந்த போதிலும்,​​ 3:96ல் "ம" என்பது "ப" எனும் எழுத்தினைக் கொண்டு மாற்றியமைக்கப்பட்டுள்ளது. சூரா​​ 3,​​ ம - துவக்க எழுத்தைக் கொண்ட சூராவாக உள்ளது,​​ எனவே​​ 3:96ல் "மெக்கா" சரியான முறையில் எழுத்துக் கூட்டப்பட்டிருந்தால் " ம" எனும் எழுத்தின் எண்ணிக்கை குர்ஆனின் குறியீட்டிலிருந்து விலகிச் சென்றிருக்கும் என்பதை இது எடுத்துக்காட்டியது.


னுஉன்​​ (னூன்)

இந்தத் துவக்க எழுத்து தனித்தன்மை வாய்ந்தாகும்;​​ இது ஒரே ஒரு சூராவில் காணப்படுகின்றது,​​ 68,​​ அத்துடன் இந்த எழுத்தின் பெயர் மூல உரையினில்,​​ மூன்று எழுத்துக்களாக எழுத்துக் கூட்டப்பட்டுள்ளது - னூன் வாவ் னூன் - எனவே இரண்டு "ன"க்களாக கணக்கிடப்படுகின்றது. ன -​​ துவக்க எழுத்தைக் கொண்ட இந்த சூராவில் இந்த எழுத்தின் மொத்த எண்ணிக்கை​​ 133,​​ 19​​ x​​ 7​​ ஆகும்.


குர்ஆனின் துவக்க எழுத்துக்களில் கடைசியாக இந்த "ன" உள்ளது என்ற உண்மை (பார்க்க அட்டவணை​​ 1)​​ ஏராளமான விசேஷத் தகவல்களை நம் கவனத்திற்குக் கொண்டு வருகின்றது.​​ உதாரணத்திற்கு,​​ குர்ஆனின் முதல் துவக்க எழுத்திலிருந்து (2:1-ன் அ.ல.ம),​​ கடைசி துவக்க எழுத்தான (68:1 -ல் உள்ளன)​​ வரையுள்ள வசனங்களின் எண்ணிக்கை​​ 5263,​​ அல்லது​​ 19​​ x​​ 277​​ ஆகும்.


"கடவுள்" (அல்லாஹ்) எனும் வார்த்தை முதல் துவக்க எழுத்து மற்றும் கடைசி துவக்க எழுத்து​​ ​​ இடையில்​​ 2641 (19x139)​​ முறைகள் இடம் பெறுகின்றது. " கடவுள்" எனும் வார்த்தையின் மொத்த நிகழ்வு​​ 2698​​ என இருப்பதனால்,​​ அதனைத் தொடர்ந்து ஒருபுறம்​​ 2:1-ன் “அ.ல.ம.” எனும் துவக்க எழுத்துக்கும் மறுபுறம்​​ 68:1 -ன் "ன" எனும் துவக்க எழுத்துக்கும் வெளியில் அதன் நிகழ்வுகளின் எண்ணிக்கை​​ 57, 19x3​​ ஆகும். துவக்க எழுத்தான "னுஉன்" இரண்டு "ன"-க்களைக் காட்டுமாறு எழுதப்பட வேண்டும் என்பதை​​ 9​​ முதல்​​ 20​​ வரையுள்ள அட்டவணைகள் நிரூபிக்கின்றன.

 

ஸ (ஸாத்)

இந்தத் துவக்க எழுத்து​​ 7,19,​​ மற்றும்​​ 38​​ ஆகிய முன்று சூராக்களின்​​ துவக்கத்தில் வைக்கப்பட்டுள்ளது,​​ மேலும் "ஸ" (ஸாத்) எனும் எழுத்து இந்த மூன்று சூராக்களிலும் இடம்பெறுகின்ற மொத்த எண்ணிக்கையானது​​ 152​​ ,​​ 19x8​​ ஆகும். (அட்டவணை​​ 2). 7:69ல் உள்ள "பஸ்தத்தன்" எனும் வார்த்தை சில அச்சுக்களில் "ஸீன்" -க்குப் பதிலாக​​ ,​​ ஒரு "ஸாத்" கொண்டு எழுதப்பட்டிருப்பது கவனிக்கத்தக்கதாகும். இது குர்ஆனின் குறியீட்டினை மீறுகின்ற ஒரு தவறான சிதைத்தல் ஆகும். இருப்பதிலேயே மிகப் பழமையான குர்ஆன் பிரதியான தாஷ்கெண்ட பிரதியை கூர்ந்து நோக்கியதன் மூலம் "பஸ்தத்தன்" எனும் வார்த்தை சரியான விதத்தில் ஒரு "ஸீன்" கொண்டு எழுதப்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது (கீழே நிழற்படப் பிரதியை பார்க்கவும்).

 

அட்டவணை 2: ஸாத்குறியீடுசெய்யப்பட்டசூராக்களில் “  (ஸாத்)

எழுத்தின்அடுத்தடுத்தநிகழ்வுகள்

சூரா

அடுத்தடுத்து வருகின்ற “ஸ”

7

97

19

26

38

29

 

152

 

(19x8)

 

தாஷ்கண்ட்​​ குர்ஆனிலிருந்து எடுக்கப்பட்ட நகல்